Selected Writings by Sanmugam
Sabesan,
சபேசன், அவுஸ்திரேலியா
போர்க்காலத்தின் போதுள்ள தெளிவும்,
சமாதானக்காலத்தின் போதுள்ள தெளிவின்மையும்
30 May 2006
சிறிலங்கா அரசானது
ஓர் இறைமையற்ற அரசு என்பதோடு மட்டுமல்லாது, ஜனநாயக மரபு அற்ற அரசு
என்பதையும் இன்று நிதர்சனமாகக் காணக் கூடியதாக உள்ளது. சிறிலங்கா
அரசின் இராணுவமும், அதனோடு சேர்ந்தியங்கும் தமிழ் ஒட்டுக்குழுக்களும்
தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீது வன்முறைகளை பிரயோகித்து வருவதனால் தமிழ்
மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளை விட்டு அகதிகளாக இடம்பெயரத்
தொடங்கியுள்ளார்கள். இப்படி அகதிகளாக இடம் பெயரத் தொடங்கியுள்ள தமிழ்
மக்களில் ஒரு பகுதியினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்
பகுதிகளுக்குள் செல்ல ஆரம்பித்துள்ளதாகவும், மறுபகுதியினர் கடல்
வழியாகத் தமிழ் நாடு செல்ல ஆரம்பித்துள்ளதாகவும் தினம் செய்திகள் வந்த
வண்ணம் இருக்கின்றன.
தமிழ் பொதுமக்கள் மீதான கொலைகளும், வன்முறைகளும் அரச கட்டுப்பாட்டுப்
பகுதிகளிலேயே தொடர்ந்தும் இடம்பெற்று வருவதானது சிறிலங்காவின் தற்போதைய
அரசின் உள்நோக்கத்தை வெட்ட வெளிச்சமாகக் காட்டி வருகின்றது.
சமாதானத்திற்கான காலம் என்று அழைக்கப்;பட்ட இந்தக் காலகட்டத்திலேயே
தமிழ்ப் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அந்த அரச
பயங்கரவாதச் செயல்கள் வேறு சில விடயங்களை வேறொரு தளத்தில் வைத்துத்
தர்க்கிப்பதற்கு விழைகின்றோம். இதன் மூலம் சிறிலங்கா அரசின் அடிப்படைக்
கோட்பாடுகள் சிலவற்றை புரிந்து கொள்வது இலகுவாக இருக்கும் என
நம்புகின்றோம்.
உலக வரலாற்றில் ஜனநாயக மரபுகளைப் புறம் தள்ளி ஆட்சி செய்து வருகின்ற
எத்தனையோ நாடுகள் உள்ளன. இந்த ஜனநாயக விரோத நாடுகள் காட்டிய
முன்னுதாரணங்கள் பலவற்றை பின்பற்றி வருகின்ற சிறிலங்கா அரசானது தன்
பங்கிற்குத் தானும் சில விடயங்களில் முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருவதை
நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். எடுத்துக்காட்டாக தமிழ்
ஒட்டுக்குழுக்களையும் ஆயுதம் தாங்கிய தமிழ் அரசியல்(?) கட்சிகளையும்
குறிப்பிடலாம்.
முன்பு ஆயுதம் தாங்கிப் போராடி தற்போது ஜனநாயக நீரோடையில் இணைந்து
கொண்டிருப்பதாக சொல்லி வருகி;ன்ற நுPனுPயின் திரு டக்ளஸ் தேவானந்தர்
சிறிலங்கா அரசின் அரசியல் வன்முறைகளுக்கும், இராணுவ வன்முறைகளுக்கும்
தொடர்ந்தும் துணை புரிந்தே வருகின்றார். தங்களிடம் ஆயுதங்கள் எதுவும்
இல்லை என்றும் ஆயுதங்களை கையளித்து விட்டோம் என்றும் நுPனுP
கூறிவருகின்ற போதிலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற
உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ரவிராஜ் போன்றவர்கள் மீதான
தாக்குதல்களுக்குப் பின்னால் நுPனுPயினரின் பங்களிப்பு இருந்ததை
நாடறியும். அத்தோடு சமீப்த்தில் அல்லைப்பிட்டியில் நடைபெற்ற
கோரக்கொலைகளுக் அப்பால் எந்த ஜனநாயகக் கட்சி இருந்தது என்பதையும்
மக்கள் அறிவார்கள். இவர்களும் மற்றைய தமிழ் ஒட்டுக்குழுக்களும் ஜனநாயக
விரோத சக்திகளுக்கு ஆதரவு அளித்ததோடு மட்டுமல்லாது, அவர்களுக்கு
அங்கீகாரத்தையும் சிறிலங்கா அளித்து அவர்களை ஜனநாயக மரபுகளுக்கு எதிரான
செயற்பாடுகளில் ஈடுபடுத்தி வருவது இன்று வெளிப்படையான விடயமாகும்.
உலகநாடுகளில் எந்த ஒரு நாடும் இவ்வாறு நடந்து கொண்டதில்லை. ஆட்;சியில்
இருக்கும் அரசானது ஆயுதம் தாங்கி நிற்கின்ற கட்சிகளைத் தன்னோடு
சேர்த்து வைத்துக் கொண்டு அவற்றைக் கொண்டு தன்னுடைய மக்களைக் கொலை
செய்வதுமில்லை. இந்த ஆயுதம் தாங்கிய அரசியல் கட்சிகளைத் தன்னோடு
சேர்த்து வைத்திருக்கின்ற சிறிலங்கா அரசு இவைகளைத் தன்னுடைய
கூலிப்படைகளாக உபயோகித்து தமிழ் மக்களையும் சமாதானத்தையும் ஒருங்கு
சேரக் கொன்று குவித்து வருகின்றது. இப்படிப்பட்ட செயல்களின் மூலம்
சிறிலங்கா அரசானது ஜனநாயக விரோத நாடுகள் பலவிற்கு இன்று முன்னுதாரணமாக
இருந்து வருகின்றது. சரியாக சொல்லப்போனால் இன்று ஜனநாயகத்திற்கு
விரோதமாகச் செயல்படுகின்ற சில உலக நாடுகள் இந்த விடயத்தில்
சிறிலங்காவிடம் இருந்து பல யுக்திகளை கற்றுக் கொள்ளலாம் என்றுதான்
சொல்வேண்டும்.
இன்னுமொரு விடயத்திலும் சிறிலங்கா அரசியல் முன்னிற்கின்றது.
பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற தினத்திலிருந்து இன்றுவரை
நாட்டை ஆண்டுவந்த சிங்கள அரசுகள் பலவும் நாட்டை அவசர காலச்
சட்டத்தினூடுதான் ஆண்டு வந்திருக்கின்றன. தொடர்ச்சியாகப் பலஆண்டுகள்
அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இருந்தும் வந்திருக்கின்றது. தமிழ்
மக்களின் உரிமைப் போராட்டங்களை நசுக்குவதற்காகவே இந்த அவசர காலச்சட்டம்
உபயோகப்படுத்தப்பட்டு வந்திருக்க்pன்றது. இந்த அவசரகாலத்
தடைச்சட்டங்களைப் பயன்படுத்தித்தான் தமிழ் மக்களை சிறிலங்கா அரசுகள்
ஒடுக்கியும் கொன்று குவித்தும் வந்துள்ளன. இப்போது ஆயுதம் தாங்கிய
தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழ் ஒட்டுக்குழுக்களும் சிறிலங்கா அரசின்
கூலிப்படைகளாக செயல்பட்டு தமிழ் மக்களையும், ஜனநாயக மரபுகளையும் கொன்று
குவித்து வருகின்றார்கள்.
அத்தோடு மட்டுமல்லாது இன்னுமொரு வெளிப்படையான உண்மையையும் நாம் இந்த
வேளையில் இணைத்து சிந்திக்க வேண்டும். அன்றிலிருந்து இன்றுவரை நடைபெற்ற
எந்த ஒரு சமாதானப்பேச்சுக்களும் தமிழ் மக்களுக்குக்குரிய நியாயமான
உரிமைகளையும், சமாதானத்தையும் பெற்றுத் தரவில்லை. பண்டா-செல்வா
ஒப்பந்தம், ட்டலி-செல்வா ஒப்பந்தம் போன்றவை பயனற்று போயின. எந்த
ஒப்பந்தங்களையும் புரிந்துணர்வுகளையும் சிறிலங்கா அரசுகள் முறையாக
அமலாக்க முன்வந்ததேயில்லை. தமிழர்கள் தரப்பு பலவீனமாக இருந்தபோதும்
சரி, அல்லது பலமாக இருக்கின்ற போதிலும் சரி, எந்த சமாதானப்பேச்சு
வார்த்தைகளும் முழுமையாக வெற்றி பெறவேயில்லை.
தவிரவும் எந்தவிதமான உருப்படியான தீர்வுத்திட்டம் ஒன்றையும் சிறிலலங்கா
அரசு முன் வைக்கவில்லை. அண்மைக் காலத்தில் தமிழ் மக்களின் சார்பில்
தமிழீழ விடுதலைப்புலிகள் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார
சபைக்குரிய ஆலோசனைத் திட்டத்தைக் கூட சிறிலங்கா அரசு பொருட்
படுத்தவில்லை. ஆழிப்பேரலை அனர்த்தங்களை நேர்கொள்ளும் வகையில் ஏற்றுக்
கொள்ளப்பட்ட பொதுக்கட்டமைப்பு ஒப்பந்தத்தைக்கூட சிறிலங்காவின்
நீதித்துறை தூக்கி எறிந்து விட்டது.
துஏP என்கின்ற இனவாதக் கட்சியானது இரண்டு தடவைகள் ஆயுதம் தாங்கிப்
போராட முற்பட்டு தோற்கடிக்கப்பட்ட பின்னர் தமது இயலாமை காரணமாக இன்று
ஜனநாயகச் சாயத்தை பூசிக் கொண்டு தமிழீழ மக்களின் உரிமைக்கு எதிராகப்
பேசிக்கொண்டு திரிகின்றது. துஏP கட்சியானது தங்களின் சொந்த நலன்
சார்ந்தும,; சிங்கள பௌத்தப் பேரினவாத நலன் சார்ந்தும் செயற்பட்டு
வருகின்றது. ஆயுதத்தை கைவிட்டு விட்டதாகச் சொல்கின்ற துஏPயினர்
அடிப்படையில் தமிழர்கள் மீது இராணுவ தீர்வு ஒன்றினைத்தான் திணிக்க
முயல்கின்றார்கள். கோட்பாடு ரீதியாக உள்ள இந்த முரண்பாட்டை நாம்
அறிந்து கொள்ள வேண்டும்.
அதாவது சிறிலங்கா அரசும் அதன் ஆதரவுக் கட்சிகளும் தம்pழ் மக்களின்
நியாயமான உரிமைகளை மறுதலித்து நிற்கின்றன. அவசரகாரலச் சட்டத்தின் ஊடாக
ஜனநாயக மரபுகளை இவை மீறுகின்றன. முன்னர் ஏற்றுக் கொள்ளப்பட்ட எந்த
உடன்படிக்கைகளையும் ஏற்றுக் கொள்ளவில்லை முன்னர் நடைபெற்ற எந்த
சமாதானப்பேச்சு வார்த்தைகள் ஊடாகவும் எந்த சிறிலங்கா அரசும்
தமிழர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முயலவில்லை. இவ்வாறு ஜனநாயக
மரபுகளுக்கு எதிராக இயங்கிக் கொண்டிருக்கின்ற அரசு தற்போதைய
சமாதானத்தி;ற்கான காலத்திலும் கூட தனது இராணுவத்தின் மூலமும் தனது
ஆதரவில் இயங்குகின்ற தமிழ் ஒட்டுக்குழுக்களின் மூலம் அப்பாவித் தமிழ்
பொதுமக்களைத் தொடர்ந்தும் கொன்று குவித்து வருகின்றது.
இந்த அரசைப் பார்த்துத்தான் சில உலககநாடுகள் சொல்கின்றன. ஜனநாயக
விழுமியங்களைப் பேணுகின்ற அரசு என்று! அப்படியானால் சிறிலங்;கா
அரசிற்கும் இந்த உலக நாடுகளுக்கும் என்னதான் வித்தியாசம் உள்ளது.
அன்றிலிருந்து இன்றுவரை ஐம்பது ஆண்டு காலத்திற்கும் மேலாக ஓர் இனத்தை
அடக்கி, ஒடுக்கி, அழித்து வருகின்;ற ஓர் அரசை தொடர்ந்தும் ஜனநாயக
விழுமியங்களையும், அதன் மரபுகளையும் மிதித்து வருகின்ற ஒரு அரசை
தன்னுடைய அதிகாரத்தின் கீழ் வாழுகின்ற ஓர் இனத்து மக்களை தனது அரச
பயங்காரவாதத்தால் கொன்று குவித்து வருகி;ற ஓர் அரசை ஐம்பது ஆண்டு
காலத்திற்கும் மேலாக ஓர் உருப்படியான சமாதானத் தீர்வை முன்வைக்கவோ
அமலாக்கவோ முடியாத ஒரு நாட்டின் அரசை சில உலகநாடுகள் கைதட்டிப்
பாராட்டுகின்றன. �இதோ பாருங்கள் ஓர் உயர் ஜனநாயகநாட்டின் அரசை! இதோ
பாருங்கள் மனித உரிமைகளைக் காக்கின்ற அரசை� என்று.
இந்த உலகநாடுகளா தமிழ் மக்களுக்கு நியாயமான உரிமைக்கு வழி சமைக்க
போகின்றன?. இந்த உலக நாடுகள் தமிழ் மக்களுக்கு சமாதான வழியில் தீர்வு
ஒன்றைத் தருவதற்கு உதவப் போகின்றன? தினமும் வருத்தப்பட்டுப் பாரம்
சுமப்பவனுக்கு இளைப்பாறுதல் தராமல் அவன் கழுத்தையும் நசிக்கின்ற
காரியத்தைச் செய்ய முனைகின்ற இந்த உலக நாடுகளா தமிழ் மக்களுக்கு
உரிமையையும், சமாதானத்தையும் பெற்றுத் தரப்போகின்றன?
இந்த சில உலக நாடுகளுக்கும் ஜனநாயகத்தின் விழுமியங்களைக் குழி தோண்டிப்
புதைத்து வரும் சிறிலங்கா அரசுகளுக்கும் என்னதான் வித்தியாசம்.?
அன்புக்குரிய வாசகர்களே!
கடந்த நான்கு ஆண்டு காலத்தி;ற்கும் மேற்பட்ட போர்நிறுத்தத்தால்
தமிழர்கள் உரிய நன்மையைப் பெறவில்லை என்பதே உண்மையாகும் இதனால்
நன்மையைப் பெற்றது சிங்கள தேசம்தான். இந்த நன்மையைப் பெற்றதனால் இன்று
சிங்;கள தேசம் முறுக்கு கொண்டு எழுந்துள்ளது. அதனால் தமிழருக்கு எதிராக
போர்க்கோலம் பூண்டு நிற்கின்றது.
சமீபத்திய சமாதானப் பேச்சு வார்த்தைகளில் உலக நாடுகள் அக்கறை காட்டி
வந்தன் காரணமாக மேற்குலம் தமக்கு நீதியையும், நன்மையையும் பெற்றுத்
தரும் என்று தமிழீழ மக்கள் நம்பினார்கள். புலம் பெயர்ந்த தமிழீழ
மக்களும் நம்பினார்கள். ஆனால் சம்பந்தப்பட்ட சில உலக நாடுக்ளின்
நடுநிலை பிறழ்ந்த நடவடிக்கைகள் தமிழீழ மக்களினதும், புலம் பெயர்ந்த
தமிழீழ மக்களினதும் நியாயமான நம்பிக்கையைக் கலைத்து விட்டன. இன்று
சிங்கள அரசு மேற்கொண்டு வருகி;ன்ற சமாதான விரோதச் செயற்பாடுகளுக்கும்
மனித உரிமை மீறல்களுக்கும் சம்பந்தப்பட்ட உலக நாடுகள் தார்மீக பொறுப்பை
ஏற்க வேண்டும்.
நாம் ஒரு கருத்தை பல ஆண்டுகளாக தர்க்கித்து வந்துள்ளோம்.
சமாதானப்பேச்சு வார்த்தைகள் முறையாக நடைபெற்று, பேச்சு வார்த்தைகள் ஒரு
கட்டத்திற்கு நகர்ந்து சென்றால் அப்போது பொருத்தமற்ற தீர்வுத்திட்டம்
ஒன்றை அதாவது தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்க்காத தீர்வுத் திட்டம்
ஒன்றை சம்பந்தப்பட்ட உலகநாடுகள் சில தமிழர்கள் மீது திணிக்கக் கூடும்
என்ற நாம் ஐயப்பட்டு வந்துள்ளோம். இப்படிப் பொருத்தமற்ற
தீர்வுத்திட்டத்தை பின்னாளில் திணிப்பதற்காக தேவையற்ற அழுத்தங்களையும்,
தடைகளையும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது இந்த உலகநாடுகள் முன்னதாகப்
பிரயோகிக்க கூடும் என்றும் நாம் தொடந்தும் தர்க்கித்து வந்துள்ளோம்.
இப்போது நடைபெறுகின்ற விடயங்கள் எமது ஐயப்பாட்டை உறுதி செய்வதாகவே
உள்ளன.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது அநாவசியமாக
பிரயோகிக்கப்படும் அழுத்தங்களும், தடைகளும் உண்மையில் தமிழ் மக்களை
குறி வைத்துத்தான் பிரயோகிக்கப்டுகின்றன என்பதில் சந்தேகமில்லை. தமிழ்
மக்களின் சுதந்திர வேட்கையையும் அவர்களது நீதிக்கான குரலையும்
அழிப்பதற்கான ஆயுதமாகத்தான் நாம் இதனைக் கருத வேண்டும். சமாதானக்
காலத்தில் இயல்பான வாழ்க்கையையும் உரிய நிர்வாக அமைப்பையும் கொண்டு
வருவதற்காக விடுதலைப் புலிகள் சமர்ப்பித்த இடைக்காலத் தன்னாட்சி சபை
வரைவை (ஐளுபுயு) சிpறிலங்கா அரசு புறம் தள்ளியபோது சம்பந்தப்பட்ட இந்த
உலக நாடுகள் சிறிலங்கா அரசு மீது பொருளாதாரத் தடைகளை வித்pத்திருக்க
வேண்டும.. ஆனால் விதிக்கவில்லை. ஆழிப்பேரலை அனர்த்தங்களை
நேர்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட பொதுக்கட்டமைப்பை சிறிலங்காவின்
நீதித்துறை தூக்கி எறிந்தபோதாவது இந்த உலகநாடுகள் சிpறிலங்கா அரசின்
மீது பொருளாதாரத் தடைகளையும் அரசியல் அழுத்தங்களையும் விதித்திருக்க
வேண்டும். அப்போதும் விதிக்கவில்லை. ஆனால் ஒருதலைப் பட்சமாக தமிழ்
மக்கள் மீது மட்டும் தடைகளையும் அழுத்தங்களையும் உலகநாடுகள்
மேற்கொள்வதானது நடுநிலையாகாது. நீதியுமாகாது.!!
இங்கே நீதியையும், நியாயத்தையும் உரிமையையும் வேண்டி நிற்பவர்கள்
தமிழர்களா? அல்லது சிங்களவர்களா?
சம்பந்தப்பட்ட இந்த உலகநாடுகள் தம்முடைய பொருளாதார நலன் சார்ந்து
தம்முடைய பிராந்திய நலன் சார்ந்து தம்முடைய அரசியல் நலன் சார்ந்து
தம்முடைய ஜனநாயக கொள்கைகளுக்கு எதிராக இவ்வாறான செய்கைகளை
மேற்கொள்வதானது முன்னரும் நடைபெற்று வந்திருப்பதை வரலாறும்
சுட்டிக்காட்டும்.
ஆயினும் இங்கே ஒரு முக்கியமான விடயத்தை முக்கியமான வித்தியாசத்தை நாம்
காணலாம். அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா பிரித்தானியா மற்றும்
ஐரோப்பிய நாடுகள் போன்றவற்றில் தமது மக்கள் தங்களது எண்ணங்களை விருப்பு
வெறுப்புக்களை ஜனநாயக வழியில் வெளிப்படுத்துவதற்கு இந்த உலக நாடுகள்
வழி சமைத்துக் கொடுக்கின்றன. அது மட்டுமல்லாது தமது மக்களின் அறவழிப்
போராட்டங்களுக்கு இணங்கியும் போகின்றன. வியட்நாமில் நடைபெற்ற போருக்கு
எதிராக அமெரிக்கப் பொதுமக்கள் நடாத்திய ஜனநாயக வழிப் போராட்டம்
இறுதியில் வெற்றி பெற்றது. இந்த மேற்குலக நாடுகள் யாவும் தமது
குடிமக்களின் குரலை நசுக்க முற்படுவதில்லை. தமது குடிமக்களின்
வேட்கைகளை எண்ணங்களைத் தடைபோட்டு அழிக்க முற்படுவதில்லை.
ஆனால் சிறிலங்காவின் அரசுகளோ தமது குடிமக்களின் ஜனநாயக
வழிப்பேராட்டங்களுக்கு என்றும் மதிப்பு அளித்ததில்லை. மாறாக தமிழ்
மக்களின் சகல அறவழிப் போராட்டங்களையும் சத்தியாக்கிரகப்
போராட்டங்களையும் சிறிலங்காவின் அரச வன்முறையூடாக அழிக்க முனைந்தது.
அங்கே சிறிலங்காவில் ஜனநாயக வழிப்போராட்டங்களுக்கு அதன் அரசுகள்
சாவுமணி அடித்தன. அதனால் போராட்டம் போராகியது.
ஆனால் சம்பந்தப்பட்ட இந்த உலகநாடுகள் தம்முடைய மக்கள் ஜனநாயகரீதியில்
எழுப்புகின்ற குரலை வன்முறை கொண்டு தடுப்பதில்லை. மாறாக தம்முடைய
குடிமக்கள் தங்களுடைய கருத்துக்களை வெளியிடுவதற்கு வசதியும் செய்து
தருகின்றார்கள். கருத்து முரண்பாடு, கொள்கை முரண்பாடு போன்றவை இந்த
உலகநாடுகளின் அரசுகளுக்கும் அதன் மக்களுக்கும் இடையே இருந்தாலும் தமது
மக்களுக்குரிய ஜனநாயக உரிமைகளை இந்த அரசுகள் தடைசெய்வதில்லை. அதேபோல்
இந்த நாட்டு மக்களும் தம்முடைய ஜனநாயக உரிமைகளைப் பிரயோகிக்கத்
தயங்குவதில்லை.
அந்தவகையில் புலம் பெயர்ந்த தமிழீழ மக்கள் தாம் தற்போது வாழுகின்;ற
நாடுகளின் ஜனநாயக மரபுகளைக் கைக்கொண்டு தமது கருத்துக்களையும்
எண்ணங்களையும் உள்ளக் கிடக்கைகளையும் உலகி;;ற்கு புரிய வைப்பது
பொருத்தமானதாகும். சிறிலங்கா அரசின் பயங்கரவாத நடவடிக்கைகளையும் சமாதான
விரோதச் செயற்படுகளையும் இந்த உலக நாடுகள் கண்டும் காணாதது போல்
இருப்பதனை நாம் எமக்குரிய ஜனநாயக உரிமைகளின் ஊடாக கண்டிக்க வேண்டும்.
அதற்கிணங்க இன்றைய காலகட்டத்தில் புலம் பெயர்ந்த தமிழீழ மக்;;;கள்
விழிப்பு உணர்வுக் கூட்டங்களையும் உண்ணா விரதப் போராட்டங்களையும்,
ஆர்ப்பாட்ட ஊர்வலங்களையும் ஆரம்பித்திருப்பது ஜனநாயக மரபுகளை
காப்பாற்றும் செயலாகும்.
இந்த வேளையில் புலம் பெயர்ந்த தமிழீழ மக்களாகிய நாம் எம்மை நாமே
சுயவிமர்சனம் செய்து கொண்டேயாக வேண்டும். புலம்பெயர்ந்த தமிழீழ
மக்களாகிய நாம் போர்க்காலங்களின் போது மிகத்தெளிவாகவும், சமாதானக்
காலத்தின் போது தெளிவில்லாமல் இருப்பதையும் நாம் ஒப்புக் கொண்டே யாக
வேண்டும். மாறிமாறி அதிகாரத்திற்கு வந்த சிறிலங்கா அரசுகள் ஒரு
சமாதானத் தீர்வையும் தரவில்லை என்பதை எமது பட்டறிவு சொல்லும். ஆயினும்
ஒவ்வொரு தடவையும் புதிதாக ஒரு சமாதான முயற்சி உருவாகும் போது அதன்மீது
முழுமையாக நம்பிக்கை வைத்து ஈற்றில் மனம் குலைந்து அங்கலாப்பது எமது
வழக்கமாகி; விட்டது. சிங்கள அரசுகளின் சமாதான விரோதப் போக்கு குறித்து
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன்
அவர்கள் கீழ்வருமாறு தெட்டத் தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.
�முடிவில்லாத ஒரு துன்பியல் நாடகமாக தமிழரின் இனப்பிரச்சனை
தொடர்கின்றது. இலங்கையில் மாறிமாறி ஆட்சிப் பீடம் ஏறும் இரண்டு சிங்கள
பெரும் அரசியல் கட்சிகளுமே தமிழர்களுக்கு விரோதமான இந்த நாடகத்தின்
இயக்குனர்கள். . . . இந்த சிங்கள வரலாற்று நாடகம் தொடர்ச்சியாக ஒரே
பாணியி;ல் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக மேடையேறி வருகின்றது.
இந்த இனவாத நாடகத்தின் கதாநாயகர்கள் காலத்தி;ற்குக் காலம் மாறிய போதும்
கதையின் கருப்பொருள் மாறவேயில்லை. . . .�
புரிந்துணர்வு ஒப்பந்தம்; கைச்சாத்திடப்பட்ட பி;ன்னர் சிறிலங்கா
அரசுகளின் சமாதானத்திற்கான நேர்மை குறித்து எமது ஐயத்தைத் தொடர்ந்தும்
நாம் தர்க்கித்து வந்திருந்தபோதும் எமது கருத்துக்கள் பரவலாக ஏற்றுக்
கொள்ளப்படாமல் போனதோடு விமர்சனங்களுக்கும் உள்ளானது. எனினும் அன்றைய
நெருக்கடியான காலகட்டத்தை நாம் ஓர் அரிய வாய்ப்பாகவே கருதுகின்றோம்.
எமது போராட்டம் கூர்மை அடைவதற்கு இன்றைய நெருக்கடிகள்தான் எமக்கு
உதவப்போகின்றன. இன்று புலம்பெயர்ந்து வாழுகின்ற நாங்கள் உணர்வால்,
மொழியால், தேசியத்தால் ஒன்றுபட்டு ஒரு தலையின் கீழ் ஒருங்கிணைந்து எமது
எண்ணங்களையும் எழுச்சிகளையும் உரத்து சொல்லுவோம். ஆயிரம் அழுத்தங்கள்
வந்தாலும் ஆயிரம் தடைகள் போடப்பட்டாலும் நாம் நீதியின் பால்
நியாயத்தின்பால் நின்று போராடுவோம். எமது இந்த ஒருங்கிணைப்பானது
தூங்குவதைப்போல் நடிப்பவர்களையும் எழுப்பச் செய்யும்.
எம்முடைய இந்த ஒருங்கிணைப்பானது நாம் கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தி
வருகி;ன்ற செயற்பாட்டுத் தேவை ஒன்றை முடுக்கி விடட்டும். தமிழீழ
மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரத்தைக் கோரி புலம் பெயர்ந்த
தமிழீழத்தவர்கள் தமது செயற்பாடுகளைத் தீவிரமாக முன்னெடுக்க வேண்டிய
காலமும் இதுதான்.! |