"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Tamils - a Nation without a State> Switzerland > 25th Anniversary of July 83 commemorated in Zurich, 13 July 2008 > Remembering Black July '83 - Anniversaries: 1984 todate
Tamils - a Nation without a State
Switzerland -சுவிற்சர்லாந்து
25th Anniversary of July 83
see also
சுவிசில் நடைபெற்ற கறுப்பு ஜூலையின் 25 ஆம் சிங்கள அரசின்
இனவெறித்தனத்தால் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட 1983 ஆம் ஆண்டு
கறுப்பு யூலையின் 25 ஆம் வருடத்தினை நினைவு கூரும் நிகழ்வு சுவிஸ்
மகளிர்; அமைப்பின் ஏற்பாட்டில் 13.07.08 அன்று சுவிஸ் சூரிச்
மாநிலத்தில் நடைபெற்றது.
மண்டபம் நிறைந்த மக்களுடன் சரியாக
பிற்பகல் 16:15 மணிக்கு பொதுச்சுடரேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது.
பொதுச்சுடரினை அந்தோனியோ பேயோ
ஏற்றிவைக்க, சுவிஸ் மகளிர் அமைப்பின் பொறுப்பாளர் திருமதி புஸ்பராணி
தேசியக்கொடியினை ஏற்றிவைத்தார்.
அடுத்து ஈகைச்சுடரினை திருமதி
மார்க்ரித்தா ஏற்றிவைக்க, தொடர்ந்து மலர்வணக்கமும் அகவணக்கம்
செலுத்தப்பட்டது. அடுத்து கறுப்பு யூலை
நினைவினைச்சுமந்த 'அழியாத நினைவுகள்" என்னும் நிகழ்வுடன் மேடை
நிகழ்வுகள் ஆரம்பமாகின.
அதைத்தொடர்ந்து சுவிஸ் கலை பண்பாட்டுக்
கழகத்தின் இசையில் விடுதலை கானங்கள் இசை நிகழ்வும், சுவிஸ் மகளிர்
அமைப்பின் செயளாளர் திருமதி நிர்மலாவினால் வரவேற்புரையும், 'உள்ளத்தில்
உறைந்துவிட்ட வடுக்கள்" என்னும் தலைப்பில் கறுப்பு யூலையின்
நினைவைச்சுமந்த கவியரங்க நிகழ்வும், திருமதி மார்க்ரித்தாவினது
பேச்சும் இடம்பெற்றது.
அடுத்து, தமிழர் பேரவை துணைப்பொறுப்பாளர்
சண். தவராசாவினால் சுவிஸ் மகளிர் அமைப்பினரால் வெளியிடப்பட்ட
'கறிவேப்பிலை" என்ற நூலுக்கான முகவுரை வழங்கப்பட்டது.
தொடர்ந்து நூல் வெளியீட்டினை தமிழீழ
விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளை பொறுப்பாளர் குலம் அண்ணா வெளியிட்டு
வைத்தார். தொடர்ந்து, தமிழீழ விடுதலைப்
புலிகளின் பேச்சாளர் அல்பேட்டின் சிறப்புரை இடம்பெற்றது.
அடுத்து மகளிர் அமைப்பினரால் ஆண்டுதோறும் நடைபெறும் நல்வாய்ப்புச்
சீட்டுக்குலுக்கல் நிகழ்வு நடத்தப்பட்டது.
தொடர்ந்து கிறபுண்டன் மாநிலம், ரிதா
நடனாலயம், ராதா நடனாலயம் ஆகியவற்றின் மாணவர்களினது நடன நிகழ்வுகளும்,
பேச்சும் இடம்பெற்றன. இறுதியாக மண்டபம்
நிறைந்த மக்களுடன் தேசியக்கொடியிறக்கப்பட்டு, நிகழ்வுகள் யாவும்
நிறைவுக்கு வந்தன. |