Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C

Home Whats New Trans State Nation One World Unfolding Consciousness Comments Search

Home > Culture of the Tamils > Women in Tamil Society - Ideology, Nation & Gender > Women & the Struggle for Tamil Eelam > Declaration on International Womens Day 2006 - Tamil Women Organization - Germany > Tamil Eelam Struggle for Freedom > Tamil Diaspora - a Trans State Nation - Germany

www.twogermany.com
Anschrift:
TFO Deutschland
Postfach 1630
D-75406 Mühlacker
Tel.: 07041 861916
Fax.: 07041 817245
[email protected]

Bankverbindung:
Sparkasse Pforzheim Calw
Konto: 989681
BLZ: 66650085
Vereinsitz Mühlacker.
Reg.: VR619 GR 6/04
Amtsgericht Maulbronn

18.03.2006 யேர்மனியில் நடைபெற இருக்கும் அனைத்துலக பெண்கள் தின நிகழ்வின் விளம்பரம்

Women & the Struggle for Tamil Eelam

Declaration on International Womens Day
Tamilische Frauen Organisation - Deutschland

தமிழ்ப்பெண்கள் அமைப்பு - யேர்மனி
Tamil Women Organization - Germany
[also in PDF German and Tamil]

8 March 2006
[see also Rape & Murder of Eelam Tamil Women ]


சர்வதேசமே விழித்துக்கொள்

ஈழத்தமிழ் பெண்கள் மீது இலங்கை அரசின் இராணுவத்தினர் தொடர்ந்து நடத்திவரும் மனித உரிமை அத்துமீறல் நடவடிக்கைகள் குறித்து யேர்மன் தமிழ்ப்பெண்கள்
அமைப்பினராகிய நாம் மிகுந்த வருத்தத்துக்கு உள்ளாகி இருப்பதுடன், எமது வன்மையான கண்டனத்தையும் தெரிவிக்கின்றோம்.

இலங்கை அரசின் சனனாயக அத்துமீறல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதற்கான உடனடி அழுத்தத்தினை
யேர்மன் அரசு மேற்கொள்ள வேண்டுமென இவ் அறிக்கை மூலம் கோரிக்கை விடுகின்றோம்.

இலங்கை அரசின் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும். வன்செயல்களால் ஈழத்தமிழ்ப் பெண்கள் வயது வேறுபாடு இன்றிப் பாதிப்புக்குள்ளாகிக் கொண்டு இருக்கின்றார்கள்.

எங்கள் சொந்த நாட்டில் எமது சகோதரிகள் காரணமற்றுக் கைது செய்யப்பட்டுப் பின் காணாமற் போயுள்ளனர். தமிழ்ப் பகுதியில் உள்ள இலங்கை இராணுவத்தின் காவலரண்களைத் தாண்டிச் செல்லும் பெண்கள் உடல், மன இரீதியான சித்திரவதைகளுக்கு உள்ளாகின்றார்கள்.

அத்துடன் இராணுவ அச்சுறுத்தல்கள்,பாலியல் கொடுமைகள், கொலைகள் போன்றவற்றை அனுபவித்தும் பார்த்தும் மனவுளைச்சலுக்குள்ளாகி மனநோயாளிகளாகியும் உள்ளனர். பெற்றோர்களின் அல்லது பாதுகாவலரின் பராமரிப்புடன் உடல், உள ஆரோக்கியத்துடன் வளர்த்தெடுக்கப்படவேண்டிய குழந்தைகள் எவ்வித தயவு தாட்சணியமுமில்லாத இனஅழிப்பு நடவடிக்கைகளுள் சிக்குண்டு சந்தித்த அவலங்கள் தமிழ்த் தேசிய
இனத்தின் எதிர்கால சந்ததியின் வாழ்வையே கருவறுக்கும் பேரினவாதத்தின் அப்பட்டமான நாசகார முயற்சியாகும்.

இவ்வாறாக ஒரு இனத்தின் வாழ்வுக்கு மூலாதாரமாக விளங்கும் பெண்களையும் குழந்தைகளையும் அழித்துவிடுவதன் மூலம் அல்லது வலுக்குன்றியவர்களாக மாற்றி விடுவதன் மூலம் அந்த இனத்தின் ஆணிவேரையே ஆட்டம் காணச்செய்யலாம் என்பதுதான் உலகெங்கினும்
ஆக்கிரமிப்பாளர்கள் கடைப்பிடிக்கும் பொதுவான விதி.

அதனையே சிங்கள பேரினவாத ஆக்கிரமிப்பாளர்களும் தமிழ்த்தேசிய இனத்தின் மீது பிரயோகித்தார்கள்.

இவற்றுக்கான சில உண்மைத் தகவுகளை வெளியுலகுக்கு வெளிப்படுத்த வேண்டிய கடப்பாடு யேர்மன் தமிழ்ப்பெண்களாகிய எமக்கு உண்டு. அவற்றை இங்கு தருகின்றோம்.

• 31.12.1996 அன்று சிவசோதி என்ற பெண் மீது இலங்கை இராணுவம் பாலியல் வல்லுறவு புரிந்து படுகொலை செய்துள்ளதுள்ளது.

• 17.05.1997 இல் கோணேஸ்வரி எனும் குடும்பப் பெண் இராணுவத்தால் கொடுமையான முறையில் கற்பழிக்கப்பட்டுப் பின் அவளது பெண்ணுறுப்பில் வெடிகுண்டு வைத்துக் கொல்லப்பட்டாள்.

• 05.09.1997 இல் 7வயதுப் பாடசாலைச் சிறுமி ஆறு இராணுவத்தால் தோட்டவெளியில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு சிதைத்துக் கொல்லப்பட்டாள்.

• 16.12.1998 இல் பிரேமலதா இலங்கை இராணுவத்தின் காமவெறியாட்டத்தினால் கொல்லப்பட்டார்.

• 17.03.1998 இல் கேட்கும்,பார்க்கும் சக்தியை இழந்த பெண்ணாண செல்வராணி என்பவர் மீது பாலியல் வல்லுறவு புரிந்து, இலங்கை இராணுவம் கொன்றுள்ளது.

• 06.08.1997 இல் பாடசாலை மாணவியான கிருசாந்தி என்பவள் பாடசாலையில் இருந்து வீடு திரும்பும் போது இராணுவ முகாமுக்கு இழுத்துச் செல்லப் பட்டு கொடுமையான முறையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்து புதைக்கப் பட்டார். இவளைப்பற்றி விசாரிக்கச் சென்ற இவளது தாயாரையும் கொன்று புதைத்துள்ளனர்.

• 14.04.1998 இல் வசந்தி எனும் குடும்பப்பெண் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள். இதை இராணுவம் செய்ததற்கான சாட்சியாக இருந்த பெண்ணையும் இராணுவத்தினர் சித்திரவதை செய்து கொன்றது.

• 03.10.1998 இல் இராயேஸ்வரி எனும் பெண், இராணுவத்தின்
காமவெறியாட்டத்துக்குப் பலியானாள்.

• 28.12.1999 இல் கோவிலில் பூஸை செய்யும் குடும்பத்தைச் சேர்ந்த சாரதாம்பாள் எனும் பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி மரணமடைந்தாள்.

• ஒரு குடும்பப் பெண்ணும் பிள்ளைகளின் தாயுமயிருந்த ஒரு பெண் கற்பழிக்கப்பட்டு செம்மணி புதைகுழியில் புதைக்கப்பட்டாள்.

இடம்பெயர்ந்த தமிழ்ப்பெண்களாக இன்று 360445 பேர் காணப்படுகின்றார்கள். அது மட்டுமன்றி விதவைகளாக 67208 பெண்கள் கஸ்ரத்தின் மத்தியில் தம் குடும்பங்களை தாமே தாங்கி நிற்பவர்களாக உள்ளனர்.

இதைவிட பல நூறுபெண்களை இராணுவத்தரப்பினர் கொடுமையான முறையில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கியும் கற்பழிக்கப்பட்டும் கொல்லப்பட்டுள்ளனர்.

பெண்ணானவளின் உடலும் அந்தரங்கங்களும் தனித்துவமானது. ஆழமான மனவுணர்வோடு தொடர்பு கொண்டது.

ஒரு பெண் பலவந்தமாகப் பாலியல் வல்லுறவுக்கு உட்படும்போது, தனக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமையினை வெளியில் சொல்லமுடியாமல் மனதினுள் அடக்கிதைத்து இறுதியில் மனநோயாளிகள் ஆகிவிடுகிறார்கள். இப்படியான
வேதனைமிகுந்த நிகழ்வுகள் வயதுவேறுபாடு இன்றி நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

இன்று இலங்கை இராணுவம் மாணவர்களைப் பலவழிகளில் துன்புறுத்துகின்றது. இன்று மாணவர்களுக்கு பாதுகாப்பின்றிய கல்விக்காலமாகவும் எதிர்காலம் என்பது பயங்கரமானதாகவும் ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இராணுவக் காவலரண்களில் அடையாளஅட்டை பார்க்கும் சந்தர்ப்பத்தில் மாணவிகளின் அங்கங்களைத் தொட்டு அசிங்கமான முறையில் நடந்து கொள்வதுடன் மாதவிலக்கு நாட்களில் பாவிக்கும் துயில்களைக் களற்றிக் காட்டுமாறு வற்புறுத்தப்படுவதால் பாடசாலைக்குச் செல்லாது வீட்டிலே முடங்கிய மாணவர்களும் உண்டு.

இலங்கை அரசுக்கும் தமிழர் தரப்புக்கும் இடையே யுத்தநிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டது. அவ் யுத்த நிறுத்த காலத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைச் சம்பவங்களை சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டு இருந்தனர் அவற்றில் சிலவற்றை அறியத்தருகின்றோம்.

• 05.08.2005 உயர் பாதுகாப்பு வலையத்தில் உள்ள ளு டு யு 223 பிறிகேட் தலைமையலுவகத்தில் இருந்து 50 மீற்றர் துராத்தில் உள்ள மெதடிஸ் கல்லூரி வகுப்பறை ஒன்றில் வைத்து மாணவி ஒருவரை சிறிலங்கா இராணுவம் கற்பழித்து படுகொலை செய்தது.

• 28.10.2005 இல் இராணுவ காவலாரனில் இருந்த இராணுவம் வீட்டில் தனித்திருந்த பெண் ஒருவரை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்த முயன்ற போது அயலவர்கள் அவ்விடத்தில் ஒன்று கூடியதால் இராணுவம் ஒடி ஒழித்தது.

• 13.12.2005 இல் எழுதுமட்டுவாள் எனும் கிராமத்தில் உள்ள ளு டு யு 555 பிறிகேட் இராணுவ முகாமில் உள்ள சிப்பாய் ஒருவன் இளம் பெண்ஒருவரை கடத்திச் சென்றபோது அக்கிரமா மக்கள் அப்பெண்ணை மீட்டனர்.

• 16.12.2005 இல் புங்குடுதீவு எனும் இடத்தைச் சேர்ந்த தர்சினி எனும் இளம் பெண் சிறிலங்கா கடற்படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டுகொல்லப்பட்டார்.

1958 இல் திட்டமிட்டு இலங்கை அரசால் ஆரம்பிக்கப்பட்ட இனக்கலவரத்தில் இலங்கை இராணுவம் தமிழ்ப் பெண்ணின் மார்பில் சூடாக்கிய இரும்புக்கம்பியால் சிங்கள ஸ்ரீ என எழுதிக் கொடுமை புரிய ஆரம்பித்ததில் இருந்து இன்றுவரை தமிழ்ப்பெண்கள் சிங்கள ஆளும்வர்க்கத்தால் பாதிப்படைந்து கொண்டிருக்கின்றார்கள்.

சிறைகளில் வாடும் பெண்களின் மீதான சித்திரவதை நடவடிக்கைகளில் பால்நிலை வித்தியாசம் பார்க்கப்படுவதாகத் தெரியவில்லை. ஆண்களுக்கு நடக்கும் அதே சித்திரவதைகளே பெண்களுக்கும் நடக்கின்றது.

செஞ்சிலுவைச்சங்கம், மனித உரிமை அமைப்புகள் சிறைக்கைதிகளைப் பார்வையிடச் செல்லும்போது அவர்களுக்குக் காட்டும் சிறைக்கூடம் வேறாகவும் கொடூரமான சித்திரவதைகள் நடக்கும் சிறைக்கூடம் வேறாகவும் இருக்கின்றது.

பெண்களுக்கான விசாரணைகளை, சித்திரவதைகளை பெண் காவல்துறையினரே மேற்கொள்ள முடியும். ஆனால் ஒருபெண் கூட அந்த இடத்தில் இல்லாமல் ஆண் காவல்துறையினரே மேற்கொள்கின்றனர். அத்துடன் சிறைகளில் உள்ள பெண்களை ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தும் பெண் காவல்துறையினரின் சீர்கேடு.

இது அத்தனையையும் தாங்கிக்கொண்டு இன்றும் பெண்கள் சிறைகளில் வாடுகின்றனர்.

இதே போன்று பலதாக்கங்கள் தமிழ்ப்பெண்கள் மீது சிறிலங்கா இராணுவத்தால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இலங்கை இராணுவம் பாதுகாப்பு பிரதேசம் எனும் பேர்வையில் ஆக்கிரமிப்புச் செய்து பெண்கள் மீதான வன் செயல்களைப் புரிகின்றது.

அதனால் தமிழப் பெண்கள் உடல், மனரீதியாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பதுடன் இராணுவத்தால் படுகொலையும் செய்யப்படுகின்றர்கள். தமிழ் பெண்களின் வாழ்வு அவர்கள் வாழும் பிரதேசங்களிலேலே கேள்விக்குறியாக உள்ளது.

சிறிலங்கா இராணுவம் பெண்கள் மீதான வன்செயல்களை உடன் நிறுத்த வேண்டும்.

பெண்களின் இயல்பானவாழ்வு மீண்டும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்.இராணுவ கெடுபிடிகளால் தாம் குடியிருந்த இடங்களை விட்டு இடம் பெயர்ந்து வேற்றிடங்களில் இருந்து துன்புறும் மக்கள் தங்கள் சொந்த இடங்களில் குடியேறி நிம்மதியாக வாழவேண்டும்.

சிங்கள பேரினவாத ஆட்சியாளர்கள் தமிழ்ப்பெண்கள் மீது மேற்கொண்டுவரும் இராணுவ அடக்குமுறைகள் தங்களால் தட்டிக்கேட்கப்பட வேண்டியவை ஆகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் உரிமைப் பிரகடனத்திலுள்ள இன, மத,மொழி,நிறம்,பால் என்ற வேறுபாடு இன்றி அனுபவிக்கும் வாழ்வியல் உரிமைகளை தமழ்ப்பெண்களாகிய நாம் அனுபவிக்கும் உரிமை அற்றவர்களாக இலங்கை அரசால் ஆக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.

தமிழ்ப்பெண்களாகிய நாம் உங்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். தாய்நாட்டில் தமிழ்ப்பெண்கள் அடிப்படை உரிமைகளுடன் உயிர்வாழ்வதற்கான தீர்வுகள்
ஏற்படவேண்டும்.

குறிப்பிட்ட கொடுஞ்செயல்களுக்கான தீர்வுகளையும் கோரிக்கைகளுக்கான தீர்மானமான பதில்களையும், நாம் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றோம். இதற்காக யேர்மன் அரசும் தகுந்த வகையில் தமது செயற்பாடுகளை மேற்கொள்ளும் என உறுதியுடன் நம்புகின்றோம்.

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home