Selected Writings by Sanmugam
Sabesan,
சபேசன், அவுஸ்திரேலியா
அன்று சிங்கள பொலிஸ்காரன்:
இன்று உலகப் பொலிஸ்காரன்
21 June 2006
தமிழ் மக்களின்
உரிமைகளைப் பெறுவதற்கான
அகிம்சை வழியிலான சாத்வீகப் போராட்டங்களைப்
பிரயோகித்து அடக்க முயன்றதன் விளைவாகவே, தமிழ் மக்கள் ஆயுதப்
போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டி வந்தது.
தமிழ் மக்களின்
உரிமைப் போராட்டம் ஓர் ஆயுதப் போராட்டமாகப் பரிணாமம் பெறத்தொடங்கிய
காலகட்டத்தில் பொதுவாக ஓர் ஐயம் பல தரப்பினரிடையேயும் எழுந்து நின்றது.
முப்படைகளையும் கொண்டிருக்கும் ஓர் இனவாத பெரும்பான்மை இனஅரசின்
ஒடுக்குமுறைகளை ஒரு சிறுபான்மையினம் ஆயுதப் போராட்டத்தால் வெல்ல
முடியுமா என்ற கேள்வி அக்காலகட்டத்தில் பெரிதாகவே எழுந்திருந்தது.
அன்றைய தினம் பொல்லுகளோடும், துப்பாக்கிகளோடும் திரிந்து சண்டித்தனம்
செய்துகொண்டிருந்த சிங்களப் பொலிஸ்காரர்களைக் கண்டாலே அச்சம் எளுகின்ற
நிலையில் தான் சாதாரண தமிழ் பொதுமக்கள் இருந்தார்கள்.
தமிழீழப் பகுதிகளில் சிங்கள பொலிஸ்காரர்களின் தான்தோன்றித்தனமான
செயல்களும், சொற்களுமே எழுதப்படாத சட்டமாக விளங்கின. சிங்கள அரசுகளின்
பேரினவாத ஒடுக்குமுறைகளின் ஒரு குறியீடாகவே சிங்கள பொலிஸ்காரர்கள்
விளங்கினார்கள். அப்படிப்பட்ட சிங்கள பொலிஸ்காரர்களை எதிர்க்க
முனைகின்ற செயற்பாடுகளைக் கற்பனை செய்து பார்க்கவும் முடியாத நிலைதான்
அன்று இருந்தது.
�தமிழர் தேசம் முப்படைகளையும் கொண்ட ஒரு தேசமாக தன்னுடைய பாரம்பரியப்
பிரதேசங்களின் பெரும்பான்மைப் பகுதிகளை விடுவித்த தேசமாகப் பின்னாளில்
பரிமாணம் பெறும்� என்று அப்போது பலரும் எண்ணியிருக்க மாட்டார்கள்தான்!
ஆயினும், அது அவ்வாறே ஆயிற்று! காலத்தின் கொடையான தேசியத் தலைமையும்,
தேசத்தின் வித்துக்களான மாவீரர்களின் கொடையும் போராளிகளின் தீரமும்,
பொதுமக்களின் பங்களிப்பும் அதனை நிதர்சனமாக்கிற்று.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஓர் அம் சத்தை உளவியல் ரீதியாவும்,
நாம் தர்க்
கிக்க முயலலாம். விடுதலைப் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து
செல்லுகின்ற ஒவ்வொரு வேளையிலும், தமிழ் மக்களில் குறிப்பிட்ட சில
விகிதத்தினர் சஞ்சலம் கொண்டிருந்தமையும் நாம் அறிவோம். குறிப்பாகப்
புலம் பெயர்ந்த தமிழீழ மக்கள் போர்க்காலத்தில் தெளிவாகவும் சமாதானம்
என்று அழைக்கப்படுகின்ற காலத்தில் குழப்பமாகவும் இருப்பதை நாம்
முன்னரும் தர்க்கித்து உள்ளோம். இன்றைய தினம் தமிழீழ விடுதலைப்
போராட்டம் குறித்து உலக நாடுகளும் அக்கறை(!) எடுத்து வருகின்ற
வேளையில், குறிப்பிட்ட சில நகர்வுகள் சிலருக்கு குழப்பத்தையோ,
சஞ்சலத்தையோ தருவது வியப்பில்லைத்தான்.!
தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் கட்டம் கட்டமாக சிறிலங்காவின்
முப்படைகளை எதிர் கொண்ட போதும், பின்னர் சிறிலங்காவின் முப்படைகளை
ஒருங்கு சேர எதிர்கொண்ட போதும் குறிப்பிட்ட தொகை மக்களுக்கு ஐயமும்
அச்சமும் இருந்தது. என்பதும் உண்மைதான்!. உள்ளுர்ச் சிங்களப்
பொலிஸ்காரர்கள் மீது அன்றிருந்த அச்சத்தின் ஒரு நீட்சிதான் அது.
இதே ஐயமும், அச்சமும் அண்டை நாட்டுப் பொலிஸ்காரனான இந்திய இராணுவம்
தமிழீழப் பிரதேசங்களினுள் பிரவேசித்தபோது எமது மக்களில் கணிசமான
பேருக்கு இருந்தது. உள்ளுர்ச் சிங்களப் பொலிஸ்காரரின் மீதான பயம்
தெளிந்து வருகின்ற வேளையில் அண்டை நாட்டுப் பொலிஸ்காரன் மீதான பயம்
உருவாகிற்று.
இப்போது உள்ளுர் பொலிஸ்காரனும் வெளியேறி, அண்டைநாட்டு பொலிஸ்காரனும்
வெளியேறி விட்ட பின்னர் உலகப் பொலிஸ்காரன் உள்நுழையப் பார்க்கின்றான்
என்ற சந்தேகம் பலமாக எழுந்து வருவதை நாம் காண்கின்றோம்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் காலகட்டத்தில் மிகமுக்கியமான
கருத்துக்களை எம் வாசகர்களிடம் முன்வைத்துத் தர்க்கிக்க
விரும்புகின்றோம்.
சிறிலங்கா அரசுகள் தொடர்ந்து முன்வைத்து வந்த அடிப்டையான வாதம் ஒன்று
இப்போது முழுமையாக தகர்ந்து விட்டதை நாம் காண்கின்றோம்.
தமிழ் மக்களின் இனப்பிரச்சனையும், உரிமைப் போரட்டமும் உள்ளுர்ப்
பிரச்சனைகள் என்றும் வெளிநாடுகள் தலையிடவோ விமர்சனம் செய்யவோ கூடாது
என்றும் கூறிவந்த சிறிலங்கா அரசுகள் இப்போது தமிழர்களின் உரிமைப்
போராட்டத்தை ஒடுக்குவதற்காக உலகநாடுகளின் தயவுகளை நாடிப் பரப்புரை
செய்து வருவதை நாம் காண்கின்றோம். இன்று உலகநாடுகள் சில தத்தம் நலன்
சார்ந்து சிறிலங்கா அரசிற்கு ஆதரவாக நடந்து கொண்டாலும் ஒரு விடயம்
இப்போது தெளிவாக நிரூபணமாகி உள்ளது.
�சிறிலங்கா அரசினால் தமிழரின் உரிமைப் போராட்டத்தை நசுக்கமுடியாது
அந்தப் போராட்டத்தை தோற்கடிக்க முடியாது. அந்தப் போராட்டத்தின்
வெற்றிக்கு இனிமேலும் அணைபோட முடியாது� என்கின்ற உண்மை இன்று
நிரூபிக்கப்பட்டு விட்டது. அதனால்தான் இன்று உலகநாடுகளிடம் சிறிலங்கா
அரசு கையேந்தி நிற்கின்றது.
அதுமட்டுமல்லாது சிறிலங்கா அரசு நேரடிப் போரில் மட்டுமல்லாது தேய்மானப்
போரிலும்
(War of Attrition) வெற்றி கொள்ள முடியாத நிலையில்தான் இன்று
உள்ளது. போரியல் ரீதியான இந்தக் கருத்தைப் பின்னர் தர்க்கிப்போம்.
சிறிலங்கா அரசு இன்று வெளிநாடுகளிடம் கையேந்தி நிற்பதுவும், சில
வெளிநாடுகள் தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்கு அழுத்தங்களைப்
பிரயோகிப்பதுவும் இன்னுமொரு யதார்த்தத்தையும் சுட்டிகாட்டுகின்றன.
தமிழீழ விடுதலைப் N
பாராட்டம் சரியான பாதையில் நகர்ந்து செல்வதைத்தான் இவை நிரூபணம்
செய்திருக்கின்றன. இந்த விடுதலைப் போராட்டம் இன்னும் மிகக்குறுகிய
காலத்
திற்குள் மிகப்பெரிய பரிமாணத்தின் ஊடாக இறுதி இலட்சியத்தை அடைவதற்கான
அறிகுறிகளை நாம் காண்கின்றோம். இதற்கு உலக வரலாறும், போரியல் வரலாறும்
சான்று பகருகின்றன.
எம்மைப் பொறுத்தவரையில் இன்றைய தினம் சமாதானப் பேச்சு வார்த்தைகள்
ஒருமுடிவுக்கு வந்து விட்டதாகவே கருதுகின்றோம். இனியும் தொடர்ந்து
பேசுவதில் உண்மையான பலன் எதுவும் கிட்டாது என்பதைத்தான் களநிலவரம்
சுட்டிக் காட்டுகின்றது. சிறிலங்காவின் அரசிடமோ அல்லது சம்பந்தப்பட்ட
உலக நாடுகளிடமோ உண்மையான நேர்மையான மனமாற்றம் உடனடியாக வராவிட்டால்
சமாதானப்பேச்சு வார்த்தைகள் விரைவில் சமாதிநிலையை அடைந்துவிடும்.
சம்பந்தப்பட்ட உலகநாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தேவையற்ற
அழுத்தங்களை மேற்கொண்டு, தடைகளையும் விதித்து அதன் பின்னர் புலிகளைப்
பேச்சு வார்த்தைகளுக்கு அழைப்பது என்பதானது மிகத் தவறான செயற்பாடாகும்.
தமிழீழ விடுதலைப்புலிகள் மீது மேற்கொள்ளப்படுகின்ற அழுத்தங்களும்,
தடைகளும் உண்மையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப் படுதின்ற
அழுத்தங்களேயாகும். சமஉரிமையையும், நீதியையும,
சமாதானத்தையும் வேண்டி நிற்கின்ற தமிழ் மக்கள் மீது பாராபட்சமான
முறையில் உலகநாடுகள் நடந்து கொள்கின்ற இந்தமுறைகள் உலகநாடுகளை
சிறிலங்காவின் தரத்தி
ற்கும் கீழேதான் கொண்டு போய்விடும்.
உலகநாடுகளின் இந்தத் தவறான அணுகுமுறைகளால் உற்சாகம் கொண்டுள்ள அதிபர்
மகிந்த ராஜபக்ச இவற்றைத் தனது பேரினவாத சிந்தனைக்கு ஆதரவாக
பயனபடுத்துகின்றார். தமிழ் மக்கள்மீது வலிந்து ஒரு போரைத்
திணிப்பதற்கான சகல முயற்சிகளையும் மகிந்த இப்போது ஆரம்பித்து விட்டார்.
இந்தப் போருக்கான நேரடிப் பொறுப்பை அதிபர் மகிந்த ராஜபக்சவும்
பின்னணிப் பொறுப்பை சம்பந்தப்பட்ட உலகநாடுகளும் ஏற்றுக் கொள்ள வேண்டிய
நிலை விரைவில் உருவாகும்.!
நிரந்தர சமாதானம் குறித்து மேற்குலகம் மேற்கொண்ட ராஜதந்திர
நடவடிக்கைகள் இன்று பாரிய தோல்வியைக் கண்டுள்ளன. இந்தப் பாரிய
தோல்விக்கு அடிப்படைக் காரணம் சிங்கள அரசுதான். ஆனால் இந்த உண்மையை
மேற்குலகம் ஏற்றுக் கொள்வதாக இல்லை. காரணம் மேற்குலகம் தனது நலன்
சார்ந்து, தனது பொருளாதார நலன் சார்ந்து, தனது பிராந்திய நலன் சார்ந்து
செயற்படுவதனால் சிங்கள அரசின் தவறுகளை மேற்குலகம் கண்டும் காணாததுபோல்
இருக்கின்றது. இதன் காரணமாக மேற்குலகம் இன்று தனது ராஜதந்திரத்தில்
பலத்த தோல்வியைத் தழுவியுள்ளது.
மேற்குலக நாடுகளின் அடிப்படை நோக்கில் மாற்றம் வராத வரையில் சிறிலங்கா
அரசிடமும் மாற்றம் வராது. இனியும் வீணாக விடுதலைப் புலிகளைக் குற்றம்
சொல்லி வருவதில் பிரயோசனம் எதுவும் இருக்காது.
மேற்குலக நாடுகளின் அடுத்த கட்ட நகர்வுகள் சிறிலங்கா அரசிற்கு
வெளிப்படையான அழுத்தங்களைத் தருவதாக அமைய வேண்டும். இது உடனடியாக
மேற்கொள்ளப்பட வேண்டும். இவற்றைச் செய்வதற்கு மேற்குலக நாடுகள் தவறும்
பட்சத்தில் பெரும்போர் ஒன்று வெடிக்கக் கூடும். அதற்கான சாத்தியமே
இப்போது உள்ளது. பெரும்போர் ஒன்றினைத் தொடக்குவதற்கான அடித்தளத்தை
மகிந்த ராஜபக்ச ஏற்கனவே போட்டு விட்டார் என்பதுதான் உண்மையுமாகும்.
இப்போது நிலவுவது சமாதானத்திற்கான காலம் அல்ல! போர்க்காலம்தான் தற்போது
நிலவுகின்றது! மென்தீவிர யுத்தம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்வதை
நாம் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். ஆனால் இங்கே ஒரு விடயத்தை
தர்க்கிப்பது பொருத்தமானதாக இருக்கக் கூடும். சிறிலங்கா அரசானது ஒரு
நீண்ட கால நேரடிப் போரையோ அல்லது தேய்மானப்போர் ஒன்றையோ
(War of Attrition) எதிர்த்துத் தாக்குப் பிடித்து நிற்க
மாட்டாது.
போரியல் வரலாற்றில்
War
of Attrition என்று அழைக்கப்படுகின்ற தேய்மானப் போரானது
எதிரியைக் களைக்கப் பண்ணுகின்ற உத்திகளைக் கொண்டதாகும். வுhந யஉவ ழக
றநயசiபெ யறயல என்றும் இது பற்றி குறிப்பிடுவதுண்டு. தேய்மானப்போர்
என்பதானது நேடிப்போரின் போது மட்டுமல்லாது நேரடிப்போர் ஒன்று நடந்து
முடிந்த பின்னரும் ஆரம்பித்துத் தொடரக் கூடியதாகும். சமீபத்திய
வரலாற்று உதாரணங்களாக இரண்டை சொல்லலாம். இஸ்ரேல் இராணுவமானது லெபனானை
விட்டு வெளியேறுவதற்கு இஸ்புல்லாவின் தேய்மானப் போர்தான் காரணமாக
அமைந்தது. இன்று ஈராக்கில் போர் முடிந்து விட்டது. ஆனால் தேய்மானப்
போர் தொடங்கி விட்டது.
ஒரு கெரில்லா இயக்கமாக (கரந்தடி) உருவாகி இப்போது ஒரு மரபுவழி
இராணுவமாகப் பரிமாணம் பெற்றுள்ள விடுதலைப்புலிகளின் போர் உத்திகள்
நவீனகாலத்திலும் புதுமையானவைதான். விடுதலைப் போராட்டப் போரியல்
வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது ஒப்பீட்டளவில்
தனித்துவமானதும் உயர்வானதுமாகும். இன்று கெரில்லாப் போரையும் தேய்மானப்
போரையும், மரபுவழிப் போரையும் ஒரே நேரத்தில் நடாத்துவதற்கு விடுதலைப்
புலிகளுக்கு வலு உள்ளது. இலங்கைத்தீவில் ஒரு நீண்ட போரோ அல்லது ஒரு
தேய்மானப் போரோ நடைபெறுவதை மேற்குலகம் விரும்பாது என்ற காரணத்தினால்
தனது அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்குலகம் நேர்மையாக மேற்கொள்ள
வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கி
ன்றோம்.
இன்று சிங்கள அரசு தமிழ் மக்களைத்
திட்டமிட்ட முறையில் படுகொலை செய்து வருகின்றது. தொடர்ந்தும்
கொல்லப்பட்டு வருகின்ற தமிழ் பொதுமக்களின் குடும்பங்களைச்
சேர்ந்தவர்களுக்கு நிவாரணம் தரவோ, ஆறுதல் சொல்லவோ சிறிலங்கா அரசு
தயாராக இல்லை. ஆனால் விடுதலைப் புலிகள் மீது பழி சுமத்துவதற்காக
சிறிலங்கா அரச ஆதரவில் நடாத்தப்பட்ட கெப்பிட்டிக் கொல்லாவத்
தாக்குதலைப் பார்வையிட்டு ஆறுதலும் அனுசரணையும் வழங்குவதற்கு சிறிலங்கா
அதிபர் ராஜபக்ச உடனே செல்கின்றார். ஏனென்றால் அந்தப் பொதுமக்கள்
அப்பாவிகள் மட்டுமல்ல சிங்களவர்களும் ஆவார்கள்.
இந்த நடவடிக்கை மூலம் சில உண்மைகள் தெளிவாக்கப்பட்டுள்ளன. இலங்கைத்
தீவில் இரண்டு நாடுகள் இருக்கின்றன. இலங்கைத் தீவில் இரண்டு தேசிய இன
மக்கள் இருக்கின்றார்கள். இலங்கைத் தீவில் இரண்டு தலைமைகள்
இருக்கின்றன. சிங்களத் தலைமைகளுக்குத் தமிழ் மக்களின் உரிமை குறித்தோ,
சமாதானத் தீர்வு குறித்தோ, இயல்பு வாழ்க்கை குறித்தோ கிஞ்சித்தும் கவலை
கிடையாது - என்ற உண்மைகள் இப்போது வெளிப்படையாகவே தெளிவாகி விட்டன.
எந்தச் சிங்களத் தலைமையும் தமிழ் பொதுமக்களுக்குச் சமாதானப் பேச்சு
வார்த்தைகள் ஊடாகத் தீர்வைத் தந்ததுமில்லை. இனியும் தரப் போவதுமில்லை.
அதிபர் ராஜபக்சவின் முன்னோடியான சந்திரிக்கா அம்மையார் கூட்டாட்சி
என்று அன்று சொன்னார். அதிபர் ராஜபக்சவோ இப்போது ஒற்றையாட்சி
என்கின்றார். முன்னொரு தடவை சந்திரிக்கா அம்மையார்
UNION ஆட்சி என்ற பதத்தை பாவித்தபோது ஐக்கிய தேசியக் கட்சி
அத்திட்டத்தை பாராளுமன்றத்திலேயே எரித்தது. அந்த எதிர்ப்புக்கு மகி
ந்தவும் ஆதரவு நல்கினார். ஆனால் இன்று அமைச்சர் மங்கள சமரவீர
சொல்கின்றார், அத்திட்டத்தை எதிர்த்தது புலிகள்தான் என்று. புத்தர்
பெருமானின் பல்லுக்குக் கொடுக்கின்ற மரியாதையை அவருடைய சொல்லுக்கு
கொடுப்பதில்லை இவர்கள்.
சிறிலங்கா அரசானது சமாதானப் பேச்சுக்களை இழுத்தடித்து, ஒப்பந்தங்களை
மீறி, சமாதானத்தைச் சீர் குலைத்தது மட்டுமன்றி, இப்போது தமிழ் மக்கள்
மீது யுத்தம் ஒன்றையும் ஆரம்பித்து விட்டது. சிங்கள அரசு விரைவில் ஓர்
ஆப்பிழுத்த குரங்காக ஆவதற்கு முன்னால் மேற்குலகம் நடுநிலையோடு
இப்பிரச்சனையை தீர்க்க முன்வர வேண்டும். சிங்களப் பேரினவாத அரசுகளின்
இழி நிலைக்கு ஒப்பாக மேற்குலகமும் தரம் இறங்கிவிடக் கூடாது என்பதுதான்
எமது இன்றைய எதிர்பார்ப்பாகும்.! |