Selected Writings by Sanmugam
Sabesan,
சபேசன், அவுஸ்திரேலியா
சமாதானத்திற்கு எதிரான முரண்நிலைகள்
27 June 2006
�தமிழீழ விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடையை விதித்ததன்
காரணமாக போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவில் இடம் பெற்றுள்ள ஐரோப்பிய
நாடுகளின் உறுப்பினர்கள் நடுநிலையோடு செயற்பட மாட்டார்கள் என்பதனால்
அவர்கள் கண்காணிப்புக் குழுவில் இருந்து வெளியேற வேண்டும்�இ என்று
விடுதலைப் புலிகள் முன்வைத்துள்ள வாதத்தை அனுசரணையாளர்கள் என்ற வகையில்
தாம் ஏற்றுக் கொண்டுள்ள போதிலும் இக்கோரிக்கை கவலையை தருகின்றது என்று
இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் தெரிவித்துள்ளார்.
இன்றைய மிகநெருக்கடியான காலகட்டத்தில் போர் நிறுத்தக் கண்காணிப்புக்
குழுவில் இடம்பெறுகின்ற உறுப்பினர்களின் நடுநிலைத் தன்மை என்பது
முக்கியமானது என்று நாம் கருதுவதனால் அடிப்படையாக அமைந்த சில முக்கிய
விடயங்களையும், நிகழ்வுகளையும் இவ்வேளையில் தர்க்கிப்பது மிகவும்
அவசியமானது என்று எண்ணுகின்றோம்.
போர்நிறுத்தம் அது குறித்த கண்கணிப்பு, புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்
அமலாக்கம், சமாதானப் பேச்சுவார்த்தைகள் தடைகள் மற்றும் அழுத்தங்கள்
போன்ற விடயங்களின் பின்னால் உள்ள முரண்நிலைகளையும், பொய்ப்
பரப்புரைகளையும் எமது தர்க்கத்திற்கு ஆதாரமாக நாம் எடுத்துக்
கொள்கின்றோம். இ;ப்பொழுது நாம் முன்வைக்கின்ற சில கருத்துக்கள்
விரைவில் நிகழக் கூடிய சம்பவங்களைத் தெளிவு படுத்துவதற்கு உதவக் கூடும்
என்பதே நமது எதிர்பார்ப்புமாகும்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் இன்றுவரைக்கும்
நாம் கண்ட முரண்நிலைகளை நாம் முதலில் கருத்தில் கொள்ள வேண்டும். தமிழீழ
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது சிறிலங்கா அரசு விதித்திருந்த தடையை
நீக்கினால்தான் சமாதானப்பேச்சு வார்த்தைகளில் பங்கு கொள்ள முடியும்
என்று விடுதலைப் புலிகள் அன்று தெரிவித்திருந்தார்கள். சிறிலங்கா அரசு
விடுதலைப் புலிகள் மீது விதித்த தடையை நீக்கிய பின்னர்தான் சமாதானப்
பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகின. தேவையற்ற அனாவசியமான தடைகளை
நீக்க்pனால் தான் சமாதானப்பேச்சு வார்த்தைகளை ஆரம்பிக்க முடியும் ஆகவே
(முன்னைய) சிறிலங்கா அரசு தடையை அகற்றிய பின்னர் சமாதானப் பேச்சு
வார்த்தைகள் ஆரம்பமாகின.
தேவையற்ற அனாவசியமான தடைகள் உண்மையான நேர்மையான சமாதானப்
பேச்சுக்களுக்கே தடையாக அமைந்து விடும். இதனைச் சிறிலங்கா அரசுகள்
நன்றாகவே அறிந்து வைத்துள்ளன. அதனால்தான் தடைகளை அகற்றுவதுபோல்
பாசாங்கு காட்டி வேறுவிதங்களில் வேறு இடங்களில் இருந்து தமிழீழ
விடுதலைப் புலிகள் மீது தடைகள் விதிக்கப்படுவதற்கு சிறிலங்கா அரசுகள்
தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றன.
சிறிலங்கா அரசானது ஒரு சம பங்காளியாக தமிழீழ விடுதலைப் புலிகளோடு
தடைகள் அகற்ற ஒரு நிலையில் சமாதானப் பேச்சு வார்த்தைகள் நடாத்துவதற்காக
நடிக்கின்ற அதேவேளையில் சகல வெளிநாடுகள் அனைத்தும் விடுதலைப் புலிகள்
இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரி வருகின்றது. இது ஓர்
அடிப்படையான முரண் நிலையாகும் சிறிலங்காவின் இந்த முரண்நிலை அதனுடைய
சமாதான விரோதச் சிந்தனையை சரியாக நிரூபித்து நி;ற்கின்றது.
இந்தக் கருத்தை நாம் வேறு கோணத்தில் இருந்தும் தரக்;கிக்க
விரும்புகி;ன்றோம். விடுதலைப் புலிகளைத் தடை செய்வது என்பதானது
சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் என்பதனை
உணர்ந்துள்ள சிறிலங்கா அரசு உண்மையில் என்ன செய்திருக்க வேண்டும்?
உண்மையான, நேர்மையான சமாதானப்பேச்சுக்களையும் தீர்வையும் சிறிலங்கா
அரசு விரும்புவதாக இருந்தால் அது என்ன செய்திருக்க வேண்டும்?
தடைகளுக்கு எதிரான ஒரு மாற்று நிலையை சிறிலங்கா அரசு எடுத்திருக்க
வேண்டும். ஆனால் சிறிலங்கா அரசு என்ன செய்தது? என்ன செய்து வருகின்றது?
தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடைசெய்யச் சொல்லி சகல உலக நாடுகளையும் அது
கோரி வருகின்றது. சிறிலங்கா அரசு உண்மையான நேர்மையான சமாதானத்
தீர்வுக்கு எதிராக உள்ளது என்பதனை இந்த முரண்நிலையும் சான்று பகர்ந்து
நிற்கின்றது.
அது மட்டுமல்லாது இன்னுமொரு முரண் நிலையையும் நாம் இங்கு அவதானிக்க
வேண்டும். தடையை ஏற்படுத்தியது சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும்
நடைபெற வேண்டும் என்ற காரணத்திற்காகத்தான், என்கின்ற சிறிலங்காவின்
வாதம் எத்தகைய பித்தலாட்டமான முரண்நிலையைக் கொண்டுள்ளது, என்பதையும்
நாம் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும். சரி சிறிலங்கா அரசு சமாதானத்தின்
பெயரால்(!) கேட்டுக் கொண்டபடி(?) விடுதலைப்புலிகள் மீது ஐரோப்பிய
ஒன்றியமும் தடைசெய்து விட்டது! அப்படியென்றால் சமாதானத் தீர்வை
விரும்புகி;ன்ற(?) இந்தச் சிறிலங்கா அரசு அடுத்து என்ன செய்ய வேண்டும்?
என்ன செய்திருக்க வேண்டும?;.
சமாதானத்திற்காக இவ்வளவு தூரம் பாடுபட்ட சிறிலங்கா அரசு உடனடியாக
சமாதானத்திற்காக அனுசரித்துப் போயிருக்க வேண்டும். ஆனால் இந்தத்
தடைகளைக் காரணம் காட்டிக் கொண்டு சமாதானப் பேச்சுக்களில் இருந்து
சிறிலங்கா அரசு விலகி நிற்கின்றது. தடைகளைக் காரணம் காட்டியே சமாதானப்
பேச்சு வார்த்தைக்கு எதிரான பரப்புரைகளையும் சிறிலங்கா அரசு மேற்கொண்டு
வருகின்றது. இது ஒரு முரண் நிலையாகும்.!
சிறிலங்கா அரசு திட்டமிட்டு சமாதான முயற்சிகளைக் குலைத்து வருகின்றது.
அதனூடாக போருக்கான வழியை உருவாக்கி வருகின்றது. நாம் வருந்தத்தக்க
வகையில் சில உலகநாடுகளும் சிறிலங்காவோடு ஒத்துப்போவதால் உண்மையான
சமாதான முயற்சிகள் பாழ்பட்டு போகி;ன்றன. இதுவும் ஒரு பாரிய
முரண்நிலையாகும்.
இதுவரை காலமும் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவைப் பல வழிகளில்
கண்டித்து வந்த மகிந்த ராஜபக்ச அரசு இப்போது அதாவது ஐரோப்பிய
ஒன்றியத்தின் தடையின் பின்னர் கண்காணிப்புக் குழுவை வாழ்த்தி
வரவேற்கின்றது. நேற்றுவரை தவறு செய்தவர்களாக இருந்த கண்காணிப்புக் குழு
இன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையின் பின்னர் வரவேற்கத் தக்கவர்களாக
மாறியதன் காரணம் என்ன? இந்த மனமாற்றத்தின் உள் நோக்கம் என்ன? இதுவும்
ஒரு முரண் நிலை அல்லவா?
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினை தடை செய்த நாடுகள்
நடுநிலையாளர்களாக, கண்காணிப்புக் குழுவில் இடம்பெற முடியாது என்று
தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றார்கள். அவர்களது கருத்து
மிகச் சரியானதாகும்! இந்தக் கூற்றுக்கு ஆதரவாக வேறு ஒரு தளத்தில்
நின்று எமது கருத்தைத் தர்க்கிக்க விழைகின்றோம். மிக முக்கியமான இந்தத்
தர்க்கத்தை எமது வாசகர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தயவுடன்
கோருகின்றோம்!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்த நாடுகள்
நடுநிலையாளர்களாக ஏன் இருக்க முடியாது என்ற கேள்விக்குப் பதிலாக
அமெரிக்காவே ஒரு முன்னுதாரணமாக உள்ளது. இலங்கைத்தீவுக்கு உதவி வழங்கும்
மகாநாட்டிற்கு விடுதலைப் புலிகளை அமெரிக்கா தடைசெய்ததுதான் காரணம்
என்று சொல்லப்பட்டது. அமெரிக்காவின் இந்தப் பாராபட்சமான செயல் காரணமாக
டோக்கிய மகாநாடு பின்னர் வெற்றி பெறாமல் போனது. இத்தனைக்கும் இந்த உதவி
வழங்கும் மகாநாடு இலங்கைத்தீவில் உள்ள இரண்டு தரப்பினருக்கும் இரண்டு
இனங்களுக்கும் - பொதுவானதாக இருந்திருக்க வேண்டியது ஆனால் அமெரிக்கத்
தடை காரணமாக விடுதலைப் புலிகள் ஒதுக்கப் பட்டார்கள் அதன் காரணமாக
ஈழத்தமிழினம் ஒதுக்கப் பட்டது அமெரிக்காவின் அநாவசியமான தடை தமிழ்
மக்களுக்கு எதிரானதாக இருந்தது மட்டுமன்றி முறையான சமாதானப் பேச்சு
வார்த்தைகளுக்கும் எதிராக அமைந்தது.
அமெரிக்காவின் தடையானது அதனையே ஒரு நடுநிலையான தரத்தில் இருந்து இறக்கி
விட்டது. அமெரிக்கா தனது நடுநிலைத் தரத்தில் இருந்து இறங்கிய செயலானது
அமெரிக்காவின் அடுத்த கட்ட செயற்பாடுகளையும் இலங்கைத்தீவின்
சமாதானத்திற்கு எதிராகவே மாற்றி விட்டது. நாம் மேற்கூறிய உதவி வழங்கும்
நாடுகளின் மகாநாடு ஒரு தகுந்த உதாரணம்! இது அமெரிக்காவின்
முரண்நிலையைக் காட்டுகின்றது.
இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த
தடை காரணமாக ஐரோப்பிய நாடுகள் நடுநிலையாகச் செயற்பட மாட்டார்கள் என்று
கூறியிருப்பதற்கு முன்னுதாரணமாக அமெரிக்காவே நடந்து
காட்டியிருக்கின்றது. ஆகவே நோர்வே தூதுவர் தமது கவலையை
அமெரிக்காவிடம்தான் தெரிவிக்க வேண்டுமே தவிர, விடுதலைப் புலிககளிடம்
தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.
இது தவிர இன்னுமொரு முக்கியமான முரண்நிலையையும் நாம் சுட்டிக் காட்ட
விரும்புகின்றோம். கடந்த நான்கு ஆண்டு காலத்திற்கும் மேலாக சமாதானம்
என்ற நிலைப்பாட்டின் ஊடாக விடுதலைப்புலிகள் மீது ஒரு நெகிழ்ச்சியற்ற
இறுக்கமான தன்மையைத்தான் பல உலக நாடுகள் கடைப்பிடித்து
வந்திருக்கின்றன. தமிழ் மக்களுடைய தேசிய மற்றும் வாழ்வியல் பிரச்சனைகளை
சிறிலங்கா அரசுகள் இதுவரை காலமும் தீர்த்து வைக்கவில்லை என்ற
விடயத்தைக் கொள்கையளவில் உலக நாடுகள் ஏற்றுக் கொண்டபடியால் தான் இந்தச்
சமாதானத்திற்கான காலத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின.
ஆனால் தொடர்ந்து தவறுகள் இழைத்து வந்த, இழைத்து வருகி;ன்ற சிறிலங்கா
அரசுகளின் பக்கமாக ஒரு பக்கச் சார்பாகவே உலக நாடுகள் நடந்து வந்துள்ளன.
இதற்குக் காரணமும் விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்ட தடைகள்தான்
என்று கற்பிதம் செய்யப்பட்டது.
உலக நாடுகளினதும் சிறிலங்கா அரசினதும் இந்த முரண் நிலைகள் எமக்கு
மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துன்றன. தமிழ் மக்களுக்கு ஒரு நீதியான,
நேர்மையான தீர்வு சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஊடாகக் கிடைப்பதற்கு அந்த
உலக நாடுகள் உறுதுணையாக இருக்கும் என்கின்ற நம்பிக்கையும் இப்போது
குலைந்து வருகின்றது. நியாயமற்ற தடைகளை விதிக்கின்ற இவர்களா நியாயமான
முறையில் நடக்கப் போகிறார்கள்?
வன்முறைகளைத் தங்கள் மீது திணித்து தங்களை வன்முறையூடாக அழிக்க
முனைகின்ற சக்திகளை எதிர் கொள்வதற்காக, வன்முறையை உபயோகித்து ஓர் இனம்
போராட முயன்றால் இ;ப்போராட்டத்தை ஒரு சட்டரீதியாக போராட்டமாக
மேற்குலகம் பொதுவாக ஏற்றுக் கொள்வதில்லை. இது மேற்குலகம் தன் நலன்
சார்ந்து எடுக்கின்ற முடிவுகளாகும். அத்தோடு இத்தகைய விடுதலைப்
போராட்டங்களை கொச்சைப்படுத்துவதற்காக இப்போராட்டங்களை முன்னெடுத்து
நடாத்துகின்ற இயக்கங்களை பயங்கரவாத இயக்கங்கள் என்று அறிவித்துத் தடை
செய்வதையும் நாம் காணக்கூடியதாக உள்ளது. ஒரு விடுதலைப் போராட்டத்தை
முன்னெடுக்கின்ற விடுதலை இயக்கத்தை கொச்கைப்படுத்துவதன் மூலம் அந்த
விடுதலைப் பேராட்டத்தையே கொச்சைப்படுத்தும் செயல்தான் இது.
சரியாகச் சொல்லப்போனால் விடுதலை இயக்கம் அல்ல இவர்களது பிரச்சனை!
விடுதலைக்கான போராட்டம் என்;பதுதான் மேற்குலகத்தின் பிரச்சனையாகும்.
ஒரு விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி அடக்குவதற்காக அந்த
விடுதலைப் போராட்டத்தை நடாத்துகின்ற இயக்கத்தைக் கொச்சைப்படுத்துவது
என்பதானது வரலாற்றில் தொடர்ந்து நடைபெறுகின்ற விடயமாகும். ஆனால்
இத்தகைய கொச்சைப்படுத்தல்களையும், அடக்குமுறைகளையும் மீறி விடுதலைப்
போராட்டங்கள் வெற்றி பெற்றுள்ளதையும் இதே வரலாறு சுட்டிக் காட்டும்.
�ஆகவே தடை விதித்துள்ள நாடுகளின் உறுப்பினர்கள் கண்காணிப்புக் குழுவில்
இருந்து வெளியேற வேண்டும்�இ என்று விடுதலைப் புலிகள் கோரியிருப்பது
மிகச் சரியாதானகும்!. தவிரவும் புதிய கண்காணிப்புக் குழுவினர்
நியமிக்கப்படுவதற்கு செப்ரெம்பர் மாதம் முதலாம் திகதி வரை
நீடிக்கப்பட்ட காலக்கெடுவை விடுதலைப் புலிகள் வழங்கியிருப்பதானது
சமாதான முயற்சிகiளில் விடுதலைப் புலிகள் இன்னமும் நெகிழ்ச்சிப்
போக்கைக் கடைப்பிடிப்பதையே காட்டுகின்றது. விடுதலைப் புலிகளின் இந்த
நியாயமான வேண்டுகோளை சம்பந்தப்பட்ட நாடுகள் அலட்சியம் செய்தால்
பெரியதோர் பிரச்சனை வரக்கூடும் என்று தான் நாம் நம்புகின்றோம். ஆனால்
அவ்வாறாகும் பட்சத்தில் சில முக்கிய கருத்துக்களை நாம் இவ்வேளையில்
குறிப்பிட வேண்டியதும் அவசியமாகின்றது.
�
சமாதானத்திற்கு எதிரான முரண்நிலைகளை உருவாக்கியது விடுதலைப்
புலிகள் அல்ல!
� ஆகவே இன்றைய நெருக்கடியான நிலைக்கு விடுதலைப் புலிகள் காரணம்
இல்லை!
� புலிகளின் பக்கமே நியாயம் உள்ளது!.
� ஆகவே தொடர்ந்து வீணாகப் புலிகளைக் குறை கூறுவதில் அர்த்தம்
இல்லை!
� சிறிலங்காவின் முன்னைய அரசுகளும் தற்போதைய அரசும் அடிப்படையில்
சமாதானத்தி;ற்கு எதிரானவையாகும்!.
� சிறிலங்காவின் தற்போதைய அரசு தன்னுடைய பேரினவாத சிந்தனையில்
இருந்து மாறுவதற்கு மறுக்கின்றது. இராணுவத் தீர்வே அதன்
நோக்கமாகும்.!
� சமாதானத்திற்கு எதிரான தமது முரண்நிலைகளை உலக நாடுகள் மாற்றிக்
கொள்ளாவிட்டால் சமாதானக் குலைப்ப்pற்குத் துணை போனதற்கான தார்மீகப்
பொறுப்பை இந்த உலக நாடுகள் பின்னர் ஏற்றுக் கொள்ள வேண்டி வரும்.!
புலம் பெயர்ந்த
எமது தமிழீழ மக்களுக்கும் நேசமிகு உரிமையோடு ஒரு கருத்து:-
புலம் பெயர்ந்த
உறவுகளான நாம், எமது இன மக்களின் உரிமைக்காகவும், எதிர்கால
நல்வாழ்விற்காகவும், குரல் கொடுக்க, ஆதரவு வழங்க முன் வராவிட்டால்,
வேறு எவர்தான் முன்வருவார்கள்? ஆகவே அந்தக் காலகட்டத்தில் முன்னர்
எப்போதையும் விட மிக உச்சமான ஒருங்கிணைப்புச் செயலாக்கத்தை
முன்னெடுப்போம்.!
|