"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Selected Writings Father Jegath Gaspar
1953-ம்ஆண்டு அக்டோபர் மாதம் அரசுக்கெதிராய் கலகம் உருவாக்க சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு பிடெல் காஸ்ட்ரோ ரூஸ் நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டிருந்தார். அவரது அன்றைய நீதிமன்ற முழக்கத்தின் ஓர் சிறு பகுதி இது:
ஆம், மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, பிடெல் காஸ்ட்ரோ, பேராயர் ரொமேரோ, பகத்சிங், வ.உ.சிதம்பரனார் போன்ற மனிதர்கள் இன்றும் மாமனிதர் களாகப் போற்றப்படு கின்றமைக்குக் காரணம் தாம் பிறந்த மண்ணின் மக்களது மாண்பினை தங்களுக்குள் தாங்கி, பின்வாங் காத போராளிகளாய், தளராத மன உறுதி யுடன் நின்று போராடினார்கள். தமது மக்களின் உரிமைகளையும், மதிப்பையும், சுய மாண்பையும் அபகரித்தவர்களுக்கெதிராய் கலகம் செய்தார்கள். சிலர் அறவழியிலும் சிலர் ஆயுதமேந்தியும் கலகம் செய்தார்கள். எவ்வழியாயினும் தம்மக்கள் மீது கொண்ட தீராத அன்பினால் உந்தப்பட்டே செய்தார்கள். எனவேதான் தமது மக்களின், பொது மானுடத்தின் மாண்பினை தாங்கி களம்நிற்கும் போராளிகளை கொன்றழிக்க முடியுமேயன்றி வெல்ல முடியாது. அவர்களை எச்சக்தியாலும் வெல்ல முடியாது- ஏனென்றால் அவர்கள் சுமந்து நிற்பது தங்களது தனிப்பட்ட மாண்பு, நம்பிக்கை, அபிலாஷைகளை மட்டுமல்ல - ஆயிரம், லட்சங்களிலான தம் மக்களின் மாண்பினையும், நம்பிக்கை களையும் அபிலாஷைகளையும். எப்போதோ படித்த ஒரு புத்தகம். புத்தகத் தலைப்பு, ""அறியப்படாத வீரனுக்காக''. பர் ற்ட்ங் மய்ந்ய்ர்ஜ்ய் நர்ப்க்ண்ங்ழ் இப்போது என் நூலகத்தில் அப்புத்தகம் இல்லை. எழுதிய ஆசிரியர் பெயரும் நினைவில் இல்லை. ஆனால் வியட்நாமில் விடுதலைப் போராளிகளுக்கெதிரான போரை நெறி செய்த தளபதிகளில் ஒருவரால் எழுதப்பட்டது. தான் எதிர்கொண்டு, சித்திரவதை செய்து தானே சுட்டுக்கொன்ற விடுதலை வீரன் ஒருவனிடம் உண்மையில் ராணுவத் தளபதியாகிய தனது மாண்பும் மேன்மையும் தோற்றுப்போன அனுபவத்தை மென்மையாகப் பதிவு செய்யும் புத்தகம். நான் படித்த மறக்க முடியாத புத்தகங்களில் இதுவும் ஒன்று. வியட்நாமிய விடுதலை வீரனொருவன் அமெரிக்கப் படையிடம் சிக்கிக் கொள்கிறான். உளவுப் பிரிவில் இயங்கிய முக்கியமான வீரன் அவன். உண்மைகள் நிறையத் தெரிந்தவன். நய மாகப் பேசி அவனை தம் வயப்படுத்த முயல்கி றார்கள். விடுதலை, இன்ப வாழ்க்கை என விரும் பும் எதானாலும் தருவதற்குத் தயாராயிருக்கிறார் கள். ஆனால் அந்த வீரனோ உறுதி யாக நிற்கிறான், விடு தலையை விற்க மறுக்கிறான். அவனை துப்பாக்கியால் அடிக்கிறார்கள். பற்கள் உடைந்து, உதடுகள் வீங்கி, இரத்தம் வழிகிறது. ""எப்படியிருக்கிறது உன் விடு தலை?'' என ஏளனமாய் கேட்கிறார்கள். அதற்கு அந்த வீரன் பதில் சொல் வான்: "வலிக்கிறது, ஆனால் நீங்கள் என்னை வெல்லவில்லை -வெல்லவும் முடியாது.'' அமெரிக்க ராணுவத் தினரின் கோபம் கிறுகிறுக் கிறது. அவனது கை, கால் விரல்களின் நகங்களை இரும்புக் குறடி கொண்டு இரத்தம் பீறிடப் பிடுங்கி விட்டு முன்னிலும் வக்கிர மாய் கேட்பார்கள் - ""இப்போ எப்படியிருக் கிறது உன் விடுதலை இலட்சியம்...?'' அப் போதும் அவன் பதில் சொல்வான்: ""வலி தாங்க முடியவில்லைதான்... ஆயி னும் இப்போதும் நீங்கள் என்னை வெல்லவில்லை, வெல்லவும் முடியாது''. ஆத்திரம் தலைக் கேற அவன் கால்களை அடித்தும் கைகளை திருகியும் உடைக்கிறார் கள். முகத்தில் எச்சில் உமிழ்கிறார்கள். துப்பாக்கியை அந்த வீரனின் தலைநோக்கி நீட்டியபடியே அமெரிக் கத் தளபதி பைத்தியம் தலைக் கேறியவனாய் கத்துவான் - ""நாயே... சாகப்போகிறாய்... இப் போதுகூட உன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள விருப்பமில் லையா?'' உச்ச வேதனையினூடே யும் முகம்மலர சாந்தம் வருவித்துக் கொண்டு அந்த வீரன் தன் இறுதி வார்த்தைகளாகச் சொல்வான். ""ஐயா... உங்களைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருக்கிறது. சில நொடிகளில் நான் கொல்லப்படுவேனென்பதும், மரணம் என் அருகில் நிற்கிறதென்பதும் எனக்கு நன்றாகவே தெரியும். ஆயினும் வெற்றி பெற்றவனாகவே நான் போகிறேன். என்னை நீங்கள் வெல்ல வில்லை. உயிர் பிரியும் வேளையிலும் என் இலட்சியத்தை நீங்கள் காட்டும் எச்சில் சுகங்களுக்காய் விற்பதாக இல்லை. என்னைச் சுடும் அக் கணத்தில் உங்கள் படுதோல்வி முழுமையாகும்'' என கூறிக் கொண்டே "சுடுக' என்கிறான். பைபிளில் இயேசுபெருமான் தன் சீடர்களுக்கு இவ்வாறு அறிவுறுத்து வார்: ""உயிரைக் கொல்ல முடியாமல் உடலை கொல்கிறவர்களுக்கு நீங்கள் அஞ்ச வேண்டாம்'' முரணாக இருக்கிறதெனக் குழம்புகிறீர்களா? உடல் செத்தால் உயிர் போய்விடு மென்பதுதானே உண்மை? உண்மை தான்... உடல் செத்தால் இதயம் நின்று, மூளை பட்டுப்போய் கண்கள் மூடும்தான். ஆனால் உண்மை, நீதி, உரிமை இலட்சியங்களுக்காய் நிற்கிறவர் களின் உயிர் சாகாவரம் பெற்றுவிடுகிறது. ஆம், நமது உணர்வுகளின் தூய்மையை எந்தக் கொம்பனாலும் அணுகவோ, அழிக்கவோ முடியாது. மே-04. முல்லைத்தீவு கடற்கரையில் தன் மக்களின் உரிமைகளைப் பறித்து நசுக்கிய சிங்களப் பேரினவாதத்திற்கெதிராய் தன் வாழ்வை அர்ப்பணித்து சுமார் நாற்பது ஆண்டு காலம் கலகம் செய்த வேலுப் பிள்ளை பிரபாகரன் தன் இளைய போராளி களுக்குச் சொன்ன செய்தியின் சாரமும் அதுதான் :
உண்மையில் உலக நாடுகளுக்கு விடுதலைப்புலிகள்மேல் கடந்த மூன்றாண்டுகளில் அதிக கோபம் வரக்காரணம் அவர்கள் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே தோற்று ராஜபக்சே வெற்றிபெற காரணமாக இருந்தது தான். ரணில் மிதவாதியாகவும் மேற்குலகப் பொருளாதார நலன்களின் நண்பராகவும் அறியப்படுகிறவர். ஆனால் ராஜபக்சே தேர்தலில் வெற்றிபெற புலிகள் காரணமாயிருந் தார்களென்ற குற்றச்சாட்டிற்கு யுத்தம் உச்சத்தில் இருந்த காலையில் பிரபாகரன் பதில் சொல்ல விழைந்திருக்கிறாரென்பதை முக்கியமானதாகவே கருதுகிறேன். |