Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan > பொதுக் கட்டமைப்பு ஒரு பார்வை

Selected Writings by Sanmugam Sabesan
சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா

பொதுக் கட்டமைப்பு ஒரு பார்வை
P-TOMS: A point of view
[English Translation by Arvalan]

28 June 2005

"...பொதுக் கட்டமைப்பு உடன்படிக்கையானது தமிழீழ விடுதலைப் புலிகளுக்குக் கிடைத்துள்ள இன்னுமொரு அங்கீகாரமா? நாம் இந்த விடயத்தை வேறு ஒரு கோணத்தில், வேறு ஒரு தளத்தில் வைத்துத் தர்க்கிக்க விரும்புகின்றோம். எம்மைப் பொறுத்த வரையில் அங்கீகாரம் என்ற தேவையைப் பெறுவதற்கான கட்டத்தையும், காலத்தையும் விடுதலைப் புலிகள் கடந்து வந்து விட்டார்கள் என்றே கருதுகின்றோம். சரியாக சொல்லப் போனால் விடுதலைப் புலிகள்தான் இங்கே ஓர் அங்கீகாரத்தை வழங்கியிருக்கின்றார்கள்..."
 

கடற்கோள் நிவாரணப் பொதுக்கட்டமைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் சிறிலங்கா அரசும், தமிழீழ விடுதலைப் புலிகளும் கடந்த வெள்ளிக்கிழமை (24-06-2005) அன்று கைச்சாத்திட்டிருக்கிறார்கள். இந்த உடன்படிக்கையினை கனடா, நோர்வே, இந்தியா ஆகிய நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் வரவேற்றுள்ளன.

மேற்குலக நாடுகள் இது குறித்துத் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றன. சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கொள்கை அடிப்படையில் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. ஜனதா விமுக்தி பெரமுனவும் மற்றைய சிங்கள-பௌத்த பேரினவாதக் கட்சிகளும் இந்த உடன்படிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். உடன்படிக்கைக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளை எடுக்கப் போவதாகவும் ஜே.வி.பி அச்சுறுத்தியுள்ளது.

இவ்வேளையில் இப்பொதுக் கட்டமைப்புக் குறித்து நாம் எமது பார்வையைத் தர விழைகின்றோம். ஆழிப்பேரலை அனர்த்தம் நிகழ்ந்து சுமார் ஆறு மாத காலத்திற்குப் பின்னர் எத்தனையோ வீண் விவாதங்கள், வீம்புப் பேச்சுக்களின் பின்னர் ஒரு வழியாக சந்திரிக்கா அம்மையாரின் அரசு இந்த உடன்படிக்கையை ஒப்பேற்றி உள்ளது. இந்த உடன்படிக்கையை நாமும் வரவேற்கின்ற இந்த வேளையில் இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை குறித்து சரியான ஒரு புரிந்துணர்வை அறிந்து கொள்ள வேண்டிய தேவையையும் வற்புறுத்த விழைகின்றோம்.

இப்பொதுக்கட்டமைப்பின் சராம்சம் குறித்து நாம் தர்க்கிப்பதற்கு முதல், வேறு சில விடயங்கள் குறித்து எமது பார்வையைத் தர விரும்புகின்றோம். இக்குறிப்பிட்ட சில விடயங்கள், இப் பொதுக் கட்டமைப்பு குறித்து சில பரிமாணங்களைத் தெளிவாக்குவதற்கு உதவக் கூடும்.

இந்தக் கடற்கோள் நிவாரணப் பொதுக் கட்டமைப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மேலும் ஓர் அங்கீகாரம் கிடைத்திருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் உட்படப் பலரும் கருத்துத் தெரிவித்திருக்கின்றார்கள். இப்பொதுக் கட்டமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள ஜே.வி.பி மற்றும் புத்த பிக்குகள் போன்றோரும் விடுதலைப் புலிகளுக்கு கிடைத்த இந்த அங்கீகாரத்தைத்தான் தமது எதிர்ப்புக்கு காரணமாக சுட்டிக் காட்டி வருகின்றார்கள் பொதுவாக-பரவலாக-தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மேலுமொரு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகத்தான் சர்வதேச ஊடகங்களும் கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

பொதுக் கட்டமைப்பு உடன்படிக்கையானது தமிழீழ விடுதலைப் புலிகளுக்குக் கிடைத்துள்ள இன்னுமொரு அங்கீகாரமா?

நாம் இந்த விடயத்தை வேறு ஒரு கோணத்தில், வேறு ஒரு தளத்தில் வைத்துத் தர்க்கிக்க விரும்புகின்றோம். எம்மைப் பொறுத்த வரையில் அங்கீகாரம் என்ற தேவையைப் பெறுவதற்கான கட்டத்தையும், காலத்தையும் விடுதலைப் புலிகள் கடந்து வந்து விட்டார்கள் என்றே கருதுகின்றோம். சரியாக சொல்லப் போனால் விடுதலைப் புலிகள்தான் இங்கே ஓர் அங்கீகாரத்தை வழங்கியிருக்கின்றார்கள்.

நாம் இந்த கருத்தை ஓர் உயர்வுவமையாச் சொல்ல வரவில்லை. என்பதை இங்கே வலியுறுத்த விரும்புகின்றோம். முழுமையான இலங்கைத் தீவிற்கும் பொருளாதார உதவி கிடைக்க வேண்டுமென்றால் அதற்கு விடுதலைப் புலிகளின் ஒத்திசைவும், அங்கீகாரமும், கைச்சாத்தும் இந்த உடன்படிக்கைக்கு அத்தியாவசியமாத் தேவைப்பட்டிருந்தது. அதனையே உலக நாடுகளும், நிதி உதவி வழங்கும் நாடுகளும் வலியுறுத்தி வந்துள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கீகாரத்தை வெளிப்படுத்திய அவர்களது கைச்சாத்தின் மூலம்-சிறிலங்காவையும் தமிழீழத்தையும் உள்ளடக்கிய முழு இலங்கைத் தீவிற்கும் இன்று சுனாமிப் பேரழிவுக்கான நிதி உதவி கிடைக்க விருக்கின்றது என்பதே யதார்த்தமான நிலையாகும். இது விடுதலைப் புலிகளுக்கான அங்கீகாரமல்ல! விடுதலைப்புலிகள் கொடுத்துள்ள அங்கீகாரம்! உண்மையிது! வேறும் புகழ்ச்சியல்ல!!

இன்னுமொரு முக்கியமான விடயத்தையும் நாம் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் 23-02-2002 அன்று சிறிலங்கா அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் போர் நிறுத்தம் குறித்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இன்றுவரை அமுலில்-நடைமுறையில் இருக்கும்-இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை, சிறிலங்காவின் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் தொடர்ந்தும் விமர்சித்து வந்ததோடு, இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் சட்ட பூர்வமானதா? என்றும் கேள்வி எழுப்பி வந்துள்ளார். தான் நினைத்தால் இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்து விட முடியும். என்றும் சந்திரிக்கா அம்மையார் எச்சரிக்கை செய்து வந்தமையையும் எமது நேயர்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.!

ஆனால் சந்திரிக்கா அம்மையாரின் இன்றைய அரசு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கைச்சாத்திட்ட பொதுக் கட்டமைப்;புப் புரிந்துணர்வு உடன்படிக்கையின் சரத்துக்களில் ஒன்று என்ன கூறுகின்றது?

சரத்து இரண்டின் ஆறாவது பிரிவு இவ்வாறு கூறுகின்றது:

'இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குமான 23-02-2002 எனத் திகதியிட்ட போர் நிறுத்த உடன்படிக்கை குழு வலுவுடனும்; பயன் உறுதியுடனும் தொடர்ந்திருக்க வேண்டும் என்பதுடன் இந்த சுனாமிப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ள எதுவும் அத்தகைய உடன்படிக்கையை பங்கப் படுத்துவதாகவோ அல்லது அதன் நியதிகளை ஏதேனும் விதத்தில் மாற்றுவதாவோ பொருள் கொள்ளப்படலாகாது.!

அதாவது அம்மையாரின் தற்போதைய அரசு அன்றைய போர் நிறுத்த உடன்படிக்கையைச் சட்டபூர்வமாக இன்று ஏற்றுக் கொண்டுள்ளதோடு மட்டுமல்லாது, அந்தப் போர் நிறுத்த உடன்படிக்கைக்குப் பங்கம் ஏற்படுத்த மாட்டோம் என்றும் அதன் நியதிகளை மாற்ற மாட்டோம் என்றும் உறுதி அளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதை, இங்கு நாம் எமது நேயர்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.

இந்தப் பொதுக் கட்டமைப்பு உடன்படிக்கை மிகச் சரியான முறையில் செயல்படுத்தப்படுவதற்கு சந்திரிக்கா அம்மையாரின் அரசு தடைக் கல்லாக இருக்காமல், இன்னுமொரு முக்கியமான விடயம் நிரூபிக்கப்படக் கூடிய வாய்ப்பு உண்டு.

கடற்கோள் நிவாரணப் பொதுக்கட்டமைப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையின் பின்னர் நிதி உதவி வழங்கும் உலக நாடுகள் முதல் கட்ட நிதியை வழங்கிய பின்னர் அந்த நிதியை இந்த இரண்டு தரப்பினரும் - அதாவது தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசும்,- எவ்வாறு நிர்வகித்து நிவாரணத்தையும், புனர்வாழ்வையும், அபிவிருத்தியையும் தத்தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு வழங்குவார்கள் என்பதை சம்பந்தப்பட்ட உலக நாட்டுப் பிரதிநிதிகள் கண்காணிப்பார்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் மிகச் சிறந்த நிர்வாகக் கட்டமைப்பின் ஊடாக ஊழல் அற்ற செயல் திறன் மிக்க நடவடிக்கைகள் அமுலாக்கப்படுவதை இந்த உலக நாடுகள் கண்கூடாகக் காணுகின்ற காலம் வரும். அதேவேளையில் பிற பகுதியில் அதாவது சிறிலங்கா அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இயல்பாகவே உள்ள ஊழலையும், இலஞ்சத்தையும், நிர்வாகத் திறமை இன்மையையும் இதே உலக நாடுகள் கண்டு உணரக்கூடிய வேளையும் வரும். ஓப்பீட்டளவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும், சிறிலங்கா அரசிற்கும் இடையே நிர்வாகக் கட்டமைப்பிலும், செயல்திறனிலும் உள்ள ஏற்றத் தாழ்வை நிதியுதவி வழங்கும் நாடுகள் உணருகின்ற காலம் வெகு தொலைவில் இல்லை.

முஸ்லிம் சமூகத்தினர் செறிந்து வாழும் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பாரபட்சமற்ற நியாயமான திறன் மிக்க செயற்பாடுகள் காரணமாக கசப்புணர்ச்சி மறைந்து நல்லுறவு பெருகுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பிரித்தாளும் தந்திரத்தை உபயோகிப்பவர்களும், பிரதேச வாதம் பேசுபவர்ககளும் தமது விசமச் செயல்பாடுகளைக் கைவிட வேண்டி வரும்.

போர்க்காலங்களின் போது தமிழீழக் கரையோரப் பகுதி மக்கள் விடுதலைக்காக அளித்த பங்கும், கொடுத்த விலையும் அளப்பரியது. அத்தோடு கடற்கோள் அனர்த்தத்தினால் அவர்கள் அடைந்த இழப்பும், இன்னலும் அளவிட முடியாதவை. பாதி;ப்புற்ற அனைத்து மக்களுக்கும் தேவையான அவசர மனிதாபிமான உதவிகளைச் செய்து அம்பாறை மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு திருகோணமலை ஆகிய ஆறு மாவட்டங்களிலுள்ள கரையோரச் சமுதாயங்களுக்குத் துரிதமான நிவாரணத்தையும், புனர்வாழ்வையும,; புனரமைப்பையும், அபிவிருத்தியையும் வழங்குவதற்கும் அத்துடன் பாதிக்கப்பட்ட இடப்பரப்புக்களை மீளக்கட்டியெழுப்பும் நடைமுறைகளுக்கு வசதியளிப்பதற்கும் அதனைத் துரிதப்படுத்துவதற்குமென இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளும் நல்லெண்ணத்துடனும் அவற்றின் முனைப்பான முயற்சிகளைப் பயன் படுத்தியும் ஒருமித்துச் செயலாற்றத் தீர்மானித்தும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளன என்று இந்தக் கடற்கோளின் நிவாரணப் பொதுக் கட்டமைப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையின் முகவுரையும் கூறுகின்றது.

அன்புக்குரிய நேயர்களே!

பொதுக் கட்டமைப்பின் தேவை குறித்தும் அது ஏற்படுத்தியுள்ள சில பரிமாணங்கள் குறித்தும் எமது பார்வையைத் தந்தோம். அத்தோடு மட்டும் நின்று விடாமல் சில முக்கியமான யதார்த்தமான உண்மைகளையும் இவ்வேளையில் சுட்டிக் காட்டுவது அவசியம் என்று நாம் கருதுகின்றோம்.

சில வாரங்களுக்கு முன்பு நாம் பொதுக் கட்டமைப்புக் குறித்துக் கருத்து வெளியிடும் போது கீழ்வருமாறு குறிப்பிட்டிருந்தோம்:-

எம்முடைய கவலையெல்லாம் பொதுக்கட்டமைப்பு உருவாகுமா இல்லையா? என்பது அல்ல!

அப்படி ஒரு பொதுக்கட்டமைப்பு உருவாகினால் அக்கட்டமைப்பு உரிய முறையில் தக்கவகையில் செயற்படுத்தப்படுமா?- என்பதுதான் எம்முடைய கேள்வி!

இவ்வாறு நாம் சந்தேகம் தெரிவித்ததற்குப் பல காரணிகள் உண்டு. ரணில் விக்கிரமசிங்கவின் அன்றைய அரசு போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றில் புலிகளுடன் கைச்சாத்திட்டு சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்த போது ரணில் அரசின் இதய சுத்தி குறித்தும் நாம் எம்முடைய சந்தேகங்களை வெளியிட்டிருந்தோம். சிங்கள-பௌத்தப் பேரினவாதத்தின் பொருளாதார நலன் மட்டும் தான் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அவரது கட்சிக்கும் முக்கியமான நோக்கமாகும் என்கின்ற எமது கருத்தையும் நாம் வலியுறுத்தியே வந்துள்ளோம். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையை பொருளாதாரக் கறுப்புக் கண்ணாடியூடாகத்தான் ரணில் நோக்குகின்றார் என்றும் சமாதானப் பேச்சு வார்த்தைகளை ரணில் இழுத்தடிப்பார் என்றும் எமது ஐயங்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரேயே தெரிவித்திருந்தோம்.

அது போலவே ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் தமிழர் விரோத மனப்பான்மை குறித்தும் தன்னுடைய சொந்த சுயநல அரசியல் நலனுக்காக அவர் எதையும் செய்யக் கூடிய துணிவு கொண்டவர். என்பது குறித்தும் எம்முடைய விமர்சனங்களைத் தொடர்ந்தும் தெரிவித்து வந்துள்ளோம். இன்று பொதுக்கட்டமைப்பு ஒன்று உருவாகுவதற்குக் காரணமாக இருந்தார் என்று அம்மையாருக்கு அகிலமெங்கிருந்தும் பாராட்டு மழை பொழிந்த வண்ணம் இருக்கையில் நாமும் அதில் நின்று நனையாமல் சற்றே விலகி நின்று அம்மையாரின் அரசியல் அரிதாரங்கள் எப்போது கரைந்து ஓடும் என்பதில் கவனம் செலுத்த விழைகின்றோம்.

ஐந்து லட்சம் தமிழ் மக்களைத் தன்னுடைய பாரிய இராணுவ நடவடிக்கையால் ஓர் இரவிலேயே அகதிகளாக்கி இடம் பெயர வைத்த சந்திரிக்கா அம்மையார், தன்னுடைய ஆட்சிக் காலத்தில் தொடர்ந்து பாரிய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் தமிழ் மக்களைச் சொல்லொண்ணா இன்னல்களுக்கு உள்ளாக்கிய சந்திரிக்கா அம்மையார், உணவு, மருந்து, பொருளாதாரத் தடைகள் மூலம் தமிழினத்திற்கு தொடர்ந்து துன்பத்தையே கொடுத்து வந்த சந்திரிக்கா அம்மையார், இலங்கைத் தமிழர்கள் வந்தேறு குடிகள்தான்! என்று தென்னாபிரிக்காவில் பேட்டி கொடுத்த சந்திரிக்கா அம்மையார், ரணில் அரசுடனான பேச்சுவார்த்தைகளின் போது சகல முட்டுக்கட்டைகளையும் போட முயன்ற சந்திரிக்கா அம்மையார், நோர்வே நாட்டின் சமாதான அனுசரணையை அகற்ற முயன்ற சந்திரிக்கா அம்மையார், இப்படிப் பட்ட குணாதிசயங்களைக் கொண்ட சந்திரிக்கா அம்மையார் மனம் மாறி திருந்தி விட்டாரா? புத்தர் பிரான் ஏதும் புதிதாக போதித்து விட்டாரோ?

அன்புக்குரிய நேயர்களே!

தமிழீழ விடுதலைப் புலிகள் தமது இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைக்குரிய வரைபை ரணில் விக்கிரமசிங்கவின் அன்றைய அரசிடம் கையளித்த உடனேயே ரணிலின் அரசிலிருந்த மூன்று முக்கிய அமைச்சுகளை அம்மையார் கையகப் படுத்தியது நேயர்களுக்கு ஞாபகம் இருக்கலாம். தொடர்ந்தும் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைக்கு எதிராக சந்திரிகா அம்மையார் தன் கருத்துக்களைத் தெரிவித்தே வந்திருந்தார். அதற்கிணங்க ரணில் விக்கிரம சிங்கவின் ஆட்சியைக் கலைத்து குறுகிய பெரும்பான்மைப் பலத்தில் நாடாளுமன்றத்தையும் அம்மையார் கைப்பற்றினார். இப்பொழுது சுனாமிப் பேரழிவு நடந்த ஆறு மாதங்களுக்குப் பின்னர் எத்தனையோ இழுத்தடிப்புக்குப் பின்னர், இழுபறிகளுக்கு பின்னர் சர்வதேச அழுத்தம் காரணமாக பொதுக் கட்டமைப்பினை உருவாக்க வேண்டிய கட்டாயத்தின் பேரில் சந்திரிக்கா அம்மையார் இறங்கி வந்திருக்கின்றார்.

வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறும் நாள் எப்போது?

அன்புக்குரிய நேயர்களே!

பொதுக்கட்டமைப்பின் அவசியம் குறித்தும் அதனால் ஏற்பட்ட ஏற்படக் கூடிய நன்மைகள் குறித்தும் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் தர்க்கித்திருந்தோம். அதனைத் தொடர்ந்து சந்திரிக்கா அம்மையார் மீது நாம் கொண்டுள்ள அவநம்பிக்கை குறித்தும் தர்க்கித்திருந்தோம். மேலும் இப்பொதுக் கட்டமைப்பு உடன்படிக்கையில் சில முக்கிய விடயங்கள் முழுமையான வரைவுகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் சில அரசியல் நோக்கர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள். நிதி விநியோகம் மற்றும் கையாள்கை முறை தொடர்பான இணக்க ஏற்பாடு இன்pமேல்தான் காணப்பட வேண்டும் என்றும் பத்திரிகைச் செய்திகள் தெரிவித்துள்ளன. இந்த இணக்கப்பாட்டைக் காண்பதற்குரிய காலத்தையும் அம்மையாரின் அரசு இழுத்தடிக்கக் கூடும். காலத்தைச் செயல்பாடு எதுவுமின்றி வீணே இழுத்தடிக்கும் கைங்கரியத்தில் அம்மையார் கைதேர்ந்தவர். கால இழுத்தடிப்புக்குரிய வாய்ப்பு பன்முகப்பட்ட நிலையற்ற அரசியல் காலம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள சிங்கள பௌத்த பேரினவாதம் அரசை எந்தவிதமாவது கைப்பற்றுவதிலேயே குறியாக இருக்கும் சுயநலக் கட்சி அரசியல் வாதம் - இவற்றிற்கிடையே இப்பொதுக் கட்டமைப்பு செயல் திறனோடு செயல்பட வாய்ப்பிருக்கின்றதா?- என்ற கேள்வியும் பெரிதாக எழுவதைத் தவிர்க்க முடியவில்லை!

இந்த பொதுக்கட்டமைப்பினை முறையாக அமுல்படுத்துவதற்கு அம்மையாரின் அரசிற்கு வலு இருக்கின்றதா? வலு இல்லா விட்டாலும் விருப்பமாவது இருக்கின்றதா?

தமிழீழ விடுதலைப் புலிகள் இப்பொதுக் கட்டமைப்பிற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதற்கான காரணங்களை ஏற்கனவே தர்க்கித்திருந்தோம். முத்தாய்ப்பாக வேறு இரண்டு விடயங்களையும் சொல்லி வைக்க விரும்புகின்றோம்.!

இந்த உடன்படிக்கையில் புலிகள் கைச்சாத்திட்டதன் மூலம் சம்பந்தப்பட்ட உலகநாடுகளின் எதிர்பார்ப்புக்கு ஒரு வாய்ப்பையும் இப்பொதுக் கட்டமைப்பினூடாக நியாயமாகச் செயல்படுவதற்காக சிறிலங்கா அரசுக்கு ஒரு சந்தர்ப்பத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகள் வழங்கியிருக்கின்றார்கள் - என்று சொல்வதில் தப்பில்லைத் தானே?
 

P-TOMS: A point of view
(Translated by Arvalan)

The Liberation Tigers of Tamil Eelam (LTTE) and the Sri Lankan Government has officially entered into a Memorandum of Understanding to establish a joint tsunami aid-sharing structure Friday 24th OF June 2005. Canada, Norway, India, US and the UNO has congratulated the parties for reaching an agreement.

Sri Lanka’s main opposition party, UNP, has expressed its support, whilst JVP and other Sinhalese supremacists’ parties have launched agitation campaigns against the Post-Tsunami Operational Management Structure (P-TOMS). JVP and other parties have also filed a legal challenge against the P-TOMS.

President Ms Chandrika Kumaratunga has agreed to the P-TOM’S six months after Boxing Day Tsunami, and that too not without delays, unnecessary comments and debate. Whilst welcoming the agreement reached on P-TOMS, it is essential that we have a proper understanding about the same.

It is equally important to analyse the contents of the P-TOMS as well the other dimensions of the agreement reached between the government and LTTE.

Political analysts and international media observe that the signing of P-TOMS symbolizes another recognition given to LTTE as the sole representatives of the Tamils in Sri Lanka. JVP and other Sinhalese supremacist parties oppose any such recognition given to the LTTE.

Is it really another recognition given to the LTTE as the sole representatives of the Tamils in Sri Lanka? We would like to argue that the LTTE has passed the stage where they need or seek recognition. In fact they are the ones who have offered recognition in this case.

LTTE’s cooperation and agreement was necessary for the Island of Sri Lanka to receive foreign aid to rehabilitate and reconstruct the tsunami affected areas. This was emphasized by the donor countries and multi lateral agencies. LTTE has enabled the aid to reach the island by signing this agreement. Therefore in fact, LTTE has not received recognition; it has offered recognition. This is an unpalatable truth.

During Ranil Wickramasinghe’s regime, the Sri Lankan government and the LTTE signed the Ceasefire agreement (CFA) in February 2002. This agreement which is in force at present was severely criticized by Chandrika Kumaratunga who even questioned the legality of the agreement. It is also worth remembering that she even threatened to cancel the agreement.

However, the P-TOMS agreement signed between the Chandrika government and the LTTE recognizes the CFA agreement. Para 2.6 of the P-TOMS state “The Ceasefire Agreement, dated as of 23 February 2002, between the GOSL and the LTTE, shall continue in full force and effect, and nothing in this MOD shall be construed to prejudice such agreement or alter its terms in anyway”.

This means, not only has the Chandrika government endorsed the CFA it has also assured that it will not act in prejudice to the CFA.

Provided the Chandrika government does not raise any obstacles to the full implementation of the P-TOMS, the reconstruction and rehabilitation efforts to be carried out will prove another important aspect to the international community.

Once the funds are made available to the Sri Lankan government and LTTE, they will be able to undertake rehabilitation and reconstruction projects in their respective areas of control, which will be closely monitored by the international community. The international community will be able to witness first hand the super efficient and corruption free administration of the LTTE versus the in efficient and corrupted practices adopted by the Sri Lankan bureaucracy.

This is also an opportunity to build bridges with the Muslim community through the non partisan and efficient administration of the LTTE. This will nullify the regional and communal based propaganda carried about by parties with ulterior motives.

The price paid by the coastal community during the liberation struggle is enormous. In addition to that the destruction caused by the Tsunami to these communities is devastating. “In recognition of this urgent humanitarian need and in a spirit of partnership, the Government of Sri Lanka (the "GOSL") and the Liberation Tigers of Tamil Eelam (the "LTTE") (the "Parties") have resolved to work together, in good faith and using their best efforts, to deliver expeditious relief, rehabilitation, reconstruction and development to the coastal communities in the six districts of Ampara, Batticaloa, Jaffna, Kilinochchi, Mullaitivu and Trincomalee ("the Six Districts") and to facilitate and expedite the process of rebuilding the affected areas” states the preamble to the P-TOMS.

The pertinent question to be raised at this juncture is whether the P-TOMS will be implemented properly? This suspicion is not without any foundations.

This column had its suspicions when the Ranil Wickramasinghe government signed the CFA which was followed by peace negotiations. The column suspected that the economic well being of the Sinhalese Buddhist supremacists was the driving force behind these moves. Two years this column believed that Ranil Wickramisngha’s government is trying to perceive the ethnic problem through economic lenses and will procrastinate the peace talks. The column also stated that Chandrika Kumaratunga has an anti Tamil attitude and will do anything to preserve her self interests.

It is this Chandrika Kumaratunga who made over five hundred thousand Tamils refugees overnight, who brought upon immense hardships to the Tamil people through continued military offenses during her regime, who enforced an economic and medical embargo on the Tamil people, who called the Tamils, who said that “Tamils are not originals to this country” in an interview given in South Africa, who raised so many obstacles during when Ranil Wickramasinghe was negotiating with the LTTE, and who wanted Norway withdraw from it’s mediatory role.

Therefore, has Chandrika with the above credentials has had a change of heart?

Chandrika Kumaratunga took over three ministries from the Ranil Wickramasinghe government soon after the LTTE submitted its ISGA proposals and continued to raise her objection for the ISGA. Subsequently she dissolved the Ranil Wickramasinghe government and regained a slim parliamentary majority. Six months after the Tsunami disaster she has been pressurized by the international community to enter into this agreement with the LTTE.

This analysis discussed about the need for the P-TOMS and the benefits of such an agreement. At the same time it also had its doubts on the aspirations of Chandrika Kumaratunga.

Some political observers have noted that the P-TOMS do not contain complete provisions in regard to certain important issues such as finance allocation. Parties are yet to reach agreement on allocation and handling of funds. It is quite possible that the Chandrika Kumaratunga government could delay negotiations on this aspect as well. Chandrika is quite capable of procrastination and will be focused on preserving her own political interest. Therefore it is questionable whether the P-TOMS would be able to operate effectively in such an environment.

Further, does the Chandrika Kumaratunga government have the “real power” to implement the P-TOMS, given that it is a minority government after the departure of JVP?

We have already analyzed the reasons why LTTE signed the P-TOMS. In conclusion it is worth emphasizing that by entering into an agreement for P-TOMS; LTTE has provided an opportunity for the international community’s expectations to materialize and at the same time provided an opportunity to the Sri Lankan government to fully implement an agreement.
 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home