பதட்டத்தைப்
பயன்படுத்தி பணம்பறித்தனர்
சூதாட்டத்தை மிகஅழகுபடுத்திப்
பாராட்டினர்
பிச்சை எடுப்பதற்கெல்லாம் புதுமுறையினைக் கையாண்டனர்
மிச்சமுள்ளவரிலும் எந்தமாற்றமும் இல்லை
குட்டிக் குட்டிக் குழுக்களுக்காய்
இன்னும் கோடிக்கணக்கில் சேதம்
சேதத்திற்குச் செலவில்லை
மீண்டும் மீண்டும் வாடிக்கையானதே நாசம்
சிறுகப்பட்ட இன்பத்துக்குப்
பெருகப்பட்ட துன்பம் கொள்முதல்
இன்னும் சிரிப்புத் தெரியுமா?
அணுகுண்டளவில் பிச்சைவாங்கி
அணுவளவில் அன்னதானமாம்
கோடிக்கணக்கில் பிச்சை வாங்கி
கரும்புள்ளியால்ப் பங்கீடாம்
மண்டைகழுவப்பட்ட மக்கள் மத்தியில்
தொண்டை கனக்க எழுதுகிறேன்
மாண்டு போனவருக்காய் மண்டியிட்டழுவது
மடமைத்தனமென்று கருதுபவன்யார் ??
மீண்டிருப்போர் விண்ணைமுட்டி
எழுவது
பெருமைத்தனமென்று தோள்கொடுப்பவன் யார்??
குற்றஞ்சொல்லிக் கூனச்செய்யவில்லை
குறையாய்ப்படுவதை குறித்துக் காட்டுகிறேன்
வேகப்படும்
தேகத்திற்கு ஓய்வு கொடுக்கச் சொல்கிறேன்
வேடிக்கைக்; கூத்தில்க்கூட
விவேகத்தைக் கூட்டச் சொல்கிறேன்
காலடித்தடங்களில் படிந்துள்ள குருதிகளின் கறை என்னைக் கேலி
செய்கிறது
கேலியின் காரணம் உங்கள் தடங்களுக்கு வேலிபோடச் சொல்கிறது
சிந்தனையோடு உங்களைச் செவிகொடுக்கச் சொல் கிறது
சுமையாக நினைத்து
சுகமான வாழ்வை இழந்து விடாமல் எச்சரிக்கிறது
அருகனின் எழுத்துக்கள் கருகிக்கிடக்கும் காகிதத்திற்கும் உயிர்
கொடுக்கும்
அரும்பெரும் மாநிடரையா மரணிக்கச் செய்யும்- இல்லை
அவரை மனிதத்துள் ஜெனிக்கச்செய்யும்...!