Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan > சமாதானப் பேச்சுக்கள் - மீண்டும்?!
 

Selected Writings by Sanmugam Sabesan,  
சபேசன், அவுஸ்திரேலியா

சமாதானப் பேச்சுக்கள் - மீண்டும்?!
[together with translation in English]
28 February 2006


யுத்தநிறுத்த உடன்படிக்கையின் அமலாக்கம் குறித்து ஜெனிவாவில் முதல் கட்டப் பேச்சுக்கள் நடைபெற்றுள்ளன.

சிறிலங்காவின் முன்னால் பிரதமரான ரணில் விக்கிரமசிங்கவின் அரசுடனான சமாதானப் பேச்சு வார்த்தைகள் முறிந்து போன பின்னர் இலங்கைத்தீவில் யுத்தம் மூளக்கூடிய நிலை உருவாகியதையும், பின்னர் மகிந்த ராஜபக்ச புதிய அரச அதிபராகப் பதவியேற்றதும், நிலைமை மேலும் ஓர் இறுக்கமான மோசமான நிலையை அடைந்ததையும் நாம் அறிவோம்.

எனினும் சிறிலங்காவின் புதிய அரச அதிபருக்கு ஓர் உரிய வாய்ப்பைக் கொடுப்பதன் மூலம் சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஊடாகத் தமிழீழத் தேசியப் பிரச்சiயைத் தீர்ப்பதற்கு தமிழீழத் தேசியத் தலைமை மீண்டும் முன்வந்தது. சமாதானப் பேச்சு வர்த்தைகளைப் பெரும்பாலானோர் வரவேற்கின்ற அதே வேளையில் உரிய தீர்வுகளைப் பெறமுடியாமல் மீண்டும் மீண்டும் சமாதானப் பேச்சுக்கள்தானா? என்ற ஒரு கேள்வியும் பெரிதாக எழுந்து நிற்பதையும் நாம் காணக்கூடியதாக உள்ளது. இந்தக் கேள்வியின் அடிப்படையில் பல முக்கிய விடயங்களைத் தர்க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.!

�சிறிலங்காவின் முன்னால் பிரதமரான ரணில் விக்கிரமசிங்கவின் அரசுடன் தமிழீழ விடுதலைப்புலிகள் யுத்தநிறுத்த ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்ட பின்னர் அன்று சமாதானப் பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாயின. யுத்த நிறுத்த ஒப்பந்தம் என்பதானது இருதரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு இருந்தபடியால் அன்றைய சமாதானப் பேச்சுக்கள் யுத்த நிறுத்த ஒப்பந்தம் குறித்துப் பெரிதாக அமையவில்லை. அதற்கு அடுத்த கட்டமான இயல்புவாழ்க்கை, புனர்வாழ்வு, புனருத்தாரணம் அபிவிருத்தி கட்டமைப்பு நிர்வாகம் என்பவை குறித்து அப்பேச்சு வார்த்தைகள் அமைந்திருந்தன. ஆனால் இப்போதோ இந்தக் கட்டத்தில் இருந்து ஒரு படி கீழே இறங்கி யுத்தநிறுத்த உடன்படிக்கை குறித்தே பேச வேண்டிய நிலை இன்று ஏற்பட்டு உள்ளதானது ஒரு பின்னடைவு அல்லவா?� என்று எழுந்துள்ள கேள்விக்குரிய விடையையும் நாம் தர்க்கிக்க விழைகின்றோம்.

சிறிலங்கா அரசிற்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட யுத்தநிறுத்த ஒப்பந்தம் என்பதானது இந்த இரண்டு தரப்பினரோடு மட்டும் நின்றுவிடாது நோர்ட்டிக் நாடுகள் உட்பட பல சர்வதேச நாடுகளையும் தொடர்பு படுத்திய ஓர் ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தில் உள்ள பல முக்கிய சரத்துக்களை ரணில் விக்கிரமசிங்கவின் அரசும் செயற்படுத்த தவறி இருந்தது. முன்னைய பேச்சுவர்த்தைகளின் போது ரணில் விக்கிரமசிங்கவின் அரசிற்கு இவை குறித்து விடுதலைப் புலிகள் சுட்டிக் காட்டியதுடன் முறையான அமலாக்கம் குறித்து வேண்டுகோள்களையும் விடுத்து வந்துள்ளார்கள்.

இதேபோல் அதிகாரப் போட்டி காரணமாகக் குழப்பங்களை உருவாக்கிய முன்னாள் அரச அதிபர் சந்திரிக்காவிற்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முறையான அமலாக்கத்தின் அவசியம் குறித்து தொடர்ந்தும் சுட்டிக் காட்டப்பட்டு வந்துள்ளது. சமாதானப் பேச்சு வார்த்தைகள் முறிந்து போன நிலையில் புதிய அரச அதிபர் தேர்தலின் ஊடாகப் பதவிக்கு வந்த ராஜபக்சவின் முரண்பாடான கொள்கைகளுக்கும், சிந்தனைகளுக்கு மத்தியிலும் தமிழீழத் தேசியத் தலைமை மீண்டும் சமாதானத்திற்கான தன் நேசக்கரங்களை நீட்டியிருக்கின்றது.

நடந்து முடிந்த இந்த ஜெனிவாப் பேச்சுக்கள் பல முக்க்pயமான விடயங்களைச் சுட்டிக் காட்டியிருப்பதை நாம் அவதானிக்கிறோம். இவை வெளிப்படையாகத் தெரியாதபோதும் சற்று ஊன்றிக் கவனித்தால் வெளிவராத ஆனால் உள்@ர ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள விடயங்களை நாம் காணலாம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கருத்துக்களைச் சர்வதேச நாடுகள் ஏற்றுக் கொள்ளுகின்ற அதேவேளையில் சிறிலங்கா அரசு தெரிவிக்கின்ற கருத்துக்களை ஏற்றுக் கொள்வதற்கு சர்வதேச நாடுகள் தயாராக இல்லை என்பதுதான் அது.

எமது இந்தக் கருத்தை தர்க்கிப்பதற்காகச் சில விடயங்களை தொகுத்துப் பார்க்கலாம்.

� பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாவதென்றால் அது யுத்தநிறுத்த உடன்படிக்கையை முறையாக அமலாக்குவது பற்றித்தான் அமைய வேண்டும். என்று விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தார்கள். ஆனால் மகிந்த ராஜபக்சவின் அரசு அதற்கு இணங்கவில்லை. ஆனால் சர்வதேச நாடுகள் சிறிலங்கா அரசின் இந்த நிலையை ஆதரிக்க வில்லை. ஈற்றில் விடுதலைப் புலிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சிறிலங்கா அரசின் விருப்பத்திற்கு எதிராக யுத்தநிறுத்த உடன்படிக்கை அமலாக்கம் குறித்துத்தான் பேச்சு வார்த்தைகள் அமைந்தன.

� யுத்தநிறுத்த ஒப்பந்தம் மாற்றப்பட வேண்டும் அல்லது திருத்தப்பட வேண்டும் என்று சிறிலங்கா அரசு பிடிவாதமாக இருந்தது. இதனையும் சம்பந்தப்பட்ட சர்வதேச நாடுகள் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னரே தீர்க்கமாகத் தெரிவித்திருந்தபடி ஒப்பந்தத்தில் மாற்றமோ, திருத்தமோ ஏற்படுத்தப்பட மாட்டாது என்ற கருத்தைச் சர்வதேச நாடுகள் ஏற்றுக் கொண்டன. அதற்குரிய அழுத்தங்களைச் சர்வதேச நாடுகள் சிறிலங்காவிற்கு கொடுத்ததன் பின் புலத்தையும் நாம் காண முடிகின்றது.

� ஒவ்வொரு முறையும் சிங்கள அரசுகள் மாறிமாறிப் பதவிக்கு வரும்போது பழைய ஒப்பந்தங்களை மீறுவது அல்லது புறம் தள்ளுவதுதான் இதுவரை காலமும் நடைபெற்று வந்துள்ளது. ஆனால் இப்போது இந்தச் செய்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி ஒன்று சத்தமில்லாமல் வைக்கப்பட்டிருப்பதை இங்கே நாம் சுட்டிக்காட்ட விழைகின்றோம்.

� புரிந்துணர்வு ஒப்பந்தம் மாற்றப்படவேண்டும் அல்லது திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்று சர்வதேச நாடுகள் எண்ணியிருந்தால் அதனை சர்வதேச நடுகள் ஒரு விதமாகச் சொல்லிக் காட்டியிருக்கும் ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெறாமல் புரிந்துணர்வு ஒப்பந்தம் முறையாக அமைக்கப்பட வேண்டும் என்பதிலேயே சர்வதேச நாடுகள் அக்கறை காட்டியுள்ளன. இது சிறிலங்கா அரசின் பரப்புரைக்கும், எதிர்பார்ப்பிக்கும் எதிராகவே அமைந்துள்ளது.

� மகிந்த ராஜபக்ச அரசுடனான இந்தப் புதிய பேச்சு வார்த்தைகள் இன்னுமொரு செய்தியை மிக முக்கியமான செய்தியை சொல்லுகின்றன. எந்தப் புதிய சிங்கள அரசு ஆட்சிக்கு வந்தாலும், அது தமிழீழ விடுதலைப் புலிகளோடுதான் பேச வேண்டும் என்ற மிக முக்கியமான செய்தியை சர்வதேச நாடுகள் சிங்கள தேசத்திற்கு இந்தப் புதிய பேச்சு வார்த்தைகள் ஊடாக தெரிவித்து விட்டன.

� இதனோடு சேர்த்து இன்னுமொரு செய்தியையும் சிறிலங்காவிற்கு உலகநாடுகள் சொல்லியிருக்கின்றன. இனிமேல் பழைய ஏற்றுக் கொண்ட கருத்தாக்கங்களோடு தான் பேச வேண்டும் உள் அரசியல் நிலைமைக்கு ஏற்ப சிறிலங்கா அரசு முன்னுக்குப் பின் முரண்பட முடியாது.

� அத்தோடு ஒட்டுமொத்தமாகச் சிங்கள இனத்திற்கும் இங்கே ஒரு செய்தி சொல்லப்பட்டு விட்டது. நீங்கள் பேரினவாதச் சிந்தனைகளின் அடிப்படையில் செயலாற்ற முனைந்தால் இலங்கைத் தீவில் சமாதானத்தை எதிர்பார்க்க முடியாது களயதார்த்தத்தை உணர்ந்து பழைய உடன்பாடுகளைத் தூக்கியெறியாமல் இதயசுத்தியுடன் இப்பிரச்சனையை அணுக வேண்டும். என்று இந்தப் பேச்சு வார்த்தைகள் மீண்டும் ஆரம்பமானதன் ஊடாக ஒரு செய்தி சிங்கள சமூகத்திற்குத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அன்புக்குரிய நேயர்களே!

ஜெனிவாப் பேச்சு வார்த்தைகள் மறைமுகமாகத் தெரிவித்து நிற்கின்ற செய்திகள் தாம் இவை. இது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு கிடைத்த வெற்றி என்பதில் சந்தேகமில்லை. நாம் முன்னர் பல தடவைகள் வலியுறுத்தி வந்துள்ள ஒரு கருத்தை மீண்டும் இவ்வேளையில் கூற விரும்புகின்றோம். தமிழீழ விடுதலைப் புலிகள் மீது சர்வதேச நாடுகள் மேற்கொள்கின்ற தேவையற்ற அழுத்தங்கள் ஒரு கட்டத்திற்கு மேல் பலனளிக்காது என்ற கருத்து இப்போது நிதர்சனமாகி விட்டது. தமிழீழத் தேசியத் தலைவரின் தெளிவான தூரநோக்கு பார்வையின் ஊடான வழி நடத்தலின் சிறப்பை நாம் இப்போது உணரக் கூடியதாக உள்ளது.

யுத்தநிறுத்த உடன்படிக்கையின் அமலாக்கம் குறித்து ம{ண்டும் பேசப் போனதால் உருவான சாதகமான விளைவுகள் குறித்து இதுவரை தர்க்கித்து இருந்தோம் அத்தோடு இன்னுமொரு முக்கியமான விடயத்தையும் சேர்த்து தர்க்கிப்பது பொருத்தமாக இருக்கும்.

�அது எல்லாம் சரிதான்! ஆனால் கடந்த நான்கு ஆண்டுச் சமாதானத்திற்கான காலம் பெற்றுத் தந்த பயன் என்ன? பேச்சு வார்த்தைகளும் பேச்சு வார்த்தைகள் குறித்த பேச்சு வார்த்தைகளும் உரிய தீர்வுகளை இதுவரை காலமும் பெற்றுத் தரவில்லையே! எவ்வளவு காலம் இந்த நிலை நீடிக்கும்?� என்ற கேள்விகளுக்குரிய பதிலையும் தர்க்கிப்பது அவசியமானதொன்றுதான்.!

கடந்த அரசுடனான சமாதானப் பேச்சு வார்த்தைகள் குறிப்பிடத் தக்கவாறு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து செல்லவில்லை என்பது உண்மைதான். எனினும் அந்த நிலையோடு பல விடயங்களையும் சேர்த்து ஒப்பிட்டு நோக்க வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பலம் வாய்ந்த மக்கள் இயக்கமாகவும் இருக்கின்ற காரணத்தினால் கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழர் தாயகப் பகுதியின் மீட்டெடுக்கப்பட்ட பெரும் பகுதியில் தன்னாட்சி அதிகாரமுடைய ஆட்சியமைப்பை நிறுவி அதனை நேர்த்தியாக நிர்வகித்து வருகின்றது.

பெரும் தொகை மக்கள் வாழுகின்ற நிர்வாகக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களையும் அதனைக் கட்டிக்காக்கப் பலம் பொருந்திய படைத்துறையையும், சட்டம் ஒழுங்கைப் பேண காவல் துறையையும், நீதித்துறையையும் நிர்வகித்து வருகின்றது. அத்தோடு ஒரு நிழல் அரசாங்கத்துக்குரிய அடித்தளக் கட்டுமானங்களைக் கொண்ட ஒரு பாரிய நிர்வாக அமைப்பையும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இயக்கி வருகின்றது.

சிறிலங்கா அரசானது சமாதானப் பேச்சுக்களை இழுத்தடித்துக் காலத்தை விரயமாக்க முயற்சி செய்கின்ற அதே வேளையில் இருக்கின்ற வளங்களையும், திறமைகளையும் வைத்துக் கொண்டு தமிழீழப் பகுதிகளில் இயல்பு வாழ்க்கையையும் புனருத்தாரண அபிவிருத்தி வேலைகளையும் தமிழீழத் தேசியத் தலைமை முன்னெடுத்துச் சென்றது. இந்தச் சமாதானத்திற்கான காலத்தில் புலம் பெயர்ந்த தமிழீழ மக்கள் செய்த பங்களிப்போ அளப்பரியது.

மேற்கூறிய கருத்தை தெரிவித்த நாம் இன்னமொரு முக்கிய விடயத்தைச் சுட்டிக்காட்ட விழைகின்றோம். கடந்த நான்கு ஆண்டுக் காலப் பகுதியில் அடிப்படையான விடயங்கள் எதையும் இயக்கம் விட்டுக் கொடுக்கவில்லை. உண்மையில் அது ஒரு வெற்றியாகும். அது மட்டுமல்லாது முன்னைய நாற்பது ஆண்டுக் காலப்பகுதியில் செய்ய முடியாத, சொல்ல முடியாத விடயங்களையெல்லாம் கடந்த நான்கு ஆண்டுகளில் செய்யவும் சொல்லவும் முடிந்திருக்கின்றது. கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனை நன்றாக சர்தேச மயமாக்கப்பட்டும் விட்டது. காலத்தை சிறிலங்கா அரசு இழுத்தடிக்க முயன்றாலும், அதனை உணர்ந்தே வைத்துள்ள தமிழீழத் தேசியத் தலைமை அக்காலப் பகுதியை இயன்றவரை பயனுள்ள பகுதியாகவே உருவாக்கியது.

இதே வேளை அரசியல் ஆய்வாளர்கள் பலர் சொல்கின்ற கருத்து ஒன்றினையும் நாம் கவனிக்க வேண்டும். காலம் இழுபட்டால் போராட்டம் நெகிழ்ந்து வலிமை குன்றிவிடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுவதுண்டு. இந்த விடயம் அரசியல் ஆய்வாளர்கள் மட்டுமல்ல எல்லோருக்குமே தெரிந்த விடயம்தான். தவிரவும் இந்த கூற்று எல்லாப் போராட்டங்களுக்கும் பொருந்துவது அல்ல! தென்னாபிரிக்காவின் பேச்சு வார்த்தைகள் நீண்டு, ஈற்றில் தோல்வி கண்டு ஒரு காலத்தில் திரு நெல்சன் மண்டேலா அவர்கள் மதிப்பை இழக்கவும் நேரவும் வந்தது.

ஆனால் பின்னர் எல்லாமே மாறியது. போராட்டம் என்பது உயிரோடு சம்பந்தப்பட்டது. வெறும் அரசியல் என்பது பதவியோடும் கருத்துக்களோடும் சம்பந்தப்பட்டது. போராட்டம் பல பரிமாணங்களையும் கொண்டதாகும். ஒப்பீட்டளவில் தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பதானது எத்தனையோ பல போராட்டச் சிறப்புக்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒப்பில்லாத உயர்வான போராட்டமுமாகும். பலத்தைத் தக்க வைத்துக் கொண்டு மக்கள் சக்தியாக எழுந்து நின்று போராடுகின்ற போராட்டம்தான் தமிழீழ விடுதலைப் போராட்டம்.!

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் கடந்த ஆண்டு (2005) மாவீரர் தினப்பேருரையின் போது வரையறுக்கப்பட்ட ஒரு குறுகிய கால இடைவெளிக்குள் தமிழ் மக்களின் அரசியல் வேட்கைகளைத் திருப்தி செய்யும் வகையில் ஒரு நியாயமான தீர்வுத் திட்டமொன்றை புதிய அரசு முன்வைக்க வேண்டும் என்று உறுதியாகத் தெரிவித்திருந்தார்.

எனவே விடுதலைப் புலிகளிடம் நெகிழ்ச்சிப் போக்கினை தொடர்ந்தும் எதிர்பார்க்க முடியாது என்று நாம் தர்க்கித்தே வந்துள்ளோம். சமீபத்திய ஜெனிவாப் பேச்சுக்கள் எமது கருத்தை நியாயப் படுத்துகின்றன. தவிரவும் தமிழ் ஒட்டுக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்று இப்போது உலக நாடுகளும் சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்து விட்டன. தமிழ் ஒட்டுக் குழுக்களின் ஆயுதத்களைவினை சிறிலங்கா அரசு நிறைவேற்றாத பட்சத்தில் இன்றைய சமாதான நிலை முற்றாகவே மாறிவிடக் கூடிய நிலைதான் ஏற்படும்.

ஜெனிவாப் பேச்சு வார்த்தைகள் வேறொன்றையும் தெளிவாகச் சொல்க்pன்றன. தற்போதைய கள யதார்த்தத்தைச் சம்பந்தப்பட்ட உலக நாடுகளும் நன்கே புரிந்து வைத்துள்ளன என்பதை ஜெனிவாப் பேச்சு வார்த்தைகளின் பின்புலம் நன்கு உணர்த்துகின்றது. மகிந்தவின் சிந்தனைகளை சர்வதேச நாடுகள் மதிக்கவில்லை என்பதையும் நாம் கண்கூடாக காண்கின்றோம். இனியாவது நம்பிக்கைக்கு உரிய வகையில் சிங்கள அரசு நடந்து கொள்ள முனையட்டும்.

இல்லாவிட்டால் சமாதானப் பேச்சு வார்த்தைகள் மீண்டும் மீண்டும் உருவாகி வரும் என்று எதிர்பார்க்க முடியாது.
 

  Peace Talks Again ?! translation by Mathini.

The first round of talks on the implementation of the Cease Fire agreement has been conducted in Geneva. We are aware of the situation of a war breaking when the peace talks with former prime minister Ranil Wickremasinghe broke and of conditions worsening when Mahintha Rajapakse assumed power as the new Sri Lankan President. However, the Tamil Eelam Leadership, aspiring for a solution to the Tamil Eelam national issue through peace talks, offered a fresh chance to the new President. Though many welcome the peace talks, the question, as to whether we should engage in peace talks again and again, when the right solutions are unable to be achieved, looms big in their minds.

Aim of this article is to discuss many important matters on the basis of this question.

'Peace talks began after the Liberation Tigers of Tamil Eelam signed a ceasefire agreement with the former prime minister Ranil Wickremasinghe. As CFA was an already accepted concept by both parties, it did not figure prominently in the peace talks. They centred only on the next stage problems like normalcy of life, rehabilitation and restoration. But, is it not a draw back now to descend a step to speak only on the implementation of the CFA?' - We wish to discuss the answer to this question too.

The CFA signed between the Liberation Tigers of Tamil Eelam and the Sri Lanka state does not just end with these two factions but also related to many international countries including Nordic countries. Ranil Wickremasinghe regime had failed to implement many important aspects of the agreement. In the previous peace talks the Liberation Tigers of Tamil Eelam did point to these and had requested proper implementation of the agreement. In the same manner, the necessity of the proper implementation of the CFA was pointed to former president Chandrika who created confusion due to her competition for power. In the context of the break in peace talks, the Tamil Eelam National Leadership has extended his friendly hands of peace to Rajapakse in spite of the new president's conflicting concepts and thoughts.

We infer that the concluded Geneva Talks point to many important matters. Though these are not obviously apparent they come to light on close observation and which are matters automatically taken for granted.

The truth that surfaces is this: The international countries, while readily accepting the views of the Liberation Tigers of Tamil Eelam, are reluctant to accept those of the Sri Lanka government.

Let us go through certain matters in order to discuss the above.

� The Liberation Tigers had insisted that if talks are to begin they must only deal with the proper implementation of the CFA. But Mahintha Rajapakse's government did not agree to this. Ultimately, the subject of the talks dealt only with the implementation of the CFA according to Liberation Tigers' wish and against that of the Sri Lanka state.

� Sri Lanka state was adamant on either changing the CFA or amending it but the international countries did not accede to this. They did accept the definite decision of the Liberation Tigers that they would not entertain any change or amendment to the agreement. We are also able to see the 'behind the scene' pressure exerted by the countires on Sri Lanka government.

� Breaking pacts or abrogating them had been the long standing tradition in the annals of the alternating Sinhala governments. But this time, we wish to point out, a full stop to this practice has been put noiselessly.

� Had the world countries approved of alterations in the CFA they would have surely expressed their view discreetly but this has not happened and they had shown keen interest in confirming the CFA being consolidated fully. This turn is something directly opposed to the campaign and expectation of the Sri Lanka state.

� The fresh talks with Mahintha Rajapakse's regime tell us an important matter - i.e. Which ever new Sinhala regime assuming power has to negotiate only with the Liberation Tigers of Tamil Eelam. This important message has been delivered by the international countries to the Sri Lanakan state through Geneva talks.

� Another matter too had been told to the Sri Lanka government by the international countries: It has to participate in the talks only on the basis of the already accepted concepts and not on those trying to serve internal political situations which make it to assume contradicting postures each time.

� Besides, a clear message has been delivered to the entire Sinhala people: You cannot hope for peace in Sri Lanka if you resort to act on the basis of chauvinistic ideals; you have to realise the ground reality and approach the issue sincerely, not discarding the old agreements. The commencment of the Geneva talks has taken this message to the Sinhala society.

Dear readers!

These are the messages the Geneva talks convey indirectly. There is no doubt this is yet another victory to the Liberation Tigers of Tamil Eelam. We wish to state a view which we had emphasised several time before. The unnecessary pressures exerted by the international countries on the Liberation Tigers of Tamil Eelam will not prove useful once they exceed a certain level. This has become an obvious truth now. We are now able to realise the greatness of the Tamil Eelam Nation Leader's ability to forestall and guide with the distant vision of the future events.

We have been discussing the positive outcomes of participating in the Geneva talks on implementing the CFA but it would be appropriate to look at another important matter here.

'Okay� we understand! But, what benefits has the four year period for peace given? Even the talks on talks have not given us any solution all these years! How long will this situation drag on?' We are driven to discuss the answers for these questions too!

It is true that the talks with the last government did not advance to the next stage in a promising manner. We have to observe many other related issues along with this. The Liberation Tigers of Tamil Eelam organisation by the virtue of the fact it is strong and a people's organisation, it has been able to establish self-rule in most of the recaptured Tamil homeland and is administrating same very efficiently in the last four years. Besides, it is operating a huge administrative body consisting the basic infrastructure, a necessary prerequisite for a shadow state.

While the Sri Lanka regime wastes time in dragging its feet in the pursuit of peace talks, the Tamil Eelam Leadership, with whatever available resources and abilities, is engaged in restoring normalcy of life and in rehabilitation and development projects. The contribution by the expatriate Tamils during this period for peace is indeed enormous.

Having presented the above, we wish to say another important matter. During the last four years the Liberation Tigers have not given in anything substantial and this is a great victory indeed. Besides, within these four years it has been possible for us to say and do all those things which we could not say and do in the past forty years! And the issue of Tamils has been very well internationalised. Though the Sri Lanka government had tried to drag on an on, the Leadership of Tamil Eelam, to the best of his ability, has transformed this period into an advantageous age.

Meanwhile we have to pay heed to what many political analysts say. Analysts say dragging time would weaken the struggle and decrease its strength. This is not an exclusive truth to political analysts but common sense. Besides this does not apply to all struggles! There was a time when Nelson Mandela, due to the dragging on of talks and their eventuall failure, happened to lose face. But matters did change later. Struggle is related to life but politics is related to power and policies. Struggle has many dimensions. Relatively, Tamil Eelam struggle is an incomparable and lofty one embodying many pristine qualities of struggle within it. Tamil Eelam struggle is one that is based on vast strength and which has risen up as the force of the people to struggle on!

The Tamil Eelam National Leader, Honourable V. Pirabhakaran had, in his martyrs' day speech last year, stipulated to the government that it should present a proposal to find a just solution fulfilling the political aspirations of the Tamils, within a short period of time. We, therefore, had been arguing that one cannot expect leniency from the Liberation Tigers. The recent Geneva talks justify our stand. Besides, the world countries too have now begun to pressurise Sri Lanka to disarm its paramilitaries. If the Sri Lanka government fails to disarm its paramilitaries, the present atmosphere of peace would change upside down.

Geneva talks and the related 'behind the scene events' do clearly reveal another matter: The international countries have rightly understood the ground reality in Sri Lanka. It is obvious that Mahintha Chinthana is not at all taken into account by them.

Let the Sinhala government try to act trustworthy even after this.

One cannot expect conditions for peace talks to materialise again and again!


 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home