"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Selected Writings by Sanmugam Sabesan
சபேசன்-மெல்பேர்ண்-அவுஸ்திரேலியா
புரிந்துணர்வு ஒப்பந்தம் தந்த �புரிந்துணர்வு� என்ன?
23 February 2005
இந்த பெப்ரவரி 22ம் திகதியுடன் சிறிலங்கா அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு மூன்று ஆண்டுகள் முழுமையடைகின்றன.
புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகின்ற இந்த யுத்தநிறுத்த ஒப்பந்தம் இந்த மூன்றாண்டு காலத்தில் தமிழீழ மக்களுக்கு தந்தது என்ன? அல்லது வெளிப்படுத்தியதுதான் என்ன? என்பது குறித்துத் தர்க்கிப்பது இவ்வேளையில் பொருத்தமானதாக இருக்கும் என்று நம்புகின்றோம்.
நீண்ட ஆலோசனைகளுக்கும் கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின்னர் மிகக் கவனமாகத் தயாரிக்கப்பட்ட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒப்புக்கொண்ட வெளிப்படுத்திய கருத்துக்கள் குறித்து நாம் முதலில் கவனம் செலுத்த விரும்புகின்றோம். அதனூடே எழுத்து வடிவத்திற்கும் யதார்த்த நிலைக்கும் உள்ள ஒற்றுமையையும��; முரண்பாட்டையும் நோக்குவது தெளிவினைத் தரக்கூடும்.
இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் முன்னுரையில் உள்ள முதல் பந்தி கீழ்வருமாறு கூறுகின்றது:-�இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனத்துவ முரண்பாட்டிற்கு பேச்சுவார்த்தை மூலமான தீர்வு ஒன்றைக் காண்பதே சிறிலங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசினதும் (GOSL) தமிழீழ விடுதலைப் புலிகளினதும் (LTTE ) ஒட்டு மொத்தமான நோக்கமாகும்;.�
இந்தப்பந்தியில் எடுத்தாளப்பட்டிருக்கும் சொல்லாக்கமான:- �நடைபெற்றுக்கொண்டிருக்கும்�� இனத்துவ முரண்பாடு��� �பேச்சுவார்த்தை� �தீர்வு� �ஒட்டுமொத்தமான நோக்கு� - என்பனவற்றின் கருத்துக்களை முதலில் கவனிப்போம்.
இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனத்துவ முரண்பாட்டிற்கு -என்ற சொல்லாக்கம் இரண்டு விடயங்களை ஏற்றுக்கொண்டு அவற்றைச் சுட்டிக் காட்டுகின்றது. இலங்கைத்தீவிலே இனத்துவ முரண்பாடு என்று ஒரு பிரச்சனை இருக்கின்றது என்பதையும் அது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதையும் மூன்றாண்டுகளுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட இவ் ஒப்பந்தம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆகவே சில தரப்பின் கூறுகின்ற கூறி வருகின்ற �பிரச்சனை எதுவும் இல்லை� என்ற கூற்றானது இந்த ஒப்பந்த முன்னுரையின் முதல் பந்தியின் முதல் வரியிலேயே அடிபட்டுப் போகின்றது.
அடுத்த சொல்லாக்கமான �பேச்சு வார்த்தை மூலமான தீர்வு� என்பதைக் கவனிப்போம். இவை இரண்டு முக்கிய விடயங்களை வலியறுத்துகின்றன. அதாவது இந்த �இனத்துவ முரண்பாட்டிற்கு� ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என்பதையும் அது பேச்சுவார்த்தை மூலமாகக் காணப்பட வேண்டும் என்பதையும் இச்சொல்லாக்கங்கள் முக்கியத்துவம் கொடுத்திருப்பதை இங்கு நாம் காண்கின்றோம். இதற்கு வலுச்சேர்க்கும் வகையில் இப்பந்தியின் கடைசிச் சொற்களான-� (இதுவே) ஒட்டு மொத்தமான நோக்கமாகும்;� என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. அந்த முதல் பந்தியினை இப்பொழுது மீண்டும் வாசித்தால் ஒரு தெளிவான பார்வை தென்படலாம்.�இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனத்துவ முரண்பாட்டிற்கு பேச்சுவார்த்தை மூலமான தீர்வு ஒன்றைக் காண்பதே சிறிலங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசினதும் (புழுளுடு) தமிழீழ விடுதலைப்புலிகளினதும் (LTTE) ஒட்டுமொத்தமான நோக்கமாகும்."
இதனை அடுத்து அடுத்த பந்தியில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேலுமொரு முக்கிய விடயத்தைச் சுட்டிக்காட்டுகின்றது. அதனை இப்போது பார்ப்போம்.
�சிறிலங்கா அரசும் விடுதலைப்புலிகளும் பகைமைக்கு முடிவைக்கொண்டு வந்து மோதலினால் பாதிக்கப்பட்ட அனைத்து குடிமக்களினதும் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை இனங்கண்டுள்ளனர்.�
இந்தச்சொல்லாக்கங்கள் மேலும் சில விடயங்களை ஏற்றுக்கொண்டுள்ளன. அவை வருமாறு:-
1. �மோதலினால் குடிமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.�
2. �அவர்களுடைய வாழ்க்கை நிலையை மேம்படுத்த வேண்டும்.�
3. மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தவேண்டியது ஒரு முக்கியமான விடயமாகும்.
4. இந்த முக்கியத்துவத்தை இருதரப்பினரும் (அதாவது சிறிலங்கா அரசும் தமிழீழ
விடுதலைப்புலிகளும்) இனங் கண்டுள்ளார்கள்.
5. மோதலினால் பாதிக்கப்பட்ட குடிமக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்கு முதலில் பகைமைக்கு முடிவைக் கொண்டு வரவேண்டும்.ஆனால் இந்த மூன்று ஆண்டுகளில் பகைமைக்கு முடிவு கொண்டு வரும் முயற்சிகளை சிறிலங்கா அரசு எவ்வாறு மேற்கொண்டது என்பது குறித்து இரண்டு கருத்துக்களுக்கு இடமிருக்க முடியாது. கடந்த மூன்று ஆண்டுகளில் சமாதானத்திற்காக�� விடுதலைப்புலிகள் கொடுத்த கொடுத்து வருகின்ற விலை அளப்பரியது�� என்பதைக் கடந்த காலச் சம்பவங்களே எடுத்துக் கூறும்.!
சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து�� விடுதலைப் புலிகளின் வணிகக் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டதோடு அதில் பணியாற்றிய விடுதலைப்புலிகள் கொல்லப்பட்ட சம்பவத்தையும்�� அண்மையில் படுகொலை செய்யப்பட்ட மட்டு-அம்பாறை அரசியல் துறைப்பொறுப்பாளருமான லெப்டினட். கேர்ணல் கௌசல்யன் மற்றும் சகபோராளிகளினதும் மாமனிதர் சந்திரநேருவினதும் ஈடுசெய்ய முடியாத இழப்புக்களையும் உதாரணத்திற்காக நாம் இங்கே சுட்டிக்காட்ட முடியும்!அது மட்டுமல்ல கருணா போன்ற துரோகச் சக்திகளை இன்றும் ஒரு முகமூடியாக உபயோகித்து அதன் மூலம் இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை உடைத்தெறியும் செயல்களில் சிறிலங்கா அரசு ஈடுபட்டு வருவதை நாம் அனைவரும் அறிவோம்! இங்கே நாம் சுட்டிக் காட்டியவை உதாரணத்திற்காகத்தான்! பட்டியல் இட்டால் அது பல பக்கங்களுக்கு வரும்.!
இச்சம்பவங்கள் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பல தடவைகள் மீறியுள்ளன. எடுத்துக் காட்டாகச் சில விடயங்களை நாம் இங்கே தர்க்கிக்க விரும்புகின்றோம். சர்வதேச கடற்பரப்பில் விடுதலைப்புலிகளின் வணிகக் கப்பல்கள் மீது சிறிலங்காக் கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் சரத்துக்கள் 1.2 மற்றும் 1.2 ஊ ஆகியவற்றிற்கு முரண்பட்டவையாகும். கௌசல்யன் மற்றும் சக போராளிகளின் படுகொலைகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் 1.2 மற்றும் 1.13 ஆகிய சரத்துக்களை மீறிய செயல்களாகும்.
அது மட்டுமல்ல இயல்பு நிலையை மீளக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை விபரிக்கின்ற சரத்து இரண்டின் பல பிரிவுகளை சிறிலங்கா அரசு மீறியே வந்துள்ளது.ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாடசாலைக் கட்டிடங்கள் வணக்கத்துக்குரிய தலங்கள்�� பொதுச்சேவைக்கான கட்டிடங்களை விட்டு சிறிலங்கா ராணுவம் இன்னும் விலகாமல் இருப்பது புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் சரத்துக்கள் 2.2, 2.3, 2.4 ஆகியவையை மீறிய விடயங்களாகும்.
இந்த விடயங்களை எமது கருத்தில் வைத்துக் கொண்டு தற்போதைய அரசியல் நிலவரங்களைத் தர்க்கிப்பது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகின்றோம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய போராளிகள் பிரமுகர்களைப் படுகொலை செய்வதிலும்�� கருணா போன்றவர்களை முன்னிறுத்திப் பிரதேச வாதத்தைத் தூண்டி விடுவதிலும்�� விடுதலைப்புலிகளின் வணிகக் கப்பல்களை அழிப்பதிலும் சிறிலங்கா அரசும் அதன் பாதுகாப்பு படையினரும் ஈடுபட்டு வருவதானது புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் எதிர்பார்ப்பான பகைமைக்கு முடிவைக் கொண்டு வருவதற்கு எதிரான செயற்பாட்டாகும்.
இதில் ஒரு கருத்தை வித்தியாசமான கோணத்தில் தர்க்கிக்க விழைகின்றோம்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் பகைமைக்கு முடிவைக் கொண்டு வரவேண்டும் என்று கூறுகின்றது. அதற்கான அடிப்படைக் காரணம் என்ன? அந்தக்காரணத்தை புரிந்துணர்வு ஒப்பந்தம் கீழ்வருமாறு கூறுகின்றது.
�மோதலினால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடிமக்களினதும் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்காக பகைமைக்கு முடிவைக் கொண்டு வரவேண்டும்.�
ஆகவே சிறிலங்கா அரசும் அதன் படைகளும் பகைமைக்கு முடிவைக் கொண்டுவர விரும்பாததன் காரணம்-அடிப்படைக்காரணம்-மோதலினால் பாதிக்கப்பட்ட மக்களது வாழ்க்கை நிலை மேம்படுத்தப்படக் கூடாது என்ற எண்ணம் தான் என்பது இங்கே நிரூபிக்கப்; படுகின்றது.
இந்தத் தர்க்கங்களைப் பின்புலமாக வைத்துக் கொண்டு மற்றைய அரசியல் நிகழ்வுகள் குறித்துச் சிந்திப்போம். சிறிலங்கா அரசும் அதன் படைகளும் பகைமைக்கு முடிவைக் கொண்டு வர விரும்பாது -இத்தனை யுத்த நிறுத்த மீறல்களையும் நடாத்திய போதும் கூட விடுதலைப்புலிகள் சமாதானப் பேச்சுக்களையோ அல்லது புரிந்துணர்வு ஒப்பந்தத்தையோ முறித்துக் கொள்ளவில்லை. காரணம் நாம் முன்னர் சுட்டிக் காட்டிய சொல்லாக்கமான-மோதலினால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடிமக்களினதும் வாழ்க்கை நிலையை மேம்படுத்த வேண்டும் என்பதனை நிறைவேற்றுவதற்காகத்தான்.
அதற்காகத்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆறு சுற்றுப்பேச்சு வார்த்தைகளிலும் பல ஆலோசனைக் கூட்டங்களிலும் கலந்து கொண்டார்கள். நாம் மேற்கூறிய பல யுத்த நிறுத்த மீறல்களை சிறிலங்காவின் அரச படைகள்-புரிந்து வந்தபோதும் பொறுமை காத்து வந்தார்கள் விடுதலைப்புலிகள்.ஆனால் யப்பான் நாட்டில் நடைபெறவிருந்த பிரதான உதவி வழங்குவோர் மாநாட்டிற்குரிய ஆயத்தம் செய்வதற்கான-முன்னோடியான கூட்டம் அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் இடம் பெற்ற போது அக்கூட்டத்திற்குத் தமிழீழ மக்களின் பிரதிநிதிகளான விடுதலைப்புலிகள் தவிர்க்கப்பட்ட போதுதான் இறுக்கமான முடிவொன்றை விடுதலைப்புலிகள் மேற்கொண்டார்கள்.
சமாதானப் பேச்சுவார்த்தைகளிலிருந்து தற்காலிகமாக விலகிக் கொண்டார்கள். எத்தனையோ இழப்புக்களையும் யுத்த நிறுத்த மீறல்களையும் சந்தித்த விடுதலைப்புலிகள் இந்த விடயத்தில் மட்டும் இறுக்கமான முடிவை எடுத்ததன் காரணம் என்ன?
ஏனென்றால் மோதலினால் பாதிக்கப்பட்ட எமது மக்களிது வழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்கான அக்கறை எதுவும் சிறிலங்கா அரசிற்கும் சம்பந்தப்பட்ட சில நாடுகளுக்கும் இல்லை - என்பது வெளிப்படையாகவே நிரூபணம் ஆகியதுதான் காரணம். அதற்கு எதிரான அரசியல் அழுத்தத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு விடுதலைப்புலிகள் கொடுக்கத் தயங்கவில்லை.
இதற்குப் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் வழங்கிய இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைக்குரிய திட்ட வரைவும் பலத்த எதிர்ப்புக்களைக் கண்டது. இன்றைய தினத்தில் இந்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபையானது நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் சுனாமி அனர்த்தங்களுக்கான நிவாரணப்பணிகள் எவ்வளவு எளிதாகவும் விரைவாகவும் சிறப்பாகவும் செயல்படுத்தபட்டிருக்கும் என்பதனை எண்ணிப்பார்க்காமல் இருக்க முடியவில்லை.
இரண்டு தசாப்த காலத்திற்கும் மேலாக�� அரச பயங்கரவாதப்போருக்கு முகம் கொடுத்து�� அல்லல்பட்ட எமது மக்களின் நாளாந்த வாழ்வியல் பிரச்சனைக்கும் தேசியப்பிரச்சனைக்கும் ஒரு நியாயமான தீ;ர்வு பேச்சு வார்த்தைகளின் ஊடே கிட்டவேண்டும் என்பதற்காக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கப்பட்டது. ஆனல் போரினால் விளைந்த அழிவுகள் குறித்து எவ்வளவு அலட்சியத்தை சிறிலங்கா அரசு தமிழ் மக்களுக்கு காட்டியதோ அதே அளவு அலட்சியத்தை சுனாமி ஆழிப்பேரலை இயற்கை அழிவின் போதும் காட்டுவதை நாம் கண்கூடாக பார்க்கின்றோம்.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் திரு கோபி அன்னன் அவர்கள் சுனாமி அனத்தங்களைப் பார்வையிடும் போது அவரைத் தமிழிர் தாயகப் பகுதிகளுக்குச் செல்லவிடாமல் இருப்பதற்காக இரஜதந்திர அழுத்தங்களை சிறிலங்கா அரசு பிரயோகித்ததை நாம் அறிவோம்.இவ்வேளையில் ஒரு விடயத்தை நேயர்களின் ஞாபகத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றோம்.
1995ம் ஆண்டு ஐந்து இலட்சம் தமிழ் மக்கள் ஓர் இரவிலேயே அகதிகளாகி குடாநாட்டை விட்டு வெளியேறியபோது உலக நாடுகள் சார்பாக எமது மக்களுக்காக ஒரு குரல் உரக்க ஒலித்தது. தமிழ் மக்களுக்கு மனிதாபிமான முறையில்- உதவிகளைச் செய்ய வேண்டும-என்று எழுந்த குரலுக்குச் சொந்தக்காரன் ஐக்கியநாடுகள் சபையின் அன்றைய பொதுச்செயலாளரான திரு
பூட்டஸ்-பூட்டஸ் காலி அவர்கள்.அந்தச்சமயம் திரு பூட்டஸ் காலி அவர்களை மிக
வன்மையாகக் கண்டித்தவர் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சரான திரு லக்ஷ்மண் கதிர்காமர் ஆவர். அதேபோன்று இன்று கௌசல்யன் முதலானோரின் படுகொலைகளைக் கண்டித்து ஐக்கிய நாடுகள் சபையின் இ;ன்றைய செயலாளரான திரு கோபி அன்னன் கண்டனம் தெரிவித்தபோது திரு லக்ஷ்மண் கதிர்காமர் அவர்கள் மீண்டும் தனது ஆட்சேபத்தை தெரிவிக்க மறக்கவில்லை. கதி;ர்காமர் அவர்களின் புரிந்துணர்வு�� சந்திரிக்கா அம்மையாரின் புரிந்துணர்வு�� சிறிலங்கா பாதுகாப்புப்படையினரின் புரிந்துணர்வு�� சிங்கள பௌத்த பேரினவாதிகளின் புரிந்துணர்வு -இவையெல்லாம் எப்படியானவை என்பதையாவது இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வெளிக்கொண்டு வந்திருப்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
அரச பயங்கரவாத அனர்த்தங்களையும் இயற்கை தந்த அனர்த்தங்களையும் எமது மக்கள் எதிர் கொண்டுள்ள வேளையில் எமது மக்களுக்கு இயல்பான வாழ்க்கை நிலை திரும்பி அவர்களுடைய வாhழ்க்கை நிலை மேம்படவேண்டும் என்பதற்காகவும் எமது மக்களுடைய தேசியப்பிரச்சனைக்கு நியாயமான நிரந்தரமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தமிழீழத் தேசியத் தலைவர் அரசியல் ரீதியாகக் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கும் வேளை இது. புரிந்துணர்வு ஒப்பந்தம் மூன்றாண்டுகளை நிறைவு செய்கின்ற இவ்வேளையில் இவையாவற்றையும் நெஞ்சில் நிறுத்தித் தலைமையின் கரங்களை பலப்டுத்துவோமாக.