Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan > கனவு மெய்ப்பட்ட கொசொவோ

Selected Writings by Sanmugam Sabesan,  
சபேசன், அவுஸ்திரேலியா

கனவு மெய்ப்பட்ட கொசொவோ

22 March 2008

Comment by tamilnation.org  On the question of Kosova's 'independence' we may want to read carefully the full text of Kosovo's Declaration of 'Independence', 17 February 2008 which stated, inter alia -

"This declaration ... is in full accordance with the recommendations of UN Special Envoy Martti Ahtisaari and his Comprehensive Proposal for the Kosovo Status Settlement...We invite and welcome an international civilian presence to supervise our implementation of the Ahtisaari Plan, and a European Union-led rule of law mission... We also invite and welcome the North Atlantic Treaty Organisation to retain the leadership role of the international military presence in Kosovo... We shall cooperate fully with these presences to ensure Kosovo's future peace, prosperity and stability..."

We may also want to read carefully the point by point Deconstruction of the Kosovo  Declaration of Independence by L�vizja VET�VENDOSJE (The Kosovo Movement for Self-Determination) -

"...This declaration will not give us freedom. ...we will continue to be ruled over by an anti-democratic and unaccountable international mission... The international presences here based on Resolution 1244 are not democratic nor are they promoting democracy. Instead, they are authoritarian and executive.  Asking NATO to stay until Kosova is �capable� of assuming military �responsibilities� is self-devaluating. By talking about �peace, prosperity and stability� the international community�s focus on stability and peace, not freedom and progress, is revealed.... It is incorrect to say that �the world� intervened. e.g. Russia was against intervention and did not participate. To say that the intervention �removed Belgrade�s governance� and placed Kosova under UN administration makes it sound like the whole thing was no more than an administrative shift... Ahtisaari does not provide a framework for �development�, but will in fact block development, and even deprive us of the possibilities for development by perpetuating the paradigm of stability the international community in Kosova is operating within... if the Ahtisaari plan represents the �highest European standards� for good governance, how come no other European country has implemented it?  "

We may also want to pay attention to the enduring truths contained in the Manifesto of the Kosovo Movement for Self Determination (L�vizja VET�VENDOSJE!)-

"..Freedom is not given. It is an unmediated right and a bare necessity. Freedom is not negotiable; it is the unhindered development of one�s possibilities... Self-determination, because it is something natural; it makes sense that we can make decisions about our own future much more effectively than anyone and everyone else who wants to decide on our behalf. Self-determination!.. Until the complete liberation of our country."

The political reality is that opposition to Kosova's declaration of 'supervised independence' has come not simply from Serbia and Russia, Sri Lanka et al but also from the L�vizja VET�VENDOSJE (Kosovo Movement for Self-Determination) - and we need to ask why? Again, the failure of countries such as India and China to recognise Kosova's 'supervised' independence may have much to do with the presence of an  European Union-led civilian mission and Nato led military mission in Kosovo - and the concern of China and India at the expansion (and embedding) of US/EU influence in an asymmetric multi lateral world.

A question that may help focus Tamil minds will be for Tamils to ask themselves whether today (yes, today) they support the L�vizja VET�VENDOSJE! (Kosovo Movement for Self-Determination!) which has openly stated that the declaration of 17 February 2008 "will not give us freedom" and that "we continue to be ruled over by an anti-democratic and unaccountable international mission."? Or do Tamils take the view that  rule by an anti-democratic and unaccountable international mission is 'self determination'? Another question that Tamils  may ask themselves is whether the current 'independent' Kosova state will declare its own support for the struggle of the people of Tamil Eelam for freedom - and if not, why not?

We believe that if the people of Tamil Eelam, do not wish to become hostages to fortune, it is important that they should take a principle centered approach to happenings in an asymmetric multi lateral world. We need to pay attention to the words of Mamanithar Sivaram in May 2003 -

"Today it is clear beyond all reasonable doubt that India and the US-UK-Japan Bloc are trying to influence and manage Sri Lanka's peace process to promote and consolidate their respective strategic and economic interests...We already hear fools (and there are many of the educated variety among Tamils) declaring that we should swallow our pride and yield to the dictates of the world's sole super power, that the US would bomb the Vanni back to the stone age if the LTTE does not toe the line.

Any foreign force can have its way in a country only if its people are divided, politically obfuscated and are irredeemably sunk in political stupor. The creeping intellectual/political barrenness in the northeast should be stopped without further delay. LTTE officials too should stop making pedestrian, boringly predictable utterances on public forums and, instead, make every endeavour to stir the people's reason, intellectual curiosity, their sense of community, their imagination and their intellectual fervour. This is the only way forward to decisively break the vicious circle of political obfuscation by which our people are deeply but blissfully afflicted today.

America may be the mightiest nation on the earth today but that cannot detract an iota from our right to live with honour, dignity and freedom in the land of our fore bears. It cannot for a moment make us give up an inch of our lands to help India or the US Bloc stabilise the Sri Lankan state for the sole purpose of furthering their strategic and economic interests."

We ourselves agree with Mamanithar Sivaram that "any foreign force can have its way in a country only if its people are divided, politically obfuscated and are irredeemably sunk in political stupor". We agree with him that we should  "make every endeavour to stir the people's reason, intellectual curiosity, their sense of community, their imagination and their intellectual fervour " and that  "this is the only way forward to decisively break the vicious circle of political obfuscation by which our people are deeply but blissfully afflicted today".  We need to pay more than lip service to that which Velupillai Pirabakaran said many years ago in 1993 -

"We are fully aware that the world is not rotating on the axis of human justice. Every country in this world advances its own interests. It is economic and trade interests that determine the order of the present world, not the moral law of justice nor the rights of people. International relations and diplomacy between countries are determined by such interests...The world is constantly changing and there will be unexpected changes. At a particular conjuncture the international situation might change favourably to us. At that time, the conscience of the world will be conducive to the call of our just cause... In reality, the success of our struggle depends on us, not on the world. Our success depends on our own efforts, on our own strength, on our own determination..."

In reality, 'the success of our struggle depends on us, not on the world'. 'Our success depends on our own strength.' And that which is fundamental to our strength is the principled nature of our struggle for freedom.  That is the font from which all else (yes, all else) flows - and it is that which we must safeguard and secure at all times. Should we lose our ideological underpinning we will fail. Rule by an 'anti-democratic and unaccountable international mission' in Kosova is neither freedom nor self determination. We deny reason when we say that it is. We persuade nobody when we say that it is.  If  we sacrifice principle in the altar of expediency we may end up in an international cul de sac of our own creation - and quickly fall prey to those who would deny us our freedom. The painful example of the Oslo Declaration of 25 November 2002 serve as a continuing warning.

Let us remind ourselves of the words of Netaji Subhas Chandra Bose

"Freedom is not given, it is taken.. One individual may die for an idea; but that idea will, after his death, incarnate itself in a thousand lives. That is how the wheel of evolution moves on and the ideas and dreams of one nation are bequeathed to the next...'

Velupillai Pirabakaran was right to say that 'our success depends on our own efforts'.  We need to make the effort to broaden and deepen our understanding of the changing nature of international relations in a multi lateral but asymmetric world and respond to happenings in that asymmetric multilateral world on the basis of that understanding. Otherwise we will be like the blind man in the dark room, clinging on to each object that he may come into contact as a friend and saviour or hitting out against each such object as an enemy.

By all means let us learn from the several lessons that Kosovo's Declaration of 'Independence' of 17 February 2008 teaches - and there are many. At the same time let us also learn from  'How Independent States Come into Being' - and recognise that '...Israel would have been killed at birth in the war of 1948 if it had not been armed by Stalin's Soviet Union against a British and American (yes, American) arms embargo..'.


�இந்த உலகத்தின் விடுதலையடைந்த தேசங்களோடு, நாங்களும் ஒரு விடுதலையடைந்த தேசமாக, ஒரு நாள் விளங்குவோம் என்ற எமது கனவின் மீதான நம்பிக்கையை நாம் ஒருபோதும் இழந்ததில்லை. இதோ, இன்று கொசொவோ விடுதலையடைந்து, சுதந்திரமாகப் பெருமையுடன் திகழ்கின்றது."

கடந்த பெப்ருவரி மாதம், பதினேழாம் திகதி, ஞாயிற்றுக்கிழமை (17-02-2008) அன்று, சேர்பியாவிலிருந்து பிரிந்து சென்று, கொசொவோ தனி நாட்டினைப் பிரகடனப்படுத்தியபோது, கொசொவோ தலைவர்களில் ஒருவர்
(Thaci) மிகப் பெருமிதத்துடன் மேற்கூறியவாறு தெரிவித்தார். அத்தோடு அவர் மேலும் ஒரு கருத்தினையும் மிகத் தெளிவாகத் தெரிவித்திருந்தார்:-

�எமது கனவுகளோ எல்லையற்றவை. எமக்கான சோதனைகளும், சவால்களுமோ மிகப் பெரியவை. ஆனால் வரலாறு எமக்கென்று வகுத்து வைத்துள்ள உயர்வினை நாம் அடைவதனைத் தடுத்து நிறுத்துவதற்கு எந்தச் சக்திகளாலும் முடியாது!".

ஒரு தேசத்தின் சுதந்திர விடுதலைக்கான ஆன்ம உறுதியினை, வலிமையை, கொசொவோ தலைவரின் இந்தக் கூற்றுக்கள் புலப்படுத்தியுள்ளன. இந்தக் கூற்றின் உண்மையை உள்வாங்கிக் கொண்டு, கொசொவோ விடுதலை குறித்தும், தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்தும் சில கருத்துக்களை முன் வைப்பது பொருத்தமானதாகும் என்று நாம் கருதுகின்றோம்.

கோசொவோ நாட்டின் சுதந்திரப் பிரகடனத்திற்கு எதிராகச் சில நாடுகளும், சுதந்திரப் பிரகடனத்திற்கு ஆதரவாகச் சில நாடுகளும் அறிக்கைகளை விடுத்துள்ளன. கொசொவோவின் சுதந்திரத்திற்கு எதிராகக் கண்டனங்களை வெளியிட்டுள்ள நாடுகள் அவற்றைச் சேர்பிய நாட்டுடனான தம்முடைய நட்பின் காரணமாகவோ அல்லது தங்களுடைய கேந்திர, பொருளாதார நலன்கள் காரணமாகவோ அல்லது தமது நாட்டின் அடக்கு முறைக்கு எதிரான ஒரு குறியீடாகச் கொசொவோவின் சுதந்திரம் அமைந்துவிடும் என்ற அச்சம் காரணமாகவோ, கொசொவோவின் சுதந்திரத்தை எதிர்க்கின்றன.

கிரீஸ்(GREECE), செக் குடியரசு (CZECH REPUBLIC), சுலவாக்கியா (SULOVAKIA), இரஸ்யா (RUSSIA), ரொமேனியா (ROMENIA), ஹங்கேரி (HUNGARY), சிறிலங்கா (SRILANKA)போன்ற நாடுகளை இந்தப் பட்டியலுக்குள் நாம் சேர்க்கலாம்.

கோசொவோவின் சுதந்திரத்தினை வரவேற்கும் நாடுகள் தம்முடைய பொருளாதார, கேந்திர அரசியல் காரணங்களுக்காகவோ (அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா போன்ற நாடுகள்) அல்லது தமக்கும் மற்றும் தம்மைப் போன்று அடக்கு முறைக்கு எதிராக, விடுதலைக்காகப் போராடி வருகின்ற மக்களின் சுதந்திரத்தை அவாவி நிற்கின்ற காரணத்திற்காகவோ (தமிழீழம்), கொசொவோவின் சுதந்திரத்தை வரவேற்றுள்ளன.

கோசொவோ சுதந்திரப் போராட்டத்தை மிகச் சுருக்கமாக இவ்வாறு கூறலாம்.

சோவியத் யூனியனின் வல்லரசுக் காலத்தில், அதனுடைய வல்லரசு ஆளுமைக்குள், அதனுடைய நட்பு நாடாக விளங்கிய யூகோஸ்லாவியாவின் சிறிய பிரதேசமாக கொசொவோ இருந்தது. பின்னர் யூகோஸ்லாவியாவிலிருந்து பல தேசங்கள் பிரிந்து சென்று தமக்கெனத் தனி நாடுகளை அமைத்தபோது, கொசொவோ சேர்பிய அரசின் தெற்குப் பிரதேசமாக இருந்தது.

இங்கு வாழ்ந்து வந்த பெரும்பான்மை இனமான, இஸ்லாமியர்களான அல்பேனியர்கள் மீது, சேர்பிய அரசு இராணுவ அடக்கு முறைகளை மேற்கொண்டதன் காரணமாக, கொசொவோ மக்கள், கொசோவன் விடுதலை இராணுவத்தின் கீழ் (முடுயு) இணைந்து, தமது சுதந்திரத்திற்காகப் போராடி வந்தார்கள். சமாதானப் பேச்சு வார்த்தைகள் தோல்வி கண்ட நிலையில், நேட்டோவும் (Nயுவுழு), ஐக்கிய நாடுகள் சபையும் தலையிட்டு சேர்பிய இராணுத்தைக் கொசொவோவில் இருந்து வெளியேற்றின.

2001ம் ஆண்டிலிருந்து கொசொவோவின் முற்று முழுதான நிர்வாகத்தினை ஐக்கிய நாடுகள் சபை பொறுப்பேற்றுக்கொண்டு, கொசொவோவை நிர்வகித்துக் கொண்டு வந்தது. இதன் பின்னர் நடைபெற்ற சமாதானப் பேச்சு வார்த்தைகளும் வெற்றியளிக்காத நிலையில், சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் பிரகாரம், தாம் பிரிந்து சென்று தனியரசு அமைக்கும் உரிமையைக் கொசொவோ வலியுறுத்த ஆரம்பித்தது. இதன் அடிப்படையில், தமது கொசொவோ நாடாளுமன்றத்தின் ஊடாகக் கடந்த பெப்ருவரி மாதம் 17ம் திகதியன்று, சுதந்திரத் தனியரசுப் பிரகடனத்தைக் கொசொவோ அறிவித்தது.

கோசொவோவின் சுதந்திரத்தை உடனடியாக எதிர்த்த நாடுகளுள் சிறிலங்காவும் ஒன்றாகும். சிறிலங்கா தனது எதிர்ப்புக்கான காரணிகளாகச் சில விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளது.

�கொசொவோவின் சுதந்திரப் பிரகடனம், சேர்பியப் பெரும்பான்மை மக்களின் ஒப்புதலைப் பெறவில்லை. கொசொவோவின் இந்த ஒரு தலைப்பட்சமான சுதந்திரப் பிரகடனமானது, சர்வதேச உறவுகளை நிர்வகிக்க முடியாத நிலைக்குக் கொண்டு வரக்கூடிய மோசமான முன்னுதாரணமாக அமையும். அத்தோடு இந்தச் சுதந்திரப் பிரகடனமானது இறைமையுள்ள நாடுகளுக்கும், அனைத்துலகச் சமாதானத்திற்கும், பாதுகாப்பிற்கும் மிகப் பாரிய அச்சுறுத்தலாகவும் அமையும்"- என்று சிறிலங்கா எச்சரித்துள்ளது.



உலகின் மிகத் தொன்மையான இனங்களில் ஒன்றான தமிழினத்தைக் கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக மிகக் கொடுமையான வழிகளினூடாக அடக்கி, ஒடுக்கிவிட முயன்று வருகின்ற சிங்களப் பௌத்தப் பேரினவாத நாடான சிறிலங்கா, கொசொவோ தேசத்தின் சுதந்திரம் குறித்து அச்சம் கொண்டு, இவ்வாறு கண்டன அறிக்கை விடுத்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை. ஆயினும் இந்த அறிக்கையைச் சற்று ஆழமாகக் கவனித்தால், தமிழீழம் தனி நாடாகப் பிரிந்து செல்வதற்கான தகுந்த காரணிகளை இந்த அறிக்கையே கொண்டிருப்பதை நாம் காணலாம்.

�கொசொவோவின் சுதந்திரப் பிரகடனம், சேர்பியப் பெரும்பான்மை மக்களின் ஒப்புதலைப் பெறவில்லை" - என்று சிறிலங்கா தெரிவித்துள்ளது. அதாவது தம்மை அடக்கி, ஒடுக்க முனைகின்ற பெரும்பான்மை மக்களின் ஒப்புதலை, அடக்கப்படுகின்ற மக்கள் பெறுவதன் மூலம்தான் தங்களது சுதந்திரத்தை அவர்கள் பெறவேண்டும் என்று சிறிலங்கா சொல்கின்றது. சிறிலங்காவைப் பொறுத்தவரையில் �சிங்கள மக்களும், தமிழ் மக்களும் சிறிலங்காவினரே
(SRI LANKANS)" என்றும், �அவர்களிடையே பேதமும், பாகுபாடும் இல்லை" என்றும் சிறிலங்கா பரப்புரை செய்கின்றது. ஆனால் உண்மை என்ன? அதனையும் சிறிலங்காவின் சிங்களத் தலைவர்கள் வாயிலாகவே கேட்போம்.

சுமார் இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1983ம் ஆண்டு, ஜீலை மாதம் திட்டமிடப்பட்ட தமிழின அழிப்பை அன்றைய சிங்கள அரசு - ஜே.ஆர் ஜெயவர்த்தனாவின் அரசு நடாத்தியது. அந்தத் தமிழின அழிப்பு நடைபெற்ற பின்னர், சிறிலங்காவின் அன்றைய அமைச்சரான காமினி திசநாயக்கா ஆற்றிய உரையை நாம் ஓர் எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம்.

1983ம் ஆண்டு, செப்ரம்பர் மாதம் 5ம் திகதியன்று ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரான காமினி திசநாயக்க பின்வருமாறு கொக்கரித்தார். ஆமாம், கூறவில்லை - கொக்கரித்தார் - என்பதே சரியான சொல்லாகும்!

தமிழ் மக்களைப் பார்த்துக் காமினி திசநாயக்க இவாறுதான் கொக்கரித்தார்:-

�உங்களைத் தாக்கியது யார்? - சிங்களவர்கள்!
உங்களைக் காப்பாற்றியது யார்? - சிங்களவர்கள்!

ஆமாம்! எங்களால்தான் உங்களைத் தாக்கவும், காப்பாற்றவும் முடியும்! உங்களைக் காப்பாற்ற, இந்தியாவின் இராணுவம் இங்கே வருமாக இருந்தால், அதற்குப் 14 மணித்தியாலங்கள் தேவை! ஆனால் 14 நிமிடங்களுக்குள் இந்த நாட்டினில் உள்ள ஒவ்வொரு தமிழனின் இரத்தத்தையும் இந்த நாட்டிற்காக நாம் அர்ப்பணிப்போம். உங்களுடைய நெற்றிகளில் நீங்கள் ஒரு யாழ்ப்பாணத் தமிழன் என்றோ, மட்டக்களப்புத் தமிழன் என்றோ, மலையகத் தமிழன் என்றோ, இந்துத் தமிழன் என்றோ, கிறிஸ்தவத் தமிழன் என்றோ எழுதப்படவில்லை! எல்லோருமே தமிழர்கள்தான்!"

- இவ்வாறு அன்று, 1983ல், அமைச்சர் காமினி திசநாயக்க கொக்கரித்தார்.

(ஆனால் பின்னாளில் தமிழீழ மக்களின் அமைதி கொல்லும் படையாக வந்திறங்கிய இந்திய இராணுவப் பெரும்படையைத் தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்த்து நின்று விரட்டியடித்தது வேறொரு வரலாற்றுப் பதிவாகும்!)

1983ம் ஆண்டு ஜீலை மாதத்தில் நடைபெற்ற தமிழினப் படுகொலைகளின் மூலம், உலக நாடுகள் யாவும் முதன்முறையாக விழித்தெழுந்தன. ஆனால் ஒரேயொரு நாடு மட்டும் விழித்தெழவேயில்லை. விழித்தெழாத அந்த நாடு வேறெந்த நாடும் அல்ல! அது சிங்களப் பௌத்தப் பேரினவாத நாடான சிறிலங்காவேதான்! அதன் அன்றைய ஜனாதிபதியான ஜே.ஆர் ஜெயவர்த்தனா அன்றைய தினங்களில் நடந்துகொண்ட விதமும், பேசிய பேச்சுக்களும் ஒரு சிங்களப் பௌத்தப் பேரினவாதியின் சிந்தனைகளை அப்படியே பிரதிபலித்தன. இலங்கைத்தீவில் இரண்டு தேசங்கள் இருக்கின்றன என்பதற்கும், அவை பிரிந்துதான் இருக்க வேண்டும் என்பதற்கும் அமைச்சர் காமினி திசநாயக்காவின் மேற்கூறிய கொக்கரிப்பு மட்டுல்லாது, ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் பேச்சுக்களும், நடத்தையும் சாட்சிகளாக அமைகின்றன. உதாரணத்திற்காக மேலுமொரு சம்பவத்தை இங்கு தர விழைகின்றோம்.

1983ம் ஆண்டு ஜீலை மாதம் 24ம் திகதி இரவிலிருந்து தொடர்ந்து இலங்கைத் தீவின் பல பாகங்கள் எரிந்து கொண்டிருந்த போதும், அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா மௌனமாகவே இருந்தார். ஐந்து கோரமான நாட்களுக்குப் பின்னர்தான் - அதாவது ஜீலை 28ம் திகதி வியாழக்கிழமை இரவுதான் - ஜனாதிபதி ஜெயவர்த்தனா முதன் முதலாகத் தமிழினப் படுகொலைகள் குறித்து நாட்டு மக்களுக்குத் தொலைகாட்சியின் ஊடாக உரையாற்றினார். அப்போதும் கூட, தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்டு வருகின்ற இந்த இனப் படுகொலைகள் குறித்து அவர் வருத்தம் தெரிவித்தோ, கவலை தெரிவித்தோ, அனுதாபம் தெரிவித்தோ ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. மாறாக, இந்தக் கோரமான இனப் படுகொலைகளை நியாயப்படுத்தும் வகையிலேயே ஜனாதிபதி ஜெயவர்த்தனாவின் உரை அமைந்திருந்தது.

�1956ம் ஆண்டிலிருந்து தமிழ் மக்கள்மீது சிங்கள மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையின்மை வளர்ந்து வந்ததன் வெளிப்பாடுதான் இந்த இனக் கலவரங்கள்" என்றும், �இவ்வாறான மனக்குறைகள் சிங்கள மக்களுக்கு இருக்கும் பட்சத்தில் அவர்கள் (அதாவது சிங்கள மக்கள்) வன்முறையில் ஈடுபடுவது எளிதான செயலாகும்" என்றும், 77 வயது நிரம்பிய ஜே.ஆர். ஜெயவர்த்தனா அன்று தெரிவித்தார்.

அத்தோடு மட்டும் அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. அவர் மேலும் தொடர்ந்து இவ்வாறு கூறினார்:-

�சிங்கள மக்களை அமைதிப்படுத்துவதற்காகவும், சிங்கள மக்களுடைய இயல்பான வேட்கையைப் பூர்த்தி செய்வதற்காகவும் ஒரு புதிய சட்டத்தை நான் அமலாக்க இருக்கின்றேன். இந்தப் புதிய சட்டத்தின் பிரகாரம், நாட்டுப் பிரிவினை கோரும் எவரும் இந்தப் பாராளுமன்றத்தில் அங்கத்தவர்கள் ஆக முடியாது. அது மட்டுமல்ல, நாட்டுப் பிரிவினை கோரும் எந்த ஒரு கட்சியும் தடை செய்யப்படும். இனிமேல் நாட்டைப் பிரிப்பது குறித்து எவரும் சட்டரீதியாகச் செயல்பட முடியாது."

அன்புக்குரிய வாசகர்களே! 1983 ஜீலையில் நடைபெற்ற தமிழினப் படுகொலைகளையும், அவ்வேளையில் சிங்களத் தலைவர்கள் கூறிய இனவாதக் கருத்துக்களையும் நாம் இவ்வேளையில் சுட்டிக் காட்டியமைக்குக் காரணம் உண்டு. கொசொவோவின் சுதந்திரப் பிரகடனத்திற்கு எதிராகச் சிறிலங்கா தெரிவித்துள்ள கண்டனத்தில் சொல்லப்படுகின்ற ஒரு காரணமாக �கொசொவோவின் சுதந்திரப் பிரகடனம், சேர்பியப் பெரும்பான்மை மக்களின் ஒப்புதலைப் பெறவில்லை" - என்பதாகும்.

 சேர்பியப் பெரும்பான்மை இனம், கொசோவோ மக்களை அடக்கி, ஒடுக்க முனைந்த போதுதான், கொசொவோ மக்கள் தமது சுதந்திரத்திற்காகப் போராடத் தொடங்கினார்கள். தம்மை அடக்க முயல்பவர்களிடமே, தமக்குரிய சுதந்திரத்திற்கான ஒப்புதலை, அடக்கப்படுபவர்கள் எவ்வாறு பெற முடியும்? �இங்கே தமிழர்கள் வேறு, சிங்களவர்கள் வேறு, தமிழர்களைக் கொல்வது இயல்பானது" என்று சிங்களத் தலைவர்களே பகிரங்கமாக மார்தட்டிப் பேசுகின்றபோது, சிங்களப் பெரும்பான்மை மக்களின் ஒப்புதலைத் தமிழ் மக்கள் எவ்வாறு பெற முடியும்? பெறமுடியாது என்பது மட்டுமல்லாமல், தமிழர்கள் வேறானவர்கள் என்று சிங்களம் சொல்கின்ற விளக்கமே, தமிழர்கள் பிரிந்து செல்லவேண்டும் என்பதற்கான காரணிகளில் ஒன்றாக அமைகின்றது.

கோசொவோவின் சுதந்திரப் பிரகடனத்திற்கு எதிராகச் சிறிலங்கா தெரிவித்துள்ள கண்டனத்தில் சொல்லப்படுகின்ற இன்னுமொரு காரணமாக �இந்தச் சுதந்திரப் பிரகடனமானது இறைமையுள்ள நாடுகளுக்கும், அனைத்துலகச் சமாதானத்திற்கும், பாதுகாப்பிற்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாகவும் அமையும்"- என்பதாகும்.

இறைமையைப் பற்றி பேசுகின்ற சிறிலங்கா உண்மையில் இறைமையற்ற தேசம் என்பதை நாம் பலமுறை தர்க்கித்தே வந்துள்ளோம். சிறிலங்கா என்ற நாடானது, தனது இறைமையை முறையாகப் பெற்ற நாடு அல்ல! அந்த வகையில் சிறிலங்கா ஓர் இறைமை உள்ள நாடு அல்ல! மிகச் சுருக்கமாகச் சொல்வதென்றால், சிறிலங்கா, பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்றபோது சோல்பரி பிரபுவின் தலைமையில் ஆக்கப்பட்ட சுதந்திர இலங்கைக்கான அரசியல் யாப்பின் சரத்து 29இன் 2டீ மற்றும் 2ஊ பிரிவுகளைப் பின்னாளில் சிறிலங்கா அரசு மீறியது. பின்னர் 1972ல் சிறிலங்கா குடியரசாக மாறியபோது, அது சட்டரீதியாகப் புதிய யாப்பை உருவாக்கவில்லை. ஏனென்றால், இவ்வாறு அரசியல் யாப்பினை மாற்றுவதற்கு, பிரித்தானியா அரசின் ஞரநநn ழக ஊழரnஉடைஇன் அல்லது பிரித்தானிய மகாராணியின் அனுமதியோடு, பிரித்தானியப் பாராளுமன்றம் கொடுக்கின்ற ஒப்புதலோடுதான், சிறிலங்கா தனது அரசியல் யாப்பு மாற்றத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டும். இவ்வாறு அனுமதி பெறாமல், புதிய யாப்பைச் சிறிலங்கா அரசு கொண்டு வந்த காரணத்தினால், புதிய அரசியல் யாப்பு என்பதானது, சட்டத்திற்கும், நீதிக்கும் புறம்பானது என்பதால், சிறிலங்காவிற்கு இறைமை என்பது கிடையாது!

தவிரவும், இலங்கைத் தீவில் தமிழ் மக்களும், சிங்கள மக்களும் சமமாகவும், ஒற்றுமையாகவும், சமாதானமாகவும் இருப்பதற்கான முயற்சிகளைச் சிறிலங்கா அரசு மேற்கொண்டதா? அல்லது மேற்கொண்டு வர முயற்சிக்கின்றதா?

இல்லை என்பதே, இதற்குரிய உண்மையான பதிலாகும்!

இன்றைய சிறிலங்கா அரசும், நாட்டில் சமாதானத்தைக் குலைத்து, தமிழர்களை மூன்றாம் தரப் பிரஜைகளாக்கி, அவர்களை அவல வாழ்க்கையில் தள்ளி, அழித்து வருகின்றது. சிறிலங்காவின் சட்டம் தமிழர்களுக்கு எதிராக உள்ளது. சிறிலங்காவின் நீதித்துறை தமிழர்களுக்கு எதிராக இருக்கின்றது. சிறிலங்காவின் யாப்பு தமிழர்களுக்கு எதிராக இருக்கின்றது. சிறிலங்காவின் அரசுகள் தொடர்ந்தும் தமிழர்களுக்கு எதிராக உள்ளன.

பெரும்பான்மை இனத்தவர்கள் �இறைமை| என்ற பெயரின் கீழ், சிறுபான்மை இனத்தவரை ஒடுக்கும்போது, அந்தச் சிறுபான்மை இனம் தமக்கென்று ஓர் இறைமையுள்ள நாட்டை அமைத்துக் கொள்ள உரிமை உண்டு. அதையே கொசொவோ செய்துள்ளது. அதையே தமிழீழமும் செய்யப் போகின்றது.

சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு குறித்துத் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் நெடுங்காலமாகவே வலியுறுத்தி வந்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வு
(UNITED NATIONS STUDY), சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு குறித்தும், பிரிந்து செல்லும் உரிமைக் கோட்பாடு குறித்தும், பிரிந்து செல்லும் உரிமைக்குத் தகுதியானவர்கள் குறித்தும் சில வரைவிலக்கணங்களை முன் வைத்துள்ளது. அதன்படி �வரலாற்று ரீதியாக, தம்முடைய பாரம்பரிய மண்ணில், தனது தனித்துவமான பண்பாட்டோடு, தம்மைத்தாமே திறமையாக ஆண்டு வந்த மக்கள், மீண்டும் தம்மைத் தாமே ஆள்வதற்கு உரிமை கொண்டவர்கள்" என்ற கருத்துப்பட, ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வு பல காரணிகளை முன் வைத்துள்ளது. சுயநிர்ணய உரிமை குறித்துக் குறிப்பிடுகின்ற உலக நீதி மன்றம் (International Court of Justice) �இது அரசுக்கு மட்டுமுள்ள உரிமை அல்ல, இது மக்களுக்கும் உள்ள உரிமையாகும்!" என்று தெரிவிக்கின்றது.

உலக நீதி மன்றமும்,
�Inter-American Commission on Human Rights of the Organisation of the American State|| உம், சுயநிர்ணய உரிமை குறித்துப் பொதுவான பல கருத்து நிலைகளை அறிவித்துள்ளன. மக்களுடைய சுயநிர்ணயத்திற்கான உரிமையைச் சகலரும், சகல வேளைகளிலும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இவை தெரிவித்துள்ளன. சுயநிர்ணய உரிமைக்குச் சட்ட ரீதியான அந்தஸ்து உள்ளது என்றும், இவற்றை ஏற்று மதிக்க வேண்டியது சர்வதேசத்துக்குரிய ஒரு கட்டாயக் கடமையுமாகும் என்றும் இவை தெரிவித்துள்ளன.

வரலாற்று ரீதியாக ஒருங்கிணைந்திருந்த தேசிய இனங்கள் முரண்பட்டுப் பிரிந்து புதிதாக நாடுகளை உருவாக்கி வருகின்றன. ஆனால் ஏற்கனவே தனியாக இருந்து, பின்னர் பலவந்தமாக ஒன்று சேர்க்கப்பட்ட தமிழர் தேசம் ஏன் மீண்டும் தகுந்த காரணங்களுக்காகத் - தனியாகப் பிரிந்து செல்லக் கூடாது என்பதுதான் எமது கேள்வி!

தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை, ஐக்கிய நாடுகள் சபையின் சுயநிர்ணயக் கோட்பாட்டை, உலக நீதிமன்றத்தின் சுயநிர்ணய உரிமைக்கான வரைவிலக்கணத்தை, ஐவெநச - யுஅநசiஉயn ஊழஅஅளைளழைn ழn ர்ரஅயn சுiபாவாள ழக வாந ழுசபயnளையவழைn ழக வாந யுஅநசiஉயn ளுவயவநள இன் சுயநிர்ணய உரிமை குறித்த கருத்து நிலையை, இன்று சிறிலங்கா அரசு மறுத்து, எதிர்த்து நிற்கின்றது.

இப்போது கொசொவோ தேசத்தின் சுதந்திரக் கனவு மெய்ப்பட்டிருக்கின்றது.

இங்கே புலம் பெயர் வாழ் தமிழீழ மக்களுக்குச் செய்தியொன்று உண்டு.

தமிழீழக் கோரிக்கைக்கு நாம் முழுமையாக ஆதரவாக இருக்கின்றோம் என்கின்ற கொள்கைக்கு அப்பாற்பட்டு, எத்தகைய இடரோ, இன்னலோ, சோதனையோ வந்தாலும், எத்தகைய சக்திகள் எமக்கு எதிராக எழுந்தாலும் எமது தாயக விடுதலையை நாம் அடைந்தே தீருவோம் என்கின்ற அசைக்க முடியாத வல்லமையை நாம் எம்முடைய ஒருங்கிணைவின் மூலம் அடைய வேண்டும்"- என்பதே எமக்கான செய்தியாகும்!

சுதந்திரத் தமிழீழம் விரைவில் அமையும்! அப்போது உலக விடுதலைப் போராட்ட வரலாற்றில், தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறே முதன்மைப் பாடமாக வைக்கப்படும்!

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home