கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா? (கல்)
கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக்கனி ஆக்கும் உந்தன் ஒரு வாசகம்
உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா
வண்ணக் கல்லல்லவா
இல்லையென்று சொல்வதுந்தன் இடையல்லவா
மின்னல் இடையல்லவா!
கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா!
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா!
அம்பிகாபதி அணைத்த அமராவதிமங்கை அமராவதி
சென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி! என்றும் நீயே கதி! (கல்) |
kallellaam maanikkak kallaagumaa kalaiyellaam kangal sollum
kalaiyaagumaa (2)
sollellaam thooya thamizh sollaagumaa suvaiyellaam idhazh
sindhum suvaiyaagumaa (2)
(kallellaam)
kanniththamizh thandhadhoru thiruvaasagam
kaalaikkaniyaakkumundhan oru vaasagam (2)
undenru solvadhundhan kannallavaa vannak kannallavaa (2)
illayenru solvadhundhan idaiyallavaa minnal idaiyallavaa
(kallellaam)
kamban kanda seedhai undhan thaayallavaa kaalidhaasan
sakunthalai un saeyallavaa (2)
ambigaapathi anaiththa amaraavathi mangai amaraavathi (2)
senra pinbu paavalarkku neeyae gadhi enrum neeyae gadhi
(kallellaam) |