Selected Writings by Sanmugam Sabesan
சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா
உண்மையை மீண்டும் சொல்கின்றேன்!
[together with
Translation in
English by Arvalan]
24 January 2006
"
�சமாதானப்பேச்சு - சமாதானப்பேச்சு� என்று தொடர்ந்தும் இந்த உலக
நாடுகள் புலம்பி வருகின்றார்களே - இவர்கள் தயவு செய்து ஒரு
விடயத்தை விளக்குவார்களா? பேசுவதானால் எதைப்பற்றி பேசுவது?
�ஒற்றையாட்சியின் கீழ் தீர்வா?� �தமிழர் கோட்பாட்டை ஏற்றுக்
கொள்ளாத பேச்சு வார்த்தையா?� இதன் அடிப்படைகளை உலகநாடுகள்
தெளிவாக்க வேண்டும். ஏனென்றால் முன்னர் உலக நாடுகள் ஏற்றுக்
கொண்ட கோட்பாடுகளையெல்லாம்
இப்போது சிறிலங்கா அரசு மறுதலித்து நிற்கின்றது.
இவை தெளிவாக்கப்படாமல் பேசப்போவது பயன்
தராது என்பதே எமது கருத்தாகும்."
[see also
US Under Secretary of Political Affairs, Nicholas Burns,
Press Briefing, Colombo ]
இலங்கைத்தீவில்
மீண்டும் போர் மூளக்கூடிய அபாயநிலை தோன்றியிருப்பதை, அங்கு தொடர்ந்து
நிகழும் வன்முறைச் செயல்கள் உணர்த்தி வருகின்றன.
வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருவதை நாம் காண்கின்ற
அதேவேளையில், சமாதானத்திற்கு எதிராகவும் வன்முறைக்கு ஆதரவாகவும்
கருத்தாக்கங்கள் பல வெளியிடப்பட்டு வருவதையும் நாம் உணரக் கூடியதாக
உள்ளது. இவற்றோடு சில உலக நாடுகளின் �அறிக்கை அழுத்தங்களும்� சேர்ந்து
கொண்டு நிலைமையை மேலும் குழப்பி வருவதையும் நாம் வருத்தத்துடன்
அவதானிக்கின்றோம்.
�சிறிலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவும், அவரது அரசும் தமிழ்
மக்களின் தேசியப் பிரச்சனையை ஓர் இராணுவத் தீர்வினூடாகத் தீர்க்க
முயன்று வருகின்றது� -என்பதனை நாம் ஏற்கனவே தர்க்கித்து வந்துள்ளோம்.
தமது இராணுவத் தீர்விற்கு வலிமையூட்டுவதற்காகச் சிறிலங்கா அரசு
உலகநாடுகளில் பல பொய்மைப் பரப்புரைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு
வருகின்றது. விடுதலைப் புலிகளைத் தடை செய்ய வேண்டும், விடுதலைப்
புலிகள் மீது தொடர்ந்து அரசியல், இராணுவ, பொருளாதார அழுத்தங்களை
மேற்கொள்ள வேண்டும். என்பவை போன்ற கோரிக்கைகளையும் உலக நாடுகளிடம்
சிறிலங்கா அரசு முன்வைத்து வருகின்றது.
�சிறிலங்காவின் சமாதானத்திற்கு முரண்பாடான
இத்தகைய கோரிக்கைகளுக்கு இணக்கமாக அமெரிக்கா போன்ற சில உலகநாடுகள்
பேசி வருவது நீதியான சமாதானத் தீர்வு ஒன்று தமிழர்களுக்கு
கிட்டுவதைத் தடை செய்யும் என்பதே எமது கருத்தாகும்.�
சில முக்கிய வரலாற்று
உண்மைகளை அமெரிக்கா போன்ற சில உலகநாடுகள் தமது கவனத்தில் கொள்ள
வேண்டும் என்பதே எமது எண்ணமுமாகும்.
இன்றுவரை நடைபெற்ற பிரச்சனைகளுக்கும், இன்றைய பிரச்சனைகளுக்கும்
மூலகாரணம் என்ன? அதற்குரிய காரண கர்த்தா விளங்குபவர்கள் யார்?- என்பவை
போன்ற கேள்விகளுக்குரிய உண்மையான பதில்கள் நிதர்சனத்தை உணர வைக்கும்.
இலங்கைத்தீவு பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற
தினத்திலிருந்து இன்றைய தினம்வரை இலங்கைத்தீவை ஆண்ட சிங்களத்
தலைமைகளும் சிங்கள அரசுகளும் ஜனநாயக மரபுகளைப் பேணவில்லை.
மாறாக, ஜனநாயக மரபுகளுக்கு எதிராக சகல சிங்கள அரசுகளும் செயலாற்றி
ஜனநாயகத்தின் உயர் விழுமியங்களைச் சீர் குலைத்தன. தமிழ் மக்களுக்கு
உரித்தான ஜனநாயக உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டு, பறிக்கப்பட்டு
வந்துள்ளன. தங்களது உரிமைகளைப் பெறுவதற்காக, தமிழ் மக்கள் மேற்கொண்ட
ஜனநாயக மரபுப் போராட்டங்கள் யாவற்றையும் சிங்கள அரசுகள் வன்முறையைப்
பிரயோகித்து அடக்கின.
இராணுவ வன்முறை
அரசியல்(யாப்பு) வன்முறை, பொருளாதார வன்முறை, கல்வித்தரப்படுத்தல்
வன்முறை, இனக்கலவர வன்முறை என்று சகல விதமான வன்முறைகளையும் தொடர்ந்து
வந்த சிங்கள அரசுகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்டு வந்தன.
உண்மையான ஜனநாயகத்தைச் சிங்கள அரசுகள்
வன்முறையூடாகச் சிதைத்தாலும் உண்மையான ஜனநாயகம் சிங்கள அரசுகளால்
காப்பாற்றப் படாததாலும்தான், தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தை
ஆரம்பித்தார்கள்.
சிறிலங்கா அரசுகளின்
ஜனநாயகத்திற்கு எதிரான வன்முறைகளை, தமிழ் மக்கள் தமது ஆயுதப்
போராட்டத்தின் மூலமாக எதிர்கொண்டு வெற்றியும் கொண்டதனால்தான் இன்றைய
சிங்கள அரசுகள் சமாதானத் தீர்வுகள் குறித்துப் பேச ஆரம்பித்தன!
ஜனநாயகத்தை நசுக்குவதற்காக, சிங்கள அரசுகள் மேற்கொண்ட வன்முறை
நடவடிக்கைகள் அரச பயங்கரவாதமாகும்! ஜனநாயகத்தைக்
காப்பாற்றுவதற்காகவும், சிறிலங்கா அரச பயங்கரவாதத்தை
எதிர்கொள்வதற்காகவும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைமையில்
மேற்கொண்ட ஆயுதப்போர் என்பதானது ஓர் உரிமைப் போராட்டமாகும்.!
ஆனால் அமெரிக்கா,
அவுஸ்திரேலியா போன்ற சில நாடுகளின் தற்போதைய அரசுகள் தமிழரின் உரிமைப்
போராட்டத்திற்கான ஆயுதப்போரை பயங்கரவாதம் என்றும் சிங்கள அரசுகளின் அரச
பயங்கரவாதங்களை ஜனநாயக மரபு(?) என்றும் குறிப்பிட முனைவதானது, ஜனநாயக
விழுமியங்களுக்கு எதிரான செயல்களாகும்.!
தமிழ் மக்கள் மீது சிங்கள அரசுகள் தொடர்ந்து மேற்கொண்ட பன்முக
வன்முறைகளைக் கண்டு கொள்ளாத மேற்குலகம் இந்த வன்முறைகளுக்கு எதிரான
போராட்டத்திற்குப் பயங்கரவாதம் என்று பெயர் இடுவது பைத்தியக்காரத்
தனமானதாகும்.
சிறிலங்காவிற்கான
அமெரிக்கத் தூதுவர்
திரு ஜெப்ரி லான்ஸ்டெட் அவர்கள் அண்மையில் தெரிவித்த கருத்துக்கள்,
அமெரிக்காவின் ஜனநாயக விழுமியங்களையே கொச்சைப்படுத்துவதாக
அமைந்துள்ளது.
மீண்டும் போர்
ஆரம்பமானால், மிகவும் வலிமையான செயற்திறமை மிக்க சிறிலங்கா இராணுவத்தை
புலிகள் நேர்கொள்ள வேண்டி வரும். விடுதலைப்புலிகள் சமாதானத்தைப்
புறக்கணித்தால் இந்த நிலைமையைப் புலிகள் எதிர்கொள்வார்கள் என்பதனை நாம்
தெளிவாக சொல்லி வைக்க விரும்புகின்றோம் என்ற கருத்துப்படவும்,
அமெரிக்கா சமாதானத்தை விரும்புவதனால்தான் சிறிலங்கா அரசிற்கு இராணுவ
ரீதியான உதவிகளைச் செய்துள்ளது என்ற பொருள்படவும் சிறிலங்காவின்
அமெரிக்கத் தூதுவர் திரு ஜெப்ரி லான்ஸ்டெட் கூறியுள்ளார். உண்மையான
சமாதானத்தை திரு ஜெப்ரி லான்ஸ்டெட் அவர்களும் அவர் பிரதிநிதித்துவம்
செய்கின்ற அமெரிக்காவும் விரும்புவது உண்மையென்றால் சிறிலங்கா
அரசிற்குத்தான் இத்தகைய �அறிக்கை அழுத்தங்கள்� கொடுக்கப்பட்டிருக்க
வேண்டும்.!
ஏனென்றால் இத்தகைய பிரச்சனைகளுக்கும் காரணமான, சிங்கள அரசை அதன் அரச
பயங்கரவாதத்தை, அமெரிக்க அரசு தட்டிக்கேட்டிருக்க வேண்டும்.! அந்த அரச
பயங்கரவாதத்திற்கு எதிராக தொடர்ந்து எழுகின்ற போராட்டத்திற்குப்
�பயங்கரவாதம்� என்ற பெயரிட்டால் தீர்வு எவ்வாறு வரும்?
தங்களுடைய அரசு பிழை விடுகின்றது என்று தெரிந்தாலும் சிங்கள மக்கள்
தமது அரசுக்கு எதிராக ஆக்கபூர்வமாகக் கிளர்ந்து எழுந்ததில்லை. ஆனால்
தங்களுடைய அரசு பிழை விடுகின்றது என்ற அமெரிக்க மக்கள் கருதினால்
அவர்கள் தங்களுடைய அரசுக்கு எதிராக கிளர்ந்து எழுந்து ஜனநாயக முறையில்
தமது எதிர்ப்புக்களைக் காட்டத் தவறியதில்லை. அது வியட்நாம்
போர்க்காலத்தில் இருந்து தொடர்ந்து வருகின்றது.
ஆனால் அவர்களை-அதாவது தனது நாட்டு மக்களை-அமரிக்க அரசு வன்முறையூடாக
அடக்கியதில்லை. காரணம் ஜனநாயக விழுமியங்களையும் உரிமைகளையும் பாதுகாக்க
விரும்புகின்றது. அதனால் தனது மக்களின் விருப்பு-வெறுப்புக்களை அது
ஜனநாயக மரபில் அணுகுகின்றது.
ஆனால் சிறிலங்கா அரசுகளோ, ஜனநாயக வழிப்போராட்டங்களை வன்முறையூடாக
நசுக்கியே வந்துள்ளன.! அதனால் தான் அங்கே போராட்டம் வெடித்தது.!
தனது நாட்டு மக்களுக்கு ஒரு நியாயத்தையும், சிறிலங்கா போன்ற
வெளிநாடுகளுக்கு வேறு விதமான நியாயத்தையும் (?) அமெரிக்கா வழங்க
முயல்கின்றது என்பது உண்மையென்றால் அது அமெரிக்கப் பெருமக்களையும்,
அவர்கள் நம்புகின்ற ஜனநாயக மரபுகளையும் சிறுமைப்படுத்துவதாகும்.
அமெரிக்கா போன்ற உலக நாடுகளின் ஆதரவை எதிர்பார்த்தோ அல்லது அவர்களது
உதவிகளை நம்பியோ, தமிழீழ மக்கள் தங்களுடைய உரிமைப் போராட்டத்தை
ஆரம்பிக்க வில்லை என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்! கடந்த
ஐம்பது ஆண்டு காலத்திற்கும் மேலாக, தமிழ் மக்கள் தொடர்ந்து சிங்கள அரச
பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டபோது, இந்த உலக நாடுகள் உருப்படியாக
எதுவும் செய்ததில்லை என்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.!
இன்னுமொரு முக்கியமான விடயத்தையும் நாம் இந்த வேளையில் சொல்லி வைக்க
விழைகின்றோம்.! இந்தச் சம்பந்தப்பட்ட உலக நாடுகள், தமிழீழ
விடுதலைப்புலிகள் மீது பிரயோகிக்கின்ற அல்லது பிரயோகிப்பதாக
�நினைக்கின்ற� அழுத்தங்கள் எதுவும் ஒரு கட்டத்திற்கு மேல் ஒரு
மட்டத்திற்கு மேல் செல்லுபடியாகாமல் போய் விடும்.! அவை வெறும் வெற்று
அழுத்தங்களாகத்தான் எதிர்காலத்தில் திகழவும் கூடும். அதை இப்போதே
சொல்லி வைத்து விட்டோம்.!
இவ்வளவற்றையும் சுட்டிக்காட்டி, யதார்த்த நிலையைத் தரக்கித்த நாம்
இன்னுமொரு விடயத்தையும் கூற விரும்புகின்றோம்.
அது காலம் இன்னும் கடந்து விடவில்லை என்பதுதான்!
இலங்கைத்தீவில் உள்ள உண்மையான சமாதானம் நிலவுவதற்கு நீதியான சமாதானத்
தீர்வு கிட்டுவதற்கு இனியாவது, உலகநாடுகள் உண்மையாக நேர்மையாகப்
பங்களிக்க முன்வரவேண்டும். சிறிலங்காவிற்கான அமெரிக்க தூதுவர் திரு
ஜெப்ரி லான்ஸ்டெட் அவர்கள் கூறுவது போல் �அமெரிக்கா மீண்டும் போர்
வருவதை விரும்பவில்லை� என்ற கூற்று உண்மையானால் சில நடவடிக்கைகளை சில
அரசியல் அழுத்தங்களை அமெரிக்காவும் சம்பந்தப்பட்ட உலக நாடுகளும்
மேற்கொள்வதோடு, சில உண்மைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.!
� பிரித்தானியா அரசிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற தினத்திலிருந்து
இன்றுவரை ஏற்பட்ட இனப்பிரச்சனைக்கு
மூலகாரணம், சிங்கள அரசுகள் தான் என்பதை
உலக நாடுகள் வெளிப்படையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.!
� இந்த இனப்பிரச்சனை-தமிழர்களின் தேசியப்பிரச்சனை- முறையாக
தீர்க்கப்படாமல், பூதாகரமாக வளர்ந்து வந்துள்ளமைக்கும் சிங்கள அரசுகள்
தான் காரணம் என்பதையும், உலகநாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.!
� இப்பிரச்சனையை இதுவரை காலமும் -தற்போதைய சிறிலங்கா அரசு உட்பட-எந்த
சிறிலங்கா அரசும் நியாயமான முறையில் தீர்க்க முன்வரவில்லை என்ற
உண்மையையும் உலகநாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.!
� சிறிலங்காவின் தற்போதைய அரசியல் யாப்பு என்பதானது, தமிழ் மக்களுக்கு
எதிரானது மட்டுமல்ல, ஜனநாயக மரபுகளுக்கும் எதிரானது என்ற உண்மையையும்
உலக நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்!
மேற்கூறிய யதார்த்தங்களை, அமெரிக்கா-அவுஸ்திரேலியா உட்பட சம்பந்தப்பட்ட
உலக நாடுகள் வெளிப்படையாக ஏற்றுக் கொள்வதன் மூலம், தாங்கள் நேர்மையான
நடுநிலையாளர்கள், ஜனநாயக விழுமியங்களை பேணுபவர்கள் என்ற நம்பிக்கையை
இலங்கை மக்களிடம் ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தத்தமது நாட்டு
மக்களிடையேயும், தங்களது அரசுகளின் வெளிநாட்டுக் கொள்கைகள் குறித்த
நம்பிக்கையையும் வலுப்படுத்தலாம்.
அத்தோடு சில முக்கியமான நடவடிக்கைகளையும் இந்த உலக நாடுகள் உடனடியாக
மேற்கொள்ள வேண்டும்.
� புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டபடி, தமிழ் ஆயுதக்
குழுக்களின் ஆயுதங்களை சிறிலங்கா அரசு களைய வேண்டும். மிக அண்மையில்
கூட ஐரோப்பிய இணைத் தலைமை மகாநாடு, இதனைச் சிறிலங்கா அரசிற்கு
வலியுறுத்தியிருந்தது. சமாதானத்தைக் குறிக்கின்ற செயல்களை, இந்த ஆயுதக்
குழுக்கள் ஊடாக, சிறிலங்கா அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவதை
அமெரிக்கா-அவுஸ்திரேலியா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டிக்க வேண்டும்.
ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டியதற்கான அழுத்தங்களை,
உலகநாடுகள் மேற்கொள்ள வேண்டும்.
� புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டபடி, வீடுகள்
பாடசாலைகள், பொதுக்கட்டடங்கள், வழிபாட்டு தலங்கள் போன்ற இடங்களில்
இருந்து சிறிலங்கா இராணுவம் வெளியேற வேண்டும்.- இதற்கான அழுத்தங்களை
உலக நாடுகள் மேற் கொள்ள வேண்டும்.
� புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டபடி தமிழர்
தாயகத்தில் இயல்பு நிலை தோன்றுவதற்குரிய சகல முயற்சிகளும் முறையாக மேற்
கொள்ளப்பட வேண்டும். கொழும்பில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும்
�அறிக்கை� விடுகின்ற சம்பந்தப்பட்ட ராஜதந்திரிகள் உடனடியாக,
மீட்கப்பட்ட தமிழர் தாயகப் பகுதிகளுக்கு விஜயம் செய்து சிறிலங்கா
அரசின் மாற்றான் தாய் மனப்பான்மையை புரிந்து கொள்ள வேண்டும்.!
� தமிழ்ப் பொதுமக்கள் மீது சிறிலங்கா இராணுவம் புரிந்து வருகின்ற மனித
உரிமை மீறல்கள், படுகொலைகள், பாலியல் பலாத்காரங்கள் போன்றவற்றை உலக
நாடுகள்
வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும்.
இச்செயல்களை நிறுத்துவதற்குரிய அழுத்தங்களை உலக நாடுகள் சிறிலங்கா அரசு
மீது பிரயோகிக்க வேண்டும்.
� சுனாமிப் பேரழிவு வந்து இப்போது ஓர் ஆண்டும் முடிந்து விட்டது.
பொதுக்கட்டமைப்புத் திட்டத்திற்கு சிறிலங்காவின் �நீதித்துறை�
இடைக்காலத் தடை உத்தரவு வழங்கியிருப்பதனால் தமிழர் தாயகத்தில் முறையான
புனருத்தாரண புனர் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப் படவில்லை. இந்த
மாபெரும் மனிதாபிமானப் பிரச்சனை குறித்து உலக நாடுகள் கவனம் செலுத்த
வேண்டும்.
� �சமாதானப்பேச்சு - சமாதானப்பேச்சு� என்று தொடர்ந்தும் இந்த உலக
நாடுகள் புலம்பி வருகின்றார்களே - இவர்கள் தயவு செய்து ஒரு விடயத்தை
விளக்குவார்களா? பேசுவதானால் எதைப்பற்றி பேசுவது? �ஒற்றையாட்சியின்
கீழ் தீர்வா?� �தமிழர் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளாத பேச்சு வார்த்தையா?�
இதன் அடிப்படைகளை உலகநாடுகள் தெளிவாக்க வேண்டும். ஏனென்றால் முன்னர்
உலக நாடுகள் ஏற்றுக் கொண்ட கோட்பாடுகளையெல்லாம் இப்போது சிறிலங்கா அரசு
மறுதலித்து நிற்கின்றது.
இவை தெளிவாக்கப்படாமல் பேசப்போவது பயன் தராது
என்பதே எமது கருத்தாகும்.
நாம் மேற்கூறிய உண்மைகளை சம்பந்தப்பட்ட உலகநாடுகள் வெளிப்படையாக
ஏற்றுக்கொள்ள வேண்டும். மேற்கூறிய செயல்பாடுகளையும் அரசியல்
அழுத்தங்களையும் இந்த உலகநாடுகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு
நடந்தால்தான் இந்த சம்பந்தப்பட்ட உலகநாடுகள் உண்மையான சமாதானத்
தீர்வில் உண்மையாக அக்கறை கொண்டுள்ளன என்பதை தமிழ் மக்கள் ஏற்றுக்
கொள்வார்கள். இல்லாவிட்டால் ஒரு கட்டத்திற்குப் பிறகு தமிழ் மக்களின்
நம்பிக்கையை இந்த உலகநாடுகள் முற்றாக இழந்து போக நேரிடும்.
இன்னுமொரு முக்கிய விடயத்தையும் சொல்லி வைக்க விழைகின்றோம். நாம்
மேற்கூறிய பிரச்சனைகள் தீர்க்ககப்படாமல் தொடர்ந்தும் இருக்குமானால்
நோர்வே போன்ற நாடுகளின் வன்னி விஜயங்களால் பிரயோசனம் எதுவும் ஏற்படும்
என்று நாம் கருதவில்லை. கடந்த நான்கு ஆண்டு காலத்திற்கும் மேலாக
சமாதானத் தீர்வில் தாம் அக்கறை கொண்டுள்ளதாகத் தெரிவித்து வந்துள்ள
சம்பந்தப்பட்ட உலக நாடுகள் இனியாவது கள யதார்த்தத்தை உணர்ந்து கொண்டு
உண்மையான அக்கறையுடன் செயல்பட முன்வரவேண்டும். அதுவும் உடனடியாக
முன்வரவேண்டும்.
முத்தாய்ப்பாக ஒரு கவிதையைத்தர விழைகின்றோம். நாம் இவ்வளவு நேரம்
தர்க்கித்த விடயத்தை மிக எளிதாக, ஒரு சிறு கவிதை ஊடாக பெண் போராளி
மேஜர் பாரதி விளக்கியிருக்கின்றார். அந்தக் கவிதை வருமாறு:
�மேடை மீது
ஏறியிருந்து
ஏற்றம் பற்றிப் பேச்சு நடத்தும்
தேசத் துரை மாரே!
குனிந்து பாருங்கள்
பூவாய் இருக்கும்
கம்பளம் கீழே
புழுவாய் நெளியும்
மனித உடல்கள்.
அவை உங்கள்
குருட்டுக் கண்களை
வெருட்டித் திறக்கும்.
கோழியின் செட்டைக்குள்
குஞ்சுகள்தான் பாதுகாக்கப்படும்.
ஆனால் இங்கே பருந்துகள் தானே
பாதுகாக்கப் படுகின்றன.
உலக சமாதானம்
இந்த உன்னதக்
கோட்பாட்டிற்குள்
தலையைப் புதைக்கும்
தீக்கோழி நீ!�
|
Truth:
the noble Truth
[Translation of the analysis broadcast on Melbourne's 3CR Tamil
Voice on January 231, 2006. The translation is by Arvalan]
Sri Lanka is in the brink of war as evidenced by the escalation
violence. At the same time anti peace and pro war cries could be
heard loud and clear. Further, some statements made by the
international community are creating more problems.
We have argued that the Mahinda Rajapakse government is endeavoring
to find a military solution to the ethnic conflict. To strengthen
their resolve to find a military solution the government of Sri
Lanka has embarked on a false propaganda campaign aimed at the
imposing a ban on the Tamil Tigers.
The fact that countries like USA have fallen prey to this false
propaganda does not augur well for the Tamil community�s struggle
for �peace with justice�. We expect the international community to
consider some historical facts in this context.
What is the core reason behind the current conflict? Who created
this conflict? are some of the questions that need to be answered to
understand the real truth behind this conflict.
Since gaining independence from British, successive Sinhalese
governments did not adhere to the principles of democracy.
Democratic rights belonging to the Tamils have been continually
denied over the years. Peaceful struggles launched by the Tamils
were oppressed with the force of violence. Sri Lankan governments
continued to dish out military violence, constitutional violence,
economic violence, educational violence, ethnic riots at the Tamils.
Tamils took up violence because of the continued denial of their
democratic rights at the hands of successive Sri Lankan governments.
Tamils successfully encountered the denials of their democratic
rights through an armed struggle, leading to the Sri Lankan
governments to agree for peace talks.
The acts the Sri Lankan government committed to deny the democratic
rights of the Tamils amounts to State terrorism. The armed struggle
launched by the Tamil Tigers to save democracy and protect the Tamil
people amounts to a liberation struggle. However, that fact that
current governments in countries such as Australia and USA have
labeled the Tamil�s armed struggle as terrorism and Sri Lanka�s
state terrorism as democratic way. This is rather unfortunate and
defies the principles of democracy these countries preach.
It is rather ridiculous that these countries which turned a blind
eye to the atrocities committed against the Tamil community by
successive Sri Lankan government, are now labeling Tamil�s defensive
struggle as terrorism.
Recent comments made by the US Ambasidor to Sri Lanka Jeffrey
Lunstead are a disgrace to the democratic values held by his
country.
"If the LTTE chooses to abandon peace, however, we want it to be
clear, they will face a stronger, more capable and more determined
Sri Lankan military," Lunstead said. "We want the cost of a return
to war to be high" he added. He said the US remained committed to
the peace process in Sri Lanka, and in helping the legitimate
governing bodies of the island to prepare for their roles in
developing and protecting their citizens.
If the ambassador and US wants then they should apply pressure on
the Sri Lankan government. Because US should take into task the
government which is responsible for this problem and is committing
state terrorism against innocent Tamil civilians. How could you
realistically expect a solution for a problem when you label the
aggrieved party as �terrorists�?
Sinhalese people have never risen against their own government, even
when they know their government is at fault. However, the American
public has always risen against their government, like they did
during the Vietnam War. The American governments have never
oppressed these protestors violently. The reason being, they want to
protect the democratic rights of their people. However, successive
Sri Lankan governments have suppressed democratic protests resulting
in the outbreak of an armed struggle.
If it is true that US is trying to deny the same democratic
rights which is being enjoyed by its own citizens to the people of
Sri Lanka, than that demeans the US public and the high regard they
hold for their democratic rights.
Tamil people did not launch their liberation struggle with the
expectation they will earn the recognition and support of
governments like US. This may be because when the Tamils suffered at
the hands of the successive Sri Lankan governments these countries
did nothing to stop it. The attempted pressurizing tactic used by
these international forces at the Tamil Tigers may not work beyond a
certain point.
Even after pointing out these facts, I would like to state that
there is still time available for US and other international forces
to change their attitude towards the Tamil liberation struggle.
International community should come forward to establish a peace
with justice in the island of Sri Lanka. If it is true that the
international community does not want a war in SL they need to take
certain actions and accept the truth behind the ethnic problem.
� It is the Sri Lankan government which is responsible for all
the problems created since independence from Britain.
� It is the Sri Lankan government which responsible for the
escalation of the Tamil liberation struggle.
� Successive Sri Lankan governments have failed to propose a
concrete solution for the ethnic problem, including the current
regime
� Sri Lanka�s current constitution is not only anti-Tamil, but is
undemocratic.
International community must accept these assertions explicitly
to prove to the Sri Lankan community that they are impartial
mediators in this conflict to earn back the lost confidence. Further
this will also earn the respect of their country people in regard to
their Foreign Policy being pursued.
|