"To us all towns
are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Tamils - a Trans State Nation > The Tamil Heritage > Tamil Militarism > தமிழர் கோட்டைகள்
Tamil Militarism தமிழர் கோட்டைகள் தமிழர் கோட்டைகள் தொல்பழங்கலாம் முதல் வெள்ளையர்கள் ஆளுகை முடியும் வரையிலான தமிழர் வரலாறு நெடுகிலும் 'கோட்டைகள்' முக்கியத்துவம் பெற்றிருந்தன. தமிழர் கோட்டைகள் தரையில் கட்டப்பட்டவை, தண்ரால் சூழப்பட்டவை, மலைமீது கட்டப்பட்டவை, காடுகளுக்கு இடையில் கட்டப்பட்டவை என்று நான்கு வகையானவை. எல்லைப்புறங்களில் காடுகளில் 'படைகள்' தங்குவதற்காக கோட்டைகள் அமைக்கப்பட்டன. அவை படைப்பற்று எனப்பட்டன. இக்கோட்டைகள் செலவுக்காக கோட்டைப் பணம் என்று வரி வசூலிக்கப்பட்டது. சோழன் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி ஆகியோரது பேரில் ஆவூர் கோட்டையும், உறையூர் கோட்டையும் முற்றுகையிடப்பட்டன. கோட்டைகளை முற்றுகையிடுபவர் உழிஞையார் எனப்படுவர். முற்றுகையிடப்படுபவர் நொச்சியார் எனப்படுவர். விஜயநகரம் ஏழு மதில்களைக் கொண்டிருந்தது. கோட்டைக்குள்ளிருந்தவர்களுக்கு அனைத்து வசதிகளும் முழுமையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மூன்றாம் குலோத்துங்கன் மதுரைக் கோட்டையை அழித்தான், மாறவர்மன் சுந்தரபாண்டியன் தஞ்சை, உறையூர் கோட்டைகளை அழித்தான். தமிழர்கள் தங்களுக்குள் நடத்திய போர்களினால் கலை உணர்வோடு, தொழில்நுட்பத்திறனோடு அமைந்த தமிழர் கோட்டைகள் பல பாழடைந்திருக்கின்றன. சங்ககாலக்
கோட்டைகள்/
பேரரசுக்
கோட்டைகள்: வேலூர், திமிரிக் கோட்டை, தக்கோலம், திருஇடைச்சுரம், நெடுங்கல் கோட்டை, சாலவாக்கம், திருக்கழுக்குன்றம், வீராபுரம் கோட்டை, திருமானர்க்குழி, சேன்தமங்கலம், குறும்பன் கோட்டை, செஞ்சி, வேலூர் வாயில், இராஜகிரி, கிருஷ்ணகிரி, சந்திரகிரி, திருவய்யாறு, நீடாமங்கலம், மேலைத்திருக்காட்டுப் பள்ளி, பந்தணை நல்லூர், அறந்தாங்கி, பொன்பற்றி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், தம்பிக் கோட்டை, பரக்கலாகி கோட்டை, வல்லிக்கோட்டை, மகாதேவிப்பட்டினம், திருச்சி, புதுக்கோட்டை, பொற்பானைக் கோட்டை, கீழநிலை, ஆவூர், நார்த்தா மலை, செந்தலை, ஆத்தூர்க் கோட்டை, ராயகோட்டை, தென்கணிக் கோட்டை, கோட்டைமலை, மகிமண்டல துர்க்கம், இளவன் பதி, சிவகாசி, இராமகிரி, கோவில்பட்டி, முதலியார்க் கோட்டை. சிற்றரசர்களின் கோட்டைகள் இரண்யவர்மன் கோட்டை, விளாங்குடி, முள்ளிக்குப்பம், உதச்சிக் கோட்டை, மேலூர், காரமடை பாளையக் காரர்களின் கோட்டைகள் பாஞ்சாலக்குறிச்சி, சிவகிரி, பேருரையூர், போடி நாயக்கனூர், மருதூர், வடகரை, நெய்க்காரப்பட்டி, நெல்கட்டும் செவ்வல், வெங்கலக் குறிச்சிக் கோட்டை, ஆவுடையார்புரம் கோட்டை, வாசுதேவ நல்லூர், பாளயங் கோட்டை, களக்காடு, தலைவன் கோட்டை, திருவில்லிப்புத்தூர், திண்டுக்கல், கொல்லங்கொண்டான். அய்ரோப்பியர்களின்
கோட்டைகள்/
சேதுநாட்டுக்
கோட்டைகள் திப்புசுல்தான் கோட்டை, கோவர் கோட்டை, ஆண்டிக்கரைக் கோட்டை, பொட்டநேரில் கோட்டை, கோட்டையூர், நாமக்கல் கோட்டை, சேலம் கோட்டை, கிருஷ்ணகிரி, சங்ககிரி, கள்ளக்குறிச்சி, ஆரணி, எலவானாசூர்க் கோட்டை, வந்தவாசல் கோட்டை, ஆற்க்காடு, துத்தப்பட்டு, கோவளம் கோட்டை, எழும்பூர், வழுதாவூர்,கருங்குழி, ஆலம்பறைக் கோட்டை, கோட்டக்குப்பம், கிள்ளை, வெள்ளப்பட்டி, இராமநாதபுரம், திருப்புல்லானை, அழகன்குளம், பாம்பன் கோட்டை, சிவகங்கை கவுண்டன் கோட்டை, கமுதி, திருப்பத்தூர், சங்கரபுரக் கோட்டை, உறுதிக் கோட்டை, ஓடாநிலைக் கோட்டை, நிலக்கோட்டை, இராஜதானிக் கோட்டை, லிங்கப்ப நாயக்கன் கோட்டை, கைத்தியன் கோட்டை, வேடசந்தூர், திருவண்ணாமலை முத்தால் நாயக்கர் துர்கம், வடமதுரைக் கோட்டை, சித்தியன் கோட்டை, வேல்வார் கோட்டை, பிள்ளைக் கோட்டை, நத்தம், தேவ கோட்டை, ஸ்ரீ பாலக் கோட்டை. கோட்டைகள் குறித்த கூடுதல் தகவல்கள் : தென்னிந்தியக்
கோட்டைகள்:
சி.எஸ்.
முருகேசன்
|