| 
		கரும்புலிகளின் இரும்பொலிகள்“கரவாது உவந்தீயும் கண்ணன்னார்
 கண்ணும் இரவாமை கோடி யுறும்.”
 18 June 2006 
			
				அருகனின் “அநுபூதி” 
				என்னும் 173 பக்கங்கள் கொண்ட பல்தலைப்பு நூலில் இருந்து 
				பிரித்தெடுக்கப்பட்டு ஒவ்வொன்றாக இங்கே மீழ் வெளியீட்டுக்கா 
				தளத்துக்கு வழங்கப்படுகிறது. இத்தலைப்பு அதில் ஒன்று. 
 வாழச் சொல்லி வாழ்த்துச் சொல்வோர் பலருள்ள 
		இவ்வுலகில், வாழ்வைத் தந்து வாழச்சொல்லும் வள்ளல் அடிகளை வணக்கத் தோடு 
		வருடுகின்றேன்.
 வள்ளல்களை வாழ்த்த வந்துள்ள வெள்ளப் பெருமக்களை கள்ளமற்ற வணக்கத்துடன் 
		அருகன் என் வார்த்தைகளை எடுத்து இயம்ப முனைகிறேன்.
 
 எனது சிறுபிள்ளைத் தனமான சித்திரத்தில், சரித்திரத்தின் சத்திரத்தில் 
		நின்று சிந்திக்கும் பெரும் பாக்கியம் பரிசாகக்கிடைத்தது எனக்கு,
 
 தவறுகள் இருந்தால் தறித்தெடுத்து விறகாக்கி விடுங்கள்
 சிறப்புகள் இருந்தால் பறக்கும் பட்சிகளின் இறக்கை ஒலிக்கெதிராக உங்கள் 
		கரகொலிகளைக் கொட்டிக்காட்டுங்கள்.
 
 “அளப்பெரிய அற்புதமாம் தொழற்கரிய தூயவரின்
 களப்பெரிய புலிகளின் புயல்”
 
 அந்தப் புலிகளின் பலத்தை எழுத்தில் காட்டி விடும் அற்பத்தனம் எனக்கில்லை 
		என்றாலும் சொற்பமாவது சொல்லியாக வேண்டும் என்ற எனதுள்ளத்து அலைகளைச் சற்று 
		ஓடவிட முயற்சிக்கின்றேன்
 
 அவ்வளவுதான்!.
 
 “ஒடுக்கப்படும் சமுதாயங்களில் இருந்தே வரலாறு படைக்கும் சக்தி பெற்ற அபூர்வ 
		மனிதர்கள் பிறக்கிறார்கள். எமது சமுகத்திற் பிறந்த அந்த அபூர்வ 
		மனிதர்கள்தான் எமது மாவீரர்” இது தலைவர் அவர்களின் அற்புதமான 
		அபூர்வவார்த்தைகள்
 
 தனக்கெண்டு வாழாத பொதுமனிதரைக் கானும் காலம் மாறிவிட்டதோ என்று எண்னும் 
		போதில் தான் நமக்காகத் தமதுயிரைத் தரையிலிட்ட
 
 
 தனிப்பெரும் தவப்புதல்வரை தரணியிலே தங்கமாய் விளங்கும் தமிழீழந் தந்ததென்ற 
		பெருமை தோன்றிடும்
 
 “போகும் உயிரெனப் பொய்யெனப் புரிந்து
 தான்போர்க்களம் புகுவான் புலிவீரன்”
 இது உண்மை, நிச்சயமாக தனதுயிரைப் பறிக்கும் நாள் இதுவெனத் தெரிந்தே 
		கரும்புலிகள் ஈழத்திற்காய்த் தன்னைக் காணிக்கையாக்கினான்.
 
 “வேகுந்தீயில் வெந்துதான் சரியும் சரீரமெனச்
 சரித்திரம் படைப்பான் தமிழ்வீரன்”
 
 பிறக்கும் யாவரும் இறக்கத்தான் வேண்டும் என்பதுதான் இயற்கையின் நியதி.
 
 இறக்குந் திகதியை மறைத்தே வைப்பதுதான் இயற்கை மனிதனுக்கிட்ட வியாதி.
 
 அந்த வியாதிக்கே வீதியமைத்து காலன் கயிற்றைக் கையில் ஏந்திக் காணிக்கை 
		தந்தான் கரும்புலி.
 
 பிறந்த காலம் மறந்தாலும் மறக்கலாம். தாம் இறக்குங் காலத்திற்காய் 
		நேரங்கணித்து உச்சாகத்தோடு உறங்காமல் காத்திருப்பான் கலிகாலத்துக் 
		கரும்புலிவீரன். அதற்காய்த்தான் ஆரம்பத்திலேயே அந்தக் குறளை எடுத்துரைக்கத் 
		தோன்றியது.
 
 “கரவாது உவந்தீயும் கண்ணன்னார்
 கண்ணும் இரவாமை கோடி யுறும்.”
 ( 1061இரவச்சம் )
 
 எப்படித் தெரியுமோ தெரியவில்லை வள்ளுவனுக்கு தமிழ் ஈழவர் தக்கவிதமாய்ப் 
		புலிவீரரைப் பூஜிப்பார் என்பதற்காய் அன்றே பல குறளைப் புனைந்து 
		வைத்துள்ளான்.
 
 ஓரு பேச்சுக்காத்தான் கேட்கின்றேன் நாளை இறக்கப் போகிறோம் என்று எமக்குத் 
		தெரிந்து விட்டால் இன்று உமது தங்கச் சங்கிலியில் ஒன்றை எனக்குத் தானந் 
		தருவீரோ?
 
 தனக்கென்று துணைக்கு இப்பொருளில் எப்பொருளுக்காகவும் களப்புலிகள் பலிப் 
		புலிகளாகவில்லையே!
 
 கரும்புலிகளின் களப்பலிகளுக்கு எங்களின் கண்ணீர் மட்டும் தான் 
		காணிக்கையாகமுடியும்.
 
 கரும்புலிகளின் களப்பலிகளுக்கு தமிழீழத்தின் தலைக் கொடிதான் 
		அஞ்சலிகாட்டமுடியும்.
 
 கரும்புலிகளின் களப்பலிகளுக்கு சந்திகள் எங்கிலும் சந்தன மாலையால் தான் 
		சாமரம் வீசமுடியும்.
 
 கரும்புலிகள் கடவுளுக்குச் சமமானவர்கள் அவர்கள் கல்லறையில் வைக்கப்பட 
		வேண்டியவர்கள் அல்ல, காலையும் மாலையுங் கும்பிடப்பட வேண்டியவர்கள்.
 
 இத்தாலியரான ஒருவன், பிரான்ஸ் தேசத்து பேரரசனானான் ஐரோப்பியர்களுக்கு 
		மாவீரன் ஆனான் அவன் நெப்போலியன் பனாபட். 1819 மே 05ல் அவன் இறந்தான். அவனை 
		இன்றும் இந்த உலகத்திற்குத் தெரியும்.
 
 ஞாபகத்திலுமுண்டு
 
 ஈழத்தில் ஏராளமான நெப்போலியன்கள்- அங்கு நெருப்போடு போராடிக்கொண்டிருப்போih 
		எப்படி இந்த உலகம் ஞாபகப்படுத்தப் போகிறது.
 
 இன்று “பிடல்கஸ்றோ”வின் பதவி பலமாக இருக்கிறது
 
 அன்று சதியரங்கில் ||சேகுவெரா||வின் தலை போகாவிட்டால் சரித்திரத்தில் 
		இன்னும் பல சாகசங்கள் இடம் பெற்றிருக்கும்.
 
 தமிழ் ஈழத்தின் தலை காக்கவென்று எத்தனையோ அமைப்புக்கள் தம்மைத் 
		தயார்ப்படுத்தினர். தயார்படுத்தின அத்தனைபேரும் தடம்புரண்டு 
		தட்டுத்தடுமாறியதால் களைபுடுங்கப்பட்டனர்.
 
 சுயநலச் சுகத்திற்காய்த் தம்முயிரைக் காத்துக் கொள்ள சுருதிஇசைத்தனர். 
		பதவிகளும் பட்டங்களும் கட்டம் கட்டமாய் வருவது
 
 
 கண்டு தாங்கள் பண்போடுகட்டிக்காக்க வேண்டிய கொள்கையினைக் கொட்டிவிட்டுக் 
		கும்பிடு போட்டனர்.
 
 ஏமாளிகளாயும் கோமாளிகளாயும் தட்டிவிடப்பட்டனர்.
 
 தடம்புரண்ட தன்னலத் தப்பிற்கு பரிகாரத்திற்குப் பதிலாய்ப் பதவிகளைத் 
		தேடினர். அதிகாரமற்றப் பாராளுமன்றத்தின் அற்ப பதவிக்காய் அன்னையவளின் 
		பிள்ளைகளையே ஆணியடித்துக்கொல்லத் துணிந்தனர். அதிகாரமுள்ள அமைச்சர் பதவி 
		கூட அற்பமாகத்தான் பிச்சைபோடப்பட்டது அன்னைத்தமிழுக்காய். இதன் பிறகும் 
		சும்மாயிருப்பது சுமையாகியுள்ள அன்னைக்கு சவக்கிடங்கு தோண்டுவதற்கு 
		சமமானதென்பதனைத் திடமாகப்புரிந்துதான் விளையும் விளைச்சலில் முளைத்துள்ள 
		களைபிடுங்கி கரும்புலிகள் காட்டுவித்த களம் ஈழம் வெல்வது உறுதி என்பதை 
		திடமாக்கியது. இதில் கவலைக்குரிய விடையம் என்னவென்றால் களைகளின் பெயரில் பல 
		கதிர்கனும் அறுபட்டுப் போனதே!.
 
 தமிழீழத்தின் தன்னலத்திற்காய்த், தன்னலமற்றுத் தன்னுயிர் ஈந்த தமிழன் 
		யாராயினும் அவன் எந்த அமைப்பாயினும் அவனும் தியாக தீபமே!
 
 நாளைய மலர்விற்கு இன்றைய உதிர்வுகள் அவசியமாய் இருக்கிறது.
 மாலை கோர்க்கப் படவேண்டியிருக்கிற போது மல்லிகைப்பூக்கள் பறிக்கப் படத்தான் 
		வேண்டியிருக்கிறது.
 
 எங்கள் களுத்தில் மாலையாடுவதற்காக தங்கள் களுத்தை மல்லிகையாக்கிக் 
		கொண்டவர்கள்தான் கரும்புலி வீரர்கள்.
 
 மணங் கமழும் ஈழத்திற்காய்த் தம்மை நறுமணங்கமழும் வாசனைத்திரவியமாக்கிய 
		தீப்பிளம்புகள் எங்கள் கரும்பலி மாவீரர்.
 
 ஈழத்திருளை அகற்றி அகல் விளக்கேற்றத் தம்மைத் திரியாக்கிக் கொண்டவர்தான் 
		எங்கள் கரும்புலிவீரர்.
 
 கரும்புலிகள் காலத்தை வென்றவர்கள்.
 காவிய நாயகர்கள்.
 காற்றோடு காற்றாய்க் கலந்து, மூச்சோடு 
		முழுதாய்ப் பிணைந்து மக்கள் வாழ்க்கையில் கலந்து விட்டவர்கள். 
 அவர்கள் காலத்தை வென்றவர்கள்.
 
 ஒருவர் சுகத்தை இழக்கலாம்,
 சொத்தை இழக்கலாம்,
 
 சொந்தச் சோதரரை இழக்கலாம ,
 தந்தை தாயையும் இழக்கலாம் - ஆயினும்
 தன் ஊன்தாங்கும் உயிர்போகும் என்றால் யார் வருவார் பாரினிலே
 
 அதற்கு விதிவிலக்கானவர்கள்தான் கரும்புலிகள்.
 
 “அதிக உணவுண்டு குண்டாகி உடல்வளர்ப்போர்
 ஆயிரம் பேர் அது கண்டு சாவோரே ஈனர்
 
 அகதி நிலைகண்டு குண்டோடு உடல் தாங்கி
 சாகினும் போர் கண்டு வாழ்வோரே கரும்புலி வீரர்”
 
 மகாகவியின் தாண்டவம் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது
 
 “அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் -அதை
 அங்கொரு காட்டிடை பொந்திடை வைத்தேன்
 வெந்து தணிந்தது காடு - தழல்
 வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ
 தத்தரிகிட தத்தரிகிட தத்தோம்!”
 
 இது மிகப்பொருத்தமாக, எமது ஈழச் சிறு பிள்ளைக்குக் கூடப் பொருந்தும் 
		பெருங்காட்டைஅழிப்பதற்கு தணல்த்தீயைக் கொட்டவேண்டிய அவசியமெதுக்கு ஒரு சிறு 
		துளி தணல் போதாதோ?
 
 அதுபோல சிங்களவரை அழிப்பதுதான் தமிழர்களின் குறிக்கோள் என்றால் 
		விடுதலைப்புலிகளின் படைபலம் தேவையே இல்லை, ஒரு சிறிய கரும்புலி வீரன் 
		மட்டும் போதும் இலங்கை முழுவதையும் தமிழீழமாக்கி விடலாம்
 
 அதுவல்ல தமிழர்களுக்குத் தேவை எமது தேசத்தை எம்மிடம் கொடுத்து விட்டால் அது 
		போதும்
 
 தமிழர்களுக்கென்று ஒருதேசம் அங்கே
 தாய் மொழியாம் தமிழ் திடமாய்ப் பேசும்- அது ஈழம் இதுவே நாம் கேட்பது.
 
 அதுவும் இல்லாத ஒன்றைக் கேட்பதோ அல்லது உரியவரிடம் தட்டிப் பறிப்பதோ 
		நோக்கமல்ல. நாம் ஆண்ட எமது தேசத்தை எம்மிடமே திருப்பிக் கொடுத்து விடு. அது 
		போதும் அதைத்தானே கேட்கிறோம்.
 
 கொஞ்சம் வரலாற்றை முன்னோக்கிப் பார்க்க வேண்டிய கட்டத்தில் நிற்கின் றோம்
 
 1739ல் இருந்து தென்னிந்திய மன்னர்களால் பரிபாலிக்கப்பட்டு வந்தது கண்டி 
		இராஜ்ஜியம். அந்த வழியிலே இரஜாதி இராஜ சிங்கன் மன்னன் இறந்தபோதிலிருந்தே 
		ஆட்சியைப் பறிப்பதற்கான திட்டங்கள் சிங்களவரால் கையாளப்பட்டு வந்தது என்பது 
		வரலாற்று உண்மைகள்.
 
 இரஜாதி இராஜ சிங்கன் மன்னன் இறந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட சிங்களவர் 
		சூழ்ச்சி பலிக்காமல் மீண்டும் சிறீ விக்ரமஇராஜ சிங்கன் அரியணைக்கு வந்தான் 
		இது 1798 தொடக்கம் 1805வரை திடமாக இருந்தது இராஜசிங்கன் அரசு..
 
 அப்போது சிங்களவர், சிங்களவர் ஒருவரை அரியாசனம் ஏற்றுவதற்காக ஒன்றுகூடி ஒரு 
		தலைமையாளைத் தெரிந்தனர் அவர்பெயர் “பிலிமத்தலாவை” என்பவன். கடின முயற்சி 
		செய்தும் பலன் பெறாமல்ப் போனதால் பிரித்தானிய ஆட்சியின் உதவியுடனும் 
		முயற்சி செய்து தோல்வியைக்கண்ட போதிலும், நாடு முழுவதும் பிரித்தானியாவின் 
		அதிகாரத்திற்கு உட்பட்டுப் பின்னர் சுதந்திரத்தின் போது, பிரிந்திருந்த 
		இராஜ்சியங்களின் வரலாற்றை அழிந்து போகும் விதத்தில் ஒருகூரையின் கீழ் 
		இலங்கையினை விட்டுச் சென்றபோது பெரும்பாண்மை மக்கட் பலம் கொண்ட 
		சிங்களவரிடம் நாடு முழுவதும் ஒப்படைக்கப் பட்டதே முற்றிலும் உண்மை
 
 மொழி ரீதியிலும், இனரீதியிலும் சிங்களவர் காட்டிய வேற்றுமைகள் இன்றைய 
		கரும்புலிகளைத் தோற்றுவிக்கச் செய்தது. மூன்று பெரும் பிரிவுகளாக 
		ஆரம்பத்தில் இருந்த இலங்கையின் ஆளும் அரசுரிமை பெரும் பகுதி தமிழருக்கே 
		உரியதும், தமிழர்களே ஆண்டு வந்ததும் மறைக்கப்பட்ட உண்மைகள்
 
 பிரித்தானியரின் மீழுகையின் போதாவது இரு அரசுகளாக்கப்பட்டிருந்தால் அது 
		வரவேற்கக் கூடியதாக இருந்திருக்கும் அப்பேற்பட்ட பாதிப்பை ஏற்படுத்திய 
		பிரித்தானியா இப்போது கூட இதில் சிரத்தை காட்டாமல் இருப்பது 
		சினத்திற்குரியதே.
 
 ஆதிக்க வல்லரசின் அதிருப்தியான முடிவு இன்று ஏராளம் எம்முயிரினை இழந்து 
		வேதனைப்படும் சொந்தங்களைப் பார்க்கப் பொறுக்காமல் பலியாகும் மக்கள் புலி 
		வீரராயும், புலிவீரர் புடம் போடப்பட்டுத் தரையில் கரும்புலி வீரரெனவும் 
		கடலில் கடற் கரும்புலி வீரர் என்றும்
 
 பலம் பெற்றுத் தனக்கெனத் தாபிக்கத் துடிக்கும், தாய் மண்ணை மீட்கத் 
		துடிக்கும், தாகத்தவர்களானதுதான் நடைமுறையில் கண்டுவிட்ட நிஜங்கள்.
 
 வரலாறு கடந்து விட்டபோதிலும், கடந்த காலங்களைப்பார்த்தால் அங்கும் 
		தமிழர்களுக்கிருக்கும் சாதகத்தினை தட்டிப்பறித்துக் கொண்டே இருந்தனர் 
		சிங்களவர்.
 
 1978ற்கு முன்னர் இருந்த தேர்தல் முறையினால் தமக்கு பாதிப்பு ஏற்படும் எனத் 
		திட்டமறப்புரிந்து கொண்ட பெரும் பாண்மை சிங்களவர் அங்கும் தமக்குச் சாதகமான 
		சந்தர்ப்பங்களை ஏற்படுத்தினர்.
 
 அதாவது,
 
 1977 பொதுத் தேர்தலின் போது சிறீலங்கா சுதந்திரக் கட்சி.8 வேட்பாளர்களைப் 
		பெற்றிருந்தது மொத்த வாக்குகளில் 29.7வீதத்தையும்,ஐக்கிய தேசியக்கட்சி 140 
		வேட்பாளர்களைப் பெற்றபோது,50.9வாக்குகளும் பெற்றிருந்தது. இதில் முக்கிய 
		விடையம் என்னவென்றால் 6.4வீதமான வாக்குகளைப் பெற்ற தமிழர் விடுதலைக் 
		கூட்டணியினருக்கு 18 வேட்பாளர்களைக் கொண்ட காரணத்தால் எதிர்க் கட்சியாகுந் 
		தகுதி கிடைக்கப் பெற்றது. இந்த நிலையினைக் கண்டு திடம் இழந்த சிங்களவர் 
		அவசர அவசரமாக வீதாசார முறையைக்கையாளச் சட்டத்தை அமுல்ப்படுத்தி 
		தமிழர்களுக்கு இருக்கும் சாதகமான சட்டத்தையே சாய்த்துவிட்டனர் இனி எந்தக் 
		காரணத்தை வைத்துக் கொண்டும் தமிழர்கள் தலைநிமிர மாட்டார்கள் என்று 
		இருந்தபோதுதான் தமிழர்களின் தனிப் பெரும் பிரதிநிதி தமிழீழ விடுதலைப் 
		புலிகள் என்பதனை கரும்புலிகள் மூலம் உலகறியச் செய்தனர் தமிழர்.
 
 காலத்தின் கைவண்ணத்தில் கைகுலுக்காவிட்டால் புலிகள் எல்லாம் 
		கரும்புலிகளாகத் தமிழர் எல்லாம் புலிகளாவார்கள் என்பதனைத் திடமுறப் 
		புரிந்தது போல் பச்சைக் கொடி காட்டுகின்றனர் பச்சைக் கட்சிக்காரர் இன்று.
 
 உலகம் முழுதும் தமிழர் இருப்பதைச் சிரமமின்றிப் புரிந்து கொள்ளத் தமிழ் 
		இணையத்திலும் வானொலி தொலைக்காட்சி என்று இலங்கை அரசு செய்ய நினைக்காத, 
		செய்ய முடியாத தரத்திற்கு வளர்ந்து விருட்சமாகியிருக்கும் தமிழ், 
		தனிநாடாய்க் கொடுத்து விட்டால் தனி வல்லரசானாலும் ஆகும் என்ற ஐயத்தில் 
		ஐடியா வராமல் திகைத்துள்ளார் அம்மையார் சந்திரிக்கா பண்டார நாயக்கா.
 
 அரசியலிலும் சரி இராணுவத்திலும் சரி, ஆட்சி நடத்துவதில் தமிழர்கள் இன்றுவரை 
		கோளை ஆகிவிடவில்லைஎன்பதை தமிழீழக் கரும் புலிகள் உலகிற்கு கட்சிதமாகக் 
		கனியவைத்துக் காட்டியுள்ளார்கள்.
 
 “தமிழர் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்று ஒருகவிஞன் பாடினான்
 
 அதில் சிறுமாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறேன் உலகமெல்லாம் உள்ளதமிழர் 
		தலைநிமிர்வதற்கே தம் தலைகொடுத்தார் தமிழீழக் கரும்புலிகள் எனவே
 
 “ஈழத்தமிழர் என்று சொல்லடா தலை நிமிர்ந்து செல்லடா” என்பதுதான் சாலப் 
		பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
 
 ஓருமனிதன் சாகும் போதும் அவன் சுயநலமுடனே சிந்திப்பான் ஆனால் வாழும் 
		போதுகூட சுயநலமில்லாத ஒருமனிதன் உண்டென்றால் அவன் கரும்புலி ஒருவன்தான்.
 
 இன்று மலரும் மலர்ச்சிக்காக அன்றேதன் தன் உயிரை மறந்த மாவீரன் 
		கரும்புலிவீரன் தன்னுயிரைத் துச்சமென மதித்த அந்தச் சத்துரியனைத் தற்சமயம் 
		தமிழ்ச்சனம் மறந்தல் அச்சமயம் பூமியே புதைகுழிக்குள் போய் விட்டது 
		என்பதுதான் நிச்சயம்.
 
 “உதவி வரைத்தன்று உதவி உதவி
 செய்யப்பட்டார் சால்பின் வரைத்து”
 
 கரும்புலிகளின் உதவி என்பது அளவைப் பொறுத்ததல்ல அவர்களின் தன்னலமற்ற 
		பண்பைப் பொறுத்தது. அத்தகையோரை எத்தகைய சூழலிலும் சிரந்தாழ்த்துவதே 
		தமிழர்களின் நன்றிமறவாத் தன்மையினை திறந்து காட்டுவதாகும்.
 
 தமிழனாய்ப் பிறந்தது தனிப்nருமை என்றால் தமிழருக்குப் பெருமைதந்த 
		தவப்புதல்வரைப் பற்றி எழுதுந் தகுதியற்றவனுக்குக் கிடைத்த தனி ஒரு 
		சந்தர்ப்பத்தை தவப்பயனாகக் கருதுகிறேன். இந்த சந்தர்ப்பத்திற்குத் தரமிட்ட 
		தமிழரின் தொடர்புச் சாதனத்திற்கு (தமிழ்நெற் இணையத்தளம்) நன்றிகள்.
 
 கரும்புலிகளுக்காய் சிறு கவியிசைக்க ஆசைப்பட்டேன் கேளீர்.
 
 “தமிழீழத் தாரகையே- செந்
 தமிழீழத் தாரகையே
 
 சந்தத்தில் நானிசைத்தேன் -உன்
 அங்கத்தை நீ கொடுத்தாய்.
 சத்தியமாய்ச் சொல்கிறேன்
 சரித்திரத்தையே நீ யசைத்தாய்.
 
 கரும்புலியாக நீயிருந்தாய் -கரு
 மையாக நாநெடுத்துச் சிறு
 கவிதையாக்கிக் கொடுத்து விட்டேன்.
 
 பந்தமில்லா துன்னுறவை வாரி
 ஈழம் அணைத்ததனால் எம்
 சொத்தாய் நீ மாறிவிட்டாய்
 கடலில் கூட உன் வீரம் - மண்
 தரையில் கூட உன் தீரம்
 மறக்குமா மரணமட்டும் மாவீரா
 
 உலகமஞ்சும் முன்னைக் கண்டு - தாய்
 மண் கொஞ்சும் முனதடியைத் தொட்டு
 தமிழீழத்தில் நீயேதான் மலரு மொட்டு!!”
 
 இப்படித்தான் இசைக்க ஆசைப்படுகிறேன் அன்பன்.
 
 கரும்புலிகளின் இரும்பொலிகள் காலத்தைக் கடந்தும் இசைக்கக் கூடியன. கணக்கற்ற 
		கரும்புலிகளையும், தொகையற்ற தமிழ் உறவுகளையும், ஈழக் கொள்வனவுக்காய்க் 
		கூலியாய்க் கொடுத்தோம். இன்னும் போதவில்லையோ பெறுமதி!.
 
 தன்கொள்ளளவிலும் பார்க்கக் கொள்விலையை அதிகமாகக் கேட்டது காலம் 
		இருபத்திஐந்து வருடத்திற்கு மேலாய்க் குத்தகைக்குக் கேட்டது சடலங்களின் 
		உடலங்கள். அத்தனைக்கும் ஒத்துக் கொண்டது போல் இழந்து விட்ட ஈழத்திற்காய்க் 
		கழைந்து விட்ட உயிர்கள் தான் எத்தனை எத்தனையோ!!
 
 அத்தனைக்கும் ஆறுதல் சொல்வதற்காக அடிக்கடி ஈழத்தைத் தொட்டணைத்துச் சென்று 
		தூதுசெல்வது போல் கரும்புலிகளின் இரும்பொலிகள் பூமியில் கேட்டுக் கொள்ளும் 
		போதெல்லாம் பூகம்பம் போல் தத் தம் பூவுடல்களையெல்லாம் பேரிடி இடிக்கச் 
		செய்துதான் சிங்களப்படைகளின் பாடைகள் கட்டப்படுகிறது.
 
 “ஒரு கரும்புலி வீரனின் இரும்பொலிக்கு
 கதிகலங்கி நிற்கும் ஏராளம் சிங்களப் படைகளின் பெரும்பலி!
 பலிக்கஞ்சாப் புலிப்படைக்கு
 கூலிக் கஞ்சிக்காய்ப் படைநடத்திப் பலியாகும்
 பாவப்படைகள் பரிதாபத்திற்குரியவர்தான்!.”
 
 பூமியிலெல்லாம் புலிகளைப் புறந்தள்ளிவைக்கவே பறந்து திரிந்தும் 
		சந்திரிக்காவின் சாமர்த்தியம் சந்தையில் விற்கப்படும் சூத்தைக் 
		கத்தரிக்காய் போலானது. செப்டம்பர் 11ன் சத்தத்திற்கும் சம்மந்தமில்லாத 
		வெப்பத்திற்கும் தொடர்பை ஏற்படுத்தினார் சந்திரிக்கா அம்மையார். 
		கூலிப்படைகளை வைத்துக்கொண்டு போலி முரசு கொட்டிக் கொண்டிருந்தார் முடிவு- 
		பொம்மலாட்டம் போல் போய்முடிந்தது.
 
 பலம் மிக்கப் படைகள் கூட சில திகதிகள் வருவதுகண்டு தம் தலைகாக்க தட்டுத் 
		தடுமாறும் படிசெய்து விட்டனர் கரும்புலிகளின் கட்சிதமான செய்கைகள்.
 
 “கரும்புலிகள் என்றதுமே சிங்களத்தில் பெரும் பலிகள்” என்ற பழமொழி 
		பின்னாளில் வந்தாலும் அது வியப்பதற்கில்லை. அந்த அளவிற்குப் படைகளின் 
		பலத்தைப் புடம் போட்டுவைத்துவிட்ட அற்புதத் திறமை கரும்புலிகளுடைய அளப் 
		பெரிய மகிமையே!
 
 “இரவும் ஒருநாள் விடியும் அதனால் எழுந்திடுவாய் தோழா (தமிழா)
 புயலும் புலியும் அழுவது இல்லை புறப்படுவாய் தோழா (தமிழா)
 சாவினைக் கண்டு தைரியம் இழந்தால் தாயகம் நமக் கேது”
 
 இது ஒரு தேசத்துத் தூரிகை
 
 ஆரம்பத்தில் தலைப்புச் சொன்னேன் “கரும்புலிகளின் இரும்பொலிகள்” என்று அது 
		வேறொன்றுமல்ல தமிழர்களின் சிறை விலங்குகளின் சிதறொலிகள்தான்
 
 அதற்காகப் பயன்படுத்தும் பலமிக்க ஆயுதம் எது தெரியுமா தமிழர்களின் 
		தாற்பரியச் சித்தாந்தம் தான்!
 அது வேத மந்திரம்!
 தமிழர்களின் இதயத்தில் முழங்கும் முரசொலி
 தாயகத்தின் சேய்களின் தார்மீக மந்திரம்
 தமிழர்களின் சோர்விற்கு சோறு போடும் மந்திரம்
 
 தமிழ்ப் புலிகளின் போர்மங்களகீதம்
 அது…
 
 தமிழர்களின் தாகம் தமிழ் ஈழத் தாயகம்.
 
 |