அன்பின் உணர்வுடன் இங்கே வந்து குழுமியிருக்கக் கூடிய
உலகத் தமிழர்களே.
இன்றும் நேற்றும் இங்கே நிடைபெற்ற அத்தனை
கருத்தரங்குகளிலும் பங்கு கொண்டு உலகத்தமிழர்களின் ஒற்றுமையை
வலியுறுத்தும் வகையிலும் அதற்கு ஆதரவு தெரிவித்தும் உரையாற்றிவிட்டு
அமர்ந்துள்ள தமிழ் அறிஞர்களே, தலைவர்களே, மற்றும் பேராளர்களே,
உலகநாடுகளிலிருந்து வந்திருக்கக்கூடிய அருமை நிண்பர்களே, உலகம்
முழுவதிலும் இருக்கக்கூடிய தமிழ்க் கலைஞர்களின் பிரதிநதியாக இங்கே
வந்திருக்கக்கூடிய இயக்குநிர் நிண்பர் பாரதிராசா அவர்களே. உங்கள்
அத்தனை பேருக்கும் நின்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்
கொள்கிறேன்.
உலகத் தமிழர் பேரமைப்பு இருபது ஆண்டுகளாக எண்ணற்ற அறிஞர்கள்தமிழ்
உணர்வாளர்கள் சிந்தனையிலே ஊறித் திளைத்து இன்றைக்கு ஒரு முழுமையான
வடிவத்தைப் பெற்றிருக்கிறது என்றால் அது மிகையாகாது. உலகப்
பெருந்தமிழர் விருதினைப் பெற்ற முனைவர் கா.பொ.இரத்தினம் அவர்கள்
இத்தகைய அமைப்பை நறுவுவதற்கு எடுத்த முயற்சிகளைப் பற்றியெல்லாம்
சொன்னார். 1980 ஆம் ஆண்டில் நான் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக
இருந்த போது ஆளுநிர் உரைக்கு நின்றி தெரிவித்துப் பேசுகையில் உலகம்
முழுவதிலும் இருக்கக்கூடிய தமிழர் அமைப்புகளை முதலமைச்சர் எம்.ஜி.ஆர்
ஒன்றுசேர்க்க வேண்டுமென்று வலியுறுத்திச் சொன்னேன்.
எம்.ஜி.ஆர். அவர்கள் மதுரையிலே ஐந்தாவது உலகத் தமிழ்
ஆராய்ச்சி மாநாடு நிடைபெற்ற போது உலகத் தமிழ்ச் சங்கம் அமைப்பது என்ற
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவினை வெளியிட்டார். மறைந்த
எம்.ஜி.ஆர். உலகத் தமிழ்ச் சங்கத்தை அமைத்தார். பத்து கோடி ரூபாயை
ஒதுக்கினார். மதுரையிலே ஒரு இடமும் ஒதுக்கப்பட்டு அதற்கான அதிகாரிகளும்
நயமிக்கப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. உலகம் முழுவதிலும் இருந்த
தமிழர்கள் அதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அவருடைய மறைவோடு அது
அப்படியே தூங்கிவிட்டது.
மலேசியாவிலுள்ள நிம்முடைய நிண்பர் டேவிட் அவர்கள் இதற்கான முயற்சி
எடுத்தார். உலகத் தமிழ் மாமன்றம் என்ற பெயரில் ஒரு அமைப்பை
உருவாக்கினார். ஆனால் துரதிருஷ்டவசமாக அது தொடரவில்லை.
அமெரிக்காவிலுள்ள டாக்டர் தணி.சேரன் ஒரு அமைப்பை உருவாக்கினார்.
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு வித்திட்ட பெருமை மறைந்த ஈழத்து
தனிநாயக அடிகளைச் சார்ந்தது. உலகத் தமிழ் ஆராய்ச்சி நறுவனம்
ஏற்படுவதற்கும் உலகத் தமிழ் மாநாடுகள் தொடர்ந்து நிடைபெறுவதற்கும்
உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் இணைந்து
தமிழ் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ஒரு தொ�லைநோக்குப் பார்வையுடன் அந்த
மாபெரும் அறிஞர் சிந்தித்துச் சிந்தித்துச் செயல்பட்டதன் விளைவு தான்
தமிழ் ஆராய்ச்சி எவ்வளவோ முன்னேறியிருக்கிறது. ஆராய்ச்சியால் தமிழர்களை
ஒன்றுபடுத்த வேண்டும் என்ற அந்தச் சிந்தனை தான் இன்று மலர்ந்து
முளைத்து மரமாக விழுதுவிட்டு உலகத் தமிழர் பேரமைப்பு என்ற வடிவம்
எடுத்திருக்கிறது என்பதை நின்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகம் முழுவதிலும் உள்ள தமிழர் அமைப்புகளை இணைத்து ஒரு குடை அமைப்பை
அமைக்க வேண்டும் அதைத் தமிழக அரசு செய்ய வேண்டுமென்ற என்னுடைய எண்ணம்
வளர்ந்துகொண்டே இருந்தது. இருபது ஆண்டுகள் உலகம் முழுவதிலும்
சுற்றுப்பயணம் செய்த போது இதைப்பற்றி விவாதித்து விவாதித்து அதற்கு ஒரு
வடிவம் காணவேண்டுமென்று எடுத்துக்கொண்ட முயற்சிகள் இன்றைக்கு ஒரு
சரியான நலையை அடைந்திருக்கிறது என்று நான் கருதுகின்றேன்.
1999 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் சென்னையிலே மறைந்த இர.நி.வீரப்பனார்
தலைமையில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு நறுவனத்தின் வெள்ளிவிழா மாநாடு
நிடந்தது. அந்த மாநாட்டைத் தொடங்கி வைக்க வேண்டுமென்று அவர் என்னை
அழைத்த போது அந்த மாநாட்டில் நான் ஐந்து அம்சத் திட்டம் ஒன்றை
வெளியிட்டேன். உலகத் தமிழருக்கு ஒரு குடை அமைப்பு, உலகத் தமிழருக்கு
ஒரு கொடி, உலகத் தமிழருக்கு ஒரு தேசியப் பண், உலகத் தமிழருக்கென்று ஒரு
வங்கி, உலகத் தமிழருக்கு என்று ஒரு தேசிய உடை வேண்டும் என்று
வலியுறுத்தினேன்.
இன்று உலகத் தமிழன் தன் முகத்தை இழந்துள்ளான். நிம் இனத்துக்கென்று
தேசிய உடையொன்று இல்லை. மற்ற இனத்தவர்கள் விழாக்காலங்களிலே அந்தந்த
தேசிய உடையிலே அங்கே கூடி மகிழ்கிறார்கள். ஆனால் தமிழர்களின் தேசிய உடை
மறைந்து போய் விட்டது. பஞ்சாபிக்கென்று தனி தேசிய உடை இருக்கிறது
குசராத்திகளுக்கு, வங்காளிகளுக்கு இந்தியாவிலுள்ள அனைத்து மக்களுக்கும்
அந்தந்த தேசிய உடையைப் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார்கள். ஆனால்
தமிழன் அந்த அடையாளத்தை இழந்துவிட்டு பல்வேறு தேசிய உடைகளை அணிந்ததைப்
பார்த்தபோது தேசிய உடைக் கருத்தினை நான் வலியுறுத்தினேன். அந்த
மாநாட்டில் சொன்னதோடு என்னுடைய வேலை தீர்ந்து விட்டதாக நான் நனைத்தேன்.
ஆனால் இரண்டாம் நாள் மாநாட்டில் வீரப்பனார் இந்த ஐந்தம்சத் திட்டத்தை
இந்த மாநாடு வரவேற்கிறது எனவும் அதை நறைவேற்றித் தருகிற பொறுப்ப்பினை
�நிடுமாறன் ஏற்கவேண்டுமெனவும் தீர்மானம் நறைவேற்றினார். நீங்கள் தான்
செய்ய வேண்டும் என்று உறுதியாகச் சொன்னவர் இரண்டு நாளில் மறைந்து
போனார்.
அந்த மாநாட்டிற்கு வந்திருந்த வெளிநாட்டுப் பிரதிநதிகள் ஒன்றுகூடி ஒரு
அமைப்புக் குழுவை ஏற்படுத்தினோம். அதற்குப் பின்னால் இரண்டு ஆண்டுகள்
உலகம் முழுவதிலும் எல்லா நாடுகளிலும் இருக்கக்கூடிய தமிழர்
அமைப்புகளுடன் மின்னஞ்சல், கடிதம், தொலைபேசி,தொலைநிகலி உதவியுடன்
தொடர்பு கொண்டு அவர்களின் ஆலோசனையை, சம்மதத்தை நாங்கள் பெறுவதற்கு
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இப்படி ஒரு அமைப்பை ஏற்படுத்த
வேண்டுமென்று உலகத்திலே எந்த நாடாக இருந்தாலும் அந்த நாட்டிலே
இருக்கக்கூடிய தமிழர் அமைப்புகள் ஆதரவு தெரிவித்தபோது வியப்பாக
இருந்தது. அப்படியானால் இந்த ஆதங்கம் இந்த ஏக்கம் என் உள்ளத்திலே
மட்டுமல்ல உலகத் தமிழர் உள்ளங்களில் இருந்திருக்கிறது என்பது அதன் �லம்
தெளிவாயிற்று.
அதற்குப்பின்னால் மீண்டும் பல்வேறு குழுக்களை அமைத்து அதற்கான
வேலைகளைச் செய்தோம். தேசியப் பண்ணினை நிம்முடைய உணர்ச்சிக் கவிஞர் காசி
ஆனந்தன் சிறப்பாக எழுதிக் கொடுத்தார்கள். அதற்காக அவருக்கு இந்த
நேரத்தில் இதயபூர்வமான நின்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதைப் போல
இந்தக் கொடி உலகத் தமிழருக்கான கொடியை வடிவமைத்துக் கொடுத்த ஓவியர்
வீர.சந்தானம் அவர்களுக்கு உலகத் தமிழர் சார்பாக நின்றி தெரிவித்துக்
கொள்கிறேன்.
இந்த வேட்டி சட்டையை, சேலையை அணிந்து விட்டால் தமிழன் நமிர்ந்து
விடுவானா என்ற கேள்வி சிலருக்கு எழுகிறது. ஒரு அடையாளம் இல்லாமல்
இருந்த தமிழனுக்கு அடையாளம் இருக்கிறது என்பதை எடுத்துக்காட்ட வேண்டிய
அவசியம், உலகம் முழுவதிலும் ஆடையில்லாமல் எத்தனையோ நாடுகளில் மக்கள்
நர்வாணமாக திரிந்த காலத்திலேயே உடை நாகரிகத்தோடு வாழ்ந்தவன் தமிழன்.
�வாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்திலிருந்து நிம்முடைய துணிகள்
மேற்கே உரோம். கிரேக்கம் வரை சென்றன. கிழக்கே தென்கிழக்கு ஆசிய
நாடுகளில் சீனம் வரை சென்றன. உலகம் முழுவதிற்கும் ஆடை வழங்கிய
தமிழர்கள் தேசிய உடை இல்லாமல் இருப்பது வெட்ககரமானது. தேசிய உடை நிமது
பண்பாட்டின் அடையாளச் சின்னம். அதை ஒருபோதும் நாம் இழக்க முடியாது.
பண்பாட்டு உரிமை மீட்சி. அதை நாம் செய்தே தீரவேண்டும். இந்த
மாநாட்டிற்கு வந்திருக்கக்கூடிய நூற்றுக்கணக்கான தோழர்கள் இந்தத் தேசிய
உடையில் வந்திருந்தாலும் கூட என் மனம் நறைவடையவில்லை. தமிழர் விழாக்கள்
நிடக்கும் போது நூற்றுக்கு நூறு விழுக்காடு தேசிய உடையில் வரவேண்டும்.
எல்லா நாளும் தேசிய உடை அணிய வேண்டுமென்பதல்ல பண்பாட்டு விழாக்கள்.
தமிழ் விழாக்கள். தமிழ் மாநாடுகள் நிடக்கும் போது நிம்முடைய மக்கள்
ஆண்களும் பெண்களும் தேசிய உடையில் வரவேண்டும். இந்த உணர்வு வளர
வேண்டும். இது சாதாரண விசயமல்ல. நிம்முடைய அடையாளத்தைத் தெரிவிக்கும்
உடை இது என்பதை மறந்து விடக்கூடாது.
உலகத் தமிழர் பேரமைப்பு அமைத்தாகிவிட்டது. அதன் தலைவராக என்னை எல்லா
நாடுகளிலிருந்து வந்திருக்கக்கூடிய தமிழர்கள் ஒன்றுகூடி
தேர்ந்தெடுத்தாகிவிட்டது. நீங்களும் அங்கீகரித்தாகிவிட்டது. இத்துடன்
நிம் வேலை முடிந்த விட்டது என்று மேடையில் இருக்கக்கூடிய தலைவர்களும்
நீங்களும் நனைத்தால் என் மீது பொறுப்பைச் சுமத்தி வைத்ததற்கு அர்த்தம்
அதுவல்ல. அனைத்து தமிழர்களின் ஒத்துழைப்பை நிம்பித் தான் என்னுடைய எளிய
தோளிலே சுமப்பதற்கு நான் முன்வந்திருக்கிறேன். அருமை நிண்பர்களும்
தமிழ் உணர்வாளர்களும் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் வாழ்கின்ற தமிழர்கள்
அனைவரையும் இந்தக் குடை அமைப்பின் கீழ் கொண்டு வருவது எங்கள் நோக்கம்.
இந்த மாநாட்டுக்குத் தடை விதித்துத் தமிழர்களை ஒன்றுபடுத்தக் கூடாது
என்று சிலர் நனைத்தார்கள். ஆனால் நாங்கள் யாரையும் ஒதுக்கவில்லை.
மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் இராசாராம் அவர்கள் தலைமையிலே கூடி
இந்த நகழ்ச்சி நரலைத் தொகுத்தபோது வரவேற்புக் குழுவில் இருந்தவர்கள்
அனைவரும் சொன்னார்கள் பொறுப்புணர்ச்சியோடு கடமையுணர்ச்சியோடு
சொன்னார்கள் அதை நான் இன்னமும் எண்ணிப் பார்த்து வியக்கிறேன். யாரையும்
ஒதுக்க வேண்டாம். எல்லோரையும் அழையுங்கள். எல்லாக் கவிஞர்களையும்.
அறிஞர்களையும். எல்லாத் தலைவர்களையும் கூப்பிடுங்கள் என்ற கருத்தை
வெளியிட்டார்கள். எல்லோரையும் நாங்கள் அழைத்தோம். ஏன் என்று சொன்னால்
இது உலகத் தமிழருக்கான அமைப்பு. அதிலே ஒரு தமிழனைக் கூட நாங்கள் ஒதுக்க
விரும்பவில்லை. இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளாத தமிழர்கள் இருக்கலாம்.
பலருக்கும் பல கருத்துக்கள் இருக்கும். இருக்க வேண்டும். ஆனால் அந்த
கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரையும் ஒன்றுபடுத்துகிற இடம் தான்
உலகத் தமிழர் பேரமைப்பு. கலைஞர் பாரதிராசா ஏன் இங்கே வந்திருக்கிறார்?
வெளிநாடுகளிலிருந்து தமிழர்கள் ஏன் வந்திருக்கிறார்கள்? வேலையில்லையா?
உலகத் தமிழருக்குக் கடமையுண்டு. வித்தியாசமான கருத்துக்கள் உண்டு.
ஆனால் அதற்கு மேலாக நாம் தமிழர் என்ற உணர்வோடு சிந்திக்கக்கூடியவர்களாக
இருக்கிறோம். அதனால் தான் நாம் இவ்வளவு பேர் கூடியிருக்கிறோம்.
உண்மையான தமிழுணர்வு கொண்டவர்களாக இருக்கிறோம். இந்தப் பண்பாட்டை
வளர்க்கவேண்டும். அரசியல் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.
சமயக் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். வேறு வகையான
கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அவையெல்லாம் முக்கியமல்ல. நாம் தமிழர்
என்ற பொதுவான எண்ணம் இருக்க வேண்டும். தமிழ் இனத்திற்கு சோதனை என்று
வரும்போது ஒரு பிரச்சனை வரும் போது சாதி, சமயம், அரசியல் மற்றும் பிற
எல்லைக்கோடுகளைத் தாண்டி ஒன்றுபட்டு எழுவோம் என்ற உணர்வு வருமேயானால்
நிம்மை வெல்லும் சக்தி யாருக்கும் கிடையாது. அரசியல் இன்றைக்கு
இருக்கும். நாளைக்கு மாறும். இன்றைக்கு ஒரு கட்சி ஆட்சிப் பீடத்தில்
இருக்கும். இன்னொரு கட்சி நாளைக்கு ஆட்சிப் பீடத்தில் வரும்.
அவையெல்லாம் சனநாயகக் கடமை. குறை கூறவில்லை. சனநாயகம் என்று வரும்போது
ஒரு நாட்டின் நர்வாகத்திற்குத் தேர்தல் அவசியம். சரி தேர்தலில் ஏதாவது
ஒரு கட்சி வெற்றி பெற முடியும். இன்னொரு கட்சி எதிர்கட்சி அல்லது சில
கட்சிகள் கூடி ஆட்சிப் பீடத்தில் அமரலாம். இவையெல்லாம் சனநாயக
நிடைமுறை. ஆனால் அதற்கு அப்பால் மொழி ரீதியாக இன ரீதியாகப் பிரச்சனைகள்
வரும்போது ஒன்றுபட்டு நற்பதில் தான் உண்மையான சனநாயகத்தின் அடிப்படை
இருக்கிறது.
இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டனில் வின்சுடன் சர்ச்சில் தலைமையில்
சகல கட்சிகளும் ஒன்றுபட்டு அதன் அடிப்படையில் ஒரு தேசிய அரசாங்கத்தை
அமைத்தன. ஆங்கிலேயர்கள் ஒன்றுபட்டு நன்றார்கள். ஒன்றுபட்டு இருந்ததால்
தான் இரண்டாம் உலகப்போரில் வெற்றி பெற முடிந்தது. சமாதானம் வந்தவுடன்
வின்சுடன் சர்ச்சில் தேவையில்லை என்றார்கள் அட்லியை அமர்த்தினார்கள்.
அது நிடைமுறை. ஒரு �நிருக்கடி வரும்போது ஒரு இனத்திற்கு நாட்டிற்கு
�நிருக்கடி வரும்போது ஒன்றுபட்டு நற்பதற்கான மனமும் அதற்கானத்
தொலைநோக்குப் பார்வையும் எந்த இனத்திற்கு இருக்கிறதோ அந்த இனம் தான்
நமிர்ந்து நற்கிறது. வரலாறு மாறாது. இந்தத் தமிழகத்திற்குப் பெரும்
பொறுப்பு இருக்கிறது. உலகம் முழுவதிலும் தமிழர்கள் எந்த நாட்டிலே
வாழ்ந்தாலும் அவர்களுக்கு அங்கே இன்னல் நேர்ந்தால் அப்போது அந்த
தமிழர்களுக்கு நேர்ந்த இன்னலைத் துடைக்க வேண்டிய கடமை தமிழகத்தைச்
சேர்ந்த ஆறு கோடி தமிழர்கள் அனைவருக்கும் உண்டு. முதலமைச்சருக்கும்
உண்டு. என்னைப் போன்ற சாமானியர்களுக்கும் உண்டு. நச்சயமாக உண்டு.
அமெரிக்காவிலே ஆங்கிலேயர்கள்; கனடாவிலே ஆங்கிலேயர்கள்; ஆசுதிரேலியா
ஆங்கிலேய மயமான நாடு; நயூசிலாந்து ஆங்கிலேயமயமான நாடு; ஆனால் உலகப்போர்
��ண்டபோது. முதல் உலகப் போராக இருந்தாலும் இரண்டாம் உலகப் போராக
இருந்தாலும் அனைவரும் பிரிட்டன் பின்னணியில் நன்றார்கள். பிரிட்டன்
அந்த போரிலே வெற்றி பெற்றது. அமெரிக்காவும் கனடாவும் அதற்குப்
பின்தளமாக இருந்தன. அந்த ஒற்றுமை உலக நாடுகளிலுள்ள நிம் தமிழ்
மக்களிடையே வரவேண்டும். ஈழம், மலேசியா, தென் ஆப்ரிக்கா எங்கே துயரம்
என்று சொன்னாலும் நிமக்கு வந்த துயராக நனைக்க வேண்டும். நான் கனடா
நாட்டிற்குச் சென்றிருந்த போது அந்த நாட்டு வெளிநாட்டு அமைச்சராக
இருந்த ஒரு அம்மையாரைச் சந்தித்து ஈழப் பிரச்சனைப் பற்றி அவரது ஆதரவைப்
பெறுவதற்கு என்னை நிண்பர்கள் அழைத்துச் சென்றார்கள். உட்கார்ந்து
பேசினோம். இடையிலே அந்த அமைச்சர் கேள்வி கேட்டார். You are an Indian -
Tamilian - what interest for you in Srilankan Tamil problem? நான்
சொன்னேன். நீங்கள் கனடாவில் இருக்கும் ஆங்கிலேயர்கள். உலகப் போரில்
பிரிட்டன் ஈடுபட்ட போது எங்களுக்கு என்னவென்று இருந்தீர்களா?
பிரிட்டனுக்கு ஆதரவாக நீங்கள் செர்மன் மீது யுத்தப் பிரகடனம்
செய்தீர்கள். அந்த உணர்வு தான் எங்களுக்கும் இருக்கிறது என்று
சொன்னேன். துயரம் என்று வரும் போது நாட்டில் வேறுபாடுகள் இருக்கலாம்
உண்மை. ஆனால் அதற்குமேல் மொழியால், இனத்தால் நாம் உறவினர்கள் அந்த உறவு
ஒருபோதும் அறுத்துக்கொள்ள முடியாது என்று சொன்னேன்.
அருமை நிண்பர்களே. இந்த உலகத் தமிழர் பேரமைப்பு விரிந்து பரந்த
தொலைநோக்குப் பார்வையோடு கூடியது. எனக்கு என்ன வருத்தம் என்று சொன்னால்
ஒரு ஆறு மாத காலத்திற்கு மேலாக இந்த உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள்
உழைத்து இந்த அமைப்பை உருவாக்கி மாநாடு நிடத்தினால் இங்கே உள்ள சிலர்
இந்த மாநாட்டுக்குத் தடை விதிக்கிறார்கள். என்ன சொன்னார்கள் அந்த
தடையிலே? இவர்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் புலிகளை ஆதரித்து
இந்த கூட்டத்திலே பேசுவார்கள், செயல்படுவார்கள், என்ற அந்தப் புகாரின்
அடிப்படையில் தடை என்றார்கள். நான் விரிவாகப் போகவில்லை.
ஆனால் இந்த ஆண்டல்ல இருபது ஆண்டுகளாகப் புலிகளை
ஆதரித்துப் பேசி வருகிறேன். என்னுடைய இந்தப் பேச்சில் எந்த
ஒளிவுமறைவும் இல்லை. ஒளிவுமறைவாக எதையும் செய்ய எனக்குத் தெரியாது.
ஆனால் எனக்கு என்ன வருத்தம் என்றால் புலிகளை ஆதரித்து பேசுவது மட்டும்
தான் என்னுடைய தொழிலா என்ன? உலகம் முழுவதிலும் தமிழர்களுக்கு எங்கே
இன்னல் வந்தாலும் குரல் கொடுப்பது எனது வழக்கம். எனக்கு ஒரே இராகம்
பாடத் தெரியாது. திருமண வீட்டிற்குப் போய் அழமாட்டேன் இழவு
வீட்டிற்குப் போய் சிரிக்க மாட்டேன்.
புலிகளை ஆதரித்து பேசவேண்டுமேயானால் எந்த நேரத்தில்
எங்கே பேச வேண்டும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் இந்த மாநாடு
அதற்கான மாநாடு அல்ல. இதைக் கூடக் காவல்துறை அதிகாரிகள் புரிந்து
கொள்ளவில்லை. அண்டர்கிரவுண்ட் அரசியலா நான் நிடத்திக்
கொண்டிருக்கிறேன்.? அல்ல. காவல்துறையில் இருக்கக் கூடிய தமிழர்களையும்
சேர்த்துத் தான் இந்தப் பேரமைப்பு. அப்படி ஒரு விரிந்த பார்வையோடு
நாங்கள் நிடத்துகிறோம். அதற்கு முட்டுக்கட்டை போட நனைப்பது சரிதானா?
எந்த வகையில் நயாயம்?
ஆனாலும் என் மனதில் ஒன்று தோன்றியது. மாநாட்டுக்கு
�ன்று நாட்களுக்கு முன்னால் எனது நிண்பர் இயக்குநிர் வி.சி.குகநாதன்
மாநாட்டு விளம்பரம் போதாது. பத்திரிக்கையில் பெரிய பெரிய விளம்பரம்
வெளியிட வேண்டும் என்று சொன்னார். உண்மை தான். பொருளாளர் சந்திரேசன்
அவர்களைப் பார்த்தேன். அவரது விழிகளில் பார்வையில் இருந்த பயத்தைப்
பார்த்தபோது அவ்வளவு பணத்திற்கு என்ன செய்வது என்று நனைத்தேன். எங்கள்
குறையைப் போக்க வேண்டும் என்று காவல் துறை முடிவு செய்து இந்த
மாநாட்டுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் பெரிய விளம்பரம் கொடுத்து
திரளான மக்களைத் திரட்டியிருப்பதற்கு இதயபூர்வமான நின்றியைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிகாரிகளாக இருக்கக்கூடியவர்கள் ஐஏஎஸ் ஐபிஎஸ் படித்து
விட்டு தான் வருகிறார்கள். தயவு செய்து சிந்தியுங்கள். இஸ்டீரியோ
டைப்பாக வேலை பார்க்காதீர்கள். இதுவரை நான்கு மாநாடுகளுக்கு இவர்கள்
தடை போட்டிருக்கிறார்கள் நீதிமன்றத்தில் ஒரு குட்டு வாங்கி அனுமதி
கொடுக்க வேண்டுமென அவர்கள் ஏன் நனைக்கிறார்கள்? இவர்கள் எல்லாம்
சாமான்யர்கள் என்றால் மரியாதை தரமாட்டார்கள். நீதிமன்றத்தின் கையால்
குட்டு வாங்கவேண்டும் அது தான்பெருமை என்று நனைக்கிறார்கள். இது
எல்லாம் வேண்டாம். நான் அவர்களைப் பற்றிப் பேசி பொன்னான நேரத்தைப் பேசி
வீணாக்க விரும்பவில்லை.
உலகத் தமிழர் பேரமைப்பு ஐந்து மீட்புகளை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
மொழி மீட்பு. பண்பாடு மீட்பு. வரலாறு மீட்பு. இன மீட்பு. மண் மீட்பு
ஆகிய ஐந்து மீட்புகள் உடனடியாக நிடைபெற்றாக வேண்டும். இந்த மீட்புகள்
இல்லாமல் தமிழ் இல்லை. தமிழன் இல்லை.
1) மொழி மீட்பு:
நிம் தமிழ் மொழி ஒரு செவ்வியல் மொழி. தொன்மையான இலக்கிய இலக்கண வளங்கள்
நறைந்த மொழியாகும். �வாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறுடைய மொழி
நிமது மொழி. பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் தொடர்ந்து �வாயிரம்
ஆண்டுகளுக்கு சீரிளமைத்திறம் குன்றாத மொழி நிம் மொழியாகும். நிமது
பழைமையை விட பெருமை மிக்கது தமிழர்களின் விரிந்து பரந்த உலகத் தமிழர்
கண்ணோட்டம் ஆகும். அந்த நாளிலேயே உலகளாவிய சிந்தனை தமிழருக்கு
இருந்தது.
அமெரிக்க சிந்தனையாளரான வெண்டல் வில்கி இரண்டாம் உலகப் போருக்கு முன்
ஒரே உலகம் ஒரே உலக அரசு அமைய வேண்டும் எனக் கனவு கண்டார். ஆனால் 2500
ஆண்டுகளுக்கு முன்னால் இந்த உலகச் சிந்தனை நிம்முடைய தமிழர்களுக்கு
இருந்தது. உலகத் தமிழர் பேரமைப்பு அந்த சீரிய சிந்தனையில் விளைந்த
சொற்றொடராக "யாதும் ஊரே யாவரும் கேளிர்"" என்பதை அது நோக்கமாகக்
கொண்டிருக்கிறது.
யாரை நாம் வழிகாட்டியாகக் கொண்டிருக்கிறோமோ அந்த வள்ளுவப் பெருந்தகை
பாடிய 1330 குறட்பாக்களில் ஒரு இடத்திலே கூட தமிழ் தமிழன் என்ற சொற்கள்
இடம் பெறவில்லை. அப்படியானால் வள்ளுவப் பேராசானுக்கு தமிழ் உணர்வு
இல்லையென்று அர்த்தமா? அல்ல. அல்லவே அல்ல தமிழ் நாட்டுக்கு அல்லது
தமிழர்களுக்காக மட்டுமே திருக்குறளை வள்ளுவர் எழுதவில்லை. மாறாக உலகம்
முழுவதிலும் உள்ள மக்களுக்காக அதை எழுதினார். அதனால் தான் திருக்குறளை
உலகப் பொது மறை எனப் பன்னாட்டு அறிஞர்களும் போற்றுகிறார்கள்.
இத்தாலியைச் சேர்ந்த அருட்தந்தை பெஸ்கி இந்த தமிழ் மண்ணுக்கு வந்து
நிமது மொழியைக் கற்ற பிறகு தனது பெயரையே வீரமாமுனிவர் என தமிழில்
மாற்றிக் கொண்டார். திருக்குறளை அவர் கற்ற போது அவர் வியந்தார்.
இத்தகைய சிந்தனைக் கருவூலம் உலக மக்களுக்கும் தெரிய வேண்டும் என
நனைத்து இலத்தீன் மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்தார். பிரிட்டனைச்
சேர்ந்த கிருத்துவத் துறவியான ஜி.யு.போப் குறளை ஆங்கிலத்தில் மொழி
பெயர்த்தார். இதன் விளைவாக குறளின் பெருமை உலகமெலாம் பரவிற்று.
உலகம். உலகு என்ற சொற்களை நிமது பழந்தமிழ் புலவர்கள் நறையப்
பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் படைத்த இலக்கியங்களை உலகம் என்றே அவர்கள்
தொடங்கினார்கள். "ஆதி பகவன் முதற்றே உலகு"" என்று திருக்குறளை வள்ளுவர்
தொடங்கினார். "உலகெலாம் உவப்ப"" என்று திருமுருகாற்றுப்படையை நிக்கீரர்
தொடங்கினார். "உலகத்தீரே உலகத்தீரே"" என்று கபிலர் தனது அகவலைத்
தொடங்கினார். "அங்கண் உலகளித்தலால்"" என்று இளங்கோவடிகள்
சிலப்பதிகாரத்தைத் தொடங்கினார். "மலர்தலை உலகின் மல்கிருளகல"" என
பவணந்தி முனிவர் நின்னூலைத் தொடங்கினார். ""உலகெலாம் உணர்ந்து"" என்று
கம்பன் தனது காவியத்�த் தொடங்கினார். "உலகம் யாவையும்"" என்று
நாற்கவிராச நிம்பி தனது அகப்பொருளைத் தொடங்கினார்.
இங்ஙனம் உலகம் பற்றிய சிந்தனை நிமது புலவர்களுக்கு இருந்தது.
தொல்காப்பியர் காலத்தில் தமிழகத்தின் எல்லை வடவேங்கடம் முதல் தென்குமரி
வரை இருந்தது. ஆனால் இன்று இந்தத் தமிழின் எல்லை உலகம் முழுவதும்
விரிவடைந்துள்ளது. உலகத்தில் தமிழர்கள் இல்லாத நாடில்லைதமிழ் ஒலிக்காத
நாடில்லை என்ற நலை பிறந்துள்ளது. உலக மனிதரில் நூற்றுக்கு ஒருவர்
தமிழர் செந்தமிழ் மொழி பேசுகின்றார். அமெரிக்க மொழியியல் அறிஞரான நோம்
காம்ஸ்கி அண்மையில் கல்கத்தாவிற்கு வந்திருந்த போது உலக
மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி என்றால் அது தமிழாக இருக்க வேண்டும்
அல்லது ஆப்பிரிக்காவில் வழங்கும் சுவாகிலி மொழியாக இருக்கலாம் என்று
கூறியுள்ளார். இதே கருத்தை பல்லாண்டுகளுக்கு முன்பாகவே தேவநேயப்
பாவாணர் அவர்கள் உலகத்தின் முதல் மொழி தமிழே என்று அறுதியிட்டு கூறிய
போது அதை ஏற்காமல் ஏளனம் செய்தவர்கள். ஏகடியம் செய்தவர்கள் உண்டு.
இதெல்லாம் கற்பனைக் கட்டுக்கதை என்று அலட்சியப்படுத்தினார்கள். ஆனால்
அதே கருத்தை அமெரிக்க நாட்டு மொழியியல் அறிஞர் சொல்லும் போது அப்படியா
என வியக்கிறார்கள்.
தமிழிசை தொன்மை வாய்ந்தது. இந்துஸ்தானி இசை மட்டுமல்ல மேற்கத்திய
இசைக்கும் தமிழிசையே �லமாகும். அலெக்சாண்டர் வழியாக தமிழிசை கிரேக்கம்
சென்றது என் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் இன்று நிம் மொழியின் நலை
என்ன? உலகத்தில் அழியப் போகும் மொழிகளின் பட்டியலில் தமிழும் இடம்
பெற்று இருப்பதாக யுனெஸ்கோ நறுவனத்தின் அறிக்கை கூறுகிறது. நிமது
குழந்தைகள் நிமது மொழியை முறையாகக் கற்பிப்பதற்கு வழியில்லாமல்
ஆங்கிலம் கற்கின்றனர். வெளிநாடுகளில் வாழும் நிம் குழந்தைகள் அந்தந்த
நாட்டு மொழியைக் கற்று வளர்ந்து கொண்டிருக்கின்றனர். ஆசுதிரேலய
அறிஞரான் பொன்.சத்தியநாதன் அதிர்ச்சிகரமான ஒரு உண்மையை வெளியிட்டார்.
ஐரோப்பிய நாடுகளில் வாழக்கூடிய நிமது குழந்தைகள்
பேசும்போது 60 விழுக்காடு தமிழ் மொழி பேசுகின்றனா 40 விழுக்காடு பிற
மொழிச் சொற்கள் கலந்து பேசுகின்றனர். ஆனால் தமிழ்நாட்டிலே நிம்
குழந்தைகள் பேசும்போது ஆங்கிலச் சொற்கள் 60 விழுக்காடும் தமிழ் சொற்கள்
40 விழுக்காடும் கலந்து பேசுகின்றனர். இந்த நலைமை நீடிக்குமானால் நிமது
மொழி அழிந்து போகும். தொல்காப்பியர் காலத்திலிருந்து நிமது மொழியைச்
சீரழிக்க இடைவிடாமல் வடமொழி முயற்சி செய்து வந்திருக்கின்றது. அந்த
முயற்சிகளை நிமது புலவர்களும் மன்னர்களும் முறியடித்தார்கள். தமிழைப்
பேணி வளர்த்தார்கள்.
ஆனாலும் கூட பதினான்காம் நூற்றாண்டில் மணியும் பவளமும்
விரவியது போன்ற நிடை என்று மாய்மாலம் செய்து மணிப்பிரவாள நிடை என்ற
பெயரில் வடமொழியோடு தமிழ் மொழியைக் கலந்து புதிய நிச்சு மொழியைப் பரப்ப
முயன்றார்கள். வடமொழியின் தாக்கம் மிகுந்து அதன் மரணப் பிடியில் தமிழ்
சிக்கித் தவித்தபோது மறைமலையடிகள் தோன்றி தமிழை மீட்டார். அவரைத்
தொடர்ந்து பல தமிழறிஞர்கள் இடைவிடாது போராடி தமிழின் தனித்தன்மையைப்
பாதுகாத்தனர்.
�வாயிரம் ஆண்டு காலத்திற்கு மேலாக வடமொழி என்னும் ஆயுதத்தைப்
பயன்படுத்தி தமிழை அழிக்க முயற்சி செய்தார்கள். அந்த ஆயுதம் கூர்
மழுங்கி போயிற்று என்ற காரணத்தினால் இந்த ஆங்கிலம் என்னும் ஆயுதத்தைக்
கொண்டு தமிழை அழிப்பதற்கு முயற்சி செய்கிறார்கள். இதைக் கண்டு மனம்
�நாந்த நிமது உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் " தமிழ்நாட்டுத்
தமிழர்கள் தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து தமிங்கிலம் என்ற மொழியைப்
பேசிக்கொண்டிருக்கிறார்கள்" என்று கூறினார்.
ஆசிவகம்,சமணம்,பௌத்தம்,சைவம், வைணவம், இசுலாம், கிருத்துவம் மற்றும்
நாத்திகம் ஆகிய பல சமங்களைத் தமிழர்கள் பின்பற்றினார்கள். ஆனால் அந்தச்
சமயங்கள் தமிழை வளர்த்தனஇந்தச் சமயங்களைச் சார்ந்த துறவிகள் தமிழ்
இலக்கியத்திற்குச் செழுமையூட்டினார்கள். மதங்களால் பிளவு பட்டத் தமிழர்
மொழியால் ஒன்றுபட்டிருந்தனர். ஆனால் சாதி ஒருபோதும் தமிழை
வளர்க்கவில்லை. அவை தமிழர்களைப் பிளவுபடுத்தின.
எனவே தான் நிமது மொழி அழிவிலிருந்து மீட்கப்பட வேண்டும். மொழி மீட்பு
முக்கியமான பணி. உலகம் முழுவதிலும் இன்றைக்குத் தமிழர்கள் பரந்து
வாழும்பொழுது அந்தந்த நாட்டு மொழிகள் தமிழுடன் கலப்பதற்கு அபாயம்
உள்ளது. அதை அனுமதித்தால் நிமது மொழி அடையாளம் தெரியாத அளவுக்கு
நாட்டுக்கு நாடு திரிந்து போய்விடும். எனவே தான் பேச்சு வழக்கும்
எழுத்து வழக்கும் உலகமெலாம் உள்ள தமிழர்கள் நிடுவில் ஒரே மாதிரியாக
அமையவேண்டும்.
அறிவியல் உலகத்தில் உலகம் அடியெடுத்து வைத்துள்ள இந்த
கால கட்டத்தில் நாம் உருவாக்கும் அறிவியல் சொற்கள் ஒரே மாதிரியாக
இருக்க வேண்டும். அது நாட்டுக்கு நாடு வேறுபடக் கூடாது. எழுத்துச்
சீர்திருத்தம். மொழிச்சீர்திருத்தம். அறிவியல் சொற்கள் ஆக்கம் ஆகியவை
குறித்து அனைத்து நாட்டு தமிழ் அறிஞர்களும் ஒன்றாக உட்கார்ந்து பேசி
ஒரு மனதான முடிவெடுக்க வேண்டும். அறிவியல் யுகத்தில் அதிலும் கணினியின்
செல்வாக்க விரைவாகப் பரவிவரும் காலகட்டத்தில் எத்தகைய மொழிசீர்திருத்த
நிடவடிக்கைகளை நாம் மேற்கொண்டாலும் அவை ஒரே மாதிரியாக அமைய வேண்டும்.
இப்படியெல்லாம் நாம் திட்டமிட்டுச் செய்தால் தான்
நிமது மொழியை அழிவிலிருந்து மீட்க முடியும். ஆனால் இன்றைக்கு தமிழ்
வேலியற்ற நலமாக எந்தெந்த மாடுகளோ உள்ளே புகுந்து
மேய்கின்றன.திரு.டீவங்கடகிருட்டிணன் பேசுகையில் சுட்டிக்காட்டினார்.
குமுதம் பத்திரிக்கையில் எத்தனை ஆங்கில சொற்கள் என்று. ஆங்கிலத்தில்
எப் என்ற எழுத்து எப்படி ப் என்று திரிபடைகிறது என்று உங்களுக்குச்
சொன்னார். திட்டமிட்டு மொழியை அழிக்கிறார்கள். ஆங்கிலத்தை விரவி
இப்படிச் செய்வதை நிம் குழந்தைகள் பார்த்து இவர்களும்
பயன்படுத்துகிறார்கள். தவறான தமிழை அவர்கள் உபயோகித்துப் பேசவேண்டிய
நலைமை. இதையெல்லாம் நாம் தடுத்த நறுத்த வேண்டும்.
மறைந்த முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் தமிழுக்கென்று
உயரதிகாரம் வாய்ந்த ஒர் அமைப்பினை ஏற்படுத்தத் திட்டமிட்டு தமிழகப்
புலவர் குழுவை அமைத்தார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த 49 தமிழ்
அறிஞர்கள் அதில் இடம் பெற்றார்கள். இந்த புலவர் குழுவே தமிழ் மொழி
தொடர்பாக எத்தகைய முடிவையும் எடுக்கும் அதிகாரம் வாய்ந்த அமைப்பென
தமிழக அரசு அதற்கு அங்கீகாரம் கொடுத்திருந்தால் பிரஞ்சு அகாதமி போன்ற
வலிமை வாய்ந்த ஓர் அமைப்பு உருவாகியிருக்கும். ஆனால் முத்தமிழ்க்
காவலரின் அந்தத் நோலைநோக்கு முயற்சிக்கு தமிழக அரசு ஆதரவு தராத
காரணத்தால் அந்த அமைப்பு எதிர்பார்த்த அளவுக்கு செயலாற்ற இயலாமல்
போயிற்று. அத்தகைய அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அதற்கான
நிடவடிக்கைகளை உலகத் தமிழர் பேரமைப்பு மேற்கொள்ளும்.
2) பண்பாட்டு மீட்பு
இன்றைக்கு தமிழ்ப் பண்பாடு எப்படியெல்லாம் சிதைந்து போயிருக்கிறது.
எல்லாத் துறைகளிலும் சிதைந்து போயிருக்கிறது. குறிப்பிட்டுச் சொன்னால்
நேரமாகும். நிமது பண்பாடு திட்டமிட்டு அழிக்கப்படுகிறது.
சிதைக்கப்படுகிறது. நிமக்குத் தேவையில்லாத நிச்சுப் பண்பாடு இறக்குமதி
ஆகிக் கொண்டிருக்கிறது. நிமது இளைஞர்கள் நிச்சுப் பண்பாட்டால் தங்கள்
பண்பாட்டை இழந்து கொண்டிருக்கிறார்கள். துருக்கியில் இப்படிப்பட்ட நலை
வந்த போது கமால் பாட்சா தோன்றினார்.
துருக்கிய பண்பாட்டுக்குப் புத்துரு கொடுத்தார்;
இயக்கம் நிடத்தினார். மக்கள் கொண்டிருந்த �ட பழக்க வழக்கங்களை
எதிர்த்தார். ஐரோப்பாவின் நோயாளி நாடு என்று அழைக்கப்பட்ட துருக்கியை
நமிர்ந்து நற்கச் செய்து ஐரோப்பாவின் மற்ற நாடுகளுக்குச் சமமாக
முன்னேறுவதற்கு அன்றைக்கு கமால் பாட்சா நிடத்திய பண்பாட்டுப் புரட்சி
அடிப்படையாகும். நாம் மறந்து விடக் கூடாது. செஞ்சீனாவில் மாசேதுங்
பண்பாட்டுப் புரட்சி செய்தார். பெரும் புரட்சியைக் கலாச்சாரப் புரட்சி
என்ற பெயரில் நிடத்தி செஞ்சீனாவுக்குப் புதிய எழுச்சியைப் பெற்றுத்
தந்தார் என்றால் அது மிகையாகாது. பண்பாட்டுப் புரட்சி �லம் பண்பாட்டு
மீட்சிக்கு வழிவகுக்க வேண்டும்.
தமிழர் பண்பாடு கிருத்து பிறப்பதற்கு முன்பே
தென்கிழக்காசிய நாடுகளில் பரவியிருந்தது. வரலாற்றுச் சின்னங்கள்
தொல்பொருள் பொருட்கள் அதை நனைவு படுத்துகின்றன. அடையாளமாக விளங்கிக்
கொண்டிருக்கின்றன. மறைந்த அறிஞர் க.நி.திருநாவுக்கரசு அவர்கள்
தென்கிழக்காசிய நாடுகளில் தமிழ்ப் பண்பாடு என்னும் தலைப்பில் உள்ள அரிய
நூலில் ஏராளமான ஆதாரங்களைத் தொகுத்து கொடுத்திருக்கிறார். ஆனால்
இன்றைக்கு என்ன ஆகியிருக்கிறது? தென்கிழக்காசிய நாடுகளில் நிமது
தமிழர்கள் ஐந்தாம் நூற்றாண்டில் குடியேறினார்கள். பல்லவ மன்னர்கள்
காலத்திலே அரசுகளை நறுவினார்கள்.
அன்றைக்குக் கம்போடியாவில் வர்மன் என்ற பெயரைச்
சூட்டிக் கொண்டார்கள். பல்லவ மன்னர்களுக்குப் பிறகு இராசேந்திர சோழன்.
தென்கிழக்காசிய நாடுகளில் படையெடுத்தான். நிம் தமிழர்கள்
பல்லாயிரக்கணக்கில் அங்கே குடியேறினார்கள். ஆங்காங்கே தமிழரசை
உருவாக்கினார்கள். எப்போது இதையெல்லாம் நாம் இழந்தோம். தென்கிழக்காசிய
நாடுகளில் உள்ளவர்களுக்கு தமிழக தொடர்பு அற்றுப்போன போது. பிற்காலச்
சோழர்களும் பாண்டிய மன்னர்களும் 600ஆண்டுகள் ஒருவரையொருவர் அழிப்பதற்கு
தொடர்ந்து போராடினார்கள். இதனால் பாண்டிய, சோழ, பல்லவ ஆட்சிக்குப்
பிறகு 14 ஆம் நூற்றாண்டில் இவையெல்லாம் அழிந்து விசயநிகர மன்னர்களின்
ஆட்சிக்கு இந்த தமிழகம் உட்பட்டது. பாண்டிய சோழ அரசுகள் இடைவிடாமல்
போரிட்டதால் பலவீனப்பட்டன. இவை பலவீனப்பட்டதால் தென்கிழக்காசிய
நாடுகளில் அரசுகள் பலவீனப்பட்டன. இங்கேயிருந்து உதவிகள் இல்லை. பிற
நாடுகள் படையெடுத்தன. இது தான் உண்மை.
கி.பி. 15ஆம் நூற்றாண்டு வரை இங்கிலாந்து என்று ஒரு தீவு இருப்பது
உலகுக்குத் தெரியாது. 15 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னால் தான்
இங்கிலாந்து என்கிற அந்த சின்னஞ்சிறிய தீவு ஆங்கிலேயரின் எழுச்சியால்
புத்துரு கொண்டு 15 ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்தும் உலகம் பூராவும்
அவர்கள் வென்று கனடா,அமெரிக்கா, ஆசுதிரேலியா, ஆப்பிரிக்கா, ஆசியா
இந்தியா உட்பட ஆண்டார்கள். அப்போது தான் தமிழர்களின் ஆளுமை
முடிவடைந்தது. பிரிட்டனின் ஆளுமை தொடங்கிற்று. இது போன்ற பண்பாட்டு
மீட்பு உடனடியாக நிடத்தியாக வேண்டும்.
3.வரலாறு மீட்பு
இன்றைக்கு தமிழர்களுக்கு முழுமையான வரலாறு இல்லை. இன்றைக்கு
தமிழ்நாட்டுக்கு வரலாறு இருக்கிறது. ஈழ நாட்டுக்கு வரலாறு இருக்கிறது.
தமிழர்களின் வரலாற்றை உருவாக்க வேண்டுமானால் உலகம் பூராவும் சிதறிக்
கிடக்கின்ற வரலாற்றுச் சான்றுகள் அடையாளங்கள் கல்வெட்டுகள்
அத்தனையையும் ஒன்று திரட்ட வேண்டும். சிந்து சமவெளி நாகரிகத்தில்
தமிழனுடைய வரலாறு கிடக்கிறது. ஆசிய நாடகளில் பரவிக் கிடக்கிறது.
தமிழகத்திலேயே உரோமானிய காசுகள் அகழ்ந்து எடுக்கப்படுகின்றன. அதேபோல்
கிரேக்கத்தில் சங்ககாலக் காசுகள் இருக்கும். நிம்முடைய காசுகள் அங்கே
சென்றிருக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. அவர்கள் வரலாறு
எல்லாவற்றையும் ஆராயவேண்டும்.
ஒரு பெரிய குழு அமைக்க வேண்டும். அரசாங்கமே உதவி செய்து
நிம்முடைய வரலாற்றை எழுதும் பணி உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும்.
நிம்முடைய வரலாறே நிமக்குத் தெரியவில்லை. மறைந்த தேவநேயப் பாவாணர்
எந்தவிதமான உதவியும் இல்லாமல் எந்தப் பல்கலைக் கழக உதவியும் இல்லாமல்
அவர் நிம் தமிழர் வரலாற்றை எழுதினார். அதை அடிப்படையாகக் கொண்டு
நிம்முடைய வரலாறு முழுமையாக எழுதப்பட வேண்டும். அது நிம் கடமை. இந்த
உலகத் தமிழர் பேரமைப்பு அதைச் செய்யும்படி அரசுகளை நச்சயமாக
வலியுறுத்துவோம்.
ஆசியாவில் ஐரோப்பியர்கள் அடியெடுத்து வைத்த பொழுது அதை எதிர்த்துப்
போராடக் கூடிய துணிவெல்லாம் எந்த இனத்திற்கும் இல்லாத காலத்தில்
தமிழகத்தில் இருந்த பூலித்தேவன், கட்டபொம்மன், ஊமைத்துரை,
மருதுபாண்டியர் ஆகியோர் அன்னிய ஆதிக்கத்திற்கு எதிராகக் குரல்
கொடுத்தார்கள். ஈழத்திலும் சங்கிலியன், பண்டாரவன்னியன் ஆகியோர்
எதிர்த்துக் குரல் கொடுத்தார்கள். இருபதாம் நூற்றாண்டின்
தொடக்கத்திலேயே செண்பகராமன். வ.உ.சி., தில்லையாடி வள்ளியம்மை
போன்றவர்கள் எல்லாம் அளப்பரிய தியாகம் செய்தார்கள். வரலாறு
படைத்தார்கள். இலங்கையில் திலீபன் அறப்போர் நிடத்தினான்.
இந்தியாவில் முதல் சுதந்திர அரசை நறுவியவன் செண்பகராமன். ஆசியாவின்
முதல் கம்யூனிஸ்டு சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர் ஆவார். இதற்குரிய
மரியாதை இருக்கிறதா என்றால் இல்லை. இந்தியாவிலிருந்து மாஸ்கோவிற்கு
யாராவது சென்றால் மாபெரும் தலைவர் லெனின் கேட்கும் முதல் கேள்வி
சிங்காரவேலர் எப்படி இருக்கிறார். இப்படியெல்லாம் பெருமையோடு எவ்வளவோ
தியாகங்கள் செய்தவர்கள் நிம்முடைய தமிழர்கள். வரலாறு மறைக்கப்பட்டு
விட்டது. இதைப் போன்ற வரலாறுகள் தொகுக்கப் படுவதன் �லம் நிம்முடைய இளைய
தலைமுறைக்கு உணர்வு ஊட்ட முடியும்.
4. இன மீட்பு
நாம் தமிழர் என்ற உணர்வோடு நிமது இன எழுச்சி பரவ வேண்டும் என்றால் இன
மீட்பு நிடைபெற வெண்டும். இன்றைக்குத் தமிழினம் இந்த காலகட்டத்தில்
சிறிதுசிறிதாக தன்னை இழந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் பல்வேறு
மாநலங்களில் வாழும் தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மொழியை இழந்து அந்தந்த
மாநல மொழிகளில் வீட்டிலும் வெளியிலும் பேசவேண்டிய அவசியத்திற்கு ஆளாகி
உள்ளனர். இவர்கள் நாளடைவில் போனார்கள். கர்நாடகத்தில் வாழும் தமிழர்
பலரும் கேரளத்தில் வாழும் தமிழர் பலரும் ஆந்திரத்தில் வாழும் தமிழர்
பலரும் கன்னடர்களாக, மலையாளிகளாக, தெலுங்கர்களாக உருமாறிப் போனார்கள்.
வெளிநாடுகளில் நலைமை இன்னும் மோசம். இலங்கையில் புத்தளம் போன்ற
பகுதிகளில் வாழும் நிமது தமிழர்கள் காலப்போக்கில் சிங்களம் மட்டுமே
பேசவேண்டிய அவலத்திற்கு ஆளாகி சிங்களர்களாகத் திரிந்து போனார்கள்.
மொரிசியசில் வாழும் தமிழர்கள் கிரியோலி, பிரஞ்சு
மொழிகளைப் பேசி அவர்களும் உருமாறிப் போனார்கள். பிரிட்டிஷ் கினியாவில்
வாழும் தமிழர்கள் முற்றிலுமாக அழிந்து அடையாளங்களை இழந்து விட்டார்கள்.
இனத்தால் தமிழர்களாக இருந்து உருமாறிப் போயிருக்கிற இந்தத்
தமிழர்களையெல்லாம் நாம் மீண்டும் மீட்டாக வேண்டும். அவர்கள் தமிழர்களே
என்பதை அவர்கள் �நிஞ்சங்களில் பதிய வைத்தாக வேண்டும். எந்த இனமும்
சிறிது சிறிதாக உருமாறிப் போகுமானால் அந்த இனம் அழிவை நோக்கி
செல்லுகின்றது என்று பொருள். அந்த நலைமை தமிழனுக்கு வந்துவிடக் கூடாது.
5. மண் மீட்பு
மொழி மீட்பு, பண்பாடு மீட்பு, வரலாறு மீட்பு, இன மீட்பு, ஆகிய நான்கும்
செவ்வனே நிடைபெறுமானால் மண் மீட்பு என்பது மிக எளிதாகும். இலங்கையில்
வாழும் தமிழர்களாக இருந்தாலும். இந்திய நாட்டில் வாழும் தமிழர்களாக
இருந்தாலும் அவர்களின் மண் அவர்களுக்கே உரியது என்பது நலைநாட்டப்பட
வேண்டும். மண்ணைப் பறிகொடுக்கும் இனம் நாளடைவில் நாடோடி இனமாகிவிடும்.
மண் உரிமையை இழப்பது நிமது வாழ்வுரிமையை இழப்பது போலாகும்.
இதைப் போன்ற மிகப்பெரிய நோக்கங்களை உள்ளடக்கித் தான் இந்த உலகத் தமிழர்
பேரமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. தொலைநோக்குப் பார்வையுடன்
செயல்படவிருக்கிறது. இது யாரையோ கவிழ்த்து விட வேண்டும் என்பதற்காக
அல்ல. ஆட்சிப் பீடத்தில் ஏறுவதற்காக அல்ல. தயவு செய்து அந்த ஐயம்
யாருக்கும் தேவையில்லை. இன்றைக்கு நாம் ஆட்சிப் பீடத்தில் ஏற
வேண்டுமென்ற ஆசையை விட நிமது தமிழ் ஏற வேண்டும் என்ற ஆசை அதிகம். தமிழ்
உணர்வாளர்களை ஆட்சிப் பீடத்தில் அமர வையுங்கள். பதவியில் அமருவது அல்ல
எங்கள் நோக்கம்.
அதல்ல எங்கள் நோக்கம். குறுகிய நோக்கம் கொண்டு இந்த
அமைப்பை யாரும் பார்க்காதீர்கள். இந்த அமைப்பு உலக அமைப்பு. இந்த
அமைப்பு அனைத்து நாட்டுத் தமிழர்களுக்கும் சொந்தமானது. அனைத்து நாட்டு
தமிழர்களின் அமைப்பு. இந்த அடிப்படையில் தான் நிம் மொழி, நிம் இனம்,
நிம் பண்பாடு ஆகியவற்றை மீட்பு செய்யும் அமைப்பு. தோழர்களே நாங்கள்
அதைச் சாதிப்போம். எங்களைப் பொறுத்தவரையில் அந்த மீட்புப் பணி தான்
எங்கள் நோக்கத்தில் இருக்கிறது. எங்களுடைய காலத்தில் அவைகளை
மீட்டெடுக்க வேண்டும்.
முடிந்தால் மகிழ்ச்சி. முடியாவிட்டால் ஆயிரக்கணக்கான
இளைஞர்கள் எங்களுக்குப் பிறகு இந்தப் பொறுப்பை நறைவேற்றுவார்கள். இந்த
இளைஞர்களுக்கு ஒரு நில்ல பாதையை அமைத்துக் கொடுப்பது தான் எங்கள் வேலை.
இந்த இளைஞர்கள் நச்சயமாக சாதனை புரிந்து இந்த தமிழ் இனத்தை எழுச்சி பெற
வைப்பார்கள். ஏன் என்று சொன்னால் நிம் காலத்தில் இருபது மைல்களுக்கு
அப்பால் அதைச் சாதிப்பதை நாம் பார்க்க முடிகிறது. இந்த வீர இளைஞர்களின்
�லம் தமிழர் முகங்களுக்கு அடையாளம் கிடைத்திருக்கிறது. நான் கனடாவில்
சுற்றுப்பிரயாணம் செய்து கொண்டிருந்த போது விமான நலையத்தில்
உட்கார்ந்து கொண்டிருந்தேன். முன்பின் அடையாளம் தெரியாத ஒருவர் என்
பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். என்ன கேட்டிருக்க வேண்டும்? அணூஞு
ஙுணித ஐணஞீச்ண? அணூஞு தூணித ச் கூச்ட்டிடூடிச்ண? என்றல்லவா கேட்டிருக்க
வேண்டும்.
ஆனால் அவர் அணூஞு ஙுணித ச் கூடிஞ்ஞுணூ என்று கேட்டார்.
வேடிக்கையாகச் சொல்லவில்லை. உண்மையான சம்பவம். தமிழ் ஈழத்திற்கும்
தமிழ்நாட்டிற்கும் அவர்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை. அவர் அறியாமல்
தமிழ்நாட்டுக்கு கொடுத்த பெருமையை ஏற்றுக் கொண்டேன். எதற்காகச்
சொல்கிறேன் என்றால் இரத்தம் சிந்தி உயிரைக் கொடுத்து வாழவேண்டிய வசந்த
காலத்தில் வாழ வேண்டிய காலத்தில் குருத்து நலையில் உள்ள நிம் தம்பிகள்
நிம்முடைய தங்கைகள் அவர்கள் நிடத்துகிற அந்த வீரம் செறிந்த விவேகம்
நறைந்த போராட்டத்தை மதிக்கத் தெரியாமல் எவ்வளவு கொச்சைப்
படுத்துகிறார்கள்? அந்தத் தியாகத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு இங்கும்
தியாகம் புரிய இந்த நாட்டில் யாருக்காவது துணிவு உண்டா? அவர்கள் என்ன
நனைக்கிறார்கள்? இந்தப் போரில் வெற்றி பெற்றால் நாடாளுமன்றம்
போகப்போகிறோம் என்று போராடுகிறார்களா? நிம்மை மாதிரி அவர்களை
நனைக்காதீர்கள்.
வீட்டை விட்டு வெளியே போகும் போது மரணக் புரியை
நோக்கிப் பயணம் செய்கிறோம் என்று தெரியும். அவர்களுக்கும் பெற்றோர்கள்
உண்டு. அண்ணன் தம்பிகள் உண்டு. தங்கைகள் உண்டு. வசந்தகாலக் கனவுகள்
அவர்களுக்கும் உண்டு. எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு இந்த
வயதில் உயரிய நோக்கத்தை நோக்குகிற அந்த மாவீரர்களை தயவு செய்து
கொச்சைப் படுத்தாதீர்கள். உங்களுக்குக் கோபம் வந்தால் யார் மீதாவது
கோபம் இருந்தால் அங்கே திருப்புங்கள் உங்கள் கவனத்தை. வேண்டாம். இதை
விட்டு விடுங்கள். பெரிய சிந்தனைகள் மலர வேண்டும். நூறு பூக்கள்
பூக்கட்டும் என்று சொன்னான் மாசேதுங். நூறு சிந்தனைகள் பிறக்கட்டும்.
அந்தச் சிந்தனையைப் பரப்பச் செய்ய வேண்டும். அந்த நூறு பூக்கள்
பூப்பதற்கு உலகத் தமிழர் பேரமைப்பு அரும்பாடு படும் என உறுதி
கூறுகிறேன்.
இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்ற முயற்சியை
முறியடித்திருக்கிறோம். தொடர்ந்து ஆலவிருட்சம் போல் வேர்விட்டு
கிளைபரப்பி ஆயிரம் விழுதுள்ள மரமாக வளரட்டும். பல நாடுகளிலிருந்து
வந்து என்னினும் தகுதி மிக்கவர்கள் தென் ஆப்பிரிக்காவிலிருந்து
வந்திருக்கக்கூடிய முதுபெரும் கிழவர் ஐயா கோவிந்தசாமி அவர்களுக்கு
83வயது ஆகிறது. அவரது துணைவியாருக்கு இதய நோய் ஏற்பட்டு உடல் இயங்காமல்
படுத்த படுக்கையில் இருக்கிறார்கள்.
ஆனாலும் உலகத் தமிழர் பேரமைப்புக்குச் சென்றே
தீரவேண்டும் என்று அங்கிருந்து விரைந்து வந்திருக்கிறார். அதைப் போல
ஒவ்வொரு நாட்டிலிருந்தும் தலைமைப் பதவிக்கு முன்மொழிந்த அனைவருக்கும்
தெரியும் இந்தத் தலைமைப் பதவி ஒரு முள் கி�டம் என்பது. அதைச் சுமப்பதன்
லம் தான் தமிழினம் மீட்சி பெறும் என்றால் ஆயிரம் முறை சிலுவையில்
அறையப்படுவதற்கு நாங்கள் அனைவரும் தயார். இந்த இருபத்தொன்றாம்
நூற்றாண்டில் நான் சொல்கிறேன். இந்த காலகட்டத்தில் நான் சுமக்கிறேன்.
சென்ற நூற்றாண்டு முழுவதிலும் சென்ற தலைமுறையைச் சேர்ந்த நிம்
தலைவர்கள் நிம்முடைய தமிழ் அறிஞர்கள் எவ்வளவோ தியாகங்கள்
செய்திருக்கிறார்கள். பெயர்களை வரிசையாகச் சொன்னால் நேரமாகும். அவர்கள்
உணர்வு ஊட்டினார்கள். அவர்களால் உணர்வு ஊட்டப் பெற்ற இந்தத்
தலைமுறையைச் சேர்ந்தவர்கள்.
முதிய வயதை. மத்திய வயதைச் சேர்ந்த நாம் இன்னும் சில
ஆண்டுகள் இந்த உலகத்தில் வாழப் போகிறோம். நிம் முன்னோர்கள் ஊட்டிய அந்த
உணர்வை நாம் ஏந்தி நிம்முடைய இளைஞர்களுக்கு ஊட்டி ஒரு தமிழ் இன, மொழி,
பண்பாட்டு மீட்சியை நாம் செய்யாவிட்டால் வேறு யாரும் அதைச் செய்யப்
போவதில்லை. நாம் தான் அதைச் செய்ய முடியும். நிமக்குக்
கிடைத்திருக்கக்கூடிய இந்த வாய்ப்பை நிழுவ விடாதீர்கள். நிம்முடைய
இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தியாகம் செய்து நாம் அதை
நலைநறுத்திவிட்டால் அடுத்த தலைமுறை தமிழினத்தை மகத்தான இலட்சியத்திற்கு
அழைத்துச் செல்வார்கள் என்பதில் எங்களுக்கு அசைக்க முடியாத நிம்பிக்கை
இருக்கிறது. அந்த நிம்பிக்கையுடன் இந்த உலகத்தமிழ் பேரமைப்பின் இந்தத்
தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன். நீங்களும் உலகம் முழுவதும்
இருக்கக்கூடிய தமிழ் மக்களும் எனக்குத் துணை இருப்பார்கள் என்ற பெரும்
நிம்பிக்கையுடன் இந்தப் பொறுப்பை நான் ஏற்கிறேன்.
இதன் சட்ட திட்டங்கள்படி ஏழு பகுதிகளாக உலகம் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு
பகுதிக்கும் பொறுப்பாளர்களை அமைக்க வேண்டும். அது பிறகு செய்து
முடிக்கக்கூடிய பணி. மற்ற நாடுகளுடன் மற்ற அன்பர்களைக் கலந்தாலோசித்து
அதைச் செய்ய வேண்டும். ஆனாலும் இப்போதுத் தற்காலிகமாக நான் முனைவர்
கோவிந்தசாமி (தென்ஆப்பிரிக்கா), முனைவர் இந்திரகுமார் (பிரிட்டன்),
முனைவர் க.ப.அறவாணன் (தமிழ்நாடு), செயலாளர் நாயகமாக மருத்துவர்
செ.�நி.தெய்வநாயகம், பொன்.சத்தியநாதன் (ஆசுதிரேலியா) ஆகியோரை நயமனம்
செய்திருக்கிறேன்.
மற்ற நயமனங்கள் அனைத்தும் எல்லோருடனும் கலந்து பேசி
எல்லா நாட்டு அமைப்புகளுடன் கலந்து பேசி அவற்றை நான் செய்வேன் என்ற
உறுதியை அளித்து இந்த உலகத் தமிழர் பேரமைப்பு தொடக்க விழாவினை சிறப்பாக
நிடத்த உதவிய அனைவருக்கும் நின்றிப் பெருக்குடன் நான் அனைவருக்கும்
நின்றியினைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். உலகப் பண்ணுக்குச் சிறப்பாக
இசை அமைத்த எம்.எஸ்.விசுவநாதன் அவர்களுக்கும் அற்புதமாகப் பாடிய
சிவசிதம்பரம் அவர்களுக்கு நின்றி. அதைப் போல உலகத் தமிழர்களுக்கான
எட்டு பாடல்களை எழுதிய காசி ஆனந்தன் வளமையான குரலால் பாடிய உலகெங்கும்
இசைபரப்பும் தேனிசைச் செல்லப்பா ஆகியோருக்கும் நின்றி. உலகப் பெரும்
தமிழர் என்ற விருதினை முனைவர் கோவிந்தசாமி, கா.பொ.இரத்தினம்,
இளங்குமரனார், பாரதிராசா ஆகியோருக்கு முதன் முதலாக வழங்கிய பெருமை இந்த
அமைப்பினைச் சாரும்.
எவ்வளவோ சிறப்புகளை எவ்வளவோ பாராட்டுகளைப் பெற்றவர்
அருமை நிண்பர் பாரதிராசா. ஆனால் உலகப் பெரும் தமிழர் என்ற சிறப்பினை
அவர்களுக்கு முதன் முதலாக வழங்கிய பெருமை இந்த அமைப்பினைச் சாரும். இது
சாதாரணமான விருதல்ல. பெருந்தமிழன் என்ற சொல்லை சேக்கிழார்
பயன்படுத்தியிருக்கிறார். பெரியாழ்வார் பயன்படுத்தியிருக்கிறார். உலகம்
முழுவதிலும் வாழக்கூடிய தமிழர்கள் மத்தியிலே நிம் தமிழ் மொழிக்கும்,
இனத்திற்கும் இவர்கள் ஆற்றிய அந்த தொண்டிற்காக வழங்கப்பட்டுள்ளது.
அதை ஏற்றுக் கொள்ள முன்வந்த அவர்களுக்கு என் நின்றி.
அருமை நிண்பர்களே இறுதியாக ஒரு வார்த்தை அத்தனை தமிழர்களுக்கும் ஒரு
வார்த்தை இந்த அமைப்பை ஒரு கட்சி அமைப்பாக ஆக்காதீர்கள். இது
கட்சிகளுக்கு. சாதிசமயங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு அமைப்பு என்று
கருதுங்கள்.
உணர்ச்சிப் பெருக்கின் காரணமாக சிலர் கட்சி
அரசியலைப்பற்றியெல்லாம் சொல்லிவிட்டார்கள். அதற்கு இந்த மேடை இடம் அல்ல
என்பதை அவர்கள் மறந்து போயிருக்கக்கூடும். அந்த நிண்பர்கள் அறியாமல்
பேசிய அந்த வார்த்தைகள் விளைவாக யாருடைய மனமாவது புண்பட்டிருக்குமானால்
நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எந்தக் கட்டத்திலேயும் மறக்க
வேண்டாம். அரசியல் பேதங்கள் மத பேதங்கள் தமிழரிடையே இருக்கக் கூடாது.
ஒரு தமிழன் என்று நீங்கள் எண்ணினால் பகை மறந்து போகும். தமிழராய்
இணைவோம். வலிமையோடு எழுவோம். |