"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Tamilnation > Struggle for Tamil Eelam > Conflict Resolution - Tamil Eelam - Sri Lanka > Norwegian Peace Initiative > Interim Self Governing Authority & Aftermath > Thinakural Editorial on LTTE call to the Sinhala people
Thinakural Editorial on LTTE call to the Sinhala People
Thinakural is a Tamil Daily published simultaneously in Colombo and Jaffna,
16 September 2004English - Translation Original Tamil by M. Thiru :
Quoting Nelsen Mandela - "In this war one will win and the other will lose. But even after the war the winner and the loser have no choice but to talk by sitting at the same table placed on a high ground full of ashes. You think the victory will be yours. We think the victory will be ours. But do not make a mistake by taking away the opportunity to respect each other as valuable enemies. Though we do not have the same views, though we are enemies, give us an opportunity to respect you."
The political powers in Southern Sri Lanka who are against the peace efforts, are carrying out propaganda about the ISGA proposals put forward by the LTTE. This propaganda has by and large resulted in a wrong impression among the Sinhalese masses about the fundamental objectives of the ISGA proposals. The mass of people have the mistaken belief that "The LTTE is intransient about the ISGA proposals and not prepared to be flexible and the LTTE's rigidity or stubbornness is the stumbling block for restarting the peace talks."
We believe that the interview given by S.P. Thamilchelvan, the political leader of LTTE, to an English daily in Colombo on Tuesday ( 14/09/04), should be able to help to expose the unfounded nature of such mischievous propaganda.
According to S.P.Thamilchelvan, the ISGA proposals are not rigid or final. Analysis and discussion about the ISGA proposals should be made at the negotiating table. There is no need at all for the Sri Lankan government to propose alternatives to the ISGA before negotiations begin. S.P.Thamilchelvan further emphasised that the peace talks should commence with the ISGA as the basis. He drew attention to the fact that the Tamil people were fighting for a separate state, but now have agreed to negotiate on the basis of the ISGA proposals. Thamilchelvan has requested the government to act/come with a clear stand, a clear mindset and with one voice, in order to take forward the peace process.
At a time when the special envoy from Norway is in Sri Lanka, the LTTE's political wing leader has come out with the these views in his interview with the newspaper, for the benefit of the Sinhala people's notice. S.P.Thamilchelvan has mentioned that, though the LTTE would like to go to the south to explain their clear stand on the ISGA issues, they are unable to do so because of the current situation.
It is healthy that the LTTE has realised the necessity of making clear to the ordinary Sinhala people the problems the Tamil people face and their political aspirations. We are happy indeed for the emergence of a clear stand in this regard by the LTTE. For decades it has been a political shortcoming from the Tamil side.
It is an unfortunate situation that there are no political powers in the south who are courageous enough to reflect the LTTE's interests in this matter and which can create an environment suitable for the exchange of these ideas and opinions with the Sinhala people. Even if there were such progressive political powers in the South, it is sad to note that such forces/powers/parties do not have the ability and structural means to go into action in a pragmatic way.
We would like to ask the JVP, the party that is reflecting the mindset of a substantial section of the Sinhala people, why cannot they commence direct exchanges with the LTTE to make clear what the JVP's stand is on the issue of the ISGA? The JVP has changed their decades-old stand on political affairs, economic policies and their approach to the national question. The JVP leaders' earlier stand was that there should not be any peace talks with the LTTE. But now they have come down from their stand and are saying the government should have talks with the LTTE, just not on the basis of the ISGA proposals.
JVP leaders, who described the World Bank, and International Monetary Fund as front organisations of Imperialism in the past, are now negotiating with the IMF on economic matters, after becoming partners of the government. The JVP leaders had talks with the IMF country representative Jeremy Carter in their party headquarters last Monday and revealed their interests. Neither Carter nor the JVP agreed or disagreed on all the matters they discussed. If two parties having opposing views exchange their views in a conducive environment, the result will always be positive.
Along these lines, we appeal to the JVP to come forward for talks with the LTTE by taking into consideration the LTTE's interest in explaining to the Sinhala people the political aspirations of the Tamils.
We strongly believe that it would be appropriate to recall one of Nelson Mandela's views when he was suffering in prison. Mandela's view was, 'Though having opposing stands in politics, in the interest of the country, it is necessary to talk to one's political opponents.'
In the mid 1960's, when they were talking about the state of affairs in Robin Island Prison, Nelson Mandela told General J.C.Stain, the commissioner of the prison who is a white, the following :
"In this war one will win and the other will lose. But even after the war the winner and the loser have no choice but to talk by sitting at the same table placed on a high ground full of ashes. You think the victory will be yours. We think the victory will be ours. But do not make a mistake by taking away the opportunity to respect each other as valuable enemies. Though we do not have the same views, though we are enemies, give us an opportunity to respect you."
ஜே.வி.பி. கவனிக்கவேண்டிய தமிழ்ச்செல்வனின் கருத்துக்கள்
சமாதான முயற்சிகளுக்கு எதிரான தென்னிலங்கை அரசியல் சக்திகள், மத்தியில் விடுதலைப் புலிகளின் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை யோசனைகள் குறித்து செய்துவரும் பிரசாரங்கள் அந்த யோசனைகளின் அடி�ப்படை நோக்கங்கள் குறித்து சிங்கள மக்கள், மத்தியில் முற்றிலும் தவறான உணர்வுகளையே பரவலாக தோற்றுவித்திருக்கின்றன.இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை யோசனைகளை முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ளுமாறு விடுதலைப்புலிகள் வற்புறுத்தி நிற்கிறார்கள்; எந்தவிதமான தளர்வுப் போக்கையும் காண்பிக்க அவர்கள் தயாராயில்லை; அவர்களின் இந்த விடாப்பிடி�யான நிலைப்பாடே பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்குப் பிரதான முட்டுக்கட்டையாக இருக்கிறது என்றே இச் சக்திகளினால் சிங்கள மக்களுக்குக் கூ�றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் கொழும்பு ஆங்கிலத் தினசரியொன்றுக்கு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அளித்திருந்த பேட்டியில் தெரிவித்திருக்கும் கருத்துகள் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை யோசனைகள் குறித்து சிங்கள மக்கள் மத்தியில் செய்யப்பட்டுவரும் விர்மப் பிரசாரங்களின் ஆதாரமற்ற தன்மைகளை அம்பலப்படுத்த கணிசமானளவுக்கு உதவமுடி�யும் என்று நம்புகின்றோம்.
அந்த யோசனைகள் கெட்டி�யானவையோ அல்லது இறுதியானவையோ அல்ல. பேச்சுவார்த்தை மேசையில் அவை குறித்து ஆராயப்பட வேண்டும். அரசாங்கம் இடைக்கால நிருவாகக் கட்டமைப்பு தொடர்பில் மாற்று யோசனைகளை முன்வைக்க வேண்டி�ய தேவையில்லை என்று கூ�றியிருக்கும் தமிழ்ச்செல்வன் தங்களது யோசனைகளை அடிப்படையாகக் கொண்டு பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.தனி நாடொன்றுக்காகப் போராடி�க் கொண்டி�ருந்த தமிழ்மக்கள் இடைக்கால நிருவாகத்துக்கான தங்களது மாற்று யோசனைகளுடன் பேச்சுவார்த்தை மேசைக்கு வந்திருக்கின்றார்கள். சமாதான முயற்சிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் தெளிவான நிலைப்பாட்டுடன் ஒரே குரலில் அரசாங்கம் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க முன்வரவேண்டும் என்றும் அவர் கேட்டி�ருக்கிறார்.
நோர்வேயின் விசேட சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு வந்திருக்கும் வேளையில் சிங்கள மக்கள் அறியக்கூ�டி�யதாக இக்கருத்துகளை முன்வைத்திருக்கும் விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர், தெற்குக்கு வந்து தங்களது நிலைப்பாடுகளை சிங்கள மக்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புவதாகவும் ஆனால், தற்போதைய சூ�ழ்நிலையில் அவ்வாறு தங்களால் செய்யமுடி�யவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.இனநெருக்கடி குறித்து எந்தவொரு தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தாங்கள் தயாராயிருப்பதாகவும் பேச்சுவார்த்தை நடத்த விரும்பும் எவரையும் வரவேற்கத் தயாராயிருப்பதாகவும் தமிழ்ச்செல்வன் கூ�றியிருக்கிறார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் அரசியல் அபிலாசைகளையும் சாதாரண சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய அவசியத்தை விடுதலைப்புலிகள் உணர்ந்துகொண்டு அது விடயத்தில் அக்கறை காண்பிப்பது மிகவும் ஆரோக்கியமானதொரு அம்சமாகும். பல தசாப்தங்களாக தமிழர் அரசியலின் பிரதான குறைபாடுகளில் ஒன்றான இந்த விவகாரத்தில் இப்போது தெளிவு பிறந்திருப்பது எமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து காட்டப்படும் இந்த அக்கறைக்கு பிரதிபலிப்பை வெளிப்படுத்தி சிங்கள மக்களுடனான கருத்துப் பரிமாற்ற ஊடாட்டத்துக்கு ஏற்பாடுகளைச் செய்வதற்கு துணிவாற்றலைக் காட்டக்கூடிய அரசியல் சக்திகள் தென்னிலங்கையில் இன்று இல்லை என்பது துரதிர்ர்;டவசமானதொரு நிலைமையாகும். அவ்வாறான அக்கறையைக் காண்பிக்கக்கூ�டி�ய தென்னிலங்கை முற்போக்குச் சக்திகளிடமும் செயலில் இறங்குவதற்கான அமைப்பு ரீதியான ஆற்றல் இல்லை என்பது வேதனைக்குரிய விடயம்.
ஆனால், சிங்கள மக்களில் கணிசமானதொரு சிந்தனைப் போக்கைப் பிரதிபலித்து நிற்கும் ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) விடுதலைப்புலிகளுடன் தங்களது நிலைப்பாடுகள் குறித்து நேரடி� ஊடாட்டங்களை ஏன் ஆரம்பிக்க முடியாது என்று கேட்க விரும்புகின்றோம். பல அரசியல் விவகாரங்களில், பொருளாதாரக் கொள்கை அனுகுமுறைகளில் ஒருதசாப்த காலத்துக்கு முன்னர் கொண்டி�ருந்த நிலைப்பாடுகளை ஜே.வி.பி. தலைவர்கள் கணிசமானளவுக்குத் தளர்த்தி விட்டார்கள்.முன்னர் விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று நின்ற ஜே.வி.பி. தலைவர்கள் இப்போது விடுதலைப்புலிகளுடன் பேசலாம். ஆனால், இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை யோசனைகள் பேச்சுவார்த்தைக்கான அடிப்படையாக அமைதலாகாது என்றே கூறுகிறார்கள்.
உலக வங்கியையும் சர்வதேச நாணய நிதியத்தையும் ஏகாதிபத்தியத்தின் முகவர் நிறுவனங்கள் என்று ஒரு காலத்தில் வர்ணித்த ஜே.வி.பி. தலைவர்கள் இன்று ஆட்சியதிகாரத்தின் பங்காளிகளாக மாறியதன் பின்னர் பொருளாதார விவகாரங்கள் குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துகிறார்கள். சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஜெரமி கார்ட்டருடன் கடந்த திங்கட்கிழமை தங்களது கட்சித் தலைமையகத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்திய ஜே.வி.பி. தலைவர்கள் தங்களது அக்கறைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.கார்ட்டர் இவர்களது சகல நிலைப்பாடுகளையும் ஏற்றுக் கொண்டதாகவோ அல்லது இவர்கள் கார்ட்டரின் கருத்துகள் சகலதையும் இணங்கிக் கொண்டதாக இல்லையே. முரணான நிலைப்பாடுகளைக் கொண்ட இருதரப்பினர் தங்களுக்கிடையில் சுமுகமான சூழ்நிலையில் கருத்துப் பரிமாற்றங்களைச் செய்வது எப்போதுமே சாதகமான விளை பயன்களையே தரும்.
இந்த உணர்வின் அடி�ப்படையில், ஜே.வி.பி. தலைவர்கள் சிங்கள மக்களுக்குத் தமிழர்களின் அரசியல் அபிலாiர்களை விளக்குவதில் விடுதலைப்புலிகள் கொண்டுள்ள சமீப கால அக்கறையை மனதில் கொண்டு அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க முன்வரவேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கின்றோம்.
அரசியலில் எதிரெதிரான நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும் நாட்டி�ன் எதிர்கால நலன்கருதி எத்தகைய விட்டுக் கொடுப்பு உணர்வுடன் அரசியல் எதிராளிகளுடன் பேச வேண்டுமென்பதை உணர்த்த ஜே.வி.பி. தலைவர்களுக்கு நெல்சன் மண்டேலா சிறையில் வாடிய காலத்தில் தெரிவித்த ஒரு கருத்தை நினைவுபடுத்துவது இத்தருணத்தில் பொருத்தமாயிருக்கும் என்று நம்புகின்றோம்.
1960 களின் நடுப்பகுதியில் ரொபின் ஐலண்ட் சிறையின் நிலைவரங்கள் குறித்து சிறைச்சாலை ஆணையாளரான வெள்ளையினத்தவர் ஜெனரல் ஜே.சி.ஸ்ரெயினுடன் பேசுகையில் நெல்சன் மண்டேலா பின்வருமாறு கூறினார்;"இந்தப் போரில் ஒருவர் வெற்றி பெறுவார். மற்றவர் தோல்வி காண்பார். ஆனால், போரின் பின்னர் நாட்டின் சாம்பல் மேட்டில் நின்றாவது வெற்றி பெற்றவரும் தோல்வி கண்டவரும் ஒரே மேசையில் அமர்ந்து பேசத்தான் வேண்டும். உங்களுக்கே வெற்றி என்று நீங்கள் நினைக்கிறீர்கள். நாமே வெற்றி பெறுவோம் என்று நாங்கள் நினைக்கின்றோம். ஆனால், பெறுமதியான பகையாளிகள் என்ற வகையில் ஒருவரை மற்றவர் மதிப்பதற்கான வாய்ப்பை எம்மிடம் இருந்து அபகரித்து தவறிழைத்து விடாதீர்கள். இணக்கமான கருத்தைக் கொண்டவர்களாக இல்லாவிட்டாலும் நீங்களும் நாங்களும் எதிரிகளாக இருந்தாலும் உங்களை மதிப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை எங்களுக்குத், தாருங்கள்".