Tamils - a Nation without a State
Australia -
அவுஸ்திரேலியா
- an estimated 30,000 Tamils live in Australia -
Remembering Thiyagi Theelepan in Melbourne, Australia
4 October 2008
[see also
Maaveerar
- மாவீரர்
-
அணையாத தீபங்கள்
- Thileepan ]
அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் மெல்பேர்ண்
நகரில் கடந்த 4.10.08 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு, தியாகி திலீபன்
நினைவெழுச்சி நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு
மண்டபம் முழுவதும் நிரம்பும் அளவிற்குப் பெருந்திரளான மக்கள் கலந்து
கொண்டனர்.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த உணர்வு
பூர்வமான நிகழ்வினை திருமதி யோகா கஜேந்திரா அவர்கள் தொகுத்து
வழங்கினார். பொதுச் சுடரினை மருத்துவர் ஈஸ்வரன் கணபதிப்பிள்ளை அவர்கள்
ஏற்றி வைக்க, அவுஸ்தி;ரேலியக் கொடியை டொமினிக் சந்தியாப்பிள்ளையும்,
தமி;ழீழத் தேசியக் கொடியை சிசு நாகேந்திரன் அவர்களும் ஏற்றினார்கள்.
திருமதி பரமேஸ்வரி குமாரவேலு அவர்கள் ஈகைச் சுடரினை ஏற்றி மலர்
மாலைகளைத் தியாகி திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் திருவுருவப்
படங்களுக்கு அணிவித்தார். இதனை அடுத்துப் பொது மக்களின் மலர்
வணக்கமும், அகவணக்கமும் இடம் பெற்றன.
முதல் நிகழ்வாக திருமதி சிவகங்கா சகாதேவனின் மாணவிகளான நிருஜா
சிவநேஸ்;வரன், மனிசா சிவதாசன் ஆகியோர் பாடிய திலீபன் குறித்த பாடலுக்கு
சின்மயன் திலகராஜன் மிருதங்கம் வாசித்தார். இதனை அடுத்து தியாகி
திலீபனின் நினைவில் இருந்து சில துளிகள் அகலத் திரையில் ஓளிப்படமாக
காண்பிக்கப்பட்டன. இதன் பின்னர் திருமதி அனுசா ஞானச் செல்வனின்
மாணவிகளான ஓசானி தேவநேசன், அஸ்வினி தேவநேசன், பிரியங்கா சிவலிங்கம் ,
சிவானந்தி லம்பர்ட் அகியோர் தியாகி திலீபன் நினைவுப் பாடலுக்கு நடனம்
ஆடினர்.
நிகழ்ச்சியின் சிறப்புரையை திருமதி வனஜு கண்ணன் வழங்கினார். அவர்
திலீபனின் வாழ்க்கை வரலாற்றினையும், அவரது தியாகத்தின் மேன்மையையும்
குறித்து விளக்கமான உரையை ஆற்றினார்.
இறுதியாக விக்ரோரியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர்
சபேசன் கருத்துரை வழங்கினார். தற்போதைய நிலைமை குறித்தும், புலம் பெயர்
வாழ் தமிழ் மக்கள் முழுமையாக ஒருங்கிணைந்து, தமிழீழத் தேசியத்
தலைமையின் கரங்களைப் பலப்படுத்துவதன் அவசியம் குறித்தும் அவர்
விளக்கிப் பேசினார். இறுதியாகக் கொடி இறக்கத்துடன், �புலிகளின் தாகம்
தமிழீழத் தாயகம்� என்ற மக்கள் முழக்கத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.
|