ஏழை நம் நிலையை எண்ணி நொந்தாயோ? எதிர்கால வாழ்வில் கவனம் கொண்டாயோ?
நாளை உலகம் நல்லோரின் கையில், நாமும் அதில் உய்வோம் உண்மையில், மாடி மனை
வேண்டாம் கோடி செல்வம் வேண்டாம் வளரும் பிறையே நீ போதும் (வண்ண)
தூங்காதே தம்பி தூங்காதே-நீயும்
சோம்பேறி என்ற பெயர்
வாங்காதே! (தூங்)
நீ-தாங்கிய உடையும் ஆயுதமும்-பல சரித்திரக்
கதை சொல்லும்
சிறைக்கதவும், சக்தியிருந்தால் உன்னைக்கண்டு சிரிக்கும்
சத்திரந்தான் உனக்கு
இடம் கொடுக்கும் (தூங்)
கொஞ்சும் குரலும்,பிஞ்சு விரலும்
குளறிப் பேசும் நிலையும் மாறி அஞ்சும் மனமும் நாணமும் வந்து
ஆடையணிந்திடும் அறிவும் வந்து நாளும் நகர்ந்ததுமே ஓடவே-கல்வி ஏடும்
நகர்ந்திடும் கூடவே! (குழந்தை)
காலத் தாமரை போலத் தோன்றும் நிறமாகியே வானத் தாரகை நாணத் தோன்றும்
முகமாகியே வஞ்சிக் கொடிதனை மிஞ்சித் திகழும் வடிவாகியே வண்ணத்
தங்கம் மங்கத் திகழும்
வயதாகியே அறிவாகியே ஒளியாகியே தௌிவாகியே! (குழந்தை)
கத்தும் கடல் கொடுத்த முத்துச்
சரந்தொடுத்த சித்திரத் தொட்டிலிலே மலர்போல-எழில் சிந்துகின்றாளிவள்
விழியாலே!
எத்தனை நாள் பொறுத்து பத்தினியீன்றெடுத்த
முத்திரைத் தங்கம் இனி முறைபோலே-நலம் பெற்றிடவளர்வாள் பிறைபோலே!
இந்த மாநிலத்தைப் பாராய் மகனே
உந்தன்-வாழ்க்கைதனை உணர்வாய் மகனே-இளம்
மனதில் வலிமைதனை ஏற்றடா-முக வாட்டமதை உழைப்பால் மாற்றடா! (இந்த மாநில)
துயர்தனைக் கண்டே பயந்து விடாதே சோர்வை வென்றாலே துன்பமில்லை
உயர்ந்திடவே நீ உன்னையே நம்பிடுவாய் உதவி செய்வார் யாருமில்லை (இந்த மாநில)
பேதத்தைப் பேசி நேரத்தை விழுங்கும்
பித்தருமுண்டு-அவர் பக்தருமுண்டு
லாபத்தை வேண்டி ஆபத்தில் வீழும் நண்பருமுண்டு-வெறும் வம்பருமுண்டு
(இந்த மாநில)
உன்னைக்கண்டு நானாட என்னைக்கண்டு
நீயாட
உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாக
கலந்து உறவாடும் நேரமடா-ஆ...
உறவாடும் நேரமடா
கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா
கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா எண்ணத்தில் உனக்காக இடம் நான்
தருவேன் எனக்கு இனி நீ என்னென்ன தருவாய்? வல்லமை சேர, நல்லவனாக,
வளர்ந்தால் போதுமடா - ஆ... வளர்ந்தாலே போதுமடா
சித்திரப் பூப்போல
சிதறும் மத்தாப்பு தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு! முத்திரைப்
பசும்பொன்னே ஏனிந்த சிரிப்பு? முகமோ மலரோ இது என்ன ரசிப்பு! மின்னொளி
வீசும் உன் எழில் கண்டால் வேறென்ன வேணுமடா-ஆ... வேறென்ன வேணுமடா (உன்னைக்)
திருடாதே! பாப்பா திருடாதே! வறுமை
நிலைக்குப் பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்துவிடாதே
சிந்தித்துப் பார்த்து செய்கையை
மாத்து-தவறு சிறிசா இருக்கையில் திருத்திக்கோ
தெரிஞ்சும் தெரியாமே நடந்திருந்தா-அது
திரும்பவும் வராமே பார்த்துக்கோ (திரு)
திட்டம் போட்டுத் திருடுற
கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது-அதைச் சட்டம் போட்டுத் தடுக்கிற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது திருடராய் பார்த்துத் திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது (திரு)
கொடுக்கிற காலம் நெருங்குவதால்-இனி
எடுக்கிற அவசியம் இருக்காது இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
பதுக்கிற வேலையும் இருக்காது ஒதுக்கிற வேலையும் இருக்காது உழைக்கிற
நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்கிற நோக்கம் வளராது-மனம் கீழும் மேலும் புரளாது! (திரு)
[திருடாதே,1961]