அதோ!  அகாயப் பந்தலில் நட்சத்திரங்கள் 
	கட்டியம் கூற முழுநிலா பவனி வந்து ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கிறது. ஒரு 
	மணிக்கு முன்னர்தான் யாழ்தேவி ஓடிக் களைத்து கடைசி ஸரேசன் காங்கேசன்துறையில் 
	பெரு முச்சுடன் நின்றது. 
	இதிலிருந்து இறங்கியவர்கள் அடுத்த நாள் 
	நடைபெறப்போகும் கலியாண வீடு செத்த வீடு திருவிழா காணிச்சண்டைகளுக்காக 
	வந்தவர்கள். அவர்கள் ஏற்படுத்திய சந்தடிகளும் அடங்கிவிட்டன.
	சிமெந்துத் தொழிற்சாலை இரண்டாவது ஸஹித சங்கு 
	ஊதி அதன் கார்வையும் மெல்ல அடங்கிவிட்டது. அமைதியான இரவு வேளையின் நிசப்தத்தை 
	மதவடியில் கேட்கும் ஆரவாரம் சிறிது தளர்த்துகிறது.
	சிலர் சைக்கிள்களில் வரும் ஓசைகள். இவர்கள் 
	இரண்டாம் ஆட்டம் சினிமா பார்த்துவிட்டு வருபவர்களாக இருக்கலாம். சைக்கிள் 
	செயின் கிறீச்சிடுவது தெளிவாகக் கேட்கிறது. இதைத் தொடர்ந்து ஒருவர் பெரும் 
	குரலெடுத்துப் பாடுகிர். குரல் சுமார்தான். ஆனால் இரவின் மோனத்தில் தெறிக்கும் 
	பொழுது அக் குரலுக்கு ஒரு லாவண்யம் எப்படியோ வந்துவிடுகிறது. தெரு நாய் ஒன்று 
	இந்த அத்து மீறலுக்கு ஆட்சேபம் தெரிவித்து அடையாளமாக குலைத்து விட்டு ஓய்கிறது. 
	என் கடமையை நான் செய்துவிட்டேன் இனி உங்கள் பாடு என்பது போல். கிட்ட கிட்ட 
	உயர்ந்து கொண்டே வந்த பாடல் மெள்ள மெள்ள தேய்ந்து மறைகிறது. இவர்களும் இரவில் 
	கரைந்து விடுகிர்கள்.
	நிசப்தம் மீண்டும் ஆட்சி செலுத்துகிறது. அந்த 
	முகம் தெரியாத பாடகனின் குரல் பசுமையாக மனதில் பதிந்துவிட்டது. இது அசலைவிட 
	நகல் கவர்ச்சியாயிருக்கும் விசித்திரம். டி எம் எஸ முதலாளி படத்தில் பாடிய ஏ 
	ஏரிக் கரையின் மேலே போறவளே பெண் மயிலே ஏ என்ற பாடல். சில பாடல்கள் குளியலறையில் 
	முணுமுணுக்க தோதானவை. இப்படியான பாடல்கள் வெட்ட வெளியில் குரலெடுத்துப் 
	பாடும்படி கிளர்ச்சியூட்டுகின்றன.
	1977 க்கு பின்னர் யாழ்பாணத்து வாழ்க்கையில் 
	பாரிய மாற்றங்கள் நடந்து கொண்டிருந்தன. இவற்றின் பிரதிபலிப்பாக மினி பஸ சொகுசு 
	கோச் வண்டிகள் ஏற்படுத்திய பிரயாண வசதிகள் மக்களின் அமோகமான செல்வாக்கைப் 
	பெற்றன. இது காறும் வேறு மார்க்கங்களின்றி போக்கு வரத்துச் சபை பஸ வண்டிகளிலும் 
	புகையிரங்களிலும் கிழங்கடுக்கியது போன்று நெரிசலில் சென்றவர்களுக்கு இது பெரிய 
	விட்டேற்றியாக இருந்தது.
	தட்டி வான் தொடக்கம் தேர் போன்ற நீண்ட ஏ சி 
	சொகுசு வண்டிகள் வரை மக்களின் நகர்வுகளை குடாநாட்டிற்கு உள்ளேயும் 
	கொழும்புக்கும் துரிதப்படுத்தின. பின்னால் வரும் சமுக சரித்திராசிரியர்கள் 
	இக்காலத்தை உல்லாச வண்டிகளின் பொற்காலம் என்றுகூடப் பெயரிடலாம். அவ்வளவு 
	தடல்புடல். வழமை போல் எமது சினிமா மோகத்தை வியாபாரஉத்தியாக்கி தட்டிவானுக்குள் 
	அடையும் சனத்தை உற்சாகப் படுத்த சினிமாப் பாடல்கள் ஒலித்துக் கொண்டேயிருக்கும். 
	
	கோச் வண்டிகளின் பொற்காலம் மட்டுமல்ல, இது 
	நுகர்வோர்களின் ரசனைக்கு தீனி போட்ட காலமுமாகும். பிரிட்டிஷ ஏகாதிபத்தியத்திய 
	காலத்தில் கிடைத்த ஆங்கில மற்றும் இந்திய ஆடம்பரப் பொருட்கள் பல காலம் 
	இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்டு மனதிலிருந்தும் மறைந்துவிட்டன. ஆனாலும் அந்த 
	டிரேட் மார்க்குகளின் கவர்ச்சி இன்னமும் ஈர்த்துக் கொண்டிருந்தன. 
	
	அபூர்வமாக கூட்டுறவு பண்டகசாலை முலமாக பொங்கல் 
	வருடப்பிறப்பு தீபாவளி பண்டிகைகளுக்கு மட்டும் தமிழருக்குச் செய்யும் சலுகையாக 
	வெல்லம் கற்கண்டு என்று விநியோகித்துக் கொண்டிருந்தரர்கள். மற்றும்படி சில 
	சரக்குகள் வெளிநாடு சென்று மீள்பவர்கள் கொண்டுவந்து பரபரப்பு 
	ஏற்படுத்துவார்கள்.
	1977 இல் அரசாங்கம் திடீரென இறக்குமதிச் 
	சட்டங்களை தளர்த்தியது. மீண்டும் ஹார்லிக்ஸ சனரோஜின், கிவ்ட் சீஸ, கில்லட் 
	சவரப் பொருட்கள, காஞ்சீபுரங்கள் எனபன சந்தைக்கு வந்து மக்களை கிறுங்க வைத்துக் 
	கொண்டிருந்தன. இவ்வளவு காலமும் இந்தச் சனங்கள் எதை சாப்பிட்டு எப்படி 
	பிரயாணங்களை மேற்கொண்டார்கள் என்பது வியப்பாயிருந்தது. தனியார் வண்டிகள் 
	மட்டும் நாளுக்கு இருபது முப்பது கொழும்புக்கும் யாழ்பாணத்திற்கும் இடையில் 
	ஓடினாலும் இவைகூட நிரம்பி வழிந்தன. 
	இது ஒரு தற்காலிக நுகர்வோரகளின் மெருகு எனலாம். 
	25 வருடக் கட்டுப்பாடுகள் காரணமாக மட்டுப் படுத்தப்பட்ட முறையில் கிடைத்து வந்த 
	கலாச்சார பொருட்கள் சுலபமாக கிட்டியதில் ஒரு மாயை திரைபோல் படர்ந்தது. சில 
	வருடங்களுக்குப் பின்னால் யாழ்பாணத்தில் நடக்கப் போகும் அனர்த்ங்கள் அழிவுகளை 
	அறியாமலேயே மக்களும் திருவிழாக் கோலம் கொண்டு அங்குமிங்கும் அலை மோதினார்கள். 
	வெடிக்கப் போகும் பூகம்பத்தின் சமிக்ஞைகளாக அங்கொன்று இங்கொன்க சில சம்பவங்கள் 
	நடந்து கொண்டிருந்தாலும், இவை நடந்த சில நாட்களில் இதுதான் சாஸவதம் என்கின்ற 
	மாதிரி மீண்டும் பழைய வழமையான ஓட்டம். புதிய சந்தைக் கலாச்சாரத்தின் கிளர்ச்சி 
	இது என்றே நினைக்கிறேன். 
	 
	சமுகத்தில் ஆழமான சுழல் உருவாகிக் 
	கொண்டிருப்பது தெரியாமல், மேலோட்டமாக கலகலப்பு அதிகரித்த காலம் இது. 
	பிரக்ஞைக்கு எட்டாத தளத்தில் இந்த புரட்சிச் சுழல் உருவாகிக் கொண்டிருந்தது 
	என்று கூறுவதைவிட, எமது பிரக்ஞை மிகவும் மே�லாட்டமானது என்பதே பொருந்தும். எமது 
	ஆன்மீகம் கலாச்சாரம் என்பனவற்றிற்கு ஆழம் இருக்கவில்லை என்பதை கவலையுடன் 
	ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதை இன்று கூறவேண்டியது எங்களில் ஒரு 
	அடக்கத்தை ஏற்படுத்த அவசியமாகிறது. இந்த ஆரவாரங்களெல்லாம் லங்காதகனத்திற்கு 
	பிறகு அடங்கி யாழ்பாணம் மயான பூமி யாகிவிட்டது.
1983 இல்தான் எரிபட்ட சொகுசு வண்டிகள் எத்தனை. இவை வேறு கதை. 
	இந்தப் பின்னணிகளுக்கேற்ற் போலவே சினிமா 
	இசையும் இளையராஜாவினால் புது மெருகு பெற்று நுகர்வோர் ரசனைக்கு ஈடு கொடுத்தது. 
	கொழும்பு செல்லும் கோச் வண்டிகளில் இவ்வகைப் பாடல்களை ஆற அமரக் கேட்கலாம். 
	
	சரி சினிமாப் பாடலே போடுவதாக நிகழ்ச்சியில் 
	எங்களுக்குள் எப்படியோ ஒரு ஏற்பாடாகிவிட்டது. எனவே விட்ட இடத்திலிருந்து 
	தொடர்கிறேன். இரவு 9.00 மணிக்கு யாழ் நகரைவிட்டு கிளம்பினால் பாடல்கள் பலத்த 
	சத்த்ததுடன் வைக்கப்பட்டு பயணிகள் தமிழ் அபிமானப் பாடல்களிலும் காதல் 
	பாடல்களிலும் கிறுங்குவார்கள். ஆனையிறவு வந்ததும் பாட்டு நிறுத்தப்படும். 
	பஸவண்டியும் நிறுத்தப்படும். 
	 
	எல்லோரிலும் குறிப்பாக இளைஞர்கள் மனதில் ஒரு 
	திகில் பரவும். இராணுவம் ஏறிச் சோதனை செய்து முடிந்து பஸ ராணுவ முகாமை 
	தாண்டியவுடன் நிம்மதிப் பெரு முச்சுடன் மீண்டும் பாடல்கள் தொடரும். வண்டி 
	வவனியாவைக் கடந்து காரிருளில் கானகத்தை ஊடுருவிச் செல்லும். வண்டியின் 
	அசைவுகளால் தாலாட்டப் பட்டு உறங்கியும், வண்டி குண்டும் குழியிலும் 
	விழுந்தெழும் பொழுது திடுக்கிட்டு விழித்தும் இருக்கும் ஒரு அரைத்தூக்கமும் அரை 
	விழிப்புமான மைமலில் அதாவது துஞிலிஙஹத ழஒந� இல் நான் கேட்ட பாடல் ஒன்று 
	வழங்குகிறேன். 
	
	எஸ பி பாலசுப்பிரமணியத்தின் குரலில் பொன் 
	மாலைப் பொழுது இதுஒரு பொன் மாலைப் பொழுது. பாடல் கேட்கும் நேரத்துக்கும் 
	பாடலின் சந்தியா காலத்து கவிதைக்கும் சம்பந்த மில்லாவிடினும் வரிகளும் மெட்டும் 
	அசத்துகின்றன. வான மகள் நாணுகிள் வேறு உடை பூணுகிள், வானம் எனக்கொரு போதி மரம் 
	நாளும் எனக்கது சேதி தரும். இது வைரமுத்துவின் கவிதை.