Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home   > Tamil National ForumArugan - Italy > குற்றச்சாட்டும் பாராட்டும்

Tamil National Forum
TAMIL NATIONAL FORUM
Selected Writings
- அருகன் (இத்தாலி)

குற்றச்சாட்டும் பாராட்டும்

1 May 2006
 


பாகம் ஒன்று

�என் எண்ணங்களுக்குப் பசியெடுக்கிறது � அவை
என் எழுத்துக்களையே உணவாய்க்கேட்கிறது�

ஒரு குரல் இப்படி ஆதங்கிக்கிறது,

�நான் விழிகளைக் களைப்பாற்றுவதற்கு இமைகளைச் சற்றே மூடுகிறேன்,
அதனை நீங்கள் தூக்கம் என்றீர்கள், நான் தூங்கிக் கொள்வதற்காய்க்
கண்களை மூடுகிறேன் அதனை மரணம் என்றீர்கள்.�

இன்றைய உலகில்: மனிதாபிமானம், மனிதன், வாழ்க்கை இவை ஒன்றுக்கொன்று தொடர்பற்ற நிலையில் சென்று கொண்டிருக்கிறது. தன்னுடைய கலை, கலாசாரம், மொழி, பாரம்பரியம், பண்பாடு, போன்றவற்றை வெறும் வரலாற்று நூலாய்மட்டும் மாற்ற நினைக்கிறான் இந்தமனிதன். இந்தநிலையில் மற்றவருடைய உணர்வு, கலை, கலாசாரம், மொழி பாரம்பரியம், பண்பாடு, போன்றவற்றினை மதிப்பான் என்று எண்ணுவது பொருத்தப்பாடுடையதோ எனவொரு கேள்வியும் எழுகிறது. இருந்தும் எனது அனுபவரீதியில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தைச் சுட்டிக்காட்ட வேண்டியவனாகிறேன்.

கடந்த சில நாட்களில் எமது வுNபுயு அமைப்பின் பிரதிநிதிகளாக இலங்கை வெளிநாட்டுத் தூதராலயத்துக்குச் சென்றிருந்தோம். அங்கு நாம் கண்டசம்பவங்கள், நாம் அநுபவித்த அனுபவங்கள், எங்களை இரு மாறுபட்ட விவாதத்திற்குள்ளாக்கியது.

இலங்கை: சிங்களம், தமிழ், ஆங்கிலம் போன்ற பிரதான மொழி பேசப்படும் நாடு. தேசியமென்ற ரீதியில் இலங்கையர் என்ற ஒரேயொரு தேசியத்தை மட்டும் இன்றுவரை கொண்டுள்ள நாடு. இப்பேற்பட்ட ஒருநாட்டின் வெளிநாட்டுக்காரியாலயம் குறிப்பிட்டநாட்டுக்குள் அமைக்கப்படும் போது மேலும் புதிதாய் ஒரு மொழியோ அல்லது பலமொழியோ இணைக்கப்படவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது; அதாவது, இத்தாலியில் அமையும்போது சிங்களம், தமிழ், ஆங்கிலம், என்பவற்றுடன் இத்தாலி என்ற பன்மொழி அலுவலகமாக மாற்றம்பெறுகிறது.

ஆனால் நாம் எமது இலங்கைத் தூதராலயத்திற்குச்சென்றதும் வாசலில் நிற்கக்கூடிய சீருடையற்ற ஒருவர் எம்முடன் சிங்கள மொழியில் மட்டும் பேசினார். அவருடன் நாம் தமிழில் எமது உரையாடலைத் தொடங்கினோம். காரணம், எமது துர்ரதிஷ்டம் எம்முடன் வந்த எவருக்கும் சிங்களத்தில் எவ்வித பரிச்சயமுமற்றவர்களாய் இருந்தோம். அவர் மீண்டும் சிங்களத்தில் பேசியபோதுதான் புரிந்தது அவருக்குத் தமிழ்மொழி புரியாது என்று.

சரி இத்தாலியில் இந்தகாரியாலயம் அமைந்திருப்பதால் நிச்சயம் இத்தாலிமொழியில் சற்றேனும் பரிட்சயம் இருக்கும், சமாளித்துவிடலாம் என்று சற்றுத்திருப்தியுடன் இத்தாலி மொழியில் எமது வரவையும் அதற்கான காரணத்தையும் தெரிவித்தோம் அது அவருடைய புருவத்தை ஆச்சரியத்துக்கும், வதனத்தை அவமானத்திற்கும் மாற்றியதில் இருந்து அம்மொழியும் சிறிதளவும் அவருக்குப்புரியவில்லை என்றுணர்ந்தோம். பின்னர் எம்மிடம் இருக்கக்கூடிய இறுதி ஆயுதத்தைப் பயன்படுத்தினோம். அதாவது ஆங்கிலத்தில் விபரித்தோம் நாம் துர்பாக்கிய சாலிகள் என்று எண்ணும் அளவிற்கு அம்மொழியும் அவருக்குப் புரியவில்லை!!

நாங்கள் துர்ப்பாக்கிய சாலிகள் இல்லை, சற்று அதிஷ்டக்காற்று எமதுபக்கமும் அடிக்கிறது போல் அதே வேளையில் அந்த அலுவலகத்தில் வேலைபுரியக்கூடிய இத்தாலி நாட்டவர் தனது வாகனத்தில் நாம் நின்ற வாசலூடாகப்பிரவேசித்தார். பிரவேசித்தவர் எமது நிலையினை உணர்ந்தவர் போல், தனது வாகனத்தைத்தரித்துவிட்டு எமது அருகில்வந்து, தனது மொழியாம் இத்தாலியில் எமக்கு முதல் வணக்கத்தைப் பண்போடு தெரிவித்தார். அப்போதுதான் முட்டமுட்டப் பிடித்துவைத்திருந்த மூச்சினை �பெருமூச்சாக� நிம்மதியாக வெளிவிட்டோம்.

ஏதோ இருட்டுக்குள் இருந்து வெளிச்சத்துக்குள் வந்துவிட்டது போலிருந்துது. அந்த வெளிச்ச சந்தோசத்தோடு அவருக்குப்பதில் வணக்கத்தை நாமும் மரியாதையோடும், பண்போடும் தெரிவித்தோம். அதன்பின்னர் எமது வருகையினைப் பற்றிய காரணத்தை இதேமரியாதையுடனும் முகமலர்வுடனும் வினாவினார். இந்தச் செயல் நாம் வந்ததற்கான காரணத்தைப் பாதிமுடித்துவிட்டதன் திருப்தியுடன் விபரித்தோம். அதற்கவர் நாம் நிற்பது பின்புற வாசல் என்றும் முன்புறப்பகுதியைக்காட்டி அங்கே உங்கள் பெயரைப்பதிந்துவிட்டு எனக்காகக் காத்திருங்கள் நானே உங்களை வந்து மீண்டும் அழைக்கிறேன் என்றுமீண்டும் வணக்கஞ் சொல்லிச் சென்றார். இப்போது புரிந்தது முதலில் கண்ட நபர் இதைத்தான் சிங்கள மொழியில் எமக்குச் சொல்லியிருக்கிறார் என்று. ஒதுக்கிவிட்ட ஓடைப்புறமாய்க் காட்சியளிக்கும் முன்வாயில் என்று சுட்டிக்காட்டப்பட்ட வழியாக உட்பிரவேசித்தோம்.

கடந்த ஏழு வருடத்தின்முன்னர் இதே இடத்திற்குச் சென்றபோது எனது கண்களில் பட்ட ஒருசில கருத்துக்கள் இன்றும் மாற்றப்படாமலேயிருந்ததையிட்டு வெட்கப்பட்டுக்கொண்டேன்.

மனிதம் பேசியது

குறிப்பிட்ட ஒருநாட்டு வெளிநாட்டுத்தூதராலயம் அது அமைந்திருக்கும் நாட்டின் சட்டதிட்டக் கட்டுப்பாட்டிற்குள் உள்ளகம் கட்டுப்படுவதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன் அதனை அன்று தெளிவாகக் காணக்கூடியதாக இருந்தது.

உள்ளே நாம் சென்றதும் அங்கே பதிவுப்புத்தகத்தைத் தேடினோம் அவ்விடத்தே அப்படி எதுவும் இருக்கக்காணவில்லை. எனினும் அங்கு ஒருவர் நின்றார் அவர் � ஏய், மொணவத� என்றார் அதைத்தவிர அவருக்கு திருப்பிச் சொல்ல அந்த மொழி எமக்குத்தெரியாதே! இத்தாலி மொழியில் விபரத்தைத் தெரிவித்தோம். அவர் கூறியது எமக்குப்புரியாததைப்போலவே நாம் பேசியதும் அவருக்குப்புரியவில்லை. எனவே, ஏற்கனவே ஏதோ அலுவலுக்கு வந்திருந்த வாடிக்கையாளரான பக்கத்து அறையில் இருந்த ஒரு தமிழரை அவர் பெயர்சொல்லி அழைத்ததும் அவர்வந்தார்.

அவரிடம் தமிழில் நாம் வெளியில் கண்ட இத்தாலி நபருடன் கதைக்கவேண்டும் என்று விபரித்தோம். விபரித்ததும், விபரம் கேட்டவர் திக்குமுக்காடிய ஆங்கிலத்தில் அவருக்கு ஏதோ சொல்லமுனைவதைக்கண்டு அவருக்கு அவ்வளவுதான் ஆங்கிலம் தெரியும் என்பதனையும் அதனைக்கொண்டுதான் அவர் பலருடைய பிரதிநிதிபோல் சட்டரீதியற்ற முறையில் செயற்படுபவர் என்பதும் புரிந்தது. எனவே அந்த சங்கடத்தை தீர்க்க நாமே தெளிவான ஆங்கிலத்தில் பேசினோம் அப்போது இன்னொரு விடையமும் எமக்குப்புலப்பட்டது. அதாவது, தெளிவான ஆங்கிலம் அவருக்குத் தேவையில்லையென்பது. ஏனெனில் நாம் பேசும் தோரணையில் இருந்து எமக்குத் தனது ஆங்கிலத்தை விடவும்மேலானதாக இருப்பதை உணர்ந்து தனது கையுக்குள் பொத்திவைத்திருந்த ஏதோ ஒன்றை எமக்கு நீட்டி � பொட்டைக்கின்ட� என்று மீண்டும் சிங்களத்தில் ஏதோ பேசத்தொடங்கினார்.

அவர் நீட்டியதைப் பெற்றுக்கொண்டு அது என்னவென்று பார்த்தோம் அதுதான் நம்பர்த்துண்டு மாறாக பதிவுப்புத்தகம் எதுவும் அங்கில்லை. எதுவாயினும் இலக்கத்துண்டைக் கொண்டுதான் நாமங்கு முன்னெடுத்துச் செல்லமுடியும் எனவுணர்ந்து பொறுத்திருந்தோம். அதுமட்டுமல்லாமல் அவர்தான் �றிசப்சனிஸ்ட்� என்பதனையும் உணர்ந்தோம். அந்த நம்பர்த்துண்டை நீங்களும் பார்க்க வேண்டாமா?

இது பென்னால் எழுதப்பட்ட இலக்கத்துண்டு இதனைப்பெறுவதற்கு அங்கு இருப்பவருடன் மொழிப்போராட்டம் நடத்தவேண்டிய கட்டாயக் கடப்பாடு அமைந்தது எமக்கு. இதேவேளை இத்தாலியில் பிறந்த ஒரு இலங்கைப்பிரஜை தன்னுடைய ஏதோவோர் தேவை கருதி இங்கு வந்திருந்தால் அந்த பிள்ளை ஒரு மேல் அதிகாரியைச் சந்திப்பதற்கு இப்பேற்பட்ட சிற்றதிகாரிகளுடன் மொழியியல் பாடப்பரிட்சையில் சித்திபெற்றாகவேண்டும் அப்பேற்பட்ட சூழ்நிலையினை கற்பனை பண்ணும்போது�அப்பப்பா!

அதுசரி,! அலுவல்முடிந்ததும் எறிபட்டுப்போகும் கடதாசிதானே, இதற்காக ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு நம்பர்த்துண்டு தேவைதானா?

ஒரு சுதேசிக்கு அந்நாட்டு மொழியனைத்தும் தெரிந்திருக்கவேண்டுமென்றால் இந்திய மக்கள் அனைவரும் முப்பதுக்கும் மேற்பட்ட மொழி விற்பனர்களாகவல்லவா இருப்பார்கள்.
 


பாகம் இரண்டு

�அன்போடு இணைந்த புன்னகைக்கு
ஐம்பூதங்களுங்கூட அடிபணியும்�

அரச கருமங்களை வேற்று நாட்டுமொழிலில் அமைப்பதற்கு ஒருமொழிபெயர்ப்பாளரை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் மொழிபெயர்ப்பாளர் என்பதனை ஏற்றுக்கொள்வதற்கு ஒருசில கல்விச்சான்றுதலோ அனுபவப்பத்திரமோ நிச்சயம் தேவைப்படுமல்லவா, அது அவருடைய அறிவுத்திறனையும் மொழிபெயர்ப்பில் உள்ள அனுபவத்தையும் சுட்டிக்காட்டுமல்லவா? அப்பேற்பட்ட ஒருவரைக்கூட சொந்த மொழியில் வைத்திருக்க விரும்பவில்லைபோலும் இலங்கையரசின் போக்குக் காணப்பட்டது அங்கே.

இப்போது இங்கே நீங்கள் பார்க்கப்போவது இத்தலியில் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டுத் தூதராலய அறிமுகப்பலகை, இதுபோன்று உலகின் பல பாகங்களிலும் உள்ள இலங்கை வெளிநாட்டுத் தூதராலயங்களின் நிலையெப்படியோ யாரறிவார்?

இது தூரப்பார்வையில் அமைந்திருக்கிறது இதனை நான் கடந்த ஏழுவருடமாக கண்காணிக்கின்றேன் இதில் ஏற்பட்டுள்ள தவற்றைச் சீர்திருத்தவோ அல்லது அதில் ஏற்பட்டுள்ள சேதத்தை மீளமைக்கவோ அந்த அலுவலகப் பொறுப்பாளர்கள் முன்வராமை வருத்தத்திற்குரியது. �தவறுகள் சுட்டிக்காட்டப்படவேண்டும் அப்போதுதான் அது சீர்திருத்தப்படும்� எனினும் இப்போது சுட்டிக்காட்டப்படும் இந்த அழுக்குத் துடைக்கப்பட வேண்டுமென்பது எமதவா.

அடிக்கடி தூதுவர் மாற்றப்படுவதுபோல் அங்கு இருக்கக்கூடிய தவறுகளும், குறைகளும் சிரமங்களும் நிச்சயம் சீரமைக்கப்படக்கூடாதா? இங்கு என்ன தவறு இருக்கிறது மாற்றுவதற்கு, இங்கு என்ன சிதைவு இருக்கிறது சீர்திருத்துவதற்கு என்று எண்ணவேண்டாம் அதிகம் இருப்பதில் சிறிதையே சுட்டிக்காட்டவிரும்புகிறேன். எத்தனை தடவை திருத்தம் பார்த்தாலும் ஒருநூலில் இன்னும் அதிகம்பிழை இருக்கத்தான் செய்யும் எனினும் வெளிப்படையாகத்தெரியும் பெரும்பிழைகளையாவது சற்றுத்திருத்தலாம்தானே. இவை விரைவில் திருத்துவதற்கு மேல் அதிகாரிகளும் அரசாங்க மற்றைய அதிகாரிகளும் கண்காணிக்க வேண்டுகிறேன். இதனை வாசிக்கும் வாசகர்களும் தமது உந்துதலைக் காட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

என்னிடத்தில் இத்தாலி மக்கள் ஒருசிலர் தமிழ் மொழி கற்றுச் சென்றனர் அவர்களில் எவரேனும் இப்பலகையினை எப்போதாவது பார்க்க நேர்ந்தால், அவர்கள் சுட்டிக்காட்டி அவமாம் இலங்கைக்கு வந்து விடக்கூடாதல்லவா? இன்னுமொரு இத்தாலியர் வீரமா முனிவராய் வந்து தமிழ்ச் சீர்திருத்தத்தை இலங்கைக்கு அறிமுகஞ்செய்விக்க வேண்டாம் என்று கருதுகிறேன்.

மேற் காட்டப்பட்ட அறிமுகப்பலகையின் பெருப்பிக்கப்பட்ட அண்மைத்தோற்றத்தின் ஒரு பகுதியைப் படம்03 காட்டுகிறது இங்கு � சனநாயக சோசலிச குபுயரசின் தூதராலயம்� என்ற வசனத்தின் �சோசலிச குபுயரசின் தூத� என்ற பக்கம் எமது கண்களுக்குப்புலப்படுகிறது சொற்பிளைகளைச் சுட்டிக்காட்டுவதிலும் பார்க்க பொருட்பிளை அவசியமாகப்படுகிறது. இங்கு �குபுயரசின்� என்ற வார்த்தை சேதத்தின் காரணமாகவோ அல்லது அமைக்கப்பட்ட அச்சின் காரணமாகவோ இப்படி அமைந்திருக்கிறது இதற்கு மாறாக இந்த வார்த்தை � குடியரசின்� என்று சரியான முறையில் அமைந்திருக்க வேண்டும்.

படம் நான்கில் �புதன் தவிர� என்ற வார்த்தையின் கருத்து தவறுதலாக �புதன் தலிர� என்று இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைப் படம்04 தெளிவாகக்காட்டுகிறது.

அடுத்திங்கு காட்டப்பட்டுள்ள படம் 05ல் �நேரங்கள் திங்கள்-வெள்ளி 09.15-13.00� என்று அமைய வேண்டிய பகுதி தவறுதலாக � நேரங்கன் திங்கன் லௌ;வி� என்று வார்த்தைக்கு வார்த்தை தவறுகளுடன் அமைந்துள்ளது.
மேலும் தெளிவாகச் சொல்லப் போனால், �இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் தூதரகம் கொன்சுயலர் நேரங்கள் திங்கள்-வெள்ளி 09.15-13.00 (புதன் தவிர) என்ற பதினொன்றிற்குட்பட்ட வார்த்தைகளுள் கிட்டத்தட்ட முழுமையாச் சேதமடைந்தும் ஐம்பதுவீதத்திற்கு மேல் எழுத்துத் தவறின்காரணமாக பொருட்சிதைவும் மொழிச்சிதைவும் அடைந்திருக்கிறது.

இதில் ஆச்சரியத்திற்குரிய விடையம் என்னவென்றால், தமிழ் தவிர்ந்த மற்றைய மொழிகளில் எந்தவிதச் சேதமும் இடம்பெறாமையே.இதனைப்படம் 06 காட்டுகிறது.

இதில் யாரையும் குற்றஞ்சாட்டும் எண்ணம் எனக்கில்லை மாறாக இதில் ஏற்பட்டுள்ள தவறு விரைவில், இல்லை இல்லை மிக விரைவில் திருத்தப்படவேண்டும் அதுவே எமது அமைப்பினதும் எனது தனிப்பட், இலங்கைக்குடிமகன் என்ற ரீதியில் எழுந்துள்ள அவாவுமாகும்.

திருத்தம் எப்படி இருக்க வேண்டும்?

இந்தக்குற்றச்சாட்டுப் பலகைக்குப் பக்கத்தில் இன்னொரு பலகை அலுவலகப்பிரிவின் பாதையைக்காட்டவதற்குப் போடப்பட்டிருந்தது அதைப்போல இருந்தால் மகிழ்ச்சிக்கும் பாராட்டுக்கும் உரியது. அதனைப்படம் 07 தெளிவுபடுத்தும். அதுவே இலங்கை அரசுக்குப் பெருமையும் இலங்கை மக்களுக்கு வெளிநாட்டவர் மத்தியில் ஒரு கௌரவத்தையும் ஏற்படுத்தக்கூடியது.

இதற்கும் சேவையென்று பெயர்

இதுவரைக்கும் வெளிப்பார்வைக்கு இப்படி இருந்தும் உட்சென்ற போது இன்னும் அதிர்ச்சிகள் காணப்பட்டன. அது என்னவெனில,; மனிதர்கள் படிகளில் நடைபயில்வதையும், மாடிப்படிகளில் ஏறுவதையும் பார்த்திருப்பீர்கள் நானும் அப்படித்தான் பார்த்திருக்கிறேன். இலங்கை தூதராலயத்தில்மட்டும் ஏராளம் கோப்புகள் (பைல்) அடங்கிய ஆயிரக்கணக்கான பத்திரக்கட்டுகள் படிக்கட்டில் நடப்பதையும் நடக்கமுடியாமல் வயோதிபம் அடைந்து சிதைந்து கிடப்பதையும் பார்த்தேன். அவற்றை மேற்காட்டியது போல் படம் போட்டுக்காட்ட நான் விரும்பவில்லை. அது என்னையே நான் அவமதிப்பது போல் கேவலமாக இருந்தது. இவைபோன்ற அனைத்தும் விரைவில் மாற்றப்பட்டு நல்லதொரு காரியாலயமாக அமைக்கப்படவேண்டுகிறேன்.
 


பாகம் மூன்று

�மரணித்துக்கொண்டிருக்கும் மனிதத்திற்கு
மரண தண்டனையோ?�

அங்கு ஒரு விளம்பரப் பலகை ஒன்று இருக்கக்கண்டேன் அதில் சிங்களத்தில் விளம்பரம் போடப்பட்டிருந்தது, ஆங்கிலத்தில் விளம்பரம் போடப்பட்டிருந்தது, இத்தாலியிலும் விளம்பரம் போடப்பட்டிருந்தது ஆனால் தமிழில் ஒருசின்னஞ்சிறு எழுத்துக்கூட அங்கு இருக்கவில்லை. இத்தாலி அலுவலகங்களில் எத்தனையோ விளம்பரம் தமிழில் காணப்படுகிறது �குவைஸ்துராவில்� �கொமுனையில்� வேறு பல அலுவலகங்களில், வேலைத்தளங்களில் நாமும் எமது அமைப்பினூடாக பல மொழிபெயர்ப்பினை அமைத்துக் கொடுத்திருக்கிறோம் இப்படியிருக்க இலங்கைத் தூதராலயத்தில் மட்டும் தமிழில் எவ்வித தகவலும் இல்லாததையிட்டு வியப்படைந்தேன். இதில் மொழிப்பாகுபாட்டிற்கோ அல்லது தர்க்கத்திற்கோ இடமில்லை மாறாக மனிதாபிமானத்திற்கும் தொடர்பாடலுக்குந்தான் இடமுண்டு. தமிழ்மொழி மட்டும் தெரிந்தவர்கள் உங்களுடைய தகவலை எப்படி அறிந்து கொள்வார்கள்?

எனது நாட்டுக் காரியாலயத்தில் வேலைபார்க்கும் வேற்றுநாட்டவரிடம் தகுந்த முறையில் தகவலையும், மரியாதையையும் பெற்றுக்கொண்ட நாம் எமதுநாட்டவரிடம் அதற்குமுற்றிலும் மாறுபட்ட நிலையை அனுபவித்தது ஏன்னென்று எனக்குப் புரியவில்லை.

இதைவிட இன்னுமிரு முக்கிய விடையத்தையுஞ் சுட்டிக்காட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தில் அமுக்கப்படுகிறேன். அது என்னவென்றால், ஒன்று இத்தாலியில் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டுத் தூதராலயம் �றோம்� நகரில் இருக்கிறது. இங்கு அலுவல்களைப்பார்ப்பதற்கென்று பல நூற்றுக்கணக்கான கி.மீ. தூரத்தில் இருந்து இரவு பகலாக வாகனப் பிரயாணத்தையோ அல்லது புகையிரதப் பிரயாணத்தையோ மேற்கொண்டு வருபவரைப் பல மணித்தியாலங்களாகக் காக்கவைப்பதும், காலை ஒப்புவிக்கப்பட்ட ஆவணத்தைத்திருப்பி எடுப்பதற்கு மாலைவரை நேரங் கொடுப்பதும் வரவேற்கக்கூடிய விடையமாகத்தெரியவில்லை. அதிலும் ஏற்கனவே �பொறின் மினிஸ்ரியால்� அங்கிகரிக்கப்பட்ட பத்திரத்ததிற்குக்கூட இதேநிலைதான்.

இரண்டாவது என்னவென்றால், வேற்று மாவட்டத்தில் இருந்து பலருடைய பிரதிநிதியாக வருபவர் தனது காரியத்திற்கு ஆகும் செலவைப்போல் பலமடங்கினைப் பெற்றுக்கொள்வது தெரிந்தும் அப்பேற்பட்டவரை அங்கிகரிப்பது வருத்தத்திற்குரியதே. மக்கள் தமது வேலைப்பழுவின்காரணமாக அல்லது பணச்சிக்கல் காரணமாக அல்லது குடும்பத்தொல்லை காரணமாக இப்படி வேறுயேதோவொரு பிரச்சினை காரணமாக பணத்தை இழக்கத் தயாராகலாம் ஆனால் இதேபோன்று பணம் செலுத்த முடியாதவர்களும் இருப்பார்களே! என்பதை மறக்கவேண்டாம். இதற்கும் வழியமைத்துத்தர முனைகிறேன்.

மாதத்திற்கு ஒருமுறையோ, முடியாவிட்டால் இரண்டுமாதத்திற்கு ஒருமுறையோ ஒரு பிரதிநிதியை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தூதராலயத்தால் அனுப்பி மக்களின் பணச்சிக்கலையும் வேலைப்பழுக்களையும் குறைக்கமுனைந்தால் என்ன?. இதிலும் இத்தூதுவர்கள் லீவு நாட்களில் வந்து போனால் அளப்பெரிய சேவையாகக்கருதமுடியும். அல்லது இதற்கு இன்னுமொரு சிறந்த வழிஇருக்கிறது, நாம் தூதரகத்திற்குச் சென்றபோது இந்தவழிபற்றிப் பேசினோம். அதாவது, எமது அமைப்புப்போல் எல்லாமாவட்டங்களிலும் ஏதோவெரு அமைப்பைத்தேர்ந்தெடுத்து அவர்களைப்பிரதிநிதிகளாக மாற்றிவிட்டால், தூதராலயம் பெற்றுக்கொள்ளும் செலவைத்தவிர வேறு எந்தவொரு செலவும் மக்களுக்கு ஏற்பட வாய்ப்புக்குறைந்துவிடும்.

நாம் தமிழர்களுக்கும் வேறு வெளிநாட்டுமக்களுக்கும் பலவகையில் சேவைகளை வழங்கிவருகிறோம். அதிலும் இத்தாலியின் அமைப்புக்களுடன் இணைந்து இந்த சேவைகளை நாடத்திவருகிறோம். உதாரணமாக இத்தாலியில் வாழ்பவர்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்குள்ளாகின்றனர் அவ்வாறான பிரச்சினைகளை �ஊபுஐடு�உடன் இநை;து �குவைஸ்தூரா�டாகவும்�, வேறு அலுவலகங்க@டாகவும் ஏற்படும் சருமங்களைக் குறைத்துவருகின்றோம். இந்த சேவைகளை மக்களின் நலன்கருதியும் நமது அமைப்பாளர்களின் தொழில்கருதியும் நாம் வாரத்தின் சனி மற்றும் ஞாயிறு தினத்திலும் மேலும் பொதுலீவு நாட்களிலும் மேற்கொள்கின்றோம். இதனால் மக்களுக்குக் குறைந்த செலவில் திறமானதும், முழுமையானதும், நம்பிக்கையானதுமான சேவையைச் செய்கிறோம்.

ஒரு உதாரணம் காட்ட விரும்புகிறேன் கடந்தவருடம் அரைப்பகுதியில் நாம் ஒருவருக்கு சேவை வழங்கும்போது 10�ரோக்களை இலங்கைத் தூதராலயத்திற்கு வழங்கினோம் இதனைப் படம் 08 காட்டுகிறது ஆனால் இப்போது இந்தவருடம் 16 �ரோக்களை வழங்கவேண்டியுள்ளது.

இலங்கைத்தூதராலயத்தின் அறவீட்டுத்தொகை என்னைப் பொறுத்தவரையில் அவ்வளவு அதிகமாகத்தெரியவில்லை.

ஒருமாவட்டத்தில் 1யூறோ பெறுமதிக்கு விற்கப்படும் பொருளோ அல்லது சேவையோ அதே நாட்டிலுள்ள வேறுமாவட்டத்தில் 10யூறோக்களுக்கு விற்கப்படுமா? அதே 1யூறோ பெறுமதியில்லாவிட்டாலும் சற்று ஏற்றத்தாழ்வு அமைவது சாதாரணமானதே என்பதனை நினைவு படுத்த விரும்புகிறேன்.

ஆனால் தனிநபர்களோ இந்த சேவையை மக்களுக்கு வழங்குவதாகக்கூறிக்கொண்டு சென்றவருடங்களில் 50 �ரோக்களையும் இந்தவருடம் 75 �ரோக்களோ இல்லது அதற்கு மேலோ பெற்றுக்கொள்கின்றனர். அந்த மட்டுப்படுத்தப்பட்ட அறவீட்டுத்தொகை நேரடியாக மக்களிடம் போய்ச்சேருவதில்லை

அதற்குக் காரணம் இப்படிச்சொல்கின்றனர் �அது போக்குவரத்துச் செலவு�. இந்தப் போக்குவரத்துச்செலவு ஒருவருக்காக என்றால் அது பொறுத்துக்கொள்ளக்கூடியதே, அதுவே பலருக்காகச் செய்யும்போது குறைக்கப்பட்டு தனக்குத்தேவையான, மட்டுப்படுத்தப்பட்ட இலாபத்தைக் கேட்கலாமல்லவா? மக்களுடைய இயலாமையையும், அறியாமையையும் வைத்து யார், யார் எப்படியெல்லாம் வாழ்கின்றனர் பார்த்தீர்களா?

தயங்காமல் குற்றச்சாட்டுக்கள் மட்டுமல்ல, சிறந்த சேவைகளைச் செய்யும்போது பாராட்டவும் பின்நிற்கமாட்டோம். இந்தவகையில் இலங்கைத்தூதராலயத்தில் நாம் சென்றபோது அங்கு தொழில்புரியும் இத்திலிநாட்டவரைப்பற்றி ஏற்கனவே விபரித்தோமல்லவா அப்பேற்பட்டநபர்கள் பன்மொழி பேசும் மக்கள் வந்துபோகும் அலுவலகங்களில் வரவேற்கத்தக்கவர்கள் அவர் எம்முடன் பேசும்போது தொலைபேசியில் இன்னொருவருடன் உரையாட நேர்ந்தது அப்போது புரிந்தவிடையம் என்னவென்றால் எம்முடன் மட்டுமல்ல மற்றவருடனும் பண்பான, நாணயமான முறையில்தான் அவர் நடந்துகொள்கிறார் என்று.

வேலைதேடுபவர்கள் அனுமதித் தேர்வுக்கு எப்படிப் போகவேண்டும் எப்படிப்பேச வேண்டும் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கெல்லாம் படிப்பு இருக்கிறது, கொட்டலில் வேலை செய்பவருடன் எப்படியெல்லாம் அணுகவேண்டும் என்பதற்குக்கூடப் படிப்பிருக்கிறது, ஆனால் பிற மொழி பிற கலாசாரம் போன்றவற்றிற்கு இடையில் வேலைபார்ப்பவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதனை பரிட்சிக்காமலா இலங்கை அரசு வேலைக்கு அமர்த்துகிறது.

அற்காக வேலைபார்க்கும் எல்லாரையும் குறிப்பிடவில்லை ஆனால் தவறாய்க் குறிப்பிடும் அளவிற்கு ஒருநபராயினும் ஏன் அமர்த்தப்படுகின்றனர்?.

மக்கள் உதவி கேட்டு வரவில்லை உரிமைகேட்டு வருகின்றனர், மக்கள் எப்போதும் அதிகாரிகளுக்கு மரியாதைகொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் அதிகாரத்தைத் தவறாய்ப் பயன்படுத்துவோர் தமது தவறின் காரணத்தால் மக்கள் தமக்கு மரியாதைதரவில்லை என்று கருதிக்கொள்கின்றனர். மரியாதை கருதி வேலைசெய்கிறவர்கள் குருக்களானால் இன்னும் அதிகம் மரியாதைகிடைக்கும் அலுவலகத்தில் வேலைபார்ப்பவர் தனது வேலையை ஒழுங்காய் செய்தாலே அதற்குத்தகுந்த மரியாதை கிடைத்துவிடும்.

எமக்குள்ளே ஆயிரம் அழுக்குகளை வைத்துக்கொண்டு மற்றவரின் உடம்பில் தூசிதட்டமுயல்கிறோம். இப்பேற்பட்ட குறைகளைச்சுட்டிக்காட்டினாலும் இவை அனைத்தும் தீர்க்கமுடியாத ஒருபெரும் விடையமல்லவே! இவை அனைத்தும் தீர்க்கப்படவேண்டும். குறைந்த செலவிலே நிறைந்த பலனை மக்கள் பெறஉங்கள் சேவையமைய வுNபுயு மக்கள் சேவைப்பகுதியின் சார்பிலும், விமர்சனப்பகுதி சார்பிலும் வேண்டுகிறோம். இது தமிழ் மற்றும் இத்தாலி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் எழுதப்பட்டுள்ளது என்பதனைக்கவனத்திற் கொள்க.

TNGA�என்ற அமைப்பினூடாக நாம் எமது மக்களுக்காகவும் வெளிநாட்டுமக்களுக்காகவும் குறிப்பாக இலங்கையர்களுக்காக இத்தாலிமொழி, சிறுவர்களுக்கான தமிழ்க்கல்வி பரதம், கணனி போண்ற கல்வியினையும் மொழிபெயர்ப்பு, ஆவணங்கள் தொடர்பான சிக்கல்கள், விசா தொடர்பான சிக்கல்கள், வேலை தொடர்பான சிக்கல்கள் போன்றவற்றையும் இத்தாலிஅமைப்புக்களுடனும் இத்தாலி மக்களுடனும் இணைந்து வழங்கிவருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக நாம் கேட்டுக்கொள்வது, இத்திருத்தங்கள் தொடர்பாக அரசு சார்புடைய திணைக்கள அதிகாரிகள் விரைவில் இத்தவறுகளை திருத்தியமைக்க உதவவேண்டுகின்றோம். தாமதமாகும் பட்சத்தில், மக்கள் தொடர்புச்சாதன அமைப்புக்கள், மற்றும் தமிழ்ச் சேவை அமைப்புக்கள் பேன்றன இவற்றை மென்மேலும் உந்துதல் கொடுத்து விரைவுபடுத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம். இந்தப் பக்கங்கள் குறைந்தபட்சம் வேண்டப்படும் அனைத்து அமைப்புகளுக்கும் அனுப்பப்படும் என்பதனைக் கவனத்திற் கொள்க.
 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home