படம்: தங்கப் பதக்கம் - வருடம்: 1974
பாடியவர்: திரு.T.M.S,
இசை: திரு.M.S விஸ்வநாதன்
சோதனைமேல் சோதனை போதுமடா சாமி
வேதனைதான் வாழ்க்கையென்றால் தாங்காது பூமி
(சோதனைமேல்)
சொந்தம் ஒரு கைவிலங்கு நீ போட்டது - அதில்
பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
(சோதனைமேல்)
ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல - நான்
அவதாரமில்லையம்மா தத்துவம் சொல்ல
பரிகாரம் தேடீ நான் எவ்விடம் செல்ல - எனக்கு
அதிகாரமில்லையம்மா வானகம் செல்ல
ஒரு நாளும் நான் இதுபோல் அழுதவனல்ல - அந்தத்
திருநாளை மகன் கொடுத்தான் யாரிடம் சொல்ல!
(சோதனைமேல்)
பெண் (மருமகளாக படத்தில் வரும் பிரமிளா
தன் குரலில் வசன நடையில் சொல்வது )
மாமா, காஞ்சுபோன பூமியெல்லாம்
வத்தாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும்
அந்த நதியே காஞ்சி போயிட்டா....
துன்பப் படுற்வங்க எல்லாம்
அவங்க கவலையை தெய்வத்துக்கிட்ட
முறையிடுவாங்க, ஆனா, தெய்வமே
கலங்கிநின்னா - அந்த தெய்வத்துக்கு
யாராலே ஆறுதல் சொல்ல முடியும்?
பாட்டு தொடர்கிறது:
தானாடவில்லையம்மா சதையாடுது - அது
தந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது
பூவாக வைத்திருந்தேன் மனமென்பது - அதில்
பூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது
அடிதாங்கும் உள்ளமிது இடி தாங்குமா?
இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா?
(சோதனை மேல் சோதனை) |