மாவீரர் தின உரை 2008 - ஒரு பார்வை
15 December 2008
தமிழீழ மக்களின் சுதந்திரப் போராட்டம் முன்னெப்போதும்
இல்லாதவாறு, மிகவும் கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு கால கட்டத்தினூடாக
நகர்ந்து சென்று கொண்டிருக்கின்ற இவ்வேளையில், தமிழீழத் தேசியத் தலைவர்
மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களினது மாவீரர்; தின உரையை தமிழீழ
மக்களும், புலம் பெயர் வாழ் தமிழீழ மக்களும், தமிழக மக்களும் மட்டுமன்றி பல
சர்வதேச நாடுகளும் எதிர்பார்த்துக் காத்திருந்ததில் வியப்பேதுமில்லை.
தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் தின உரை குறித்து, சர்வதேச ரீதியாகப்
பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்ற இவ் வேளையில், நாமும்
எமது பார்வையைத் தர விழைகின்றோம்.
தமிழீழத் தேசியத் தலைவரின்
மாவீரர் தின உரைக்கு, மேலும் விளக்கமளிப்பது இந்தக் கட்டுரையின் நோக்கம்
அல்ல! தேசியத் தலைவர் தெரிவித்துள்ள மிக முக்கியமான கருத்துக்களில்
சிலவற்றைச் சற்று விரிவாகப் பார்க்;க முனைவதுதான் எமது கட்டுரையின்
நோக்கமாகும்!
இந்த ஆண்டின் மாவீரர் தின உரை குறித்து எழுதுவதற்கு
முன்பு, கடந்த ஆண்டு (2007) மாவீரர் தின உரையின்போது தேசியத் தலைவர்
தெரிவித்திருந்த சில கருத்துக்களையும், அதன் பின்னர் நடைபெற்ற
விடயங்களையும், முதலில் கருத்தில் கொள்வது பொருத்தமானதாக இருக்;கக் கூடும்.
கடந்த ஆண்டு தலைவர் இவ்வாறு கூறியிருந்தார்:-
�இராணுவ அடக்குமுறை
என்ற அணுகு முறை மூலம், தமிழரின் தேசியப் பிரச்சனையைத் தீரக்;க முடியாது
என்பதை மகிந்த அரசு இனியும் உணர்ந்து கொள்ளப் போவதில்லை. இராணுவ
மேலாதிக்கத்தை எட்டிப் பிடிக்க வேண்டும், தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்துச்
சிங்கள மயமாக்கிட வேண்டும் என்ற ஆதிக்க வெறியும் சிங்கள
அரசியல்வாதிகளிடமிருந்து அகன்று விடப் போவதில்லை. தொடர்ந்தும் கோடி
கோடியாகப்; பணத்தைக் கொட்டி, உலகெங்கிலுமிருந்தும், அழிவாயுதங்களையும்
போராயுதங்களையும் தருவிக்கவே மகிந்த அரசு முனைப்புடன் செயற்படுகின்றது.
எனவே மகிந்தவின் அரசு, தனது தமிழின அழிப்புப் போரைக்; கைவிடப் போவதில்லை
......�
ஆகவே இந்த ஆண்டு மகிந்தவின் அரசு பாரிய அழிவாயுதங்களோடும்,
போராயுதங்களோடும் தமிழின அழிப்புப் போரைத் தொடரும் என்பதைத் தேசியத் தலைவர்
கடந்த ஆண்டே தெரிவித்திருந்தார்.
அத்தோடு மட்டுமல்லாது, மகிந்த
அரசின் தமிழின அழிப்புக்குத் துணை போகி;ன்ற இன்னுமொரு காரணியையும் தேசியத்
தலைவர் கடந்த ஆண்டு சுட்டிக் காட்டியிருந்தார். அந்தக் காரணி சர்வதேச
நாடுகளாகும்.
தலைவர் கீழ்வருமாறு கடந்த ஆண்டு கூறியிருந்தார் :
�அன்று இந்தியா இழைத்த தவறை, இன்று சர்வதேசமும் இழைத்து நிற்கின்றது��..
சமாதான முயற்சிகளுக்குப் பாதுகாவலனாக நின்ற நாடுகளே, எமது விடுதலை
இயக்கத்தைப் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியல் இட்டிருக்கின்றன�.. புலம்
பெயர்ந்து வாழும் மக்களுக்கும், தாயக மக்களுக்கும் இடையிலான உறவுப் பாலத்தை
உடைத்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்கி விடச் சிங்களப் பேரினவாதம்
தீவிரமாக முயற்சித்து வருகின்றது. இந்த அநியாயத்திற்குச் சில உலக நாடுகளும்
துணை போகின்றன�.. இத்தகைய நடுநிலை தவறிய ஒரு தலைப் பட்சமான நடவடிக்கைகள்,
சர்வதேசச் சமூகம் மீது எமது மக்கள் கொண்டிருந்த ஆழமான நம்பிக்கைகளை
மோசமாகப் பாதித்திருப்பதோடு, அமைதி முயற்சிகளுக்கும் ஆப்பு
வைத்திருக்கின்றன�.. அத்தோடு இந் நாடுகள் வழங்கி வரும் தாராளப் பொருளாதார
இராணுவ உதவிகளும், இரகசியமான இராஜதந்திர முண்டு கொடுப்புக்களும், சிங்கள
இனவாத அரசை மேலும், மேலும் இராணுவப் பாதையிலேயே தள்ளி விட்டிருக்கின்றன��
சிங்கள அரசிற்குச் சீர்வரிசை செய்து, ஆயுத உதவிகள் அளித்து, தமிழரை
அழித்துக் கட்டத் துணை போவதுதான் இந்த நாடுகளின் உள்ளார்ந்த நோக்கமா?����
தமிழீழத் தேசியத் தலைவர் கடந்த ஆண்டு சர்வ தேசத்தின் இரட்டை நிலைப்பாடு
குறித்து இவ்வாறு கருத்து வெளியிட்டதை நிரூபிக்;கும் வகையிலேயே சர்வ தேசம்
நடந்து கொண்டுள்;ளது. இன்று தமிழீழ மக்கள் எதிர்கொண்டுள்;ள போருக்கும்,
இன்;னல்களுக்கும் சர்வதேசம் தார்மீகப் பொறுப்பை மட்டுமல்லாதுஇ நேரடிப்
பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
தமிழீழத் தேசம் எதிர்கொள்;ளப்
போகின்ற இந்தக் காரணிகளைக் கடந்த ஆண்டு சுட்டிக் காட்டியிருந்த தேசியத்
தலைவர் அவர்கள் ஒரு வேண்டுகோளையும் விடுத்திருந்தார்�� � உலகம் முழுவதும்
வாழ்கின்ற (எண்பது மில்லியன்) தமிழ் மக்கள் அனைவரையும், தமிழீழ
விடுதலைக்காக உணர்வெழுச்சியுடன் கிளர்ந்;தெழுமாறு வேண்டிக் கொள்கின்றேன்||
என்று தேசியத் தலைவர் கடந்த ஆண்டு கேட்டுக் கொண்டிருந்தார். தேசியத்
தலைவருடைய வேண்டுகோளுக்கிணங்க புலம் பெயர் வாழ் தமிழர்களோடு, தமிழகத்து
உறவுகளும் கிளர்ந்;து எழுந்திருப்பதை இந்த ஆண்டு காட்டி நிற்கின்றது.
மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, தமிழீழத் தேசியத் தலைவரின் 2008ம்
ஆண்டுக்கான மாவீரர் தின உரை குறித்த எமது பார்வையைத் தர விழைகின்றோம்.
தேசியத் தலைவரின் உரையை, �இன்றைய களநிலை, சர்வதேசத்தின் நலன், இந்திய உறவு,
இளைய தலைமுறை|| - என்று நான்கு பகுதிகள் ஊடாகச் சற்;று விரிவாகப் பார்க்க
விழைகின்றோம்.
இன்றைய களநிலை.
இன்றைய களநிலை குறித்துத்
தேசியத் தலைவர் கீழ் வருமாறு கூறியிருப்பதானது, அவருடைய கடந்த ஆண்டுக்
கூற்றுக்கு அடிக்கோடிட்டு நிற்கின்றது.
�தனது முழுப்; படைப்
பலத்தையும், ஆயுத பலத்தையும் ஒன்று திரட்டி, தனது முழுத் தேசிய வளத்தையும்
ஒன்று குவித்து, சிங்கள தேசம் எமது மண்மீது ஒரு பாரிய படையெடுப்பை
நிகழ்த்தி வருகின்றது�� உலகின் பல்வேறு நாடுகளும் தமிழின அழிப்புப்
போருக்கு முண்டு கொடுத்து நிற்க, நாம் தனித்து நின்று, எமது மக்களின்
தார்மீகப் பலத்தில் நின்று, எமது மக்களின் விடிவுக்காகப் போராடி
வருகின்றோம்�� சிங்;கள அரசு இராணுவத் தீர்வில் நம்பிக்கை கொண்டு நிற்பதால்,
இங்கு இந்தப் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து, விரிவாக்கம் கண்டு
வருகின்றது.||
இவ்வாறு இன்றைய கள யதார்த்தத்தை விளக்குகின்ற
தமிழீழத் தேசியத் தலைவர், எமது விடுதலைப் போராட்டத்தின் கடந்த கால
வரலாற்றையும் கீழ்வருமாறு சுட்டிக் காட்டுகின்றார் :-
�உலகின்
எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத பல சரிவுகளை, பல திருப்;பங்களை,
பல நெருக்கடிகளை நாம் இந்த வரலாற்று ஓட்டத்;திலே எதிர் கொண்டிருக்கின்றோம்.
எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்
கொண்டிருக்கின்றோம். வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்;க சக்திகளோடு நேரடியாக
மோதியிருக்கின்றோம். அலையலையாக எழுந்த எதிரியின்
ஆக்;கிரமிப்புக்களையெல்லாம் நேருக்கு நேர் நின்று சந்திக்கின்றோம். பெருத்த
நம்பிக்கைத் துரோகங்கள், பெரும் நாசச் செயல்கள் என எமக்கு எதிராகப்
பின்னப்பட்ட எண்ணற்ற சதிவலைப் பின்னல்களையெல்லாம் தனித்து நின்று
தகர்த்திருக்கின்றோம். புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையெல்லாம்,
மலையாக நின்று எதிர் கொண்டோம்.||
இவ்வாறு தமிழீழப் போராட்டத்தின்
கடந்த கால வரலாற்றைச் சுட்டிக் காட்டிய தேசியத் தலைவர், தமிழீழ விடுதலைப்
போhட்டத்தின் எதிர்காலம் குறித்து மிக நம்பிக்கையூட்டும் செய்தியைத்
தருகின்றார்.
�இவற்றோடு ஒப்பு நோக்குகையில் இன்றைய சவால்கள் எவையும்
எமக்கு புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல! இ;ந்தச் சவால்களை நாம் எமது
மக்களின் ஒன்று திரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம்!..... எத்தனை
சவால்களுக்கு முகம் கொடுத்தாலும், எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும்
நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட
வழியில், காலம் இட்ட கட்டளைப்படி, சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை
நாம் தொடர்ந்து போராடுவோம்.||
தளராத உறுதியோடு தேசியத் தலைவர்
அவர்கள் கூறிய இந்தக் கூற்றில் உள்ள சில சொற்களை நாம் அடிக் கோடிட
விரும்புகின்றோம். அதாவது சிங்கள அரசின் பாரிய படையெடுப்பு பற்;றியும், அது
நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவது பற்;றியும் குறிப்பிட்ட தேசியத் தலைவர்
அவர்கள், �இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல பெரியவையும்
அல்ல � என்று உறுதியோடு தெரிவித்திருப்பதை, புலம் பெயர் வாழ் தமிழர்களாகிய
நாம் தெளிவாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும். எம்முடைய தெளிவும், துணிவும்
தேசியத் தலைமையின் கரங்களுக்கு மேலும் வலுவூட்டும் என்பதில் சந்தேகமில்லை.
சர்வ தேசத்தின் நலன்
இலங்கைத் தீவுப் பிராந்தியத்தின் மீதான, சர்வ
தேசத்தின் நலன் குறித்து, தமிழீழத் தேசியத் தலைவர் கடந்த 2007ம் ஆண்டு
மாவீரர் தின உரையின் போது மட்டுமல்லாது, இந்த 2008ம் ஆண்டு மாவீரர் தின
உரையில் போதும் கருத்துத் தெரிவித்திருந்தார். 2007ம் ஆண்டு தலைவர்
கீழ்வருமாறு குறிப்பிட்டிருந்தார் :-
�எமது பிராந்தியத்திலே உலகப்
பெரு வல்லரசுகளின் இராணுவ, பொருளாதார, கேந்திர நலன்கள் புதைந்து கிடைப்பதை
நாம் நன்கு அறிவோம். அந்த நலன்களை முன்னெடுக்க உலக வல்லரசுகள் முனைப்புடன்
முயற்சிப்பதையும் நாம் விளங்கிக் கொள்கின்றோம். இதற்கு இலங்கைத் தீவில்
நெருக்கடி நிலை நீங்கி, சமாதானமும், நிலையான நல்லாட்சியும் தோன்ற,
அனைத்துலக நாடுகள் ஆர்வமும், அக்கறையும் காட்டுவதையும் நாம் ஏற்றுக்
கொள்கின்றோம்.||
கடந்த ஆண்டு இவ்வாறு தெரிவித்த தேசியத் தலைவர் இந்த
2008ம் ஆண்டும் சர்வ தேசத்தின் நலன் குறித்துப் பேசியுள்ளார். அது
வருமாறு:-
�எமது போராட்டம் எந்தவொரு நாட்டினதும், தேசிய
நலன்களுக்கோ, அவற்றின் புவிசார் நலன்களுக்கோ, பொருளாதார நலன்களுக்கோ
குறுக்காக நிற்கவில்லை. எமது மக்களின் ஆழமான அபிலாசைகளும், எந்தவொரு
தேசத்தினதும், எந்த மக்களினதும் தேசிய நலன்களுக்குப் பங்;கமாக அமையவில்லை.
அத்தோடு இந்த நீண்ட போராட்ட வரலாற்றில் நாம் திட்டமிட்டு எந்தவொரு
தேசத்திற்கு எதிராகவும் நடந்து கொள்ளவில்லை.||
ஆகவே தேசியத் தலைவர்
உலக நாடுகளுக்கு மீண்டும் மீண்டும் ஒரு செய்தியை வலியுறுத்தி வருகின்றார்.
�உங்களுடைய பிராந்திய நலன்களுக்கு எதிராக நாம் செயற்படவில்லை. ஆனால்
உங்களுடைய நலன்களுக்கு நாம் எதிராக இருப்போம் என்ற பொய்யான மாயையில், ஒரு
தேசிய இனத்தை அழிக்கின்ற முயற்சிக்;கு நீஙகள் துணை போகக் கூடாது|| என்பதைத்
தலைவர் மீண்டும்இ மீண்டும் கோரி வருகின்றார். அத்தோடு, சர்வதேசம்,
�சமாதானம்� என்ற பெயரில் இலங்கைப் பிரச்சனையில் தலையிட்டதன் பின்னரும்,
இதுவரை எந்தப் பிரச்சனையும் தீர்க்கப்படாததோடு மட்டுமல்லாது, நிலைமை
விபரீதமாகப் போய்க் கொண்டிருப்பதையும் தலைவர் இராஜ தந்திர மொழியில்
கூறியுள்ளார். சமாதான முயற்சிகளுக்கு உண்மையில் உலக நாடுகளும் தடையாக
இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில், �உலக நாடுகள் தமிழீழ
விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்ததையும்இ புலம் பெயர்; வாழ் தமிழ்
மக்களின் மனித நேயப் பணிகளை முடக்கி வருவதையும்� தலைவர் குறிப்பிட்டுப்
பேசியுள்;ளார். உலக நாடுகளின் இத்தகைய நடவடிக்கைகளும், சிறிலங்கா அரசிற்கான
இராணுவ உதவிகளும் இலங்கைத் தீவில் சமாதானம் தோன்றுவதைத் தடுப்பதாகவே
அமையும் என்ற கருத்தைத் தேசியத் தலைவர் வலியுறுத்தியுள்ளார். �இவை உங்களின்
நலனுக்கும் உகந்தவையல்ல. எமது மக்களின் நலனுக்கும் உகந்தவையல்ல|| என்பதே
சர்வ தேசத்திற்குத் தமிழீழத் தேசியத் தலைமை சொல்லுகின்ற n;;சய்தியாகும்!
ஆகையால் இரு தரப்பினரதும் உண்மையான நலன் கருதி, சம்பந்தப்பட்ட உலக நாடுகள்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கி, தமிழீழ மக்களின்
நீதியான போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையைத்
தேசியத் தலைவர் முன் வைத்துள்;ளார்.
இந்திய உறவு
சர்வதேசங்களைப் பொதுவாக அணுகிய தேசியத் தலைவர், இந்தியா குறித்துத் தனித்த
கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இன்று இந்திய தேசத்தில் வெளிப்படையாகவே
பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைக் குறிப்பிட்டுள்;ள தேசியத் தலைவர்,
இந்தக் கால மாற்றத்திற்கேற்ப, இந்தியப் பேரரசுடனான உறவுகளை மீளவும்
புதுப்பித்துக் கொள்வதற்கான தன் நேசக் கரங்களை மீண்டும் நீட்டியுள்ளார்.
அதேவேளை, முன்னர் இந்தியா கையாண்ட தவறான அணுகுமுறைகளால் விளைந்த
பாதகங்களையும் சுட்டிக்காட்ட அவர் தவறவில்லை. இந்தியாவை எப்போதும் ஒரு
நட்புச் சக்தியாகவே தமிழீழ மக்கள் கருதி வந்துள்ளதைக் குறிப்பிட்டுள்ள
தேசியத் தலைவர், இயக்கத்தின் மீதான தடையை நீக்கி, ஆக்;க பூர்வமான
நடவடிக்கைகளை எடு;க்குமாறு மீண்டும் கோரிக்கை விடுத்துள்;ளார். இது
தமிழீழத்திற்கு மட்டுமல்ல, இந்தியப் பேரரசின் பிராந்திய - பொருளாதார
நலன்களுக்கும் சாதகமாகவே அமையும் என்பதைத் தேசியத் தலைவரின் மாவீரர் தின
உரை உணர்த்துகின்றது.
இந்த இன்னல் மிகுந்த வேளையில், எமது
மக்களுக்காக ஆதரவுக் குரல் எழுப்பி, அன்புக் கரத்தையும் நீட்டுகி;ன்ற தமிழக
மக்களுக்கும், தமிழகத் தலைவர்களுக்கும், இந்தியத் தலைவர்களுக்கும் தனது
அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்ற தேசியத் தலைவர் அவர்கள்,
தமிழக மக்களின் எழுச்சி குறித்துத் தனக்குள்;ள நம்பிக்கையையும்
தெரிவித்துள்ளார்.
இந்த நேசக்கரத்தையும், அன்பையும், நன்றியையும்
இந்தியா முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே இந்திய - தமிழீழ நலன்
விரும்பிகளின் வேட்கையுமாகும்!
இளைய தலைமுறை
�எந்த
ஒரு தேசத்திலும், எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான
அர்ப்பணிப்புக்களை, எமது மண்ணிலே, எமது மண்ணுக்காக எமது மாவீரர்கள்
புரிந்திருக்கின்றார்கள்||- என்று மாவீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும்
ஒருங்கு சேரப் புகழ்ந்த தேசியத் தலைவர் அவர்கள் �இராணுவ வெற்ற்p பற்றிய
கனவுலகில் சிங்களம் வாழ்கின்றது. சிங்களத்தின் இந்தக் கனவுகள் நிச்சயம்
கலையும். எமது மாவீரர் கண்ட கனவு ஒரு நாள் நனவாகும். இது திண்;ணம்||- என்று
உறுதிபடக் கூறியுள்ளார்.
இன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் சர்வதேச
மயப்படுத்தப்பட்டுள்ள வேளையில், எமது மாவீரர்களின் கனவு நனவாகுவதற்கான
பணிகளில் புலம் பெயர் வாழ் தமிழர்களின் பங்கு மிக முக்கியமானதாகும்.
�இன்றைய கால கட்டத்தில் தமிழர்கள்; உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும்,
எந்தக் கோடியில் வளர்ந்;தாலும், எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரல்
எழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு|| அன்போடு
வேண்டுகோள் விடுத்துள்ள தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் குறிப்பாகப் புலம்
பெயர் வாழ் இளைய சமுதாயத்திற்குத்; தனது அன்பையும், பாராட்டுக்களையும்
தெரிவித்துள்ளமையானது ஈண்டு கவனிக்கத் தக்தாகும். தேசியத் தலைவரின்
குறிப்பான பாராட்டுதல்களைப் பெறுமளவிற்கு இளைய தலைமுறையினர் தமது
தாயகத்திற்கான பணிகளைச் சிறப்புற மேற்கொண்டு வருவதானது எம்மெல்லோரையும்
பெருமை கொள்ள வைக்கும் விடயமாகும்.
முன்னர் எப்போதையும் விட,
தமிழீழத் தேசியத்திற்கான கடமையை மிகுந்த எழுச்;சியுடன் செய்ய வேண்டிய பாரிய
பணியைக் காலம், புலம் பெயர் வாழ் தமிழ் மக்களிடம் கையளித்திருக்கின்றது.
நாம் முன்னர் குறிப்பிட்டது போல்இ தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று
சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளதால் புலம் பெயர் வாழ் தமிழ் மக்களாகிய நாம்
எமது பணிகளை மேலும் உத்வேகத்துடன் புரிந்து தமிழீழத் தேசியத் தலைமையின்
கரங்களை மேலும் பலப்படுத்துவோமாக! இதுதான் நாம் எமது மாவீரர்களுக்கு
செய்யக் கூடிய தகுதியான கௌரவமுமாகும்!
|