"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nation > Service to Mankind is Service to God - மக்கள் தொண்டே மகேசன் தொண்டு
Spirituality & the Tamil Nation
Service to Mankind is Service to God
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு
Narayan & Naradar - A Story
Contributed by Velmurugan Periyasamy
ஒரு சிறிய கதை. எங்கோ படித்தது. நாரத முனிவர் நாராயணனின் நாமத்தை அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருப்பதால் தன்னை மிஞ்சிய பக்தன் எவனும் இங்கு கிடையாது என்ற அகந்தை அவருக்கு வந்து விட்டது. ஒருமுறை நாராயணனிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே இதைப் பற்றிச் சொல்லிவிட்டார். நாராயணன் பார்த்தார். அப்படி னைக்கிறாயா நீ? பூலோகத்தில் நல்லமுத்து என்ற ஒரு விவசாயி இருக்கிறான். அவன்தான் எல்லா உலகங்களிலும் மிகப் பெரிய பக்தனாகக் கருதப் படுகிறான் என்று சொன்னார். நாரதருக்குக் கோபம் வந்து விட்டது. ஓர் அற்ப மானிடன் என்னை விடச் சிறந்த பக்தனாக இருக்கிறானா? போய்ப் பார்த்து விடலாம் என்று பூலோகத்துக்கு வந்தார். நல்லமுத்து என்ன செய்கிறான், எப்படி நாராயணனை வணங்குகிறான் என்று பார்க்க விரும்பி அவன் வீட்டிற்குள் நுழைந்தார். அவரைத்தான் மற்றவர்கள் பார்க்க முடியாதே? நல்லமுத்துவும் தூங்கிக் கொண்டிருந்தான். அவருக்கு நல்ல வசதியாகப் போய்விட்டது.ஓர் ஓரத்தில் அமர்ந்து பார்க்கத் தொடங்கினார். சிறிது நேரத்தில் விடிந்தது. நல்லமுத்து எழுந்தான். வீட்டின் பின்புறம் போனான். பல்லைத் தேய்த்து விட்டு ஏரை எடுத்துத் தோளில் வைத்துக் கொண்டு எகண்ணம்மாஸ்ரீ நான் வயலுக்குப் போகிறேன்ஸ்ரீஎ என்று தூங்கிக் கொண்டிருந்த மனைவியிடம் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டான். நாரதருக்கு ஏமாற்றமாகி விட்டது.அனைத்து உலகங்களிலும் சிறந்த பக்தன் என்றாரே பெருமாள்ஸ்ரீ இவன் என்னடாவென்றால் காலையில் எழுந்ததும் ஒருமுறை கூட நாராயணன் பெயரைச் சொல்லவில்லையேஸ்ரீ குறைந்தது இரண்டு ம நேரமாவது பூசை செய்வான் என்றல்லவா எண்னேன் என்று குழம்பினார். சரி,பார்க்கலாம் என்று அவனைப் பின் தொடர்ந்து போனார். நல்லமுத்து வேலையில் மும்முரமாக இருந்தான். உழுது கொண்டிருக்கும்போது கண்ணம்மா சாப்பாடு கொண்டு வந்தாள். சாப்பிட அமரும்போது சாமி கும்பிடுவானாயிருக்கும் என்று நாரதர் னைத்தார். அதுவும் இல்லை. நல்லமுத்து வந்தான். எசீக்கிரம் சோத்தைப் போடுஎ என்றான். வேகவேகமாக அள்ளி உண்டு வாய்க்காலில் கை கழுவி விட்டுத் திரும்பவும் உழப் போய்விட்டான். வேலை முடிய மாலையாகி விட்டது. நல்லமுத்து கிணற்றில் போய்க் குளித்தான். ஓகோ, இனிமேல் போய்ப் பெரிய பூசையாக நடத்திவிடுவான் போலிருக்கிறதுஎ என்று நாரதர் எண்னார். நல்லமுத்து பின்னாலேயே வீட்டுக்குப் போனார். அப்படி ஒன்றும் தெரியவில்லை. நல்லமுத்து மாடுகளுக்குத் தீனி போட்டான்இ கண்ணம்மா கேட்டதால் கடைக்குப் போய் மண்ணெண்ணெய் வாங்கிவந்தான்இ அவன் அப்பாவுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான்இ அவனது மகன் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வந்து சொன்ன கதைகளைக் கேட்டுக் கொண்டிருந்தான். நாரதருக்குக் கோபம் வந்து விட்டது. என்னடா பெருமாள் இப்படி ஒரு முடனின் வீட்டுக்கு நம்மை அனுப்பி வைத்துவிட்டாரே என்று வருந்தினார். இவனைக் கவனித்துக் கொண்டிருந்த மும்முரத்தில் நாராயணத் துதியைக் கூட மறந்து விட்டோமே என்று கலங்கினார். நல்லமுத்து குடும்பத்துடன் சேர்ந்து இரவு உணவை முடித்தான். நாரதர் காத்துக் கொண்டிருந்தார். பாயில் வந்து அமர்ந்த நல்லமுத்து நாராயணா என்றான். மறுமிடமே படுத்து உறங்கத் தொடங்கி விட்டான். நாரதருக்குச் சொல்லமுடியாத கோபம். நேராக நாராயணனிடம் போனார். எநீங்கள் ரொம்ப மோசம். அந்த நல்லமுத்து இன்று முழுக்க ஒரே ஒரு முறைதான் உங்கள் பெயரைச் சொன்னான். அவனைப் போய்ச் சிறந்த பக்தன் என்று சொன்னீர்களே என்று கேட்டார். நாராயணன் சிரித்து விட்டு நாரதரிடம் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொடுத்தார். அதில் எண்ணெய் ததும்பிக் கொண்டிருந்தது. எஇதில் சொட்டுக் கூடச் சிந்தாமல் இந்த உலகைச் சுற்றி நீ வந்தால் உன் கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன்எ என்று நாரதரிடம் சொன்னார் நாராயணன். நாரதர் எப்படியாவது இந்தப் புதிரை அவிழ்க்க வேண்டுமென்ற எண்ணத்தில் கிண்ணத்தை வாங்கிக் கொண்டு புறப்பட்டார். ஒருவழியாக எண்ணெய் சிந்தாமல் கிண்ணத்தைத் திரும்பவும் நாராயணனிடம் கொண்டுவந்து சேர்த்தார். இப்போதாவது சொல்லுங்கள். நல்லமுத்து எந்த விதத்தில் என்னை விட உயர்ந்த பக்தன்? என்று கேட்டார். இந்த எண்ணெய்க் கிண்ணத்தை எடுத்துக்கொண்டு உலகைச் சுற்றிவந்தபோது என் பெயரை எத்தனை முறை உச்சரித்தாய் நாரதா?எ என்று வினவினார் நாராயணன். நாரதர் திகைத்தார். எண்ணெய் சிந்திவிடக்கூடாது என்ற கவனத்தில் இருந்ததால் உங்கள் பெயரை உச்சரிக்கவில்லை பெருமானே என்று உண்மையைச் சொன்னார். பெரிதாக நகைத்த நாராயணன் விளக்க முற்பட்டார்ஈ எபார்த்தாயா? உனக்கு நான் தந்தது ஒரே வேலை. அதைச் செய்யும்போதே நீ என்னை மறந்து விட்டாய். ஆனால் நல்லமுத்துக்கு ஆயிரம் கவலைகள். வீட்டைக் கவனிக்க வேண்டும். மாட்டைக் கவனிக்க வேண்டும். வயலைக் கவனிக்க வேண்டும். தந்தையை, மனைவியை, வேலை செய்பவர்களை,பிள்ளையை, இப்படி எத்தனையோ பேரை அவன் கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இருந்தாலும் அவன் உறங்கப் போகும்போது ஒரு முறையாவது என் பெயரைச் சொல்கிறான். இந்தக் கவலைகள் ஏதுமில்லாத நீ என் பெயரைச் சொல்லிக் கொண்டே இருப்பது எப்படி அதை விடச் சிறந்ததாகும்? எவனொருவன் தன் கடமைகளை ஒழுங்காகச் செய்கிறானோ, அவன் என்னை நினைக்காவிடினும் என் சிறந்த பக்தன் ஆகிறான். என்னை நினைத்துக் கொண்டே தன் கடமைகளை விடுப்பவனை மனிதன் என்று கூட நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். இவ்வாறாக நாராயணனின் விளக்கத்தைக் கேட்டதும் நாரதரின் அகந்தை அகன்றது. பரம்பொருளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். பிறகு நல்லமுத்துவின் கதையை இனிய பாடல்களில் உலகத்தாருக்கு விளக்கிப் பாடித் தன் தவறுக்குப் பரிகாரம் செய்து பகவானின் கருணையைப் பெற்றார் என்பது கதை. மக்கள் தொண்டே மகேசன் தொண்டு. |