Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan > சர்வதேச ஊடகவியலாளர் மகாநாடும், சுயநிர்ணய உரிமையும்

Selected Writings by Sanmugam Sabesan,  
சபேசன், அவுஸ்திரேலியா

சர்வதேச ஊடகவியலாளர் மகாநாடும்,
சுயநிர்ணய உரிமையும்
[together with English Translation]

10 April 2006

தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனைக்குரிய அரசியல் தீர்வானது சுயநிர்ணய உரிமையின் அடிப்படையின் ஊடாக காணப்பட வேண்டும் என்கின்ற கருத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளது.

 கடந்த நான்கு ஆண்டு காலத்திற்கும் மேலாக நிலவி வருகின்ற சமாதானத்திற்கான(!) காலப்பகுதியில் சிங்கள அரசுகள் தமிழ் மக்களுக்கான அடிப்படை வாழ்வியல் தேவைகளைக் கூடத்தர மறுத்து வருகின்ற வேளையில் எதிர்காலத்தில் தமிழீழ மக்கள் தம்முடைய சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிக்க வேண்டிய அவசியம் வரக்கூடும் என்று நாம் கருதுகின்றோம்.

தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு குறித்துக் கடந்த பல ஆண்டுகளாக நாம் தொடர்ந்தும் தர்க்கித்து வருவதை வாசகர்கள் அறிவீர்கள். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் சர்வதேச ஊடகவியலாளர் மகாநாடு ஒன்றை நடாத்தி இந்த ஏப்பிரல் மாதம் (2006) பத்தாம் திகதியன்று நான்கு ஆண்டுகள் ஆகின்ற இவ்வேளையில் சுயநிர்ணய உரிமை குறித்த சில அடிப்படையான கருத்துக்களை தர்க்கிப்பது பொருத்தமானதாக இருக்கும் என்றும் நாம் கருதுகின்றோம்.

சிங்கள அரசுகளின் ஐம்பது ஆண்டு காலத்திற்கும் மேற்பட்ட அடக்குமுறை ஆட்சிகளாலும் அந்த ஆட்சிகள் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட இரண்டு தசாப்த காலப்போர்களினாலும் சிங்கள அரசுகள் விதித்திருந்த பொருளாதார, உணவு, மருந்து, போக்குவரத்து தடைகளினாலும் மிகுந்த இன்னல் மிக்க வாழ்வினை மேற்கொண்டிருக்கும் தமிழ் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டியதற்கான அவசியத்தை அவசரத்தை தேசியத் தலைவர் அன்றைய தினம் மிக வலியுறுத்திக் கூறியிருந்தார். அத்தோடு இன்னுமொரு மிக முக்கியமான கருத்தும் அன்றைய தினம் தெரிவிக்கப் பட்டது. �தமிழீழ மக்கள் தமது அரசியல் பொருளாதார வாழ்வைத் தாமே தீர்மானிக்கும் உரிமை கொண்டவர்கள்� என்ற கோட்பாடு அன்றைய தினம் மிகத் தெளிவாக சொல்லப்பட்டது.

தமிழீழ மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன் மட்டுமல்லாது தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனைக்கு உரிய தீர்வு குறித்தும் அன்றைய தினம் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்திருந்த பல நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்களில் மிகப்பெரும்பான்மையோர் தமிழ் மக்கள் இதுவரை காலமும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாகப் பட்ட இன்னல்கள் குறித்து ஒரு கேள்விதனையும் கேட்க முயலவில்லை.

சிங்கள அரசுகள் தமிழ் மக்கள் மீத விதித்திருந்த உணவு, மருந்து, பொருளாதாரத் தடைகள் காரணமாக ஏற்பட்டிருக்கின்ற அவலங்கள் குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்பவில்லை. தமிழ் மக்களுடைய அடிப்படை அத்தியாவசிய தேவைகள் எவ்வாறு பூர்த்தி செய்யப்படும் என்பது குறித்தோ தமிழ் மக்களுக்கு உரிய புனருத்தாரண, புனர் நிர்மாணச் செயற்பாடுகள் குறித்தோ அவர்களுடைய அடிப்படை உரிமைகள் எவ்வாறு வென்றெடுக்கப்படும் என்பது குறித்தோ எந்தவிதமான கேள்விகளையும் இந்தச் சர்வதேச ஊடகவியலாளர்கள் கேட்க முன்வரவில்லை.

அவர்கள் அன்றைய தினம் மீண்டும் மீண்டும் கேட்ட கேள்விகள்தான் என்ன? தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டீர்களா? தற்கொலைத் தாக்குதல்கள் மீண்டும் நடக்குமா? என்பவை போன்ற கேள்விகள்தான் கேட்கப்பட்டன.

மேலும் பலர் குதர்க்கமான விசமத்தனமான கேள்விகளை மட்டுமே கேட்க முனைந்தனர். இந்த வேளையில்தான் முக்கியமான கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனையைத் தீர்க்க கூடியதாகக் கருதப்படும் சுயநிர்ணய உரிமை குறித்து விளக்குமாறு ஒரு கேள்வி தமிழில் கேட்கப்பட்டது. பேரினவாத ஊடகவியலாளர்கள் மட்டுமன்றி, மேற்கத்தைய ஊடகவியலாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அக்கேள்விக்குரிய பதிலை ஆங்கிலத்தில் கொடுக்கும்படி தமழீழத் தேசியத்தலைவர் அவர்கள் மதியுரைஞர் திரு அன்ரன் பாலசிங்கம் அவர்களை கேட்டுக் கொண்டார். சுயநிர்ணய உரிமை குறித்த தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனையின் வடிவத்தை மதியுரைஞர் திரு அன்ரன் பாலசிங்கம் அன்று ஆங்கிலத்தில் தெளிவுபடுத்தினார்.

�பாரம்பரிய பூமியையும் தனித்துவமான மொழியையும் பண்பாட்டையும் கொண்டுள்ள எமது மக்கள் ஒரு தேசிய இனத்தவர்கள் ஆவார்கள். அந்த தேசிய இனத்தவர்கள் தமது அரசியல் பொருளாதார வாழ்வை தாமே தீர்மானிக்கும் உரிமை கொண்டவர்கள் அந்த உரிமைக் கோட்பாடுதான் சயநிர்ணய உரிமையாகும். அது உள்ளான சுயநிர்ணயம், புறம்பான சுயநிர்ணயம் என்ற இரண்டு அம்சங்களை கொண்டதாகும். உள்ளான சுயநிர்ணயம் என்பதானது ஒரு மக்கள் சமூகம் தமது பிரதேசத்தை தாமே சுயமாக ஆட்சிசெய்யும் உரிமையைக் கொண்டதாகும். புறமான சுயநிர்ணயம் என்பதானது பிரிந்து சென்று தனி அரசை அமைக்கும் உரிமையை கொண்டதாகும்.�

-இவ்வாறு சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு பற்றித் தெளிவு படுத்திய திரு பாலசிங்கம் அவர்கள் அதைத் தொடர்ந்து சுயநிர்ணய உரிமையையும் தமிழீழ மக்களையும் இணைத்து மிக முக்கியமான விடயத்தைச் சொல்லியிருந்தார் அதனைக் கருத்தில் கொள்ளுமாறு எமது வாசகர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

அந்தக் கருத்து வருமாறு:-

தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றின் அடிப்படையில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையானது அங்கீகரிக்கப் படவேண்டும். இச்சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படாமல் போனல் நாம் பிரிந்து சென்று தனியரசை அமைக்க வேண்டும்.

அன்புக்குரிய வாசகர்களே!

தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமை பற்றிய கருத்து 2002ம் ஆண்டு சர்வதேச ஊடகவியலாளர் மகாநாட்டின் போதுதான் முதல்முதலாக தெரிவிக்கப்பட்ட கருத்து அல்ல! தமிழீழத் தேசியத் தலைவர் இந்தக் கருத்தைப் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடர்ந்தும் தெரிவித்தும் வலயுறுத்தியும் வந்துள்ளார். சுமார் பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான்காம் திகதியன்று தேசியத்தலைவர் அவர்கள் யாழ்ப்பாணத்தில் சுதுமலை என்ற இடத்தில் முதல்முதலாக தமிழீழ மக்கள் முன் ஆற்றிய பகிரங்க உரையின் போதும் சுயநிர்ணய உரிமை குறித்தும் பேசியிருந்தார் வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்தஉரை சுதுமலைப்பிரகடனம் என்று பின்னாளில் பெயர்பெற்றது.

அன்றைய தினம் தேசியத்தலைவர் சுதுமலையில் பேசும்போது இந்திய இலங்கை ஒப்பந்தம் தமிழ்மக்களுக்கு உரிமை எதனையும் பெற்றுத் தராது என்றும் இந்த ஒப்பந்தத்தை தாம் ஏற்கவில்லை என்றும் தெரிவித்ததோடு இன்னுமொரு முக்கியமான கருத்தையும் தெவரிவித்திருந்தார்.

அதுவருமாறு:-

இந்தியாவின் கேந்திரச் செல்வாக்கானது தமிழ் மக்களின் சுயநிர்ணய போராட்டத்தோடு உரசுகின்றது.

-என்று சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு குறித்து சுமார் பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னரேயே தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

அது மட்டுமல்லாது தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் சுயநிர்ணய உரிமையின் முக்கியத்துவம் குறித்து தன்னுடைய மாவீரர் தினப்பேருரைகளின் போதும் தொடர்ந்தும் குறிப்பிட்டு வந்துள்ளார். சர்வதேச ஊடகவியலாளர் மகாநாடு நடைபெற்ற அதே ஆண்டின் மாவீரர் தினப் பேருரையின் போதும் அதாவது 2002ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம்திகதியன்றும் தமிழீழத் தேசியத் தலைவர் சுயநிர்ணய உரிமை குறித்தும் பேசியிருந்தார். சர்வதேச ஊடகவியலாளர் மகாநாட்டின்போது சுயநிர்ணய உரிமை குறித்தத் தெரிவிக்கப்பட்ட கருத்தை மீள்உறுதி செய்யும் வகையிலேயே தன்னுடைய 2002ம் ஆண்டு மாவீரர் தினப் பேருரையின் போது சுயநிர்ணய உரிமை குறித்துத் தலைவர் குறிப்பிட்டிருந்தார்.

தேசியத் தலைவர் கீழ்வருமாறு குறிப்பட்டிருந்தார்.

தமிழ் மக்கள் தமது சொந்த மண்ணில், வரலாற்று ரீதியாக வாழ்ந்து வந்த பாரம்பரிய மண்ணில், அந்நிய சக்திகளின் தலையீடு, ஆதிக்கம் இன்றி சுதந்திரமாக கௌரவமாக வாழ விரும்புகின்றார்கள். தமது மொழியை வளர்த்து, தமது பண்பாட்டைப் பேணி, தமது பொருளாதாரத்தை மேம்படுத்தி தமது இன அடையாளத்தை பாதுகாத்து வாழ விரும்புகின்றார்கள். தமது தாயக மண்ணில் தம்மைத்தாமே ஆளம் சுயாட்சி உரிமையோடு வாழ விரும்புகின்றர்கள். இதுவே எமது மக்களின் வேட்கையாகும். உள்ளான சுயநிர்ணயத்தின் அர்த்த பரிமாணம் இதில்தான் அடங்கியுள்ளது. . . . . (இது) மறுக்கப்பட்டால் நாம் பிரிந்து சென்று தனியரசு அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் தினப் பேருரைகளைத் தவறாது கூர்மையாக கவனித்து வருபவர்கள் அவர் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு குறித்துத் தொடர்ந்தும் பேசி வருவதை உணர்வார்கள். பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற சுதுமலைப் பிரகடனத்தின் போதும் சரி, நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சர்வதேச ஊடகவியலாளர் மகாநாட்டின் போதும் சரி மாவீரர் தினப் பேருரைகளின் போதும் சரி தமிழீழத் தேசியத் தலைவர் சுயநிர்ணய உரிமை குறித்து வலியுறுத்தியே வந்திருக்கின்றார்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் மீண்டும் மீண்டும் தமிழரின் சுயநிர்ணய உரிமை குறித்து வலியுறுத்தி வருவதன் முக்கியத்துவத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அடுக்கடுக்கான இராணுவ நகர்வுகள் மூலம், அலை அலையாக பல வெற்றிகளை அடைந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவப்பலத்தின் உச்சியில் இருக்கின்ற போதிலும் அரசியல் தீர்வு ஒன்றினூடாக ஈழத் தமிழரின் தேசியப் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்று விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் மனப்பூர்வமாக விரும்புகின்றது.

அதன் காரணமாகத்தான் கடந்த நான்கு ஆண்டு காலப்பகுதியில் மிகுந்த நெகிழ்ச்சிப் போக்கினை கடைப்பிடித்து நிதானமாகவும், அவதானமாகவும் விடுதலைப்புலிகள் இயக்கம் செயற்பட்டு வருகின்றது. சமாதானப்பேச்சு வார்த்தைகள் மீண்டும் ஆரம்பமாக வேண்டுமென்றால் யுத்த நிறுத்த உடன்படிக்கையின் முறையான அமலாக்கம் குறித்தே பேச வேண்டும் என்று விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்ததன் காரணமும் சமாதானப் பேச்சுக்களின் ஊடாக தீர்வுக்கு வாய்ப்பினை வழங்க வேண்டும் என்கின்ற அவர்களின் விருப்பம்தான்.!

சமாதானப் பேச்சு வார்த்தைகள் ஊடாக வரக்கூடிய நீதியான, நியாயமான தீர்வின் படி தமிழ் மக்கள் தமது தாயக மண்ணில் தம்மைத்தாமே ஆளக்கூடிய சுயாட்சி உரிமையைப்பெற கூடியதாக இருக்க வேண்டும். உள்ளான சுயநிர்ணய உரிமையின் இந்த அர்த்த பரிமாணத்தின் பிரகாரம் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு கிட்ட வேண்டும். இல்லாவிட்டால் இந்தச் சமாதானப் பேச்சு வார்த்தைகள் மூலம் தமிழர்களுடைய தேசியப் பிரச்சனைக்கு உரிய தீர்வு எதுவும் வரப்போவதில்லை.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் இராணுவ ரீதியான பலத்தைப் பெற்றுள்ள அதே வேளையில் அரசியல் ரீதியாகவும் பலமுற்று விளங்ககுகின்றது. �விடுதலைப்புலிகளே தமிழீழ மக்களின் ஏகப்பிரதிநிதிகள்� என்றும், சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் எமது வாழ்வை நாமே தீர்மானிப்போம் என்றும் தமிழ் மக்கள் அரசியல் ரீதியாகப் பொதுத் தேர்தல் ஊடாகவும் தமது எண்ணத்தை ஜனநாயக வழியினூடாகத் தெரிவித்து விட்டார்கள் பொது மக்களின் எழுச்சி நிகழ்வுகளான பொங்கு தமிழ், மற்றும் தேசிய எழுச்சி போன்ற நிகழ்வுகள் மூலம் தமிழீழ மக்கள் தமது சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்தும் நோக்கில் தாம் இருப்பதைத் . . . . தொடர்ந்தும் தெளிவு படுத்தி வருகின்றார்கள்.

�சமாதானப் பேச்சுக்களின் மூலம் தமிழ் மக்களின் அடிப்படை வாழ்வியல் தேவைகள் கூடப் பூர்த்தி செய்யப்படாமல் இருக்க்pன்ற இந்தக் காலகட்டத்தில் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனைக்குரிய இறுதித் தீர்வு குறித்துத் தர்க்கிக்க வேண்டியதன் அவசியம் ஏன்?� என்று சில அன்பர்கள் எண்ணக்கூடும். இன்றைய சமாதானப் பேச்சு வார்த்தைகளை இதய சுத்தியுடனும், நேர்மையுடனும் நடாத்துதற்கு தற்போதைய சிறிலங்கா அரசும் தயாரில்லை என்பதையே அதனுடைய செயற்பாடுகள் சுட்டிக் காட்டுகின்றன.

ஆகவே விரைவில் தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும்படி கோரி உலகளாவிய வகையில் புலம் பெயர்ந்த தமிழீழத்தவர்கள் மாபெரும் எழுச்சிப் போராட்டங்களை நிகழ்த்த வேண்டிய தார்மீகக் கடமைக்குரிய வேளை நெருங்கி வரும். அந்த எழுச்சிக்குரிய காலம் விரைவில் வரும் என்றே நாம் கருதுகின்றோம். தமிழீழத் தேசியத் தலைவர் நடாத்திய சர்வதேச ஊடகவியலாளர் மகாநாடு நடைபெற்று நான்கு ஆண்டுகள் நிறைகின்ற இந்த வேளையை சுயநிர்ணய உரிமையின் முக்கியத்துவம் குறித்துத் தர்க்கிப்பதற்குப் பயன்படுத்திக் கொண்டோம்.!
 

The right to Self-determination and the International Media Conference - English Translation
The LTTE leadership has continually emphasised that the political resolution for the Tamils national issue should be based on the principle of Self-determination. The Sinhala regimes, in the last four years of the so called 'period of peace', have persistently refused to allow the Tamils even the basic necessities of life. We feel that this may call for the need for the Tamils to exert their right to self-determination. The readers are aware that we have been discussing the Tamils' right to self-determination for many years now. Four years have passed since Honourable Velupillai Pirabhakaran convened an international media conference in April 2002. We believe it would be appropriate to consider some fundamental aspects of the right to self-determination here.

In that international media conference, clear explanation was given not only on the need to restore normalcy in the Tamils' life, but also on the right resolution to the Tamils' national issue. But the majority of the international journalists present, did not raise even a single question about the military embargo and harassment which were the causes of the Tamils' sufferings. Neither did they question about the government restrictions placed on food, medicine and other essential items intended for the Tamils. Nor questions were asked about how the basic needs of the Tamils are expected to be fulfilled; about the plans for rehabilitation and restoration; about how the Tamils' fundamental rights are to be regained.

What did those international journalists repeatedly probe into? 'Have you given up the demand for a Separate State? Will suicide bombings continue?'. Only questions of this type were asked again and again. Some others came up with illogical and impertinent questions. But there was one question, that too in Tamil, which inquired as how the principle of the right to self-dterminaton is to be employed in solving the Tamil national issue. The leadership requested Mr. Anton Balasingam, the political adviser to the LTTE, to expound the matter in English so that not only the Sinhala nationalists but the international reporters too could understand. Mr. Balasingam put into words, the thoughts of the leadership on the right of self-determination, in English.

'Our people are a distinct Nation, possessing its own traditional homeland, its own unique language and a unique culture. The Tamil nation has the right to determine its own political and economic life. And this right is called the right to self-determination. This right has two forms known as the right to internal self-determination and the right to external self-determination. The right to internal self-determination is the right to self-rule by a people over their homeland whereas the right to external self-determination is the right to go separate and form an independent state of their own.'

Having clearly explained the issue Mr. Balasingham further dealt on an important matter which binds the Tamils and the right to self-determination. We request the readers to kindly consider what he said.

The essence of which:

The Tamil people's right on the basis of the principles of a traditional homeland, nationhood and the right to self-determination should be recognised. Failing which we have to go separate and establish our own separate state.

Dear readers!

This concept of the Tamils' right to self-determination was not something that was disclosed the first time in the 2002 international media conference! The Tamil Eelam leader had expressed and emphasised this concept for many years before this conference. Nineteen years ago, our national leader in his public address to the Tamils, had already dealt with the subject of the right to self-determination, on the 4th August 1987 in Suthumalai, Jaffna, which became to be known as the famed Suthumali Declaration.

On that day, our leader had foretold that the Indo-Sri lanka accord will never regain any rights for the Tamils and that he did not recognise the accord. Besides, he had also expressed another important matter on that day.

It is as follows:

'India's regional strategic interest is in conflict with the Tamils' right to self-determination.' Thus our leader had openly voiced his view on the Tamils' right to self-determination.

Apart from this, our leader has continually expressed his determined views on the importance of the right to self-determination of the Tamils in his annual Martyrs' day speeches. In 2002 too, the very year of the international media conference, the leader of the Tamil nation had spoken on the right to self-determination of the Tamils in his November 27th Martyrs' day speech. It was a reiteration of his view on the right to self-determination.

He had stated as follows:

'The Tamils wish to live independently and honourably in their own traditional homeland without the interference or rule of alien powers. They wish to develop their language, maintain their culture and protect their unique identity. This is our people's aspiration. The essence of the right to internal self-determination is embodied in this justified aspiration.... in the event of this wish being rejected there is no other alternative for us other than to go our own way and establish an independent state for us.'

Those who carefully listen to the Martyrs' day speeches of our National leader will realise that he continually stresses on the right to self-determination. He has dealt on it nineteen years ago in his Suthumalai declaration, he had stated it in the international media conference four years ago and unfailingly emphasised it in all his annual Martyrs' day speeches.

We must realise the importance as to why our National leader keeps on emphasising on our right to self-determination. Though the Liberation Tigers presently enjoy a position of undisputed strength after their chain of victories over the enemy, our leadership still wants to resolve the ethnic issue through political means. The Liberation Tigers have adopted a flexible but balanced attitude throughout these four years. Their insistence on the proper implementation of the Cease Fire Agreement in the first round of Geneva talks shows their desire to resolve the national ethnic issue through peace talks.

The resolution envisaged through peace talks should be just and reasonable, affording the right of the Tamils to rule themselves in their traditional homeland. A just resolution to the ethnic issue could be found only on the basis of the right to internal self-determination leading to self-rule. Any solution rejecting this principle will never be the right solution to the Tamils' national ethnic issue.

The Liberation Tigers of Tamil Eelam (LTTE) is at its height of strength both militarily and politically. The Tamil people, through democratic electoral means, have clearly given their verdict that the LTTE is the sole representative of the Tamils. They have emotionally expressed the same verdict through several Pongu Thamil - Tamil uprising events throughout the Tamil homeland and in the expatriate countries too. They continue to do so.

Some may question as to why one should seek a final resolution to the national ethnic issue when the very basic livelihood needs of the Tamils remain unfulfilled. The attitude and actions of the present regime in Sri Lanka clearly reveal that it is not prepared to engage in the peace talks sincerely and honestly.

Therefore, soon, there will arise the historical and urgent need for the expatriate Tamils to stage great protest demonstrations in their respective countries urging them to recognise the Tamil people's right to self-determination. Such a gesture is certainly their moral responsibility.

We believe that the time is not very far from us!

We conclude with the satisfaction of having used the fourth anniversary of the international media conference to discuss and stress on the importance of the Tamils' right to self-determination in a meaningful manner.
 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home