Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan > அவுஸ்திரேலிய நினைவு தினம் -  Lest We Forget

Selected Writings by Sanmugam Sabesan,  
சபேசன், அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலிய நினைவு தினம் -  Lest We Forget
[together with Translation in English]

30 October 2006


நவம்பர் மாதம் 11ம் திகதியானது அவுஸ்திரேலிய மக்களுக்கு ஒரு மிக முக்கியமான தினமாகும். பதினொராம் திகதியின் பகல் பதினொரு மணிக்கு அவுஸ்திரேலிய மக்கள்  கடந்த நூறு ஆண்டு காலத்தில் போரினால் மடிந்த தமது மாவீரர்களையும், மக்களையும் கடமையாற்றிய அனைத்து போர்வீரர்களையும் போரினால் பாதிக்கப்பட்டவர்களையும் நினைத்து அகவணக்கம் செலுத்துவார்கள்.

இந்த நவம்பர் மாதத்து நினைவு தினத்தின் பின்னால் உள்ள வரலாற்று நிகழ்வுகளை இவ்வேளையில் மீட்டிப் பார்ப்பது பொருத்தமான ஒன்றாகும். இந்த அவுஸ்திரேலிய நினைவு தினம் சம்பந்தமான நிகழ்வுகளை உலக வரலாற்றின் பல தளங்களிலும் வைத்து மீட்டிப் பார்க்கும்போது தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றோடும் பல நிகழ்வுகள் ஒத்துப் போவதை நாம் காண முடிகின்றது.

நினைவு தினங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது அல்ல  இந்தக் கட்டுரையின் நோக்கம் என்பதையும் நாம் முதலிலேயே சொல்லி வைக்க விரும்புகின்றோம். ஆயினும் நகர்ந்து வருகின்ற வரலாறு சில அடிப்படையான யதார்த்தமான விடயங்களை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டியே வந்திருக்கின்றது என்பதையே நாம் இன்றைய தினம் குறிப்பிட விரும்புகின்றோம். இந்த வகையில் இந்தக் கட்டுரையில் உள்ள வரலாற்று உண்மைகளையும் வரலாறு தந்திருக்கின்ற படிப்பினைகளையும் எமது நேயர்கள் உள்வாங்கிக் கொள்ளலாம்.

இன்று நவம்பர் மாதம் பதினொராம் திகதியன்று நினைவுதினமாக - Remembrance Day உணர்வு பூர்வமாக அடையாளப் படுத்தப்பட்டுள்ள தினம் முன்னர் ‘நினைவு தினம்’ என்று அழைக்கப்பட வில்லை. மாறாக ‘யுத்த நிறுத்த தினம்’ (ARMISTICE-DAY) என்றுதான் பிரகடனப் படுத்தப்பட்டும், அழைக்கப்பட்டும் வந்துள்ளது.

இத்தினம் ஏன் முதலில் ‘யுத்த நிறுத்த தினம்’ என அழைக்கப்பட்டது? ஏன் யுத்த நிறுத்த தினம் கொண்டாடப்பட்டது? பின்னர் ‘யுத்த நிறுத்த தினம்’ என்ன காரணத்தால் ‘நினைவு தினமாக’ மாறியது? இடையில் ஏற்பட்ட வரலாற்று சம்பவங்கள் என்ன?

இதற்காக நாம் 88 ஆண்டுகள் பின்னோக்கில் செல்ல வேண்டும். முதலாவது உலக மகா யுத்த காலம்!

1918ம் ஆண்டு நவம்பர் மாதம் பதினொராம் திகதியன்று அதிகாலை ஐந்து மணிக்கு ஜேர்மன் அரசாங்கத்தின் மூன்று பிரதிநிதிகள் நேசநாடுகளின் தளபதியும் பிரான்ஸ் இராணுவ ஜெனரலுமான  Foch  என்பவர் அளித்த யுத்த நிறுத்த உடன்படிக்கையின் சரத்துக்களை ஏற்றுக் கொண்டனர். நேச நாடுகளின் போர்வீரர்கள் ஜேர்மன் இராணுவத்தினரை ஓட ஓட விரட்டிய மாதங்கள் அவை! ஜேர்மன் இராணுவம் கைப்பற்றியிருந்த பிரதேசங்களையெல்லாம் நேசநாடுகளின் இராணுவம் மீளக் கைப்பற்றிக் கொண்டு வந்த காலம் அது.

அந்த வேளையில் ஒரு ‘யுத்த நிறுத்த உடன்படிக்கை’!!

1918ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் திகதியன்று அதிகாலை ஐந்து மணிக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த யுத்த நிறுத்த உடன்படிக்கை பகல் 11 மணிக்கு அமலுக்கு வந்தது. சுமார் நான்கு ஆண்டுகள் நடைபெற்ற முதலாவது உலக மகா யுத்தம் முடிவுக்கு வந்தபோது 61,919 அவுஸ்திரேலியர்கள் கடலிலும் வானிலும், அந்நிய மண்ணிலும் உயிர் துறந்திருந்தனர். அன்றைய தினம் கிட்டத்தட்ட சகல அவுஸ்திரேலிய குடும்பங்களும் போரினால் பாதிக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான குடும்பங்கள் ஒரு தந்தையையோ மகனையோ, சகோதரனையோ, சகோதரியையோ நண்பனையோ அல்லது நண்பியையோ இழந்து விட்டிருந்தன.

416,000க்கும் மேற்பட்ட அவுஸ்திரேலியர்கள் தமது நாட்டிற்காக முதலாவது உலக மகா யுத்தத்தில் இணைந்து கொண்டார்கள். இவர்களில் சுமார் 324,000 பேர்கள் வெளிநாடுகளில் பணி புரிந்தார்கள். பிரான்ஸின் Western Frontம், பெல்ஜியத்திலும் சுமார் 45,000 போர்வீரர்களும் துருக்கியில் சுமார் எண்ணாயிரம் போர்வீரர்களும் , மற்றைய பிரதேசங்களில் இன்னுமொரு எண்ணாயிரம் போர்வீரர்களுமாக 61,919 அவுஸ்திரேலியர்கள் முதலாவது உலக மகாயுத்தத்தின் போது மாவீரர்களானார்கள்.

1918ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் திகதியன்று யுத்த நிறுத்த உடன் படிக்கை அமலுக்கு வந்தவுடன் நிரந்தரமான சமாதானம் வந்து விட்டது என்றுதான் சகலரும் நம்பினார்கள். இந்த உடன்படிக்கை கைச்சாத்திட்ட முப்பது நாட்களுக்குள் ஜேர்மன் இராணுவம் குறிப்பிட்ட பிரதேசங்களை விட்டு வெளியேற வேண்டும் என்றும், உடனடியாக யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உடன்படிக்கையில் குறிப்பிடப் பட்டிருந்தது. இந்த யுத்த நிறுத்த உடன்படிக்கை அடுத்த ஆண்டு நிரந்தரமாக்கப்பட்டபோது, உலகளாவிய வகையில் மக்கள் மகிழ்ச்சியடைந்து இந்தப் போர்நிறுத்த தினத்தை கொண்டாடினார்கள். அவுஸ்திரேலியா நியுசிலாந்து, கனடா மற்றும் அமெரிக்கா போன்ற தேசங்களுக்கு நவம்பர் 11ம் திகதியானது யுத்த நிறுத்த தினமாகவும், முதலாவது உலக மகா யுத்தத்த்pல் இறந்தவர்களை நினைவு கூரும் தினமாகவும் இருந்து வந்தது.

ஆனால் யுத்தம் மீண்டும் வெடித்தது !.

இரண்டாவது உலக மகா யுத்தம் ஆரம்பமாகியது. தன்னுடைய இனம்தான் தூய இனம் அது மற்றைய இனங்களை விட மேலானது என்று ஹிட்லர் முழங்கினார். யூத இன அழிப்பில் இறங்கினார். முறைகேடாக ஆட்சிக்கு வந்து முறைகேடான ஆட்சியையும் ஹிட்லர் நடாத்தினார். ஒப்பந்தங்களைப் போடுவதும், அதே ஒப்பந்தங்களை மீறுவதும் ஹிட்லரின் பண்பாக இருந்து வந்தது. ஹிட்லரின் ஆட்சியில் இராணுவத்திற்கே சகல அதிகாரங்களும் வழங்கப் பட்டன, சட்டம் எதுவாக இருந்தாலும் ஜேர்மன் இராணுவம் அதனை அசட்டை செய்து தன்னுடைய ஆரிய பேரினவாத அரச பயங்கரவாதத்தை மேற்கொண்டு வந்தது. தொடர்ந்து யூத இன அழிப்பு மேற்கொள்ளப் பட்டு வந்தது. ‘ஒரு பேரினவாத பயங்கரவாத அரசு!|

அன்புக்குரிய வாசகர்களே!

நாம் இப்போது ஒரு ‘பேரினவாத பயங்கரவாத அரசு’ என்று குறிப்பிட்டது, ஹிட்லரின் அன்றைய ஜேர்மன் அரசைத்தான்.!

இரண்டாவது உலக மகாயுத்தத்தில் ஹிட்லரும் அவரது ஜேர்மன் இராணுவமும் தோற்கடிக்கப்பட்டனர். இரண்டாவது உலக மகாயுத்தம் முடிவுக்கு வந்தது. கிடைக்கப் பெற்றுள்ள ஆவணங்களின்படி இரண்டாவது உலக மகாயுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர்தான் யுத்தநிறுத்த தினம் என்பது ‘நினைவு தினம்’ என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது என்று அறியப்படுகின்றது. பிரித்தானிய அரசு இது குறித்து முன்வைத்த பிரேரணையை அவுஸ்திரேலிய அரசு ஏற்றுக்கொண்டது. ‘யுத்த நிறுத்த தினம்’ நினைவு தினமாயிற்று.

ஆண்டுகள் பல கழிந்து கொண்டு போகின்ற போதிலும் அவுஸ்திரேலிய மக்கள் தங்களுடைய மாவீரர்களை மறந்ததேயில்லை. சரியாக சொல்லப் போனால் இன்னும் உத்வேகத்துடன் உணர்வு பூர்வமாக தங்களுடைய மாவீரர்களை அவுஸ்திரேலிய மக்கள் நிiவு கூர்ந்து வருகின்றார்கள் என்றே சொல்ல வேண்டும். உதாரணத்திற்கு ஒரு விடயத்தை சுட்டிக் காட்ட விழைகின்றோம்.

முதலாவது உலக மகா யுத்தத்தின் போதும் இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போதும் வீரச்சாவடைந்த அவுஸ்திரேலிய வீரர்களில் 35,527 மாவீரர்களின உடல்கள் எங்கே புதைக்கப்பட்டுள்ளன என்று இதுவரையும் அறிய முடியாமல் உள்ளது. எங்கேயோ அந்நிய தேச மண்ணில் இந்த 35,527 மாவீரர்களின் உடல்கள் எங்கே புதைக்கப்பட்டுள்ளன என்று இதுவரை அறிய முடியாமல் உள்ளது. எங்கேயோ அந்ந்pய தேச மண்ண்pல் இந்த 35,527 மாவீரர்களின் உடல்கள் உறங்கிக் கிடக்கின்றன.

1993ம் ஆண்டு பிரான்ஸ் தேசத்தின் றுநுளுவுநுசுN குசுழுNவு ல் புதைக்கப்பட்டிருந்த ஒரு பெயர் தெரியாத அவுஸ்திரேலிய மாவீரனின் பூத உடலின் பாகங்களை அவுஸ்திரேலிய அரசு அகழ்ந்தெடுத்து அவுஸ்திரேலியாவிற்கு கொண்டு வந்தது. அந்தப் பெயர் தெரியாத மாவீரனின் உடல் 1993ல் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் திகதியன்று பூரண அரச மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்பட்டது.

அந்த மாவீரனின் சவப்பெட்டியின் முன்னே நின்று அன்றைய அவுஸ்திரேலியப் பிரதமர் திரு Paul Keating  இரங்கலுரை நிகழ்த்தினார். அப்போது அவர் தெரிவித்த சில கருத்துக்கள் வருமாறு:

“இந்த அவுஸ்திரேலியப் போர்வீரன் யார் என்று எமக்கு எப்போதுமே தெரிய வரப்போவதில்லை. ஆயினும் எம்மால் எப்போதும் கௌரவிக்கப்படுபவர்களில் இவரும் ஒருவர்! ஆனால் எங்களுக்கு ஒன்று தெரியும். அவர் அவுஸ்திரேலியாவிற்காக போர்ப்பணி புரிந்த 416,000 பேர்களில் ஒருவர். போரின் போது இறந்த 45,000 அவுஸ்திரேலிய வீரர்களில் ஒருவர்! இவர்தான் அவர்கள் எல்லோரும்! அத்தோடு இவர் எங்களில் ஒருவர்.!”

அன்றைய அவுஸ்திரேலிய பிரதமர் திரு Paul Keating  உணர்வு மிக்க இந்தப் பேச்சு அவுஸ்திரேலிய மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாகவே இருந்தது. முதலாவது உலக மகாயுத்தத்தில் சேவை புரிந்த Robert Comb, இந்தப் பெயர் தெரியாத போர்வீரனின் சவப்பெட்டியின் மீது அவர் வீழ்ந்த பிரான்ஸ் தேசத்து மண் துகள்களை தூவிவிட்டு இவ்வாறு கூறினார்.

“Now, You are Home, mate.”

அவுஸ்திரேலியா தனது மாவீரர்களை கௌரவிப்பதோடு மட்டும் நின்று விடவில்லை. இரண்டு உலக மகா யுத்தங்களில் பணி புரிந்து, பின்னர் இயல்பு வாழ்க்கையை மேற்கொண்ட போர்வீரர்கள், முதுமை காரணமாக இயற்கை எய்தும்போதும் அவர்களை அவுஸ்திரேலியா கௌரவிக்கின்றது. தனது 16 வது வயதில் அவுஸ்திரேலியா இராணுவத்தில் சேர்ந்து, குழந்தைப் போர்வீரன் (Kid Soldier) என்று அழைக்கப்பட்ட ALEC CAMPBELL அவர்கள் தன்னுடைய 103வது வயதில் 2002ம் ஆண்டு காலமானபோது அவுஸ்திரேலிய பிரதம மந்திரி தனது சீன நாட்டு விஜயத்தை பாதியில் முடித்துவிட்டு நாடு திரும்பினார். ALEC CAMPBELL அவர்களுடைய படத்தை அவுஸ்திரேலிய அரசு ஏற்கனவே தபால் முத்திரையில் வெளியிட்டு கௌரவித்து இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, பால்வடியும் முகத்தோடு சீருடையில் அலெக் காம்வெல் தன்னையும் விடப்பெரிய துப்பாக்கியோடு நிற்கின்ற தோற்றத்தை MINT நாணயத்தில் பதித்து அவுஸ்திரேலியா பின்னர் மீண்டும் கௌரவித்தது.

அவுஸ்திரேலியாவின் மாவீரர்கள் குறித்தும் அவர்களை அவுஸ்திரேலிய மக்களும் அரசும் எவ்வாறு உணர்வு பூர்வமாக மதித்து கௌரவித்து வருகின்றார்கள் என்பது குறித்தும் சில வரலற்று தகவல்களைத் தந்திருந்தோம். முத்தாய்ப்பாக, ஒரு போர்வீரன் எழுதிய ஆங்கிலக் கவிதையை இயன்றவரை தமிழாக்கித் தருகின்றோம். லெப்டினட்-கேர்ணல் John McCrae  என்பவர் 1915ம் ஆண்டு மே மாதம் பெல்ஜியத்தின் Flanders Field வைத்து எழுதிய இந்த உருக்கமான கவிதையில், மிகச் சரியான செய்தி ஒன்றும் உள்ளது.

இதோ Flanders Field போர்க்களத்தில்
பொப்பி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
சிலுவை அடையாளங்களுக்கு இடையே
வரிசை வரிசையாக பொப்பி மலர்கள்
எங்களுடைய இருப்பிடங்களை
அடையாளம் காட்டுகின்றன.
கீழே முழங்குகின்ற துப்பாக்கிச் சத்தங்களைத்
தங்கள் காதுகளில் வாங்காது வானம்பாடிகள் பாடிப் பறக்கின்றன.

நாங்கள் இப்போது இறந்தவர்கள்.
சுpல நாட்களுக்கு முன்பு வாழ்ந்தவர்கள்.
வாழ்ந்தோம். வீழ்ந்தோம். சூரிய உதயத்தை உணர்ந்தோம்.
சூரிய அஸ்தமனத்தின் ஒளியையும் கண்டோம்.
காதலித்தோம். காதலிக்கவும் பட்டோம்.
இப்போது Flanders Field ல் கிடக்கின்றோம்.

எங்களுடைய சண்டையை பகைவனிடம் கொண்டு செல்லுங்கள்
செயல் இழக்கப் போகின்ற எங்கள் கைகளில் உள்ள
விளக்கை உங்களிடம் தருகின்றோம்.
அதனை உங்களுடையதாக உயர்த்திப் பிடியுங்கள்.
இறந்து கொண்டிருக்கும் எங்களுடைய நம்பிக்கையை ,
நீங்கள் உடைப்பீர்களேயானால்
நாங்கள் தூங்கப் போவதில்லை.
ஆனால் இந்த பொப்பி மலர்கள்
Flanders Field ல் தொடர்ந்து பூத்துக் குலுங்கும்.

அன்புக்குரிய வாசகர்களே!

இங்கே தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும், நேசநாடுகளின் சார்பில் அவுஸ்திரேலியத் தேசம் நடாத்திய போருக்கும் இடையே, ஒப்பீட்டளவில் பல ஒற்றுமைகளை நாம் காணலாம்.

• நேசநாடுகள, ஜேர்மன் இராணுவத்தினரை ஓட ஓட விரட்டிய பின்னர்தான், ஒரு யுத்த நிறுத்த உடன்படிக்கை அன்று ஏற்பட்டது. அதேபோல், தமிழீழ விடுதலைப் புலிகள் சிறிலங்கா இராணுவத்தினரை ஓட, ஓட விரட்டிய பின்னர்தான், யுத்த நிறுத்த உடன்படிக்கை இலங்கையில் ஏற்பட்டது.

• ஆனால் யுத்த நிறுத்த உடன்படிக்கையை ஜேர்மனி மீறியதால் மீண்டும் போர் தொடங்கியது. இன்று மகிந்தவின் அரசும் ஜேர்மனி போன்றே செயல் படுகின்றது.

• ஹிட்லர் முறைகேடாக ஆட்சிக்கு வந்து முறைகேடான ஆட்சியை நடாத்தி, யூத இன அழிப்பை மேற்கொண்டார். மகிந்த ராஜபக்சவும், அவ்வாறே தமிழின அழிப்பை மேற்கொள்கின்றார்.

• ஓப்பந்தங்களைப் போடுவதும், பின்னர் அதே ஒப்பந்தங்களை மீறுவதும், ஹிட்லரின் பண்பாக இருந்தது. அதேபோல் மகிந்த ராஜபக்ச உட்பட சகல சிங்கள அரசுகளும், ஒப்பந்தங்களைப் போடுவதையும் பின்னர் அதே ஒப்பந்தங்களை மீறுவதையும் வழமையாகக் கொண்டிருக்கின்றன.

• ஹிட்லரின் ஆட்சியில் இராணுவத்திற்கே சகல அதிகாரங்களும் வழங்கப் பட்டிருந்தன. சட்டத்திற்கும், நீதிக்கும் எதிராக ஹிட்லரின் இராணுவம் செயற்பட்டது. சிறிலங்கா இராணுவமும், ஹிட்லரின் இராணுவம் போன்றுதான் செயல்பட்டு வருகின்றது.

• ஹிட்லர், “தன்னுடைய இனம்தான் தூய்மையான இனம் என்றும் தன்னுடைய இனம் மற்றைய இனங்களை விட மேலானது”- என்றும் கூறினார். அவர் ஒரு பேரினவாதப் பயங்கரவாத அரசை நடாத்தினார். அதேபோலத்தான் சிங்கள, சிறிலங்கா அரசுகளும் சொல்லியும், செய்தும் வருகின்றன. ‘சிங்கள இனம்தான் உயர்வான இனம்’ என்றும் ‘பௌத்த மதம் தான் உயர்வானது’ என்றும் கூறி, ஒரு சிங்கள பௌத்தப் - பேரினவாதப் பயங்கரவாத அரசை சிங்கள தேசம் தொடர்ந்தும் நடாத்தி வருகின்றது.

• அவுஸ்திரேலிய மக்கள் தம்முடைய மாவீரர்களுக்கு அதியுயர் கௌரவத்தை கொடுத்து, அவர்களை உணர்வுபூர்வமாக மதித்து வருகின்றார்கள். தமிழீழ மக்களும், தம்முடைய மாவீரர்களுக்கு அதியுயர் கௌரவத்தை கொடுத்து, அவர்களை தங்கள் நெஞ்சில் நிறுத்தி, உணர்வு பூர்வமாக மதித்து வருகின்றார்கள்.

ஹிட்லரின் பேரினவாதப் பயங்கரவாத அரசு தோற்கடிக்கப் பட்டதை நேற்றைய வரலாறு சொல்கின்றது. அதேபோல் சிங்கள பௌத்த பேரினவாத அரசு முழுமையாகத் தோற்கடிக்கப்படப் போவதை, எதிர்காலம் சொல்லும்!

ஆகையால், இந்த உயரிய உணர்வுகளைப் புரிந்து கொள்வதற்கு புலம் பெயர்ந்த தமிழீழத்தவர்களாகிய எம்மால் முடியும் அல்லவா? தமிழீழம் முழுமையாகச் சுதந்திரம் பெறுவதற்கு முன்னரேயே தமது மாவீரர்களை நெஞ்சில் நிறுத்திக் கௌரவிக்கும் தேசத்தை சேர்ந்தவர்கள் அல்லவா நாங்கள்! அந்த வகையில் அவுஸ்திரேலியா தேசத்து மாவீரர்களுக்கும் போராளிகளுக்கும் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நவம்பர் மாதம் 11ம் திகதி பகல் 11 மணிக்கு எம் அகவணக்கத்தை உணர்வு பூ+ர்வமாக தெரிவிப்போம்.


Australia's Remembrance Day- Lest We Forget

November 11 is an important day for the people of Australia. At 11.00 am on the 11th day of the 11th month Australians pause to remember the war heroes who fought and died in WW1, WW2, and the war veterans and people affected by all other wars in the last 90 years. And when we reflect on the historical background of Remembrance Day, we are able to see many parallels to the history of our own liberation struggle for Tamil Eelam.

It must be stated that comparing remembrance days is not the purpose of this article. However, it should be pointed out that history does repeat certain fundamental realities time and again. It is our hope that readers would grasp the historical truths and lessons inherent in this article.

The November 11 Remembrance Day was originally known as Armistice Day – the day an agreement was signed for the ‘suspension of hostilities’ during WW1. Why was this day called Armistice Day? Why was it celebrated? And how did it become known as ‘Remembrance Day’? What is the historical background?

Let us go back 88 years in history to World War 1. On November 11, 1918, three representatives of the German Government accepted the armistice clauses put forward by the French General and Commander of the Allied Forces, Foch. It was a time when German troops were fast retreating from the Allied forces. It was a time when Allied forces were re-capturing areas that were under the control of the German troops. An armistice at this point in time!

The ceasefire agreement, signed at 5.00 o ’clock in the early morning, came into effect from 11.00 am. When the four-year WW1 came to an end, 61,919 Australians had perished on the sea, in the air and in far away lands. Almost all Australian families had been affected by the war. Most families had lost either a father, son, brother, sister or friend in the war.
Of the 416,000 or more Australians who joined the armed forces in WW1 in the name of their country, 324,000 people served overseas. In the Western Front in France and in Belgium, some 45,000 fighters met their heroic deaths. While in Turkey, 8,000, and, in other places, a further 8,000 Australian troops gave their lives in the war.

When the armistice agreement came into effect on 11.11.1918, all believed that a permanent peace had arrived. It was stated in the agreement that hostilities should end immediately and the German forces should vacate certain areas within 30 days of signing the agreement. When the agreement was made permanent the next year, people all over the world were jubilant and celebrated it as’ Armistice Day.’ For countries like Australia, New Zealand, Canada and America, November 11 came to be known as Armistice Day, on which day they remembered the victims of WW1 annually.

But war broke out again!

The German Nazi Party, led by Adolf Hitler since 1921, seized political control in 1933, installing a Machiavellian reign. Hitler roared for German racial purity and supremacy, practicing blatant fascism. He ran a totalitarian government and indulged in genocide of the Jewish people. Making treaties and breaking them was a natural art for him. During his brutal regime, the army had absolute power. With total disregard for the written law, the German Army reveled in executing the policies of state terrorism. His was a chauvinistically terrorist government, aimed at subjugating other nations of Europe! In 1939, Hitler’s desire to dominate the whole of Europe leads to the Second World War.

When the Allied forces finally defeated Hitler and the Axis powers in 1945, WW2 came to an end. It is only after the end of WW2 that Australia's Armistice Day was renamed ‘Remembrance Day.’ The Australian government accepted a proposal made by the British government to this effect. Thus, Armistice Day became Remembrance Day.

Dear friends, even though 88 years have passed, the Australian people have not forgotten their war heroes. As a matter of fact, as the years pass by, they remember their heroes with greater fervour and reverence. We wish to point out just one event as an example.

Of the thousands of Australian servicemen who died in WW1 and WW2, it is still not known where 35,527 of their heroes lay buried. Somewhere in a distant and foreign land the bodies of these warriors rest in unmarked graves. In 1993, the Australian government exhumed the remains of an Unknown Soldier buried in France’s Western Front cemetery and brought it to Australia. On November 11, 1993 this Unknown Soldier was buried in the Australian War Memorial in Canberra with full military and state honour.

Standing in front of his coffin that was placed on the Stone of Remembrance, the then Australian Prime Minister Paul Keating delivered a eulogy:

“We will never know who this Australian soldier was. Yet he has always been among those we have honoured. We know that he was one of the 45,000 Australians who died on the Western Front, one of the 416,000 Australians who volunteered for service in World War 1 … and one of the 100,000 Australians who have died in wars this century. He is all of them. And he is one of us!”

The passionate speech by Prime Minister Keating was reflective of the feelings of the Australian people. Robert Comb, a World War 1 veteran who had served in battles on the Western Front, sprinkled soil brought from France over the coffin of this Unknown Soldier and said “Now you are home, mate.”

Australia does not stop with honouring its fallen heroes. When the veterans of both world wars who later led a normal life die of old age, Australia honors them, too. When Alec Campbell – the Kid Soldier (the Kid) who joined the Australian Army when he was 16 – died in 2002 at the age of 103, the Australian Prime Minister John Howard cut short his visit to China and returned home to attend his funeral. The Australian government, which had already honoured Alec Campbell in a postage stamp, honoured him again by minting a coin of the boyish looking Alec in his army uniform, holding a rifle much bigger than him!

The following poem written in May 1915 by Lt. Col. John McCrae in the fields of Flanders, Belgium, has a right message for all of us:

In Flanders fields the poppies blow
Between the crosses, row on row
That mark our place and in the sky
The larks, still bravely singing, fly
Scarce heard amid the guns below.

We are the dead. Short days ago
We lived, felt dawn, saw sunset glow,
Loved and were loved, and now we lie
In Flanders fields.

Take up our quarrel with the foe
To you, from failing hands, we throw
The torch be yours to hold it high.
If you break faith with us who die
We shall not sleep, though poppies grow
In Flanders fields.

We could find many similarities between the Tamil Eelam liberation struggle and the Allied forces war against the Germans during World wars:

• The ceasefire came into effect only after the Allied forces defeated the German forces in battle after battle in the First World War. In the same manner, the CFA came into effect in Sri Lanka after the LTTE defeated the Sri Lankan forces in many battle fronts.
• However, when the Germany’s violation of the ceasefire agreement lead to the Second World War. Mahinda Rajapaske’s government is acting in the same way German’s acted after the First World War.
• Hitler launched the pogrom against the Jews: Mahinda Rajapakse has launched the pogrom against the Tamils.
• It was habitual for Hitler to enter into and subsequently violate the agreements: Successive Singhalese governments have also made it a habit to enter into peace agreements with the Tamils and subsequently violate those agreements.
• During Hitler’s regime German military forces were vested with powers to run the country. This lead to the military carrying our extra judicial activities. Sri Lankan armed forces are also acting in the same manner the German forces acted during Hitler’s regime.
• Hitler declared that the German race is the purest race and it is superior to all the other races. He administered chauvinist state terrorism. It is the same concept the successive Sinhalese Buddhist governments are adhering. Declaring that the Sinhalese race is the superior race and the Buddhism is the superior religion, the Sri Lankan governments have been administering chauvinist state terrorism.
• Australians have honoured their heroes and respect them with high regard, they do pay emotional tributes during the Remembrance Day. In the same manner the people of Tamil Eelam honour their heroes with high regard and pay emotional tributes on their remembrance day (November 27)

History portrays the defeat of Hitler’s chauvinist state terrorism. In the same manner, future will portray the defeat of the Sinhalese Buddhist state terrorism.

We the sons and daughters of Tamil Eelam can surely understand these patriotic sentiments. For, we are a people of a nation who honour in our hearts our own Great Heroes even before the dawning of the liberated Tamil Eelam.

In the same spirit, let us pause at 11.00 am on November 11, to honour in our hearts the Australian heroes, war veterans and all the affected people, who valued freedom in their life above all else.
 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home