Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan > வடகிழக்கு- இணைப்பு- பிரிப்பு- பேச்சுவார்த்தைகள்- சில தர்க்கங்கள

Selected Writings by Sanmugam Sabesan,  
சபேசன், அவுஸ்திரேலியா

வடகிழக்கு- இணைப்பு- பிரிப்பு- பேச்சுவார்த்தைகள்- சில தர்க்கங்கள
[English Translation - North-East Merger, De-merger and Peace Talks � A critique

30 October 2006


சிறிலங்கா அரசிற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே மீண்டும் சமாதானப் பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகி முதல் கட்டம் முடிவடைந்துள்ளது. சிறிலங்கா அரசானது, யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக மீறி வந்துள்ள அதே வேளையில், சிறிலங்காவின் நீதித் துறையானது வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பு சட்ட விரோதமானது என்று அறிவித்துள்ளது.

அதாவது சர்வதேச நாடுகளின் அனுசரணையுடன் உருவாக்கப் பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை சிறிலங்கா புறந் தள்ளியுள்ள இக்கால கட்டத்தில் இந்தியாவோடு சிறிலங்கா மேற்கொண்ட ஒப்பந்தம் காரணமாக, உருவாகிய வட-கிழக்கு மாகாணங்களின் இணைப்பையும் சிறிலங்காவின் நீதித்துறை புறந் தள்ளியுள்ளது. குறிப்பிட்ட ஒரு கால கட்டத்துக்குள் சர்வதேசத்தையும், பிராந்திய வல்லரசான இந்தியாவையும் சிpறிலங்கா புறம் தள்ளியுள்ளது. இவ்வாறான அரசியல் பின்னணியில்தான் மீண்டும் பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகி அதன் முதல் கட்டம் நம்பிக்கையின்மையோடு முடிவடைந்துள்ளது.

ஆகவே சமாதானப் பேச்சு வார்த்தைகள் குறித்து சில கருத்துக்களை தர்க்கிப்பதற்கு முன்பு அரசியல் பின்னணி குறித்து முக்கியமாக-வடக்கு-கிழக்கு மாகாணங்களின் இணைப்பு-பிரிப்பு குறித்து சில கருத்துக்களை தர்க்கிப்பது பொருத்தமாக இருக்கும் என நாம் கருதுகின்றோம். இதன் அடிப்படையில் பேச்சுவார்த்தைச் சூழ்நிலைகளை நாம் விளங்கிக் கொள்வது எளிதாக இருக்கும் என்றும் நாம் எண்ணுகின்றோம்.

1987ம் ஆண்டு இந்தியா-சிpறிலங்கா ஒப்பந்தம் கைச்சாத்தாகின்ற வேளையில், தமிழீழ விடுதலைப் புலிகள் பல கருத்துக்களை, விடயங்களை அன்றைய இந்திய அரசிற்குத் தெரிவித்திருந்தார்கள். �இந்த ஒப்பந்தத்தின் விளைவுகளில் ஒன்றான வட-கிழக்கு மாகாணங்களின் ஆளுநருக்கு எந்தவிதமான அதிகாரங்களும் இல்லை. அவரையும், மாகாண சபையையும் சிறிலங்கா அரசு எவ்வேளையிலும் கலைக்கலாம். தமிழ் மக்களின் ஒப்புதலைப் பெறாமல் சிpறிலங்கா அரசு மாகாண சபை குறித்து எதையும் செய்யலாம். இறுக்கமான முறையான கட்டுப்பாடுகள் இந்தச் சரத்துக்களில் இல்லை� - என்ற இந்த ஒப்பந்தத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் இந்தியாவிடம் கருத்து வெளியிட்டிருந்தது.

அவ்வேளையில் இந்தியா, பல வாக்குறுதிகளை விடுதலைப் புலிகளுக்கு அளித்தது. �இந்த ஒப்பந்தத்தில் தென்படுகின்ற குறைகள் குறித்து கவலைப்பட வேண்டாம். இவற்றை நாங்கள் அதாவது -- இந்தியா -- பார்த்துக் கொள்வோம். எங்களுடைய (இந்தியா) நாட்டில் நாங்கள் பிரச்சனைகள் இல்லாது செயல்படுகின்றோம். அதேபோல் இலங்கையிலும் பிரச்சனைகள் வராமல் நாங்கள் பார்த்துக் கொள்வோம்� என்று இந்தியா விடுதலைப் புலிகளுக்கு கூறியது. ஆயினும் விடுதலைப் புலிகள் இந்த ஒப்பந்தம் குறித்துத் தமது அவநம்பிக்கையையும், வருத்தத்தையும் தெரிவித்தார்கள்.

அப்போது நடந்த சம்பவம் ஒன்றை அதாவது வெளியுலகத்திற்கு தெரிந்திராத சம்பவம் ஒன்றை இங்கு - இன்று - குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கும் என்று நாம் கருதுகின்றோம்.

�இந்து� பத்திரிகையின் திரு ராம் அவர்கள் இந்தியாவின் அன்றைய பிரதமரான திரு ராஜீவ் காந்தியின் பிரத்தியேக செய்திகளோடு, யாழ்ப்பாணம் சென்று விடுதலைப் புலிகளை சந்தித்தார். இந்த வடக்கு - கிழக்கு மாகாண இணைப்பு நிரந்தரமானது. ஒருபோதும் பிரிக்கப்பட மாட்டாது இதற்கு இந்தியா பொறுப்பு என்று �இந்து� ராம் அன்று விடுதலைப் புலிகளிடம் தெரிவித்தார். அத்துடன் மிகமுக்கியமான செய்தியொன்றையும் - அதாவது ராஜீவ் காந்தியின் செய்தி ஒன்றையும் - அன்றைய தினம் �இந்து� ராம் விடுதலைப் புலிகளிடம் தெரிவித்தார்.

இந்தியாவின் அன்றைய பிரதமரான ராஜீவ் காந்தி �இந்து� ராம் ஊடாக விடுதலைப் புலிகளுக்கு தெரிவித்த செய்தி என்ன?

�சிறிலங்காவின் அன்றைய ஜனாதிபதியான ஜேஆர் ஜெயவர்த்தனா ராஜீவ் காந்திக்கு வாக்குறுதி ஒன்றைக் கொடுத்துள்ளார் என்றும், கையெழுத்திடப்படாத அந்த வாக்குறுதி, இந்த இரண்டு நாட்டுத் தலைவர்களிடையே ஏற்படுத்தப்பட்ட கனவான்கள் ஒப்பந்தம் ((Gentlemen Agreement)-என்றும், �இந்து� ராம் விடுதலைப் புலிகளிடம் தெரிவித்தார். அந்த கனவான்கள் ஒப்பந்தத்தின் படி �கிழக்கு மாகாணத்தில் ஒருபோதும் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட மாட்டாது� என்று ஜேஆர் ஜெயவர்த்தனா ராஜீவ்காந்திக்கு வாக்குறுதி அளித்துள்ளார்�- என்றும் �இந்து� ராம் விடுதலைப் புலிகளிடம் தெரிவித்தார்.

இதற்கு விடுதலைப் புலிகள் இணங்க வில்லை. மேலும் �எழுத்தில் உள்ள ஒப்பந்தங்களையே சிpறிலங்கா அரசுகள் முன்னர் கிழித்தெறிந்துள்ளன. எழுத்தில் இல்லாத வாக்குறுதியையா சிpறிலங்கா அரசு நிறைவேற்றப் போகின்றது?� என்றும் விடுதலைப் புலிகள் கேட்டார்கள் ஆனால் �இந்து� ராமோ �இது ஒரு நல்ல ஒப்பந்தம். இந்த ஒப்பந்தம் தமிழ் மக்களுக்கு நன்மையை செய்யும். இது ஒரு நல்ல தீர்வுத் திட்டம்.� என்று வலியுறுத்தினார்.

இன்று இந்து ராம் என்ன சொல்கின்றார்.? இப்போது அவருடைய நிலைப்பாடு என்ன? என்பதையும் அறிய நாம் ஆவலாக இருக்கின்றோம்.

இந்த ஒப்பந்தம் மிகச் சிறந்த மாற்ற முடியாத ஒப்பந்தம் என்றும் அதற்காக விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கையளிக்க வேண்டும் என்றும் இந்தியாவும், இலங்கையும் சொல்லி வந்தன. விடுதலைப் புலிகளிடம் இன்று ஆயுதங்கள் இல்லாவிட்டால் இன்று நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.!

அது மட்டுமல்ல! இந்த ஒப்பந்தம்தான் சிறந்த ஒப்பந்தம் என்று கூறி தமது படைக்கலங்களை ஒப்படைத்து சிpறிலங்கா அரசுகளோடு சேர்ந்து நிற்கின்ற முன்னாள் போராளிக் குழுக்களின் இன்றைய நிலைப்பாடு என்ன? என்பது குறித்தும் அறிய ஆவலாக நாம் உள்ளோம்.

இந்திய-சிpறிலங்கா ஒப்பந்தம் நல்லது இ சரியானது என்பதனால் விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்கள் ஒப்படைத்து விடவேண்டும் என்று அன்று சொல்லிய சில தரப்பினரின் இன்றைய நிலைப்பாடு என்ன? என்பது குறித்தும் அறிவதற்கு நாம் ஆவலாக உள்ளோம்.

அன்புக்குரிய வாசகர்களே!

இங்கே சில முக்கிய விடயங்களை நாம் கவனிக்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்தப் போவதாகக் கூறித்தான் இந்தியா ஒரு போரை ஆரம்பித்தது. அதுவும் யாருக்காக இந்த ஒப்பந்தத்தை போட வந்தார்களோ அவர்களோடுதான் இந்தியா போரிட்டது. ஆனால் சிpறிலங்கா இந்த இணைப்பிற்கான அதிகாரப் பரவலாக்கல் குறித்து எதுவும் செய்யவில்லை. அந்த அதிகாரங்களும் பெரிய அதிகாரங்கள் இல்லை. நடைமுறை சார்ந்து சிpறிலங்கா செயற்படவும் இல்லை. இந்த இணைப்பு என்பது முறையாகக் கொண்டு வரப்படவும் இல்லை. இது ஓர் அரசாங்க அறிக்ககையினூடாகக் (Gazette Notification) கொண்டு வரப்பட்டதில் ஒரு பொய்மையும் உண்டு. இது முறையாக முழுமையாக கூட கொண்டு வரப்பட்டு பூர்த்தி செய்யப் படவில்லை.

�வடக்கு கிழக்கு இணைப்பு சிpறிலங்காவின் யாப்புக்கு முரணானது, சட்டவிரோதமானது ஆகையினால் இது செல்லாது�- என்ற சிpறிலங்கா உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இ சிறிலங்காவின் சட்டச்சிக்கல்கள் இ பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு சிங்கள பேரினவாதநலன் கருதிக் கொடுக்கபட்ட தீர்ப்பாகும். அது குறித்து நாம் இப்போது தர்க்கிக்க வரவில்லை. ஆனால் இணைப்புக்கு எதிராக வாதிடப்பட்ட ஒரு விடயத்தை இங்கே சுட்டிக் காட்டி எம்முடைய ஒரு கருத்தை மட்டும் தர்க்கிக்க விழைகின்றோம்.

�இணைப்புக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் 40வீதமாக இருக்ககூடிய தமிழ் மக்கள் வட-கிழக்கு இணைப்புக்கு பின்னர் 65வீதமாக உயர்ந்து விடுவார்கள்� என்று மனுதாரர்கள் வாதிட்டுள்ளார்கள். ஆகையால் இணைப்பின் காரணமாகத் தமிழ் மக்கள் வடகிழக்கு பகுதிகளில் பெரும்பான்மையினராகி விடுவார்கள் என்பது இவர்களின் வாதங்களில் ஒன்று.

இதையே நாம் மறுவழமாகச் சிந்தித்துப் பார்ப்போம். அப்படியென்றால் இலங்கைத்தீவு 1948ம் ஆண்டு பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் அடைந்தபோது தமிழ் இராசதானி, சிங்கள இராசதானியோடு இணைக்கபட்ட படியால்தானே தமிழர்கள் சிpறுபான்மையினராக மாறினார்கள்? இன்று வடக்கும், கிழக்கும் இணைக்கப்படக் கூடாது என்பதற்காக உச்ச நீதிமன்றத்தில் கூறக்கூடிய நியாயம் தமிழீழமும் சிங்களதேசமும் இணைக்கப்படக் கூடாது என்பதற்கும் பொருந்தும்தானே?-சிந்தித்து பாருங்கள்.

எதுவாக இருந்தாலும் இலங்கைத் தீவின் வடகிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பாரம்பரியத் தாயக மண்ணுக்குரியவையாகும். இவை ஏற்கனவே ஒன்றாக இருக்கும் பிரதேசங்கள்தான். ஆகவே இவற்றை இணைப்பது என்பதும் பிரிப்பது என்பதும் பொருந்தாத சொற்பதங்கள்தான். இந்திய ஒப்பந்தம், பண்டா-செல்வா ஒப்பந்தம், டட்லி-செல்வா ஒப்பந்தங்கள் யாவுமே தமிழர் தாயகக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டவைதான்.

இங்கே சில அடிப்படை உண்மைகளையும் நாம் கவனிக்க வேண்டும். இங்கே இந்தியா-சிpறிலங்கா ஒப்பந்தம் என்பது இதுவரை அமல்படுத்தப்படாமல் போனது மட்டுமல்ல, இப்போது ஒப்பந்தமும் இல்லாமல் போய்விட்டது. அதுமட்டுமல்ல இநத ஒப்பந்தத்திற்கும் தமிழ் மக்களுக்கும் முன்னரும் சம்பந்தமில்லை. இந்த ஒப்பந்த முறிதலுக்கும் தமிழ் மக்களின் சம்பந்தம் இல்லை. இந்த ஒப்பந்தம் போடப்பட்டபோது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடம் தீர்க்கதரிசனமாகத் தெரிவித்த கருத்துக்கள் இன்று நிதர்சனமாகியிருப்பதையும் நாம் இந்தவேளையில் சுட்டிக்காட்ட விழைகின்றோம்.

சிpறிலங்காவின் அரச அதிபர் மகிந்த ராஜபக்சவும், சிங்கள இனவாதக் கட்சியான ஜேவிபியும் சிpறிலங்காவின் உச்ச நீதிமன்றம் மூலம், இந்தியாவிற்குச் சில செய்திகளைச் சொல்லியுள்ளார்கள். இவற்றை இந்திய அரசும், இந்தியத் தலைவர்களும், இந்திய மக்களும் புரிந்து கொள்வார்கள். புரிந்து கொள்ள வேண்டும். என்பதுதான் எமது அவாவுமாகும்.!

இந்தியாவிற்கு சிறிலங்கா சொல்லும் செய்திகள்.:

� நீங்கள் நல்ல நோக்கம் என்று நினைத்துக் கொண்டு வருவதை நாங்கள் ஏதாவது ஒரு வகையில் முறியடித்தே தீருவோம்.!

� எமது நடவடிக்கைகள் தமிழர்களுக்கு எதிரானது என்பதையும் விட இந்தியாவிற்கு எதிரான, இந்தியாவின் ராஜதந்திரத்திற்கு எதிரான நிலைப்பாட்டின் நடவடிக்கைகளாகும்.!

� இந்தியா ஊடாக தமிழர்களின் பிரச்சனை தீர்க்கப்படும் என்றால்இ இந்தியாவிற்கு எதிராகவே சிpறிலங்கா இயல்பாகவே திரும்பும் என்பதுதான் அடிப்படையான விடயமாகும்.

மகிந்த ராஜபக்ச அவசரப்பட்டு, ஆத்திரப்பட்டு எதையும் செய்யவில்லை. அவருக்கு என்று ஒரு நிகழ்ச்சி நிரல் உண்டு. அந்த நிகழ்ச்சி நிரலின்படி அவர் செயற்படுகின்றார். அதன்படி இப்போது இந்த செய்தியை அவர் இந்திய தேசத்திற்குக் காட்டுகின்றார். இதே போன்ற ஒரு செய்தியை பின்னாளில் மகிந்த ராஜபக்ச சர்வதேசத்திற்கும் காண்பிக்கக் கூடும். என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.

அண்மையில் காலித்துறைமுகத்தில் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டது இங்கிருந்த ஆயுதக் களஞ்சியம் சிறிலங்காவிற்கு சொந்தமானது அல்ல என்றும் ஊர்ஜிதப் படுத்தப்படாத செய்திகள் கசிந்தன. சீனாவின் இராணுவ அமைப்புக்களில் ஒன்றான நொரிங்கோவிற்குரிய ஆயுதக் களஞ்சியம்தான் அது என்றும், இங்கே சீனாவின் ஆயுதக் களஞ்சியம் வைக்கப் படுவதற்கு சிறிலங்காவோடு இணக்கப்பாடு ஒன்று முன்னர் காணப்பட்டதாகவும் வதந்திகள் உலவின. இது உண்மையா?

இங்கு நாம் தர்க்கித்துள்ள பல கருத்துக்களை இந்தியா உள்வாங்கும் என்றுதான் நாமும் எதிர்பார்க்கின்றோம்.

இன்று சர்வதேசம் பேச்சு வார்த்தையூடாக ஒரு தீர்வை எதிர்பார்க்கின்ற வேளையில்இ பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பு பிராந்திய வல்லரசோடு போடப்பட்ட ஒப்பந்தத்தை தூக்கி எறிந்துவிட்டு சிpறிலங்கா பேச்சுவார்த்தைக்குப் போயிருக்கின்றது. அது சிறிலங்காவின் மனநிலையைக் காட்டுகின்றது.

இவ்வளவு நேரமும் நாம் தர்க்கித்த விடயங்களின் அடிப்படையில் தற்போதைய பேச்சு வார்த்தைகள் குறித்துச் சுருக்கமாகச் சில கருத்துக்களைச் சொல்ல விழைகின்றோம்.

மகிந்த ராஜபக்சவின் அரசு மிக மோசமான யுத்த நிறுத்த மீளல்களை மேற்கொண்டும், பிரகடனப் படுத்தப்படாத யுத்தத்தையும், வெளிப்படையான பொருளாதாரத் தடைகளையும் மேற்கொண்டு வந்தவேளையில் நாம் சில கருத்துக்களை வலியுறுத்தி வந்திருந்தோம். அப்போது பெரும்பான்மையோர் தெரிவித்த கருத்துக்களுக்கு மாறான கருத்துக்களாகத்தான் எம்முடைய கருத்துக்கள் அமைந்திருந்தன. விடுதலைப்புலிகள் பலமாக இருக்கின்றார்கள் எனவும, அவர்களுடைய முழுப் பலத்தைக் காட்டுவதற்கு இது சந்தர்ப்பம் அல்ல என்பதையும் யாழ்ப்பாணத்தையோ.

திருகோணமலையையோ கைப்பற்றுவதற்கு உரிய உத்திகளை விடுதலைப் புலிகள் மேற்கொள்ள வில்லை என்பதையும் நாம் தர்க்கித்து இருந்தோம். அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகளைப் பேச்சு வார்த்தைகளுக்கு போகாமல் தடுக்கும் நோக்கோடுதான் சிறிலங்கா அரசு வலிந்த யுத்தத்தையும், பொருளாதார தடையையும் மேற்கொண்டு வருகின்றது என்பதையும் விடுதலைப் புலிகள் தங்கள் பலத்தின் நிரூபணத்தோடு பேச்சு வார்த்தைகளில் கலந்துகொண்டு சிறிலங்கா வைத்த பொறிகளை முறியடிப்பார்கள் என்றும் நாம் தர்கித்தே வந்துள்ளோம். அதற்குரிய காரணங்களையும் நாம் தெரிவித்திருந்தோம்.

அன்று நாம் கூறியது இன்று அச்சொட்டாக நடப்பதற்கு நாம் பெருமை கொண்டு உரிமை பாராட்ட முடியாது. அவற்ற்pற்கு காரணமாக உள்ள அந்த ஒருவரைத்தான் நாம் இந்த வேளையில் பெருமிதத்துடன் நெஞ்சில் நிறுத்துகின்றோம்.

அந்தத் தெளிவின் அடிப்படையில்தான் �தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் பேச்சு வார்த்தைக்குப் போகும் என்றும் அதற்குக் காரணம் இயக்கம் சிறிலங்கா மீது கொண்டுள்ள நம்பிக்கை அல்ல, மாறாக இயக்கம் சர்வதேசம் மீது கொண்டுள்ள நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் தான்� என்றும் முன்னரேயே தர்க்கித்திருந்தோம்.

இந்தமுறை பேச்சு வார்த்தைகளுக்குப் போகமுன்னதாகவே சில விடயங்கள் மேற்குலகத்திற்கு மித் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டு விட்டன. சிங்கள தேசத்தோடு பேசி எந்தவிதமான இணக்கப்பாட்டையும் காணமுடியாது என்பதைத் தமிழர் தலைமை மேற்குலகத்திற்கு தகுந்த ஆதாரங்களுடன் மிகத் தெளிவாக தெரிவித்து விட்டிருந்தது. அப்படி சிங்கள அரசுடன் என்னதான் இணக்கப்பாடு (ஒப்புக்காவது) காணப்பட்டால் - அது எழுத்தில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி-சிங்கள அரசுகள் காலப்போக்கில் அவற்றைக் கைவிடும் என்பதை வரலாறும் சொல்கின்றது, என்பதையும் தமிழர் தலைமை மேற்குலகத்திற்குத் தெரிவித்து இருந்தது. பண்டா-செல்வா ஒப்பந்தம், டட்லி-செல்வா ஒப்பந்தம், இந்திய ஒப்பந்தம், ஜெனிவா ஒப்பந்தம் எல்லாமே இவ்வாறு கைவிடப் பட்டவைதானே!

ஆனால் சர்வதேசத்தைப் பொறுத்த வரையில் இணக்கப்பாடு ஒன்றிற்கு அவர்கள் முயற்சித்து வருகின்றார்கள். தீர்வுத் திட்டம் குறித்து சில ஆலோசனைகளையும் முன் வைத்து வருகின்றார்கள். ஆனால் இந்த இணக்கப்பாடு ஊடாக எதுவுமே நடக்க போவதில்லை என்பதுதான் தமிழர் தலைமையினதும், தமிழ் மக்களினதும் பொதுவான நிலைப்பாடாக இருக்கின்றது. ஆகவே பிரிந்து போவதே நல்லதாகும்.! பிரிவது குறித்த எண்ணம் வந்ததற்குரிய அடிப்படைக் காரணங்கள் சிpறிலங்காவின் இத்தகைய செய்கைகளாலும், நிலைப்பாடுகளாலும்தான் உருவாகின. அதாவது தமிழர்கள் இணங்கிப் போனாலும், சிங்களவர்கள் இணங்கி வரப்போவதில்லை.

இவையெல்லாவற்றின் அடிப்படையில்தான் தமிழ் மக்கள் தமிழீழம்தான் தீர்வு என்ற கருத்தில் உறுதியாக உள்ளார்கள். வழமையான வரலாற்றினூடாக ஒரு வல்லரசுக்கு எதிராகச் செய்யப்பட்ட நடவடிக்கையான சிறிலங்காவின் உச்ச மன்றத் தீர்ப்பும், தமிழர்களின் நிலைப்பாட்டுக்கு வலுச்சேர்க்கின்றது.

அன்று இந்தியா, விடுதலைப்புலிகள் சொன்னதைக் கேட்காமல் புலிகள் மீதே அழுத்தத்தைப் பிரயோகித்தது. அதைப் போலத்தான் மேற்குலகமும் புலிகள் சொன்னதைக் கேட்காமல் பின்னர் புலிகள் மீது அழுத்தத்தைப் பிரயோகித்தது. இவையிரண்டிற்கும் இடையே ஓர் ஒப்பீடு உள்ளது.

சர்வதேசம் தாம் தவறு செய்துவிட்டோம் என்பதை உள்ளுர உணர்ந்து வருகின்றார்கள் என்பதும் உண்மைதான். அந்த உணர்வினை வெளிப்படையாக செயலில் காட்ட வேண்டிய வேளையும் சர்வதேசத்திற்கு நெருங்கி வந்து கொண்டிருக்கின்றது. சர்வதேச சமூகத்திற்கென்று சில பொதுவான நிலைப்பாடுகள் உண்டு. அவற்றை மாற்ற வேண்டுமென்றால் தகுந்த வேளையில் பேசப் போகவேண்டும்.

சர்வதேசம் ஓர் அரசோடு நடந்து கொள்கின்ற முறையும், ஒரு போராட்ட இயக்கத்தோடு நடந்து கொள்ளுகின்ற முறையும், வேறு-வேறானவையாகும். சுppறிலங்கா அரசின் இத்தகைய மூர்க்கத்தனமான நிலைப்பாடு மாறாத பட்சத்தில் விடுதலைப் புலிகளும் தொடர்ந்து ஆண்டு கணக்கில் இனிப் பேசப் போவதில்லை. அதுபோல் சர்வதேசமும் சிpறிலங்காவின் இணக்கப்பாட்டுக்காகத் தொடர்ந்தும் பேசிக் கொண்டிருக்க போவதில்லை. பேசப்போவதனால் விடுதலைப் புலிகளுக்குச் சர்வதேசத்தின் அங்கீகாரம் கிடைக்கும் என்று சர்வதேசம் உள்ளுர சமிக்கைகள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றது. சுppறிலங்காவின் மூர்க்கத்தனமான நிலைப்பாடு சர்வதேசத்தை அடுத்த கட்டத்திற்குச் சரியான முறையில் நகர்த்தி வைக்கும் என்று நாமும் எதிர்பார்க்கின்றோம்.

சமீபத்திய பேச்சு வார்த்தைகளின் போதும், சிறிலங்காவின் மூர்க்கத்தனம் மிகத் வெளிப்படையாகத் தெரிந்து விட்டது. தமிழ் மக்களின் அவலத்தைத் தீர்ப்பதற்குரிய, மிகச் சிறிய நடவடிக்கையான ஏ-9 தரைப்பாதையை திறப்பதற்கும் சிறிலங்கா அரசு மறுத்து விட்டது. நாம் முன்னர் தொடர்ந்து கூறி வந்ததுபோல், சர்வதேசத்தின் நியாயமான செயற்பாடுகளில்தான, எதிர்காலப் பேச்சுவார்த்தைகள் தங்கியிருக்கின்றன. எனினும் பிரயோசனமில்லாத பேச்சுவார்த்தைகளும், சில பிரயோசனங்களைத் தரக்கூடும். பேச்சுவார்த்தைகள் ஊடாக சிpறிலங்கா அரசுடன் இணக்கப்பாட்டைக் காணமுடியாது என்ற தெளிவை இந்தப் பேச்சுவார்த்தைகள் மேற்குலகிற்கு புரிய வைக்கும். அது தமிழீழத்தின் சுதந்திரத்திற்கான போராட்டத்தைச் சுலபமாக வெற்றி கொள்ள வைக்கும்.!
 

North-East Merger, De-merger and Peace Talks � A critique

Well rehearsed acrobatic acts of the Sri Lankan government have unfolded one after the other in the last few months. The supreme court of Sri Lanka ruled against the existence of the merged North and East provinces. In its recent court ruling, the Supreme Court ruled that the merger of the N� E is unconstitutional. The union of the North and Eastern provinces of Sri Lanka, considered the traditional home lands of the Tamil speaking people, took place as a result of the Indo-Sri Lanka agreement of 1987. This was swept away by the judges after a short hearing.

On another front, the state communal government breached almost every clause of the 2002 peace agreement and engaged its army in a war of fire power against the Tamils. The peace agreement between the state government and the Tigers that was signed under international auspices was swept under the carpet the day Mahinda Rajapaksha was elected a year ago. Nearly 3000 people have died since then. Hard pressed for foreign aid, and to show off his inept peace skills, the president made a show of sending a half dozen figure heads to the Geneva peace talks.

At the time the 1987 peace accord was about to be signed between India and Sri Lanka, the Liberation Tigers of Tamil Eelam (LTTE) agitated India to heed some of their requests. They were concerned that the power vested upon the legislative assembly of the merged NE provinces was inadequate. The central government had the power to dissolve the NE legislature at any moment. It made it very easy for the central government to impose any changes it wished upon the Provincial Council legislations, without even having to obtain the consensus of the NE legislature. Naturally, the LTTE objected strongly to this power held by the central government. The Indian government made a verbal assurance to the LTTE that they would safeguard Tamil rights in the event of a constitutional crisis. They compared the situation with their Indian constitution and explained that no serious constitutional crises had ever occurred in India. In essence, that though the Sri Lankan government had these powers, they would not exercise them. Nevertheless, the LTTE demanded a constitutional guarantee, stating that the Sinhalese have a habit of reneging on any agreement. Unfortunately, India did not make any attempt to change the terms of the agreement.

It is appropriate at this point to reveal an event that has remained a secret up until now. Ram, the Editor of a prestigious newspaper, The Hindu, was sent to Sri Lanka by Rajeev Ghandi with an important message to the LTTE. Ram assured the LTTE hierarchy that the merger of the Northeast was permanent. Ram told the LTTE that Rajeev Ghandi and J.R Jeyawardana, then heads of their respective countries had made a �gentlemen agreement� that a referendum on the permanent merger of the NE, as mandated in the bill would never take place. Ram declared that it was a gentlemen agreement between two heads of two countries that would be strictly adhered to by both countries.

Tigers never had faith in such a gentlemen�s agreement between nations. They argued that the Sinhalese politicians had reneged on several such agreements in the past. Ram insisted that it was in the best interests of the Tamils that Rajeev Ghandi had made such an agreement with Jeyawardana, and urged the LTTE not to miss such a golden opportunity.

Well done, Hindu Ram! What do you say today? We would like to hear from you!!

The Indo-Sri Lanka agreement of 1987 was considered by Sri Lankan and Indian constitutional pundits as the best piece of agreement that could protect the minority Tamils from the hegemony of the Sinhalese and meet their aspirations in the merged North and East provinces. What would have been the repercussion if Tigers did not have any arms today? What do those former militants who surrendered their arms in the na�ve belief in the value of such a vague agreement and clung on to the government have to say now? Some people also believed that this agreement is the ultimate solution and ridiculed the Tigers. Now it is they who deserve ridicule.

India expected that the agreement will be implemented in full by the Sri Lankan government and went to the extent of waging war against Tigers in order to enforce the accord. On the other hand, India hardly made any sincere attempt to assist Sri Lanka in making legislation in a formal manner. Even though the Jeyawardana government had a two thirds majority in the parliament at that time, no constitutional amendments were made. The merger of North East provinces was made through a gazette notification and India was hoodwinked.

The Supreme Court of Sri Lanka has now ruled that the merged North and Eastern provinces are against the constitution of Sri Lanka. There were many anomalies in the provincial council bill that were in favour of the chauvinistic elements that filed the case. It is not our concern how the case was decided or what was decided. What is important in the case is an important argument that was put forward by the plaintiffs. Their lawyers argued that the North East merger made the Tamils a majority community in the combined provinces whereas they were a mere 40% in the Eastern province alone. The lawyers claimed that it was an injustice to the other communities in the Eastern province and therefore the provinces should be de-merged. Alright, then we would like to ask a question. Now, go back to 1948 and think of the situation then. The British merged two kingdoms into one. Tamils from one kingdom, which is the North and East, became minority to the Sinhalese from the day merger took place. Are they (Tamils) not entitled for a de-merger from the Sinhala state?

Whatever said and done the North and East provinces of Sri Lanka are the traditional homeland of the Tamils. Therefore, merging them or de-merging them are terms that have no significance. Indo-Sri Lanka agreement, Banda-Selva agreement, Dudley � Selva agreement are all based on the principles of traditional homeland of the Tamils. Out of all these agreements the latest, Indo-Sri Lanka agreement has now become worthless. Not only has it become null and void, but also it had little to do with the aspirations of the Tamils. That is why, when this agreement was signed the Tigers categorically and emphatically declined to accept it. Now the Tigers have proved they were right in taking this stance.

The president of Sri Lanka, Mahinda Rajapaksha, together with his supporting team, the JVP, has used their sham courts to transmit a few messages to the Indian government and the people of India. They are:

Messages to the Indian government by the Srilankan Government :

* Whatever deeds you carry out on our soil with good intensions, and as a brotherly neighbour, will be dismantled by us in due course.

* Our violent and undemocratic actions, although against Tamil Freedom struggle also must be seen as a blow to Indian hegemony.

* If the Tamil problem can be solved by Indian intervention then it is unavoidable that Sinhala Sri Lanka will revolt against India.

Mahinda�s actions are not arbitrary. He has a well planned time table. His actions are well coordinated, well planned and executed in a manner to tell the big neighbour that he doesn�t care about regional power. These types of messages from Mahinda will be transmitted to the western countries in the near future.

There was an attack on Galle naval base in Sri Lanka. Now, there are unconfirmed reports that the munitions dump in Galle belonged to some other country. It is believed the munitions dump belonged to China�s military wing Noringo and an agreement already exists to store Chinese military hardware at Galle naval base. Such are the sinister new developments India needs to take note of.

At a time the whole world is expecting a resolution on the ethnic issue of Sri Lanka, an agreement that was already signed between two countries was simply discarded. A court had ruled it is invalid. The Peace agreement of 2002 that lasted for four years under strenuous conditions, all of a sudden has become defunct. The state government is hell bent on undeclared war on Tamils. Stringent economic embargo on Tamils coupled with travel restrictions by closure of main roads do not indicate there is light at the end of the tunnel.

Earlier we stated that the Tigers keep their patience and avoided getting involved in a war with the government forces. They were attacked on several fronts and compelled to withdraw from areas. The Sri Lankan tactic was to stop the Tigers from attending peace talks but that did not materialise. The Tigers attended the peace talk, with strong misgivings, but trusting the foreign governments and to prove that Sri Lanka government had nothing to offer. Even before the start of peace talk donor countries to Sri Lanka had comprehended the cynical attitude of the Sri Lankan government. As far as the international community is concerned they have an action plan which does not fulfil the Tamil aspirations and this plan may be known to the Sri Lankan government. Will the Sri Lankan government agree? Will they implement such a plan? If a court decision can dump the agreement between two states in such a fashion what else cannot happen? The Tamil Leadership has categorically informed the Western World that even a plan that does not fulfil the Tamil Aspirations will not be agreed and/or implemented by any Sri Lanka Governments. Therefore, it is better to go in separate ways. This is one of the reasons why Tamil people believe that Thamil Eelam is the only solution for their freedom struggle.

India did not seriously consider what the Tigers told them. Ultimately they wanted to force Tigers into submission and thrust a solution upon them. Likewise, the international community was not listening to the experience of the Tamil community that has lost so much blood. Sri Lanka, being a small island with year round press censorship escaped the scrutinising eyes of the world for many years. Now it is known that it is a rogue country with a score of 80,000 innocent lives to its credit. We have solid reasons to believe that the international community that failed at the initial stages to understand the upraising of the Tamils are now convinced that Tamils are fighting for a real cause and they will recognise the Tigers. Time has come for the international community to deviate from the norms of international diplomacy and treat both parties to the conflict as equal partners. In spite of the stubborn narrow minded approach of the Srilankan government there are indications that the peace talk will go to next stage if the international community takes the correct steps.

The Srilankan government could not even agree to the opening of A9 highway, thereby exhibiting its arrogance and animosity towards the Tamils; bombing and killings continues. Most importantly many countries, interested in the welfare of Sri Lankan people, have come to know that extreme Sinhalese nationalism can blind political leaders to the extent of committing genocide. However, useless peace talks are also being made useful. These talks will prove that any talks with the Srilankan governments will NOT achieve any good results. Thus peace talk in Geneva did NOT really fail. It is in this context that the Tigers attended the peace talk. It is our belief that the international community has understood the reality. The Supreme Court decision in Sri Lanka and the arrogance exhibited by the state in Geneva and the atrocities of the army are all indications that the freedom struggle of the Tamils is clearly being understood by the western world at last. Understanding of the reality by the western world will speed up the freedom struggle of the Tamil People!
 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home