Selected Writings by Sanmugam
Sabesan,
சபேசன், அவுஸ்திரேலியா
செயலற்ற சொற்களும், முறையற்ற செயற்பாடுகளும்
[together with
translation in English]
28 August 2006
சிறிலங்கா அரசின் சிங்கள பௌத்த பேரினவாதச் செயற்பாடுகளும், அரச
பயங்கரவாத நடவடிக்கைகளும் மறைத்து வைக்க முடியாதவாறு இப்போது மிக
வெளிப்படையாகவே நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாகவோ என்னவோ சில
உலகநாடுகளும் உலக அமைப்புக்களும் தற்போதைய நிலை குறித்து விசனம்
தெரிவித்து வருகின்றன. இணைத்தலைமை நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய
ஒன்றியம், ஜப்பான், நோர்வே ஆகிய நாடுகள் கூட்டாகவும், தனித்தனியாகவும்
கவலை தெரிவித்துள்ளதுடன் சமாதானப்பேச்சு வார்த்தைகளை உடனடியாக
இருதரப்பினரும் ஆரம்பிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள்களை விடுத்து
வருகின்றன. ஐக்கிய நாடுகளின் சார்பாக அதன் செயலாயர் நாயகம் கோபி அனான்
அவர்களும் சமாதானப் பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாக வேண்டியதன் அவசியத்தை
அதிபர் ராஜபக்சவிற்கு வலியுறுத்தியுள்ளார். இதேபோல் கனடா உட்பட பல
நாடுகள் சமாதானப் பேச்சு வார்த்தைகளின் அவசியத்தையும் அவசரத்தையும்
வலியுறுத்தியுள்ளன.
இவற்றோடு மட்டுமல்லாது மூதூரில் பிரான்ஸ்-அரச சார்பற்ற நிறுவனப்
பணியாளர்கள் பதினேழு பேர் படுகொலை செய்யப்பட்டமை குறித்து சுயாதீனமான
சர்வதேச அளவிலான விசாரணைகள் சிறிலங்கா அரசு நடாத்த வேண்டும் என்று
இணைத் தலைமை நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் அதிபர் ராஜபக்சவிற்கு
அழுத்தம் கொடுத்துள்ளன. வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம் பெயர்ந்த
மக்களுக்கான நிவாரண உதவிகள் முறையாகச் சென்றடைவதற்குச் சிறிலங்கா அரசு
அனுமதியளிக்க வேண்டும் - என்றும் இவை கேட்டுக் கொண்டுள்ளன.
இன்னுமொரு பரிமாணமாக தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனை குறித்தும்
வெளிப்படையாகவே பல உலக நாடுகளும் அமைப்புக்களும் இப்போது பேச
ஆரம்பித்துள்ளதையும் நாம் காணக்கூடியதாக உள்ளது. தெற்கு மற்றும் மத்திய
ஆசிய விவகாரங்களில் அமெரிக்க உதவிச் செயலாளர் றிச்சட் பௌச்சர்
(Richard Boucher) என்பவர் தமிழ் மக்களுக்கு
நியாயமான சட்டபூர்வமான அரசியல் வேட்கைகள் உண்டென்பதையும் அவர்களுடைய
தாயகபூமிக் கோரிக்கைக்கு நியாயம் உண்டு என்பதையும் வெளிப்படையாக
ஒப்புப் கொண்டுள்ளார். இதேபோல் மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின்
(Human Rights Watch) ஆசிய இயக்குனர் பிராட்
அடம்ஸ் (Brad Adams) என்பவரும் தமிழ் மக்களின் அரசியல் வேட்கையை
ஏற்றுக்கொண்டு அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். இவ்வாறு வேறு சில உலக
நாடுகளும் தமிழர் பிரச்சனைகளைத் தாம் புரிந்து கொள்வதாக அண்மைக்
காலத்தில் கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துள்ளதையும் நாம்
அவதானிக்கின்றோம்.
இத்தகைய அறிக்கைகளையும் செய்திகளையும் கேட்கின்ற எம்மவர் மத்தியில் -
குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழீழ மக்கள் மத்தியில் - சமாதானத்தீர்வு
மீது நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஏற்படுவது நியாயமாகாதுதான்.! உலக
நாடுகளும் சர்வதேச அமைப்புக்களும் சிறிலங்கா அரசின் நடவடிக்கைகள்
குறித்துக் கவலையும் விசனத்தையும் தெரிவித்து வருகின்றன. சமாதானப்
பேச்சுவார்த்தைகள் ஊடாக சமாதானத்தீர்வு ஒன்றை அடையவேண்டும் என்றும் இவை
வற்புறுத்தி வருகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாகத் தமிழ் மக்களுக்கு
நியாயமான சட்டபூர்வமான அரசியல் வேட்கைகள் உண்டென்பதையும் அவர்கள்
தனிநாடு கோருவதற்கு அடிப்படை நியாயங்கள் உண்டு என்பதையும் இவை ஏற்றுக்
கொள்கின்றன. ஆகவே இம்முறை நியாயமான சமாதானத்தீர்வு கிட்டக்கூடும் என்று
எம்மவர் எதிர்பார்க்க கூடும். இதே கருத்தைத்தான் பல அரசியல்
ஆய்வாளர்களும் ஊடகங்களும் எழுத ஆரம்பித்திருப்பதை நாம்
அவதானிக்கின்றோம்.
ஆனால் நாம் இந்த எதிர்பார்ப்பு எண்ணங்களிலிருந்து முற்றாக
மாறுபடுகின்றோம். அது மட்டுமல்லாது இந்தச் செயலற்ற
சொற்பிரயோகங்களுக்குப் பின்னால் உள்ள முறையற்ற செயற்பாடுகளையும்
எண்ணிப் பார்க்கின்றோம். அதன் காரணமாக நாம் முன்னரையும் விட
எச்சரிக்கையாகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டும் என்றும் எமது
வாசகர்களுக்கு இந்த வேளையில் வேண்டுகோளும் விடுக்கின்றோம்.
ஆகவே இது குறித்துச் சில விடயங்களைத் தர்க்கிப்பது அவசியமாகின்றது.
சிறிலங்கா அரசு குறித்து விசனம் தெரிவித்தும் தமிழ் மக்களின தேசியப்
பிரச்சனை குறித்து ஆதரவான கருத்துக்களை தெரிவித்தும் வருகின்ற இந்த
வெளிச் சக்திகளில் பெரும் பான்மையானவை கூடவே இன்னுமொரு விடயத்தையும்
வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் வலியுறுத்தி வருவதையும் நாம்
இவ்வேளையில் பொருத்திப் பார்க்க வேண்டும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குத் தமிழ் மக்கள் ஆதரவு வழங்க
கூடாது என்றும் விடுதலைப் புலிகளைத் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும்
என்றும் இந்த வெளிச்சக்திகள் வலியுறுத்தி வருவதையும் நாம்
அவதானிக்கின்றோம். தமிழீழ விடுதலைப் புலிகளோடுதான் சிறிலங்கா அரசு
சமாதானப் பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ள வேண்டும் - என்று கூறுகின்ற
இந்த வெளிச்சக்திகள் அதே வேளை தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தமிழ்
மக்கள் ஆதரவு வழங்கக் கூடாது என்று கூறி வருவதானது எத்தகைய முரணான
விடயம்? இந்த வலியுறுத்தலின் பின்புலம் தான் என்ன?
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்க வேண்டாம் என்று தமிழ்
மக்களையே கேட்டுக் கொள்கின்ற இந்த வெளிச்சக்திகள் இதுவரை காலமும் தமிழ்
மக்களுக்கு ஏதாவது ஆதரவை வழங்கி வந்துள்ளனவா? இந்த வெளிச்சக்திகள்
இதுவரை காலமும் சிறிலங்கா அரசுகளுக்கு அல்லவா தமது ஆதரவை வழங்கி
வந்திருக்கின்றன? சிறிலங்கா அரசுகள் தமிழ் மக்களை கொன்று குவித்தும்,
பொருளாதார உணவு மருந்துத் தடைகள் ஊடாக பட்டினி போட்டும் வந்துள்ள
காலங்களின் போதெல்லாம் இந்த வெளிப்படை சக்திகள் சிறிலங்கா
அரசுகளுக்குத் தமது வெளிப்படையான ஆதரவினை நல்கி ஆயுத தளபாடங்களையும்
சிங்கள அரசுக்கு அள்ளிக் கொடுத்ததையும் தமிழ் மக்கள் அறிவார்கள். இன்று
விடுதலைப்புலிகளைத் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பரப்புரை
செய்கின்ற இந்த வெளிச்சக்திகள் அன்று சிறலங்கா அரசிற்கு அளித்திட்ட
ஆதரவும் உதவியும்தான் தமிழ் மக்கள் அழிவுக்கும் துன்பத்திற்கும்
ஆளாக்கியது என்பதும் வரலாற்று உண்மையல்லவா?
சிறிலங்கா அரசுகள் தங்கள் சொந்தப் பலத்தினூடும் பின்னர் வெளிநாடுகள்
தந்த நிதியுதவி மற்றும் ஆயுத பலங்களோடும் தமிழ் மக்களை ஒடுக்கி அழித்து
வந்த காலங்களில் இந்த வெளிச்சக்திகள் தமிழ் மக்களின் அரசியல்
வேட்கைகளுக்காகக் குரல் கொடுக்கவில்லை. தமி;ழ் மக்கள் தங்களுடைய
உரிமைகளுக்காக சாத்வீக முறையில் அரசியல் வழியில் ஜனநாயக ரீதியாகப்
போராடிய போதெல்லாம் சிறிலங்கா அரசுகள் அவற்றை வன்முறை கொண்டு அடக்கின.
அப்போதும் இந்த வெளிச்சக்திகள் தமிழ் மக்களின் நியாயமான
போராட்டத்திற்கு ஆதரவாக கருத்துச் சொல்ல முன்வரவில்லை.
தமிழர்களின் உரிமைப்போராட்டம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின்
தலைமையின் கீழ் ஆயுதப் போராட்டமாக வடிவெடுத்த பின்னர்தான் இந்த உலக
நாடுகள் திரும்பி; பார்க்க தொடங்கின. அப்போதும் இந்த வெளிச்சக்திகள்
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை அங்கீகரிக்கவில்லை. தொடர்ந்தும்
சிறிலங்கா அரசுகளை ஆதரித்து வந்த வெளச்சக்திகள் தங்களுடைய தொடர்ச்சியான
நிதியுதவியூடாகவும் ஆயுத உதவியூடாகவும் சிறிலங்கா அரசுகள் தமிழ் மக்களை
அழிப்பதற்கு உதவியும் வந்தன. கள முனைகளில் விடுதலைப்புலிகள் சில
பின்னடைவுகளைச் சந்தித்தபோது சமாதானப்பேச்சு வார்த்தைகளை ஆரம்பியுங்கள்
என்று இந்த வெளிச்சக்திகள் குரல் கொடுக்கவில்லை.. ஒரு போர் நிறுத்த
உடன்படிக்கையைச் செய்வதற்கு இவை ஓடோடி வரவில்லை. கண்காணிப்புக்
குழுவொன்றை அமைப்பதற்கு யோசனையும் வழங்க வில்லை. மாறாக அப்போதும்
தொடர்ந்தும் சிங்கள அரசுகளுக்கு நிதி உதவியையும் ஆயுத உதவியையும் இந்த
வெளிச்சக்திகள் கொடுத்து வந்துள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சிறிலங்கா அரசின் பாரிய இராணுவ
நடவடிக்கைகளை முறியடித்ததோடு மட்டுமல்லாது தன்னுடைய இராணுவ
நடவடிக்கைகள் மூலம் தமிழரின் பாரம்பரிய பிரதேசங்கள் பலவற்றை
வென்றெடுத்து நிதர்சனமான அரசாங்கம் ஒன்றையும் சிறப்பாக நிர்வகிக்கத்
தொடங்கிய பின்னர்தான் இந்த வெளிச்சக்திகளும் வெளிச்சத்திற்கு
வரத்தொடங்கின. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையின் கீழ் தமிழ் மக்கள்
பலமாக இருக்கின்றார்கள் என்பதால் இன்று சமாதானப்பேச்சு வார்த்தைகளும்
ஆரம்பமாகின.
இன்று தமிழ் மக்கள் விடுதலை புலிகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று சில
வெளிச்சக்திகள் கூறுவதோடு அதற்கான காரணங்களையும் தெரிவித்தும்
வருகின்றன. தமிழீழ விடுதலைப்புலிகள் வன்முறைகளை கைவிட்டு சிறிலங்காவின்
ஜனநாயக முறையைக் கைக்கொண்டு அதனூடாகத் தமிழர்களின் பிரச்சனைகளைத்
தீர்க்க வேண்டும். இதனை செய்வதற்கு விடுதலைப்புலிகள் முன்வராத
பட்சத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளைப் புறக்கணிக்க வேண்டும்-
என்று இந்த வெளிச்சக்திகள் இப்போது கூற ஆரம்பித்துள்ளன.
சிறிலங்காவின் அரசுகள் உண்மையான ஜனநாயக நெறியை கடைப்படிககாததன்
காரணமாகத்தான் தமிழீழ மக்கள் தம்முடைய போராட்ட வடிவை மாற்றினார்கள்.
அடிப்படையில் தமிழர்களுடைய போராட்டம் சிறிலங்காவின் அநீதியான
ஜனநாயகத்திற்கு எதிராக எழுந்த போராட்டமேயாகும். எந்த அநீதிக்கு
எதிராகப் போராட்டம் நடைபெறுகின்றதோ அந்த அநீதியையே ஏற்றுக் கொள்ளுங்கள்
என்று இந்த வெளிச்சக்திகள் கூறுகின்றன.
சிறிலங்காவின் ஜனநாயக மரபுகள் சிங்கள-பௌத்த நலனை மட்டுமே
பேணுபவையாகும். சிறிலங்காவின் அரசியல் யாப்பு தமிழ் மக்களின் நலனுக்கு
எதிரானதாகும். சிறிலங்கா அரசுகளின் அரசியல் நிறைவேற்று திட்டங்கள்
தமிழ் மக்களின் தேசிய நலனுக்கு எதிரானவையாகும்.
FOREMOST CONSTITUTIONAL
AUTHORITY ON COMMONWEALTH CONSTITIUTIONS ROFESSOR S.A.D.SMITH
என்பவர் சிறிலங்காவின் அரசியல் யாப்பை கடுமையாக கண்டித்துள்ளதோடு
மட்டுமல்லாது சிறிலங்காவின் யாப்பு சட்டவிரோதமானது
(ILLEGAL) என்றும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது மிக
அண்மையில் சிறிலங்காவிற்கான பிரித்தானிய உதவித் தூதுவர் திரு
DOMINIC JOHN CHILCOTT
அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் பிரித்தானியா அரசாங்கம்
கொடுத்துச் சென்ற அரசியல் யாப்பு இலங்கைத் தமிழ் மக்களின் உரிமையைப்
பாதுகாக்கும் வலிமையற்றது என்று கூறியிருந்தார் அந்த பாதுகாப்பற்ற
அரசியல் யாப்பை பி;ன்னர் வந்த சிறிலங்கா அரசுகள் இன்னும் மிக மோசமான
விதத்தில் தமிழர்களுக்கு எதிராக மாற்றியமைத்ததைத்தான் போராசிரியர்
ளு.யு.னு.ளுஆஐவுர் கண்டித்திருந்தார்.
இப்படிப்பட்ட ஜனநாயக விரோத வழிமுறையோடு கலந்து தமிழர்களின் உரிமைகளை
விடுதலைப்புலிகள் பெறவேண்டும் என்று இந்த உலகநாடுகள் இப்போது உபதேசம்
செய்ய ஆரம்பித்துள்ன. இந்த உலக நாடுகளுக்குத் தமிழ் மக்களின் அரசியல்
வேட்கைகள் குறித்து இன்னும் சரியான தெளிவு வரவி;ல்லை என்றுதான் எண்ணத்
தோன்றுகின்றது. அது மட்டுமல்லாது இன்னுமொரு முக்கிய கேள்வியும்
எமக்குள் எழுகின்றது.
தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று
புதிதாக பரப்புரை செய்ய ஆரம்பித்துள்ள இந்த வெளிச்சக்திகள் இதுவரை
காலமும் தமிழ் மக்களுக்குப் பெற்றுத் தந்தது என்ன?
ஒன்றுமேயில்லை!!
சரி, தங்கள் செல்லப்பி;ள்ளையான சிறிலங்காவிடமிருந்து தமிழ் மக்களுக்கு
எதுவும் பெற்றுக் கொடுக்க முடியாது போயிருந்தாலும் அதற்காக ஏதாவது
உருப்படியான முயற்சிகளையாவது இந்த உலக நாடுகள் எடுத்திருக்கின்றவா?
கடந்த பெப்ருவரி மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது
ராஜபக்சவின் அரசு ஏற்றுக் கொண்டவாறு ஒட்டுக்குழுக்களின் ஆயுதக்
களைவுகள் மேற்கொள்ளப்பட்டு போர் நிறுத்த ஒப்பந்தம் சிறிலங்கா அரசால்
செம்மையாக கடைப்பிடிக்கப்பட்டதா? இல்லையே!
இது குறித்து சிறிலங்கா அரசு மீது முறையான அழுத்தம் எதையும் இந்த உலக
நாடுகள் மேற்கொண்டனவா? இல்லையே!
இன்றைய தினம்வரை இந்த உலக நாடுகள் சிறிலங்கா அரசுகள் மீது எந்த விதமான
உரிய அழுத்தங்களையும் தடைகளையும் விதிக்காமல் இருப்பதன் காரணமாகத்தான்
இன்று இலங்கையில் சமாதானம் கிட்டாமல் யுத்தம் தொடர்ந்து
நடைபெறுகின்றது.
மக்கள் சுதந்திரப் போராட்டமானது மிகச் சரியான பாதையில் பயணித்து
வெற்றிகளைப்பெற ஆரம்பிக்கின்ற போது அந்தப் போராட்டத்தை
மழுங்கடிப்பதற்காக அந்த போராட்டத்தை நடாத்துகின்ற இயக்கத்தையும்
தலைமையையும் கொச்சைப்படுத்துவது இந்த உலக நாடுகளின் வழக்கமாகும்.
மதிப்புக்குரிய நெல்சன் மண்டெலாவையும், அவரது இயக்கத்தையும்
பயங்கரவாதிகள் என்று அழைத்ததும் இந்த உலகநாடுகள் தான். மக்களிடமிருந்து
நெல்சன் மண்டெலாவின் இயக்கத்தைப் பிரிக்க முனைந்த மேற்குலகம் பின்னர்
தோற்றுப் போனது.
இன்று வெளிச்சக்திகள் தமிழ் மக்களையும் விடுதலைப்புலிகள் இயக்கத்தையும்
பிரிப்பதற்கு வீணான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. மக்கள் வேறு, புலிகள்
வேறு அல்ல என்பதை இவர்கள் உணர்ந்தும் உணராதது போல் நடந்து
வருகின்றார்கள்.
ஆகவே தமிழ் மக்கள்மீது அனுதாபம் காட்டுகின்ற செயலற்ற சொற்களை சொல்லிக்
கொண்டு அதே வேளை தமிழ் மக்களுக்கு எதிரான முறையற்ற செயற்பாடுகளையும்
இந்த சம்பந்தப்பட்ட உலகநாடுகள் மேற்கொண்டு வருகின்றன. சிறிலங்கா அரசு
மீதுமட்டுமல்ல இந்த உலக நாடுகள் மீதும் தமிழ் மக்கள் நம்பிக்கையை
இழந்து விட்டார்கள். இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கு இந்த உலக
நாடுகள் உரியவற்றைச் செய்ய முன்வர வேண்டும். இல்லாவிட்டாலும் தமிழீழ
போராட்டம் தன் வழி சென்று தன் இலட்சியத்தை அடையும். ஏனென்றால் இது
மக்கள் போராட்டம்!. தமிழீழ மக்களின் போராட்டம்!! புலத்தின் பலமும்
களத்தில் கைகொடுக்கும்.
|
Senseless words and inappropriate deeds
The acts of state sponsored terrorism unleashed by the Singhala
government of Sri Lanka are no longer being covertly conducted.
Foreign countries and international organizations have expressed
deep concern over the government�s indifference to the injustices
being wantonly carried out against the Tamil people.
The co-chairs of the Sri Lanka donor community representing USA, EU,
Japan and Norway have jointly and independently expressed their
indignation over the continuing atrocities occurring in Sri Lanka.
They have urged both parties to the conflict to immediately cease
hostilities and resume peace talks. The UN Secretary General, Koffi
Annan himself has expressed his concern and urged the Sri Lankan
government to stop the war on Tamils. Similarly, Canada along with
many other countries have cautioned the Sri Lankan government
against carrying out terrorist acts and emphasized the importance of
restarting peace talks.
Furthermore, the co-chairs of the Sri Lanka donor countries as well
as the UN have applied pressure to Sri Lankan president, Mahinda
Rajapaksha to establish an independent international inquiry into
the alleged slaying of 17 aid workers by the Sri Lankan army and to
submit their findings to an international forum. They are also
concerned about the vengeful food embargo imposed on Tamils in the
aftermath of the war and warned the government not to interfere with
the free flow of food and medicine to the affected areas.
Another important aspect of the conflict that has attracted world
opinion and been openly discussed among diplomatic communities is
the idea of an independent homeland for the Tamils. Richard Boucher,
the Assistant Secretary of State for South and Central Asian affairs
has clearly and consciously stated in a recent press interview that
�There are legitimate issues that are raised by the Tamil community
and they have a very legitimate desire, as anybody would, to be able
to control their own lives, to rule their own destinies and to
govern themselves in their homeland; in the areas they�ve
traditionally inhabited�. Similarly, Brad Williams of Human Rights
Watch, Asia, has asserted the legitimate demands of the Tamils need
to be respected. We are also appreciative of the fact that there are
many countries supportive of the Tamil cause and who passionately
urge the Sri Lankan government to settle the legitimate demands of
the Tamils.
Hearing such assertions and reports that are favourable to the Tamil
demands inspires optimism among Tamils, especially among those who
are displaced in foreign countries.
Many foreign countries as well as various other world organizations
have expressed their indignation that the peace process is being
delayed by successive Sri Lankan governments with a hidden agenda.
They urge the incumbent President of the Sri Lankan government to
find an amicable solution to the ongoing problem through peace talks
alone. Above all, they have explicitly stated that the Tamils have a
legitimate demand for self determination and self rule in their
homeland. Thanks to this international pressure, some political
analysts have suggested there may be light at the end of tunnel.
However, we dissociate from such a sense of sweet optimism. More
importantly, as we sceptically look at the Sri Lankan government�s
senseless words and inappropriate deeds, we are duty bound to
caution our people to be more alert and vigilant than ever during
these testing times.
It is imperative to take heed of the standpoint of the external
forces who express their indignation over the failed approach to
solving the national problem of Sri Lanka and are supportive of the
legitimate demands of the Tamils. We have to made note of the fact
that the some of these agencies propose an unacceptable condition
for Tamil independence, that it be without the existence of the
LTTE.
We are aware of the fact that some of the external forces are of the
opinion that the Tamil people should not be supportive of the
Tigers, that they should abandon the Tigers once a peace agreement
is reached. It is incomprehensible why these external forces hold
this contradictory view, one where they acknowledge that the Tigers
are the only representatives of the Tamils who can have talks with
the government whilst also urging the Tamil community to abandon the
LTTE afterwards.
Where were the external forces all these years? How dare they demand
that the Tamils abandon the Tigers? Did they raise a finger against
the Singhalese for the atrocities committed against the Tamils
during many decades of oppression? Didn�t they support the so called
democratic Sri Lankan government year after year and supplied enough
arms and ammunition to wipe out a minority community? One day
history will say that the economic and military support provided by
the very same external forces during decades of oppression of Tamils
were instrumental for successive Singhala governments to commit more
and more atrocities against Tamils.
When the minority Tamils in Sri Lanka cried out against sustained
oppression by the majority Singhalese and staged peaceful protests
they were ridiculed by Singhala armed forces. Many were killed by
Singhala thugs and their properties were set on fire. As a result
there was an exodus of Tamils to foreign countries. The very same
external forces that demand the Tamils to abandon Tigers now were
supportive of the Sri Lanka government then.
Peaceful agitations by the Tamils went unheeded, so their protest
evolved into armed conflict under the leadership of the Tigers. At
that point the external forces were awakened and they realized that
was a genuine grievance by the Tamils that needed to be redressed.
Even then, for many years the external forces remained supportive of
the two faced hypocrisy of successive Sri Lankan Singhalese
governments in their fight against the so called terrorism. It
appeared they simply praised the Lord and passed on the ammunitions.
There were instances when the Tigers were at a disadvantage and
willing to make concessions but the external forces failed to apply
pressure on the Sri Lankan government to start the peace initiative.
Instead, successive Sri Lankan governments were rewarded with more
economic aid and military hardware. As such, Sri Lankan governments
had a free hand to conduct their state sponsored reign of terror to
unleash, in effect, a pogrom. They were so trigger happy that they
even had the gall to term it as a �war for peace�.
The liberation movement of the Tamil Tigers did not merely resist
the grand army of Sri Lanka but also recaptured most of the land
mass that belonged to Tamil speaking people. They established an
efficient civil administration in their region and defended their
territories against the might of Sri Lanka army. It is at this point
the external forces shot into action and initiated a peace deal
between the two parties on an equal status.
Almost five years have elapsed since the cease fire agreement was
signed, but nothing has materialized on the ground. Today the very
same external forces want the Tamils to disown the Tigers. They try
to explain that the Tigers need to disarm and accept the path of
democracy and co-exist with the Singhalese. Failing disarmament the
Tamils should disown the Tigers.
The Tamils took up arms in the first place for the very reason that
successive governments in Sri Lanka failed to upkeep the sprit of
democracy, abusing the power handed to them by their numeric
superiority. Agitation of the Tamils took a different shape after
peaceful protests to win their rights were met by death and
destruction. Now, it is unreasonable for the external forces to
demand that the Tigers should drop their arms and accept the old
form communal democracy that so badly failed the Tamil people. It
cannot happen so soon and without any guarantee for the safety of
the Tamils.
The democratic traditions of Sri Lanka is that of Buddhist
Singhalese chauvinism. The constitution of Sri Lanka is against the
welfare of the Tamils and does not safeguard the interest of Tamils
at a national level. Professor S.A.D. Smith, considered a foremost
authority on commonwealth constitutions has condemned the
constitution of Sri Lanka and termed it as illegal. He is not alone
in such condemnation. The assistant high commissioner of U.K,
Dominic John Chilcott has also stated that the constitution left
behind by the British was not strong enough to protect the interests
of minorities in the island. Prof. Smith condemned the governments
of Sri Lanka for diluting the constitutions further to discriminate
against the minorities, particularly the Tamils.
In light of the history of Singhalese hegemony, bloodshed and
destruction, it is incomprehensible that external forces are still
inclined towards the Tamils being coerced to drop their arms and
join hands with the Singhalese in the holy matrimony of a unified
state. If democracy means one man one vote, then in a country where
extreme nationalism is the proven mantra for gaining power, there is
no place for a minority community. It is na�ve of the external
forces to believe that the Tigers can simply disarm overnight and
join hands with the Singhalese in a so called democratic stream. We
believe that the external forces have some misconceptions about the
ideology of the Tamil struggle and the reconstruction thereafter.
One more question needs to be asked. Thus far what did the external
forces obtain any guarantee from the governments of Sri Lanka as
regards to the well being of the Tamils? Nothing.
Did they put any form of pressure on the chauvinistic government to
yield to the legitimate demands of the minorities? The answer is
again an emphatic no. Last February, the Rajapaksha government made
a deal in Geneva to disarm the Karuna faction and reneged on
implementing it. Did any of the external forces object to such a
breach of agreement? Never.
Up until now there was no genuine attempt by the external forces to
apply pressure on the Sri Lanka Government to implement agreements
that were decided under the terms of Cease Fire Agreements signed
between the Tigers and the government of Sri Lanka. If the external
forces had acted even handedly, the war today could have been
averted.
It is customary for the external forces to condemn and jeopardize a
people�s uprising at a point when the sacrifice made by them begins
to yield results. The great statesman, Nelson Mandela underwent the
same trauma and his movement was condemned as terrorist organization
not so long ago. Every attempt to isolate Nelson Mandela from his
people made their bondage stronger and more and more inseparable
because his cause was justified by his people. Today, the external
forces are making the very same mistake of trying to separate the
Tigers from the down trodden Tamil masses who suffered decades of
persecution and untold misery at the hands of Singhala army. An
armed movement is sure to fail if they are not supported by the
community for whom they are fighting for. Therefore, one cannot
understand why they want to separate Tigers from the Tamils.
There are external forces who recognise the suffering of the Tamil
masses and see the need for redress to the long standing grievances,
but remain adamant that the Tigers need to be disowned by the
Tamils. It is like trying to stage Hamlet without the prince. If the
external forces propose such an inappropriate peace condition, the
Tamil people will soon lose faith in them, just as they long ago
lost faith in the Sri Lanka government. We welcome involvement from
the external forces and their role in coming to the aid of the
affected community and helping with the rebuilding process, but not
at the cost of their identity or the self deterministic ideals for
which Tamil blood was shed. If this is not acceptable to the
external forces, they should stay out of the conflict. Our struggle
shall continue until our just objectives are achieved. It is the
struggle of the Tamil people. Our determination and unity between
Tamils and Tigers will triumph in the end.
|