பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு
படம்: கவலை இல்லாத மனிதன்பிறக்கும்போதும் அழுகின்றாய்,
இறக்கும்போதும் அழுகின்றாய்,
ஒரு நாளேனும் கவலையில்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே.
ஒரு நாளேனும் கவலையில்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே.பிறக்கும்போதும் அழுகின்றாய்,
இறக்கும்போதும் அழுகின்றாய்,இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்,
முகிலின் கண்ணீர் மழை எனச் சொலவார்,
இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்,
முகிலின் கண்ணீர் மழை எனச் சொலவார்,
இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்,
மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்
இயற்கை சிரிக்கும்பிறக்கும்போதும் அழுகின்றாய்,
இறக்கும்போதும் அழுகின்றாய்,அன்னையின் கையில் ஆடுவது இன்பம்,
கன்னியின் கையில் சாய்வததுமின்பம்,
அன்னையின் கையில் ஆடுவது இன்பம்,
கன்னியின் கையில் சாய்வததுமின்பம்,
தன்னையறிந்தால் உண்மையில் இன்பம்,
தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம்.
பெரும் பேரின்பம்பிறக்கும்போதும் அழுகின்றாய்,
இறக்கும்போதும் அழுகின்றாய்,
ஒரு நாளேனும் கவலையில்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே.


"...If 
					only Kannadasan had been born in Europe or the USA, instead 
					of Sirukuudalpatti village in the Ramanathapuram district of 
					Tamil Nadu, he probably would have become a Nobel laureate 
					in literature and received international recognition. But on 
					the other hand, Tamils would have lost a goliard, who 
					composed lyrics in Tamil for every sentimental moment they 
					experience in life...."