Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Nation without a State  > Canada > Canadian Rally Against Genocide of Tamils in Sri Lanka

Tamils - a Nation without a State

Canada - கனடா
- an estimated 300,000 Tamils live in Canada -
 


Canadians call for Solidarity against the
Sri Lanka's Genocide of Tamils

கனடா, ரொறன்ரோவில் அணை உடைத்தது தமிழ் வெள்ளம்

May 29, 2006, 4.00 pm - 9.00 p.m
Mel Lastman Square (5100 Yonge Street, Toronto)


Tens of thousands of Canadian Tamils thronged Mel Lastman Square in Toronto Canada Monday, 29 May 2006, defying a sudden transit strike in the city to protest against the human rights abuses committed by the Government of Sri Lanka against their relatives in the North and East. The rally in Toronto was the largest of the worldwide demonstrations that were held simultaneously from New Zealand to Canada. The large venue overflowed and the people stayed on adjourning streets. A sudden transit strike had crippled movement in the city of Toronto but  Tamil traders closed their stores and laboured throughout the day arranging for private bus trips and the local Tamil media played a phenomenal role in setting up carpools so that people could attend the event without hitches. Canadian politicians and peace activists were on hand to show their solidarity with the Tamil community. A petition was handed to the Canada�s federal political parties asking for Canada to play an active and impartial role in the Sri Lanka peace process and deproscribe the Liberation Tigers of Tamil Eelam.

The Petition further asked the Government of Canada to prevail on Sri Lankan government to cease the killing of Tamil civilians and to immediately disarm, dismantle and remove all paramilitary groups in the North and East of the island. The petition also called on the Government of Canada to urge the Sri Lankan government to comply with the ceasefire agreement by vacating high security zones, lifting the ban on fishing activities and the undeclared economic embargo that has been placed on the North and East. If the Government of Sri Lanka fails to comply, the petition urged the government of Canada to impose diplomatic and economic sanctions on the Government of Sri Lanka. Earlier in the day, thousands attended a demonstration in from the parliament in Canada�s capital, Ottawa.


எங்கெல்லாம் தமிழர் உள்ளனரோ அங்கெல்லாம் இன்று உரிமைக்குரல் ஒருமித்துக் கேட்டவண்ணம் உள்ளது. இந்த வகையில் தென் ஆசியாவிற்கு வெளியே தமிழர்கள் மிக அதிக எண்ணிக்கையில் செறிந்து வாழும் கனேடிய நாட்டின் ரொறன்ரோ பெரும் பாகத்தில் உரிமைக்குரலில் தமது குரலை இணைக்கும் துடிப்போடு அலையலையாய் வந்த மக்கள் கூட்டத்தால் நிழ்வு நடைபெறும் திறந்த வெளிச் சதுக்கம் நிறைந்து மக்கள் திருப்பி அனுப்பப்படும் நிலமை தோன்றி உள்ளது. அடக்கி வைத்த உள்ளக் குமுறல்கள், உரிமையின் தேடல்கள், எரிமலையாய்ப் பொங்கி, நோர்த் யோர்க் சதுக்கம் கொள்ளளவு கடந்து திணறுகின்றது.

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றவாறு வாகனங்கள் எழுச்சி கீதங்களை விண்ணுயர அதிரவிட்டபடி தொடர்ந்தும் சதுக்கத்திற்கு வந்தவண்ணம் உள்ளன. உலகிலேயே மிக நீண்ட வீதி ஜங் (லுழபெந); வீதி, இந்த அதிசயவீதியில் கனேடிய தமிழ் மக்களின் பிரமிக்கும் வகையிலான உரிமைக்குரல் ஏதோ ஒரு உன்னத நிகழ்விற்குக் கட்டியங் கூறியபடி ஒலித்துக் கொண்டிருக்கின்றது. சதுக்கம் நிறைந்த செய்தி காட்டுத் தீ போல் பரவியதால் எவ்வாறேனும் தாம் உள் நுளைந்து விட வேண்டும் என மக்கள் ஒருவரோடு முண்டியடித்துக் கொண்டு சதுக்கத்தை நோக்கி ஓடி வந்தார்கள என்றால் அது மிகையாகாது.

உரிமைக்குரல் நிகழ்வு அறிவிக்கப்பட்டபோது, இது என்ன இத்தனை குறுகிய கால அவகாசத்தில் நிகழ்வினை ஒளுங்கு செய்கிறார்களே?, வேலை நாளிலே விழாவினை வைக்கின்றார்களே? மக்கள் கனடாவில் வந்த தடையால் பயந்து போய் உள்ள இவ்வேளையில் இத்தகைய நிகழ்விற்கு வருவார்களா? போன்ற இன்னோரன்ன அவநம்பிக்கையூட்டும் கருத்துக்கள் எதேச்சையாகவும் சில சமயங்களில் சில விசம சக்திகளால் விசம நோக்கோடும் முன்வைக்கப்பட்டிருந்தன. ஆனால் இருநாட்கள் முன்னர் தான் நிகழ்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியிருந்தபோதிலும், தமிழ் ஊளியர்கள் அதிக அளவில் உத்தியோகம் பார்க்கும் தொழிற்சாலைகளில் தமிழ் ஊழியர்கள், உரிமைக்குரல் நிகழ்வின் முக்கியத்துவத்தினை முகாமையாளர்களிற்குப் புரிய வைத்து, இத்தொழிற்சாலைகளை இரு மணிநேரம் முன்னராக மூட வைத்து அனைத்துத் தொளிலாளர்களும் குழுக்கள் குழுக்களாக நிகழ்வு நடைபெறும் சதுக்கத்தினை நான்கு மணிக்கே வந்தடைந்தனர்.

தமிழ் மக்கள் உரிமையாளர்களாக விளங்கும் வியாபார நிறுவனங்களுள் மிகப்பெரும்பான்மையானவை மூடப்பட்டு அனைத்து மக்களும் நிழ்விடத்தை நிரப்பி நின்றனர்;. இதற்கும் மேலால் சங்கங்கள் தொழிற்சாலைகள் என்பன தாயகத்தில் நிகழும் அவலங்களின் படங்களை ஆடைகளில் பொறித்து விசேட ஆடைகள் தயாரித்து அவற்றைத் தரித்த வண்ணம் மைதானத்தை வந்தடைந்தார்கள். ஊடகங்கள் அனைத்தும் உரிமைக்குரலினை உரத்துக் கூறுகின்றன. 2004ம் ஆண்டும செப்ரம்பர் மாதம் ரொறன்ரோவில் ஒரு லட்சம் தமிழ் மக்கள் கலந்து நிகழ்த்திய பொங்கு தமிழ் நிகழ்வினைப் போன்று தற்போது உரிமைக்குரல் நிகழ்வும் வேற்றுமைகள் அனைத்தும் களைந்து தமிழராய் இணைந்த தமிழ் உறவுகளால் உயாந்து நிற்பது அண்மைக்காலமாக கனடாவில் இருந்துவந்த பயம் நிறைந்த சூழலை தகாத்தெறிந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

மேடையில் உரிமைக்குரலினைத் தொகுத்து வழங்கிய இளைய தலைமுறையினர், உரிமை கீதத்தை உசுப்பேற்றி முளங்கத் திரண்டிருந்த மக்கள் வெள்ளம் உணர்ச்சிப் பிரவாகத்தில் தம்மை மறந்து, தாயக உறவுகளை மட்டும் நெஞ்சிலும் நினைவிலும் நிறுத்தி ஏதோ ஒரு தியான நிலையில் இருந்தவர்கள் போன்று, எதற்கும் பயப்படாது உரிமை கோசமிட்டு முளங்கினார்கள். திடீர் திடீரென |எங்கள் தலைவர் பிரபாகரன்|, |எங்கள் தாயகம் தமிழீழம்| போன்ற உணர்சிக் கோசங்களும் கட்டுக் கடங்காது காட்டருவி போல் அங்கங்கு உரத்துக் கேட்டன. நாங்களும் வரி செலுத்துகின்றோம் நாங்கள் சட்டத்திற்குக் கட்டுப்படுகின்றோம் நாங்களுமு; அனைத்து வகையிலும் பெருமையான கனேடியயர்கள்.

அதற்காக எம்மைப் பார்த்து நீங்கள் கனேடியர்களாக மட்டுமே இருங்கள் தமிழ் அடையாளத்தை துறந்து விடுங்கள் என்று கூறும் உரிமை எவரி;ற்குமில்லை என்று மேடையில் இளைய குரல் முளங்க, |எமது தலைமை எமது உரிமை தடுப்பவன் யாராடா தமிழனின் குரலை| என்ற குரல் கூட்டத்தில் கட்டுங்கடங்காது பீறிட்டது. மக்களைப் பயமுறுத்தும் வகையில் மேலே வட்டமிட்டபடி ஒரு கெலி கொப்ரர் படமெடுத்தது. ஆனால் மக்களோ எங்களைப் பார்த்தால் பயந்தவர்கள் போன்றா தெரிகின்றோம்? நாங்கள் என்ன குற்றவாளிகளா பயப்படுவதற்கு? இது உரிமையின் குரல் எமது உறவுகளிற்கான குரல். புhருங்கள் எம் உறவுகளின் அவலம் செறிந்த படங்களை என்றவாறு அசையாது நின்றார்கள். கவிதைகள் முளங்கின. ஓரு மிக இளைய கவிக் குரல், அது கேட்டது |உங்களின் தேசத்தில் உங்களின் உறவுகளைக் கொண்டவரை நாடுகள் நாடுகளாகத் தேடிக் கொல்கிறீர், எங்களின் உறவுகள் உயிர்கள் மட்டும் என்ன உயிரில்லையா சொல்வீர் என்று.||

இன்று திடீரென பொதுப் போக்குவரத்து ரொறன்ரோ பிரதேசத்தில் முன்னறிவித்தல் இல்லாத ஒரு தொழிலாளர் வேலைபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டது. இதனால் பொதுப் போக்குவரத்து இன்று அறவே இல்லை. எங்கே இதனால் மக்களின் வருகை பாதிக்கப்படுமோ என விழா ஏற்பாட்டாளர் பயப்பட்ட போது, தமிழ் வர்தகர்கள் பணத்தை அள்ளி வீசி சொந்த பிரயாண ஒளுங்குகளை விளாவிற்கு ஏற்பாடு செய்தனர். கனடாவில் தமிழ் சமூகத்தின் பலத்திற்கு இது ஒரு மிகச் சிறந்த எடுத்துக் காட்டாக அமைந்தது. மக்கள் வெள்ளம் அலை மோதி, நிகழ்வு மேடையில் இருந்து நகரின் பிரதான வீதி வரை ஒருவர் நிலத்திலே கால்படாது சன சமுத்திரத்தில் நீந்திச் செல்லக்கூடிய வகையில் எங்கும் வியாபித்திருந்தது.

இன்றைய நிகழ்வினைப் பார்க்கும் எந்த ஒரு அரசியல் வாதிக்கும் இரண்டு கேழ்விகள் நெஞ்சில் எழும்.

ஓன்று தவறிளைத்து விட்டோமே, தமிழர் பிரதி நிதிகளைத் தகராறிற்கிளுத்துத் தமிழரின் வம்பை விலைக்கு வாங்கிக் கொண்டோமே என்றது. மற்றையது, கனடாவில் உண்மையிலேயே தமிழர் பிரதிநிதிகள் மீது தடை என்று ஒன்று உள்ளது தானா அவ்வாறாயின் எங்கனம் இத்தனை ஆயிரம் மக்கள் பயமின்றிப் பட்டப்கலில் இத்தனை வீச்சோடு உரிமைக் குரல் கொடுக்கின்றார்கள் என்பது.

பேரிரைச்சலோடு கூடும் பெருந்தொகை தமிழரும் கட்டுப்படுத்தத் திணறும் ரொறன்ரோ காவல் துறையினரும்.

ரொறன்ரோவின் ஜங் வீதி சனசமுத்திரமாக மாறியுள்ளது. தமிழ் மக்கள் உரிமைக்குரல் நிகழும் திறந்த வெளிச் சதுக்கத்தை நோக்கித் தொடர்ந்தும் திரண்டவண்ணமுள்ளனர். சதுக்கம் நிரம்பி, அருகிருக்கும் வாகனத் தரிப்பிடங்கள் நிரம்பி, மக்கள் வெள்ளம் வீதிக்கு வளியும் நிலைமை தற்போது தென்படுவதனால், ரொறன்ரோ பிரதேச காவல் துறையினர் செய்வதறியாது திணறும் நிலை தற்போது காணப்படுகின்றது.

ஒரு ரொறன்ரோ பிரதேச காவல் துறை அதிகாரி சத்தமாக வெளியிட்ட கேழ்வி என்னவெனில் ||இத்தனை கூட்டம் திரளும் என்று தெரிந்திருந்தும் எதற்காக நமது றாணிப்பூங்கா மாபெரும் மைதானம் இவர்களின் நிகழ்விற்கு மறுக்கப்பட்டது என்பது எனக்கு விழங்கவில்லை..|| என்பதாகும். ரொறன்ரோவில் திரள்கின்ற மக்கள் கூட்டத்தின் எண்ணிக்கைக்கு இக்கேழ்வி ஒன்றே சான்றாக அமையப் போதுமானது.

கனடா ரொறன்ரோவில் தமிழ் எதிர்ப்புச் பிரச்சாரங்களைத் தகர்த்தெறிந்த உரிமைக்குரல்!

கனேடிய மண்ணில் தமிழர் தரப்பின் மீதான தடை அறிவிக்கப்பட்ட நாள் முதல் சிறீலங்கா அரசின் முகவர்களும் தமிழ் எதிர்ப்பாளர்களும் காய்ந்த மாடு கம்பிலே விளுந்தது போல ஏதேதோ கற்பனைகளை அள்ளி வீசி வந்தார்கள். குறிப்பாக, கனேடியத் தமிழர்கள் சந்தர்ப்ப வாதிகள் என்றும் தடைவந்ததும் தலைதப்பியது தம்பிரான் புண்ணியம் என அவர்கள் ஓடிவிட்டார்கள் என்றும், தமிழ் தேசியத்திற்குக் குரல் கொடுத்த தமிழ் வரலாறு கனடாவில் ஒழிந்தது என்றும், மக்களிற்கும் தமிழர் பிரதி நிதிகளிற்குமான பிணைப்புக் கனடாவில் தகர்ந்தது என்றும் எல்லாவற்றிற்கும் மேலால் தமிழ் மக்களை இனிமேல் எவராலும் தமிழ் உணர்வுக் கோசங்களோடு வீதியில் இறக்க முடியாது என்றும் தமிழ்த் தேசியம் கனடாவில் ஓய்வு பெற்றது என்றும் ஏதேதோ புலம்பல்கள்.

குறிப்பாக, சிங்களவர்களைக் காட்டிலும் சில தமிழ் விரோத தமிழ் குளுக்கள் இத்தகைய வாய் வீரங்களை வர்னணையாக கடந்த இரு மாதங்களாக வழங்கி வந்தனர். தமிழ் சமூகத்தின் மீதான பல உரிமை மீறல்கள் இந்த மண்ணில் நடப்பதைக் கண்டபின்னரும், தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்குச் சகுனப் பிளை என்பது போல் இந்தக் குறுகிய புத்திக் காரர்கள் நடந்து வந்தார்கள்.
ஆனால் இவர்களின் பரப்புரைக்குத் தமிழ் சமூகம் பதிலளித்து நேரத்தை விரயமாக்காது செயல்த் திறனோடு இன்றுவரை மௌனமாக நகர்ந்தது.

சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நியாயமான கனேடியர்களாக, கனேடிய மண்ணில் பற்றுள்ளவர்களாக, பொறுப்பான கனேடிய பிரஜைகளாக என்றுமே இருந்துவரும் தமிழர்கள், அமுலிற்கு வந்த புதிய சட்டத்தின் வரைமுறைகள் என்ன? அதன் வீச்சு என்ன? போன்ற விடயங்களை மிகவும் சிறப்பான முறையில் கனேடிய பாணியில் தலைசிறந்த சட்டத்தரணிகள் வாயிலாக உறுதிப்படுத்துவதற்காக எடுத்துக் கொண்ட இந்த இடைவெளியில் தான் மேற்படி விசம சக்திகள் தமது கற்பனா சக்தியைக் கட்டவிழ்த்து விட்டிருந்தனர்.

தமது வேலைகளில் மூழ்கிப் போயிருந்த கனேடிய தமிழ ஆர்வலர்கள், இந்தப் பத்தாம் பசலிகளின் கூச்சல்களைக் காதிலே போடாது, அதற்கு மறுப்புரை வழங்காது தாம் எதற்காக இடைவெளி எடுத்தனரோ அவ்விடயங்களைத் தெளிவு படுத்தும் நடவடிக்கைகளை மட்டும் அவ்விடைவெளியில் செய்து வந்தனர். இந்த அமைதியை, தமது விசம பரப்புரைக்குக் கிடைத்த வெற்றியாக, எப்போதும் போல், தப்பாக விளங்கிக் கொண்ட தமிழ் எதிர்பாளர்கள் இளகிய இரும்பைக் கண்ட இரும்பு வேலை ஆச்சாரியார் போல் தமது கூச்சல்களை நாளிற்கு நாள் கூட்டி வந்தனர். இந்நிலையில், தமது கேழ்விகளிற்கான சட்ட பூர்வ விளக்கங்களைப் பெற்றுக் கொண்டுள்ள தமிழ் உணர்வாளர்கள் |வீழ மாட்டோம் நாங்கள் வீழ மாட்டோம்| என உரிமைக் குரல் எளுப்பி வருவது கண்டு செய்வதறியாது திகைத்துப் போய் உள்ளார்கள் தமிழ் எதிர்பாளார்கள்.

தமிழ் தேசியம் அழிவற்றது என்பதனை உரிமைக்குரல் நிகழ்வு உலகெல்லாம் பறைசாற்றி ஒலித்துக் கொண்டிருக்கின்றது.

||அவலத்தைத் தந்தவனிற்கே அவலத்தைத் திருப்பிக் கொடு||
கனடாவின் ரொறன்ரோ உரிமைக்குரலில் உறுதிமொழி

அப்பாவித் தமிழ் மக்களை ஒரு புறத்தில் கொன்று குவித்துக் கொண்டு, மறுபுறத்தில் மேற்குலகின் செல்லப்பிள்ளையாக சனநாயகம், பன்மைத்துவம், பிரதேச இறமை போன்ற மேற்கின் ஆசீர்வாதமுள்ள வார்த்தைப் பிரயோகங்களோடு சிறீலங்கா அரசு வலம் வருவது அனைத்துத் தமிழர்களும் நன்கறிந்ததே. காலாதி காலமாக, சிறீலங்கா அரசானது, உள்ழூரில் மேற்கின் கொடிகளை எரித்துக் கொடும்பாவிகளை புடைத்து மேற்கை வஞ்சித்துப் பேசி ஏளனம் செய்து விட்டு, ஐக்கிய நாடுகள் சபையிலும், ஐரோப்பிய யூனியனிலும் வாசிங்டனிலும், முற்றிலும் முரண்பட்ட விதத்தில் தான் மேற்கின் பெறுமதிகளை ஏற்றுக்கொள்ளும் ஒரு நல்லபிள்ளையாக நடித்து வருகின்றது. இந்நடிப்பிற்கான மிக மிக அடிப்படையான காரணம் என்னவெனில், ஒரு தோற்றுப் போன அரசாக (குயடைநன ளுவயவந) விளங்குகின்ற சிறீலங்கா அரசிற்கு தற்போது உள்ள ஒரே ஒரு ஜீவனோபாயம் அந்நிய நிதி உதவி மட்டுமே.

மேற்கு, சிறீலங்கா அரசினது நடிப்பில் தான் மயங்குவது போன்று அவர்களிற்கு மேலால் நடித்து ஏதோ ஒரு பெயரில் தொடர்ந்தும் பெருந் தொகைகளைக் கடனாக வழங்கி வருகின்றது. மேற்கைப் பொறுத்த வரை எவ்வளவிற்கு எவ்வளவு கடன் ஏறுகின்றதோ அவ்வளவிற்கு அவ்வளவு இந்த பாழடைந்த அரச இயந்திரத்தால் அதை மீழச் செலுத்தமுடியாது என்பதுவும் கடன் பட்ட தேசத்தைப் பூரணமாக கட்டுப்படுத்த முடியும் என்ற நிலைப்பாடுமே தோன்றுகிறது. ஆக, சிறீலங்கா அரசினது பொறுப்பற்ற கடன் பெறுகையால் சிங்கள மக்கள் தான் பெரிதும் பாதிக்ப்பபட்டு சந்ததிசந்ததியாகக் கடனாளிகளாக வலம் வரும் அவலம் நிகழ்கின்றது. இது நீண்டகால அபாயம். ஆனால் உடனடிப் பிரச்சினையாக விளங்குவது, இந்த அந்நியச் சலாவணிகள் தமிழரின் உயிர் குடிக்கும் ஆயதங்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருப்பமையே ஆகும்.

சிறீலங்கா அரசானது தான் பெறும் அந்நிய தேசத்தின் கடன்களை நேரடியாக ஒரு யுத்த இயந்திரமாக மாற்றி வருவதோடு அதைத் தமிழ் இனத்தின் மேல் பிரயோகித்தும் வருகின்றது. கடன் கொடுத்த தேசங்களிடமே மறுபடியும் தான் பெற்ற கடனை விலையாகக் கொடுத்து அதி நவீன போரியந்திரங்களை சிறீலங்கா அரசு வாங்கிக் குவிக்கின்றது. இந்நிலையில், தமிழ் மக்களிற்கு சிறீலங்கா அரசின் பொருளாதாரத்தை முடக்க வேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டுள்ளது. புலம் பெயர்ந்த தேசங்களில் ஒரு மில்லியன் தமிழர்கள் வாழ்வதனால் இன்னோரன்ன பொருட்களைச் சிறீலங்கா அரசானது வருடாவருடம் இந்நாடுகளிற்கு ஏற்றுமதி செய்து வருகின்றது.

தமிழ் மளிகைக் கடைகளில் சிறீலங்காத் தயாரிப்புக்கள் ஏராளம் புளக்கத்தில் உள்ளன. இந்நடைமுறையானது, சிறீலங்கா அரசின் அந்நியச் சலாவணியின் ஒரு குறிப்பிடும் படியான பங்கினை வகிக்கின்றது. மேலும் தமிழர்கள் தாயகம் செல்கையில் சிறீலங்கன் ஏயர்லைன்சில் பயணிப்பது வழக்கம் என்பதால் இந்த வியாபாரமும் சிறீலங்கா அரசின் கல்லாப்பெட்டிக்கே செல்கின்றது. மேலும் கொழும்பு நகரின் விடுதிகள், சுற்றுலா மையங்கள் என புலம் பெயர்ந்த தமிழரால் கொடுக்கப்படும் வர்த்தம சிறீலங்கா அரசிற்கு வரப்பிரசாதமாக அமைந்து வருகின்றது. எனினும் இவ்வருவாய்கள்
அனைத்தையும் போரியந்திரமாக மாற்றுவதிலும் அதைத் தமிழர் மீது ஏவவதிலும் சிறீலங்கா அரசு எந்த விதத் தயக்கமுமின்றிச் செயற்பட்டுவருகின்றது. இந்நிலையினை மனதில் கொண்டு, உரிமைக்குரல் நாளான இன்று தொட்டு கனடாவாழ் தமிழ் உறவுகள் அனைத்துப் புலம்பெயர் தமிழரிற்கும் முன்மாதிரியாக, சிறீலங்காவின் பொருட்கள் சேவைகள் அனைத்தையும் புறக்கணிப்பது என்ற முயற்சியில் இறங்கியுள்ளனர்.

கனடாவின் ரொறன்ரோ உரிமைக்குரல் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள், சிறீலங்கா பொருட்கள் மற்றும் சேவைகள் புறக்கணிக்கப்படவேண்டியதன் அவசியத்மை விளக்கி விநியோகிக்கப் பட்டவண்ணம் உள்ளன. உணர்சிவேகத்தில் கட்டுண்டுள்ள மக்களும் இத்துண்டுப் பிரசுரங்களை உணர்வு பூர்மாக ஆமோதிப்பதோடு இப்புறக்கணிப்பில் தீவிரமாக ஈடுபடத் திடசங்கற்பம் பூணுதலும் உரிமைக்குரல் மைதானத்தில் பரவலாகக் காணப்படுகின்றது.

ரொறன்ரோ-கனடா: உரிமைக்குரலில் கையெழுத்து வேட்டை

25,000 இற்கும் மேற்பட்ட கனேடியத் தமிழர்கள் ரொறன்ரோவில் உரிமைக்குரலினை முளங்கிக் கொண்டிருக்கின்றார்கள். உரிமைக்குரல் நிகழ்வில் பேச்சுக்கள் நடைபெறும் அரங்கில் இருந்து பிரதான வீதிக்கு, நிலத்திலே கால்படாது ஒருவர் மிதந்து செல்லக்கூடிய வகையில் தமிழர் வெள்ளம் பிரவாகித்துப் பாய்கின்றது என்றால் அது மிகையாகாது.

உரிமைக்குரல் நிகளும் சதுக்கத்தில் மட்மன்றி ரொறன்ரோ பெரும்பாகம் எங்கும் உரிமைக்குரலிற்கான காரணத்தை விளக்கும் சுவரொட்டிகள் ஆங்கிலத்தில் படங்களோடு ஒட்டப்பட்டுக் காணப்படுகின்றன. அத்தோடு நிகழ்வு நடைபெறும் சதுக்கம் அமைந்துள்ள பிரதேசத்திற்கு வரும் அத்தனை சாலைகளும் வாகனநெரிசலால் பிதுங்கி வளிகின்றன. இன்றைய தினம், கனடா ரொறன்ரோ பிரதேச தமிழ் சமூகத்தின் இந்த ஒருமித்த செயற்பாடானது நமது சக கனேடியர்களின் கவனத்தைச் சிறப்பாக ஈர்த்துள்ளது. ஏன தொழிற்சாலைகள் இன்று விரைவாக மூடப்படுகின்றன? ஏன் பல வியாபார நிலையங்கள் மூடிக் கிடக்கின்றன? என்ன காரணம் இன்று பல தமிழர்கள் அலுவலகங்களிற்கு வரவில்லை? ஏனின்று இந்த அபரிமித வாகன நெரிசல்? போன்ற பலதரப்பட்ட கேள்விகள் எல்லாவற்றிற்கும் ஒரே பதிலாக அமைகின்றது உரிமைக்குரல் நிகழ்வு. இக்கேழ்விகளின் வாயிலாக நம் சக கனேடியர்களின் மனங்களில் எழுகின்ற மேலதிக கேழ்விகளும் தமிழர் சமூகத்தால் விநயமாகப் பதிலளிக்கப்பட்டு, ஈழத்தாய் நாட்டில் நம் உறவுகள் படும் வேதனை பற்றி இக் கனேடிய மண்ணில் விளிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கும் மேலால், திரண்டிருக்கும் தமிழ் மக்களிடம் கையெழுத்துக்கள் பெறப்பட்டு, உரிமைக்குரல் நிகழ்வு அமைவதற்குக் காரணமாக இருக்கின்ற களச் சூழல் மற்றும் நம் உறவுகளின் இத்துன்பங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டியதன் அவசியம், இதில் கனேடிய அரசின் பங்கு ஆகிய விடயங்கள் அடங்கிய மகஜர்கள் கனேடிய அரசினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. மேலும் கனேடிய அரசின் தமிழர் பிரதி நிதிகள் மீதான தடையின் அதர்மத் தன்மை, இத்தடை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டியதன் அவசியம், தமிழர் தரப்பின் மீது விதிக்கப்பட்ட தடையினைத் தமக்குக் கிடைத்த மறைமுக அங்கீகாரமாகக் கருதும் சிறீலங்கா அரசு தமிழ் அழிப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ளமை, கடந்த இரு மாதங்களில் மட்டும் (கனேடியத் தடை அறிவிப்பைத் தொடர்ந்து) ஈழத்தில் சிறீலங்கா இராணுவத்தாலும் துணைப்படையினராலும் படுகொலை செய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் தொடர்பான புள்ளி விபரங்கள் முதலிய இன்னோரன்ன தரவுகளுடன் பல்லயிரக்கணக்கான தமிழ் கனேடியர்களின் கையொப்பங்களோடு மகஜர்களும் கோரிக்கைகளும் கனேடிய அரினரிடம் கையளிக்கப்படுகின்றன.

இன்றை உரிமைக்குரலினை அடுத்து, தமிழர்க்குச் சாதகமான நடவடிக்கைகளை கனேடிய அரசு உடனடியாக எடுக்கின்றதோ இல்லையோ, இன்று ரொறன்ரோ, கனடாவில் கரையுடைத்துத் தடை தகர்;த்துத் திரண்ட மக்கள் வெள்ளம் கனேடிய அரசின் சிந்தனைக்குப் பல விடயங்களை முன்வைத்திருப்பது உரிமைக்குரல் பெற்றுள்ள மிகப் பெரும் வெற்றியாகும்.
 



 

கனடா ரொரன்ரோவில் சர்வதேசத்தின் தற்போதைய பக்கச்சார்பு நிலைப்பாட்டை கண்டித்து உரிமைக் குரல

தமிழீழ மக்களின் ஏக பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகளை எமது கனடா அரசாங்கம் தடை செய்ததன் காரணத்தால் உந்தப்பெற்ற இனவெறி சிறீலங்கா அரசின் திட்டமிட்ட தமிழினப் படுகொலையையும், மனிதஉரிமை மீறல்களையும் உடன் நிறுத்துவதற்கு கனேடிய அரசும், சர்வதேச சமூகமும் உடன் நடவடிக்கை எடுக்கக்கோரியும்,

ஈழத்தமிழரின் அடிப்படை அபிலாசைகளாம் தன்னாட்சியுரிமை, தாயகம், தேசியம் ஏற்றுக்கொள்ளப்பட்டு தமிழீழ விடுதலைப்புலிகளே தமிழ்மக்களின் தேசியத்தலைமை என்ற யதார்த்தம் மதிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியும்,

எமது கனேடிய அரசானது எவ்விதத்திலும் பொருத்தமற்ற சூழ்நிலையில் பக்கச்சார்புடன் தமிழர் பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகளை தடைசெய்தமை தவறு என்பதை சுட்டிக்காட்டவும், அதனை மீளாய்வு செய்யக்கோரியும்,

யுத்த நிறுத்த உடன்பாடு ஏற்படுவதற்கு ஆதார சக்தியாக விளங்கிய ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைசெய்யும் முயற்சியான தற்போதைய பக்கசார்பு நிலைப்பாட்டை கைவிடுமாறு வலியுறுத்தியும்

புலம் பெயர் தமிழரோடு கனேடிய தமிழர் சமூகமும் அல்லலுறும் எம்மக்களின் துயர்தீர்க்கவும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் எமது உணர்வுகளை சர்வதேச உலகிற்கு எடுத்துக்காட்டவும் நாம் அனைவரும் பெருந்திரளாக சர்வதேசத்தின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பவும் ஒன்றிணையும் உரிமைக்குரல்.

சிறீலங்கா அரசினது தமிழ் அழிப்பு மனப்பான்மை இன்று சர்வதேசத்திற்கும் சந்தேகமின்றித் தெரிகிறது. தமிழ் விரூட்சத்தின் கிளைகளும் விழுதுகளும் இலையும் குருத்துக்களும் வெட்டவெளிச்சத்தில் பேரினவாதக் கோடரியால் வெட்டப்படுகின்றன. நிலைமையின் கொடூரமுணர்த்தும் எண்ணற்ற ஆவணங்கள் உடனிற்குடன் உலகெங்கும் சமர்ப்பிக்கப்படுகின்றன. இருந்தும், வெட்டுவோரைத் தடுப்பதை விட்டு, உலகு நம் வேரிற்குக் குறி வைக்கிறது. கோடரி ஓங்கும் கைகளைக் கீறிவிடுமோ என்பது போல் சர்வதேசம் தானுமிறங்கி நம் கொப்புக்களை வெட்டுகின்றது. சனநாயகச் சத்தமிடும் மனித உரிமைப் பேரிகைகள், தமிழினத்தின சனநாயக பிரதிநிதிகளைத் தடைசெய்து தொடர்கிறது.

தழிழினம் அமைதியானது. அகிம்சைக்குப் பெயர் பெற்றது. ஆனால் தன்னைக் கொல்லவரும் பசுவையும் கொல்லலாம் எனத் திடமாக நம்புவது. பொறுமை எங்கள் பெறுமதி. நாகரிகத்தின் தோற்றுனர்களில் நாங்களும் முதல்வாகள. அநீதியின் அசிங்கப் பிடிகளைத் இனங்காணும் ஆற்றல் எங்களிற்குண்டு. பேசச் சொன்னாhகள். இவர்கள் சொல்லுமுன்பிருந்தே நாங்கள் பேசுகின்றோம். இவர்கள் சொன்ன பின்னும் பேசுகின்றோம். நாங்கள் நியாயமானவர்கள். ஆங்கில காலனித்துவத்தின் அந்திம காலத்தில் ஒன்றாயிருந்த பல தேசங்கள் பிரிந்து எழுந்தன. ஆனால் நாங்கள் இரண்டாய் இருந்தவர்கள் ஒன்றாய் வாழ ஆசைப்பட்டோம். மனிதத்தை மதிப்பவர்கள், விருந்தோம்பி மகிழ்பவர்கள், நட்பின் வாஞ்சையோடு சேர்ந்து வாழக் கரங் கொடுத்தோம். என்ன செய்வோம் நட்பின் சமிக்ஞையினை அவர்கள் காட்டவில்லை.

வீரத்தின் பாரம்பரியம் எங்களுடையது. மறவரைப் வணங்கும் வழக்கம் தொன்று தொட்டு எங்களுடன்.

கார்த்திகை பதினொன்றில் கனேடிய தேசத்தின் தியாக மறவரை மனமார நினைத்து நெஞ்சிலே பொப்பிப் பூவை பெருமையுடன் அணியும் தமிழர், அதே மாதம் இருபத்தியேளில் கார்த்திகைப் பூவை பிடித்திருத்தல் தவறென இன்று கனேடிய மண்ணில் சட்டம். அமெரிக்க அரசு கேட்டதற்கிணங்கக் கனடாவில் தமிழரிற்குத் தடைவிதிக்கப்பட்டதாகச் சொல்கிறார் நம் சட்டத் தரணி. எமதாருயிர்த் தேசம், அடைக்கலந்தந்த பூமி, கனேடிய தேசத்தின் இறமையின் இன்றைய நிலை கண்டு நாம் கதி கலங்கி நிற்கையிலே செய்தி வந்ததது. |

அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க ஐரோப்பி ஒன்றியம் தமிழரிற்குத் தடைவிதிக்கச் சம்மதம்| என்று. உலகை நாம் புதிதாகப் பார்க்கின்றோம். மேற்குல எல்லைகள் எங்கே எனத் தேடுகின்றோம். மேற்கின் அரியல் முறைமை என்னவெனக் குழம்புகின்றோம். இலங்கைத் தீவின் இறைமை பற்றிப் பேசுபவர்கள், சமஸ்டி என்றும் ஏதேதோவென்றும் தம்நாட்டின் நடமுறையை எமை அழைத்துக் காட்டியவர்கள.; உண்மையிலே இவர்கள் முறைமை என்னவென்று புரியாது விழிக்கின்றோம்.

ஊககெலம் தமிழனின் உரிமைக்குரல் இணையட்டும். எல்லைகள் வரம்புகள் மீறிக் குரல் உயரட்டும். கண்டமெலாம் வாழ்ந்தாலும் எங்கள் உயிர் தமிழீழம் எங்களவர் வீழ்கையில் எங்களிற்கா உறக்கம் வரும்.

திட்டமிட்டு நாங்கள் பட்டியலிடப்படுகின்றோம். ஈனப்படுத்தப்படுகின்றோம். உயிர் வதை செய்யும் பேரினவாதம் பற்றி நாம் பேசமுடியாத படி எங்களின் உரிமைகளைத் துரத்திப் பிடுங்குகிறார்கள். இனிமேல் ஓட இடமில்லை என நாம் அங்கலாய்க்கும் வகையில் நம்மைத் துரத்துகிறார்கள். பயங்கரவாதத்ததால் பலியெடுக்கப்படும் எம்மைப் பயங்கரவாதிகள் என இதயமின்றி இகழ்கிறார்கள்.

எங்களின் உறவுகளிற்காய் இன்னுமொருமுறை முயல்வோம். மேற்கின் இதயங்களில் ஈரம் வேண்டி ஒலிப்போம். ஓன்று திரண்டு இந்த பூமிப்பந்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் உரிமை கேட்டு எழுவோம். எங்களின் சொந்தங்கட்கு நாங்களேனும் உள்ளோம் என்று உரத்துக் குரல் கொடுக்கத் திரள்வோம்.
 


 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home