| 
			 
Selected Writings by Sanmugam 
			Sabesan,   
			சபேசன், அவுஸ்திரேலியா 
த(க)ண்ணீருக்கும் அப்பால்.... 
			8 August  2006 
			 
			
			மாவிலாறு அணையைத் திறக்க வேண்டும் - என்ற ஒரு காரணத்தைச் சொல்லிக் 
			கொண்டு சிறிலங்கா அரசு மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையை தமிழீழ விடுதலைப் 
			புலிகள் தம்முடைய ஒரு மட்டுப்படுத்தப்பட்ட துரித ராணுவ 
			நடவடிக்கையினூடாக முற்றாக முறியடித்துள்ளார்கள். சிறிலங்காவின் அரசு 
			வலிந்து மேற்கொண்ட இந்த இராணுவ நடவடிக்கையினூடாக முற்றாக 
			முறியடித்துள்ளார்கள். 
			சிறிலங்கா அரசு வலிந்து மேற்கொண்ட இந்த ராணுவ நடவடிக்கையை 
			முறியடிப்பதற்காக விடுதலைப்புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் 
			மகிந்தபுர, செல்வநகர், 64வது மைல்கல் ஆகியவற்றில் அமைந்துள்ள இராணுவ 
			முகாம்கள் மூதூர் இறங்குதுறைக் கடற்படை முகாம், கட்டைப்பறிச்சான் 
			இராணுவ முகாம் மற்றும் பச்சனூர்ப் பகுதிகளில் இருந்த மினிமுகாம்கள் 
			என்பனவும் மூதூர் காவல் நிலையத்தோடு இணைந்திருந்த இராணுவ மினிமுகாமும் 
			அழிக்கப்பட்டுள்ளன. 
			 சிறிலங்காக் கடற்படையின் இரண்டு அதிவேக டேராப் பீரங்கிப்படகுகள் 
			மூழ்கடிக்கப் பட்டதுடன் மேலும் மூன்று டோராப் படகுகள் 
			சேதமாக்கப்பட்டுள்ளன. மோட்டார்கள் இயந்திர துப்பாக்கிகள் உட்பட 
			பெருந்தொகையான ஆயுதங்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளார்கள். 
			 
			கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக நடைபெற்ற இந்த இராணுவ நடவடிக்கைகளின் 
			பின்னர் விடுதலைப் புலிகளின் படையணிகள் போர்நிறுத்த ஒப்பந்தக் 
			காலத்தின் போதான நிலைகளுக்கு திரும்பியுள்ளார்கள். சிறிலங்கா அரசு 
			வலிந்து மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைக்கு எதிராகத் தாம் மேற்கொண்ட 
			மட்டுப்படுத்தப்பட்ட துரித இராணுவ நடவடிக்கையின் நோக்கம் முற்றாக 
			நிறைவு பெற்றுள்ளது என்று விடுதலைப்புலிகளின் இராணுவ பேச்சாளர் 
			இளந்திரையன் தெரிவித்துள்ளார். 
			 
			இந்த நிகழ்வுகளின் பின்னால் உள்ள மிக முக்கியமான விடயங்களை நாம் 
			தர்க்கிக்கப் போவதற்கு முன்பாக மாவிலாறு அணை குறித்த பின்புலத்தைக் 
			கருத்தில் கொள்வது முக்கியமானதாகும். சிறிலங்கா அரசு கூறுவது போல் 
			தண்ணீர்தான் பிரச்சனையா? அல்லது இந்தத் தண்ணீருக்கும் அப்பால் வேறு 
			பிரச்சனைகள் உள்ளனவா? 
			 
			பிரித்தானிய அரசு இலங்கை தீவை விட்டு வெளியேறிய பின்பு சிங்கள அரசு 
			திட்டமிட்ட முறையில் தமிழர் தாயகங்களை சிங்கள குடியேற்றங்கள் மூலம் 
			அபகரிக்கத் தொடங்கியது. முக்கியமாகத் தமிழீழத்தின் எல்லையோரப் 
			பகுதிகளிலும் மிகக் குறிப்பாக தமிழீழத்தின் தென்பகுதிகளான திருமலை, 
			அம்பாறை போன்றவற்றிலும் திட்டமிட்டு சிங்கள குடியேற்றங்கள் 
			மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்தும் தமிழரின் பாரம்பரிய பிரதேசங்கள் 
			அபகரிக்கப்பட்டு வந்தன. 
			 சிங்களவர்களைக் குடியேற்றுவதற்காகப் போடப்பட்ட முதல் திட்டத்திலும் 
			தண்ணீரின் பெயர்தான் உபயோகிக்க பட்டது. கந்தளாய் நீர்ப்பாசனத் திட்டம் 
			என்ற பெயரில்தான் சிங்களக் குடியேற்றத்தை முதலாவது பிரதமரான 
			டி.எஸ்.சேனநாயக்கா ஆரம்பித்து வைத்தார். இதன் பின்னரும் தண்ணீரின் 
			பெயரால் அல்லை, மொறவேவ, கல்லோயா என்னும் பெயர்களில் பல நீர்ப்hசனத் 
			திட்டங்கள் ஆரம்பமாகி தமிழர்களின் தாயகப்பகுதிகள் சிங்கள 
			குடியேற்றங்களுக்கு ஆளாகின. இப்பகுதிகளில் பாரம்பரியத் 
			தமிழ்ப்பெயர்களும் மாற்றப்பட்டு அவற்றிற்குச் சிங்களப் பெயர்களும் 
			சூட்டப்பட்டன. தண்ணீரின் பெயரால் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டடங்கள் 
			தமிழர்களின் கண்ணீர் வாழ்க்கைக்கு காரணமாக அமைந்தன. 
			 
			இதன் அடிப்படையில் நாம் மாவிலாறு அணைப்பிரச்சனை குறித்துச் சிந்திக்க 
			விழைகின்றோம். சுமார் ஓராண்டுக்கு முன்னர் ஆசிய அபிவிருத்தி வங்கி தனது 
			திருகோணமலை மாவட்டத்தில் ஒரு நீர்ப்பாசன திட்டத்தை முன்வைத்தது. 
			இதன்மூலம் ஈச்சலம்பற்று, மூதூர், தோப்பூர், சீலன்வெளி போன்ற 
			பிரதேசங்களுக்கு நீர் வழங்கும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட விருந்தன. 
			ஆனால் ஈச்சலம்பற்றுப் பிரதேசமானது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் 
			பகுதிக்குள் இருந்த காரணத்தினால் சிறிலங்கா அரச இந்த நீர்பாசன 
			திட்டத்தை எதிர்த்தது. 
			 ஈச்சலம்பற்றுப் பிரதேசத்தை தவிர்த்து மற்றைய பகுதிகளுக்கு - சிங்கள 
			குடியேற்றப் பகுதிகளுக்கு- மட்டும் இத்திட்டத்தை அமலாக்குவதற்கு 
			சிறிலங்கா அரசு முயன்றது. இதனைத் தமிழர்கள் கடுமையாக எதிர்த்தபோது 
			தமிழர் பகுதிகளிலும் நீர் விநியோகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் 
			என்று ஆசிய அபிவிருத்தி வங்கி உறுதி யளித்திருந்தது. 
			 
			இதேவேளை இந்த ஆண்டு திருகோணமலையில் வேறு ஒரு நீர்ப்பாசன திட்டத்தை 
			சிறிலங்கா அரசு ஆரம்பித்தது. திட்டத்தின் பிரகாரம் 
			ஈச்சலம்பற்ற்லிருந்து சுமார் ஆறுகிலோ மீற்றர் தொலைவில் இருக்கும் 
			மாவிலாறுப் பகுதி நீரை சிங்களக் கிராமங்களுக்கு மட்டும் 
			விநியோகிப்பதற்கு சிறிலங்கா அரசு திட்டம் தீட்டியது. இந்த மாவிலாறு 
			பகுதி நீரை சிங்கள கிராமங்களுக்கு மட்டும் விநியோகிப்பதற்கு சிறிலங்கா 
			அரசு திட்டம் தீட்டியது. இந்த மாவிலாறு நீரை கொண்டு செல்லக்கூடிய 
			கால்வாயை கந்தளாயில் வைத்து இரண்டாகப் பிரித்து ஒரு புறம் சேருவிலப் 
			பகுதிக்கும் மறுபுறம் சோமபுர தெகிவத்த பகுதிகளுக்கும் நீர் விந்யோகம் 
			செய்வதற்குச் சிறிலங்கா அரசு முயற்சிகளை மேற்கொண்டது. இதில் முக்க்ய 
			விடயம் என்னவென்றால் கந்தளாய், கல்லாறில் இருக்கும் இராணுவ முகாம்தான் 
			இந்த நீர்விநியோகத்தை மேற்பார்வை செய்யும் அதிகாரத்தை கொண்டதாகும்.. 
			 
			ஆகவே சிங்கள குடியேற்றக் கிராமங்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு 
			மேற்கொள்ளப்பட்ட இந்த நீர்ப்பாசன முயற்சிகளைத் தமிழ் மக்கள் மிகக் 
			கடுமையாக எதிர்த்தார்கள் தம்மீது சிறிலங்கா அரசாங்கம் ஒரு பொருளாதார 
			தடையை விதிக்கின்றது. என்று தமிழர்கள் கோபப்பட்டதில் நியாயம் 
			இருக்கிறது. ஆகவே ஜீலை மாதம் 20ம் திகதியன்ற மாவிலாறு அணையைத் தமிழ் 
			மக்கள் மூடிவிட்டார்கள். தமிழ் மக்களின் மனிதாபிமானப் பிரச்சனையை 
			தெரிவிக்கும் செயல்தான் இது. 
			 
			கண்காணிப்புக்குழு இப்பிரச்சனையில் தலையிட்டு இதனை பேச்சு வார்த்தைகளின 
			மூலமாகத் தீர்த்து வைக்க முயன்றன. சிறிலங்கா அரசின் சமாதான செயலகத்தின் 
			செயலாளர் நாயகமான பாலித கோஹன தமிழ்க் கிராமமான ஈச்சலம்பற்றுவுக்கு 
			நீர்பாசனத் திட்டத்தை விரிவாக்க இசைந்தார். இது குறித்து கண்காணிப்புக் 
			குழுவினர் விடுதலைப் புலிகளிடம் பேசிக் கொண்டிருக்கையில் சிறிலங்கா 
			அரசு தனது குண்டுத் தாக்குதல்களை ஆரம்பித்து விட்டது. விமான படைத் 
			தாக்குதல்கள், செல் தாக்குதல்கள் தரைவழித் தாக்குதல்கள் என்ற 
			அடாவடித்தனமான சிறிலங்கா அரசு ஆரம்பித்த இராணுவ நடவடிக்கைகளை 
			கண்காணிப்புக் குழுவும் கண்காணித்தது. ஆனால் சிறிலங்கா அரசு 
			கண்காணிப்புக் குழுவை கண்டு கொள்ளவில்லை. 
			 
			இந்தப் பின்புலச்சம்பவங்களின் அடிப்படையில்தான் தமிழீழ விடுதலைப் 
			புலிகளின் பதில் நடவடிக்கையான மட்டுப்படுத்தப்பட்ட துரித இராணுவ 
			நடவடிக்கையை நாம் கருத்தில் கொள்ள விழைகின்றோம். இதனூடாக சிறிலங்காவின் 
			அரச அதிபர் மகிந்த இராஜபக்சவின் சிங்களப் பௌத்த பேரினவாத 
			நடவடிக்கைகளையும் தர்க்கிக்க விழைகின்றோம். 
			 
			சிங்கள பேரினவாதிகளுக்கு திருகோணமலை என்பதானது மிக முக்கியமான 
			பிரதேசமாகும். யாழ்ப்பாணம், வன்னி ஆகியவற்றை தமிழீழப் பிரதேசங்களாக 
			இவர்களது ஆழ்மனம் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும் தென் தமிழீழத்தை சிங்கள 
			பேரினவாதிகள் ஏற்றுக் கொள்வதில்லை. முக்கியமாக திருகோணமலை தமிழர்களின் 
			பாரம்பரிய தாயகபு}ம் என்பதை சிங்கள பேரினவாதிகள் ஏற்றுக் கொள்வதில்லை. 
			இதன் அடிப்படையின் தமிழ் மக்கள் மீது வலிந்து ஒரு போரை 
			ஆரம்பிப்பதற்கும் அந்தப்போரை தொடர்ந்து நடத்தக் கூடிய ஒரு களமாகவும் 
			திருகோணமலையை ராஜபக்ச தேர்ந்தெடுத்தார். தவிரவும் தற்போதைய 
			சூழ்நிலையில் திருகோணமலை ஒரு மென்மையான இலகுவான இலக்கு என்றும் இங்கே 
			இலகுவில் வெற்றி பெறலாம் என்றும் மகிந்த கருதினார். இதற்கு அப்பாலும் 
			மகிந்த ஒரு கருத்தை வைத்திருந்தார். அது குறித்துப் பின்னர் 
			தர்க்கிப்போம். 
			 
			ஆகவே சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது வலிந்து ஒரு போரை ஆரம்பித்தது. 
			கடந்த நான்கு ஆண்டு காலத்திற்கும் மேலாக தமிழீழ விடுதலைப்புலிகள் 
			காட்டிய நெகிழ்ச்சிப் போக்கினை வைத்து விடுதலைப் புலிகள் பலவீனமாகி 
			விட்டார்கள் எஎறும் சிறிலங்கா அரசு எண்ணியது. 
			 
			சிறிலங்கா அரசு மட்டுமல்ல பல சர்வதேச நாடுகளும் இவ்வாறுதான் 
			தப்புக்கணக்கு போட்டன. தமிழீழ மக்கள் தேசிய மற்றும் வாழ்வியல் 
			பிரச்சனைகளைத் தீர்க்க உதவுவதாக இந்த உலக நாடுகள் முன் வந்தபோது 
			விடுதலைப்புலிகள் இந்த உலக நாடுகளுக்கு மதிப்புக் கொடுத்தார்கள். 
			 
			சிறிலங்கா அரசு கடந்த நான்கு ஆண்டு காலத்திற்கும் மேலாக சமாதானத் 
			தீர்வைத் தராமல் போர்நிறுத்த உடன்பாடுகளையும் மீறி தொடர்ந்து அரச 
			பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வந்த போது தமிழ{ழத் தேசியத் தலைமை 
			பொறுமையையும், நெகிழ்ச்த்தன்மையையும் கடைப்பிடித்தது. சர்வதேசத்திற்கு 
			மரியாதை கொடுப்பதற்காகவும், சமதானத்தீர்வு ஒன்றிற்கு அதிக வாய்ப்பு 
			வழங்க வேண்டும் என்பதற்காகவும் விடுதலைப்புலிகள் போரை ஆரம்பிக்காமல் 
			இருந்தார்கள். ஆனால் சர்வதேசம் இதனை பலவீனம் என்று தப்புக்கணக்கு 
			போட்டது. தேவையற்ற அழுத்தங்களையும், தடைகளையும் விடுதலைப்புலிகள் மீது 
			சர்வதேச சமூகம் விதித்தது. 
			 
			சிறிலங்கா அரசு இன்று வலிந்து ஒரு போரை தொடுத்து வாங்கிக் கொண்டது. 
			விடுதலைப்புலிகளின் இராணுவ பலம் இப்போது மீண்டும் ஒருமுறை 
			நீரூபிக்கப்பட்டு விட்டது. இதன் காரணமாக சர்வதேசத்தின் நடவடிக்கைகளில் 
			உரிய மாற்றத்தை நாம் எதிர்பார்க்கின்றோம். 
			 
			அத்தோடு இச்சம்பவங்கள் மூலம் மேலும் பல விடயங்கள் நிரூபிக்கப்பட்டு 
			விட்டன. அவற்றையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 
			 
			தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் பொதுவாக ஒரு பலம் வாய்நத இயக்கமாக 
			அறியப்பட்டிருந்தாலும் மட்டக்களப்பு- திருகோணமலைப் பகுதிகளில் 
			விடுதலைப் புலிகளின் பலம் குறைவு என்ற கருத்த்னை பலர் குறிப்பாக - அரச 
			தரப்பும், சிங்கள ஊடகங்களும் பரப்பி வந்துள்ளன. இப்போது நடைபெற்ற சமர் 
			இந்தப் பொய்க்கருத்தை தோற்கடிப்பதற்கும் உதவி விட்டது. 
			 
			தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை விட்டு கருணா பிரிந்த பின்பு 
			தென்தமிழீழத்தில் புலிகளின் பலம் குறைந்து விட்டது என்ற கருத்தை அரச 
			ஊடகவியலாளர்களும், சில அரசியல் ஆய்வாளர்கள் பரப்பி வந்தார்கள். இன்று 
			இந்த சமர் கருணா என்பது ஒரு மாயை என்பதை மீண்டும் நிரூபித்து விட்டது. 
			இதுவரை காலமும் கருணா என்கின்ற பொய்யுக்கும், மாயைக்கும் துணை நின்ற, 
			நிற்க முயன்ற சகல ஊடகங்கள் இன்று மண்ணைக் கவ்வியுள்ளன. 
			 
			தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட இந்த மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ 
			நடவடிக்கையானது சிறிலங்கா அரசிற்கும், அதன் பேரினவாதங்களுக்கும் 
			மிகப்பலத்த அடியைக் கொடுத்துள்ளது சிறிலங்கா இராணுவத்தின் பல முகாம்கள் 
			நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. மிகக்குறுகிய காலத்திற்குள்ளே இறங்கு துறைப் 
			பகுதிக்குள் விடுதலைப் புலிகள் முன்னேறிச் சென்றார்கள். கடற்படைத் தளம் 
			தாக்குதலுக்கு உள்ளானது. ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டன. 
			 
			சுதந்திரத் தமிழீழத்தின் தலைநகராக அமையக் கூடிய திருகோணமலையில் இப்போது 
			நடாத்தப்பட்ட இந்த தாக்குதல் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு 
			புதிய பரிமாணத்தை தொட்டிருக்கின்றது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 
			இல்லாத தாக்குதலாகவும் இது அமைந்துள்ளது. இந்த வேளையில் போரியல் 
			ரீதியாகவும் நாம் ஒரு விடயத்தை ஒப்பு நோக்க வேண்டும். 
			 
			இறுதியான ஓர் இலக்கை நோக்கி பாரிய சக்திகளை ஒருங்கிணைத்து விடுதலைப் 
			புலிகள் இத்தாக்குதலை நடாத்தவில்லை. இது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட 
			நடவடிக்கைதான். சரியாகச் சொல்லப் போனால் சிறிலங்கா இராணுவத்தின் இராணுவ 
			நடவடிக்கைக்கு சிறிலங்கா இராணுவத்தின் இராணுவ நடவடிக்கைக்கு எதிராக 
			புலிகள் மேற்கொண்ட ஒரு மட்டுப்படுத்தப்பட்ட எதிர் நடவடிக்கை 
			மட்டும்தான். இந்த மட்டுப் படுத்தப்பட்ட நடவடிக்கையின் ஊடாக வரலாற்றில் 
			என்றும் இல்லாத தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகள் 
			நடாத்தியிருக்கின்றார்கள் என்றால் இந்தத் தாக்குதலின் பரிமாணத்தை நாம் 
			புரிந்து கொள்ள முடியும். 
			 
			தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்த இராணுவல நடவடிக்கை மேலும் ஒரு முக்கிய 
			விடயத்தையும் புலப்படுத்தியுள்ளது. தென் தமிழீழத்தில் சிங்களப்படைகள் 
			முன்னரைப்போல் இலக்கை நோக்கி பாரிய சக்திகளை ஒருங்கிணைத்து 
			விடுதலைப்புலிகள் இத்தாக்குதலை நடாத்தவில்லை. இது ஒரு 
			மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைதான். சரியாகச் சொல்லப் போனால் சிறிலங்கா 
			இராணுவத்தின் இராணுவ நடவடிக்கைக்கு எதிராக புலிகள் மேற்கொண்ட ஒரு 
			மட்டுப்படுத்தப்பட்ட எதிர் நடவடிக்கை மட்டும்தான். இந்த 
			மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கையின் ஊடாக வரலாற்றில் என்றும் இல்லாத 
			தாக்குதலை தமிழீழ விடுதலைப்புலிகள் நடாத்தியிருக்கின்றார்கள் என்றால் 
			இந்தத் தாக்குதலின் பரிமாணத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். 
			 
			தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்த இராணுவ நடவடிக்கை மேலும் ஒரு முக்கிய 
			விடயத்தையும் புலப்படுத்தியுள்ளது. தென் தமிழீழத்தில் சிங்களப் படைகள் 
			முன்னரைப் போல் சுலபமாக நிலைகொண்டிருந்து அடக்குமுறைகளை மேற்கொள்ளலாம் 
			என்ற நிலை இன்று மாறி விட்டது. விடுதலைப் புலிகளின் இந்த இராணுவ 
			நடவடிக்கையானது இந்தப்புதிய களநிலவரத்தை ஒரு செய்தியாக சிறிலங்கா 
			அரசிற்கு அறிவித்துள்ளது என்று கூறலாம். 
			 
			நடந்து முடிந்த இராணுவ நடவடிக்கைகள் ஊடாக முஸ்லிம் இனமக்களுக்கு 
			சிறிலங்கா அரசு ஒரு விடயத்தை தெளிவு படுத்தியுள்ளது. சிங்கள பௌத்த 
			பேரினவாத அரசான சிறிலங்கா அரசிற்குத் தமிழர் முஸ்லிம் என்ற பாகுபாடு 
			இல்லை தமிழ் மக்களை அகதிகளாக்குவது போல் முஸ்லிம் மக்களையும் சிறிலங்கா 
			அகதிகளாக்கும். தமிழ் மக்களைக் கொன்றொழிப்பது போல் முஸ்லிம் மக்களையும் 
			சிறிலங்கா அரசு கொன்றொழிக்கும் சிங்கள பேரினவாத அரசு சிங்களவர்களைத் 
			தவிர மற்ற எல்லோரையும் கொல்லும். 
			 
			சிறிலங்கா அரசு மனிதாபிமானம் குறித்துப் பேசுகின்றது என்றால் அது 
			சிங்கள மக்கள் குறித்து மட்டுமே பேசுகின்றது என்றே பொருள் 
			கொள்ளவேண்டும். மனிதாபிமான ரீதியில் சிறிலங்கா அரசு சிங்களவர்களுக்கு 
			மட்டும் நிவாரணம் வழங்கும் ஆனால் தமிழர்களுக்கு நிவாரணம் ஒன்றும் 
			வழங்குவதில்லை அதேபோல் பதினைந்து ஆயிரம் சிங்கள மக்களுக்கான 
			மனிதாபிமானம் குறித்து சிறிலங்கா அரசு பேசுகின்றது. இலட்சக்கணக்கான 
			தமிழ் மக்கள் தொடர்ந்தும் பிரச்சனைகளில் இருக்கும்போது இந்தப் 
			பதினைந்து ஆயிரம் என்ன கணக்கு? 
			 
			இதேபோல் மாவிலாறு நீர் எங்கிருந்து வருகின்றது என்பது அல்ல உண்மையான 
			பிரச்சனை! அந்த நீர் எங்கிருந்து வந்தாலும் அது சிங்களவர்களுக்கு 
			மட்டுமே உரியதாகும். இதுதான் சிறிலங்கா அரசின் நிலைப்பாடாகும். 
			 
			சிறிலங்கா இராணவத்தின் மாவிலாறு இராணுவ நடவடிக்கைக்கு அப்பாலும் மகிந்த 
			ராஜபக்ச ஒரு கருத்தை வைத்திருந்தார் என்பதைக் இக்கட்டுரையின் 
			ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தோம். இந்தத் தண்ணீருக்கும் அப்பால் 
			மகிந்த கொண்டிருந்த சிந்தனைதான் என்ன? 
			 
			மாவிலாறு பகுதியை வெற்றிகரமாகச் கைப்பற்ற முடிந்தால் பின்னர் அதனூடாக 
			மிகப்பெரிய தாக்குதல்களை நடாத்தி தமிழீழ பிரதேசங்களை ஊடுருவிக் 
			கைப்பற்றும் எண்ணத்தை மகிந்த கொண்டிருந்தார். தமிழீழ விடுதலைப்புலிகள் 
			மேற்கொண்ட மட்டுபடுத்தப்ட்ட துரித இராணுவ நடவடிக்கை மூலம் மகிந்தவின் 
			இந்த எண்ணம் நிறைவேறால் போயிற்று, போர் என்று வந்தால் தமிழர் தேசம் 
			முற்றாக அழிந்துவிடும் என்று விதைக்கப்படுகின்ற முட்டாள் தனமான 
			கருத்துக்களுக்கும் விடுதலைப்புலிகளின் இந்த இராணுவ நடவடிக்கை பதிலாக 
			அமைகின்றது. தண்ணீர் திட்டத்திற்கு அப்பால் உருவாக்க இருந்த தமிழர்களை 
			கண்ணீர் வடிக்க வைக்கும் திட்டமும் நிறுத்தப்பட்டது. 
			 
			எளிதாகக் கைப்பற்றிய பகுதிகளை விட்டுவிட்டு விடுதலைப்புலிகள் மீண்டும் 
			பழைய நிலைகளுக்கு ஏன் திரும்பினார்கள் என்ற ஆதங்க கேள்விகளும் எழுந்த 
			வண்ணம்தான் இருக்கின்றன. தமிழீழ விடுதலைப்புலிகள் மேற்கொள்கின்ற எந்த 
			ஒரு இராணுவ நடவடிக்கையும் ஒரு நோக்கத்தைக் கொண்டதாகவும் அந்த நோக்கத்தை 
			முழுமையாக நிறைவு செய்வதாகவுமே இருக்கும். தமிழீழ விடுதலைப் புலிகள் 
			இப்போது மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின் நோக்கமானது சிறிலங்கா அரசின் 
			போர் நடவடிக்கையின் நோக்கமானது சிறிலங்கா அரசின் போர் நடவடிக்கையை 
			முற்றாக முறியடிப்பதோடு விடுதலைப் புலிகளின் பலத்தையும் 
			நிரூபிப்பதாகும். 
			 
			இந்த நோக்கங்கள் முழுமையாக நிறைவேறி விட்டன தவிரவும் போரியல் உத்திகளை 
			ஊன்றிக் கவனிப்பவர்ககளுக்கு விடுதலைப் புலிகள் புதிய இடங்களை 
			தக்கவைக்கும் நோக்குடன் இந்த இரணுவ நடவடிக்கையை ஆரம்பிக்கவில்லை என்பது 
			முதலே புரிந்திருக்கும். விடுதலைப் புலிகளின் படை நகர்வுப்பாணியும் 
			உபயோகித்த, கொண்டு சென்ற வளங்களும் இதனை நிரூபிக்க்ன்றன. 
			 
			இங்கே அரசியல் ரீதியாவும் ஒன்றைக் கவனிக்க வேண்டும். மகிந்த 
			ராஜபக்சவும் இராணுவமும் உண்மையில் போர் ஒன்றைத்தான் ஆரம்பித்திருந்த 
			போதும் போர் என்ற சொல்லை அவர்கள் உபயோகிக்கவில்லை. ஏனென்றால் போர் 
			நிறுத்தத்தை வார்த்தைப் பிரயோகத்தின் மூலம் அவர்கள் மீற விரும்பவில்லை. 
			ஆனால் தங்களுடைய இந்த இராணுவ நடவடிக்கை என்ற போரின் மூலமும் தமிழர் 
			பகுதிகளைக் கைப்பற்றியிருந்தால் சிறிலங்கா இராணுவம் பழைய நிலைகளுக்கு 
			திரும்பியிருக்காது என்பது உண்மைதான் ஏனென்றால் சிங்கள இராணுவத்தின் 
			நோக்கம் அதுவாகத்தான் இருந்தது. 
			 
			அதுபோல் இந்தப்போரை எதிர் கொண்ட விடுதலைப்பபுலிகளும், அதற்குரிய அதே 
			அரசியல் சொல்லாடலைத்தான் தேர்ந்து கொண்டார்கள். ஆனால் 
			விடுதலைப்புலிகளின் நோக்கம் வேறாக இருந்தது நாம் முன்னர் கூறியது போல் 
			சிறிலங்கா அரசின் இராணுவ நடவடிக்கையை முற்றாக முறியடித்து 
			விடுதலைப்புலிகளின் பலத்தை மீண்டும் நிரூபித்தவுடன் புலிகள் மீண்டும் 
			பழைய நிலைகளுக்கு திரும்பினார்கள். விடுதலைப்புலிகள் இந்த 
			மட்டுப்படுத்தப்பட்ட துரித இராணவ நடவடிக்கையை மேற்கௌளாமல் 
			இருந்திருந்தால் பாரிய அளவில் தமிழ மக்களின் உயிர்களும் சொத்துக்களும் 
			சிறிலங்கா இராணுவத்தினால் அழிக்கப்பட்டிருக்கும். இந்த அழிவைத் 
			தடுப்பதுவே விடுதலைப்புலிகள் எடுத்த நடவடிக்கையின் அடிநாதமாகும். 
			 
			இந்த இராணுவ வெற்றிகளாலும் அதன் பிறகு பழைய நிலைகளுக்கு 
			திரும்பியதாலும் விடுதலைப்புலிகள் சர்வதேசத்திற்கு தெளிவான செய்திகளை 
			கொடுத்திருக்கின்றார்கள. போர் நிறுத்தத்தை மீறியது சிறிலங்கா அரசுதான். 
			நாங்கள் அந்த போர் நிறுத்த மீறலை தடுத்து நிறுத்த்யதுடன் மட்டுல்லாது 
			போர் நிறுத்த விதிகளுக்கு அமைய பழைய நிலைகளுக்கு திருப்பியும் உள்ளோம் 
			நாங்கள் பலமாக உள்ளோம். சிறிலங்கா அரசு விரும்புவது போல் யுத்தம் 
			மூலம்தான் தீர்வு வரவேண்டும் என்றால் யுத்தத்தின் மூலம் உரிய தீர்வைப் 
			பெற்றுக்கொள்வதற்கு எம்மால் முடியும். சமாதானம் மூலமாகத்தான் தீர்வ 
			வரவேண்டுமென்றால் அதனை சிறிலங்கா அரசுதான் தீர்மானிக்க வேண்டும். 
			 
			தமிழீழ விடுதலைப்புலிகள் தெளிவாக இருக்கின்றார்கள். தீர்க்கமாக 
			இருக்கின்றார்கள். பலமாக இருக்கின்றார்கள் நீதியாக, நேர்மையாக 
			செயலாற்றி வந்திருக்கின்றார்கள். சர்வதேசம் இனியாவது நியாயமான 
			செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று நாமும் எதிர்பார்க்கின்றோம். 
   |