Netherlands -
நெதர்லாந்து - an estimated 20,000 Tamils live in Netherlands-
தமிழக உறவுகளிற்கு எமது நன்றிகள் நீதிகிடைக்கும்வரை உங்கள் குரல் ஒங்கிஒலிக்கட்டும்.
Federation of Tamils� Organizations in The Netherlands
14 November 2008
[தமிழ் டச்சு
ஒன்றியம், தமிழர் கலைபண்பாட்டுக்கழகம், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு,
தமிழ்ப்பெண்கள் அமைப்பு, தமிழ் இளையோர் அமைப்பு, தமிழர் மனிதஉரிமைமையம்,
கிழக்கு நெதர்லாந்து தமிழர் கலாச்சார ஒன்றியம், தமிழர் விளையாட்டு
ஒன்றியம், சாகன் தமி;ழ் கலாச்சாரமன்றம், என்ட்கூவன் தமிழ்ச்சங்கம்]
எமது தொப்புள்கொடி உறவுகளான தமிழகஉறவுகளே!!
இலங்கையில் தமிழர்களிற்கெதிரான சிங்களஅரசின் இனப்படுகொலைக்கெதிராக தொடர்ச்சியாக
நீதிகேட்டு ஓங்கிக்குரல் கொடுக்கும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் அதன் தமிழ்
மாணவப்பிரிவுகளிற்கும் தமிழகஅரசியல்கட்சிகள், சட்டவாளர்கள், வணிகர்கள்,
திரைப்பட-சின்னத்திரை கலைஞர்கள், திரைப்படத்தொழிலாளர்கள், நற்பணி மன்றங்கள்,
மீனவசங்கங்கள், ஊர்ச்சங்கங்கள், ரசிகர் மன்றங்கள் உட்பட அனைத்துத் தமிழக
உறவுகளிற்கும் முதலில் எமது நன்றிகள்.
இலங்கைத்தீவில் தமிழர்களை முற்றாக இல்லாதொழிப்பதற்கு ஆட்சிபீடமேறிய முன்னைய
அனைத்துசிங்களஅரசுகளும் திட்டமிட்டவகையில் தமிழர்கள் மீது இனப்படுகொலைகளையும்
போர்களையும் நடாத்திவந்தன. தமிழர்களை வந்தேறுகுடிகளென்றும் தாமே இலங்கைத்தீவின்
மைந்தர்கள் என்றும் அறிவியலிற்கு ஒவ்வாத �மகாவம்சம்� என்ற பொய்யும்புரட்டும்
நிறைந்ததும் தமிழினஅழிப்பை தூண்டும் சிங்கள பௌத்தநூலை வைத்துக்கொண்டு தமிழினஅழிப்பை
திட்டமிட்டு இவர்கள் அரங்கேற்றிவந்தனர். இன்று மகிந்த ராஜபக்சவின் தலைமையில்
தமிழினஅழிப்பு உச்சம்பெற்றுள்ளது. முன்பு நடந்திராத அளவில் பல படுகொலைகள்
அரங்கேறுகின்றன. பேசுங்கள். பேசித்தீருங்கள். என்று கடைசியாக நடந்துமுடிந்த
பேச்சுவார்த்தைக்கு அணுசரணையாளர்களாக வந்த வல்லாண்மை நாடுகளெல்லாம் இன்று
சிங்களத்தின் கொலைவெறித்தாண்டவத்தை தடுக்கமுடியாத நிலையில் உள்ளனர்.;
இந்நிலையில் எங்களிற்கு உதவ யாருமேஇல்லை என்றிருந்தவேளையிலே,
தொப்புள்கொடி உறவுகளான நீங்கள், வீதிகளில் இறங்கி நீதிகேட்டுஎழுப்பும் குரல்கள்
எம்மக்களிற்கு பெரும் ஆறுதலைக் கொடுக்கின்றது. எமக்காக குரல்கொடுத்ததற்காக நீங்கள்
கைதுசெய்யப்டுவதும் சிறைக்குச்செல்வதும் எமக்கு மிகுந்த வேதனையை அளிக்கின்றது.
இருப்பினும், எமக்காக நீங்கள் இருக்கின்றீர்கள் என்ற துணிவையும்
புதியஉத்வேகத்தையும் ஆத்மபலத்தையும் எமக்குத் கொடுத்திருக்கின்றது.. உங்களின்
இவ்எழுச்சியானது சிங்களஅரசிற்கு பெரும் அதிர்;ச்சியைக் கொடுத்திருக்கும்..
இவ்எழுச்சியை அடக்கவும் தமிழகமண்ணில் சதிவேலைகளை மேற்கொள்ளவும்; சிங்களஅரசும்
அதற்குத்துணைபோகும் சிலநாசகாரசக்திகளும் நிச்சயம் முயற்சிசெய்யும். அனைத்திற்கும்
முகம்கொடுத்து, அவற்றையெல்லாம் முறியடித்து எமது மக்களிற்கு நீதிகிடைக்கும்வரை
ஜனநாயகவழியிலே உங்கள் போராட்டங்களை தொடருங்கள். உங்களின் உதவிக்கரங்களை நாம்
இறுகப்பற்றிக்கொள்கின்றோம். நிச்சயம் நாம் வெல்வோம்.
நீதிகிடைக்கும்வரை உங்கள் குரல் ஓங்கிஒலிக்கட்டும்!
உங்கள் அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.