Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan >  மகிந்தாவின் சி(நி)ந்தனைகள்


Selected Writings by Sanmugam Sabesan
சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா

 மகிந்தாவின் சி(நி)ந்தனைகள்
[together with English Translation]

6 December 2005


சிறிலங்காவின் புதிய அரச அதிபராக பதவி ஏற்றுள்ள மகிந்த ராஜபக்ஸ அவர்கள், தமிழீழ மக்களின் இனப் பிரச்சனையைத் தீர்ப்பதில் ஒரு புதிய அணுகு முறையைக் கடைப்பிடிக்கப் போவதாக தெரிவித்து வருகின்றார். அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் பேசுவதற்கு தனது விருப்பத்தை தெரிவித்துள்ளதுடன் போர் நிறுத்தத்தை கடைப்பிடித்து அமைதியையும் பேணப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

ஆகையினால் மகிந்த ராஜபக்ஸ சமாதான வழிமுறையை எவ்விதம் கையாளப் போகின்றார் என்பதையும் தமிழ் மக்களுக்கு எவ்விதம் நீதியை வழங்கப் போகிறார் என்பதையும் முதலில் அறிந்து கொள்வது அவசியம் ஆகிறது. எனவே அதிபர் மகிந்த ராஜபக்ஸவின் நகர்வுகளையும் அவர் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகளையும் சிறிது காலம் பொறுத்திருந்து பார்ப்பதென்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் முடிவு செய்துள்ளார்.

ஆகவே வரையறுக்கப்பட்ட ஒரு குறுகிய கால இடைவெளிக்குள் தமிழ் மக்களின் அரசியல் வேட்கைகளைத் திருப்தி செய்யும் வகையில் ஒரு நியாயமான தீர்வுத்திட்டத்தைப் புதிய அரசாங்கம் முன் வைக்க வேண்டும்-என்று தேசியத் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் மேலும் ஒரு முக்கிய விடயத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த எமது இறுதியான உறுதியான, அவசர வேண்டுகோளை நிராகரித்து, கடும்போக்கைக் கடைப்பிடித்து காலத்தை இழுத்தடிக்கப் புதிய அரசாங்கம் முற்படுமானால் நாம் எமது மக்களுடன் ஒன்றிணைந்து எமது சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை எமது தாயகத்தில் தன்னாட்சியை நிறுவும் தேச சுதந்திரப் போராட்டத்தை அடுத்த ஆண்டில் தீவிரப் படுத்துவோம் - என்று தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இந்த குறுகிய கால அவகாசத்தின் முக்கியத்துவம் குறித்தும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சமாதானத்தீர்வு ஒன்றிற்கான வாய்ப்பை மீண்டும் ஒரு முறை சிங்கள ஆட்சிப் பீடத்திற்கு வழங்கியுள்ள தமிழீழத் தேசியத் தலைவர் வேறு சில விடயங்களையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

அது மகிந்த ராஜபக்சவின் ‘சிந்தனைகள்’ பற்றியதாகும்.

‘சிங்கள பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள மகிந்த ரஜபக்ஸ இலங்கை வாழ் மக்கள் சமூகங்கள் அனைத்தையும் பிரதிநிதித்துவப் படுத்தவில்லை. இது ஒரு முற்று முழுதான சிங்கள பௌத்த ஆட்சிப்பீடமாகும். மகிந்த ராஜபக்ச சிங்கள-பௌத்த மக்களின் நலனைப் பேணும் அரச அதிபராகவே ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருக்கின்றார். அரச அதிபர் மகிந்தவின் சிந்தனைகளையும், கொள்கைகளையும் நாம் நன்கறிவோம். தேசிய இனப்பிரச்சனை தொடர்பாக அவருடைய அரசியல் தரிசனத்திற்கும் தமிழரின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கும் மத்தியிலான இசைவற்ற இடைவெளிகளையும், இணங்காத முரண்பாடுகளையும் நாம் அறிவோம்.’

என்று தமிழீழத் தேசியத் தலைவர் சுட்டிக் காட்டியுள்ளார். இவ்வாறு சுட்டிக் காட்டியுள்ள எமது தேசியத் தலைவர் வேறு ஒரு விடயத்தையும் கூறுகின்றார்.

இவைபற்றி (அதாவது மகிந்த ராஜபக்சவின் சிந்தனைகளுக்கும், தமிழரின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கும் மத்தியிலான இணங்காத முரண்பாடுகள் பற்றி) நான் இங்கு ஒப்பீட்டு மதிப்பாய்வு செய்ய விரும்பவில்லை- என்றும் தலைவர் தெரிவித்திருந்தார்.

விடுதலையை நோக்கிப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு தேசத்தின் தலைவன், தன்னுடைய மாவீரர் தினப் பேருரையின் போது சொல்ல வேண்டிய மிக முக்கியமான விடயங்கள் யாவற்றையும் சொல்லிவிட்ட பின்னர் அவை குறித்து ஒப்பீட்டு மதிப்பாய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதனைச் செய்து முடிப்பதற்கு ஏராளமானோர் இருக்கின்றார்கள். அவர்களில் ஒருவனாக என்னையும் எண்ணிக் கொண்டு மகிந்த ராஜபக்சவின் சி(நி)ந்தனைகள் குறித்துச் சில தர்க்கங்களை முன் வைக்க விழைகின்றேன்.

சிறிலங்காவின் புதிய அரச அதிபரன மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டை முற்றாக மறுதலித்து உள்ளார். அதாவது தமிழ் மக்களுக்கு என்று தாயகம் எதுவும் இல்லை என்று கூறுகின்றார். இது முதலாவது அடிப்படை முரண்பாடு!.

இந்த முதலாவது அடிப்படை முரண்பாடு, இரண்டாவது அடிப்படை முரண்பாட்டிற்கும் வழி வகுக்கிறது. தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டை மறுப்பதன் மூலம் தமிழர்களின் தேசிய இன அடையாளத்தை சிறிலங்காவின் தற்போதைய அரச அதிபர் மகிந்த ராஜபக்ச மறுக்கின்றார். அதாவது தமிழர்களின் தாயகக் கோட்பாடு மறுக்கப்படுகின்றது. - அதன்மூலம் தமிழர்களின் தேசிய இன அடையாளம் மறுக்கப் படுகின்றது. இது இரண்டாவது அடிப்படை முரண்பாடு!!

இந்த இரண்டு கோட்பாடுகளை மறுப்பதன் மூலம் அதாவது தமிழர் தாயகக் கோட்பாட்டையும் தமிழர்களின் தேசிய இனக் கோட்பாட்டையும் மறுப்பதன் மூலம் சிறிலங்காவின் அரச அதிபர் மகிந்த ராஜபக்ச தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையும் மறுக்கின்றார். இது மகிந்த ராஜபக்சவின் மூன்றாவது அடிப்படை முரண்பாடு!!!

ஆகவே தமிழ் மக்களின் அரசியல் வேட்கையின் ஆதாரமாக உள்ள மூன்று கோட்பாடுகளையும், சிறிலங்காவின் புதிய அரச கோட்பாடுகளையும் சிறிலங்காவின் புதிய அரச அதிபர் நிராகரித்து விட்ட இந்தநிலையில் பேசுவதற்கு என்ன இருக்கின்றது என்ற கேள்வியும் பெரிதாக எழுகின்றது அல்லவா?

ஆயினும் தமிழீழத் தேசியத் தலைவர் மீண்டும் ஒரு வாய்ப்பை சிங்களத்துக்கு வழங்கி உள்ளார். இது ஒரு புதிய தலைமை என்பதால் இது புதிதாக எதையும் சொல்லாது, செய்யாது என்ற போதிலும் எமது தேசியத் தலைவர் சமாதானத்திற்கான கதவுகளை அகலத் திறந்தே வைத்திருக்கின்றார். இது சமாதானப்பேச்சு வார்த்தைகளின் ஊடாக தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனைக்கு ஒரு நியாயமான நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும் என்று தமிழீழ தேசியத் தவைர் விரும்பி நிற்பதன் வெளிப்பாடே ஆகும்.

இந்த விருப்பம் பலவீனத்தின் அடிப்படையில் தெரிவிக்கப் படவில்லை. பலத்தின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்ற உண்மையினை நாம் மட்டுமல்ல சர்வதேச சமூகமும் புரிந்து கொள்ள வேண்டும்.

மேற்கூறிய விடயங்களைத் தர்க்கித்துள்ளதோடு சிpறிலங்காவின் அரச அதிபர் மகிந்த ராஜபக்சவின் மற்றைய முரண்பாடுகளையும் ஒப்பீட்டு மதிப்பாய்வு செய்ய விளைகின்றோம்.

‘பண்டாரநாயக்கா சகாப்தத்தை மீண்டும் கொண்டு வருவேன்.’ என்று மகிந்த hஜபக்ச கூறியிருக்கின்றார். ளுறுசுனு பண்டாரநாயக்காவின் சிங்கள பௌத்த பேரினவாதம் அவரையே காவு கொண்டது வேறுவிடயம். ஆயினும் ளுறுசுனு பண்டாரநாயக்கா தந்தை செல்வநாயகத்துடன் ஓர் உடன்பாட்டை மேற்கொண்டு கைச்சாத்திட்டிருந்தார். அந்த ஒப்பந்தம், அந்த உடன்பாடு தமிழர் தாயகக் கோட்பாட்டை கொள்கையளவில் ஒப்புக்கொண்டு ஏற்றுக் கொண்டது.

அந்த உடன்பாடு - அந்த ஒப்பந்தம் பின்னர் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் எதிர்ப்பு காரணமாக கிழித்தெறியப்பட்டது வேறு விடயம். ஆனால் நாம் இங்கே குறிப்பிடுகின்ற முக்கிய விடயம் என்னவென்றால் தற்போதைய சிறிலங்கா அரசின் அதிபரான மகிந்த ராஜபக்ச தான் சார்ந்திருக்கின்ற சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் ஸ்தாபகரான ளுறுசுனு பண்டாரநாயக்கா அவர்கள் ஏற்றுக் கொண்ட ஆனால் நடைமுறைப்படுத்த முடியாமல் போன தமிழர் தாயக கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளவும் மறுக்கின்றார் என்பதுதான்.

அதுமட்டுமல்ல, பின்னர் உருவாகிய டட்லி-செல்வா ஒப்பந்தமும் தமிழர் தாயகக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டுதான் கைச்சாத்திடப்பட்டது. ஒப்பந்தமும் நடைமுறைப் படுத்தப்படாமல் போனாலும் SLFP அரசும் UNP அரசும் முன்னர் கொள்கையளவில் தமிழில் தாயகக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளன என்ற யதார்த்தத்தையும் நாம் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.

இந்தச் சரித்திர உண்மைகள் மகிந்த ராஜபக்சவின் (நி)ந்தனைளை(?) மீண்டும் தோலுரித்துக் காட்டுகின்றன. முன்னைய சிங்களத் தலைமைகள் ஏற்றுக் கொண்டுள்ள எந்த விடயத்தையும் மகிந்த ராஜபக்ச ஏற்றுக் கொள்ளவோ அல்லது மீள் பரிசீலிக்கவோ தயாராக இல்லை என்பதனை இவை நிரூபிக்கின்றன. இத்தோடு மட்டும் ராஜபக்சவின் முரண்பாடுகள் முடிந்து போகவில்லை. அவை தொடர்ந்தும் நீடித்து செல்கின்றன.

திரு ராஜபக்சவின் முன்னோடியான முன்னாள் அதிபரான சந்திரிகா அம்மையார் கூட இந்த ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டது மிகத்தவறானதாகும் என்று பல தடவைகள் சுட்டிக் காட்டியுள்ளார். அத்தோடு மட்டுமல்லாது 1995ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சந்திரிகா முன்மொழிந்த சமாதானத் தீர்வில் யூனியன் ஆட்சிமுறை, கூட்டுறவு ஆட்சிமுறை (ஊழகெநனநசயட ளுவசரஉவரசந) - என்றெல்லாம் சொல்லப்பட்டிருந்தது. (சரத்து 2.1, 2.2, ) உள்ளார்ந்த சுயாட்சி தனித்துவமான யாப்புகள் என்றுகூட சந்திரிகா அம்மையார் தனது சமாதானத் தீர்வினில் குறிப்பிட்டிருந்தார். வழக்கம் போல இவையெல்லாம் நிறைவேற்றப் படாமல் போனபோதும் கொள்கையளவில் இந்த கருத்துருவாக்கம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதையும் ஏற்றுக் கொள்வதற்கு மகிந்த ராஜபக்ச மறுத்து வருகின்றார். இந்த சமாதானத்தீர்வு கூட சிறிலங்கா சுதந்திரக் கட்சியை சார்ந்த சந்திரிகா அம்மையார் முன் வைத்ததுதான். ஆகவே மகிந்த ராஜபக்ச தனது முன்னைய தலைவர்கள் ஏற்றுக் கொண்டதையோ, தனது கட்சி முன்னர் ஏற்றுக் கொண்டதையோ தான் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்பதை காட்டி வருகின்றார்.

உள்ளூர் ஒப்பந்தத்தைச் சற்று ஒரு புறம் வைப்போம். வெளிநாடுகள் சம்பந்தப்பட்டிருந்த தீர்வுத் திட்டங்களையும் ஒப்பந்தங்களை இப்போது பார்ப்போம். 1985ம் ஆண்டு ஜீலைமாதம் 13ம் திகதியன்று தமிழர் தரப்பு வெளியிட்டிருந்த திம்புக் கூட்டறிக்கை தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்பதையும், அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதையும் வலியுறுத்துவதோடு, இதன் அடிப்படையில்தான் முறையான சமாதானத் தீர்வினைக் காணவேண்டும் என்றும் தெரிவித்து இருந்தது. இந்தக் கோட்பாட்டை ஏற்பதற்கும் மகிந்த தயாராக இல்லை!

மகிந்த ராஜபக்சவின் இன்னுமொரு சிந்தனையையும் அதன் முரண்பாட்டையும் தர்க்pக்க விழைகின்றோம். இப்போது மகிந்த இப்பிரச்சனை குறித்து இந்தியாவுடன் பேச ஆரம்பித்திருக்கின்றார். இந்தியாவின் உதவியையும் ஆலோசனைகளையும் மகிந்த வேண்டி நிற்கின்றார். ஆனால் அடிப்படையில் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கோட்பாடுகளை மகிந்த எதிர்த்து நிற்கின்றார்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது அரசியல் கட்சிகளுக்கு இடையே போடப்ட்டது அல்ல! இரண்டு தேசங்களுக்கு இடையில் அந்தத் தேசத்தின் அன்றைய தலைவர்களால் உத்தியோகபூர்வமாகக் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம்தான் இலங்கை இந்திய ஒப்பந்தம்! 1987ம் ஆண்டு ஜீலைமாதம் 29ம் திகதி கைச்சாத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் 1.4வது சரத்து தமிழர்களுடைய பாரம்பரிய பூமி, தாயகபூமி போன்ற கோட்பாடுகளையும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்து சிறிலங்காவின் அரசியல் யாப்பிலும் பதின்மூன்றாவது திருத்தச் சரத்து கொண்டு வரப்பட்டது.

இந்த இலங்கை இந்திய ஒப்பந்தத்தை இன்னும் எவரும் உத்தியோக பூர்வமாகக் கிழித்துப் போடவில்லை. அது கிடப்ப்pல் போடப்பட்டாலும் இன்னமும் கிழிக்கப் படவில்லை. தமிழரின் தாயகக் கோட்பாட்டை மறுத்து ஒற்றையாட்சி முறையின் கீழ் முறையற்ற ஒரு தீர்வைத் திணிக்க முயலுகின்ற மகிந்த ராஜபக்ச, அதற்கு இந்தியாவின் துணையை நாடும்போது இந்தியா ஏற்றுக் கொண்ட கோட்பாடுகளைத் தவிர்க்க நினைக்கின்றார்.

எவ்வளவு முரண்பாடான சி(நி)ந்தனை!

ஆகவே சிறிலங்காவின் புதிய அரச அதிபரான மகிந்த ராஜபக்சவின் சிந்தனைகள்

1. தமிழ் மக்களின் கோட்பாடுகளுக்கு முரண்பாடானதாகும்!
2. மகிந்த ராஜபக்சவின் முந்தைய சிங்களத் தலைவர்களின் கோட்பாடுகளுக்கு முரண்பாடானதாகும்.
3. இலங்கை-இந்திய ஒப்பந்தம் ஏற்றுக் கொண்டுள்ள கோட்பாடுகளுக்கு முரண்பாடானதாகும்!

இந்தியா குறித்துத் தொடர்ந்து மகிந்த பேசி வருவதனால் ‘மகிந்தவின் சிந்தனை’ என்கின்ற இந்தக் கட்டுரையின் தர்க்கத்திற்கு அப்பால் ஒரு விடயத்தை சொல்ல வேண்டிய தேவையும் எமக்கு உள்ளது.

அது இந்தியா பற்றியதாகும்!

இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையில் அனுசரணையாளராகவோ அல்லது நடுநிலையாளராகவோ கலந்து கொண்டு இந்தியா பங்களிக்க விரும்பினால் அது முதலில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என்பதனை இந்தியா நன்கறியும். எனவே இந்தியாவின் எதிர்கால நடவடிக்கைகள் அளந்து வைக்கப்படும் காலடிகளாகத்தான் இருக்கும்.!

தவிரவும் இந்தியாவின் தற்போதைய தலைமைகள் பார்ப்பனச் சிந்தனைகள் இல்லாத தலைமைகளாக இருப்பதையும், இவ்வேளையில் நாம் சுட்டிக்காட்ட வேண்டும். சீக்க்pயர்களின் பிரச்சனைகளை அறிந்த மன்மோகன்சிங் இந்தியப் பிரதமராகவும், முஸ்லிம்களின் பிரச்சனைகளை அறிந்த தமிழர் என்று தன்னை அடையாளம் காட்டுகின்ற அப்துல் கலாம் இந்தியாவின் ஜனாதிபதியாகவும், பார்ப்பனியச் சிந்தனையற்ற யதார்த்தவாதியான சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவியாகவும் உள்ளார்கள். இந்த பார்ப்பனியம் அற்ற சிந்தனைகள் சில மாற்றங்களை எதிர்காலத்தில் உருவாக்கலாம்.

அண்மையில் இந்தியா வன்னிப் பெருநிலத்திற்கு மருந்துகள் அனுப்பியதையும் ‘கடற்புலிகளால் இந்தியாவுக்கு ஆபத்து இல்லை’ என்று இந்தியக் கடற்படைத் தளபதி கூறியுள்ளதையும் நாம் கருத்தில் கொள்ளலாம்.

மகிந்தவின் சிந்தனைகள் எவ்வளவு முரண்பட்டுள்ளன என்பதைத் தர்க்கிக்கும் போது தேவை கருதி இந்தியா குறித்த சில கருத்துக்களையும் முன்வைத்தோம். மகிந்த ராஜபக்சவின் சிந்தனைகள் எத்தகைய இசைவற்ற இடைவெளிகளையும், இணங்காத முரண்பாடுகளையும் கொண்டுள்ளது என்பதை நாம் அறிவோம் என்று தமிழீழத் தேசியத் தலைவர் தெரிவித்திருந்ததன் விரிவாக்கம்தான் எமது கட்டுரையின் நோக்கமுமாகும்.

தனது முரண்பட்ட சிந்தனைகளை மாற்றியமைத்து தமிழீழத் தேசியத் தலைவர் தனக்கு அளித்துள்ள வாய்ப்பை மகிந்த ராஜபக்ச பயன்படுத்திக் கொள்வாரா? என்பதை அறிவதற்கு நாம் அதிக காலம் காத்திருக்க வேண்டி வராது.!

 

Mahinda's Thoughts

Mahintha Rajapakse, the newly elected president of Sri Lanka, keeps telling that he is going to adopt a new approach in solving the ethnic issue of the Tamils of Tamil Eelam. He also has indicated his wish to talk to the Liberation Tigers of Tamil Eelam and to maintain peace by adhering to the ceasefire agreement. But it is essential to first learn how he is going to handle the peace process and what justice he would offer the Tamils. Therefore, the National Leader, His Excellency Pirabhakaran has decided to allow a short period of time to observe President Mahintha Rajapakse's next moves and activities.

The National Leader has called for a plan for a reasonable solution to meet the political aspirations of the Tamil people, to be offered within a short period of time. He has also emphasised another matter pertaining to this grace of short period. He stressed that if the new government chooses to adopt a hard line and try to drag its feet ignoring this urgent and determined demand, the Liberation Tigers would be driven to join the Tamils in their struggle for self-determination and to establish self-rule in the Tamil homeland, in the coming year.

Having once again afforded an opportunity of peace to the Sinhala regime, the National Leader has drawn our attention to some other matters too.

These concern the 'Ideologies of Mahintha'.

Mahintha Rajapakse, elected as president by the majority of the Sinhalese, does not represent all the ethnic communities of the island. This is predominantly a Buddhist Sinhala regime. Mahintha Rajapakse has assumed power as president only to serve the interests of the Sinhala Buddhist people. We are well aware of the ideologies of President Mahintha Rajapakse. We are aware of the discordant gap and the conflicting interests, in the context of the ethnic issue, between his political vision and the Tamils' struggle for self-determination. Having said so, the National Leader states that he does not want to analyse this vast difference in visions. (He does not want to dwell on the conflict between Mahintha Rajapakse's ideologies and the Tamils' struggle for self-determination.)

The Leader of a nation fighting for its liberation, having addressed the most important matters in his Martyrs' Day speech, need not engage in a comparative analysis of them. There are numerous persons to do this. Considering myself as one of them, I wish to place certain aspects of Mahintha's Ideologies in the light of argument.

Mahintha Rajapakse, the new president of Sri Lanka, has categorilly rejected the Tamils' principle of a Tamil Homeland. This is the first basic conflicting aspect.

This first basic conflicting aspect lays the ground for the second basic conflicting aspect too! The president Rajapakse does not recognise the Tamils as a Nation by rejecting their principle of a Tamil Homeland. In other words he rejects the principle that the Tamils are an ethnic nation. This is the second basic conflicting aspect!!

Mahintha Rajapakse, the president of Sri Lanka, by rejecting the principles of the Tamils' Homeland and their identity as an ethnic nation, automatically denies Tamils their right for self-determination. This is the third basic conflicting aspect!!!

The rejection of the three basic principles of the Tamils' political aspirations and the new governmental principles by Mahintha Rajapakse give rise to the big and inevitable question: 'So, what is there to negotiate?'

Though this is the ground situation, the National Leader has again afforded an opportunity to the Sinhala nation. Though this new leadership is bound not to offer anything new or do anything new, the National Leader keeps the door to Peace wide open. This shows his desire that a just and permanent solution should be found for the national issue of the Tamils of Tamil Eelam through peace talks.

This is not a desire arising from a state of weakness; it is rather a desire arising from a position of strength! This fact should be realised not only by us but the international community too.

Having discussed the above aspects I wish to do a comparative analysis of the conflicting aspects of Mahintha Rajapakse's ideologies.

Mahintha Rajapakse has stated that he would bring back the 'Bandaranayake Era'. (It is another matter that SWRD's demise was brought about by Sinhala Buddhist Chauvinism.) But SWRD had signed a pact with SJV Chelvanayagam and this pact had accepted the 'Tamil's Homeland' on principles.

It is another matter that this pact was torn to shreds because of the opposition of Sinhala Buddhist chauvinism. What we would like to highlight here is the fact, that though Mahintha Rajapakse belongs to the SLFP, whose founder himself had accepted the principle of a Tamil Homeland but been unable to enforce the pact he had made endorsing the same principle, Mahintha refuses to recognise the principle of a Tamil Homeland.

The Dudley-Selva pact of a later date too was drawn on the recognition of the Tamil Homeland principle. We wish to point out that though this too was abrogated, the fact remains that both the SLFP and the UNP, the major Sinhala political parties, had indeed accepted the principle of the Tamil Homeland.

These historical facts help to reveal the true nature of Mahintha's ideologies. It is evident that he is willing neither to accept nor to reconsider any of the basic principles which govern the political aspirations of the Tamils. One can further show how Mahintha's ideologies widely contradict. The former president, Madame Chandrika too, had many times said that it had been a grave error to have thrown the earlier pacts to the winds. It is worth mentioning here that the peace proposal put forward by her in August 1995, had aspects of a Union government and Co-federal structure. Articles 2.1, 2.2 had been referred by her as unique self-rule constitutional aspects of the peace proposal which she had put forward. Though these had gone with the wind as usual, the fact remains that the basic concepts were recognised and accepted at least on principles.

Mahintha Rajapakse continues to reject this too which had been proposed by Madame Chandrika of the SLFP. It is clear now that Mahintha is expressing views which prove that he is not prepared to accept what his former leaders and his party had earlier accepted.

Let us for the moment leave alone the agreements made in Sri Lanka and see what happened to the proposals for a solution for the ethnic issue, out of the country. The Thimbu joint statement issued by the Tamils delegation on the 13th of July 1985, emphasising the principles of a Tamil Nation, a Tamil Homeland and the Tamils' right to self-determination, demanded a peaceful solution on these principles. Mahintha Rajapakse rejects these basic principles.

We wish to discuss another thought of Mahintha Rajapakse and the discrepancy of it. He has now begun to talk to India regarding this problem and seek India's help and advice. But he stands opposed to the principles which form the basis of the Indo-Sri Lanka agreement.

Indo-Sri Lanka agreement is not a pact pledged between two political parties! It is an agreement entered into by two different countries, officially signed by the then leaders of the countries on the 29th of July 1987. Article 1.4 stipulates the Traditional Homeland of the Tamils in Sri Lanka and provisions are made for this in Article 13 of the Sri Lankan constitution .

The indo-Sri Lanka agreement has not yet officially been abrogated by any of the signatories. Though it lies unattended, it is still valid. Mahintha Rajapakse trying to impose an unjust solution under a Unitary system of governance, is soliciting India's assistance though he doesn't accept the very principles which India had already deemed just.

How very contradicting are Mahintha's ideologies!

Therefore the newly elected president Mahintha Rajapakse's ideologies are:

1. Opposed to the Tamils' basic principles in the context of the ethnic issue!

2. Opposed to the principles of his former Sinhala leaders.

3. Opposed to the principles endorsed in the Indo-Sri Lanka agreement.

As it had been necessary to refer to India in this article analysing 'Mahintha's ideologies', there is a need to dwell on a subject which does not come fall within the purview it.

And it concerns India!

India is well aware that if it wishes to act either as a felicitator or a mediator in the National ethnic issue of Sri Lanka, it has to lift the ban placed by it on the Liberation Tigers of Tamil Eelam. Therefore the future steps of India in this situation would be very much measured indeed!

Besides, we must point out that India's present Leaderships are not influenced by Brahmin ideologies. The Indian Prime minister Manmohansingh is very familiar with the problems of the Sikhs; the President of India Abdul Khalam, never hesitates to identify himself as a Tamil; Sonia Ghandi, a pragmatist free from the influence of Brahmin ideology, is the president of the Congress party. The ideologies of these leaders, because they are free from Brahmin influence, may bring about changes in the future.

Recently India had sent medicines to the Vanni mainland and India's Navy Commander had assured that India faces no danger from the Sea Tigers. We should take these too into consideration.

While discussing Mahintha's ideologies the need arose to present some views on India too. The aim on dwelling on the contradicting nature of Mahintha's ideologies was to expose the divide between them and the Tamils' political aspirations which had been referred briefly to by the National Leader in his Martyrs' Day speech.

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home