Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Nation without a State> One Hundred Tamils of the 20th Century > Sundara Ramasamy > பசுவய்யா - வாழ்க்கைக்குறிப்பு

One Hundred Tamils of the 20th Century

Sundara Ramaswamy - சுந்தர ராமசாமி

பசுவய்யா - வாழ்க்கைக்குறிப்பு

கிருஷணன் நம்பி
9 September 1975


1931--ல் முன்று சகோதரிக்கிடையே தந்தைக்கு ஒரு பிள்ளையாய் பிறந்தார். இளம்பிள்ளை வாதத்தால் கடுமையாய் பீடிக்கப்பட்டு மரணத்தின் வாயிலை மிதித்து மீண்டு, தந்தையின் வெளித்தெரியாது போன அன்புக்கு ஏங்கி, அவரது இரும்புக்கட்டுப்பாட்டின் கீழ் நிழலடிச்செடியாய் வளர்ந்தவர்.

உடல் நலக் குறைவினால் பள்ளி இறுதி வகுப்புடன் கல்வி நின்று போக, இலக்கியத்தின்பால் ஈர்க்கப்பட்டு அதுவே சரண் எனக்கொண்டு, ஆரோக்கியமான புதுமைப்பித்கன் பாதிப்புகளுடன் எழுத்துத்துறையில் பிரவேசித்தார் 1952 ல் இவர் பதிப்பித்து வெளியிட்ட புதுமைப்பித்தன் நினைவு மலர் ஒரு தரமான தொகுப்பு.

சிறுகதைக்கும் கம்யூனிசத்துக்கும் மனசைக் கொடுத்து இவர் ரகுநாதனின் சாந்தி யில் எழுதிய தொடக்க காலக்கதைகள் முற்போக்கு முத்திரைகளைக் கொண்டு, இலக்கியத் தரமாக அமைந்தன. இவரைத் தமிழுக்கு அறிமுகம் செய்த பெருமை ரகுநாதனைச் சேர்ந்தது. சாந்தி தொடர்பை இவரது இலக்கிய வாழ்க்கையின் முதல் கட்டம் என்று சொல்லவேண்டும். விஜயபாஸகரனின் சரஸவதி தொடர்பு இரண்டாவது கட்டம். சரஸவதியில் இவர் பிரசுரித்த சிறுகததைகளும், ஒரு புளியமரத்தின் கதைத் தொடரும் இவரது இலக்கிய ஸதானத்தை உறுத் செய்தன.

க.நா.சுவால் சிறந்த படைப்பாளிகளுள் ஒருவர் எனப பாராட்டப்பட்ட சுந்தர ராமசாமி எழுத்தில் முதன்மையாக ஒரு தயலிஸத. புதுமைப்பித்தன் பாதிப்பு அடிப்படையில் இவரிடம் உருவான தமிழ்- சிருஷடி-நடை புதிய கோலங்களையும் பரிமாணங்கலையும் கொண்டது. ஒரு புளியமரத்கின் கதையில் இவரது தமிழ்நடை ஒரு தீவிர நிலயை அடைந்துவிடுகிறது, தொண்ணூறு சதவீதம் சநாதன எதிரியான இவர் தொண்ணூறு சதவீதம் ஒரு மஒராலிஸத ஆக இருப்பதில் எவ்வித முரண்பாடுகளும் காண முடியாது என்பதை இபரிடம் நேர்த்தொடர்புடையவர்கள் நண்கு புரிந்து கொள்ளமுடியும்.

கோவில்களுக்குப் போகாதவர் என்றாலும் நாச்திகர் அல்லர். குடித்திருப்பவர் என்றாலும் குடிகாரர் அல்லர். தற்பெருமையின்றி அடக்கத்தின் உறைவிடமாய்த் திகழ்பவர். சிறந்த சம்பாஷணைக்காரர் கருத்துப் பரிமற்றம் என்பதின் பொருளை உண்மையாஅக உணார்ந்தவர். சொல்லு, கெட்கிறேன் என்று எதிரே இருப்பவனிடம் காதையும் மனசையும் கழற்றிக்கொதுத்துவிட்டு பேசாமல் இருக்கத் தெரிந்தவர். சல்லாபம், அளவளாவுதல் என்ற பெயரில் நண்பர்களிடம் வேசித்தனமாக நடந்து கொள்ளத் தெரியாதவர் பல சமயங்களில் இவரது நேர்மையும், தன்னடக்கமுமே இவருக்கு எதிரியாகி விடுகிறது.

மரபுக் கவிதைக்கு எதிரான இவரது வாதங்கள் ஆழமும் ஆணித்தரமானவை. புதுக்கவிதைக்கு இவர் தன் வழியில் காணும் பொருள் இன்றைய புற்றீசல் புதுக்கவிதைக்காரர்க்களிடமிருந்து இவரை விலக்கி நிறுத்துகிறது. இன்றைய புதுக்கவிதைப் பெருக்கம் நாளைய உண்மைக்கவிதையைச் சாத்தியமாக்கிவிடப் போகிறது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்.

சில ஆண்டுகளாக எழுதாதிருந்துவிட்டு இன்று இவர் எழுதி வரும் கதைகள் மொழி மோகங்களிலிருந்து விடுபட்டு, வாழ்வின் உள்ளார்ந்த அர்த்தங்களையும் ஆழங்களையும் ஆத்மார்த்தமாகத் தேடி அலைவதாக அமைகின்றன. கவிதைக்குள் அடங்கிவராதவற்றின் விகாசமாகத் தன் கதைகளைப் படைக்க முயல்கிறார் இன்றுகூடச் சொல்லலாம்.

இவரது முதல் கதைத்தொகுதி அக்கரைச் சீமையிலே 1950 ல் வெளியாயிற்று. அடுத்து 1962 ல் பிரசுரமான பிரசாதம் கதைத் தொகுதிப்பின் முன்னுரையில் சம்யூனிஸ சித்தாந்தங்களிலிருந்து இவர் தன்னை தீவிரமாக அறுத்துக் கொள்ளுகிறார்,
சமீபத்தில், தர்மு அருப் சீவராம் தொடர்பின் விளைவாக இவருக்கு உண்டான ஜே.கிருழ்ணமுர்த்தி ஈடுபாடு ஒரு வேகம் பெற்றுப் பின் தேய்ந்துவிட்டதாகத் தெரிகிறது. மலையாளத்திலிருந்தும் ஆங்கிலத்திலிருந்தும் மொழி பெயர்ப்புகள் செய்திருக்கிறர். இவரது கதைகள், கவிதைகள் சில பிற மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன.

1954 ல் மணமான இவருக்கு முன்று பெண்கள், ஒரு பையன். குடும்பத்தின்மேல் இவருக்கிருக்கும் ஈடுபாடு இவரது இலக்கிய ஈடுபாடுக்குச் சற்றும் குறைந்த்ததல்ல.
 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home