| 
					 
					
					குரல் : டி.எம்.எஸ்., சுசீலா 
					 
					தூவானம் இது தூவானம் இது தூவானம் 
					சொட்டு சொட்ட உதிருது உதிருது -அது 
					தாழ்வாரத்திலும் கீழ்வாரத்திலும் 
					தளதளவென வளருது 
					 
					(தூவானம்) 
					 
					பூவாடும் இளம் கூந்தலுக்குள் 
					புகுந்து புகுந்து ஓடுது 
					மேலாடைதனில் மழை விழுந்து 
					நனைந்து நனைந்து மூடுது 
					மானோடும் சிறுவிழியில் இட்ட 
					மையும் கரைந்து ஓடுது 
					தேனோடும் இதழ் மீது வந்து 
					பனித்துளி போல் தேங்குது 
					 
					(தூவானம்) 
					 
					உட்காரச் சொல்லி நான் அழைக்கும்போது 
					ஓட்டம் என்ன முன்னாலே 
					என் பக்கா மனசை இந்த வெட்கமும் வந்து 
					பாய்ந்திழுக்குது பின்னாலே 
					தக்க நேரம் வந்து விட்டது 
					தையல் போடு கண்ணாலே 
					இந்த சரசமாடக் கூடாது ஒரு 
					தாலி கட்டும் முன்னாலே 
					 
					(தூவானம்) 
					 
					   | 
					
					
						thUvAnam idhu thUvAnam idhu thUvAnam 
						sottu sotta udhirudhu udhirudhu -adhu 
						thAzvAraththilum kIzvAraththilum 
						thaLathaLavena vaLarudhu 
						 
						(thUvAnam) 
						 
						pUvAdum iLam kUnthalukkuL 
						pugunthu pugunthu Odudhu 
						mElAdaithanil mazai vizunthu 
						nanainthu nanainthu mUdudhu 
						mAnOdum siRuviziyil itta 
						maiyum karainthu Oduthu 
						thEnOdum idhaz mIdhu vanthu 
						paniththuLi pOl thEnggudhu 
						 
						(thUvAnam) 
						 
						utkAras solli nAn azaikkumbOdhu 
						Ottam enna munnAlE 
						en pakkA manasai intha vetkamum vanthu 
						pAynthizukkudhu pinnAlE 
						thakka nEram vanthu vittadhu 
						thaiyal pOdu kaNNAlE 
						intha sarasamAdak kUdAdhu oru 
						thAli kattum munnAlE 
						 
						(thUvAnam) 
						
						 
						 
  
					 
					 |