Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil Language & Literature > Maha Kavi Subramaniya BharathyIndex of Works - பட்டியல்  > Short Stories  - காக்காய்ப் பார்லிமெண்ட்


Maha Kavi Subramaniya Bharathy - Short Stories
சி. சுப்ரமணிய பாரதி - சிறு கதைகள்

காக்காய்ப் பார்லிமெண்ட்


நேற்று சாயங்காலம் என்னைப் பார்க்கும் பொருட்டாக உடுப்பியிலிருந்து ஒரு சாமியார் வந்தார். உம்முடைய பெயரென்ன? என்று கேட்டேன். நாராயண பரமஹம்ஸர் என்று சொன்னார். நீர் எங்கே வந்தீர்? என்று கேட்டேன். உமக்கு ஜந்துக்களின் பாஷையைக் கற்பிக்கும் பொருட்டாக வந்தேன். என்னை உடுப்பியிலிருக்கும் உழக்குப் பிள்ளையார் அனுப்பினார் என்று சொன்னார். சரி, கற்றுக் கொடும் என்றார். அப்படியே கற்றுக் கொடுத்தார்.

காக்கைப் பாஷை மிகவும் சுலபம். இரண்டு மணி நேரத்திற்குள் படித்து விடலாம்.

கா என்றால் சோறு வேண்டும். என்றர்த்தம். கக்கா என்றால் என்னுடைய சோற்றில் நீ பங்குக்கு வராதே என்றர்த்தம். காக்கா என்றால் எனக்கு ஒரு முத்தம்தாடி கண்ணே என்றர்த்தம். இது ஆண் காக்கை பெண் காக்கையை நோக்கிச் சொல்லுகின்ற வார்த்தை. காஹகா என்றால் சண்டை போடுவோம் என்றர்த்தம். ஹாகா என்றால் உதைப்பேன் என்றர்த்தம். இப்படி ஏறக்குறைய மனுஷ்ய அகராதி முழுவதும் காக்கை பாஷையிலே, கா, ஹா, க்ஹ- முதலிய ஏழெட்டு அக்ஷரங்களைப் பல வேறுவிதமாகக் கலந்து அமைக்கப்பட்டிருக்கிறது. அதை முழுவதும் மற்றவருக்குச் சொல்ல இப்போது சாவகாசமில்லை, பிறருக்குச் சொல்லவும் கூடாது. அந்த நாரயண பரமஹம்ஸருக்குத் தமிழ் தொpயாது. ஆதலால் அவர் பத்திhpக்கைகளை வாசிக்க மாட்டார். இல்லாவிட்டால் நான் மேற்படி நாலைந்து வார்த்தைகள் திருஷ்டாந்தத்துக்காக எழுதினதினாலேயே அவருக்கு மிகுந்த கோபமுண்டாய்விடும். ஒரு வார்த்தைகூட மற்றவருக்குச் சொல்லகூடாதென்று என்னிடம் வற்புறுத்திச் சொன்னார். போனால் போகட்டும். ஐயோ பாவம் என்று நாலு வார்த்தை காட்டி வைத்தேன்.

இன்று சாயங்காலம் அந்த பாஷையை பாPiக்ஷ செய்து பார்க்கும் பொருட்டாக, மேல் மாடத்து முற்ற வெளியிலே போய் உட்கார்ந்து பார்த்தேன். பக்கத்து வீட்டு மெத்தைச் சுவற்றின் மேல் நாற்பது காக்கை உட்கார்ந்திருக்கிறது. நாற்பது காக்கைகள் உட்கார்ந்திருக்கின்றன என்று பன்மை சொல்ல வேண்டாமோ? என்று எண்ணிச் சில இலக்கணக்காரர்கள் சண்டைக்கு வரக்கூடும், அது பிரயோஜனமில்லை. நான் சொல்வது தான் சாpயான பிரயோகம் என்பதற்கு போகர் இலக்கணத்தில் ஆதாரமிருக்கின்றன. போகர் இலக்கணம் உமக்கு எங்கே கிடைத்தது? என்று கேட்கலாம். அதெல்லாம் மற்றெhரு சமயம் சொல்லுகிறேன். அதைப் பற்றி இப்போது பேச்சில்லை. இப்போது காக்காய் பார்லிமெண்டைக் குறித்துப் பேச்சு.

அந்த நாற்பதில் ஒரு கிழக் காக்கை ராஜா. அந்த ராஜா சொல்லுகிறது, மனிதருக்குள் ராஜாக்களுக்கு உயர்ந்த சம்பளங்கள் கொடுக்கிறார்கள். கோடி ஏழைகளுக்கு அதாவது சாதாரணக் குடிகளுக்குள்ள சொத்தை விட ராஜாகளுக்கு அதிக சொத்து. போன மாசம் நான் பட்டணத்துக்குப் போய் இருந்தேன். அங்கே ருஷியா தேசத்துக் கொக்கு ஒன்று வந்திருந்தது. அங்கே சண்டை துமால் படுகிறதாம்.. ஜார் சக்ரவர்த்தி கக்ஷp ஒன்று. அவர் அயோக்கியர். அவரைத் தள்ளிவிட வேண்டுமென்பது இரண்டாவது கக்ஷp. இரண்டு கக்ஷpயாரும் அயோகியர்களாதலால் இரண்டையும் தொலைத்து விட வேண்டுமென்று மூன்றாவது கக்ஷp. மேற்படி மூன்று கக்ஷpயாரும் திருடரென்று நாலாவது கக்ஷp. இந்த நாலு கக்ஷpயாரையும் பொங்கலிட்டு விட்டுப் பிறகுதான் யேசுகிருஸ்து நாதரைத் தொழ வேண்டுமென்று ஐந்தாவது கஷி. இப்படியே நூற்றிருபது கஷிகள் அந்த தேசத்தில் இருக்கின்றனவாம்.

இந்த 120 கக்ஷpயார் பரஸ்பரம் செய்யும் ஹிம்ஸை பொறுக்காமல் இந்தியாவுக்குப் போவோம். அங்குதான் சண்டையில்லாத இடம், இமய மலைப் பொந்தில் வசிப்போம் என்று வந்ததாம். அது சும்மா பட்டிணத்துக்கு வந்து அனிபெஸண்ட் அம்மாளுடைய தியஸhபிகல் சங்கத்துத் தோட்டத்தில் சில காலம் வசிக்க வந்தது. அந்த தோட்டக் காற்று சமாதானமும், வேதாந்த வாசனையுமுடையதாதலால் அங்கே போய் சில காலம் வசித்தால், ருஷியாவில் மனுஷ்யர் பரஸ்பரம் கொலை பண்ணும் பாவத்தைப் பார்த்த தோஷம் நீங்கி விடுமென்று மேற்படி கொக்கு இமயமலையிலேயே கேள்விப்பட்டதாம்.

கேட்டீர்களா, காகங்களே, அந்த ருஷியா தேசத்து ஜார் சக்கரவர்த்தியை இப்போது அடித்துத் துரத்தி விட்டார்களாம். அந்த ஜார் ஒருவனுக்கு மாத்திரம் கோடானு கோடியான சம்பளமாம். இப்போது நம்முடைய தேசத்திலே கூடத் திருவாங்கூர் மகாராஜா, மைசு{ர் ராஜா முதலிய ராஜாக்களுக்குக் கூட எல்லா ஜனங்களும் சேர்ந்து பொpய பொpய ஆஸ்தி வைத்திருக்கிறார்கள்.

நானோ உங்களை வீணாக ஆளுகிறேன். ஏதாவது சண்டைகள் நோpட்டால் என்னிடம் மத்தியஸ்தம் தீர்க்க வருகிறீர்கள். நான் தொண்டைத் தண்ணீரை வற்றடித்து உங்களுக்குள்ளே மத்தியஸ்தம் பண்ணுகிறேன். ஏதேனும் ஆபத்து நோpட்டால், அதை நீக்குவதற்கு என்னிடம் உபாயம் கேட்க வருகிறீர்கள். நான் மிகவும் கஷ்டப்பட்டு உபாயம் கண்டுபிடித்துச் சொல்லுகிறேன். இதற்கெல்லாம் சம்பளமா? சாடிக்கையா? ஓர் இழவும் கிடையாது. தண்டத்துக்கு உழைக்கிறேன். எல்லாரையும் போலே நானும் வயிற்றுக்காக நாள் முழுவதும் ஓடி உழன்று பாடுபட்டுத்தான் தின்ன வேண்டியிருக்கிறது. அடே காகங்கள், கேளீர்,

ஒவ்வொரு காக்கைக்கும் நாள்தோறும் கிடைக்கிற ஆகாரத்தில் ஆறிலே ஒரு பங்கு எனக்குக் கொடுத்துவிட வேண்டும். அதை வைத்துக் கொண்டு நானும் என் பெண்டாட்டியும், என் குழந்தைகளும், என் அண்ணன், தம்பி, மாமன், மச்சான், என் வைப்பாட்டியார் ஏழுபேர், அவர்களுடைய குடும்பத்தார் இத்தனை பேரும் அரை வயிறு ஆகாரம் கஷ்டமில்லாமல் நடத்துவோம். இபபோது என் குடும்பத்துக் காக்கைக்கும் மற்ற காகங்களுக்கும் எவ்விதமான வேற்றுமையும் இல்லை. ஏழெட்டு நாளுக்கு முந்தி ஒரு வீட்டுக் கொலலையிலே கிடந்தது. அது சோறில்லை. கறியில்லை. எலும்பில்லை. ஒன்றுமில்லை. அசுத்த வஸ்து கிடந்தது. அதைத் தின்ன போனேன். அங்கே ஒரு கிழவன் வந்து கல்லை எறிந்தான் என் மேலே. இந்த வலச்சிறகிலே காயம். இது சாpப்படாது. இனிமேல் எனக்குப் பிரiஜகள் ஆறில் ஒரு பங்கு கொடுத்துவிட வேண்டும் என்று சொல்லிற்று.

இதைக் கேட்டவுடனே ஒரு கிழக்காகம் சொல்லுகிறது,

மஹாராஜா, தாங்கள் இதுவரையில்லாத புதிய வழக்கம் ஏற்படுத்துவது நியாயமில்லை. இருந்தாலும் அவசரத்தை முன்னிட்டு சொல்லுகிறீர்கள்* அதற்கு நாங்கள் எதிர்த்துப் பேசுவது நியாயமில்லை. ஆனால் தங்களுக்குள்ள அவசரத்தைப் போலவே என்போன்ற மந்திhpமாருக்கும் அவசர முண்டென்பதைத் தாங்கள் மறந்துவிட்டதை நினைக்க எனக்கு மிகுந்த ஆச்சாpயமுண்டாகிறது. தங்களுக்கு ஒவ்வொரு காக்கையும் தன் வரும்படியில் பன்னிரண்டில் ஒரு பகுதி கட்ட வேண்டுமென்றும், அதில் மூன்றில் ஒரு பாகம் தாங்கள் மந்திhpமார்ச் செலவுக்குக் கொடுக்க வேண்டுமென்றும், ஏற்படுத்துதல் நியாயமென்று என் புத்தியில் படுகிறது என்று சொல்லிற்று. அப்பொழுது ஒரு அண்டங்காக்கை எழுந்து கக்கஹா, கக்கஹா, நீங்கள் இரண்டு கக்ஷpயாரும் அயோக்கியர்கள், உங்களை உதைப்பேன் என்றது. வேறெhரு காகம் எழுந்து சமாதானப்படுத்திற்று. இதற்குள் மற்றெhரு காகம் என்னைச் சுட்டிக் காட்டி அதோ அந்த மனுஷ்யனுக்கு நாம் பேசுகிற விஷயம் அர்த்தமாகிறது. ஆதலால் நாம் இங்கே பேசக்கூடாது. வேறிடத்துக்குப் போவோம் என்றது. உடனே எல்லாக் காகங்களும் எழுந்து பறந்து பேர்விட்டன.

இது நிஜமாக நடந்த விஷயமில்லை. கற்பனைக் கதை.

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home