Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil National ForumSelected Writings - C Kumarabharathy > On the trail of  Gods, silks and spices...

Selected Writings by C.Kumarabharathy

On the trail of Gods, silks and spices...
pathai.gif (1951 bytes)
[see also Culture & the Tamil Contribution to Civilisation]
[to read the Tamil text you may need to download & install a Tamil Unicode font from here -
for detailed instructions please also see Tamil Fonts & Software]


Chennaiஇது என்ன தலைப்பு பட்டுப்பாதையும் பரமாத்மாவும் ? எழும்பாமல் இப்பிடிக் குந்துங்கோ சொல்கிறேன்.
கேள்விப் பட்டிருப்பீர்களே. சில்க் று¡ட் என்ற பிசித்தி பெற்ற பட்டுப் பாதை ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே உருவாகிவிட்டது. இந்தியாவை ஊடறுத்துக் கொண்டு சீனா பாரசீகம், அரேபியா, ஐரோப்பா ஆகிய நாடுகளை இணைத்த மிக நீண்ட பாதை இது. புராதன காலந் தொட்டே பாரதம் தொலை து¡ரங்களிலிருந்து பலரையும் மந்திர வசியமாக தன்பால் ஈர்த்திருக்கிறது.

பல விநேதமான காரணங்களுக்காக வசீகரித்திருக்கிறது. இவர்கள் கடல் மார்க்கமாகவும் தரைமார்க்கமாகவும் ஆபத்தான பாதைகளை இந்தியாவை நோக்கி உருவாக்கினார்கள். இப் பாதைமேல் வியாபாரிகள் என்ன, சன்னியாசிகள் என்ன கொள்ளைக்காரர்களதான் என்ன, என மானிடத்தின் பிரதிநிதிகள் மிகக் கவனமாக ஊர்வலம் சென்றனர்.

கவனம் தேவை ஏனெனில் இதில் சென்று மீண்டவர்களைவிடவும் மாண்டு மடிந்தவர்களதான் ஏராளம். அரசனை பகைத்துக் கொண்டவர்களும் ஏன்? வீட்டில் கோபித்துக் கொண்டு கிளம்பியவர்களுக்கும்கூட அக காலங்களில் இது ஒரு விமோசனப் பாதையாக அமைந்திருக்கும் என்றுதான் நினைக்கிறேன். Fahian, Ibin Batuta, 

Silk RouteThe ancient silkroutes : pagent of Ideas and silks; invasion and scientific discovery; and passage of forgotten times; were all parading on the route. One of the most celebrated pilgrim was Bhodidharma (600 BC ?) travelled from Kancheepuram, the then known intellectual capital of the world to China and established Zen Bhudhism. He is revered as the first patriach. His painting is now a cultural treasure of Japan. He is affectionately known as "the wall gazing brahmin from Kanchi".  

Marcopolo Knox போனற பிசித்திபெற்ற யாத்திரீகர்கள்கள் பலர் பாரதத்தின் விசித்திரமான கவர்ச்சி பற்றிய பல குறிப்பு க்களை விட்டுச் சென்றிருக்கிர்கள். அதற்கு இப்பொழுது என்ன வந்தது என்கிறீர்களா? சொல்கிறேன்.

முன்பெல்லாம் பட்டுப் பாதையில் பட்டுத்துணிக்கும் குறுமிளகுக்கும் வியாபாரிகள் அலைந்தார்கள். சன்யாசிகள் பரமாத்மாவைக் கண்டுபிடிக்க அடம்பிடித்துக் கொண்டு திரிந்தார்கள். முப்பது நாற்பது வருடங்களாக மேல்நாட்டு இளைஞர்கள் யுவதிகள் உண்மையையும் கஞ்சாவையும் தேடி இன்றுவரை இந்தியாவை நாடி வருகிர்கள். இவர்களில் யோகம் §ஐ¡திடம் பரதம் சங்கீதம் எனப் படிக்கறவர்களும் உண்டு. தோளில் ஒரு §ஐ¡ல்னாப் பையுடன் சைக்கிள்களில் வித்துவான்கள் சாஸதிரிகளை தேடி செல்லும் இவர்களுக்கு சென்னையின் சந்து பொந்துகள் அத்துபடி. பல வசதிகளையும் பாதுகாப்பையும் மறந்து வெயிலும் மழையிலும் காய்ந்து கறுத்து அலைகிர்கள். இவர்களைச் சுலபமாகப் பரதேசிகளாக்குவதுதான் பாரதத்தின் தனித்துவமான வசீகரம்.

இதுதவிர புதிதாக புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் வான் பாதையில் இதே தடத்தில் ஊர்வலமாகின்றனர். குறிப்பாக மார்கழிமாதம் தேசாந்திரம் செல்லும் இந்தப் பறவையினங்கள் சென்னையில் தரைதட்டுகின்றன. எங்கள் நோக்கம் கொஞ்சம் பட்டுதுணி கொஞ்சம் பரமாத்மா கொஞ்சம் கலை என்ற கலவை. அரிசிப் பொரியுடன் திருவாருரும் என்பது போல என்று வைத்துக் கொள்ளுங்களேன். பாதுகாப்பையும் வசதியையும் முழுவதும் கைவிடாத மிருதுவான யாத்திரை. எங்களை பரதேசிகளாக்குவதில் பாரதம் தோல்வியுறும் என்றே நினைக்கிறேன்.

எனது இந்தக் குறிப்புக்கள் பாஹியனது போன்று வருங்காலத்தில் சரித்திர முக்கியத்வம் பெறலாம் என்ற நம்பிக்கை எனக்கில்லை. இப் பட்டுப் பாதையில் தட்டுப்பட்ட சில விஷயங்களைச் சொல்கிறேன்- அவ்வளவுதான். கதைசொல்வதும் அதைக் கேட்பதும் மனித குலத்தின் ஒரு அடிப்படையான தேவை எனபதை நீங்கள் ஆமோதிப்பீர்களோ என்னவோ ஆனாலும் இதன் காரணமாகவே அபத்தமான படங்களைக்கூட சகித்துக் கொண்டு பார்க்கி§ம் என்பது என் அனுமானம். இனி யாத்திரையை ஆரம்பிப்போமா?

இப்ப எங்கே இருக்கிறேன் என்ல் காப்பிக்கு முன்றுதானத்தில் விலை நிர்ணயிக்கும் ஹோட்டல் ஒன்றில இருக்கிறேன். யாருடன் இருக்கிறேன் என்ல் லண்டன் மாநகர் தமிழ் சமுகத்தின் முக்கியஸதர் ஒருவருடன். லண்டனில் ஏஆர் ரகுமான் இசைநிகழ்ச்சிக்காக ஓரே ஒரு இரவுக்கு மட்டும் ஒரு கோடி ருபாய் கேட்கிர்கள் என்று நண்பர் மிகவும் சலித்துக் கொண்டார். எனக்கு முன்று முறை தலை சுற்றியது. மன்னிக்கவும், வாய் தவறிவிட்டது. ஒரு முறைதான் தலை சுற்றியது ஆனால் முன்று காரணங்களுக்காகச் சுற்றியது என கொஞ்சம் சுணக்கமாகத்தான் விளங்கியது. முதலாவதாக ஒரு இளைஞன் என்னதான் பெரிய கொம்பனாக இருந்தாலும் ஒரேயரு இரவில் ஒரு சராசரி ஐரோப்பிய உத்தியோகத்தரின் ஒரு வருட ஊதியத்தை பெறும் அதிசயம்.

கோடியில் பொதிந்துள்ள சைபர்களை நீங்கள் ஐம்பதால் வகுத்தாலும் நு¡ல் வகுத்தாலும் கூட லொட்டோ கணக்கில்தான் வருகிறது. இரண்டாவது விஷயம் நண்பர் என்னுடன் பல்கலைக் கழக மாணவனாக ஒரே போர்டிங் ஹவுஸசில்தான் வாழ்ந்தவர். காந்தி லொட்ஜில் சாப்பிடும் பொழுதும் என் போலவே இரண்டாவது போன்டா ஓடர் செய்வதைப்பற்றி தீவிரமான பொருளாராரச் சிந்தனையில் ஈடுபடும் வர்க்கம்தான். அக்காலத்திற்குப் பின் இதுதான் எங்கள் முதல் சந்திப்பு. இவ்வளவு அனாயாசமாக இந்தத் தொகையை நண்பர் குறிப்பிட்டது மட்டுமல்லாமல் அதை கைகழுவிவிடாமல் மேற்கொண்டு சிந்தித்துக் கொண்டிருந்ததுதான் மெலிதான ஆச்சரியம்.

முன்வது திகைப்பு இம்மாதிரியான உச்ச நிகழ்ச்சிகள் ஒரு நகரில் மட்டும் வருடத்திற்கு பல முறை வெற்றிகரமாக நடைபெறுகின்றன. இப்படியெல்லாம் சாத்தியமாவதற்கு புலம் பெயர்ந்தவர்கள் செலவழிக்கத் தயாராக இருப்பது தான் அடுத்த ஆச்சர்யம். இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் இவற்றிற்கு அதிகம் முக்கியத்வம் கொடுக்காமல் தங்கள் பாட்டுக்கு தங்கள் வேலையை பார்த்துக் கொண்டு செல்கையில் இந் நிகழ்ச்சிகளை நம்மவர்கள் மிகவும் சிரமப்பட்டு ஒழுங்கு செய்வதைப் பாராட்டுவதா இல்லையா என்பதைப் பற்றி நான் இன்னும் தீரமானிக்க முடியாமல் இருக்கிறேன்.

மேல் நாடடிலுள்ள பெரிய ஹோட்டல்களுக்கும் அவற்றின் சுற்றுப்புறங்களுக்கும் இந்திய ஹோட்டல்களைச் சுற்றி இருப்பதைப் போன்ற மானசீகக் கோடு - யோசனையுடன் கடக்க வேண்டிய ஒரு இடைவெளி - இருப்பதில்லை. இங்கு பெரிய ஹோட்டல் படியைத்தாண்ட சில தகமைகள் வேண்டப்படுகின்றன. இந்த ஹோட்டல் படியைவிட்டு இறங்கியவுடனேயே வறுமைக் கோட்டுக்கு கொஞ்சம் முன்னே கொஞ்சம் பின்னே உள்ள ஒரு பிரதேசத்தில் பிரவேசிப்பதை உணர முடிந்தது. வாடகையை எதிர் நோக்கி தவம் கிடந்த கார் ஓட்டுனர்கள் என்னை சுலபமான வேட்டையாக கருதி குவியத் தொடங்கினார்கள். சமயத்தில் நாயுடன் சேர்ந்து வேட்டையாடவும் சமயத்தில் முயலுடன் தப்பி ஓடவும் தெரிந்திருந்தால் வெகு விரைவில் மற்ற¦ரு இந்தியாவில் இறங்கிச் சமாளிக்க முடிந்தது. இரு வேறு உலகங்களுக்கிடையில் சென்னை வாழ்ந்து கொண்டிருக்கிறது.

நண்பர் அவ்வை நடராஜன் இதுபற்றி ஏதோ கூறினார். அவசியம் சொலகிறேன். புலம் பெயர்ந்தவர்கள் சந்திப்புமடம் - ஒரு பிரசித்தி பெற்ற ஹோட்டல என்று வைத்துக் கொள்ளுங்களேன். சினிமாவுக்கு கஸடியூம் டிசைன் செய்ம் ஒரு தையல்காரரை நண்பர் இங்குதான் சந்தித்திருக்கிர். என்ன சங்கதி கோடம் பாக்கத்தைவிட்டு இந்தப் பக்கம்? ஒரு சிறீலங்கா பார்டிக்கு முந்நு¡று ஆட்ட கஸடியூம்கள் தயாரிக்க ஆர்டர் எடுக்க வந்ததாக சொன்னாராம்.

முந்நூறு என்ல் சராசரரியாக மணிரத்தினம் படத்தில் கிழவிகழும் குமரிகளும் ஆடும் ஒரு காட்சிக்கு தாங்கும். வஞ்சிக் கோட்டை வாலிபன் போன்ற பழைய படமென்ல் ஒரு படத்துக்குக்கூடத் தாக்குப்பிடிக்கும். சச்சு பாப்பாவுக்கும் சிலுக்கு அம்மாவுக்கும் அளவெடுத்துத் தைத்தவர்கள் கெதி இப்படியாயிற்று. தமிழ் பட உலகில் இப்போ தேக்கம். அதனால் அதிகம் தமிழ்ப் படம் எடுப்பதில்லை என்ற தகவலை சொன்னாராம் தையல்காரர். பரவாயில்லையே - தமிழ் பட உலகின் உதிரி தொழில்துறைக்குக்கூட சமயத்தில் முட்டுக் கொடுக்கிறம்.

தியாகராஐ நகர் பிரசித்தி பெற்ற புடவைக் கடை ஒன்றில் ஓரமாக ஒரு வாங்கில் சிவனே என்று இருக்கிறேன். இருந்தபடி வரும் போகும் புடவைகளின் ஊர்வலத்தை கவனிக்கிறேன் - சும்மாதான். எப்படி வந்தேனா? நல்ல கேள்வி - பட்டுப்பாதையின் முச்சந்தியே இதுதானே. எனது இடப்பாகத்தை அதாவது று¢ததரெ ¤¡ல் ஐ புடவை பார்க்க உள்ளே அனுப்பிவிட்டுத்தான் இந்த வைபோகம். அந்தக் கூட்டத்திலும் எப்படியோ என்னை அடையாளம் கண்டு காப்பி கலர் கேட்டு உபசரித்தார்கள். காப்பிக்காக நான் யாழ்பாணத்திற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். எங்கள் அடையாளம் இசைவிழாக்களிலும், ஆட்டோ ஓட்டுனர்களிடமும், புத்தகக் கடைகளிலும், இன்னும் பல்வேறு வியாபாரங்களிலும் சுலபமாக நாணயமாகிறது.
இந்த மதிப்பிற்கு ஒரு விலையும் உண்டு.

அதை லாகவகமாகக் கையாளுவதில்தான் உஷார் தேவை. என்லும் இரவல் தாய் நாட்டுடன் எமது தேன்நிலவு முற்றுப் பெற்றுவிட்டது. உறவில் பல நெருடல்கள் இருப்பதை தனிப்பட்ட சம்பாஷணைகள் முலமும் இலக்கிய வட்டங்களின் முலமும் தெரிய வந்தது. மிகுந்த செல்வாக்குள்ள பத்திரிகை ஸதாபனங்கள் எமக்குப் பாதகமான விளைவுகளை தரக்கூடிய கொள்கைகளை தொடர்ச்சியாக கடைப்பிடிக்கின்றன. உத்தியோகம் வசதிகளை நாடி வெளிநாடு செல்லும் தமிழ்நாட்டு பிராமணர்களைப் போன்றவர்கள்தான் நாம் என்ற பிம்பம் வேறு உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதற்கெல்லாம் பதில் சொல்வதானால் மேலும் புதிய சிக்கல்களதான் ஏற்படும். புலம் பெயர்ந்தவர்களை மட்டும் குறிக்கும் பிம்பம் என்பதாக மட்டும் இருந்தால் பரவாயில்லை. ஆனால் ஈழத்திலிருப்பவர்களையும் இது பாதிக்காது என்பதில் என்ன நிச்சயம். இன உணர்வுக்கு வித்திட்ட பெரியார் கட்சியில் கூட இந்த கருத்து பரவியிருப்பதுதான் ஆச்சர்யம். முக்கியமாக எமது புது பணப் புழக்கத்திற்கு நாங்கள வடிகால்கள் அவர்களுக்கு அவ்வளவு தோதுப் படவில்லை. இப்படியே போனால் நிகழ்ச்சி தரைதட்டும். உறவுகள் பற்றி இப்போதைக்கு விட்டுவிடுவோம்.

என்ன சொல்ல வருகிறேன் என்ப¨த் சமயத்தில் மறந்துவிடுகிறேன். பாருங்கள் - சென்¨யில் ஆட்டோவில் பயணித்தால் கடவுளை நம்புவது தவிர வேறு வழியில்லை. றவுண்டானாவில் (ருஒஉநடாறஒஉத) ஈரமணல் ஏற்றிக் கொண்டு அதிவேகமாக வரும் லொறியை ஒரு செக்கன் வித்தியாசத்தில் மிக ஸடைலாக தவிர்க்கிர் ஓட்டுனர். இருக்கையின் நுனியிலிருந்து சிறிது எம்பிச் சவாலைச் சமாளித்தார். இப்போ ஒரு வெற்றிப் புன்னகையுடன் கால் சராயை இழுத்துவிட்டு வெளியில் காறித் துப்புகிர். சீட்டில் கொஞ்சம் இப்படி அப்படி அட்ஐஸட் பண்ணி சிக்காராக இருக்கிர். தொடர்ந்து வண்டியை இன்னும் வேகமாக்கி குறுக்கே வந்த சைக்கிள்காரரை யோவ் சாவுக்கிராக்கி வூட்டிலை சொலலிப்புட்டு வந்தியா என்று திட்டியபடி வேகம் தணியாமல் செல்கிர்.

இப்படியான இக்கட்டான தருணங்களில் ( அதாவது ஒரு சவாரியில் சுமார் பத்து முறை) கண்ணை முடிக் கொண்டு வருவதை எதிர் கொள்ளத் தயாராகிறேன். பின் கண்ணைத் திறந்து பெருமுச்சுவிட்டுகிறேன். மீண்டும் மறுபடி மறுபடி இப்படியே கண்ணை முடித்திறக்கிறேன். ஆட்டோவில் பயணிப்பதற்கும் பயிற்ச்சி தேவை. சில நாட்களும் பல சவாரிகளுக்கும் பின்பு கடவுளுடன் ஆட்டோ ஓட்டுனரின் சாமரத்தியத்திலும் நம்பிக்கை ஏற்படுகிறது. பயிற்ச்சிக்குப் பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக வெளியே நகரத்தை வேடிக்கை பார்க்க முடிகிறது.

ஆட்டோதான் தமிழக அரசின் செலவில்லாத விளம்பரப் பலகை. இப்போதைய கட்டாயச் சுலோகம் பெண்ணிற்கு திருமண வயது 21, பிரவசத்திற்கு இலவசம, காவல் இலக்கம் 100. இத்துடன் கலைஞர் பெரியார் அண்ணா ஆகியோரின் பொன் மொழிகள். இவையெல்லாம் ஒரு குறிப்பட்ட ஸடைலில் நேர்தியாக எழுதப்படுகின்றன. இத்துடன் ஓட்டுனரின் நம்பிக்கைகளை பிரதிபலிக்கும் அடையாளங்களாக மஹான்கள் நட்ச்சத்திரங்களின் படங்கள் போன்றவை ஒட்டப்பட்டிருக்கின்றன.

சிங்காரச் சென்னை முழுவதும் ஒரு மெலிதான மாயத்திரை கவிந்திருக்கிறது. இத்திரை தன் நிழல்களை எங்கும் எதிலும் பதித்துக் கொண்டிருக்கிறது. மதில்கள் கட்டணக் கழிப்பறைச் சுவர்கள் கட்டணமில்லாத கழிப்பறைச் சுவர்கள ( கவனிக்க/இரண்டிலும் ஒரேயளவு சுகந்தம்தான் வீசுகிறது) விளக்குக் கம்பங்கள் குப்பைத்தொட்டிகள் தோறும் வண்ண வண்ண சினிமா அரசியல் சுவரொட்டிகள்.

இவை புதிது புதிதாக இரவிரவாக ஒட்டப் படுகின்றன். சினிமா மோகத்தின் நிழல் கவியாத இடமே இல்லை. தின இதழ்கள் வார இலக்கியச் சஞ்சிகைகள் யாவற்றிலும் சினிமாவும் அத்துடன் இணை பிரியாத தமிழ் நாட்டு அரசியலும். சினிமாவிலும், தொடர்ந்து அரசியலிலும் சரித்திரம் படைத்த நாயக நாயகியரை பற்றி கர்ண பரம்பரைக் கதைகள் குட்டிக் கதைகள் புராணங்கள் உலாவும் நகரம்.

இது விழித்துக் கொண்டு கனவு காண்பவர்கள் நகரம். கண்ணையும் காதுகளையும் முடினாலும் சினிமா பிம்பங்கள்தான் முட்டிமோதுகின்றன. முச்சு முட்டுகிறது. இப்போதைக்கு சென்னையை விட்டு வெளியேறுவோம்.f Rajni Kanth(Pics: Posters dominate this dream weavers city: Faces may change over time, but the phenomenon of a super hero dominating the social political & cultural life of the people goes on fueled by a streak of fanatical devotion hard to explain. Kodambakkam is the prime 'Kannavu Thozhitchalai'. But the magazines are not far behind. சூரியனை உற்றுப்பார்த்தே குருடானவர்கள் ஏராளம். பகுத்தறிவு என்னும் ஒளியில் குருடானவர்கள் கோடிக்கணக்கு)

பல வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டு கோவில் ஒன்றில் எனக்கு ஏற்பட்ட ஒரு சம்பவத்தை சொல்கிறேன். பாருங்கோ அன்றைக்கு நடந்தது என்னென்ல்,/ இப்படித்தான் வெயில் கொழுத்தும் நாளில் / எப்படியோ எத்துப்பட்டு தெத்துப்பட்டு / எங்கேயோ ஒரு முலையிலுள்ள / கோவில் து¡ணில் சாய்ந்து கொண்டிருக்கிறேன். கொஞ்சம் முன்னால் கோவில் குட்டியானை. திருநீற்றுப் பூச்சுடன் மங்களமாக நிற்கிறது. எங்களுக்குக் கேட்காத ஏதோ ஒரு சங்கீதத்திற்கு ஏற்ப ஐதி பிசகாமல் அது அலுக்காமல் ஆடி ஆடிக் கொண்டிருக்கிறது. மிகநாகரீகமாகவே தென்னோலையை ஒரு காலின் கீழ் அமுக்கிக் கொண்டு தும்பிக்கையால் இழுத்து இழுத்து சிறிதாக்கிச் சத்தத்துடன் சப்பிக் கொண்டிருந்தது. நர்த்தன கணபதியை பார்ப்பது போன்ற நிறைவு ஏற்படவே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். Gopuram( படம: யானையும் குளமும் கோபுரமும். ஒரு மனநிறைவான காட்சி படம். நன்றி சாந்தால் பூலிஞ்சர்)

தமிழ் நாட்டுக் கோவில் சூழலில் காலப் பெருவெளியை கடக்கும் தன்மை இயல்பாக ஏற்பட்டுவிடுகிறது. அதோ தெரிகிறதே அந்த பாசிபிடித்த பச்சைக் குளத்திற்குப் பெயர் புஷகரணியாக இருக்கலாம். அல்லது அது போலவே வேறு ஏதோ ஒரு பெயர். இந்தத் தீர்த்தம்தான் ஒரு மாமுனிவரின் சாபம் நீக்கியது என்ற ஐதீகம் எல்லா பெரிய கோவில் தீர்தங்களுக்கும் ஒவ்வொரு முறையில் ஏற்பாடாகி இருக்கிறது. எங்கு பாவம் செய்தாலும் காசி கங்கையில் ஸநானம் செய்தால் தொலைந்து போகும். ஆனால் காசியில் பாவம் செய்தால்?

அதைக் கழுவ கும்பகோணம் வந்துதான் ஆகவேண்டும். இந்த கும்பேஸவரர் ஆலய பெரிய குளத்தில் தான் ( மகாமக தீர்த்தம்) தீர்த்தமாட வேண்டும் என்பது ஒரு நம்பிக்கை. கும்பம் எனபது குடம். பிரளயகாலத்தில் (பேருழி) பிரமனின் வேண்டுகோள்ப் படி இறைவன் கொடுத்த அமுத கலசம் வந்து தங்கிய தலம் இது.

உயிரினங்களின் விதைகள் சேமிக்கப் பட்ட கும்பம். ஊழியின் பின்னர் இந்த அமுதசரோருகத்திலிருந்துதான் மறுபடி உலகம் தாபிக்கப்பட்டது என்கிறது குடந்தைத் தலபுராணம். டீநெ¦ றாநக, றாசகஉப சஒபய என எப்படிச் சொன்னாலும் புராணத்தின் கவர்ச்சி விஞ்ஞான வியாக்யானத்தில் வராது. இங்கு குறிப்பிட்டது ஒரு அவசரச் சுருக்கம். நோவாவின் படகுக் (நுஒவாஸ ரைக ) கதைக்கும் இதற்கும் நிறைய ஒற்றுமை இருந்தாலும் கதை செல்லும் கவர்ச்சிக்கு இதை விஞ்சமுடியாது. Temple(படம: சிதம்பரம் பெரிய கோவிலும் சிவகங்கைத் தீர்த்தத்துறையும்.)

கோவில் தூணிலுள்ள ஒரு சிற்பத்தைப் பார்தது லாவகமாக ஆயிரம் வருடங்கள் பின்நோக்கிச் செல்ல முடிகிறது. இச் சந்நிதானங்களில் தான் நாயன்மார்கள் தேவாரம் அருளினார்கள். கும்பகோணத்தில் ஆமுதகலசம் தங்கினாலும், பிரளயகாலத்தில் இறைவனும் இறைவியும் ஒரு தோணியில் தங்கிய இடம் தோணிபுரம் எனப்படும் சீர்காழி. ஸ்ரீகாளி மக்கள் உச்சரிப்பில் காலப் போக்கில் இன்று சீர்காழியாக வழங்குகிறது.

தில்லையில் இறைவனுடன் நடனமாடித் தோற்ற காளி அங்கிருந்து விரட்டப்பட்டு இங்கு வந்து வழிபட்டு பின்னர் மன்னிக்கப் பட்டார் என்று ஒரு புராணம். இங்குள்ள பிரமம்தீர்த்த படிக்கடடுகளில்தான் திருஞானசம்பந்தருக்கு உமையவள் ஞானப்பாலு¡ட்டினார். தோடுடைய செவியன்என்ற தேவாரமும் அதன் பின்னணியும்தான் சமயத்துடனான எனது பிணைப்பில் முதலாவது முடிச்சு.

பால் வடியும் சம்பந்தக் குழந்தையையம் அருகில் பால்க் கிண்ணத்தையும் கண்டு வெகுண்ட தகப்பனார் அக்கிண்ணத்தை கோபத்துடன் வீசிஎறிந்தார். அது பட்டு மோதிய வடு இப்பொழுதும் இருக்கிறது என எதிரில் இருக்கும் உயர்ந்த கருங்கல் மதிற்சுவரிலுள்ள ஒரு வடுவைக் காட்டுகிர்கள். இதன் சரித்திர உண்மை சர்ச்சைக்குள்ளாகலாம் ஆனால் இப்படியான ஐதீகங்கள் எம்மில் ஏதோ அத்தியந்தமான ஒரு தொடர்பை உறுதிப்படுத்துவதும் ஒருவகை நிஐம். இங்குள்ள ஒரு அஹோர முர்த்தமான சட்டைநாதர் கவர்ச்சியான சன்னிதி.
tank(படம். திருக்கடவூர் அபிராமி அம்மன் கோவில் குளம். )

தமிழ் நாட்டு கோவில்களில் கடவுள் இருக்கிரோ இல்லையோ ஆனால் ஒரு தொன்மை நிச்சயம் இருக்கிறது என்று உணரமுடிகிறது. கல்லில் நேர்த்தியாக ஒரு காவியத்தை சொன்ன குலத்தின் வழித்தோன்றல்கள் இன்று கோவிலை துப்பரவாக வைத்திருக்கும் திறனையே இழந்துவிட்டார்கள். சனங்களை கியூவரிசையில் ஒழுங்கு படுத்த / தாறுமாக கருங்கற்களை தோண்டி / பைப்புகளும் கிதிகளும் போட்டு வசதிசெய்திருக்கிர்கள்.

கோபுரங்களை அழகுபடுத்துவாதற்காக வர்ணங்கள் அடித்திருக்கிர்கள். அத்துடன் அடுத்த சந்ததியினர் மறந்துவிடாமல் லைட் போட்டவர்கள் பெயின்ட் அடித்து திருப்பணி செய்த சிறுத்தொண்டர்கள் பெயர்களையும் பொறித்திருக்கிர்கள். ஆயிரங்கால் மண்டபங்களெங்கும் பாசிமணி பழம் பாக்கு கடைகள் வைத்திருக்கிர்கள்.

( அக்காலத்தைய தமிழர்களின் அழியாத படைப்பாற்றலுக்கு உன்னத உதாரணமாக திகழும் நடராஜ தத்துவம். ஐம்பொன்சிலைகள், கல்லில் சிலைகள், சொல்லில் கவிதைகள், நடனக் கலை, சொட்டு இயந்திரவியல் என எல்லா ஊடகங்களையும் சாதனங்களையும் மேவி அவற்றைப் போஷித்து இன்று வரை உலகத்தின் கவனத்தைக் கவரும் முரத்தம்.. நான் மிகைப்படக்கூறுவதாக நினைத்தால் Tao of Physics (Fritjof Capra) or Cosmic Dance(¨Ananda Commaraswamy) என்ற பத்தகங்களைப் பார்க்கவும்.Siva (Pic Courtesy Chantal Buolanger)

கோவில் மண்டபங்களில் யார் வேண்டுமானாலும் குந்திக் கொண்டிருக்கலாம். இதுவும் ஒரு ரகச் சுதந்திரம்தான். மேல் நாடுகளில் இப்படி 10 நிமிடங்களுக்கு மேல் காரியமில்லாமல் குந்தினால் ஏ மு¡ய £ ஹலெப யஒஉஏ என்று கவனத்தை ஈர்க்கிர்கள்.
கண்களை முடியபடி இப்படியான நு¡லிழை போல் அவிழும் சிந்தனை ஓட்டத்தில் திளைப்பது சுகமாக இருந்தது. மெதுவாகக் கண் அயர்ந்தேன் போலிருக்கிறது. ........ பிரயாணக் கதையை எங்கேயோ விட்டுவிட்டேன். கோபத்தில் கடிக்க வரும் அறணை கடிக்க வந்த இலக்கை நெருங்க முன்பே கடிக்க வந்த சங்கதியை மறந்து அசடாவது மாதிரி. இதுமாதிரித்தான் என்ன சொல்ல வந்தேன் எனபதைச் சமயத்தில் மறந்து விடுகிறேன்.

ஆம் யானைக்குட்டியை பார்த்துக் கொண்டிருந்தேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
sketch

(படம் - திருப்புவனம். கோவில். நன்றி- காந்தன் ஓவியம். அமைதியான கிராமீயச்சூழலில் ஆரவாரமில்லாத கோவில். பாடல் பெற்ற தலம். உதாரணத்திற்கு ஒரு பாடல் - வடிவேலிற் திரிசூலம் தோன்றும் தோன்றும் வளர்மதிமேல் இளமதியம் தோன்றும் தோன்றும் நாவுக்கரசர்)


காலில் ஏதோ மெதுவாக தொட்டுத் தொட்டு விலகுவது போன்ற உணர்வு. அவசரப்படாதீர்கள் யானைக்குட்டி என்னை எதுவும் செய்யவில்லை - இப்பவும் ஆடிக்கொண்டுதான் நின்றது. கண்ணைதிறந்து பார்த்தால் ஒரு யாத்திரீகர் கூட்டம் கோவிலை சேவித்துவிட்டு செல்லும் பொழுது போகிற போக்கில் என் காலையும் தொட்டு கும்பிட்டபடி சென்றுகொண்டிருந்தது.

என்ன செய்வது என்று தோன்றவில்லை. ஆந்திரக் கும்பல். தார்ப்பாச்சு முண்டாசு கட்டிய பத்து பன்னிரண்டு பேர். அவசரமாக துஒஉரிஸத றஉஸ இல் ஏறினார்கள். மிளகாய் சாகுபடி முடிந்த கையோடு ராமேஸவரம் யாத்திரைக்கு கிளம்பியிருக்கிர்கள்.

நல்ல காலம் பதிலுக்கு இவர்கள் என்னிடம் ஆசீர்வாதம் என்று எதையும் எதிர்பார்க்கவில்லை. இப்படியான இக்கட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனத் தெளிவாகு முன்னரே நெருக்கடி தீர்ந்துவிட்டது. இம் மக்களின் எளிமை மனச்சாட்சியை தொட்டது. பூசனிக்காய்த் திருடன் கள்ளச் சாமியாராக ஆரம்பித்து நிஐசாமியாராக மாறிய கதை உங்களுக்கும் ஞாபகம் வருகிறதல்லவா? கோவில் படிகளை தொட்டுக்கும்பிடும் வழக்கம் போல் இதுவும் ஒன்க இருக்கலாம். து¡ணில் சாய்ந்து அரைத் து¡க்கத்தில் இருப்பவனை நிஷடையிலிருக்கும் சாமியார் என நினைத்திருக்கிர்களோ என்னவோ.

இப்பொழுது மண்டபத்திலிருந்த இருவர் என்னை புது மரியா¨யுடன் பவ்வியமாக பார்த்தார்கள். ¨க்கெட்டிய து¡ரத்தில் ஒரு சாமியார் கிடைத்தால் சும்மாவிடமாட்டார்கள் என்பதை யுணர்ந்து உடுப்பியை நோக்கி நடையைக் கட்டினேன். ஒரு மயிரிழையில் எனது தொழில் (சாமியாராக) மாறும் வாய்ப்பு அன்று நழுவிவிட்டது எனபதை இப்பொழுது உணர்கிறேன்.

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home