Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan >  நவம்பர் பதினேழும், நவம்பர் இருபத்தியேழும்!


Selected Writings by Sanmugam Sabesan
சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா

 நவம்பர் பதினேழும், நவம்பர் இருபத்தியேழும்!

27 September 2005


�இந்த ஆண்டு நவம்பர் மாதம் பதினேழாம் திகதியன்று சிறிலங்காவின் அதிபருக்கான தேர்தல் நடாத்தப்படும்�இ என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. இதனையடுத்து வழமைபோல், இந்த அதிபர் தேர்தல் குறித்தே செய்திகளும,; கட்டுரைகளும், கருத்துக்களும், ஆய்வுகளும் வெளிவந்த வண்ண மிருக்கின்றன. �அதிபர் தேர்தலில் யார் வெல்லக் கூடும்? அவர் வென்றால் அடுத்து என்ன நடக்க கூடும்? சமாதானப் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடைபெறுமா? சமாதானத்தீர்வு கிடைக்குமா?� என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டு அவற்றிற்கும் பல விதமான பதில்களும் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்தவேளையில், தேர்தல் ஆணையாளர் திரு தயானந்தா திசநாயக்க கூறிய கருத்து ஒன்று தெரிந்தோ, தெரியாமலோ பல கேள்விகளுக்கு உரிய ஒரு பதிலாகவே அமைந்து விட்டது.

சிறிலங்காவின் தேர்தல் ஆணையாளராக விளங்குகின்ற தயானந்தா திசநாயக்க தேர்தல் வாக்களிப்புக் குறித்துச் சர்வதேச செய்தி நிறுவனமாகிய யுகுP ற்கு தனது கருத்தைத் தெரிவிக்கையில் 1963ம் ஆண்டுக்குப் பின்னர் தான் ஒருபோதும் வாக்களிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். ஒரு ஜனநாயக நாட்டின் தேர்தல் ஆணையாளராகக் கடமையாற்றுபவரும் ஒரு நாட்டின் மக்கள் தங்களது வக்குரிமையை ஒழுங்காக முறையாக தடங்கல் இல்லாமல் வாக்களிக்க வேண்டும் என்கின்ற உயரிய நோக்கிற்காகப் பணி புரிகின்றவருமான தயானந்தா திசநாயக்காவே 1963ம் ஆண்டுக்குப் பின்னர் ஒருபோதும் தேர்தலில் வாக்களித்ததில்லை என்றால் அதற்குரிய அடிப்படைக் காரணம் எதுவாக இருக்கமுடியும்?

அதற்குரிய பதிலையும் அவரே கூறியுள்ளார். �1963ம் ஆண்டில் நான் வாக்களித்தது ஒரு கிராமசபைத் தேர்தலின் போது மட்டும்தான்! அப்பொழுது நான் அரசியல் வாதிகள் குறித்து அறிந்திருக்வில்லை. ஆனால் பின்னர் இந்த அரசியல்வாதிகள் குறித்து நான் அறியவந்த போது நான் தேர்தலில் வாக்களிப்பதே இல்லை� - என்று தேர்தல் ஆணையாளர் பதில் தெரிவித்துள்ளார்.

அறுபத்திநான்கு வயதுடைய தயானந்த திசநாயக்காவிற்கு ஓய்வினைக் கொடுக்காமல் கடந்த நான்கு ஆண்டுகளாக சேவை நீடிப்பினை அரசு வழங்கி வருகின்றது. அவரது பணிக்காலத்தின் போது பல தேர்தல்களை அவர் நடாத்தியிருக்கின்றார். எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சிகளாகியிருக்கின்றன. கட்சி அதிகாரங்கள் கைமாறியிருக்கின்றன. நாட்டுக்குச் சேவை செய்வதாக கூறிப் பல அரசியல்வாதிகள் அதிகாரத்தை அடைந்திருக்கின்றார்கள்.

ஆனால் சிறிலங்காவின் தேர்தல் ஆணையாளரோ தேர்தல்களில் வாக்களிப்பதில்லை! காரணம் அவர் எந்த அரசியல் வாதியையும் நம்ப தயாரில்லை!! ஒரு �ஜனநாயக� நாட்டின் தற்போதைய தேர்தல் ஆணையாளர் கடந்த 42 ஆண்டுகளாக நம்பாத அரசியல்வாதிகளை நம்பி இப்போதும் அந்த நாட்டு மக்கள் வாக்களிக்கத் தயாராகின்றார்கள்.!

�சிறிலங்காவின் தேர்தல் ஆணையாளரின் இந்தக் கருத்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்குப்பின் என்ன நடக்க கூடும் என்ற எதிர்பார்ப்புகளுக்குத் தகுந்த பதிலாக அமைந்துவிட்டது� என்பதே எமது தர்க்கமாகும்.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் பதினேழாம் திகதி சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் அரசுத் தரப்பு வேட்பாளராக பிரதமர் மகிந்த ராஜபக்ச போட்டியிடுகின்றார். அவர் சிங்கள-பௌத்தப் பேரினவாதக் கட்சிகளுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள தேர்தல் உடன்பாடு தமிழ் மக்களுக்கு விரோதமான போக்கைக் கொண்டிருக்கின்றது என்று பலராலும் கணிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ராஜபக்ச இந்த பேரினவாதக் கட்சிகளுடன் செய்து கொண்ட தேர்தல் உடன்பாட்டை ஜனாதிபதி அம்மையார் முன்னர் கண்டித்திருந்தார். அதன்மூலம் பலரின் கண்களுக்கு அவர் மீண்டும் ஒரு சமாதானத் தேவதை போன்றே காட்சியளித்து வருகின்றார். அம்மையாரின் இக்கண்டிப்பை பராட்டியவர்களும் உண்டு.!

இவ்விடயம் குறித்து நாம் சில தர்க்கங்களை முன் வைக்க விழைகின்றோம். மகிந்த ராஜபக்ச புதிதாக எதையும் செய்து விடவில்லை! இன்று மகிந்த ராஜபக்சவைக் கண்டிக்கின்ற இதே சந்திரிக்கா அம்மையார் இதே பேரினவாத சக்திகளுடன் கூட்டு வைத்ததை ஏன் பலர் மறந்து போனார்கள்? சந்திரிக்கா அம்மையார் செய்ததைத்தான் ராஜபக்சவும் செய்கின்றார்.! செய்பவர்களின் பாணிதான் வித்தியாசமே தவிர, செயலும் நோக்கமும் ஒன்றுதான்! இங்கே எழுந்துள்ள முரண்பாட்டிற்குக் காரணம் தன்னிடம் சொல்லாமல் அனுமதி பெறாமல் ராஜபக்ச இதனைச் செய்து விட்டார் எனறு அம்மையார் கோபம் கொண்டுள்ளமைதான்! �நீ செய்தது சரிதான் தம்பி, ஆனால் ஒரு சொல்லுச் சொல்லிவிட்டு செய்திருக்கலாம் தானே� என்ற சொல்லாடல் ஒன்றும் நமக்குப் புதிதல்ல.!

சிங்கள பௌத்த பேரினவாத கட்சிகளான ஜேவிபி, ஜாதிக ஹெல உரிமய ஆகியவற்றுடன் பிரதமர் ராஜபக்ச செய்து கொண்டுள்ள தேர்தல் ஒப்பந்தம் வெளிப்படையாகவே தமிழர் விரோதப் போக்கினைக் காட்டி நிற்கின்றது.

இந்த வெளிப்படைப் போக்;கிற்காகவே, இந்த ஒப்பந்தத்தை நாம் பாராட்டலாம் இந்தத் தேர்தல் ஒப்பந்தம் தமிழர்களுடனான அதிகாரப் பகிர்வை நிராகரிக்கின்றது. சுயநிர்ணயக் கோட்பாட்டை நிராகரிக்கின்றது. சமஷ்டி ஆட்சி முறையையும் இந்த ஒப்பந்தம் நிராகரிக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்கள் சார்பாக முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபைத் திட்டத்தை இவ்ஒப்பந்தம் முற்றாக எதிர்க்கின்றது. பொதுக்கட்டமைப்புத் திட்டத்தை கைவிடும்படி வற்புறுத்துகின்றது. தற்போது நடைமுறையில் உள்ள போர்நிறுத்த உடன்படிக்கையை மீள் பரிசீலனைக்கு உள்ளாக்குகின்றது. தமிழ் மக்களின் தாயக் கோட்பாட்டினை முற்றாக எதிர்க்கின்றது.

பிரதமர் ராஜபக்ஸவும், சிங்கள பேரினவாத கட்சிகளும் செய்து கொண்ட இந்த தேர்தல் ஒப்பந்தமானது, சமாதான முன்னெடுப்புக்களும் சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்கும் நிவாரணப் பணிகளுக்கும் ஆப்பு வைத்துள்ளது! ஆனால் இது ஒரு வெளிப்படையான, பகிரங்கமான, தெளிவான ஆப்பு!

அதாவது தமிழ் மக்களுக்கும் சமாதானத்த்pற்கும், சமாதானத் தீர்வுக்கும் ஒரு வெளிப்படையான எதிரி!

ஆனால் நாம் இது குறித்து பெரிதாகக் கரிசனை கொள்வதற்கு முதல் வேறு ஒரு விடயம் குறித்து முக்கிய கவனம் செலுத்த விழைகின்றோம். அதுவே முக்கியமான விடயம் என்றும் கருதுகின்றோம்.

அது சமாதான முயற்சிகள் குறித்தும், சமாதானத் தீர்வு குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்து வருகின்ற கருத்துக்கள் ஆகும்.! நாம் மிகவும் கவலைப்படுவது ஏன் அஞ்சுவதும் கூட அவருடைய நிலைப்பாட்டையும், செயற்பாட்டையும் பற்றித்தான்.! அவை குறித்து இன்றைய தினம் தர்க்கிக்;க வேண்டியதும், அவசியமான ஒன்றுதான்.!

மூன்றாண்டுகளுக்கு முன்பு ரணில் விக்கிரமசிங்கவின் அரசு அதிகாரத்தில் இருந்தபோது மேற்கொள்ளப்பட்டு வந்த சமாதானப் பேச்சு வார்த்தைகள் குறித்து நாம் தொடர்ந்தும் விமர்சித்து வந்ததையும்; ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் உள்நோக்கு குறித்து சந்தேகம் தெரிவித்து வந்ததையும் நேயர்கள் அறிவீர்கள்!

இந்தச் சமாதானப் பேச்சு வார்த்தைகளை ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் இழுத்தடிப்பதற்கு முயற்சி செய்யும் என்பதையும் இந்த பேச்சு வார்த்தைகள் ஊடாக தமிழ் மக்களுக்குப் பொருளாதார உதவிகளையோ அல்லது சமாதானத் தீர்வையோ வழங்காமல் காலம் தாழ்த்துவதற்கு முயற்சிகளைச் செய்யும் என்பதையும் நாம் கடந்த மூன்றாண்டுகளாகத் திரும்ப திரும்ப வலியுறுத்தி வந்துள்ளதையும் நேயர்கள் அறிவீர்கள்.

�ரணில் விக்கிரமசிங்க என்கின்ற சிங்கள அரசியல்வாதி தமிழீழ மக்களின் நாளாந்த வாழ்வியல் பிரச்சனைகளையும், தேசியப் பிரச்சனையையும் சிறிலங்காவின் பொருளாதார நலன் என்கின்ற கறுப்பு கண்ணாடி ஊடாகப் பார்க்கின்ற சிங்கள முதலாளித்துவ போக்கை உடையவர்கள் என்கின்ற தர்க்கத்தையும் நாம் தொடர்ந்தே வலியுறுத்தி வந்திருக்கின்றோம்.

சமாதானத் தீர்வு ஒன்றிற்கு நியாயமான ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என்கின்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைத்துவம் கடைபிடித்த நெகிழ்ச்சிப் போக்கினை இப்போது நம் எல்லோரும் அறிவோம்! சிறிலங்கா அரசு புரிந்த எத்தனையோ பாரிய யுத்த நிறுத்த மீறல்களை, விடுதலைப்புலிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை புரிந்த கொலைகளை எல்லாம் பொறுத்துக் கொண்டு தமிழ்த் தலைமை தன் நேசக் கரங்களை நீட்டியவாறே இருந்தது.

ஆனால் இரண்டு தசாப்த காலத்திற்கும் மேலாக சிறிலங்கா அரசு நடாத்திய அரச பயங்கரவாதப் போர்களின் காரணமாகத் தமது இயல்பு வாழ்க்கையை இழந்த தமிழ் மக்களின்; அடிப்படை வாழ்வியல் தேவைகளைக் கூட ரணில் விக்கிரமசிங்கவின் அரசு நிறைவேற்றத் தயாராக இல்லை என்ற விடயம் மீ;ண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்ட நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் பேச்சு வார்த்தைகளை தற்காலிகமாக ஒதுக்கி வைத்தார்கள்.!

சம்பந்தப்பட்டவர்களுக்கு- உலக நாடுகள் உட்பட விடுதலைப்புலிகள் விடுத்த செய்தி அது.!

பேரினவாதத்தின் காட்டுமிராண்டிக் கூச்சலை பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் அரசியல் கூட்டணி பகிரங்கமாக அறை கூவி நிற்கின்றது.! அதே கருத்தை தற்கால நாகரிகப் போர்வையின் கீழ் நாசூக்காகக் கூறி நிற்கின்றார். ரணில் விக்கிரமசிங்க அவர்கள்.

நாம் கவலைப்படவேண்டியது �ரணில் விக்கிரமசிங்க� குறித்துத்தான்.

ரணில் விக்கிரமசிங்க சிறிலங்காவின் சிங்கள பௌத்தப் பேரினவாத சிந்தனைகளை முலாம் பூசி விற்று வருகின்றார். தமிழ் மக்களுக்கு எதிரான தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாத அரசியல் யாப்புக்கும் அதன் அரசியல் அமைப்புக்கும் கீழ்படிந்து நடக்கின்றார். முதலாளித்துவ பார்வையைக் கொண்டுள்ள அவர் உலக நாடுகளின் கொள்கையான உலக மயமாக்கல் என்ற பொருளாதாரக் கோட்பாட்டினை உள்வாங்கி அதனை உள்நாட்டில் விற்பதற்கும் பெருமுயற்சி செய்து வருகின்றார்.

எல்லாவற்றிற்கும் மேலாக ஒருங்கிணைந்த இலங்கை என்ற கொள்கையின் கீழ் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனைக்குத் தீர்வு ஒன்றைக் காண்பதற்கு முயன்று வருவதாக ரணில் விக்கிரமசிங்க கூறி வருகின்றார். இங்கே ஒரு விடயத்தை நாம் தெளிவாக உள்வாங்க வேண்டும்.

ஒரு பிரச்சனையை, அதுவும் ஒரு தேசியப் பிரச்சனையை தீர்ப்பதற்கு மனப்பூர்வமாகவே முயல வேண்டுமானால் அதனை திறந்த மனத்துடன் அணுக வேண்டும். குறுகிய மனப்பான்மையுடன், கட்டுப்பாடுகளுடன் அணுக முடியாது.! �பாதத்திற்கு ஏற்றவாறு காலணிகளைத் தேடவேண்டுமே தவிர இருக்கின்ற காலணிக்குள் பாதத்தை திணித்து பாதையில் நடைபோடலாம் என்ற முயற்சியே தவறானதாகும்.�

தமிழீழ மக்களுக்கு எதிரான இந்த இரண்டு சக்திகளும் தம்மிடையேயான போட்டியை முடித்துக் கொண்டு தமிழ் மக்களை எதிர்கொள்ளும் நாள் நவம்பர் பதினேழு! இந்த நவம்பர் பதினேழு என்ன தீர்ப்பை; கூறினாலும் அது குறித்துத் தமிழ் மக்கள் அலட்டிக் கொள்ள தேவையில்லை! சரியான தீர்ப்பை சரியான பாதையை காட்டுகின்ற தீர்ப்பு வரப்போகின்ற நாள் எது தெரியுமா?

அது நவம்பர் 27!!

அன்றை தினம்தான் தமிழீழத் தேசியத்தலைவர் மேதக வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தன்னுடைய மாவீரர் தினப் பேருரையை வழங்க போகின்ற தினம்! தமிழ் மக்களின் எதிர்கால நலனுக்கான திட்டத்தை வழங்கப் போகின்ற தினம்!

அன்புக்குரிய எமது தமிழ் மக்களே!

நவம்பர் 17 அல்ல நாம் எதிர்பார்ப்பது! நாம் எதிர்பார்ப்பது நவம்பர் 27!!

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தன்னுடைய மாவீரர் நாள் பேருரைகளின் போது, தொடர்ந்தும் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை வலியுறுத்தியே வந்திருக்கின்றார். கடந்த ஆண்டு அதாவது 2004ம் ஆண்டு மாவீரர் தினப் பேருரையின் போது தேசியத் தலைவர் அவர்கள் கூறியதை நாம் எமது பார்வையில் தந்திருந்தோம். அதனை அதாவது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாம் தேசியத் தலைவரின் மாவீரர் தின உரை குறித்துத் தந்த எமது பார்வையை பத்து மாதங்களின் பின்பு மீண்டும் தர விழைகின்றோம்.

அன்று தேசியத் தலைவர் இவ்வாறு கூறியிருந்தார்:-

ஒன்றை மட்டும் நாம் திட்டவட்டமாகச் சொல்ல விரும்புகின்றோம். அதாவது சந்திரிக்கா அம்மையாரின் முரண்பட்ட ஒன்றுக்கொன்று மாறுபட்ட நிலைப்பாடுகளைப் பார்க்கும்போது அவரது அரசானது தமிழ் மக்களுக்கு ஓர் இடைக்காலத் தீர்வையோ, நிரந்தரமான தீர்வையோ வழங்கப் போவதில்லை என்பது புலனாகும்.

சிங்கள பௌத்த பேரினவாதச் சக்திக்குட் புதைந்து கிடக்கும் அரசியல் அமைப்புக்களுக்கும் அவற்றின் தலைமைகளும் தமிழீழ மக்களின் அபிலாசைகளை ஒரு போதும் புரிந்து கொள்ளப் போவதில்லை. சிங்களத் தேசத்தின் பிரதான அரசியற் கட்சிகள் எவையுமே தமிழரின் தேசிய இனப்பிரச்சனையின் அடிப்படைகளை கூட அங்கீகரிக்கத் தயாராக இல்லை. வடகிழக்கு மாநிலமானது தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுத் தாயகம் என்பதையோ தமிழர்கள் ஒரு தனித்துவமான தேசிய இனக் கட்டமைப்பைக் கொண்ட மக்கள் சமூகம் என்பதையோ தமிழீழ மக்களுக்கு பிரிந்து செல்லும் உரிமையுடன் சுயநிர்ணய உரிமையுண்டு என்பதையோ எந்த ஒரு சிங்கள அரசியல் இயக்கமும் ஏற்றுக் கொள்ளத் தயாராகவில்லை.

அன்புக்குரிய நேயர்களே!

எத்தகைய தீர்க்தரிசனமான பார்வை! அதை இன்றைய காலம் நிரூபித்து நிற்கின்றது.! தமிழீழ தேசியத் தலைவரின் கூற்றினை நாம் கீழ் வருமாறு அன்றைய தினம் வழிமொழிந்திருந்தோம்;.!

இதுதான் யதார்த்தநிலை! இதுதான் உண்மையான நிலை! இவை எல்லாவற்றையும் தெளிவாகக் கூறிய தேசியத்தலைவர் மேலும் ஒரு படி சென்று மூன்று வேண்டுகோள்களையும் விடுக்கின்றார். நிலைமை மேலும் மோசமாகப் போகாமல் இருப்பதற்காக ஆளும் கட்சி-எதிர்கட்சி உட்பட சிங்களத் தலைமைகளிடம் பொதுவாக ஒரு வேண்டுகோளையும், தற்போது ஆட்சியில் இருக்கும் சிறிலங்கா அரசிடம் முக்கியமான ஒரு வேண்டுகோளையும், ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சனையில் அக்கறை கொண்டுள்ள உலகநாடுகளிடம் குறிப்பாக ஒரு வேண்டுகோளையும் தேசியத்தலைவர் விடுக்க்pன்றார். அவருடைய பண்பமைந்த வார்த்தைப் பிரயோகங்கள் வருமாறு:-

எமது விடுதலை இயக்கம் ஒரு வேண்டுகோளை முன் வைக்க விரும்புகிறது.

காலம் தாமதிக்காது பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

சிறிலங்கா அரசிற்கு அழுத்தம் கொடுக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

இப்பொழுது அவருடைய மூன்று வேண்டுகோள்களின் முழுவிபரத்தையும் கீழே தருகின்றோம்.

தமிழீழத் தேசியத் தலைவரின் மூன்று வேண்டுகோள்கள்.

சிங்களத் தலைமைகளுக்கு:

ஜனாதிபதி சந்திரிக்காவிடமும் அவர் கூட்டாட்சி அமைத்திருக்கும் கட்சிகளிடமும் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிடமும் எமது விடுதலை இயக்கம் ஒரு வேண்டுகோளை முன்வைக்க விரும்புகின்றது. அதாவது தமிழ் மக்களது இனப்பிரச்சiயின் அடிப்படைகள் குறித்து அவர்களது மூலாதாரக் கோரிக்கைகளை தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை குறித்து உங்களது கட்சிகளின் கொள்கை நிலைப்பாட்டினை அதிகார பூர்வமாக பகிரங்கப்படுத்துங்கள்.

சிறிலங்கா அரசிற்கு:

இந்த நெருக்கடியான சூழ்நிலையிற் சிறிலங்கா அரசுக்கு நாம் அவசரமான அழைப்பு ஒன்ழறை விடுக்க விரும்புகின்றோம். அதாவது நாம் முன் வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத்திட்டத்தின் அடிப்படையில் நிபந்தனையற்ற முறையில் காலந் தாமதிக்காது பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்க்pன்றோம்.

உலகநாடுகளுக்கு:

எமது இந்த இக்கட்டான நிலையை தமிழரின் இனப்பிரச்சனையில் அக்கறையுடைய உலகநாடுகள் கருத்தில் எடுத்து தாயகமான நிலைப்பாட்டின் அடிப்படையிற் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு சிறிலங்கா அரசிற்கு அழுத்தம் கொடுக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

தமிழீழத் தேசியத் தலைவரின் வேண்டுகோள்களை இவ்வாறு குறிப்பிட்டிருந்த நாம் எமது கருத்துக்களைக் கீழ் வருமாறு அன்றைய தினம் தெரிவித்திருந்தோம்.!

�இந்த வேண்டுகோள்கள் புறக்கணிக்கப்பட்டால் அல்லது அசட்டை செய்யப்பட்டால் அடுத்த வழிதான் என்ன? தமிழீழ மக்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தங்கள் மக்கள் கொடுத்துள்ள இறையாணையை நிறைவேற்ற வேண்டிய கடமை உண்டு.! அந்தக் கடமையை நிறைவேற்றி எமது மக்களுக்கு விடிவையும், விடுதலையையும் பெற்றுக் கொடுப்பதற்காக விடுதலைப்புலிகள் மேற்கொள்ள வேண்டிய, மேற்கொள்ளக் கூடிய அடுத்த கட்ட நகர்வுதான் என்ன?

அதனை தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்.

எமது அந்த அவசர வேண்டுகோளை நிராகர்pத்;து காலத்தை இழுத்தடித்து எமது மக்களின் துயர வாழ்வை நீடித்து செல்ல சிறிலங்கா அரசு முற்படுமானால் நாம் எமது தேசத்தின் சுதந்திர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை.

பொறுமைக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் எல்லைக்கோடுகள் உள்ளன. அந்த எல்லைக்கோடுகளை நாம் அடைந்து விட்டோம்.

இவ்வாறு தமிழீழத் தேசியத் தலைவர் தெரிவித்திருந்தார். இது குறித்து நாம் இவ்வாறு எமது கருத்தினை தெரிவித்து இருந்தோம்.

எமது தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. என்று எமது தேசியத் தலைவர் கூறியது குறித்துப் பல அரசியல் வல்லுனர்களும் பல விதமான கருத்துக்கள் வெளியிட்டு வருகின்றார்கள். இது குறித்து எமக்கும் ஒரு தாழ்மையான கருத்து உண்டு.

போராட்டத்தின வடிவங்கள் மாறலாம். ஆனால் போராட்டத்தின் இலட்சியம் மாறப்போவதில்லை என்று தேசியத் தலைவர் பலமுறை வலியுறுத்திக் கூறி வந்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியாகப் பலம் பெற்று விளங்குகின்றது மட்டுமல்லாது அரசியல் ரீதியாகவும் பலம் பெற்று தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக விளங்குகின்றார்கள். சிங்கள-பௌத்த பேரினவாத சக்திகள் தமிழ் மக்களின் அரசியல்-தேசிய வேட்கைகளை எந்த உருவத்திலும் நசுக்க முனைந்தாலும் அதற்கேற்ப முகம் கொடுத்து தமது அடுத்த கட்ட நகர்வை தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் முன்னெடுத்துச் செல்லும். அது ஜனநாயக ரீதியிலும் இருக்கலாம். ஆயுதப் போராட்ட வடிவமாகவும் இருக்கலாம்.

ஆகையினால் அன்புக்குரிய எமது நேயர்களே! தமிழீழ மக்களின் எதிர்காலத்திற்குரிய, முக்கியமான தீர்ப்பு வரப்போகின்ற தினம், நவம்பர் பதினேழு அல்ல! அது நவம்பர் இருபத்தியேழு!!

சிறிலங்காவின் தேர்தல் முடிவுகள் எந்தத் தீர்;ப்பையும் தந்துவிட்டு போகட்டும்! ஆனால் தமிழர்களின் எதிர்காலத்தை தரக்கூடியது அவர்களின் தீர்ப்பு அல்ல! தமிழ் மக்களின்; எதிர்கால நலனுக்குரிய திட்டத்தை-தீர்ப்பை தரக்கூடிய நாள் ஒன்றே ஒன்றுதான்!

அது நவம்பர் 27!

தேசியத் தலைவரின் மாவீரர் தினப் பேருரை!!
 

 
 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home