Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan > மாவீரர் தின உரை - 2005 - ஒரு பார்வை


Selected Writings by Sanmugam Sabesan
சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா

மாவீரர் தின உரை - 2005 - ஒரு பார்வை
[see also English Translation]

30 November 2005

"தேசியத் தலைவரின் உரையின் சாராம்சத்தை நாம்

1. சிங்கள மக்களின் நிலைப்பாடு
2. தமிழீழ மக்களின் நிலைப்பாடு
3. சமாதானப் பேச்சுக்களும் - அவற்றின் பின்புலமும்
4. சிறிலங்கா அரசின் நிழல்யுத்தம்
5. சர்வதேச சமூகத்துக்குரிய செய்திகள்
6. மகிந்த ராஜபக்ஸவின் கொள்கைகள்
7. மகிந்த ராஜபக்ஸவிற்கு ஒரு வாய்ப்பு
8. குறுகிய கால அவகாசம்

என்கின்ற எட்டுப் பகுதிகளாகப் பிரித்துத் தர்க்கிக்க விழைகின்றோம். "


தமிழீழ சுதந்திர விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றுத் திருப்புமுனையாக இன்றைய காலகட்டம் திகழ்கிறது. இவ்வேளையில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது மாவீரர் தின உரையானது என்ன செய்தியை வழங்க விருக்கின்றது. என்ற எதிர்பார்ப்பு ஆர்வத்தின் உச்சியை தொட்டதில் வியப்பேதும் இல்லை. ஒரு தேசத்தின் தலைவன் என்ற வகையில் மேதகு பிரபாகரன் அவர்கள் வழங்கியுள்ள மாவீரர் தின உரை குறித்த எமது பார்வையை நாம் எமது வழமையைப் பேணித் தருகிறோம்.

�சுயநல இன்பங்களைத் துறந்து, பொதுநல இலட்சியத்திற்காகப் போராடி வாழ்ந்து, அந்தச் சத்திய இலட்சியத்திற்காகச் சாவை தழுவிய உத்தமர்களை நாம் நினைவு கூறுகின்ற புனித நாள்"

என்று மாவீரர்களைப் போற்றி தனது உரையைத் தொடர்ந்த தேசியத் தலைவரின் உரையின் சாராம்சத்தை நாம்

1. சிங்கள மக்களின் நிலைப்பாடு
2. தமிழீழ மக்களின் நிலைப்பாடு
3. சமாதானப் பேச்சுக்களும் - அவற்றின் பின்புலமும்
4. சிறிலங்கா அரசின் நிழல்யுத்தம்
5. சர்வதேச சமூகத்துக்குரிய செய்திகள்
6. மகிந்த ராஜபக்ஸவின் கொள்கைகள்
7. மகிந்த ராஜபக்ஸவிற்கு ஒரு வாய்ப்பு
8. குறுகிய கால அவகாசம்

என்கின்ற எட்டுப் பகுதிகளாகப் பிரித்துத் தர்க்கிக்க விழைகின்றோம். தவிரவும் தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் தினபேருரையில் அவர் தெரிவித்திருந்த பல விடயங்களை மேற்கூறிய பகுதிகள் ஊடாக தொகுத்து எமது பார்வையை தர முயல்கிறோம்.

தமிழீழத் தேசியத் தலைவரின் உரையில் உள்ள பல்வேறு விடயங்களை நாம் எட்டுப்பகுதிகளாகப் பிரித்துத் தர்க்க்pக்க முனைகின்ற போது இந்த எட்டுப் பகுதிகளுக்குள்ளும் மூன்று முக்கியமான கருத்துக்கள் அடிப்படையாக இருப்பதைக் காணக் கூடியதாக உள்ளது. ஆகவே அந்த மூன்று முக்கியமான கருத்துக்களை முதலில் விபரிப்பதானது பொருத்தமானதாக இருக்க கூடும்.

முதலாவது கருத்து சிங்கள தேசத்தின் நேர்மையின்மையைப் புலப்படுத்துகிறது. அன்றிலிருந்து இன்றுவரை சிங்களத் தலைமைகள் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சனைக்கு நீதியான, நியாயமான தீர்வை தராமல் நேர்மையின்றி நடந்து கொண்டு வருகின்றன என்ற உண்மையை முதலாவது கருத்து தெளிவாக்குகின்றது.

இரண்டாவது கருத்து உலகநாடுகள் விடுதலைப்புலிகள் இயக்கம்மீது மேற்கொள்கின்ற தேவையற்ற அழுத்தங்கள் பற்றி குறிப்பிடுகின்றது. சிங்களத் தலைமைகளும் சிங்கள தேசமும் தொடர்ந்தும் நேர்மையற்ற, அநீதியான செயற்பாடுகளைத் தமிழர்கள்மீது புரிந்து கொண்டு வருவதானது சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் நிரூபிக்கப்பட்டு விட்டது. ஆனால் உலக நாடுகள் சில தேவையற்ற அழுத்தங்களை விடுதலைப்புலிகள் மீது திணிப்பதானது வருத்தத்தை அளிப்தோடு மட்டுமல்லாது உண்மையான சமாதானத் தீர்வு குறித்துச் சந்தேகத்தையும் எழுப்புகின்றது.

தேசியத் தலைவரின் மூன்றாவது கருத்து மிக முக்கியமானதாகும். சம்பந்தப்பட்ட நாடுகளின் தேவையற்ற அழுத்தங்களை அனுசரித்துப் போவதற்கும் ஓர் எல்லை உண்டு. அனுசரித்துப் போவதென்பது அடிமைச் சங்கிலியையும் ஏற்றுக்கொள்வோம் என்பதல்ல! இந்திய தலையீடு நிகழ்ந்த காலத்தில் விடுதலைப் புலிகள் பல விடயங்களில் அனுசரித்துப் போனார்கள். ஆனால் இந்திய தலையீடானது எமது மக்களின் நலனுக்கும், எமது தேச சுதந்திரப் போராட்டத்திற்கும் நேரடியாக அச்சுறுத்தல்களைக் கொடுத்தபோது இந்திய வல்லரசையும், அதன் இராணுவ இயந்திரத்தையும் எதிர்த்துப் போராடுவதற்கும் விடுதலைப் போராளிகள் துணிந்தார்கள் என்பது ஒரு வரலாற்று உண்மையாகும். ஆகவே அனுசரித்துப் போவதற்கும் ஓர் எல்லை உண்டு என்பதைத் தேசியத் தலைவரின் மூன்றாவது கருத்து தெளிவு படுத்துகிறது.

தமிழீழத் தேசியத் தலைவரின் இந்த மூன்று கருத்துக்களில் உள்ள உண்மைகளை எமது நினைவில் இருத்திக் கொண்டு அவரது மாவீரர் தின உரையின் சாராம்சத்தை நாம் முன்னர் கூறியதற்கு இணங்க எட்டுப் பகுதிகளின் ஊடாக தர்க்கிக்க விழைகின்றோம்.

1. சிங்கள மக்களின் நிலைப்பாடு

தமிழ் மக்களின் அரசியல் வேட்கைகளைப் புரிந்து கொள்வதற்குச் சிங்கள தேசம் மறுத்து வருவதனால், தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனை தீர்வின்றி, முடிவின்றி சிக்கலடைந்து இழுபட்டு வருகிறது என்று தமிழீழத் தேசியத் தலைவர் சுட்டிக் காட்டுகின்றார். அது மட்டுமல்ல, சிங்கள மக்களின் இத்தகைய நிலைப்பாடு அண்மைக்காலத்தில் தோன்றவில்லை என்றும் அது காலம் காலமாகவே தொடர்ந்து வருகின்றது என்றும் தலைவர் கூறுகின்றார்.

 இலங்கைத் தீவானது தேரவாத பௌத்தத்தின் தெய்வீகக் கொடையென்றும் சிங்கள இனத்திற்கே உரித்தான சொத்துடைமை என்றும் மகாவம்சம் திரித்துவிட்ட புனைகதையிற் சிங்கள மக்கள் இன்னும் சிக்குண்டு கிடப்பதையும் சுட்டிக்காட்டிய தேசியத் தலைவர் இது ஒரு கருத்தியற் குருட்டுத்தனம் என்றும் இடித்துரைக்கிறார். ஆனால் எதிர்காலத்தில் சிங்கள மக்களின் இந்த நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் நிகழ வாய்ப்பிருக்கின்றதா? என்று எழக்கூடிய கேள்விக்கும் தலைவர் பதிலளிக்கிறார். சிங்கள மக்களது அரசியல் கருத்துலகில் மாற்றம் நிகழும் என்று தான் எதிர்பார்க்க வில்லை என்று கூறிய தலைவர் மாறாக அது புதிய வடிவங்களை எடுத்துப் புத்துயிர் பெற்று வருகின்றது என்று எச்சரிக்கையும் செய்கின்றார். ஆகவே சிங்கள மக்களின் இந்த மேலாண்மைவாதம் என்பதானது தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைத் தமிழ் மக்கள் தாமாகவே போராடி வென்றெடுக்க வேண்டிய நிலையை உருவாக்கியுள்ளது என்ற கருத்தைத் தேசியத் தலைவர் தெளிவாகவே கூறி விட்டார்.

சிங்கள மக்களின் நிலைப்பாடு இவ்வாறு இருக்கையில் தமிழீழ மக்களின் நிலைப்பாடு எவ்வாறு உள்ளது? அதனையும் தலைவர் தெளிவாகவே விளக்குகிறார்!

2. தமிழீழ மக்களின் நிலைப்பாடு

சமாதானம், போர்நிறுத்தம், பேச்சுவார்த்தை என்பன எல்லாம் பிரயோசனம் தராத அர்த்தமற்ற சொற்பதங்களில் தமிழ் மக்கள் முற்றாகவே நம்பிக்கை இழந்து விட்டதாக தெரிவிக்கின்ற தேசியத் தலைவர் அதற்கான காரணிகளையும் கூறியுள்ளார். நிலையான அமைதியையும், நிம்மதியான வாழ்வையும் இந்த �சமாதானம்� பெற்றுத் தரவில்லை. தமிழ் மக்களின் வாழ்விடங்களை ஆக்கிரமித்து நிற்கும் இராணுவத்தை அகற்றுவதற்கும் போர்நிறுத்தம் உதவவில்லை. இதன் காரணமாகப் பொறுமை இழந்து போன தமிழ் மக்கள் தமது அரசியல் வேட்கைகளின் ஆவேச வெளிப்பாடாக வெகுசனப் போராட்டங்களை நடாத்தி வருகிறார்கள் என்பதையும் விளக்கியுள்ள தலைவர் மேலும் ஒரு முக்கிய விடயத்தைச் சர்வதேச சமூகத்திற்கும் சுட்டிக் காட்டுகின்றார்.

�சுயநிர்ணய உரிமை கோரி தம்மைத் தாமே ஆட்சி புரியும் அரசியல் சுதந்திரம் கோரி, தமிழீழ மக்கள் எழுப்புகின்ற உரிமைக்குரலை, இனியும் சர்வதேச சமூகம் அசட்டை செய்ய முடியாது� என்று கூறுகின்ற தலைவர் ஒரு தேசிய மக்கள் சமுதாயம் என்கின்ற ரீதியில் தமது அரசியல் வேட்கைகளைச் சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்பதே எமது மக்களின் அறைகூவலாகும் என்பதையும் தெட்டத் தெளிவாகக் கூறுகின்றார்.

இலங்கைத்தீவில், அடக்க முனைகின்ற ஓர் இனத்தின் நிலைப்பாட்டையும், அடங்க மறுக்கின்ற ஓர் இனத்தின் நிலைப்பாட்டையும் விளக்கியுள்ள தமிழீழத் தேசியத் தலைவர் இந்த முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளையும் அவை பயன்தராமல் போனதற்கான காரணிகளையும் அடுத்து விளக்குகிறார்.

3. சமாதானப் பேச்சுக்களும் - அவற்றின் பின்புலமும்

இவை குறித்துத் தமிழீழத் தேசியத் தலைவர் சற்று விரிவாகவே விளக்கியிருக்கின்றார். தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனையைச் சமாதானப் பேச்சு வார்த்தைகள் ஊடாகத் தீர்ப்பதற்கு உரிய வாய்ப்பினைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக நேர்மையுடனும், நேரிய நோக்குடனும் இயக்கம் மேற்கொண்ட செயற்பாடுகளைத் தலைவர் தனது உரையில் தெளிவு படுத்தியுள்ளார். திம்புவில் முன்னர் தொடங்கிய சமாதான முயற்சிகளில் இருந்து அண்மைக்காலச் சமாதானப்பேச்சு வார்த்தைகள் வரை மேற் கொள்ளப்பட்ட செயற்பாடுகளையும் அவற்றில் உள்ள ஒற்றுமைகளையும், வித்தியாசங்களையும் தலைவர் தெரிவித்துள்ளார்.

தவிரவும், இம்முறை நடந்த சமாதானப் பேச்சுக்கள் மூன்றாம் தரப்பு உலக நாடொன்றின் அனுசரணையில் சர்வதேசக் கண்காணிப்பில் நடைபெற்ற முக்கியத்துவம் குறித்தும் தலைவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ரணில் விக்கிரமசிங்க அரசுடனும் பின்னர் சந்திரிகாவின் ஆட்சிபீடத்துடனும் நிகழ்ந்த பேச்சுக்களின் போது மேற்கொள்ளப்பட்ட முடிவுகள், தீர்மானங்கள், உடன்பாடுகள் எவையுமே செயல்வடிவம் பெறாமல் போனதையும் தலைவர் விளக்கியுள்ளார்.

�சமாதானப் பேச்சு என்பது தமிழர்களின் விடுதலைப் போராட்ட பாதையில் வைக்கப்பட்ட பொறி� என்றுதான் தலைவர் குறிப்பிடுகிறார். அத்தோடு பேச்சுவார்த்தை என்ற போர்வையின் கீழ் ரணில் விக்கிரமசிங்கவின் அரசு உலக வல்லரசு நாடுகளோடு சேர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆயுதங்களைக் களைந்து விடும் சூழ்ச்சிகரத் திட்டத்திலேதான் தனது முழுக் கவனத்தையும் செலுத்தியிருந்தது என்கின்ற விடயத்தையும் தலைவர் வெளிப்படுத்தியுள்ளார். இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைக்கு சந்திரிகா இணங்காது காலத்தை இழுத்தடித்து அரசியல் வெறுமைக்குள் காலம் ஓடியதையும் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தவேளையில்தான், சிங்கள ஆட்சியாளர்களின் வஞ்சக நோக்கத்துக்குள் செயலற்று இருப்பதைத் தவிர்த்து எமது தேச விடுதலைப் போராட்டத்திற்கான செய் திட்டத்தை நெறிப்படுத்திக் கொண்டிருந்த வேளையின் போது நிகழ்ந்த ஆழிப்பேரலை அனர்த்தம் காரணமாக பேரவலத்திற்கு ஆளான தமிழ் பேசும் மக்களின் அவசர மனிதாபிமானப் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய தேவை எழுந்ததையும் அதன் அடிப்படையில் உலகநாடுகள் அளிக்க முன் வந்த பெரும் உதவித்தொகையை நிர்வகிப்பதற்காக உருவாக்கப்பட்ட பொதுக் கட்டமைப்பு கைச்சாத்திடப்பட்ட பின்பு அதனைச் சிறிலங்காவின் உயர் நீதிமன்றம் மூலம் எவ்வாறு சிங்கள இனவாத சக்திகள் முழுமையாக முடக்கின என்றும் தலைவர் மிக விளக்கமாகத தன் உரையில் தெரிவித்துள்ளார். புல தெளிவுகளைத் தந்த தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் இதனை அடுத்து இன்னுமொரு முக்கிய விடயத்தைச் சுட்டிக் காட்டுகின்றார்.

4.சிறிலங்கா அரசின் நிழல் யுத்தம்

சமாதானத் திரைக்கு பின்னால் எமது இயக்கத்தின் மூத்த உறுப்பினர்கள், முக்கிய போராளிகள், ஆதரவாளர்கள், ஆதரவான அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் கல்விமான்கள் போன்றோர் கோழைத்தனமாகக் கொன்றொழிக்கப் பட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள தலைவர் இந்த நிழல் யுத்தத்தின் உண்மையான சூத்திரதாரிகள் யார் எனவும் தோலுரித்துக் காட்டுகின்றார். சிங்கள இராணுவம் புலன் ஆய்வுத்துறையின் பின்புலத்தில் இருந்து கொண்டு சிங்கள இனவாத அரசியல்வாதிகள் தான் இவற்றை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ள தேசியத் தலைவர் �சமாதானச் சூழலைப் பயன்படுத்தி ஒரு வித்தியாசமான மென்தீவிர யுத்தம் விடுதலைப்புலிகள் மீது தொடுக்கப்பட்டிருக்கிறது� என்றும் குறிப்பிடுகின்றார்.

மேற்கூறிய நான்கு விடயங்களைத் தெளிவுபடுத்திய தேசியத் தலைவர் அடுத்து சர்வதேச சமூகத்திற்குப் பல முக்கிய செய்திகளை விடுக்கிறார்.

5. சர்வதேச சமூகத்துக்குரிய செய்திகள்

சர்வதேச சமூகத்திற்குத் தேசியத் தலைவர் விடுத்துள்ள செய்திகள் இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. அவற்றை கீழ்வருமாறு வகைப்படுத்தலாம்.

� மிகவும் வரையறுக்கப்பட்ட தற்காலிக ஒழுங்கமைப்பைக் கொண்ட சுனாமி நிர்வாகக் கட்டமைப்புக்குக் கூட, சிங்கள-பௌத்த பேரினவாதம் சாவு மணி அடித்து விட்டது. தற்காலிக ஒழுங்கமைப்புக்கே இந்தக்கதி என்றால் தமிழர் தாயகத்த்pல் தன்னாட்சி அதிகாரம் உடைய ஆட்சியமைப்பைச் சிங்களத் தலைமைகளுடன் பேசிப் பெற்றுக் கொள்ளலாம் என்பது வெறும் பகற்கனவு. இப்படிப்பட்ட சமாதான நாடகத்தை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வந்த உலக நாடுகளுக்கும் இந்த உண்மை தெளிவாகியிருக்கும் என்றே நாம் நம்புகின்றோம்.

� போர்நிறுத்த விதிகளுக்கு அமையத் தமிழ்க் கூலிப்படைகளின் ஆயுதங்களை களைய வேண்டிய கடப்பாட்டை நிறைவேற்றாமல் இவர்களையே கருவியாக பயன்படுத்தி இயக்கத்தின்மீது வன்முறையைச் சிறிலங்கா அரசு ஏவி விட்டுள்ளது. சிங்கள அரசின் இந்த நிழல் யுத்தத்தையும் அதன் அசிங்கமான முகத்தையும், அந்தரங்க நோக்கத்தையும் சர்வதேச சமூகம் கண்டு கொள்ளும் என்றே நாம் நம்புகின்றோம்.

� தமிழீழ மக்கள் எமது விடுதலை இலட்சியத்தின் பின்னால் அணி திரண்டு நிற்கும் கள யதார்த்தத்தை உணராமல் சிங்கள ஆட்சியாளர்களின் பொய்யான பரப்புரைகளை நம்பி சில உலகநாடுகள் எமது இயக்கத்தைப் பயங்கரவாதப் பட்டியலில் தொடர்ந்தும் வைத்திருப்பது எமக்கு வேதனையையும் ஏமாற்றத்தையும் தருகிறது.

� கடந்த நான்கு ஆண்டு காலம் வரை இழுபட்ட சமாதான முயற்சியின் போது சிங்கள அரசுகள் ஏற்படுத்திய முட்டுக்கட்டைகள், சிக்கல்கள் நம்பிக்கைத் துரோகங்களையும் இயக்கம் பொறுமையை இழக்காமல், சமாதானக் கதவுகளை மூடாமல் இருப்பதையும் சர்வதேச சமூகம் நன்கு அறியும். சமாதானத்திற்கான எமது பற்றுதியை நாம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து விட்டோம்.

� ஒரு தேசிய மக்கள் சமுதாயம் என்கின்ற ரீதியில் தமது அரசியல் வேட்கைகளைச் சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்பதே எமது மக்களின் அறைகூவலாகும். இவ்வாறு சர்வதேச சமூகத்திற்குப் பல செய்திகளை தந்த . . தமிழீழத் தேசியத் தலைவர் அடுத்து சிங்கள தேசத்தின் புதிய தலைவனின் கொள்கைகள் குறித்துப் பேசுகின்றார்.

6. மகிந்த ராஜபக்ஸவின் கொள்கைகள்:

சிங்களத் தேசம் புதிதாகத் தேர்ந்தெடுத்துள்ள அரச அதிபரான மகிந்த ராஜபக்ஸ, தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தவில்லை. மகிந்தவின் சிந்தனைகளையும், கொள்கைகளையும் நாம் அறிவோம். தேசிய இனப்பிரச்சனை தொடர்பாக அவருடைய அரசியல் தரிசனத்திற்கும், தமிழரின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கும் மத்தியிலான இசைவற்ற இடைவெளிகளையும், இணங்காத முரண்பாடுகளையும் நாம் அறிவோம் என்று தலைவர் தெட்டத்தெளிவாக கூறியுள்ளார்.

ஆயினும் தேசத்தலைவர் சிறிலங்கா அரச அதிபருக்கு ஒரு வாய்ப்பினைக் கொடுக்கிறார்.

7. மகிந்த ராஜபக்ஸவுக்கு ஒரு வாய்ப்பு

�இந்தப் புதிய அரசாங்கம் எமக்கு நேசக்கரத்தை நீட்டுவதோடு எம்மோடு பேசப் போவதாகவும் போர்நிறுத்தத்தை கடைப்பிடித்து அமைதியைப் பேணப் போவதாகவும் சொல்கின்றது. கொள்கை ரீதியாக எமக்கும் மகிந்தவுக்கும் மத்தியிலான இடைவெளி மிகப்பெரிதாக இருந்தபோதிலும் அவர் நடைமுறை அரசியலில் நம்பிக்கை கொண்ட யதார்த்தவாதி என்று �கருதப்படுவதால்� அவர் சமாதான வழிமுறையை எவ்வாறு கையாண்டு தமிழ் மக்களுக்கு எவ்விதம் நீதி வழங்கப்போகிறார் என்பதை நாம் அறிந்து கொள்வதற்காக சிறிது காலம் நாம் பொறுத்திருந்து பார்ப்பதென முடிவு செய்துள்ளோம் - என்று தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆக சிறிலங்காவின் புதிய அரச அதிபருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

ஆனால் இந்தக் குறுகிய கால அவகாசம் என்பது மீண்டும் நீட்டிக்கப்படுமா? இதுதான் உறுதியான, இறுதியான வாய்ப்பா? இது குறித்துத் தமிழீழத் தேசியத் தலைவர் என்ன கூறுகின்றார்.?

8. குறுகிய கால அவகாசம்

தமிழீழத் தேசியத்தலைவர் மிகத் தெளிவாக ஆணித்தரமாக கீழ்வருமாறு கூறுகின்றார். பொறுமையிழந்து, நம்பிக்கையிழந்து விரக்தியின் விளிம்பை அடைந்துள்ள எமது மக்கள் இனியும் பொறுத்துப் பொறுத்துக் காத்திருக்க தயாராக இல்லை. வரையறுக்கப்பட்ட ஒரு குறுகிய கால இடைவெளிக்குள் எமது மக்களின் அரசியல் வேட்கைகளை திருப்தி செய்யும் வகையில் ஒரு நியாயமான தீர்வுத் திட்டத்தைப் புதிய அரசு முன் வைக்க வேண்டும். இது எமது இறுதியான உறுதியான அவசர வேண்டுகோளாகும். எமது இந்த அவசர வேண்டுகோளை நிராகரித்து கடும்போக்கைக் கடைப்பிடித்து காலத்தை இழுத்தடிக்கப் புதிய அரசு முற்படுமானால் நாம் எமது மக்களுடன் ஒன்றிணைந்து எமது சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை எமது தாயகத்தில் தன்னாட்சியை நிறுவும் தேசச் சுதந்திரப் போராட்டத்தை, அடுத்த ஆண்டில் தீவிரப்படுத்துவோம்.

அன்புக்குரிய நேயர்களே,

வரலாற்றுத் திருப்புமுனையாக உள்ள இந்தக் காலகட்டத்திலே எமது தேசியத் தலைவர் அளித்துள்ள மாவீரர் தின உரையை எமது அறிவுக்கு எட்டிய வகையில் பகுத்து ஒரு பார்வையாகத் தந்தோம். ஆனால் ஒன்று மட்டும் திண்ணம்! எமது தேசியத் தலைவரின் வழி நடத்தலில் எமது தாயகம் முழுச்சுதந்திரம் பெற்று நிமிர்ந்து நிற்கும் வேளை நெருங்கி வருகின்றது. புலம் பெயர்ந்த தமிழீழ மக்களாகிய நாம் முழுமையாக ஒருங்கிணைந்து எமது தலைவனின் கரத்தைப் பலப்படுத்துவோம்.!

 


English Translation of Tamil Article by Sanmugam Sabesan

The liberation struggle for Tamil Eelam has entered an historical and critical turning point now. It is no wonder there was much anxiety and speculation as to what message the National Heroes' day speech of the Tamil Eelam National Leader would hold. We would like to express our view on the address of  Velupillai Pirabhakaran in hise capacity as a Leader of a Nation.

'This is the day on which we cherish the memory of those great souls who sacrificed their own benefits and pleasures to fight for a common goal and who had embraced death for the sake of that noble goal.'

Thus began the National Leader's speech and we would like to discuss it under eight different sub-topics. In this manner we will try to present our view on the various matters he had mentioned in his speech.

1.The attitude of the Sinhala people.

2.The attitude of the people of Tamil Eelam.

3. Peace negotiations and their background.

4. Sri Lankan government's Shadow War.

5. Message to the International Community.

6. Mahintha Rajapakse's principles.

7. An opportunity to Mahintha Rajapakse.

8. A short period of grace.

As we try to discuss the various matters referred to in the National Leader's speech under these eight sub-topics we realise that they are based on three important facts. Therefore it is considered suitable to deal with them in the first place.

The first of these opinions reveals the dishonesty of the Sinhala nation. It expounds the fact that the Sinhala leaderships, from the very beginning, had refrained from finding a reasonable and just solution to the national ethnic problem of the Tamils and had acted dishonourably in dealing with them.

The second one refers to the needless pressure exerted by the world countries on the Liberation Tigers. Though it had been proved beyond doubt that the Sinhala nation and the Sinhala people treat the Tamils in the most unjust manner, these countries around the world use unnecessary pressure on the Liberation Tigers. While this is very much regretted, it also gives room to doubt the sincerity of the solution for peace put forward by these countries.

The third point which the National leader made is the most important one. He had highlighted on the limits of accommodating unnecessary pressure. Accommodation on our part does not mean that we are prone to be bound slavishly. During the days of Indian intervention the Liberation Tigers had readily adjusted themselves with regard to many matters. But when the Indian intervention threatened our national liberation struggle and when it proved detrimental to our people, the Liberation Tigers did not hesitate to rise even against the Indian military. The third point of the National Leader clearly states that there are limits for patience and giving in.

We wish to discuss the National Heroes' day address under eight sub-titles keeping in mind the three points which the National Leader had chosen to emphasise.

1. The attitude of the Sinhala people.

The National Leader of Tamil Eelam points out that the national ethnic issue of the Tamils drags on without end or a solution, purely because the Sinhala nation refuses to understand the political aspirations of the Tamils. Besides, he goes on to explain that this attitude of the Sinhala is not one of recent origin but one which has been continuing from distant past. He speaks of the Sinhala people being entranced by the fictitious tales of the Mahavamsa chronicle which claim that the island of Ceylon to be the chosen holy place to enshrine and safeguard Theravada Buddhism and that the Sinhala people are the chosen custodians of this divine faith. While calling this a conceptual blindness of the Sinhala, he questions the probability of them ever being delivered from this mindset. He goes on to answer the question himself. He maintains that he does not expect a change in the political consciousness of the Sinhala people to take place and even warns that this mindset is very much alive, undergoing metamorphosis and taking different forms. The National Leader has very distinctly stated that this imagined Sinhala supremacy has created a situation where the Tamils have to fight for themselves to regain their long lost basic rights,

2. The attitude of the Tamils of Tamil Eelam

The National Leader says that the Tamils have completely lost faith in the words like Peace, Ceasefire and Negotiations, which to them, have lost their original meaning in the Sri Lankan context. He continues expose the reasons for this loss of faith. The so called 'peace' has brought them neither permanent peace nor peaceful life for them. The 'ceasefire agreement' has not in any way helped to remove the occupying army from their homes and lands. The people who have lost their patience are now engaging in mass struggles and demonstrations expressing their outraged political aspirations. The National Leader points out another important matter to the international community.

He maintains that the international community can no longer disregard the legitimate demands of the Tamils of Tamil Eelam for their right of self-determination and the right for self-rule. He also makes clear that this mass and charged expression of the Tamils is nothing but the challenge that the international community should accept their political aspirations.

The National Leader, having clearly laid bare the attitude of an ethnic entity which is hell-bent on suppression and another which refuses to succumb, goes on to clarify the attempts at solving these conflicts and the reasons for the failure of these attempts.

3. Peace negotiations and their background.

The National Leader has expounded this issue quite extensively. He had already mentioned the sincerity and honesty of the Liberation Tigers organisation involving in activities aimed at solving the national problem of the Tamils of Tamil Eelam through peace negotiations. He proceeded to lay out the attempts at peace from the first Thimbhu talks until the most recent ones explaining the similarities and differences between them. The importance of the recent peace talks was referred in particular by the Leader because these were carried on with the facilitation of a third party country under the international community's observation. He pointed that, despite all these talks, first with Ranil Wickramasinghe and later with Chandrika, proved unsuccessful because whatever decisions, resolutions, agreements worked out in these talks were never put into practice.

He refers to the peace talks as 'snares placed along the path of the liberation struggle' and that the Ranil Wickramasinghe government, resorting to subversive strategy, was bent only on disarming the Liberation Tamil Tigers with the aid of the world powers under the pretext of negotiations. He also reminded how Chandrika had intentionally dragged on without consenting to approve the Interim self-rule executive council and thereby causing a political vacuum in the lives of the Tamils.

The National Leader then proceeded to relate how the tsunami struck when the next phase of the liberation struggle was being seriously considered to avoid falling prey to the aim of the Sinhala regime to keep us in a political vacuum. Therefore the need arose to relieve the distress of the Tamils and this was given priority. Though an agreement was signed to set up a joint administrative body to handle the vast sum of money donated by the world countries for the tsunami victims, the Sinhala chauvinist factions could make it completely useless by taking the issue to the Supreme court. From here he goes on to focus on another important issue.

4. The Sri Lankan government's Shadow War.

He said that the period of peace was used as a curtain behind which the Sinhala army and its intelligence units to murder senior members of the Liberation Tiger organisation, fighters of importance, politicians supporting the organisation, journalists and scholars, in the most cowardly manner. He blamed the Sinhala chauvinist politicians for these murders and said that ' an altogether different and intensive, indirect war is being waged exploiting the circumstances that the peace-period had brought'.

Having clarified the above four aspects, the National leader goes ahead to deliver many important messages to international community.

5. Message to the International Community.

The message delivered to the International community by the National Leader is very crucial in the present context and it could be classified as follows:

                                 Sinhala chauvinism has strangled to death even the temporary Joint administrative body which was intended to meet the needs of tsunami victims. If this is the destiny of a temporary administrative organ with very limited powers, to expect to achieve a Self-rule administrative body in the Tamil homeland through peace talks with the Sinhala leaderships will be nothing but a daydream. He expresses his belief that the world countries too, which had followed this drama of peace quite keenly, would have discerned this fact.

                                 The Sri Lankan state, bound by the ceasefire agreement to disarm the Tamil mercenary forces, uses these very bands to commence violence on the Liberation Tigers organisation covertly. He voices his hope that the international community would be able to identify the evil intentions of the Sri Lankan state and its shadow war on the Tamils.

                                 Some countries of the world, failing to realise that the entire Tamils of Tamil Eelam stand rallied under our banner of Liberation and believing the false propaganda of the Sinhala government, continue to have The Liberation Tigers of Tamil Eelam in their list of terrorists. The National Leader says that this causes grief and disappointment to the Tamils.

                                 Though the Sinhala governments have intentionally dragged the peace initiatives on for the past four years by successions of stumbling blocks, confusions and breach of promises, our organisation has kept the doors to peace open and has been infinitely patient. The international community is clearly aware of this and we have thus proved our determination to achieve peace.

                                 The international community should recognise and accept the demands of our people which they have put forward as the legitimate aspirations of a people who are a nation. Having conveyed his messages to the international community, the National Leader goes on to air his opinion on the new leader's principles.

6. Mahintha Rajapakse's principles.

'Mahintha Rajapakse, the president newly elected to power by the Sinhala nation, does not represent the Tamils. We know well about Mahintha's thoughts and principles. We are fully aware of the discordant and wide gulf that exists between his political vision and the Tamils' struggle for their right for self-determination'. Having categorically stated this, the National Leader provides an opportunity to the president of Sri Lanka.

7. An opportunity to Mahintha Rajapakse.

'This new government says that it offers us a friendly hand and intends to adhere to the ceasefire agreement; it also conveys its wish to hold talks and maintain peace. Though our principles are widely different, since he is said to be a realist who believes in political practicability, we have decided to wait for a short period and observe how he is going to handle the peace process and what justice he would mete to the Tamils.' Thus the National Leader has offered the new president an opportunity.

Would this short period be again extended? Is this the ultimate and unwavering opportunity? What does the National Leader of Tamil Eelam say about these questions?

8. A short period of grace.

The Tamil Eelam National Leader is absolutely clear and definite in his following statement. 'Our people have lost patience, hope and reached the brink of utter frustration. The new government should come forward soon with a reasonable political framework that will satisfy the political aspirations of the Tamil people. This is our urgent and final appeal. If the new government rejects our urgent appeal, we will, next year, in solidarity with our people, intensify our struggle for self-determination, our struggle for national liberation to establish self-government in our homeland.� 

Dear readers!

In this context of a historical turning point in our times, we have tried to present our analysis of the Martyrs' Day speech of our National Leader to the best of our abilities. But one thing is certain! The time is ripening for our motherland to attain its full freedom and majesty under the direction of our National Leader. Let us, the Tamil Eelam expatriates, unify ourselves in our entirety and strengthen the hands of our Leader!

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home