"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Selected Writings by Sanmugam Sabesan
மாவீரர் தினம்
15 November 2004
இவ் ஆய்வு 15.11.04 அன்று அவுஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் தமிழ்க்குரல் வானொலி நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகியது
மாவீரர் தினம்! விடுதலைப்புலிகள் என்ற இலட்சியப் பாசறையில் இருந்து சங்கர் என்ற சத்திய நெருப்பு விடுதலைக்கு விதையாகிப் போன நாள்! ஈழத்தமிழரின் நெஞ்சம் நெகிழுகின்ற நாள்! நெஞ்சம் நிமிர்கின்ற நாள்! மாவீரர்கள்! மண்ணுக்காக மரணித்த மைந்தர்கள்! மரணத்திலும் வித்தாகி வாழுகின்ற வீரர்கள்! தம் இனத்திற்காக இன்னுயிரை ஈந்த இளவல்கள்! வெடிகுண்டு சுமந்தவர்கள்! விடியலைத் தேடியவர்கள்! வீரத்தின் விளை நிலங்கள்! எமது தாய்த்திருநாட்டின் சுதந்திரத்திற்காக செய்திட்ட தியாகங்களில்தான் எத்தனை பரிமாணங்கள்! விடுதலைப் புலிகளின் வீர வரலாற்றிலே எமது தமிழ் இனத்தின் விடுதலைக்காக வித்தாகி வீழ்ந்திட்ட மாவீரர்கள் ஒவ்வொருவர் வாழ்விலும்தான் எத்தகைய வித்தியாசமான தியாக விந்தைகள்! அழிக்க வந்த எதிரியை அடக்கப் போனபோது செய்த தியாகங்கள்! அருமைத்தோழரின் உடலை மீட்கப் போன போது செய்த தியாகங்கள்!
உயிருடன் பிடிபடக்கூடாது என்பதற்காக சயனைட் அருந்தி சயனித்த தியாகங்கள்! வெடிமருந்துகளுடன் பகைவனின் பாசறைக்குள் பாய்ந்து செய்த தியாகங்கள்! நாட்டைக் காப்பாற்றுவதற்காக வில்லுடன் மோதிச் செய்த தியாகங்கள்! நாட்டைக் காப்பாற்றுவதற்காக நீரிலும்�� நிலத்திலும் தாரைவார்த்த தற்கொடைகள் தான் எத்தனை! எத்தனை! உண்மையை விளக்குவதற்கு�� உரிமையை பெற்றெடுப்பதற்கு உண்ணாவிரதம் இருந்தும் உயிர் கொடுத்திட்ட உத்தமர்கள் பற்றி உரைத்திடவும் இயலுமோ?
ஈகச் சுடர்களே! எங்கள் உயிர்களே! அடர்ந்த இருட்டைக் கடந்து முடிக்க படர்ந்து எழுந்த பாதச்சுவடுகளே! வெடித்துச் சிதறி நீர் முடித்த கதைகளை நிறுத்திச் சுமக்கும் எம் நெஞ்சங்களே! பிறக்கும் தலைமுறை சிறக்க விரும்பி ஆறடி ஆழத்தில் ஆறி இருப்பவரே!
ஆக மூத்த தமிழின் தூய்மை மீட்க துளிர்த்த சுடர்களே அன்னைக்கும் மேலாக அண்ணனை மதித்து மண்ணினைக் காத்த மாவீரரே!- எங்கள் மாவீரரே! உங்களை நினைவு கூருகின்றோம்�� மாண்பு மிகு இந்த நாளில்! அன்புக்குரிய நேயர்களே!
ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரணமான நிகழ்வு அல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு! உன்னதமான இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு - என்று தமிழீழத் தேசியத் தலைவர் மேன்மை தங்கிய பிரபாகரன் அவர்கள் இதயம் நெகிழ்ந்து குறிப்பிட்டார். இன்றைய தினம் வரலாற்றின் முக்கிய கட்டத்திலே தமிழீழம் தலை நிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு காரணம் எமது மாவீரர்கள்!
தமிழீழ விடுதலைப் புலிகளின் மகத்தான தியாகங்களும் பாரிய இராணுவ வெற்றிகளும் தான் இன்றைய சமாதான சூழ்நிலைக்கு காரணமாக உள்ளன. இப்போதைய போர் நிறுத்தமும் புரிந்துணர்வு ஒப்பந்தமும் சமாதானப் பேச்சுவார்த்தைகளும் அடித்தளமாக ஆணிவேராக இருப்பது எமது மாவீரர்களின் தியாகங்கள்! இன்று உலகெங்கும் வாழுகின்ற பல்வேறு நாட்டு மக்கள் கூட தமிழ் ஈழத்தவர்களாகிய எம்மை அறிந்து மதிப்புக் கொடுப்பதன் காரணமும் எமது மாவீரர்களின் தியாகங்கள்தான்.
எமது மாவீரர்களின் வரலாறு ஒரு விடயத்தை உலகிற்கு உணர வைத்தது. அந்த விடயத்தை உலக நாடுகள் உணர வேண்டும் என்பதற்காக இந்த உத்தமர்கள் கொடுத்த விலை அவர்களது விலைமதிப்பில்லாத உயிர்கள். அதன் காரணமாக உலகு ஒன்றை புரிந்து கொண்டது. அதாவது இந்த இனம் போராடும். வெட்ட வெட்ட எழுந்து நிற்கும். தலை குனியாது. தன்மானம் இழக்காது. இது - இந்த இனம்; - இந்தத் தமிழினம் இந்த ஈழத்தமிழினம் போராடும் - உரிமைகளை வென்றெடுக்கும் வரை போராடும்.!
ஆமாம் மாவீரர்கள் போராடினார்கள்! வெட்ட வெட்டத் தழைத்தார்கள்! விழ விழ எழுந்து நின்றார்கள்! புலியாக போராடினார்கள்1 புல்லையும் ஆயுதமாக வைத்து போராடினார்கள்.
மில்லருக்கு சுதந்திரக்காற்று சுவாசிக்கத் தேவைப்பட்டது! காற்றாகவே மாறினான் அந்த கரும்புலி! திலீபனுக்கு விடுதலைப் பசி எடுத்தது- அவனே உணவாக மாறினான்! இந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சகாப்தத்தில் போராட்டத்தின் வடிவங்கள் மாறியதைக் கண்டோம்! ஆனால் போராட்டம் தொடர்ந்தது. புதுப்புது வடிவங்களை எடுத்து�� புதுப்புது பொலிவுகளையும் கண்டது.
ஆகவே எமது மாவீரர்களின் தியாக வரலாறு ஒரு விடயத்தை தெளிவாக நிரூபித்து நிற்கின்றது. ஈழத்தமிழினம் சுதந்திர திPர்ப்பொன்றைக் காணும் வரை போராடும். போராட்டத்;தின் வடிவங்கள் மாறலாம். போராட்டக் களங்கள் மாறலாம். ஈழத்தமிழினத்தின் தேசியப்பிரச்சனைக்குரிய நியாயமானதீர்வு - அது போரினூடேயும் இருக்கலாம். பேச்சுவார்த்தைகளின் ஊடேயும் இருக்கலாம். நியாயம் நியாயமான முறையில் வருவதே நியாயமுமாகும்.
அன்புக்குரிய எமது நேயர்களே!
ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் தினமாகிய இந்தப் புனித நாளில் உளமார எம் மாவீரர்களை நாம் நினைவு கூர்வதானது உண்மையில் உமது நெஞ்சைப் படம் போட உதவுகின்றதாகவே நாம் கருதுகின்றோம். எமது நாட்டினதும்�� இனத்தினதும் மக்களினதும் விடுதலைக்காக நீண்டதும்�� கடினமானதும்�� அபாயகரமுமான போராட்ட வாழ்க்கையை மேற்கொண்டு அந்த தன்னலமற்ற புனித இலட்சியம் ஒன்றிற்காகவே தமது உயிரையும் உடலையும் உலக வாழ்வையும் ஒருங்கு சேர அர்ப்பணித்த எம்மவராம் வீர வேங்கைகளின் தியாகங்களை எண்ணிப் பார்த்து எமது இதயங்களில் அவர்களை இருத்துகின்றோம்.
ஆனால் அத்துடன் மட்டும் எம் கடமை முடிந்து விடுகின்றதா என்ன? இல்லை�� இல்லை அங்கிருந்துதான் எமது கடமை ஆரம்பமாகிறது. மாவீரர்களின் கனவு நனவாகும் அந்த நிதர்சனத்திற்காக நாமும் எமது பங்கினை ஆற்ற வேண்டும். மாவீரர்களின் தியாகம் - இன்று - எமது இனத்திற்கு இராணுவ பலத்தை மட்டுமல்லாது ஓர் அரசியல் பலத்தையும் சேர்த்து வழங்கியுள்ளது.
தமிழ் ஈழத்தவரின் தேசியப் பிரச்சனை பேச்சுவார்த்தைகளின் மூலமும் தீர்க்கப்படுவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டதற்குக் காரணமும் மாவீரர்களின் தியாகம் தான்.!
அது அப்படியாகும் பட்சத்தில் அடுத்து வரும் அரசியல் நகர்வுகளின் போது நாம் தமிழீழ விடுதலைப்புலிகளது கரங்களை பலப்படுத்த வேண்டிய கடமை எமக்கு உண்டு. புலிகளைப் பயங்கரவாதிகள் என்று சொல்லிய அதே சிறிலங்கா அரசு இன்று அவர்களைப் பங்;காளிகள் என்று அழைத்து சமாதான மகாநாடு வைப்பதற்குரிய அடிப்படைக் காரணம் எமது மாவீரர்களின் தியாகமே! ஆகவே நாம் முன்னர் கூறியவாறு போராட்டக் களங்கள் மாறுகின்ற போது புலம்பெயர்ந்த தமிழ்ப் பொதுமக்களாகிய நாமும் எமது ஒருங்கிணைப்பை ஒத்துழைப்பை காட்ட வேண்டிய காலமும் கடமையும் சேர்த்து வரும்.
சமாதானத்திற்கான காலம்! என்று சொல்லிக்கொண்டு இன்று சமாதானப் பேச்சுவார்த்தைகளை இழுத்தடித்துக் கொண்டும் தமிழீழ விடுதலைப்புலிகள் சமர்;ப்பித்த இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபைத் திட்டத்தைப் பரிசீலித்து அமுலாக்காமல் காலத்தை கடத்திக் கொண்டும் இருக்கும் சிறிலங்கா அரசு தமிழீழ மக்களுக்குக் கிடைக்கவேண்டிய நீதியான நேர்மையான நியாயமான தீர்வைத் தாமதப்படுத்திக் கொண்டே செல்வதை நாம் இப்போது காணக் கூடியதாக உள்ளது.
காலம் கடந்து கிடைக்கும் நீதி நியாயமான நீதியாகாது. தமிழீழ மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக விளங்குகின்ற தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தமது மக்களுக்கு நீதியான தீர்வு கிட்ட வேண்டும் என்பதற்காக நியாயமான செயற்பாடுகளைச் செய்ய வேண்டி வரும். அது அவர்களின் கடமையும் கூட. அல்லாது போராட்டக் களங்கள் மீண்டும் மாறுகின்ற பட்சத்தில் தமிழீழத் தேசியத் தலைமையின் கரங்களைப் புலம் பெயர்ந்த தமிழீழத்தவர்களாகிய நாம் பலப்படுத்த வேண்டும். அதுவே மாவீரர்களுக்கு நாம் செய்கின்ற உளமாhந்த அஞ்சலியாகும்!