| படம்: பணக்காரக் 
					குடும்பம் - வருடம் 1964 அத்தை மகள் 
					ரத்தினத்தைஅத்தான் மறந்தாரா?
 அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா?
 முத்து முத்துப் 
					பேச்சு, கத்தி விழி வீச்சுஅத்தனையும் மறந்தாரா?
 முன்னழகு தூங்க பின்னழகு ஏங்க
 பெண்னழகை விடுவாரா?
 முத்திரையை போட்டு சித்திரத்தை வாட்டி
 நித்திரையைக் கெடுப்பாரா?
 மூவாசை வெறுத்து ஊராரை மறந்து
 முனிவரும் ஆவாரா?
 கொட்டு முழக்கோடு கட்டழகு மேனி
 தொட்டுவிட மனமில்லையா?
 கட்டிலுக்குப் பாதி தொட்டிலுக்குப் பாதி
 கருணை வரவில்லையா?
 
 விட்டுப் பிரிந்தாலும் எட்டி நடந்தாலும்
 கட்டாமல் விடுவேனா?
 மேடைகளில் நின்று தோழர்களைக் கண்டு
 சொல்லாமல் விடுவேனா?
 |