"To us all towns
are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Dr.N.Kannan, Kiel, Germany, 1999
published here with the permission of the author
[to read the Tamil text you may need to download & install a Tamil Unicode font from here - for detailed instructions please also see Tamil Fonts & Software]"...எப்படி இராமன் இருக்குமிடம் அயோத்தியோ, கண்ணன் இருக்குமிடம் கோகுலமோ அது போல் வைய விரிவு வலையில் இருக்குமிடம் தமிழகம்.."
[see also Tamils - a Trans State Nation]
இருபதாம்
நூற்றாண்டின்
விளிம்பில்
நிற்கிறது
உலகம்.
ஏயாதும் ஊரே, யாவரும் கேளீர் என்று பாடிய கணியன் பூங்குன்றனார் காலத்திலிருந்து வெகு தூரம் வந்து விட்டது உலகு. ஒவ்வொரு பத்திரிக்கையிலும் கணக்கெடுப்பு நடக்கிறது. பல்வேறு கோணங்களiல். பொருளாதார, அரசியல், கலைத் துறை முன்னேற்றமென பல்வேறு கோணங்களiல். இருபதாம் நூற்றாண்டை மற்ற நூற்றாண்டுகளiலிருந்து பிரித்து இனம் காண வைப்பது நமது அறிவியல், தொழில் துறை முன்னேற்றம்தான். கணியன் பூங்குன்றனார் ஒரு பத்து ஊர் பாத்திருப்பாராவெனத் தெரியவில்லை. எத்தனை நாடுகளைக் கண்டிருப்பார் என்றும் தெரியவில்லை. ஆனாலும் வார்த்தைகள் உருவகங்கள் என்னும் சூட்சுமம் அறிந்து பொதுவாகச் சொல்லிப் போய்விட்டார். அது இன்றும் பொருந்துகிறது. எப்படியெனில், இரண்டாவது உலகப் போருக்குப் பின் நாடு தாண்டும் தவளைப் பரம்பரை ஒன்று உருவாகி உள்ளது. பொதுவான பொருளாதார முன்னேற்றமும், வெகு விரைவு பிரயாண ஊர்திகளும் இதைச் சாத்தியமாக்கியுள்ளன. நீராவி இரெயில் வந்த போது மதுரையும், சென்னையும் ஒரு இரவுப் பயணமாகிப் போனது. வானூர்தி வந்த பின் லண்டனும், டெல்லியும் சில மணி நேரத் தூரமாகிப் போனது. இருபதாம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் நடந்த இத் தொழிற்புரட்சி வெளியை வெகுவாகக் குறைத்து விட்டது. தத்தித்தாவும் தவளைப் பரம்பரை ஏயாதும் ஊரே, யாவரும் கேளiர்ஏ என்று சங்க முழக்கம் இடுகின்றது. வெளிகுறையும் போது காலமும் குறையத்தான் செய்கிறது. எனினும் தொலை பேசி வந்த போது, வெளi, காலம் இரண்டுமே குறைந்து போய் பேசுபவர் அருகில் நிற்கும் உணர்வைக் கொடுத்தது. பின் ரேடியோ வந்தது. லண்டனில் நடக்கும் கலை நிகழ்ச்சியை சென்னையில் நிகழும் கணங்களiல் கேட்க முடிந்தது. தொலைக் காட்சி வந்தது. கேட்பது மட்டுமல்லாமல், உடனுக்குடன் பார்க்கவும் முடிந்தது. தொலைவையும், காலத்தையும் தொலைத்து நின்று கூத்தாடுவது போல், வெளிகிரகத்து ஆராய்ச்சியை புலோகத்திலிருந்து செய்ய முடிந்திருக்கிறது. ஆட்டுவிப்பவன் அமெரிக்காவில் ஆடும் ஊர்தி செவ்வாய் கிரகத்தில். எத்தனை கோடி மைல்கள் இடையில்? நம்ம பாட்டியிடம் இதைச் சொன்னால் நம்ப மாட்டாள். ஏதோ, மகாபாரதக் காதையில் வரும் மாயா பஜார் போல் காரியங்கள் நடக்கின்றன. வானில் கூடும் மேகங்கள் போடும் புயல் ஆலோசனைகளை வின் கலங்கள் கொண்டு வேவு பார்க்க முடிகிறது. உயிரிழப்பு தவிர்க்கப் படுகிறது. இதே போல் வானில் தவழும் தொலை நோக்கி கொண்டு காலத்தின் ஆரம்பத்திற்கு போய் பார்க்க முடிகிறது. காலமும், வெளiயும் தோன்றிய பொழுதுகளை ஏறக் குறைய நோக்க முடிகிறது ஹுப்பில் தொலை நோக்கி மூலம். "ஊழி தோறும் தன்னுள்ளே படைத்து, காத்து, கெடுத்து" என்று நம்மாழ்வார் சொல்லும் தெய்வ காரியங்களை இத்தொலை நோக்கி கொண்டு தற்போது பார்க்க முடிகிறது. பிரபஞ்சத்தில் தொன்றும் அண்டங்களையும், வெடித்துச் சிதறும் மண்டலங்களையும் பதிவு செய்கிறது இத்தொலை நோக்கி. இவை பள்ளiப் பிள்ளைகளுக்கு படங்களாக வந்து சேர்கின்றன இந்நூற்றாண்டில். இத்தனை ஆச்சர்யங்கள் போதாது என்று உலகைக் கணனிக்குள் கொண்டு வந்து விட்டது தொழிற்திறன். தனி நபர் கணனிகள், வலைகள் கொண்டு பின்னப் பட்டு ஏவைய விரிவு வலைகள் ஏ தோன்ற ஆரம்பித்து விட்டன. இவ்வைய வலைகளiல் தகவல்களை ஓரிடத்திலிருந்து, ஓரிடத்திற்கு மாற்றுவது என்பது சிறு பிள்ளை விளையாட்டுப் போல் ஆகிவிட்டது இப்போது. இத்தகவல் எழுத்தாக, ஒலியாக, ஒளியாக இருக்கலாம். இத்தகவல் புரட்சியால் இந்திய துணைக் கண்டத்தின் தேர்தல் அறிவிப்புகள் இந்தியருக்கு மட்டுமல்ல, உலகில் உள்ள அனைவருக்கும் நொடிக்கு நொடி அனுப்பப்பட்டு கண்காணிக்கப் பட்டது. இப்படியான சூட்சும வெளியான கணனி வெளியை நிழல் வெளி என்றும், சூக்கும வெளி என்றும் கூறுகிறார்கள். இவ்வெளியில் மக்கள் சேரும் போது நிழல் வெளிக் கிராமங்கள் உருவாகத் தொடங்கின. உதாரணமாக, கணனியில் தமிழில் எழுத முடியும் போது தமிழை வாசிக்கக் கூடிய தமிழர்கள் சேரத் தலைப்படனர். திண்ணைப் பேச்சு கணனிக்கு மாறும் போது ஊர் விசாரணனைகள், பட்டி மண்டபங்கள், கலை விழாக்கள் என்று தமிழகத்தில் மட்டுமே காணக் கூடிய நிகழ்வுகள் நிழல் வெளiக்கு மாறின. தமிழை வாசிக்கவும், கேட்கவும், தமிழ் நிகழ்வுகளை காணவும் கணனி தளம் தரும் போது உள்ளுணர்வில் தாய் நாட்டில் இருப்பது போன்ற பிரம்மையை உருவாக்க முடிகிறது. நாம் உலகு என்று பருட்பொருளுக்கு பெயரிடுவது கூட நம் உணர்வின் பாற்பட்டதே. கண்ணுள்ளவர் உலகம், காணாதார் உலகிலிருந்து சற்றே வேறு பட்டதுதான். காது கேளாதார் உலகு இன்னும் வேறு. இப்படி உணர்வைப் பொறுத்து உலகங்கள் விரிந்து கொண்டே போகின்றன. பிரக்ஞை இழந்தவன் உலகு என்னவென்பது சயனைடு தின்றவன் சுவை சொன்ன கதையாக நமக்கு இன்னும் சொல்லப் படாமலே இருக்கிறது. இந்த வாதத்தின் நிட்சியாக சொல்லப் போனால் தமிழகம் என்பது ஒரு உணர்வு என்பது புரியும். எப்படி இராமன் இருக்குமிடம் அயோத்தியோ, கண்ணன் இருக்குமிடம் கோகுலமோ அது போல் வைய விரிவு வலையில் இருக்குமிடம் தமிழகம். இவ்வுணர்வை பல்லாயிரம் தமிழர்கள் இப்போது உணரத் தலைப் பட்டுள்ளனர். இவர்கள் அமைக்கும் இணையக் கிராமங்களில் தமிழ் நூலகங்கள் கூட தோன்ற ஆரம்பித்துள்ளன. பண்டைய சங்க இலக்கியங்களிலிருந்து, ஜெயகாந்தன் கதைவரை இந்நூலகங்களில் வாசிக்க முடிகிறது. நாடு இழந்து அகதியாய் அலையும் ஈழத் தமிழருக்கு இச்சூக்கும வெளி தாயகத்தின் உணர்வைக் கொடுக்கத் தலைப் பட்டுள்ளது. துன்பம் நேர்கையில் எப்படி யாழ் இசை இன்பம் தருகிறதோ அதுபோல் நாடிழந்த தமிழனுக்கு நிழல்வெளி உணர்வளவிலாவது ஒரு நாடைத் தந்துள்ளது. இத்தொழிற் புரட்சியின் தலைமுறைகள் நாடு விட்டு நாடு பௌதிகமாக தாண்டுவது மட்டுமல்லாமல், வைய விரிவு வலையில் உலகின் எந்த மூலைக்கும் சறுக்கத் தலைப்பட்டுள்ளனர். உலகு
ரொம்பத்தான்
சுருங்கி
விட்டது
இருபதாம்
நூற்றாண்டில்.
|