Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan >மாமனிதர் குமார் பொன்னம்பலம்

Selected Writings by Sanmugam Sabesan

[to read the Tamil text you may need to download & install a Tamil Unicode font from here -
for detailed instructions please also see Tamil Fonts & Software]

மாமனிதர் குமார் பொன்னம்பலம்

13 August 2004
[see also Kumar Ponnambalam - One Hundred Tamils of the 20th Century]

இவ் ஆய்வு 13.08.04 அன்று அவுஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில்
தமிழ்க்குரல் வானொலி நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகியது


தமிழீழ விடுதலைக்காக குரல் கொடுத்து வந்த தனித்துவமான தனயனின் 66வது பிறந்த தினம் நேற்றைய தினமாகும். ஓகஸ்ட் 12ம் திகதி 1938ம் ஆண்டு பிறந்த மாமனிதர் திரு குமார் பொன்னம்பலம் அவர்கள் தனது நாட்டின் விடுதலைக்காக தனது மக்களின் விடிவிற்காக துணிந்து குரல் எழுப்பிப் போராடி வந்தவர். சிங்கள அடக்கு முறையாளர்களை, ஆக்கிரமிப்புக்காரர்களை, மனித உரிமை மீறல்களை எதிர்த்து எழுந்த அவரது குரல் தனித்து நின்று பலமாக துணிவாக சிங்களத்தின் தலைநகரில் ஓங்கி ஒலித்து வந்தது.

திரு குமார் பொன்னம்பலம் ஓர் ஆயுதம் தாங்கிய போராளி அல்ல. ஆனால் ஆயுதப் போராட்டம் வாயிலாகவே தமிழரின் விடுதலை சாத்தியமாகும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டவர்.

அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் அல்ல. ஆனால் தமிழீழ மக்களது நெஞ்சிலும், உலகத் தமிழர்கள் நெஞ்சிலும் நீங்காத இடத்தை பிடித்துக் கொண்ட ஒரு மாமனிதர்.

அவருக்கு அழகு தமிழில் அடுக்கு மொழியில் ஆரவாரமாக பேசத் தெரியாது. ஆனால் அவர் பேசிய பிள்ளைத் தமிழை, செல்லத் தமிழை தமிழினம் ஆவலோடு, சிரத்தையோடு கேட்டது. காரணம் அவரது பேச்சில் உண்மை இருந்தது. உரிமைக்காகப் போராடும் உறுதியிருந்தது. துணிவு ஒன்று மட்டுமே தன் துணையாக சிங்களப் பேரினவாதத்தை எதிர்கொண்டு போராடியவர் மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள்.

இன்று கொழும்பில் தமிழ் தலைவர்கள் என்று தம்மைச் சொல்லிக் கொள்பவர்களில் சிலர் அன்றும் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு குடை பிடித்து சாமரம் வீசிக் கொண்டிருக்கையில் தன்னந் தனியனாக தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த ஒரு மறத்தமிழன் அமரர் குமார் பொன்னம்பலம்.

காலம் காலமாக சிறிலங்காவில் கைது செய்யப்படுகின்ற அப்பாவித்தமிழ் இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் நீதி கிடைத்திடுவதற்கு அமரர் குமார் பொன்னம்பலம் அவர்கள் ஆற்றிய சேவை அளப்பரியது. இன்று உலக நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற இளையவர்களின் நெஞ்சு அவரின் பெயர் சொல்லிக் கலங்குகின்ற காட்சியை நாம் இப்போதும் காண்கின்றோம். கிருஷாந்தி போன்ற அப்பாவி சிறுமிகள் சிறிலங்கா படையின் பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டு கொலையும் செய்யப்பட்டதனை உலகின் கண் முன்னே நிறுத்தி உண்மை வெளிப்படுவதற்கு திரு குமார் பொன்னம்பலம் உழைத்திட்டதனை உலகறியும். மாபெரும் மனிதப் புதைகுழியான செம்மணியின் அவலம் இன்று வெளிப்படுவதற்கு காரணியாக விளங்கியவர் திரு குமார் பொன்னம்பலம் அவர்கள். தாம் படித்த படிப்பை சட்டத்திறமையைக் கூட தன் நாட்டின் சோகம் களைவதற்காக உபயோகித்தவர் மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள்.

சிறிலங்கா அரசுகள் அதிலும் குறிப்பாக சந்திரிக்காவின் அன்றைய அரசு தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அடக்குமுறைகளையும் மனித மீறல்களையும் பகிரங்கத்திற்கு கொண்டு வந்தவர். தமிழ் பிரச்சனையை தீர்ப்பதற்கு தீர்வுப் பொதி உண்டு என்று சொல்லித் திரிந்த சந்திரிக்காவின் வேடத்தைக் களைந்து உண்மை உருவைக் காட்டுவதில் திரு குமார் பொன்னம்பலம் அயராது உழைத்து வந்தார். அவர் சந்தித்த வெளிநாட்டு ராஜதந்திரிகளும் உத்தியோகத்தர்களும் எண்ணில் அடங்கார்.

தமிழீழ விடுதலைக்காகவும், தனது மக்களின் விடிவுக்காகவும் தனித்து நின்று போராடிய மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள். அவர் ஆற்றிய சேவைகள் இவை மட்டுமல்ல தன் மக்களின் விடிவுக்காக தன்னுயிர் தந்த இந்த மாமனிதன் ஆற்றிய சேவைகளின் முழுப் பரிமாணத்தையும் தமிழர் வரலாறு சொல்லும் நாள் வரும்.

'நான் ஒரு ஈழத்தமிழ் மகன், தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளன்" என்று பகிரங்கமாக மார்தட்டி சொல்லிக் கொண்டு மக்கள் சேவை இந்த தன் மகனை தமிழீழம் மாமனிதர் என்ற அதியுயர் தேசிய விருதை அளித்து கௌரவித்தது. நாட்டுப் பற்றுள்ள நல்லவர்கள் எல்லோரும் இவ்வேளையில் இம் மாமனிதனின் தாகம் தணிவதற்கு நாம் செய்யவேண்டிய கடமை குறித்தும் சிந்திப்போம்.

ஒரு தமிழீழ நாட்டுப்பற்றாளன் தேசாபிமானி தன் வாழ்நாளில் செய்யக்கூடிய அரும்பணிகளைச் செய்தது மட்டுமல்லாது மானுடத்தின் அதியுயர் விலையான தன்னுயிரையே தன்னினத்திற்கு தந்து உதாரணங்களுக்கு எல்லாம் முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார். தமிழன் ஈழத்தமிழன் மாமனிதன் குமார் கொன்னம்பலம் உண்மைக்காகவும் உரிமைக்காகவும் அந்த உயரிய மனிதன் செய்த பணியின் சிறுபகுதியையாவது நாம் செய்திட முன்வந்திட வேண்டும். அது தான் நாம் செய்யக்கூடிய உண்மையான அஞ்சலியாக இருக்கும். எதிரியின் கோட்டையில் நின்று அபாரமான துணிச்சலுடன் அவர் செய்திட்ட பணியின் ஒரு சிறு பங்கினையாவது புலம் பெயர்ந்த தமிழீழத்தவராக நாம் செய்திட முன் வர வேண்டும். நிதி கிடைக்க, நியாயம் கிடைக்க, நாமும் உரக்க குரல் கொடுப்போம். ஒன்றிணைவோம்! உள்ளதை உள்ளபடியே உரத்த குரலில் உரைத்திட்ட உத்தமன் எமது மாமனிதன் குமார் பொன்னம்பலம் வாழ்க நீ அம்மான் வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தவன் நீ இன்று உலகமெல்லாம் வாழ்கின்ற ஈழத்தமிழர் நெஞ்சங்களில் நீக்கமற நிரந்தரமாக உறைகின்றாய்! பிறக்கப் போகும் தமிழீழத்தில் உன்பெயரும், பணியும் என்றென்றும் நிலைத்து வாழும் வருங்காலம் வரும்! வந்து அது உன் புகழ்பாடும்! எமது வம்சமும் உனது வரலாறு கூறும்.

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home