சந்தனத் தென்றலை
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்
சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌளனமா மௌளனமா
அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்கத்தானே புது ஆயுள் வேண்டுமே
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்...என்ன சொல்லப் போகிறாய்
இதயம் ஒரு கண்ணாடி உனது பிம்பம் விழுந்ததடி
இதுதான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி
கண்ணாடி பிம்பம் கட்ட கயிர் ஒன்றும் இல்லையடி
கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி
நீ ஒன்று சொல்லடி பெண்ணே இல்லை நின்று கொல்லடி கண்ணே
எந்தன் வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில்
என்னைத் துரத்தாதே உயிர் கரையேறாதே
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்...என்ன சொல்லப் போகிறாய்
சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌளனமா மௌளனமா
விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது
பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி
இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத பாகம் எது
கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி
பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி
என் தளிர் மலரே இன்னும் தயக்கமென்ன
என்னைப் புரியாதா இது வாழ்வா சாவா
என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய் நியாயமா
என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய் மௌளனமா மௌளனமா
என்ன சொல்லப் போகிறாய்
கண்ணைக் கட்டிக் கொள்ளாதே
வி...டு...த...லை...விடுதலை
வி...டு...த...லை...விடுதலை
கண்ணைக் கட்டிக் கொள்ளாதே
கண்டதையெல்லாம் நம்பாதே
காக்கைக் குயிலாய் ஆகாதே தோழா
தாடிகளெல்லாம் தாகூரா மீசைகளெல்லாம் பாரதியா
வேஷத்தில் ஏமாறாதே தோழா
நம் மடியினில் கனமில்லையே...பயமில்லையே...
மனதினில் கரையில்லையே...குறையில்லையே...
நினைத்தது முடியும் வரை...
(கண்ணைக் கட்டிக்)
வி...டு...த...லை...விடுதலை
வி...டு...த...லை...விடுதலை
தோழா...தோழா...லாலல்லா
தோழா...தோழா...லாலல்லா
மக்கள் மக்கள் என் பக்கம் மாலைத் தென்றல் என் பக்கம்
சிட்டுக் குருவிகள் என் பக்கம் செடிகள் கொடிகள் என் பக்கம்
ஏழைத் தமிழர் என் பக்கம் என்றும் தாய்க்குலம் என்பக்கம்
எட்டுத்திக்கும் என் பக்கம் அட கலங்காதே
கோழை மட்டுமே கத்தியெடுப்பாம் வீரன் மட்டும் சத்தியத்தை நம்புவானே
ஏழை வர்க்கமே இணைந்துவிட்டால் கொடிகளும் கோட்டையும் நொடியினில்
மாறிவிடும்
(கண்ணைக் கட்டிக்)
வெளியே போகச் சொல்லாதே நான் வீழ்வேன் என்று எண்ணாதே
தங்கக் காசை வீசுவதால் தர்மம் கையை ஏந்தாதே
வெள்ளி மழை சிந்தும் மழை மேகம் விளம்பரம் கொடுத்தால் பொழியாது
மக்கள் சக்தி காசுக்கு வளையாது அட பணியாது
விடிவெள்ளிதான் முளைக்கும்வரை இருள் மட்டும் ஆட்சியில் இருக்குமடா
கிழக்குமுகம் வெளுத்துவிட்டால் இருளுக்கு முடிவுண்டு எங்களுக்கு
விடிவுண்டு
(கண்ணைக் கட்டிக்)
வி...டு...த...லை...விடுதலை
வி...டு...த...லை...விடுதலை
தோழா...தோழா...லாலல்லா
தோழா...தோழா...லாலல்லா
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்
விரல் தொடும் தூரத்திலே வெண்ணிலவு கண்டுகொண்டேன்
வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தில் விழுந்து நிறைந்தால் வழிந்தால்
மகிழ்ச்சி
வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தை உடைத்தால் உயிரை உடைப்பாள் ஒருத்தி
என் கண் பார்த்தது என் கை சேருமோ
கை சேராமலே கண்ணீர் சேருமோ
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்
மலர்மஞ்சம் விழி கெஞ்சும் மனம் அஞ்சுமல்லவா
உயிர் மிஞ்சும் இவள் நெஞ்சம் உன் தஞ்சமல்லவா
உன் தனிமைக் கதவின் தாள் நீக்கவா
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்
மேகம் திறந்தால் அதற்குள் உன் முகம் பார்க்கிறேன்
பூக்கள் திறந்தால் அதற்குள் உன் குரல் கேட்கிறேன்
கண்களைத் திறந்துன் கனவுகள் வளர்க்கும்
காதலின் விரல்கள் கல்லையும் திறக்கும்
உன்னைத் தேடியே இனி எனது பயணமோ
எந்தன் சாலைகள் உன் வீட்டில் முடியுமோ
ஏ கனவு மங்கையே உனது மனது எனது மனதில் இணையுமோ
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்
விரல் தொடும் தூரத்திலே வெண்ணிலவு கண்டுகொண்டேன்
ஆ...
நதியின் தேடல் கடைசியில் கடல் காண்பது
உயிரின் தேடல் கடைசியில் உனைக்காண்பது
கடல் கொண்ட நதியோ முகம் தனை இழக்கும்
நான் உன்னில் கலந்தால் புது முகம் கிடைக்கும்
நட்சத்திரங்களை ஒரு நாரில் கட்டுவேன்
எந்த நேரமும் உன் கதவு தட்டுவேன்
ஏ காதல் தேவனே எனது இமையில் உனது விழிகள் மூடுவேன்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்...கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்...காதல் முகம் கண்டுகொண்டேன்
விரல் தொடும் தூரத்திலே...விரல் தொடும் தூரத்திலே
வெண்ணிலவு கண்டுகொண்டேன்...கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்...காதல் முகம்
கண்டுகொண்டேன்
கண்ணாமூச்சி ஏனடா
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா (2)
அந்த நதியின் கரையை நான் கேட்டேன் அந்தக் காற்றை நிறுத்தியும் கேட்டேன்
(2)
வான் வெளியைக் கேட்டேன் விடையே இல்லை (2)
இறுதியில் உன்னைக் கண்டேன் இருதயப் பூவில் கண்டேன் (2)
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா
என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா (2)
எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா
நெஞ்சின் அலை உறங்காது
உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா..ஆ
உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா
உன் இமை கொண்டு விழி மூட வா
உன் உடல்தான் என் உடையல்லவா
பாற்கடலில் ஆடிய பின்னும் உன் வண்ணம் மாறவில்லை இன்னும் (2)
என் நெஞ்சில் கூடியே நிறம் மாறவா
என்னுயிரில் நீ வந்து சேர்க உதடுகள் ஈரமாய் வாழ்க
கலந்திட வா
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா
வான்மழை விழும்போது மலைகொண்டு காத்தாய் (2)
கண்மழை விழும்போது எதிலென்னைக் காப்பாய்
பூவின் கண்ணீரை ரசிப்பாய்
நான் என்ன பெண்ணில்லையா என் கண்ணா அதை நீ காணக் கண்ணில்லையா
உன் கணவுகளில் நானில்லையா
தினம் ஊசலாடுதென் மனசு அட ஊமையல்ல என் கொலுசு
என் உள் மூச்சிலே உயிர் வீங்குதே
என்னுயிர் துடிக்காமலே காப்பது உன் தீண்டலே
உயிர் தர வா
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா
ஸ்மையையையை ஸ்மையையை
ஸ்மையையையை ஸ்மையையை மனதைத் திருடி விட்டாய்
ஸ்மையையையை ANT விழியாய் மனதைத் திருடி விட்டாய்
ஸ்மையையையை ஸ்மையையை ஊ ஊ ஊ ஊ ஊ (2)
ஸ்மையையையை ANT விழியாய் மனதைத் திருடி விட்டாய்
ஒரு Eண்IEEற் பூத்த புன்னகையில் ஜீவன் அளந்துவிட்டாய்
பதினாலில் பூவானேன் பதினேழில் தேனானேன் இந்த வாக்குமூலம் எதற்கு
புல்வெளியில் தாகம் நான் பூஞ்சாரல் மேகம் நீ
என்னை நனைத்துப் போகணும் கொஞ்சம் எந்தன் வேரில் உயிர் கொஞ்சம் மிஞ்சும்
ஒரு தூரல் போடு இல்லை சாரல் போடு எந்தன் நாணம் நனையட்டுமே
ஸ்மையையையை ஸ்மையையை ஸ்மையையையையை
ஸ்மையையையை ஸ்மையையை ஊ ஊ ஊ ஊ ஊ
திறந்த வானம் திறந்த பூமி திறந்த வாழ்க்கை வா வா வா வாழ வா
ஒளித்த காதல் ஒலிப்பதில்லை உயிர்ப்பதில்லை வா வா வா வா
கண்ணிலே யே யே யே சொப்பனம் கரையுதே யே யே யே எவ்வனம்
ஏன் தாமதம் நிலாவில் பால் கொண்டு செய்த தோள் கண்டு நெருங்கி வா இன்று
யையையையா
ஸ்மையையையை ஸ்மையையை ஸ்மையையை
நெருப்பைத் தின்றால் இனிக்க வேண்டும் அதற்குப் பேர்தான் கா காதலே
இறக்க சொன்னால் சிரிக்க வேண்டும் அதற்குப் பேர்தான் கா காதலே
கூந்தலின் ஹே ஹே ஹே கரையிலே குடித்தனம் ஹோ ஹோ ஹோ கொள்ளவா பூ வாங்கிவா
தூக்கம் கலைந்தாலும் கனவு கலையாத வாழ்க்கை வாழ்கின்றேன் யேயேயேயே
ஸ்மையையையை ANT விழியாய் மனதைத் திருடி விட்டாய்
ஒரு Eண்IEEற் பூத்த புன்னகையில் ஜீவன் அளந்துவிட்டாய்
பதினாலில் பூவானேன் பதினேழில் தேனானேன் இந்த வாக்குமூலம் எதற்கு
புல்வெளியில் தாகம் நான் பூஞ்சாரல் மேகம் நீ
என்னை நனைத்துப் போகணும் கொஞ்சம் எந்தன் வேரில் உயிர் கொஞ்சம் மிஞ்சும்
ஒரு தூரல் போடு இளை சாரல் போடு எந்தன் நாணம் நனையட்டுமே
ஸ்மையையையை ஸ்மையையை ஸ்மையையையையை
ஸ்மையையையை ஸ்மையையை ஊ ஊ ஊ ஊ ஊ
கொஞ்சும் மைனாக்களே
கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே என் குரல் கேட்டு ஒன்று
கூடுங்கள் (2)
அட இன்றே வரவேண்டும் என் தீபாவளி பண்டிகை
இன்றே வரவேண்டும் என் தீபாவளி பண்டிகை
நாளை வெறும் கனவு அதில் நல்லெண்ணம் வரும்
நாம் நட்டதே ரோஜா என்றே பூக்கணும்
கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே என் குறல் கேட்டு ஒன்று
கூடுங்கள்
பகலில் ஒரு வெண்ணிலா...
பகலில் ஒரு வெண்ணிலா வந்தால் பாவமா
இரவில் ஒரு வானவில் வந்தால் குற்றமா
விடை சொல் சொல் சொல் மனசுக்குள் ஜல் ஜல் ஜல் (2)
கொஞ்சம் ஆசை கொஞ்சம் கனவு இவை இல்லாமல் வாழ்க்கையா
நூறு கனவுகள் கண்டாலே ஆறு கனவுகள் பலிக்காதோ
கனவே கை சேர வா
கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே என் குறல் கேட்டு ஒன்று
கூடுங்கள்
என் பேரைச் சொல்லியே குயில்கள் கூவட்டும்
எனக்கேற்ற மாதிரி பருவம் மாறட்டும்
பரதம் தம் தம் மனடுக்குள் டாம் டூம் டிம் (2)
பூங்காற்றே கொஞ்சம் கிழித்து எங்கள் முக வேர்வை போக்கிடும்
நாளை என்பது கடவுளுக்கு இன்று என்பது மனிதருக்கு
வாழ்வே வாழ்பவர்க்கு
கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே என் குறல் கேட்டு ஒன்று
கூடுங்கள்
அட இன்றே வரவேண்டும் என் தீபாவளி பண்டிகை
இன்றே வரவேண்டும் என் தீபாவளி பண்டிகை
நாளை வெறும் கனவு அதில் நல்லெண்ணம் வரும்
நாம் நட்டதே ரோஜா என்றே பூக்கணும்
|