"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Selected Writings by Sanmugam Sabesan
கறுப்பு யூலைகள்
12 July 2004
இவ் ஆய்வு 12.07.04 அன்று அவுஸ்திரேலியா
மெல்பேர்ன் நகரில்
தமிழ்க்குரல்| வானொலி நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகியது
மிகக் கொடூரம் வாய்ந்ததும் சோகம் நிறைந்ததுமான கறுப்பு யூலை இனக் கலவரங்கள் நடந்து 21 ஆண்டுகள் ஆகின்ற இந்த வேளையிலும்�� அந்த தமிழினப் படுகொலைகளின் வேதனைகளும் வடுக்களும் எந்த ஒரு தமிழனின் இதயத்தை விட்டும் விலகாமல் இருக்கும். 1983ம் ஆண்டு யூலை மாதம், இலங்கைத்தீவில் நடைபெற்ற இனக்கலவரம் என்கின்ற படுகொலைகள்�� சிறிலங்கா அரசின் அநாகரிக கலாச்சாரத்தின் கேவலமான கீழ் நிலையை உலகத்திற்கு எடுத்துக் காட்டின. இந்தத் தமிழிப் படுகொலைகள்�� திடீரென ஓர் ஆவேசத்தல் நடாத்தப்பட்டதல்ல. ஒரு பௌத்த சிங்களப் பேரினவாத அரசால் திட்டமிடப்பட்டு, முறையாகச் செயல்படுத்தப்பட்ட இனப் படுகொலைகள் தான் யூலை 83 தமிழினப் படுகொலைகள்.
அந்த வாரம் ஆயிரக்கணக்கில் அப்பாவித்தமிழ் மக்கள் ஈவு இரக்கமின்றி வெட்டிக் கொல்லப்பட்டனர் - தீயிட்டு கொழுத்தப்பட்டனர். கோடிக்கணக்கில் தமிழர்களின் சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டன. அது மட்டுமல்ல�� சிறைச்சாலைக்குள்ளும் கோரக்கொலைகள் நடாத்தப்பட்டன. தங்கத்துரை. குட்டிமணி உட்பட 53 தமிழ்; இளைஞர்களை குண்டர்கள் குத்திக் குதறிக் கொன்றார்கள். ஒரு பயங்கரவாத அரசாங்கத்தின் சகல சக்திகளும் ஒருமுகப்பட்டு�� தமிழ் இனத்தின் மீது கோரத்தாண்டவம் ஆடின.
1983ம் ஆண்டு யூலை மாத இனக்கலவரங்கள்�� தமிழ் மக்களுக்குப் புதிதான ஒன்றல்ல. 1956-1958-1974-1977 என்று அதற்கு முன்னரும் மாறி மாறி வந்த சிங்கள அரசுகளால் பல தடவைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழினப் படுகொலைகளின் உச்சக்கட்ட வெளிப்பாடுதான் 83 கறுப்பு யூலை.
நாசத்தையும் அழிவையும் தமிழீழ மக்களுக்குத் தந்த இந்த யூலை 83 இனப்படுகொலைகள் இன்னொரு விதத்தில் சிலருக்கு நன்மைகளையும் தந்தது என்பதும் உண்மைதான்! ஆம், இலங்கைத்தீவில் தமிழருக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தால் புலம்பெயர்ந்த எம் போன்றோருக்கு அமைதியான வாழ்க்கையை அமைத்திடுவதற்கு வெளிநாடுகள் அனுதாபத்துடன் அனுமதி அளித்ததற்கும் இரத்தம் தோய்ந்த யூலை 83 காரணமாக அமைந்தது. 21 ஆண்டுகளுக்கு முன்பு நாகரீக உலகில் அதிர்ச்சி கொள்ளக்கூடிய வகையில் நடைபெற்ற இனப்படுகொலைகள் பின்னர் ஓய்ந்தனவா என்று கேட்டால்�� அதற்குரிய பதில் கசப்பானதாகத்தான் இருக்கும்.
ஆமாம்! யூலை 83 ஒரு தூசுக்கு சமன் என்கின்ற விதத்தில் பின்னரும் தமிழர்கள் நளாந்தம் படுகொலை செய்யப்பட்டதும்�� கைது செய்யப்பட்டதும்�� கைது செய்து காணாமல் போனதும்�� தமிழ் பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டதும்�� செம்மணி போன்ற மனிதப் புதைகுழிகளில் போய் தெரியாமல் உறங்கிப் போனதும் தொடர்ந்தும் நடைபெற்றன.
யூலை 83ல் இலங்கையின் பல இடங்களில் இருந்தும் தமிழர்கள் அடித்து விரட்டப்பட்ட போது�� தன் தனயர்களைக் கைநீட்டி வரவேற்றுக் கட்டித் தழுவியது யாழ்குடாநாடு. ஆனால் அதே யாழ் குடாநாடு இரவோடு இரவாக ஒரே நாளில் தனது மைந்தர்கள் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அரச பயங்காரவாதம் காரணமாக அகதிகளாக அல்லல்பட்டு இடம்பெயர்ந்ததையும் பின்னாளில் கண்டு கதறியது.வாழையடி வாழையாக வாழ்ந்தவர்கள்�� வந்தரையும் வாழ வைத்தவர்கள்�� சொந்த நாட்டிலேயே சுகம் இழந்து�� சுற்றம் இழந்து சோகத்தில் மரநிழலில் - வீதியோரத்தில் - காடுகளில் வாழவேண்டிய காலமும் வந்தது. சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில்�� தினமும் செத்துப் பிழைத்த அந்த ஜீவன்களுக்கு யூலை 83 ஒரு தூசு அல்லவா?
ஆமாம் அன்பர்களே! யூலை 83 மீண்டும் தொடர்ந்தது - வித்தியாசமான விதத்தில் - வேற்று வடிவங்களில் தினம் தினம் ஈழத்தமிழர்களை அழிப்பதற்கு யூலை 83 தொடர்ந்தும் செயற்பட்டது. ஆனால் அதற்கு வேறு பெயர்கள் இடப்பட்டன.சிறிலங்கா அரசின் இராணுவ நடவடிக்கைகள்�� அவற்றின் உண்மையான பெயர் யூலை 83 உணவுத்தடை - அதன் மறுபெயர் யூலை 83! மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தடை - அதன் சரியான பெயர் யூலை 83! மனித உரிமை மீறல்கள்- அதன் ஆரம்பப் பெயர் யூலை 83! காணாமல் போனோரின் கதை - அதன் உட்பெயர் யூலை 83! கிருஷாந்தி போன்றோரின் கண்ணீர் கதறல்கள் - அதே கறுப்பு யூலை 83!
அன்பர்களே! 83 யூலை மாதம் மட்டும்தான் ஞாபகம் இருக்கின்றதா? 83ல் இருந்து ஒவ்வொரு நாளும் ஈழத்தில் நடந்த அக்கிரமங்கள் அட்டூழியங்கள் அநியாயங்கள் யாவும் மறந்து போகுமா என்ன?
யூலை 83... என்று நினைத்துக் கலங்கிவிட்டுச் சும்மா இருக்கும் நேரமல்ல இது. உரிமையிழந்து பின்னர் உடமையிழந்து, இப்போது உயிர் கொடுத்துப் போராடுகின்ற எமது இனத்தின் உணர்வுகளுக்கு நம் தோள் கொடுக்க வேண்டிய நேரமிது. சொல்லொண்ணாக் கஷ்டங்களை அனுபவித்த எமது மக்கள் இன்ற தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஏகத்தலைமையில் நம்பிக்கையோடு தலைநிமிர்ந்து - பொங்கு தமிழாகப் பூரித்து எழுந்து நிற்கும் வேளை இப்போது! தமது அடிப்படை வேட்கைகளாக தாயகம் - தேசியம் -சுயநிர்ணய உரிமை என்பனவற்றை வெளிப்படுத்தி அவற்றை அரசியல் ரீதியாக சமாதானப் பேச்சு வார்த்தைகள் ஊடாகப் பெற்றிடலாம் என்ற நம்பிக்கையில் எமது இனம் காத்து நிற்கின்றது.அவர்களது அடிப்படை வேட்கைகள் நிறைவேறுவதற்கு புலம் பெயர்ந்த நாம் தொடர்ந்தும் குரல் கொடுப்போம்.! அவர்களது இலட்சியத்தை அடைவதற்கு தோள் கொடுப்போம். மறவர் கைகளைப் பலப்படுத்துவோம். நாளைப் பொழுது தமிழர் வாழ்வில் நல்லபடியாக மலரும் என்ற நம்பிக்கை வரவேண்டுமென்றால் அதற்கு நாமும் நமது கடமையைச் செய்திட வேண்டுமல்லவா?