26 மார்கழி
2005
அலை அலை அலை அலை அலை அலை அலையே
நுரை இரை நுரை இரை நுரை இரையே
புரிந்தது, இரைச்சலுக்குக் காரணம் தெரிந்தது
இரையாய் நீ உண்டு
கொண்ட உயிரெங்கள் ஓசையே
தெரிந்தது, நுரைச்சலுக்குக்காரணம் புரிந்தது
சிறயான சின்னப்பிஞ்சின் உதட்டருகின் உமிழ்நீரே
ஓ� ஓ... ஓ� ஒஓ போதும்
உன்புன்னகை அலை அலையே
சுனாமி வந்ததென்று என்னிதயம் வெம்பியதால்
ஒருமுறை பதறிவிட்டேன்
அநாதை என்று வந்து ஆதரவுகேட்டுநின்ற
ஆருயிர்கள் பெருகக்கண்டேன்
கடல் ஆழங்கண்டுவிட்டோம்
பெருங்கோபங் கண்டுகொண்டோம்
காட்டிவிட்ட
கோபத்திலே ஏற்றிவிட்ட பெருஞ்சேதம்
மூட்டிவிட்டதே சிதை தொகை தொகையாய்
எரிகிறNது
மனங்களிலும் மயாணங்கள் தெரிகிறதே...அலையலையே!
கண்ணாலே கண்டதெல்லாம் கற்பனையில் வந்ததல்ல
நெஞ்சுருகி
அழுதுவிட்டேன்
புண்ணான காயத்திலே அம்பாகித் துன்பமலை
மீண்டும்
வந்து மோதக்கண்டேன்
மச்ச உணவுதந்து விட்டாய்
கச்ச
உப்புச்சுவையுந்தந்தாய்
என்ன பிழை நாங்கள் செய்தோம் சேதத்தோடு
சோகந்தந்தாய்
புரியவில்லையே புவிஎன்னும் பூவின்மேடை புனிதமில்லையோ
புதுமணமாய் மாறிக்கொள்ள மனிதரில்லையோ...அலையலையே!