Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home  > The Tamil Heritage - History & Geography > புராதன இலங்கை சரித்திரம்

புராதன இலங்கை சரித்திரம்
ப. கணபதிப்பிள்ளை

[ see also
1.Beginnings of Tamil Rule in Eelam (Ceylon, Sri Lanka) - Nallur Swami S. Gnana Prakasar O.M.I.
2. Arya Chakravarties of Tamil Eelam - M.D.Raghavan
3. The Tamil Kingdom in Jaffna - Early Beginnings to the Court of the Ariya Chakravartis - Dr.H.W.Tambiah, and
4. 1968 Matrimonial Alliances between Tamilnad and the Sinhalese Royal Family in the 18th Century and the 6. Establishment of a Madurai Dynasty in Kandy - Lorna Srimathie Dewaraja, 1974 and
5. Tamil Rulers of the Kandyan Kingdom - G.Amirthalingam ]

உள்ளடக்கம்

1.புராதன இலங்கை
2. தோற்றுவாய்
3. சிங்கள இனத்தின் தோற்றம்
4. பரதன் என்னும் தமிழ் அரசன்
5. தமிழ் கூறும் நல்லுலகம்
6. இலங்கையில் தமிழ் மன்னர்களின் ஆட்சி
7.
இராவணனும் இராமாணமும்


புராதன இலங்கை

தற்காலத்தில் இலங்கையில் தமிழர் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். ஆனால் அதி பூர்வீக இலங்கையில் தமிழர்கள் மாத்திரமே வாழ்ந்து வந்தனர் என்பது வரலாற்று உண்மையாகும். அவர்களது சமயம் சைவசமயமாகவே இருந்தது. இராமாயணம் போன்ற இதிகாச இலக்கியங்கள் வாயிலாககும் புராணங்கள் வாயிலாகவும் இவ்வுண்மை அறியக் கூடியதாக இருக்கின்றது..எனவே இலங்கை தமிழரின் முதுசொத்து எனலாம். இதுயாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாத உண்மையாகும். இந்த உண்மையை வெளிப்படுத:துவதே இந் நூலின் நோக்கமாகும்.

புத்தூரில் பிரசித்த நொத்தாசிசாக விளங்கிய உயர் திரு. வ. நாதர் ஏன்பவரால் வெளியிடப்பட்டுள்ள அகத்தியர் இலங்கை என்னும் நூலில் இந்த உண்மை தெளிவாக்கப்பட்;டுள்ளது. இந்த நூலை மதுரையில் வாழ்ந்த உயர்திரு கந்தசாமிச் செட்டியரே தமக்கு வழங்கியதாக திரு. நாதர் அவர்கள் தமது பதிப்புரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.'அகத்தியா இலங்கை என்னும் இந்த நூலை உசாத்துணை நூலாகக் கொண்டு புராதன இலங்கை என்னும் இநதப் பக்கம் வெளிவருகின்றது.

இனவெறி பிடித்த சிங்கள ஆட்சியாளர்கள், இலங்கை முழுவதும் தங்களுக்கே உரியதென்றும் தமிழர்கள் கூலிவேலை செய்வதற்காகத் தென்னிந்தியாவில் இருந்து இங்கு கொண்டு வரப்பட்டவர்கள் என்றும் பொய்யான கதைகளைச் சிங்களப் பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரஞ் செய்து அதன் மூலம் சிங்கள இனவெறியை அவர்களுக்கு ஊட்டி இலங்கையில் உள்ள தமிழர்களை அடக்கி ஒடுக்கி அழித்து விடத் திட்டமிட்டுச் செயற்படுகின்றனர். இவ்வாறான பொய்ப்பிரசாரத்தின் மூலம் இலங்கைத் தமிழர்களை அழித்து ஒழிப்பதைத் தவிர்க்கவும் இலங்கை வாழும் தமிழர்களுக்குச் சிங்களவர்களிலும் பார்க்க உரிமை கூடுதலாக உண்டு என்பதை எமது மக்கள் ஆதாரபூர்வமாக அறிய வைப்பதற்கும் இது போன்ற பக்கங்கள் வெளிவருவது மிக மிக அவசியமாகும். இந்த அவசியத்தை உணர்ந்தே இந்தச் சிறிய இணைய பக்கத்தையும் வெளியிட முன்வந்துள்ளேன். எனவே இந்த இணையப் பக்கத்தை ஈழத்தமிழ் மக்களாகிய நாங்கள் விழிப்படைவோமாகுக... எழுச்சியடைவோமாகுக.
 


  தோற்றுவாய்

அகத்திய முனிவர் இலங்கையின் பூர்விகம் பற்றி இராமனுக்குச் சொல்லுகின்ற பாங்கிலே இதன் மூல நூல் அமைந்தமையால் அதற்கு ஷஅகத்தியர் இலங்கை" எனப் பெயர் சூட்டப்பட்டது.

இந்த நிலப்பரப்பில் பல கண்டங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்றுதான் தமிழர் கண்டம் என்பதாகும். இதுவே பிற்காலத்தில் தமிழகம் என அழைக்கப்பட்டது.. மிகப் புராதன காலத்தில் தமிழகத்தில் வாழ்தவர்கள் தமிழர்கள் மட்டுமே. ஆட்சி புரிந்த அரசர்கள் தமிழர். அவர்களது நெறி சைவநெறி. மொழி தமிழ். அக்காலத்திலுருந்தே தமிழர்கள் மிக முன்னேற்றமுள்ளவர்களாக விளங்கினார்கள். கமத்தொழில், கைத்தொழில் இரண்டையுமே இரு கண்களாகப் போற்றி வாழ்ந்தார்கள்.

அரசர்களோ நீதி வழுவா நெறிமுறையில் ஆட்சி புரிந்தனர்.மக்களும் தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஓக்கல், தான் என்னும் ழும்பலமும் ஓம்பி வாழ்ந்து வாந்தனர். பிராமணர்கள், அரசர்கள், வைசியர் எனப்படும் வர்த்தகர்கள், வேளாண்மக்கள் எனப்படும் கமக்காரர் ஆகியோர் தம்தம்க்குரிய கடமைகளின்றும் வழுவாது ஒழுகிவந்தனர். அரசனது ஆணைகள் இவற்றுக்கு வழிவகுப்பதாய் அமைந்திருந்தன. இதன் பலனாக மாதம் மூன்று மழை பெய்தது. நீர்வளம் பெருகியது. நிலவளமும் பெருகியது.. அதைதியும் நிலவியது. உணவு உடை உறையுள் ஆகிய மனிதனின் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டன. பசியால் மெலிபடைபவர்களோ, பிணியால் நலிவடைபவர்களோ மிக மிக அரிதாகவே காணப்பட்டனர். இத்தகையதோர் ஒப்பற்ற சமுதாயம் நிலவிய தமிழகத்தை அவ்வப்போது ஆட்சி புரிந்த தமிழரசர்கள் உருவாகினர்ர்கள்.

இவ்வாறு தமிழகத்தைச் சிறப்பாக ஆட்சி புரிந்த அரசர்களுள் மனு என்னும் அரசனும் ஒருவனாவன். இவன் தமிழன். இந்த மனு அரசனுக்கு தமிழர் வரலாற்றில் முதன்மையானதும் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் தனி இடம் உண்டு. ஒரு காலத்தில் நெப்போலியன் போர்ன்பாட் என்பவனால் உருவாக்கப்பட்ட சட்டவாக்கங்கள், பிற்காலத்திலும் இக்காலத்திலும் எழுந்த சட்டவாக்கங்களுக்கு எவ்வாறு அடித்தளமாக அமைந்தனவோ அது போலவே புராதன காலத்தில் மனு அரசன் எழுதிய சட்டவாக்கமும் அவனைத் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களுக்கும் அவர்களின் சட்டவாக்கங்களுக்கும் அடித்தளமாக அமைந்துள்ளது எனலாம்.

மனுதர்ம சாத்திர நூலும் இவ்வகையில் உருவானதே எனலாம். இந்த மனுசக்கரவர்த்தியானவன் தானுருவாக்கிய நீதி நெறியின் படியே ஆட்சியும் புரிந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. சாதி வேறுபாடு காட்டுதல் போன்ற அநாகரிகமான சட்டங்கள் அவனது நீதிநூலில் இடம் பெறவில்லை என்பதும், ஆனால் சுயநலவாதிகளும் சாதியின் பெயரால் தம்மைப் பெரியவர்களாகக் காட்டிக் கொண்டவர்களும் அதனால் தம்மை வளர்த்துக் கொண்டவர்களுமே இந்த அநாகரிகமான சட்டத்தை இந் நூலில் புகுத்தி இந் நூலுக்கு இழுக்குத் தேட முற்பட்டனர். இந்த உண்மையை நாம் உணர்ந்து தெளிவு பெற வேண்டும். இந்த மனு சக்கரவர்த்தி தமிழகத்தை நாற்பத்து நான்கு வருடங்கள் ஆட்சி புரிந்தான்.

இந்த மனுசக்கரவர்த்திக்கு 'சமன்" என்னும் புத்திரனும் 'ஈழம்" என்னும புத்திரியும் பிறந்தார்கள். மனுவின் பின் தமிழகம் இந்த இருவராலும் ஆட்சி செய்யப்பட்டு வந்தது;. தென்னகத்தை மகனாகிய சமனும், அவனது சந்ததியினரும், வடபாகத்தை மகளாகிய ஈழமும் அவளது சந்ததியினரும் ஆண்டு வந்தனர். மனுவின் மகளாகிய ஈழம் என்பவளுக்கு குமரி என்று வேறு பெயரும் உண்டு. குமரி என்று அழைக்கப்பட்ட இந்த மனுவின் மகள் ஆட்சி புரிந்த பகுதி குமரிக் கண்டம் எனப்பட்டது. இந்தக் குமரிக் கண்டத்திலேயே இலங்கை நாடு, பாண்டி நாடு, சேர நாடு, சோழ நாடு முதலிய நாடுகள் அடங்குகின்றன. ஈழம் என்னும் அரசி அட்சி புரி;ந்த பகுதியே அவளின் பெயரால் ஈழம்நாடு என்று அழைக்கப்பட்டுக் காலக்கிரமத்தில் ஈழநாடு ஆகியது. இந்த நான்கு மண்டலங்களும் ஒரு காலத்தில் ஒரே நிலப்பரப்பாகவே இருந்தன. இடையில் ஏற்பட்ட கடல்கோள்களே ஈழநாடு என்று அழைக்கப்பட்ட ஈழ மண்டலத்தை ஏனைய மூன்று மண்டலங்களிருந்து பிரித்து விட்;டன.

எனினும் ஈழமண்டலமாகிய இலங்iயில் தமிழரே வாழ்ந்து வந்தனர். பிற்காலத்தில்தான் தமிழலரல்லாதோர் இங்கு வந்து குடியேறினர் என்பதனை நாம் மறந்து விடக் கூடாது. வரலாற்றுக்காலத்துக்கு முன்பிருந்தே தமிழர்கள் இலங்கையில் மிகவும் முன்னேற்றம் அடைந்தவர்களாகவும் நாகரீக வளர்ச்சி பெற்றவர்களுமான ஓர் இனமாக வாழ்ந்து வந்தனர்.

தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவந்த குமரிக் கண்டத்தில் உள்ள ஒரு நகரில் கன்னியாகிய குமரி (ஈழம்) ஆட்சி புரிந்தமையால் அந்நகரம் கன்னியாகுமரி என்று அழைக்கப்பட்டது. இக்கன்னியாகுமரி என்னும் பட்டினம் குமரிகண்டத்துக்குச் சிலகாலம் தலை நகராகி விளங்கியது. பிற்காலத்தில் குமரிக்கண்டத்தின் பெரும் பகுதி கடல் கொள்ளப்பட்டது. இக்கடல் கோல்களினால் நிலப்பரப்பு மாத்திரமன்றிப் பல தமிழ் சங்க மண்டபங்கள், அவைகளில் இருந்த இலக்கண இலக்கிய நூல்கள் எல்லாம் சமுத்திரத்துள் ஆழ்ந்து விட்டது;. சமன் ஆண்ட பிரதேசமும் கடலுள் அமிழ்ந்தி விட்டது......மிகுதியான நிலப்பரப்பு பாரத கண்டம் இலங்கை முதலிய பல தேசங்களாக பிரிந்தது.

விஜயன் இலங்கையில் காலடி வைத்த பின்பே இலங்கையில் சிங்கள இனம் தோன்றியது. இந்த விஜயன் யார் ? இவன் இலங்கைக்கு எவ்வாறு வந்தான் என்பன ? பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.......
 


சிங்கள இனத்தின் தோற்றம்

வட இந்தியாவில் "லாலா" என்று ஒரு நாடு அதனைச் சிங்கபாகு என்பவன் ஆட்சி புரிந்தான். இவனது தந்தை சிங்கன் என்பவன் ஆவான். சிங்கனைப் பற்றிய பலவித புனை கதைகள் உண்டு. மிருக இராசவாகிய சிங்கமே இவன் என்பது அவற்றுள் ஒன்று. சிங்கத்தில் இருந:து வந்த சந்ததியினரே சிங்களவர் என்றும் சொல்லப்படுகின்றது. இதனாலேயே சிங்கள மக்களின் தேசியக்கொடி சிங்கமாக இருக்கினறதென்றும் சொல்வாரும் உளர். இவையெல்லாம் ஆதாரமற்ற வெறும் ஐதிகங்களே என இவற்றை இவ்வளவில் விட்டு விடுவோம்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள சிங்கபாக ஆசியவம்சத்தை சார்ந்தவன். வடஇந்தியாவில் இமயமலை அடிவாரம் வரை ஒரு காலத்தில் திராவிட இனம் வாழ்ந்து வந்தது என்றும் அந்தத் திராவிடரைத் துரத்திவிட்டு வந்து குடியேறிய நாடோடி மக்களே ஆசியராவர். இவர்கள் மெல்லிய சிவந்த மேனியைக் கொண்டிருந்தனர்.இந்த ஆசியர்கள் ஒரு காலத்தில் இமயபமைப்ப வடக்தே நாடோடிகளாய் கூட்டங் கூட்டமாய் குதிரைகளில் சவாரி செய்து அலைந்து திரிந்தவர்களாவர்.

 இவர்களுக்கு நிரந்தரமான வதிவிடங்களோ நிலங்களோ இருக்கவில்லை. இவாகள் அடிக்கடி கைபர்கணவாய் வழியாகத் திடீர் திடீரென இமய மலையின் தென்பகுதிக்குள் நுழைந்து அங்கு வாழ்ந்து வந்த திராவிட மக்களுக்குத் தொல்லை கொடுக்கு அவர்களுது பொருட்களையும் உணவுப்பண்டங்களையும் மந்தைகளையும் அபகரித்து சென்று அதன் மூலம் வாழ்க்கையை நடாத்தி வந்தவர்கள். இவர்களது தொல்லை பொறுக்க முடியாமலே வட இந்தியாவில் வாழ்ந்து வந்த திராவிடமக்கள் மெது மெதுவாகத் தெற்கு நோக்கி நகரத் தொடங்கினர். ஆரியர் திராவிட மக்களைத் துரத்தி விட்டு அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் வந்து குடியேறினர். தம்மை ஆரியர் எனக்கூறி சிங்களவரும் இதனைத்தான் இங்கு செய்கின்றனர். இந்த அநாகரீகமான மக்களே ஆரியர்.

இத்தகைய ஆரிய வம்சத்தைச் சார்ந்தவன்தான் சிங்கபாகு ஆவான். அவனின் மைந்தனே விஜயன் ஆவான்.விஜயனின் சந்ததியினரே சிங்களவர்கள். எனவே சிங்களவரும் ஆரியர்களே. தமிழர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்த வகையிலேதான் இலங்கையில் வாழ்கின்ற ஆரியர்களாகிய சிங்களவர்களுக்கும் திராவிடர்களாகிய தமிழர்களுக்கும் ஒத்துப் போவதில்லை என்பது புலனாகின்றது.

சிங்கபாகுவின் மைந்தனாகிய விஜயன் இனவரசனாக இருந்த பொழுது அவனுக்கு எழுநூறு பேர் தோழர்கள் இருந்தார்களாம். விஜயன் இழவரசனாக இருந்தமையால் அவனுக்கு எல்லா வசதிகளும் கிடைத்தன. அதனாலே அவனுக்கு எழுநூறு பேர் தோழராயினர். இந்த விஜயனும் இந்த தோழர்களும் நினைத்தவற்றையேல்லாம் செய்தார்கள். நாகரீக சமுதாயத்திற்கு ஒவ்வாத காரியங்களை எல்லாம் இவர்கள் மிகமிக விருப்பமாகச் செய்தார்கள்.

கண்டதே காட்சி கொண்டதே கோலம் என ஆள்வாரிலி மாடுகளாகத் திரிந்தார்கள். தட்டிக் கேட்க யாரும் இல்லை. தந்தை சிங்கபாகுதான் தட்டி கேட்க வேண்டியவன். அவனாலும் தட்டிக் கேட்க முடியவில்லை. அவன் அந்த நாட்டின் அரசனாக இருந்தமையினால் அந்த நாட்டின் மக்களின் நன்மைக்காகத் தன் மகனேன்றும் பராது அவனையும் அவனது தோழர்கள் எழுநூறு பேரையும் நாடுகடத்த விரும்பினான். அவர்கள் அனைவரையும் ஒரு பாய் கப்பலில் ஏற்றி வங்கக் கடலில் அலையவிட்டான். அக்கப்பல் காற்றினால் அள்ளுண்டு அவர்களைக் கொணடு வற்து எனது ஈழத்திருநாட்டில் மாந்தை நகரில் ஒதுக்கிவிட்டது.

வந்தாரை வரவேற்று உபசரிக்கும் தமிழர்களின் பண்பாட்டுக்கமைய வந்தாரை வாழவைத்தாள் ஒருத்தி. அவள்தான் இலங்கையில் அந்நாள் அரசி குவேனி என்பாள். அவள் ஒரு தமிழ் அரசி, அவள் வந்தவர்களுக்கு வேண்டிய வசதிகளையும் செய்து கொடுத்தாள். விஜயனின் அழகில் மயங்கி தன்னையே கொடுத்து விட்டாள். அத்தோடு இலங்கையில் தமிழர்க்கு இருந்த இறைமையையும் கூடவே தரைவார்த்துக் கொடுத்து விட்டாள். இத் தொடர்பினால் விஜயன் இலங்கையின் இலங்கையின் ஆட்சியுரிமையை இலகுவில் பெற்றுக் கொண்டுவிட்டான். ஆட்சியுரிமையை தந்திரமாக கைப்பற்றிக் கொண்ட விஜயன் தன் காரியம் முடிந்ததும், தனது அதிகாரதுக்கு உதவிய மனைவி குவேனியையும் பிள்ளைகளையும் அடித்து துரத்திவிட்டான்.

குவேனியைத் துரத்திய பின் இவனும் இவனது தோழர்கள் ஏழுநூறு பேரும் பாண்டிய நாட்டிலுள்ள நாயக்க வம்சத்தைச் சேர்ந்தவர்களும் அழகுடையவர் ஆகிய தமிழ்ப்பெண்களை வரவழைத்துத் திரமணஞ் செய்த கொண்டனர். இவர்களது சந்ததியினரே இன்று இலங்கையில் வாழ்கின்ற சிங்களவர் ஆவர். இம்மட்டில் இவர்கள் நின்று விட வில்லை. அன்று அதிகாரத்தைத் தம்வசம் வைத்திருந்த விஜயனும் அவனது தோழர்களினது சந்ததியினரும் ஏற்கனவே இங்கு வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்களோடு திருமணம் செய்து கலந்து கொண்டனர்.

இவர்களது சந்ததியாரும் சிங்களவராயினர். இவ்வகையிலும் இலங்கையில் தமிழர் சிறுபான்மையினராகப்பட்டனர். இவ்வாறு தமது தனித்துவத்தையும் பண்பாட்டையும் கைவிட்டுச் சிங்களவர்களாக மாறிய தமிழர்களே தமது தனித்துவத்தையும் கலாச்சாரத்தையும் விட்டுக் கொடுக்காமல் வாழ்ற்து வருகின்ற உண்மையான தமிழர்களுக்கு எதிராகத் கிளம்பி இலங்கை சிங்களவருக்கு மாத்திரமே உரியதென்று விதண்டாவாதம் பேசுகின்றனர். கூப்பாடு போடுகின்றனர். எஞ்சிய தமிழர்களையும் சிங்களவர் ஆக்க முனைகின்றனர். இந்த உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழர்கள். இலங்கையின் சுதேசிகள் தமிழர்கள். விஜயன் வழி வந்தவர்கள் அந்நியர். பரதேசிகள். இத்தகையோர் இலங்கைக்குத் தாம் மாத்திரமே உரிமையுடையோம் என்றும், தமிழர்களுக்கு எவ்வித உரிமை இல்லை என்றும், சிங்களப் பொது மக்களிடையே பிரச்சாரஞ் செய்து வருகின்றனர். தமிழர்கள், சிங்களவர்கள் பகைவர்கள் என இள உள்ளங்களில்லாம் அழுத்தமாக உறையும்படி பிரசாரம் செய்கின்றனர். துட்டகைமுனுவின் தாயாகிய விகாரமகாதேவியும் இதனையே செய்தாள். இதனால்தான் துட்டகைமுனு தமிழருக் கெதிராகக் கிளர்ந்து எழுந்தான்.

தமிழர் படையுடன் நேர் நின்று யுத்தம் புரிய முடியாத துட்டகைமுனு கபட நாடகமாடி மனுநீதி தவறாது செவ்வனே ஆட்சி புரி;ந்த தமிழரசனாகிய எல்லாளனைக் கொன்றான். இளைஞனாகிய துட்டகைமுனு கிழவனாக இருந்த எல்லாளனைத் தனிப் போருக்கு அழைத்துப் போர்புரியும் வேளை எல்லாளனது பட்டத்து யானை போரில் கால் தடுக்கி விழ ஈட்டியால் குத்திக் கொன்றான். இத்தகைய வாரலாற்று உண்மையை இன்றைய எம் நிலைகளோடு ஒப்பிட்டு நோக்கிச் செயற்பட வேண்டியது ஈழத்தமிழராகிய எம் கடனாகும்.
 


பரதன் என்னும் தமிழ் அரசன்

குமரியின் சந்ததியில் தோன்றிய தமிழ் அரசர்களுள் பரதனும் ஒருவன். இந்தப் பரதன் குமரிகண்;டத்தை நாற்பது வருடங்களாக ஆட்சி புரிந்தான். ஒரு தாயானவள் தனது பிள்ளைகளை எல்வளவு கரிசனையுடனும் அன்புடனும் பராமரிப்பாளோ அது போலவே பரதனும் தனது குடிமக்களையும் பராமரித்தான். இதனால் அவனது குடிமக்கள் அவளை மிகவும் நேசித்தார்கள். அது மாத்திரமன்றி இக் குமரிகண்டமானது பரதனது திறமையான ஆட்சி முறையினால் பலவகைகளிலும் சிறப்புற்று விளங்கிற்று. இக்காரணங்களினால் அவன் ஆட்சி புரிந்த நிலப்பரப்பாகிய குமரிக் கண்டமே பரதகண்டமென வழங்கப்பட்லாயிற்று.

இப்பரத கண்டத்தில் வாழ்ந்த தமிழ் மக்களை அந்நி நாட்டினர் பலவாறு அழைத்தனர் அவை பரதர், நாகர், இயக்கர், அரக்கர், இராட்சதர், பூதர், அசுரர், அவுணர், இடிமபர், கருடர், முனிவர், சித்தர்;, கந்தருவர், வானரர் என்பனவாகும். இராமாயணத்தில் தமிழர்களை வானரர் (குரங்குகள்) என்றும் இராட்சதர் என்றும் பழித்துரைத்தனர். அனுமான் சுக்கிரீவன் வாலி போன்ற பலம் பொருந்திய திறமைமிக்க போராளிகளை குரங்குகளின் அரசர்கள் என்றும் இலங்கையை ஆண்ட ஒப்புயர்வற்ற சிறந்த அரசனாகிய இராவணன் தமிழன் என்ற காரணத்தால் அவனையும் அவனது இனத்தினரையும், நரமாமிசம் புசிக்கின்ற இராட்சதர் என்றும் பழித்துரைத்தனர். உண்மை அவ்வாறு அன்று. இராமன் இலக்குமணன் போன்ற திராவிடர்கள் (தமிழர்கள்) பலசாலிகளாகவும் அறிவாளிகளாகவும் சித்துக்களில் வல்லவர்களாவும் விளங்கினர் என்பதே உண்மை.

உண்மையில் இவர்கள் அவர்கள் குறிப்பிடுவது போன்று குரங்குகளோ, இராட்சதர்களோ அல்லர். சிறப்புற்று விளங்கிய தமிழர்களோயாவர். இவ்வாறு அநிநியர்களால் பல்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்ட போதிலும் எல்லோரும் சமத்துவம் உடைய தமிழர்களோயாவர்.

அன்று வாழ்ந்த தமிழ் மக்கள் தம்மிடையே உயர்வு தாழ்வு காட்டுவதில்லை. ஒருவருடைய பிறப்பினைக் கொண்டு அவரின் உயர்வு தாழ்வுகளைக் கணிக்காது அவரவரின் சிறப்பினைக் கொண்டே, செயற்பாடுகளைக் கொண்டே கணித்தனர்;. 'இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர்"என்னும் ஒளவை வாசகஙகளும் இவ்வகையில் எழுந்தனவே. செயற்கரினவற்றைச் செய்பவர்கள் பெரியோர் என்னும் செயறகரயன செய்ய முடியாதவர்கள் சிறியோர் என்றும் வள்ளுவன் வாய்மொழியும் இதனையே தெளிவுபடுத்துகின்றது.
 


தமிழ் கூறும் நல்லுலகம்

மனித இனம் முதன் முதலாக தோன்றிய இடம் குமரிக் கண்டம் என்று அறியக்கிடக்கின்றது. இந்தக் குமரிக் கண்டத்தில் வாழ்ந்த மக்கள் பேசிய மொழி தமிழ் என்றும் அவர்களிடமிருந்தே எனைய இனத்தவர்கள் சீர்திருத்ததைக் கற்றுக் கொண்டனர் என்றும் கூறுவர்; அக்காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்தார்கள் என்றும் அவற்றில் அவர்கள் வல்லவர்களாக இருந்தார்கள் என்றும் சொல்லப்படுகின்றது. அவையாவன.

வீடு கட்டுதல், கோயில் கட்டுதல், சிற்ப வேலை செய்தல், குளம் வெட்டுதல், நூல் நூற்றல், சிலை செய்தல், குடைசெய்தல், கோயில் த்தேர், போர்த்தேர், வாயுத்தேர்;, அக்கினித்தேர், ஆகாயவிமானம், கப்பல், முதலியன செய்தல், ஆகாயமார்க்கமாகச் செல்லுதல், பாடசாலை, வைத்தியசாலை தமிழ்ச்சங்கம் முதலியன அமைத்தல், இலக்கியம், இலக்கணம், வானசாத்திரம், நீதி சாத்திரம், தொலைவிலுணர்தல், கடவுள் வணக்கம், தவம், கற்பு, விரதம், வியாபாரம், பஞ்சாயம், நீதிமன்றம், குடியாரசாட்சி, தெரிவுச்சீட்டு, கணிதம், சோதிடம், கூடுவிட்டுக் கூடுபாய்தல், ஒரு மனிதன் போல் தேகம் எடுத்தல், ஆகாய யுத்தம், கடல் யுத்தம் முதவியவற்றை நன்றாக அறிந்திருதார்கள். தமிழ் மொழியில் மிகவும் சிறந்த இலக்கிய நூல்களும் இலக்கண நூல்களும் கணித நூல்களும், தமிழ் வேதங்களும் தமிழ் சரித்திர நூல்களும் இன்னும் பல சிறந்த நூல்களும் ஆரம்பத்திலேயே இருந்தன.

பாண்டிநாடு சோழநாடு, சேரநாடு முதலிய தமிழ் நாடுகளில் உள்ள தமிழர் முற்காலத்தில் இலங்கையில் பிறந்து வாழ்ந்தபடியால் இலங்கை அந்த நாடுகளின் தமிழருக்குச் சொந்தம். இலங்கை மலைவளமுடைய நாடாக இருந்தமையால் போதிய மழை பொழிந்து பல ஆறுகள் பாய்கின்ற ஆற்று வளமுடையதாக விளங்கியமையால் செழிப்பான தேசமாக விளங்கியது. பெருமளவு நெல் விளைவிக்கப்பட்டது.

அத்துடன் பொன், முத்து இரத்தினம், சங்கு ஆகியவையும் அதிகம் காணப்பட்டன. இவ்வாறு சிறப்பாக விளங்கிய இலங்கையில் முற்காலத்தில் வாழ்ந்;;;த தமிழர்கள் மிகவும் செல்வந்தராயிருந்தனர். இதனால் ஏனைய நாடுகளில் வாழ்ந்த தமிழர்கள் இலங்கையில்; வசிக்க மிகவிரும்பினார்கள்.

இடவசதியற்ற பொழுதெல்லாம் அவர்கள் இலங்கையில் வந்து குடியேறிக் கொண்டே வந்தார்கள். இலங்கைத் தமிழர் பாண்டியநாடு முதலிய மற்றைய தமிழ் நாடுகளின் தமிழரோடும் அதிபூர்வ காலந்தொடங்கி இன்றுவரைக்கும் ஆலயதரிசனம், தீர்த்தமாடுதல், கல்வி பிறப்பு இறப்புச் சம்பந்தமான கொண்டாட்டங்கள், திருவிழா, கலியாணம் மற்றுவிவாகம் முகலிய வைபவங்களைக் கொண்டாடிக் கொண்டும், போக்குவரவு பண்ணிக் கொண்டும் வருகிறார்கள். பாண்டியநாடு முதலிய தமிழ்த் தேசங்களின் தமிழர்கள் திருக்கேதீச்சரம், திருக்கோணேச்சரம், நகுலேஸ்வரம், கதிர்காமம் முன்னேசுவரம் முதலிய சைவாலயங்களைத் தரிசிப்பதற்கும் தீர்த்தமாடுவதற்கும் விவாகத்திற்கும் இலங்கைக்குப் போக்குவரவு செய்து கொண்டேயிருக்கின்றார்கள்.

சுரரை ஆண்ட அரசன் சுரேந்திரன். அசுரரை ஆண்ட அரசன் அசுரேந்திரன். இதனால் சயம்பனுக்கு அசுரேந்திரன் என்னும் வேறொரு பெரும் இடப்பட்டது. தமிழரசனாகிய இச்சயம்பன் இலங்கையை முப்பத்து மூன்று வருடங்களாக ஆண்டிருந்தான். சயம்பனுக்குப் பின்பு அவனுடைய மருமகனாகிய யாளிமுகன் என்னும் தமிழன் அரசனாகி பத்து வருடங்கள் ஆட்சி புரிந்து இறந்தான். இவனுக்கு பின்பு பல தமிழரசர்கள் நெடுங்காலமாக இலங்கையை ஆண்டனர். இவர்களது ஆட்சிக் காலத்தில் திரிகோணமலை, இலங்காபுரம், சிங்கன்நகர், பணிபுரம், திருகோயில், முருகன்துறை கலியாணி முதலிய நகரங்கள் தலைநகரங்களாக விளங்கின.

யாளிமுகனுக்குப்பின் ஏதி என்னும் தமிழரசன் முருகபுரத்தைத் தலைநகராக்கி அங்கிருந்து இலங்கை முழுவதையும் ஆண்டான். முருகபுரம் என்னும் நகரில் முருகன் என்னும் தமிழ்ச்சேனாததிபதியின் வீரர்களில் ஒருவனாகிய விசயன் என்பவன் மாணிக்கங்கையில் முருகேசுவரம் என்னும் முருகனாலயத்தைக் கட்டுவித்தான். முருகேசுரத்துக்கு, கதிர்காமம், கதிர்வேலன்மலை, கார்த்திகேயபுரம், ஏமகூடம், மாணிக்கநகர்., கந்தவேள்கோயில் என்னும் மறுபெயர்களும் உண்டு.

பயை என்னும் தமிழரசகுமாரத்தியை ஏதி விவாகஞ் செய்து வித்துக்கேசன் என்னும் புத்திரனைப் பெற்றான். இவன் இருபத்தெட்டு வருடங்கள் ஆட்சி புரிந்தான். வித்துகேசன் சிவனோளிபாதத்தைத் தலைநகராக்கி, நாகதீவு முழுவதையும் ஆண்டான். முருகள் என்னும் சேனைத்தலைவன் காங்கேசன்துறையில் ஒரு சிவன்கோவிலைக் கட்டுவித்தான்.

வித்துசேசன் இருபத்தொன்பது வருடங்களும், மூன்று மாதங்களும் இலங்கையை ஆண்டான். இவனுக்குப் பின் இவனது மகன் சுகேசன் என்பவன் மணிபுரம் என்னும் கதிரவன் மலையைத் தலைநகராக்கி இலங்கையை ஆட்சி புரிந்தான். ஆதிகாலத்தில் மயனால் கட்டப்பட்ட திருக்கேதீசுவரம், முனீசுவரம், நகுலேசுவரம் என்னும் சிவாலயங்களை இவன் பழுது பார்த்து அவற்றுக்கு அநேக நகைகளையும்;;, நிலங்களையும், கொடுத்தான். மாந்தை நகருக்கு அருகில் உள்ள பாலாவியாற்றங்கரையில் திருக்கேதீசுவரம் மாயவன் ஆற்றுக்குச் சமீபத்தில் முனீசுவரம், காங்கேசனுக்கு அண்மையில் நகுலேசுவரம் ஆகிய சிவாலயங்கள் கட்டப்பட்டன.
 


இலங்கையில் தமிழ் மன்னர்களின் ஆட்சி

சுகேசனின் ஆட்சி

சுகேசன் தெய்வதி என்னும் அரச குமாரியை விவாகஞ் செய்து மாலியவான், மாலி என்னும் புத்திரர்களைப் பெற்றான். சுகேசனின் ஆட்சி மிகவும் மெச்சத்தக்தாக அமைந்திருந்தது. இவன் கிராமங்கள் தோறும் ஆலயங்களை அமைப்பித்தான். பல வீதிகளைப் புதிதாக உருவாக்கினான். பழைய வீதிகளைப் புதிப்பித்தான், காடுகளை அழித:து நாடுகளாக்கினான். விவசாயத்தை விருத்தியடையச் செய்தான்.

குளங்கள், கால்வாய்கள் பல வெட்டியும் புதுப்பித்தும் பயிர்ச் செய்கைக்கு உதவியளித்தான். நூல் நூற்றல், ஆடை நெய்தல் ஆகிய கைத்தொழில்களையும் விருத்தி பண்ணினான். வைத்தியரையும் வைத்திய நூல்களையும் ஆதரித்ததோடு பல வைத்தியசாலைகளிலும் நிறுவினான். பல பாடசாலைகளை அமைத்தான். பல தமிழ்ச்சங்கங்களையும் உருவாக்கினான். இவன் காலத்தில் தமிழ் மொழியில் எல்லாத் துறைகளிலும் நல்ல நல்ல நூல்கள் எழுந்தன. நீதி பரிபாலனமும் செவ்விதாய் அமைந்திருந்தது. சுகேசன் நாற்பத்தொரு வருடங்களும் ஏழுநாட்களும் ஆட்சி புரிந்த பின் தனது மூத்த புத்திரனாகிய மாலியவானை இலங்கைக்கு அரசனாக்p, காட்டுக்கு சென்றான்.

மாலியவான் ஆட்சி

தமிழ் அரசனாகிய மாலியவான் நாகதீவுக்கு அரசனாகி இலங்காபுரம் என்னும் நகரத்தை அழகாக கட்டுவித்து, அதைத் தலைநகராக்கி அங்கிருந்து இலங்கை என்னும் நாகதீவை ஆண்டான். இவன் கட்டுவித்த அரண்மனைகளும் மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் விலையுர்ந்த இரத்தினக் கற்களாலும் தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்டன. இவனது முடியின் மீது பத்துக் கிரீடங்கள் அமைந்திருந்தன. இவனுடைய சிங்காசனமும் வாளும் முடியும் செங்கோலும் கட்டிலும் நவரத்தினங்களாலும் முத்துகளாலும் தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்டு விளங்கின. அக்காலத் தமிழர்களில் பலர் எல்லா வசதிகளும் ஒருங்கே அமைந்த பல அடுக்கு மாளிகைகளில் வாழ்ந்தனர்.

இவனது முடியை அலங்கரித்துக் கொண்டிருந்த பத்து கிரீடங்களும் பத்து நாடுகளுக்கு இவன் அதிபதி என்பதை எடுத்து காட்டுகின்றன. இவன் இருபத்தொரு வருடங்கள் இலங்கையை மகோன்னதமாக ஆட்சி புரிந்து வந்தான். மாலியவான் இறந்த பின்பு அவனுடைய தம்பியாகிய சுமாலி என்பவன் ஆட்சி புரிந்தான். இவன் மாந்தையிலிருந்தும் இலங்காபுரத்தில் இருந்தும் அரசான்டான். சுமாலி கேதுமதியை மணந்து ஒரு மகளைப் பெற்றேடுத்தான். அவளின் பெயர் கைகேசி என்பதாகும். சூரியப் பிரகாசம் என்னும் ஆகாய விமானத்தை அவன் வைத்திருந்தான்.

சுமாலியின் ஆட்சி முன்னையவர்களது ஆட்சி போன்று அத்துனை சிறப்பாக அமையாமையால் அவனால் ஐந்தரை வருடங்களும் முன்றரை மாதங்களுமே ஆட்சி புரிய முடிந்தது. மக்கள் கிளர்ச்சி செய்து அவனை சிங்காசனத்தில் இருந்து நீக்கி விட்டனர். இவனது ஆட்சியில் வெறுப்படைந்த தமிழ்மக்கள் பாண்டி நாடு, சேரநாடு, சோழ நாடு முதலிய தமிழ் நாடுகளில் சென்று குடியேறினர். சுமாலிக்குப்பின் அரசாட்சிக்குரிய கைகேசி சிறு குழந்தையாய் இருந்த படியால் இலங்கையை ஆழ அரசனில்லாதிருந்தது. இதனால் வச்சிரவாகு என்பவன் தனக்கும் இயக்கப் பெண்ணாகிய தேவகன்னி என்பவளுக்கு பிறந்த புத்திரனாகிய வைச்சிரவணானை இலங்கைக்கு அரசனாக்கினான். வச்சிரவாணனுக்கு குபேரன் என்னும் மறு பெயரும் உண்டு.

குபேரன் ஆட்சி

குபேரன் அரசானான பின்பு அவனது தாய் வழியைச் சேர்ந்த பல இயக்க குடிகள் இலங்கையில் வந்து குடியேறினார்கள். இவர்களும் தமிழர்களே. நாகரிகத்திலும் கல்வியிலும் இயக்கர் என்னும் தமிழர் மிகவுஞ் சிறந்தவர்களாய் இருந்தார்கள். இயக்கரும் தமிழரும் பேசிய மொழி தமிழேயாகும். பண்டைக்காலத்தில் வரன் என்பவன் புலத்தியவனைப் பெற்றான். புலத்தியன் குணவதியை மணந்து வச்சிரவாகுவைப் பெற்றான். இந்த வச்சிரவாகு குபேரனுடைய தந்தையவான். இந்தக் குபேரன் இலங்கையை நீதியாக ஆண்டான். இவன் புட்பக விமானம் என்னும் ஆகாய ஊர்தியை வைத்திருந்தான்.
 


இராவணனும் இராமாணமும்

இராவணன் வரலாற்றில் ஒரு விதமாகவும் இலக்கியத்தில் ஒரு விதமாகவும் எடுத்து காட்டப்படுகின்றான். இலக்கியத்தை ஆக்குகின்ற புலவர் தமது விருப்பு வெறுப்புக்களையும் கொள்கைகளையும் அவ்விலக்கியத்தில் புகுத்திவிடுவது வழக்கம். கற்பனையில் கதாபத்திரங்களை அமைத்து அதில் கருத்துகளை புகுத்துவதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் வரலாற்றில் நல்ல குண இயல்பு உடைய ஒருவனை இலக்கியத்தில் தீய குண இயல்பு உடையவனாக திரித்து இலக்கியம் ஆக்கும் போதுதான் சிக்கல் ஏற்படுகின்றது. வெறும் இலக்கிய இரசனையோடு இலக்கியத்தைப் படிப்பவர்களுக்கு இந்த கபடங்கள் புலப்படுவதில்லை.

அவ் இலக்கியத்தில் வருகின்ற அணிகள், நயங்கள், கற்பனைகள் இவைகளே புலப்படுகின்றன. இவ்வாறு இலக்கிய ஈடுபாடு கொண்டவர்கள் இலக்கிய ஆசிரியர் ஒரு பாத்திரத்தை எவ்வாறு சிருட்டிக்கிறாரோ, அவ்வாறே அதனை உண்மையாக ஏற்றுக் கொள்கின்றார்கள்.

அத்தகைய நிலமைதான் எமது இராவணனுக்கும் ஏற்பட்டுள்ளது. இராமாணத்தை நன்கு சுவைத்த ஒருவரிடம் போய் இராவணன் நல்லவன் காமுகன் அல்லன் என்று கூறினால் ஏற்றுக் கொள்ளவே மாட்டார். உண்மை இதுதான். வடக்கே வாழ்ந்த ஆரியருக்கும், தெற்வே வாழ்ந்த திராவிடற்கும் இருந்த இயல்பான பகையுணர்வே இராமாயணமாகும். இராமாயண காலத்தில் எல்லா வகையிலும் திரவிடராகிய தமிழர் மேம்பட்டு விளங்கினர்.

எனவே அவர்களை அழிக்க அல்லது அடக்க நடந்த போரே இராம இராவண யுத்தமாகும். தமிழகத்தில் இயல்பாக இருந்த குறைபாடாய் பதவி ஆசை, காட்டிக்கொடுத்தல் ஆகிய குணங்களால் இவர்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் மோதவிட்டு இறுதியில் தாம் பயணடைந்த கதையே இராமாயணம். எனவே தமிழராகிய நாம் இராமாயணத்தை ஏற்றுக் கொள்ளவும் கூடாது. படிக்கவும் கூடாது. இராவணேஸ்வரன் என்று போற்றப்படுகின்ற சிறந்த சிவபக்தனான இராவணனை தூஷிப்பது சிவ தூஷனையாகும். இத்தகைய இராமாயணத்தை சைவக் கோவில்களிலோ, தமிழ் மக்கள் மத்தியிலோ பிரசங்கிக்க கூடாது. தமிழர் பாடநூலில் இராமாயணம் இடம்பெறலாகாது.

இராவணன் ஆட்சி

கைகேகி என்னும் தமிழ் அரச குமாரி வச்சிரவாகுவைக் கூடி இராவணன், கும்பகருணன் விபீசணன் புதல்வர்களையும் சூர்ப்பனகை என்ற புத்திரியையும் பெற்றாள். இப் பெயர்கள் இவர்களின் பகைவர்களால் அழைக்கப்பட்டு பிரபல்யம் அடைந்த பெயர்களாகும். ஆனால் இவர்களின் பிள்ளைப் பெயர்கள் முறையே சிவதாசன், பரமன், பசுபதி, உமையம்மை என்பனவாகும். சிவதாசனே இராவணன் என்றும், பரமனே கும்பகருணன் என்றும் பசுபதியே விபீசணன் என்றும் உமையம்மையே சூர்பனகை என்றும் அழைக்கப்பட்டனர். இலங்கையின் ஆட்சி உரிமையை பெறுவதற்கு இராவணன் தனது தமையானாகிய குபேரனுடன் யுத்தம் செய்தான். தம்பியுடன் யுத்தம் செய்வது முறையன்று எனக் குபேரன் எண்ணியதால் ஆட்சிப் பொறுப்பை இராவணனிடமே ஒப்படைத்து விட்டுத்தான் அழகாபுரியை ஆட்சி செய்தான்.

அழகாபுரியில் வாழ்ந்தவர்களும் இயக்கர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். குபேரனோடு இலங்கையில் வந்து குடியேறிய தமிழர் குபேரனோடு திரும்பிப் போகாமல் இலங்கையிலேயே தங்கி விட்டனர். குபேரனுக்குப்பின் இராவணனன் இலங்கை முழுவதற்கும் அரசனாகி இலங்காபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்டு வந்தான். இவன் இலங்கையை பல வருடங்களாக மாற்றாரும் மெச்சும் வகையில் சிறப்பாக அரசோச்சி வந்தான். இவன் தனது மூதாதைகளில் ஒருவனான மாலியவனைப் போன்றே பத்து நாடுகளுக்கு அரசனாக முடி சூடப்பட்டான்.

இதனால் இவனை தசக்கீரிவன் என்றும் அழைத்தனர். இரமாயணத்தில் கூறுவது போன்று இவனுக்கு பத்து தலைகள் இல்லை. பத்து கிரீடங்களே அன்றி பத்து தலைகள் அன்று. இராவணன் மண்டோதரியை திருமணஞ் செய்தான். மண்டோதரியும் கற்பிற் சிறந்தவளாக விளங்கினாள். இவள் இந்திரசித்து, அதிசகாயன் ஆகிக திறமைமிக்க புத்திரர்களைப் பெற்றேடுத்தாள். இராவணன் பல துறைகளிலும் ஒப்பற்று விளங்கினான். சங்கீத துறையானாலும் சரி, போர்த் திறமையானலும் சரி, தவ வலிமையிலும் சரி, கடவுட் பக்தியிலும் சரி இவன் ஒப்பாரும் மிக்காரும் இல்லாது விளங்கினான். இவற்றை விட யோக சித்திகளும் கைவரப்பட்டவனாக விளங்கினான். இதனால் இவன் தான் நினைத்த வடிவத்தை கொள்ளவும், எதிரிகளுக்கு தெரியாமல் மறைத்து நிற்கக் கூடிய பல சித்துகளில் வல்லவனாக விளங்கினான்.

யாகங்களில் மிருகங்களை பலி கொடுத்தலை இராவணனும் அவனுடைய இனத்தவர்களும் வெறுத்தார்கள். மிருக வதை அவனுடைய காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு பிடிக்காது. இராவணன் சிவபூசை செய்யும் நியமம் உடையவன். ஏகபத்தினி விரதம் பூண்டவன். பழிக்குப் பழி வாங்கும் நோக்குடனேயே சிதையை சிறை வைத்தான். இம்சித்து அல்ல. இவனது பகைவர்களாகி ஆரியர்களே இவன்மீது இவ்வாறு வீண் பழி சுமத்தினர். இவனும் இவனது தாயாகிய கைகேசியும் மனைவியாகிய மண்டோதரியும் சிவபெருமான் இடத்தில் மிகுந்த பற்றுக் கொண்டவர்கள். இந்த இராவணன் ஆகியோரின் ஆட்சிக்காலம் ஈழத்தமிழரின் பொற்காலம் எனப்போற்றப் படுகின்றது.

இராம இராவண யுத்தத்தில் இராவணன் தம்பி விபீ~ணன் தமையனாகிய இராவணனை விட்டு நீங்கி இராமன் பக்கம் சேர்ந்து இராவணன் படைப்பலம் யுத்ததந்திர முறைகள், அந்தரங்கள் எல்லாவற்றையும் இராமனுக்கு காட்;டிக் கொடுத்து இராவணனின் அழிவுக்கு ஏதுவாக இருந்தான். இராவணனுக்குப் பின் இராமனுடைய அனுசரணையுடன் இலங்கையின் ஆட்சியை கைப்பற்றிக் கொண்டான்.

இதன் மூலம் தமிழரின் வரலாற்றில் மாபெருங் களங்கத்தை ஏற்படுத்தினான். இவன் இராமனது அருவருடியாகி, அடிமைச் சின்னமான ஆழ்வார் பெயருடன் விபீ~ண ஆழ்வாராகவே இருந்து இறந்தான். இராவணனின் வீழ்ச்சிக்குப் பின் சேர, சோழ, பாண்டி, ஈழம் ஆகிய திராவிட நாடுகள் ஆரியரின் ஆதிக்கத்திற்குப் உற்பட்டன. எனவே இந்த இராவணன் வரலாறு ஈழத்தமிழர்களாகிய எமக்கு ஒரு பெரும் எச்சரிக்கை எனக் கொள்ள வேண்டும். எமது மக்கள் விபீஷணனைப் போன்று கோடாரி காம்புகளாக மாறக்கூடாது. எல்லாத்தமிழர்களுமே இராவணனைப் போன்று தேச பக்தி உடையவர்களாகவும், வீரம் மிகுந்தவர்களாகவும், வீர சுதந்திரம் வேண்டி நிற்பவர்களாகவும் மாற வேண்டும்.

எப்பொழுது இந்நிலை எம்மிடம் உருவாகின்றதோ அன்றுதான் சுதந்திர தமிழீழத்தை அமைத்து சுதந்திர புருடர்களாக வாழ்வோம். வீபீஷணனின் ஆட்சியுடன் இலங்கையின் பூர்வீக வரலாறும் முடிகிறது எனலாம். சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடும் இலங்கை வரலாறும் விஜயனின் விஜயத்துடன் ஆரம்பிக்கின்றது.
 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home