Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil Language & Literature > Maha Kavi Subramaniya BharathyIndex of Works - பட்டியல்  > Short Stories  - சாஸ்திரியார் மகன்


Maha Kavi Subramaniya Bharathy - Short Stories
சி. சுப்ரமணிய பாரதி - சிறு கதைகள்

சாஸ்திரியார் மகன்


ஒரு பிராமணப் பையன் தனது விளையாட்டு வண்டி தெருவிலே ஒடிந்து போனபடியால் அதைப் பார்த்து அழுது கொண்டு நின்றான். அதைக் கண்ட ஒரு சிப்பாய் குழந்தாய் ஏன் அழுகிறாய்? என்று கேட்டான்.

பையன் - வண்டி ஒடிஞ்சி போச்சி?

சிப்பாய் - இதற் காக அழாதே. வீட்டிற்கு போ. உன்னுடைய தகப்பனார் அதைச் செப்பனிட்டுக் கொடுத்து விடுவார்.

பையன் - எங்கப்பா சாஸ்திரியார் அவராலே வண்டியை நேர்படுத்திக் கொடுக்க முடியாது. அவருக்கு ஒரு தொழிலும் தெரியாது. யார் வீட்டிலாவது அரிசி கொடுத்தால் வாங்கி கொண்டு வருவார். வேறே ஒரு இழவும் தெரியாது. என்று விம்மி விம்மியழுதான். சிப்பாய் சிரித்துக் கொண்டே போய் விட்டான்.

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home