Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan > ஜனநாயகமும் பயங்கரவாதமும்

Selected Writings by Sanmugam Sabesan,  
சபேசன், அவுஸ்திரேலியா

ஜனநாயகமும் பயங்கரவாதமும்
[together with English Translation]
21 February 2006

"ஜனநாயகம்-பயங்கரவாதம் போன்ற சொல்லாடல்களிலும் கருத்துருவாக்கங்களிலும் எவ்வளவு முரண்பாட்டையும், தெளிவின்மையையும் சம்பந்தப்பட்ட உலக நாடுகள் கொண்டிருக்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டித் தர்க்கிப்பதுவே எமது எண்ணமாகும்."


கடந்த ஜனவரி மாதம் 25ம்திகதி நடைபெற்ற பலஸ்தீன நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்த ஹமாஸ் இயக்கம் கடந்த சனிக்கிழமை (18.2.2006) அன்று பலஸ்தீன நாடாளுமன்றத்தில் புதிய அரசாங்க பதவிப் பிரமாணம் செய்துள்ளது. அமெரிக்கா இஸ்ரேல் உட்படப் பல ஐரோப்பிய நாடுகளாலும் பயங்கரவாத இயக்கம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஹமாஸ் இயக்கம் இன்று பலஸ்தீன மக்களினால் ஜனநாயக வழிமுறையினூடே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விடயமானது பலரையும் குறிப்பாக மேற்குலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஹமாஸ் இயக்கத்தின் இந்த வெற்றியை அதிர்ச்சியான விடயம், என்றுதான் சர்வதேச ஊடகங்களும் தெரிவித்துள்ளன.

இதிலிருந்து எமக்கு ஓர் உண்மை தெளிவாகின்றது. சம்பந்தப்பட்ட உலகநாடுகளும், சர்வதேச ஊடகங்களும் பலஸ்தீனத்தின் யதார்த்த நிலையை இதுவரை காலமும் உணர்ந்திருக்கவில்லை என்கின்ற உண்மையைத்தான் இவர்கள் அடைந்திருக்கும் அல்லது ஏற்றுக் கொண்டிருக்கும் ‘அதிர்ச்சி’ எடுத்துக் காட்டுகின்றது. இவர்களால் ‘பயங்கரவாதிகள்’ என்று முத்திரை குத்தப்படுபவர்களை அந்த நாட்டு மக்கள் தங்களது பிரதிநிதிகளாகவே கணிக்கிறார்கள் என்கின்ற கள யதார்த்தமும் இன்றையதினம் நிரூபணமாகியுள்ளது. இந்தக் களயதார்த்தத்தின் அடிப்படையில் சில முக்க்pய விடயங்களை நாம் தர்க்pக்க விழைக்pன்றோம்.

ஹமாஸ் என்றழைக்கப் படுபவர்கள் யார்?

இஸ்ரேல் தேசமானது பலஸ்தீனத்தின் மீது மேற்கொண்ட ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராட உருவாகிய பலஸ்தீன விடுதலை இயக்கங்களில் ஹமாஸ் இயக்கம் பாரியதொன்றாகும். 1987ம் ஆண்டளவில் உருவாகிய ஹமாஸ் இயக்கத்தின் பிரதான நோக்கங்களில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை முறியடிப்பது முக்கியமானதாகும். அக்கால கட்டத்தில் பலஸ்தீன தலைவர் யாசர் அரபாத்தின் பலஸ்தீன விடுதலை அமைப்புக்கு ஓர் எதிர் அழுத்தம் கொடுப்பதற்காக ஹமாஸ் இயக்கத்திற்கு இஸ்ரேல் மறைமுக ஆதரவு கொடுத்து வந்துள்ளதாக நம்பப்படுகின்றது. அரபாத்தின் சற்றைய மிதவாதப் போக்கினையே ஏற்றுக் கொள்ள முடியாத இஸ்ரேல் கடும் தீவிரப் போக்குடையது எனக் கருதப்படும் ஹமாஸ் இயக்கத்திற்கு இன்று முகம் கொடுத்தாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த காலத்தில் அரபாத்தோடு நல்ல முறையில் பேச்சு வார்த்தைகளை இஸ்ரேல் நடத்தியிருந்தால் இன்றைக்கு இந்த நிலை தோன்றியிருக்காது.

இஸ்ரேலுடன் மேற் கொள்ளப்படும் எந்த ஒரு சமாதானப் பேச்சு வார்த்தையும் சரணாகதிக்குச் சமம் என்றுதான் ஹமாஸ் இயக்கம் கருதியது. ஹமாஸ் இயக்கத்தின் தாக்குதல்களின் உச்சக்கட்டமாகத் தற்கொலைத் தாக்குதல்களையும் ஹமாஸ் இயக்கம் தொடர்ந்து நடாத்தியது. இஸ்ரேல் தேசத்தின் இருப்பை ஹமாஸ் இயக்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. அத்தோடு இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்திற்கும் இடையில் உருவான சமாதான உடன்படிக்கைகளையும் ஹமாஸ் இயக்கம் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஹமாஸின் கடும்போக்குக்கான காரணங்கள் நியாயமானவை என்றுதான் காலம் நிரூபித்து நிற்கின்றது. சமாதான உடன்படிக்கை மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்களை இஸ்ரேல் அரசு நடைமுறைப் படுத்தவில்லை. பலஸ்தீன மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து நின்ற இயல்பு வாழ்க்கை அவர்களுக்கு கிட்டவில்லை. அத்தோடு வேலை வாய்ப்பில்லாமல் கல்வி வசதியில்லாமல் முழுமையான சமாதானத்தையும் சுதந்திரத்தையும் அனுபவிக்காமல் பலஸ்தீன மக்கள் பொறுமையின் எல்லையைக் கடக்க வேண்டி நேரிட்டது.

இதேவேளை பலஸ்தீன அல்பத்தா அமைப்பின் பலஸ்தீன அதிகார சபையின் நிர்வாகமோ ஓர் ஊழல் நிறைந்த நிர்வாகமாகச் செயலாற்றியது. இதனால் பலஸ்தீன மக்கள் எந்தவிதமான நலனையும் பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பலஸ்தீன மக்கள் அல்பத்தா அமைப்பின் மீது நம்;பிக்கை இழந்தார்கள்.

ஆனால் கடும் போராட்டத்தை மேற்கொண்டு வந்த ஹமாஸ் அமைப்போ பல பொது நலத் திட்டங்களை ஆரம்பித்து முறையாக அமல்படுத்தி சிறப்பாகச் செயலாற்றி வந்துள்ளது. ஊழல் அற்ற ஒரு சீரிய நிர்வாகத் திறமையோடு ஹமாஸ் இயக்கம் பணி புரிந்து வருகின்றது. காசாப் பிரதேசத்தில் அடிமட்ட மக்களின் நலனைக் கவனிக்கும் வகையில் மக்களோடு இணைந்து ஹமாஸ் செயலாற்றி வந்தமையானது, பலஸ்தீன மக்களின் பாராட்டைப் பெற்றது.

எல்லாவற்றையும் விட பலஸ்தீன மக்கள் ஒரு முக்க்pய விடயத்தை உள்வாங்கியிருக்கக் கூடும். அல்பத்தா அமைப்பானது பலத்தின் அடிப்படையில் இஸ்ரேலுடன் பேசாமல் பலவீனத்தின் அடிப்படையில் பேசுகின்றது. என்ற யதார்த்தை பலஸ்தீன மக்கள் உணர்ந்திருக்கக் கூடும். தம்முடைய உரிமைகளை வென்றெடுப்பதற்காகப் பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ளக் கூடிய அமைப்பானது அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் பலம் வாய்ந்த நிலையில் இருந்து கொண்டு பேசவேண்டும் என்று பலஸ்தீன மக்கள் நினைத்ததில் தப்பில்லை.

ஆகவே மேற்குலக நாடுகளையும், அவற்றின் ஊடகங்களையும் அதிர்ச்சி கொள்ள வைக்கும் வகையிலும் அதேவேளை விடுதலைப் போராட்ட வரலாற்றினை நன்கு ஊன்றிக் கவனிப்பவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தாத வகையிலும் தங்களுடைய தீர்ப்பை ஜனநாயக மரபினூடாக பலஸ்தீன மக்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

பலஸ்தீன மக்களின் ஜனநாயக பிரதிநிதிகளும் ஹமாஸ் இயக்கத்தினரே என்பதுதான் இன்று பலஸ்தீன மக்கள் தந்துள்ள தீர்ப்பாகும்.

ஜனநாயகத்தின் உயர் விழுமியங்களைப் போற்றுவதாகக் கூறுகின்ற அமெரிக்கா உட்பட்ட மேற்குலக நாடுகளின் தலைமைகள் பலஸ்தீன மக்களின் இறையா ண்மைத் தீர்ப்பை ஏற்க மறுக்காமல் நிபந்தனைகளை இட முயல்வதானது தத்தமது நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளையே கேலி செய்கின்ற, இகழ்கின்ற செயலாகும். வேற்று நாட்டொன்றின் ஜனநாயக தீர்ப்பை ஏற்க மறுக்கின்ற இந்த நாடுகளி;ன் தலைமைகள் அடிப்படையில் தமது சொந்த நட்டு மக்களின் ஜனநாயகத் தீர்ப்புக்களையும், விழுமியங்களையும் அலட்சியம் செய்கின்றார்கள். இது உலக ஜனநாயகத்திற்கு விடுக்கப்படுகின்ற சவாலாகும்.

சற்று விளக்கமாக சொல்வதானால் இவ்வாறு சொல்லலாம்:

பயங்கரவாதிகள் என்று மேற்குலகத்தினரால் முத்திரை குத்தப்பட்டவர்கள் இப்போது ஜனநாயக விழுமியங்களின் ஊடாகவும் தங்களது போராட்டத்தை நியாயப்படுத்தி உள்ளார்கள். ஆனால் தங்களை உண்மையான ஜனநாயகவாதிகள் என்று மார்தட்டிக் கொள்கின்ற இந்த மேற்குலக நாடுகள் இந்த ஜனநாயகத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மறுத்து எதிர்க்கும் செயலானது இவர்கள் கூறுகின்ற பயங்கரவாதத்தையும் விட ஆபத்தானது.

பயங்கரவாதம் என்று கருதப்படுவதானது தனது ஜனநாயக முகத்தைக் காட்டும் போது ஜனநாயகம் என்பது தனது பயங்கரவாத முகத்தைக் காட்டுகின்றது.

ஆகவே எது பயங்கரவாதம்? என்ற கேள்வி எழுகின்றது. பயங்கரவாதம் என்ற சொற்பதத்திற்குத் தெளிவான தர்க்கமான வரைவிலக்கணம் இருக்கின்றதா? இப்படி ஒரு தெளிவான தீர்க்கமான வரைவிலக்கணம் இல்லாத காரணத்தினால் தர்மத்தின் வழி தழுவி நிகழும் நியாயமான அரசியற் போராட்டங்களும் பயங்கரவாதமாகத் திரிபு படுத்தப்படுகின்றன அல்லவா?

இப்போது நாம் கூறியவை ஹமாஸ் இயக்கத்தை பற்றி அல்ல! தமிழிPழ விடுதலைப் போராட்டத்தைப் பற்றித்தான் நாம் இவ்வாறு கூறினோம். சரியாகச் சொல்லப் போனால் இந்தக் கருத்துக்களுக்கும் நாம் உரிமையாளர்கள் அல்ல. இந்தக் கருத்தைக் கூறியது வேறு யாரும் அல்ல! நமது தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தான் இந்தத் தீர்க்கமான கருத்துக்கு சொந்தக்காரன்.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் கடந்த 2005ம் ஆண்டின் மாவீரர் தின பேருரையின் போது தெரிவித்த பல கருத்துக்கள் இப்போது நிதர்சனமாகி வருகின்றது. பல முக்கிய விடயங்களைத் தெளிவு படுத்தியிருந்த தேசியத் தலைவர் பயங்கரவாதம் என்ற சொற்பதம் குறித்துக் கேள்வியும்; எழுப்பியிருந்தார்.

இக்காலகட்டத்தில் தேசியத் தலைவர் தெரிவித்த கருத்துக்களை மீண்டும் கவனிப்பது பொருத்தமானதாகும். கடந்த 2005ம் ஆண்டு மாவீரர் தினப்பேருரையின் போது தேசியத் தலைவர் பின்வருமாறு கூறியிருந்தார்.

‘சிங்கள இராணுவ ஆதிக்கத்திலிருந்து எமது தாயக நிலத்தின் பெரும் பகுதியை நாம் மீட்டெடுத்து அங்கு தன்னாட்சி அதிகாரமுள்ள ஆட்சியமைப்பை நிறுவி அதனை நேர்த்தியாக நிர்வகித்து வருகிறோம் என்பது இன்று உலகறிந்த உண்மை. பெருந்தொகை மக்கள் வாழும் நிர்வாகக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களையும், அதனைக் காட்டிக் காத்த பலம் பொருந்திய படைத் துறையையும், சட்டம் ஒழுங்கைப் பேணக் காவல் துறையையும,; நீதித்துறையையும், அத்தோடு ஒரு நிழல் அரசாங்கத்துக்குரிய அடித்தளக் கட்டுமானங்களையும் கொண்டதாக பிரமாண்டமான நிர்வாக அமைப்பை நாம் இயக்கி வருகின்றோம்.

பெரும் தொகையான எமது மக்கள் இன்னும் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழ்ந்த போதும் உணர்வாலும், இலட்சியத்தாலும் அவர்கள் எமது விடுதலை இலட்சியத்திற்குப் பின்னால் அணி திரண்டு நி;ற்க்pன்றார்கள். இந்தக் கள யதார்த்தத்தை அரசியல் மெய்ம்மையைச் சிங்கள ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொள்ள மறுப்பதுடன் எமது விடுதலை இயக்கத்தை ஒரு பயங்கரவாதக் குழு என உலகத்திற்கு சிறுமைப்படுத்திச் சித்தரித்துக் காட்ட முனைந்து வருகின்றார்கள். இந்தக் பொய்யான பரப்புரைகளை நம்பி உலக நாடுகள் சில எமது இயக்கத்தினைப் பயங்கரவாதப் பட்டியலில் தொடர்ந்தும் வைத்திருப்பது எமக்கு வேதனையையும், ஏமாற்றத்தையும் தருகின்றது.

சமாதான முயற்சியின் பாதுகாவலர் என உரிமை கோரி, இலங்கையின் இனப்பிரச்சனையில் ஆர்வமும் அக்கறையும் காட்டிய உலக வல்லரசு நாடுகள் ஒரு தரப்பினரான எமது விடுதலை இயக்கத்தை பயங்கரவாதிகள் என ஓரம் கட்டி ஒதுக்கி விட்டு மறுதரப்பினரான சிறிலங்கா அரசின் நலன்களுக்கு சார்பாக நிலைப்பாடு எடுத்தன. இது பேச்சுக்களிற் பங்கு கொண்டோரது சமநிலை உறவை வெகுவாகப் பாதித்தது.

அத்தோடு எமது அரசியல் தகைமையை நாமே தீர்மானிக்கும் சுதந்திரத்தையும் பாதித்தது. இந்நாடுகளின் ஒரு தலைப்பட்சமான நிலைப்பாடும், குறுக்கீடும் சமாதானப் பேச்சக்கள் முறிந்து போவதற்கும் ஒரு காரணமாக அமைந்தன.

 பயங்கரவாதம் என்ற சொற்பதத்திற்கு ஒரு தெளிவான தீர்க்கமான வரைவிலக்கணம் இல்லாததால் தர்மத்தின் வழிதழுவி நிகழும் நியாயமான அரசியற் போராட்டங்களும், பயங்கரவாதமாகத் திரிபுபடுத்தப்படுகின்றன. இந்தவகையில் இனவாத ஒடுக்கு முறைக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்து போராடும் சதந்திர இயக்கங்களுக்கும் பயங்கரவாத சேறு பூசப்படுகின்றது. பயங்கரவாதத்திற்கு எதிரான இன்றைய சர்வதேச எதிரப்பியக்கத்தில் அடக்குமுறை அரசுகளின் இராணுவ பயங்கரவாதம் மூடி மறைக்கப்படுகின்றது.

ஆயினும் அந்த அரச பயங்கரவாதத்தை எதிர்த்து நிற்பவர்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்தப்படுகின்றது. இந்தத் துர்ப்பாக்கிய நிலைதான் எமது விடுதலை இயக்கத்திற்கும் ஏற்பட்டிருக்கின்றது.

நோர்வே நாட்டின் அனுசரணையுடன் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடனும் கடந்த நான்கு ஆண்டுக் காலம் வரை இழுபட்ட சமாதான முயற்சியின்போது சிங்கள அரச தரப்பினால் ஏற்பட்ட சிக்கல்கள் போடப்பட்ட முட்டுக்கட்டைகள் இழைக்கப்பட்ட நம்பிக்கைத் துரோகங்கள் எல்லாவற்றையுமே உலகம் நன்கு அறியும். எத்தனையோ இம்சைகள், ஆத்திரமூட்டல் மத்தியிலும் நாம் பொறுமையை இழந்து சமாதானக் கதவுகளை மூடிவிடவில்லை என்பதையும் சர்வதேச சமூகம் நன்கு அறியும். நான்கு ஆண்டுக்கால அமைதிப் பயணத்திற் சமாதானத்தின் மீதான எமது பற்றுறுதியை நாம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துக் காட்டி விட்டோம்.’

- இவ்வாறு தமிழீழத் தேசியத் தலைவர் கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் தெரிவித்திருந்தார்.

அன்புக்குரிய நேயர்களே!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், பலஸ்தீன விடுதலைப் போராட்டத்தையும் ஒப்பிடுவதல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம். மாறாக ஜனநாயகம்-பயங்கரவாதம் போன்ற சொல்லாடல்களிலும் கருத்துருவாக்கங்களிலும் எவ்வளவு முரண்பாட்டையும், தெளிவின்மையையும் சம்பந்தப்பட்ட உலக நாடுகள் கொண்டிருக்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டித் தர்க்கிப்பதுவே எமது எண்ணமாகும். எமது இந்த கருத்துக்கு உதாரணமாக தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் தின உரையினைக் குறிப்பிட்டோம். தேசியத் தலைவரின் கருத்து மிகச் சரியானதே என்பதனை ஹமாஸ் இயக்கத்தின் வெற்றிக்குப் பின்னால் நடைபெறுகின்ற சம்பவங்கள் நிரூபித்து நிற்கின்றன.

இஸ்ரேல் தேசத்தின் இருப்பினை ஹமாஸ் இயக்கம் அங்கீகரிக்க வேண்டும் என்று வற்புறுத்துகின்ற மேற்குலக நாடுகள் முதலில் ஒன்றை ஒப்புக்கொள்ள வேண்டும். இஸ்ரேல் தேசம் என்பதானது பலஸ்தீனத் தாயகத்தில் அமைக்கப்பட்டு உள்ளது என்ற கருத்தை இந்த உலக நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும.; இதன் பின்னரே இவர்கள் ஹமாஸ் பற்றிப் பேச வேண்டும்.

இங்கே மேலும் சில விடயங்களையும் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். ஹமாஸ் இயக்கம் விட்டுக் கொடுப்புக்கள் மூலம் தேர்தலையோ யுத்தத்தையோ வெல்லவில்லை. மாறாக பலத்தின் அடிப்படையில் போராட்ட வெற்றியின் அடிப்படையில்தான் ஹமாஸ் இயக்கம் தனது இருப்பைத் தக்க வைத்துக் கொண்டு வெற்றிகளைச் சம்பாதித்துள்ளது. யார் விரும்பினாலும் சரி, விரும்பா விட்டாலும் சரி ஹமாஸ் இயக்கத்தின் போராட்டம் காரணமாகத்தான் பலஸ்தீனம் மீதான தனது ஆக்கிரமிப்புக் குறித்து இஸ்ரேலுக்கு இன்று மறுசிந்தனை உருவாகியுள்ளது என்பதே உண்மையுமாகும். உலகநாடுகளும் உள்@ர இந்தக் களநிலைமையை உணர்ந்துதான் உள்ளன. தொடர்ந்து முரண் நிலையில் மேற்குலகம் வாழமுடியாது.!

இன்னொரு விதமாகவும் சிந்தித்துப் பார்க்கலாம். பலஸ்தீனத் தேர்தலில் ஹமாஸ் இயக்கம் தோல்வியுற்று மண் கவ்வியிருந்தால் இதே உலக நாடுகள் என்ன விதமான கருத்துக்களை வெளியிட்டிருக்கும் என்பதனையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அப்படி நடந்திருந்தால் ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது என்றுதான் இந்த உலக நாடுகள் முழக்கமிட்டிருக்கும்.

ஜனநாயகம் பற்றி இவ்வளவு பேசுகின்ற இந்த மேற்குலக நாடுகள் ஜனநாயக மரபுகளைப் பேணாத சவூதி போன்ற மன்னர் ஆட்சி நாடுகளுடன் மிகுந்த நட்புறவுடன் கொஞ்சிக் குலாவுவதையும் சுட்டிக் காட்டியாக வேண்டும். அங்கே தேர்தல் இல்லை. ஜனநாயகம் இல்லை. ஆனால் மேற்குலகு உறவு கொண்டாடுகிறது. பலஸ்தீனத்திலோ தேர்தல் நடைபெற்று ஜனநாயக ரீதியில் மக்கள் தீர்ப்பை வழங்கியிருக்கின்றார்கள். ஆனால் மேற்குலகு பலஸ்தீனத்தோடு உறவு கொள்ள மறுக்கின்றது.

எத்தகைய பெரிய முரண்பாடுகள்!

முரண்பாடுகளின் மூட்டையாகத் தொடர்ந்தும் மேற்குலகம் செயற்பட முடியாது. செயற்படவும் கூடாது! ஜனநாயக மரபுகள் பற்றியும் ஜனநாயக விழுமியங்கள் பற்றியும் போதித்து வருகின்ற மேற்குலக நாடுகளின் தலைமைகள் தங்களது போதனைகளுக்கு ஏற்ற மாதிரி தாங்களும் நடந்து காட்ட வேண்டும். இல்லாவிட்டால் இந்தத் தலைமைகளின் போக்கை அவ்வவ் நாட்டு மக்களே சீரணிக்க மாட்டாமல் போகும் நிலைதான் விரைவில் ஏற்படும்! மேற்குலக நாடுகளின் தேவையற்ற அழுத்தங்கள் என்பதானது ஒரு மட்டத்திற்கு மேல் பலன் அளிக்காது என்பதற்கு இன்றைய உதாரணம் ஹமாஸ் இயக்கம்!
 

Democracy and Terrorism  - English translation  by Vannijan.

The Hamas organisation which won in the Jan. 25th general election assumed power last Saturday (18.02.06) in the Palestine parliament. Hamas, declared as a terrorist organisation by America, Israel and the European countries, has been elected to power through democratic means by the Palestinians, causing great shock in the West. The international media too has reported this indeed is a shocking matter.

A truth emerges from this: The countries of the world concerned and the international media had not been hitherto aware of the real situation in Palestine until now. This is revealed by the 'shock' that they had experienced or had to stomach. Today it has been proved that the ground reality is that, those organisations stamped as 'terrorists' by these countries, are recognised by the people as their representatives in the countries of these organisations. We wish to discuss certain important matters on the basis of this ground reality.

Who are these called Hamas?

Hamas is a vast organisation among the many Palestinian liberation organisations which rose up against the Israel invasion on Palestinian. Begun in 1987, one of its main aims, to fight against Israel's invasion, takes primary place. It is believed that Hamas was indirectly supported by Israel in those times as a counter force to Palestine's leader Yaseer Arafat's Palestinian Liberation Organisation. Israel, which could not accept the PLO which was relatively mild, now has to face Hamas, described as an extremist organisation. Had Israel negotiated with the PLO in the right manner this situation would not have risen.

Hamas felt that any peace talk with Israel was but and act of surrender to Israel. Hamas continues to launch suicide attacks as the ultimate of its attacks. Besides, Hamas did not accept the peace pact between PLO and Israel. Time proves that reasons for Hamas hard-line attitude are justified. Israel did never implement the accepted stipulations of the peace accord. Normalcy of life, greatly hoped for by the Palestinians was denied to them. Unable to enjoy peace and independence, without employment opportunities, without facilities for education they were forced beyond the limits of their patience. Meanwhile, the administration of the Palestinian Alfata organisation's Palestinian, was totally corrupt. The people of Palestine were unable to enjoy any benefits and they lost faith in the Alfata organisation.

But Hamas, while engaged in a violent struggle, launched several public welfare projects and are administrating them very efficiently. It runs an administration free of corruption. Its activities involve in looking after the basic needs of the people in Gaza strip, with the co-operation of the people, have won the praise of the Palestinians.

Beyond all these, the Palestinians would have realised an important matter: Alfata does not conduct talks with Israel on the basis of strength but on the basis of weakness. There is nothing wrong in their expectations that an organisation conducting talks to win their rights should posses political and military strength.

Therefore the Palestinian people, through democratic means, have delivered a judgement which shocked the Western countries and their media while it is not a matter of surprise for them who keenly observe the history of liberation struggles.

Their judgement declares that their democratic representatives too are of the Hamas organisation.

The leaders of the Western countries and America, declaring themselves the guardians of the high values of democracy, and stipulating conditions to Hamas without accepting the sovereign mandate of the Palestine people are but ridiculing and insulting the democratic rights of their own citizens. These leaders, refusing to accept the democratic decision of another country basically slight their own citizens' democratic decisions and values. This is a challenge to universal democracy.

This could be further elaborated thus:

Those stamped as terrorists by the Western world have now justified their struggle through democratic means. But the Western world countries, which proudly proclaim themselves as true democrats, are opposed to this democratic decision and this is more dangerous than the terrorism they speak of.

While something that is accused as terrorism is showing its democratic face, democracy is showing its terrorist face.

Then, what is terrorism?  Is there a clear definition for terrorism? Are not the justified political struggles conducted along the lines of morality being branded as terrorism because of the absence of a definition to terrorism? What was said above is not about Hamas but about the Liberation struggle for Tamil Eelam! To be honest, we are not the source of this statement. It is our National Leader, Honourable Vellupillai Pirabhakaran, who is the author of this clear concept.

Many views expressed by the Tamil National leader, Honourable Vellupillai Pirabhakaran in his last martyrs' day speech in 2005, are becoming the realities of today. Having clarified many matters, he had also posed the question about the term 'terrorism'.

It is appropriate to observe the views of the Leader again in the context of present times.

'The international community is fully aware of the fact that we are running an efficient, self-governing administrative structure in the majority areas of the Tamil homeland, which were liberated from Sinhala military occupation by our organisation. Our administrative structure is formidable, consisting of our controlled territories with huge civilian populations, protected by a powerful military force. We have a police force and a judicial system to maintain law and order. We have also developed a complex administrative infra-structure of a shadow government.

Though a large number of Tamils are still living in the military occupied Tamil region, their allegiance is with our liberation movement. The Sinhalese ruling class refuses to accept this ground reality, this political truth and attempts to belittle our liberation organisation as a 'terrorist group'. We are disappointed and sad to note that some international governments, having been influenced by this false propaganda, continue to retain our organisation on their terrorist list. Biased positions taken by powerful nations acting as guardians of the peace process, in excluding and alienating our liberation organisation as a 'terrorist outfit' and supporting the interests of the Sri Lankan state, severely affected the balance of power relations between the parties in conflict at the peace negotiations. This pro-state bias constrained our liberty to choose our own political status. This partiality finally became one of the causes for the collapse of the peace talks.

There is no clear, coherent, globally acceptable definition of the concept of terrorism.

As such, just and reasonable political struggles fought for righteous causes are also branded as terrorism. Even authentic liberation movements struggling against racist oppression are denounced as terrorist outfits. In the current global campaign against terror, state terrorism always finds its escape route and those who fight against state terror are condemned as terrorists. Our liberation organisation is also facing a similar plight.

The world is well aware of the problems created by the Sinhala state and its obstacles and duplicity against the peace process facilitated by Norway which dragged on for the last four years. The international community knows that we have not closed the doors for peace losing patience even in the face of so many oppressions and incitements. We have proved beyond suspicion our will for peace during the four year peace process.'

The National Leader of Tamil Eelam said in his 2005 November martyrs' day speech.

The aim of this article is not to compare the Tamil Eelam liberation struggle with the Palestinian liberation struggle. On the contrary, we wished to discuss the discrepancy and the lack of clarity the concerned world countries have about the concepts and terminology of democracy and terrorism. We cited our Leader's martyrs' day speech as an example to strengthen our view. The events that take place after the victory of Hamas prove our National Leader's views are absolutely right.
The western countries, which compels Hamas to accept the existence of Israel, should first accept the fact that, Israel as a country is established within the Palestinian homeland. Only then should they comment on Hamas.

We wish to point out some more matters here. Hamas has not won the election or the war by acts of giving in. On the contrary it has earned its victories on the basis of strength and struggle. Whether anyone likes it or not, Israel is forced to reconsider its invasion of Palestine only because of the resistance and struggle against the invasion by the Hamas organisation. The world countries too have realised this truth and the Western world cannot continue to dispute this!

This matter could be viewed from another angle: We should imagine the reaction of the world countries had Hamas badly lost in this election; they would have cried to the heavens that democracy had won.

It should also be pointed that these Western powers which speak so much of democracy, do maintain very friendly and cordial relationships with countries ruled by kings and not by democracy. There are no elections held in these countries; yet the western powers maintain friendly relationships with them. But there had been elections in Palestine where its people have delivered their judgement in a democratic manner; but the Western world refuses to establish relationship with Palestine.
What glaring contradictions!

The western world can no longer function like a bundle of contradictions. These countries preaching sermons on democratic traditions and values should themselves practice what they preach. If not, the very people of these countries will find it difficult to digest the trends of their leaders.Hamas stands as a clear example to the fact that unnecessary pressures will not prove useful if they go beyond a certain level.
 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home