Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil Culture - the Heart of Tamil National Consciousness > Classical Dance of the Ancient Tamils >  mahAparata cUTAmaNi

BHARATA NATYAM
CLASSICAL DANCE OF THE ANCIENT TAMILS


mahAparata cUTAmaNi
(author not known)

மஹாபரத சூடாமணி என்னும்
பாவ ராக தாள சிங்காராதி அபிநயதர்ப்பண விலாசம்

முதல் மூன்று அத்தியாயங்கள்
[also in pdf ]

Acknowledgments

Etext preparation & Proof-reading: Mr. V. Devarajan, Durham, NC, USA. PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland © Project Madurai 1999 - 2003 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


This work is one of the treasures collected by the late Dr.U.V. Swaminatha Aiyar who is revered as "தமிழ்த் தாத்தா". It was first published in print by Dr.U.V. Swaminatha Aiyar library in 1955. It is not known who is the author of this work and when it was produced. It has been recommended by Dr. Rukmini Devi to all students of dance and music.The second edition of the same published in 1994 is the source for this file. The following text contains only the verses (moolam) and not the meanings, commentaries and notes included in the printed book.

The original composition மஹாபரத சூடாமணி comprised five chapters;

    1. நாட்டியோபயோக அவயவபேத விநியோக லக்ஷணம்.
    2. முகூர்த்தாதி எழுவகைத் தோற்ற அபிநய லக்ஷணம்.
    3. சபாநாயகாதி சர்வ வாத்திய பாத்திர லக்ஷணம்.
    4. சங்கீதாதி ராக மேள லக்ஷணம்.
    5. தாளாதி மாத்திர கணித லக்ஷணம்.

As indicated above, the first three chapters form the present work. The fourth chapter was published separately in print by S.V.S. library in 1955. The fifth chapter has been lost.

முதல் அத்தியாயம்
நாட்டிய உபயோக அவயவபேத விநியோக லக்ஷணம்

முகவுரை

1. கடவுள் வாழ்த்து

கணபதி தோத்திரம்

ஆதிநா ளீசன் அருளும் பரதநூல்
மேதினியி லன்புடன்யான் விள்ளவே - மோதமுடன்
மாங்கனியை வாங்க வரனைவல மாகவந்த
காங்கயன்முன் றோன்றுமிபங் காப்பு.

..1

சுப்ரமண்ணியர் துதி

வேழமுகத் தோன்றனுக்கு மெய்த்துணையா மெய்ப்பொருளே
ஆழிபுனை யும்மாலுக் காமருகா - நீள்புவிமேல்
ஆதிமூ லப்பரத மன்புடன்யா னோதுதற்கு
ஆதரவு செய்தாள்கு கா.

...2

சரசுவதி

நாவு தவறாமல் நற்சொற்கள் மாறாமல்
மேவு பரதவிதம் விள்ளவே - பூவுலகை
ஆளுகின்ற மாவாணி யம்மையே நாயடியேன்
வாழும் படிக்கிசைந்து வா.

...3

மதுரை மீனாட்சிசுந்தரேசுரர் துதி

ஆதிமூ லப்பரத மையமிலா தோதுதற்குச்
சாதனையா யென்னாவிற் றானிருந்து - ஓதவருள்
தேனார் கடம்பவனத் தேதோன்றி வாழ்மதுரை
மீனாட்சி சொக்கலிங்க மே.

...4

திருநடன வணக்கம்

பிரமன்றா ளம்போட மால்படகந்
தனைமுழக்கப் பேராம் வாணி
அருமையாம் வீணைகொளச் சீங்குழலி
ரவிசசியு மடைவா யூதக்
கிருபையுடன் தேவரொலி செய்யநந்தி
மத்தளம்சங் கீதத் தைத்தும்
புருமுழங்க ரசம்பிறக்கச் சிவனாடு
நடனத்தைப் போற்று வேனே.

..5


2. அவையடக்கம்

இந்துபா லிரவி தீப மீசனாட் டியமி ரத்னம்
சிந்துகற் பகம்பூ தங்கச் சிகரிதட் சணையும் பத்தர்
தந்ததை யேற்றாற் போலத் தகைமைசேர் நூல்வல் லோர்கள்
எந்தன்மேற் கருணை கூர்ந்து ஏற்பரிந் நூலை மாதோ.

...6


3. நூலின் வரலாறு

ஆதியாம் பொருளில் முக்குணஞ் சேரவம் பரமெனுஞ் சத்தப் பிரமம்
ஆயதிற் றோன்று நாதம் தேவானாத் மகந்தொன் னியாத்து மிகமென்
றோதிய விரண்டு வகையுடன் றனித்த வுமையொரு பாகன்முன் னாளில்
உலகெனுங் கலைக ளீரெட்டை மேவி யொப்பிலா வானந்த முதலா
ஏதமிற் றாண்டவம் பதினாறு மேற்கையா யாடிடு மப்போ தேந்திய
வுடுக்குக் கிண்கிணி கெச்ச மிவற்றுள் வியகரண சூத்தி ரங்கள்
மீதுறுங் கணமுத லாகிய நூல்கள் விளங்குறு மவற்றுளிப் பரதம்
விண்ணவர் புகழ வாடியிப் பயனை விரிஞ்சனுக் கோதின னரனே.

...7

விரிஞ்சனம் முறையை மறையுளா ராய்ந்து விதிகளைப் பயன்படும் போது
வேதமா மிருக்கு தன்னுள் வாத்தியமு மேன்மையா மெசுர்வேதந் தன்னுள்
அரிதென விளங்கு மபிநய மும்பே ராகிய சாமவேதத் துளகி லங்கொண் டாடுங் கீதமு மற்று மதர்வண வேதந் துள்ரசமு
முறைகொளக் கண்டு சாத்திரந் திரட்டி முப்பத் திரண்டு லட்ச மதாய்மு ழங்கிய கிரந்தந் தர்மார்த்த (காம) மோக்ஷமீந் திடுமெனப் பின்னும்
திரைகொளுந் துக்கம் பயம்சோகம் வெறுப்புத் தீங்குறு பேதங்க டீர்த்துத்
திறம்பெறு மானந் தந்தரு மெனவே செப்பியே வாழ்த்தி னன்மலரோன்.

...8

அம்முறை தன்னை நந்திகண் டேநா லாயிரங் கிரந்த மதாக
அருளிய வதனைப் பரதமா முனிவன் அறிந்தர னோக்கியே நடிக்க
இம்முறை பெண்பா லாயில்நன் றென்றே ஈசனார் நினைந்திட வுமையாள்
இன்பமே பயக்க வீசன்முன் னாடி யெழில்பெற இவ்விரு முறையைத்
தம்மிலே வாணா சுரன்மகட் குரைக்கத் தையலுடன் சார்ஞி தேவன்
தஷிண கும்பமுனி பாட்டன் பிர்கி சார்ந்தநாதன் பிரகற் பதியும்
செம்மைசேர் சுங்கன் தத்தில லனுமன் சிறந்தகோ களனருச் சுனனும்
திறமைசேர் * * *

...9

காசிபன் வியாசன் வாணி கம்பளன் வாயு தேவன்
பேசிய யாஞ்ஞ வல்கன் வசிட்டனுஞ் சேடன் பின்னும்
மாசிலா தோங்கு விச்சு வாவசு வுடனே பேராந்
தேசம தாளும் ராஜ சேகர வழுதி மற்றும்.

..10

திறமான ராவணனும் வாணா சூரன்
சீராகு மரசர்களில் விக்ர மார்க்கன்
மருவிலா வரம்பையரும் போஜ னோடு
வாசுகியும் சத்திமுனி யுலகில் மற்றும்
வருசோம நாதன் கோரட்சகன் பேர்வா
னதியைப் புனைந்தோனும் வகைக டேர்ந்து
முறையாக நூல்களை யுண்டாக்கித் தாமுமுன்
நடித்துமுல கோர்க்கு முரைத்திட்டானே.

. ..11

நாந்தி

நந்தியே நட்டுவனாம் நாட்டியனே யீச்சுரனாம்
சிந்தைமகிழ்ந் தந்திரத் தேயிருந்து - முந்த
நடனந் தொடங்கினது நாந்தியா மென்பர்
மடமயிலே நாந்தி வகை.

...12


4. பாயிரம்

ஆதியா யெங்குந் தானா யனாதியாய் நிறைந்து நின்ற
சோதியாம் பரம னாடுந் தொழிலது வாணி முன்னாள்
நீதியாய் வடம னூலால் நிகழ்த்தின ளெவருங் காண்
மேதினி தனிலே யானும் விளம்பினேன் பரத நூலை.

...13

நூலதைத் தமிழாற் பாடு நுணுக்கத்தை யறிந்து கொள்வீர்
மேலங்க முபாங்கம் பிரத்தி யாங்கத்தின் விவர பேதம்
கோலமா மங்க மேழு குறித்திடு பிரத்தி யாங்கம்
சாலவே யொன்ப தாகச் சாற்றுபாங் கமுமீ ராறே.

...14

சீராறு நயன பேதஞ் செப்பக்கேள் முப்பத் தாறும்
ஈராறு மேழுஞ் சென்னிக் கிசைத்ததோர் பேத மாகும்
ஓராறு முன்று மேசு வாற்பநிட் டையென வோதும்
வேறாரு மறிய வெண்ணா வெகுநிட்டை யெட்ட தாமே.

...15

எட்டதா மிமையின் பேத மிசைந்திடு புருவ மேழாம்
வட்டமாம் நாசி யாறும் வளம்பெறு மிதழு மாறாம்
ஓட்டிடுந் தந்த நாலா முருசிகாட்டிடுநா வைந்தும்
கட்டிடாச் சுவாசம் நாலு கதுப்பாறு பேதஞ் சொல்லே.

...16

சொல்லிய வதன மாறாஞ் சுமுகமு மேழ தாகும்
மெல்லிய கண்ட மொன்பான் விளங்கிய புயமீ ரைந்தாம்
நல்லமா தாந்திரத்தோள் நாலுட னிரண்ட தாகும்
அல்லலொன் றில்லா மேனிக் கமைத்த பேதங்க ளைந்தாம்.

...17

ஆமணிக் கட்ட தாறா மூவகை யைவி ரற்கே
நாமினி யொருகை பேத நவிலுவோ முத்த மிழ்க்கை
நேமமூ வெட்டாங் கைகள் நிறைந்தமா தாந்தி ரக்கை
ஓமென விருப தாகு முலகப்பிர சித்தக் கைகேள்.

...18

கைமூன்று பத்தொன் றேதான் காட்டினோம் பிரவர்த்த மானஞ்
செய்யொத்த கையீ ராறு செப்புமா தாந்தி ரத்தில்
எய்யும்பூ லோகக் கைக ளீரைந்தா மென்றி சைப்பாய்
பொய்யிலாத் தேசி யான பொதுக்கையும் பத்தே யாகும்.

...19

ஆகிய வகைக ளாறுக் கமைத்த கைநூற் றாறு
வாகுசே ரிருகைப் பேதம் வளர்த்திடு நாற்ப தாகும்
சேகர முத்தி ரைக்கை சேர்ப்பது முப்பத் தொன்றாம்
மோகமா நிருத்தக் கைகள் முப்பத் திரண்டென் பாரே.

...20

பார்த்திடு வயிறி டுப்புப் பாரிச முதுகு நான்கும்
சேர்த்திடு நந்நான் காகச் சிறந்திடு தொடையோ ரைந்து
நேர்த்தியா முழந்தா ளைந்து நேர்கணைக் காலு மைந்து
சாத்திய பாத பேதம் தனைப்பத்தா யுரைக்கு நூலே.

...21

உரைத்திடு மங்க மூன்றி லுதித்திடு மவய வங்கள்
நிரைத்திடு மிருபத் தெட்டாய் நிகழ்த்திடுந் தேசிச் சாரி
விரித்தது முப்பத் தைந்து விளங்குமா காசச் சாரி
குறித்தபத் தொன்ப தென்றே கூறுதே சிகமீ ரேழே.

...22

ஈரெட் டதாம்பூ சாரித் திழிதலிற் கேற்கை யாகும்
ஓரெட்டிற் பாதி சுத்த மண்டல மென்றே யோது
நீரெட்டும் பாரும் விண்ணு நேர்ந்த மண்டல மிரண்டும்
பாரெட்டும் நூறும் பத்தும் பதினான்கு பேத மாமே.

...23

கரணம்

ஆமெனு முற்புலி தக்கர ணங்கள் முப்பத் தாறாம்
தாமென்னு மடிப்புத் தொண்ணூற் றாறுமாங் கரண நாலாம்
சோமப் பாலுண்டு கண்டு சொன்னதாம் பாணித் தானம்
நாமிப்பால் பதின்மூன் றென்று நாட்டுநூல் நவர சங்கேள்.

...24

நவரச மொன்ப தாகு நடனதாண் டவநூற் றெட்டாம்
தவமிகு மேகக் கூத்தைச் சார்ந்திடி லாற தாகும்
பவமறு பிரமக் கூத்தின் பேதமோ பதின்மூன் றாகும்
கவனமாம் பலகோ லங்க ளெட்டெனக் கருது நூலே.

...25

கருதுநூ லகமார்க் கங்கள் கட்டளை விதம னேகம்
சுருதியா லறிந்த தாதித் தொழிலதும் பலவ தாகும்
மறுதொழில் முகிந்து நின்ற துத்தீப னமதே யாகும்
பருதியாம் பரத நூலின் பாயிர முரைத்த தின்றே.

...26


5. நாட்டிய விவரம்

உரைத்திட்ட நாட்டியந்தா னுயரதி ரசசிங் காரம்
இருத்திட்ட மாமதிற் றௌிந்தநிர்த் தனம னேகம்
விரித்திட்ட நிர்த்த னந்தான் அபிநய மெனவிளம்பும்
குறித்திட்ட வபிநயங்க ளாவது கூறத் கேளே. .

..27


6. அபிநய விவரம்

கூறக்கேள் பிறந்த கீதப் பிரபந்தங்க ளின்கு றிப்பின்
சாரத்தைச் சபையோர்க் கெல்லாந் தருணம கிழ்ச்சி யாகப்
பேரொத்த பாத்தி ரந்தான் பிரியமா யபின யித்துச்
சீரொத்துக் காட்டு கின்ற செழிப்பபி நயம தாமே.

...28

நான்கு வித அபிநயம்

ஆமபி நயங்கள் நான்கா மதின்வகை யேதென் றோதில்
சேமமாங் கீத மென்றும், செப்புவா சீக மென்றும்,
பூமதா காரிய மென்றும், பொருந்துஞ்சாத் வீக மென்றும்,
நாமங்க ளின்னும் வேறாய் நவின்றது நூலின் பாங்கே.

...29

பாங்காகு மபிந யத்தின் பான்மையாய் விளங்கு மந்த
ஆங்கீக மதுவே சாயி அமைத்தவா சிகசஞ் சாயி
ஓங்குமா காரி யந்தா னுயரனு சாயி யாகும்
சாங்கமாஞ் சாத்வி கந்தான் விபசாயி யெனவே சாற்றும்.

...30

சாற்றுமாங் கீக மென்ற சரீரத்தி னபிந யங்கள்
ஏற்றிடு வாசி சுந்தரன் வாக்கபி நயமென் றேற்கும்
தோற்று மாகாரி யந்தான் அலங்காரஞ் சாத்வீ கஞ்சொல்
தேற்றமா நன பாவல யமபி நயமாஞ் சாற்றும்.

...31

ஆங்கிநாபிநயம்

ஆங்கிகா வபிநயம் மீரா றாகும் பேதங் கேளாய்
பாங்கதா மங்க காரம் சிரோபேதம் பாத சாரி
தாங்குதாண் டவத்தி னோடே தானப் பிரமணஞ் சேர்ந்து
தீங்கிலாக் கரண மஸ்தம் நேத்திர பேத மற்றும்.

...32

ஓதுமே பேத மின்னும் உருசர சக்தி யோடே
மாதுடை சப்த நாட்யம் மண்டல மாகும் பின்னும்
தீதிலாப் பேத மாகும் தேசிக கதியா மென்றும்
பேதத்தி லாங்கி கநான் காம்விதம் பேசும் பாரே.

...33

இவ்வாங்கிநாபியத்தின் நான்குவகை

ஆனசூ சிகம தென்றும், பாவாபி நயமி தென்றும்,
ஞானஞ்சேர் தொந்தமென்றும், லாட்சணி கமதா மென்றும்
தேனுறு மொழியி நாளே செப்புமிவ் வகையாம் நாவில்
பூணவே முதலிற் சூசி கத்திற்குப் புகலு நூலே.

...34

சூசிகாபிநயம்

சாருமே சூசி கந்தான் தாவர சங்க மத்தில்
பேருறு மெவற்றை யேனும் பிசகாமற் கைகால் தன்னால்
நேரதா யபிந யத்து நிச்சய மாகக் காட்டித்
தேரிய வாக்கி னாலே சொல்லிக்காட் டுவதாய்ச் செப்பே.

...35

பாவாபிநயம்; தொந்தாபிநயம்

பாவாபி நயமே யாகுந் தலைகண்ணாற் பாவங் காட்டும்
நீலிய தொந்தஞ் சென்னி நேத்திரம் பாதங் கையால்
யாவருந் தெரியக் காட்ட லாமதன் விதங்கள் மூன்று
ஆவாக்ய பாவி கத்தோ டனுபாவிக தொந்த மொன்றே.

...36

ஆவாக்ய தொந்தாபிநயம்

சொல்லுமா வாக்கி யத்துத் தொந்தமாம் பாட கன்தான்
மெல்லவே பாடும் போது மெல்லிய ருசிதமாகச்
சில்லெனப் புளகங் கொள்ளத் திறமாக நடிப்ப தென்றே
வில்லெனும் புருவ மாதே ! விண்டனர் நூல்வல் லோரே.

...37

பாவிகதொந்தாபிநயம்

பாவிக தொந்த மென்னப் படுவது சென்னி யுங்கண்
மேவுமற் றெதனா லேனு மெல்லியர் பாடிக் கொண்டு
பாவலர் மகிழ வாடும் பயனென வோதும் நூலில்
கூவிளங் கனியை யொத்துக் குவிந்தநற் றனத்தி னாளே.

...38

அநுபாவிக தொந்தநாபிநயம்

அனுபா விகத்தொந் தந்தா மாவது பாடு வானும்
வனிதையுள் சேர்ந்து பாடி வளர்சிரங் கண்கை கால்கள்
எனுமங்கங் களினால் நன்றா யிணங்கவே யபிந யித்தல்
வினவிய பரத நூலில் விணடன ரறிந்து கொள்ளே.

...39

இலாட்சணிகாபிநயம்

இயல்புலாட் சணிக மாவ தேதெனி லுலகி லுள்ள
சுயமதாம் வஸ்து நாமம் சொல்லாம லிதுதா னென்று
பயனதை யாருங் கண்டு பாவனை கொள்வ தாக
நியமமா முருவங் காட்டி நேர்பிடித் திடலா மென்னே.

...40

சுத்தலாட்சணிகாபிநயம்

சுத்தலாட் சணிக மேலே சொல்லும்வஸ் துக்க ளுக்கு
வைத்திடு நாமஞ் சொல்லி வளம்படப் பிடித்துக் காட்டல்
நித்தம தாகு மென்று நேர்படப் பரத நூலோர்
வித்தக மொழியி னாளே விண்டனர் கண்டு தேறே.

...41

வாசிகாபிநயம் நான்கு வகை
சுகீத வாசிகம்

ஓதுக கீத வாச்ய முபகீத வாச்ய முஞ்சேர்க்
கோதுக சப்த வாச்ய முபசப்த வாசிகம்மென்
றீதிற்க கீத வாச்ய மாகு மினிதரம் பாத்திரம்
கீதத்தைத் தானே பாடிக் கொண்டபி நயத்தற் கென்னே.

...42

உபகீத வாசிகம் கசப்த வாசிகம்

உபகீத வாசி கந்தான் ஓதுமே பாட கன்தான்
சபைமெய்க்கப் பாடும் போது தையல ரபிந யித்தல்
விபுலமாம் கசப்த வாச்ய மெல்லியர் கணிப்பித் தேதான்
சுபமதாய் நடனஞ் செய்வ தாமெனச் சொல்லு நூலே. ...43

உபாப்த வாசிகாபிநயம்

வருமுத சப்த வாச்ய மாவது நட்டு வன்றான்
திறமதாய்க் கணிப்பப் பாத்ர மாடியே யபிந யித்தல்
தருமெனப் பரத நூலோர் தரணியி லறிய முன்னாள்
மருவிய முலையி னாளே வகுத்தன தறிந்து கூறே.

...44

ஆகாரியாபிநயம் மூன்று வகை

நிஜாகாரியாபிநயம்

ஆகாரி யபிந யந்தான் அங்கத முடியு மார்ப
தாகையாந் தட்டிச் சல்ல டம்முலைக் கச்சு மற்றும்
வாகுள அரைஞா ணென்னுந் திகழ்பணி சிறந்த வாடற்
காகுமே யிதற்குச் சொல்லு நிஜாகாரிய மென்னும் பேரே.

...45

அபிசாரி ஆகாரியம்

இதிலபி சாரி யென்னு மாகாரிய விலக்க ணந்தான்
மதியெனத் துலங்கு மோரா மாயண நாடகங்கள்
முதலா னதற்கு வேடம் பூண்டாடு வதென மூட்டுங்
கதிரெனு மொழியி னாளே கருதுமிந் நூலிற் றானே.

...46

வியபிசாரி ஆகாயம்

விபசாரி யபிந யந்தான் விள்ளுமந் தந்தத் தேசச்
சபைகொளப் பலவா நாட்டி யங்கட்குச் சாதி நேராய்
உபமானத் தோடே ராமா யணமுதல் நாட கங்கள்
உபயோகப் படவே காட்டற் குற்றபூ ஷணங்க ளென்னே.

...47

சாத்விகாபிநயம் இரண்டு வகை

சாட்சுஷியசாத்விகம் வியஞ்சகசாத்விகம்

சாத்விக வபிநயஞ் சாட்சு ஷியவியஞ் சகம தென்று
போற்றிடு மிருவி தத்தி லெண்ணுஞ்சாட் சுஷந்த னக்குப்
பாத்திரங் கண்ணி னால பிநயித்தல் வியஞ்ச கந்தான்
நேத்திரந் தலைக ளாலே நேரபி நயப்ப தாமே.

...48


7. விருத்தி

சித்த விருத்தி

செப்பிய நாட்டி யந்தான் செய்வதிற் பலபே தங்கள்
அப்பெனுஞ் சித்த விர்த்தி யாமாம்பா விய விருத்தி
இப்படிக் காகுஞ் சித்த விருத்தியி னியல்பா முற்றும்
ஒப்பிய ரசத்தைக் காட்டு முயர்முகந் தனிலென் பாரே.

...49

பாரேநீ சிங்கா ரத்தை மனதுட்பா விக்கும் போது
சீரான முகத்திற் றோன்றுஞ் சிறந்தவீ ரத்தை யென்றும்
நேராரும் வதன பாவம் நினைத்திடல் சோகந் தன்னை
வேறாகா ததுபோ லாகுஞ் சித்தத்தின் விருத்தி தானே.

...50

பாவிய விருத்தி

விருத்தியாம் பாவி யத்தை விளம்புநூ லெவருங் காணத்
திருத்தமாம் வார்த்தை யாலே சிறந்திடும் பொருளை யெல்லாம்
உறுப்பெனு மபிந யத்தா லுகந்ததைப் பிரித்துக் காட்டி
எருத்தின்ம தேு மீச னியற்றும்பா வியமி தாமே.

...51


8. நாடகம், நிருத்தம், நிருத்தியம்

நாட்டியம் நிருத்தம் நிர்த்தியம் நவிலுமூ விதமாம்
பூட்டிய நாட கத்தில் பூருவ கதைக டன்னைக்
காட்டியே யபிந யித்தற் காமெனப் பரத நூலோர்
வாட்டமில் லாமற் சொன்ன வகையிதை யறிந்து கொள்ளே.

...52

நிருத்தமாம் ரசபா வத்தை நீக்கிய வடைவி னாலே
பொருத்தவின் யாசந் தாள லயந்தனைப் பொருந்தக் காட்டல்
நிருத்தியம் ரசபாவங்கள் நேர்கூட்டி விநியோகித்தல்
திருத்தம தாகு மென்று செப்புமிம் மூண்றுஞ் சேர்ந்தே.

...53


9. தாண்டவம் லாஸ்யம்

தாண்டவம் லாஸ்ய மென்ன விருவகை யாகச் சாற்றும்
தாண்டவந் தன்னிலு தான தாண்டவ மெனவோர் கூறாம்
தூண்டிய லாசி யத்திற் சுகுமார லாசிய மென்றும்
வீண்டறி தற்காய்ச் சொன்ன விவரத்தை யறிந்து கொள்ளே.

...54

உத்தானதாண்டவம் சுகுமாரலாஸ்யம்

நிரையுமுத் தான தாண்ட வமதாநின் றபிந யித்தல்
உரைசுகு மார லாசிய முட்கார்ந் தபிந யித்தல்
முறையாகு மென்று ரைத்தார் மூதறி வுடைய மேலோர்
திறைகொளு முததி தன்னிற் செழித்தசெங் கமல மாதே

...55


10. வெகுவான அபிநயம், அற்பமான அபிநயம்

ஆங்கிகா வபிந யத்தில் வெகுவென்று மற்ப மென்றும்
பாங்காகும் வெகுவே தென்னில் பண்பாஞ்சா ளையக்கை ரண்டும்
நீங்காமற் காட்டும் போது நேர்வாணா சூரன் கைபோல்
தாங்கா தனேக மாகத் தான்காட்டல் வெகுவாம் பாரே.

...56

என்றதோ ரற்பந் தன்னை யியம்புநூ லெவருங் காணச்
சென்றதோர் பொருளு மின்னஞ் சேர்பொரு டனையு மாங்கே
நின்றதோர் வர்த்த மான பொருளையு நேர்மை யீதென்
றொன்றிச்சூ சனைய தாக வுகந்திதைக் காட்டு மற்பம்.

...57


11. திரியாங்கம்

அங்கங்கள்

காட்டிய திரியாங் கத்தின் தொகை பேதங் காண முன்னம்
தேட்டமா மொவ்வொன் றிற்கே சேரவ யவங்கள் சொல்லும்
நாட்டமா மங்கத் திற்கு நவில்சிரம் விரல்கை மார்பு
கூட்டிடைப் பக்கம் பாத மேழெனப் பிரித்து நூலே.

...58

பிரத்தியாங்கங்கள்

கூறுமே பிரத்தி யாங்கங் குறிப்பதாம் புயங்க ழுத்து
தேறிய வயிறு மணிக்கட் டிருதுடை முழங்தாள் செப்பும்
மாறுகேள் கணைக்கா லோடு முதுகின்பா கத்தைச் சேர்த்துக்
கோரிய பூஷ ணாதி கூட்டிய தொன்பான் பாரே.

...59

உபாங்கங்கள்

மேன்மையா முபாங்கந் தன்னை விளம்புமே விழிக போலம்
தானிமை புருவத் தோடு நாசியுஞ் சுவாசந் தந்தம்
தேன்பயி லதர நாக்கு மோவாயுஞ் சோதி சேர்ந்த
வான்பயி லரிநே ரான வதனத்தோ டீரா றென்றே.

...60


முகவுரை முற்றும்.


அவயவபேத நிரூபணம்

1. சிரோபேதப் பிரகரணம்

சிரமுதற் சமமா முத்வா கிதமதோ முகஞ்சி றந்த
தரமாலோ ளிதமாங் கம்பி தம்துதம் பராவி ருத்தம்
திரமாமுட் சிப்த மோடு பரிவா கிதம்நிகஞ் சிதம்சே
கரமாமஞ் சிதவி தூத மாதூதமாங் கருது நூலே.

...61

கருதும வதுதத் தோட கம்பித மிசுகாந் தானம்
திரியக்க தான னந்தான் சிறந்திடு மராதி கம்பார்
மருவிய பார்சு வாபி முகம்சிரம் பதினெட் டொன்று
சருதியாம் பேத மென்னு மதின்வினி யோகஞ் சொல்லும்.

...62


1.சமசிரசு


சொல்லிய சமசி ரத்தின் றொகுப்பசை யாது நிற்றல்
நல்லதோர் விநியோ கந்தான் நடத்திடுந் தொழிலா ரம்பம்
எல்லையிற் பிரணய கோபத் திலுந்தம்பா காரந் தன்னில்
வல்லவ கருவத் தோடு நிராசையில் வருமென் பாரே.

...63


2. உத்வாகிதச்சிரசு

பாருத்வா கிதஞ் சிரமேற் பார்ப்பது விநியோ கங்கேள்
மேருவின் முடியுஞ் சந்திரன் விண்ணுறு முடுக்க ளோடு
தேருரை கலசம் பட்சி சிறந்தெழுந் துவசத் தம்பம்
நேர்படப் பார்க்கும் போதாம் நிகழதோ முகஞ்சொல் லாரே. .

..64


3.அதோமுகச்சிரசு

அதோமுகங் கீழே பார்ப்ப ததன்விநி யோகங் கேளு
இதமிகு மோகந் துக்க மிலச்சையு மூர்ச்சை மற்றும்
உதகத்தில் நானஞ் செய்யி லுண்மையாய் வணங்கும் போதும்
பதந்தொடல் பொருளைத் தேட லாமுதற் பகரு நூலே.

...65


4.ஆலோளிதச்சிரசு

ஆலோ ளிதமதாய்ச் சுற்ற லதின்விநி யோகந் தூக்கம்
மேலுறல் சிரிப்புக் கூட்ட மிகுத்திடும் போது மூச்சு
சாலவே யடங்கி நிற்குந் தருணமு போது பள்ளம்
ஞாலமீ தலகை சுற்றல் நலமதாங் கம்பிதங் கேள்

....66


5.கம்பிதச்சிரசு

கம்பித மேலுங் கீழுங் காட்டுதல் விநியோ கங்கேள்
என்பதே தென்னில் வாரு மிருமென வழைத்தல் கேள்வி
வெம்பியே கேட்கும் போது மிரட்டியே தட்டும் போதும்
அன்புள சயிக்கி னைக்கே யாகுமாம் துதஞ்சொல் வோமே

...67


6.துதச்சிரசு

துதம்வல மிடம சைத்த லுறும்விநி யோகம் பக்கம்
பதனமாய்ப பார்க்கும் போதும் பகரென்போர்க் கில்லை யென்ப
திதுவுமாச் சரியந் தன்னி லெழுந்தசந் தோஷத் தோடு
மதமுண் டிதுவல் லாம லடுத்தப ராவிர்த் தங்கேள்.

...68


7.பராவிருத்தச்சிரசு

தானென்ற பராவி ருத்தஞ் சமமுகந் திரும்பிப் பார்த்தல்
ஆனதன் விநியோ கந்தான் ஆதர வற்றுப் பார்த்தல்
மானமாந் தனத்தைப் பார்த்தல், வருவெட்கம், பராமு கத்தில்
ஏனையோர் சத்தங் கேட்கும் விதத்திலுட் சிப்தஞ் சொல்வோம்.

...69


8. உட்சிப்தச்சிரசு 9. பரிவாகிதச்சிரசு

உட்சிப்தந் தலையெ டுக்க லுவமைகா ரியங்கள் காட்டல
மெச்சு பரிவாகி தங்கேள் விளம்புவேன் றோளி ரண்டும்
பச்சத்திற் சிரசைச் சாய்த்துப் பார்க்குத லுபமா னந்தான்
இச்சையாய் மோகஞ் சோக மிசைந்தசந் தோஷ மாமே.

...70


10. திகஞ்சிதச்சிரசு

ஆசையாய்ப் பெரியோ ரைக்கண் டழைப்பதே யாகு மற்றும்
பேசுமே நிகஞ்சி தத்தோ ளிரண்டுமே லுயர்த்திப் பின்னும்
கூசிய கழுத்த மைத்தல் குறிப்பதா மயிர்க்கூச் சோடி
ராசியாய்த் தழுவி கூடில் நல்லசந் தோஷத் தென்னே.

...71


11. அஞ்சிதச் சிரசு

என்னவே முன்னோர் நூலி லியம்புவ ரஞ்சி தந்தான்
சென்னியோர் தோளிற் சாய்த்தல் சேர்விநி யோக மோகம்
தன்னிலும் விசாரஞ் சோகஞ் சஞ்சல மதிலா மேலோர்
நண்ணியே வரும்போ தாகும் நவில்விதூ தக்கூ றுகேளே.

...72


12. விதூதச் சிரசு 13. ஆதூதச் சிரசு

விதூதமே தலைந டுக்கல் விதமது மத்ய பானம்
போதையி லவிழ்த முண்ணும் போதினிற் றிறமை யாகும்
ஆதூத மிருபு றம்பார்த் தப்புறம் மேலே பார்ப்ப
தோதுமாச் சரியஞ் சந்தோ டத்திலுந் துலங்கு மென்னே.

...73


14. அவநுதச் சிரசு 15. அகம்பிதச் சிரசு

அவதுத மிருபு றம்பார்த் தண்ணாந்து கீழே பார்ப்ப
திவையெதி லென்பா யாகி லிருவெனுஞ் சைக்கி னைக்காம்
நவிலகம் பிதந்தான் சென்னி நலமுட னசைத்தல் வார்த்தை
செவையென வணக்கஞ் செய்யல் செப்புமே யிசுகாந் தானம்.

...74


16. இசுகாந்தானச் சிரசு. 17. திரியக்கதானனச் சிரசு

இசுகாந் தானஞ் சென்னி யியல்புடன் றோளில் வைத்தல்
இசைவது தூக்க மந்த மினிநேச மூர்ச்சை யாகும்
திசைபுகழ் திரியக்க தானனந் திரும்பிப் பார்த்து
விசையுடன் மேலே நோக்கல் விநியோகங் கருவ மாமே.

...75


18. அராதிகச் சிரசு. 19. பார்சுவாபிமுகச்சிரசு

கருவம்விட் டராதி கத்தைக் கேள்சற்றே தோளை நோக்கி
மருவிய சிரநே ராக்கல் வகைபிறர் மனத்தைக் காணல்
பருவமாம் பார்சு வாபி முகமது பக்கம் நோக்கல்
தருணமாச் சரியந் தன்னிற் றான்வருஞ் சிரம தாமே.

...76

சிரோபேதப் பிரகணம் முற்றும்.

2. நயன பேதப் பிரகரணம்

ஆகுமே நயன பாவ மபிநய முப்பத் தாறாம்
தோகையே சமமாந் திர்ஷ்டி தொகுத்தவா லோகி தக்கண்
வேகமாஞ் சாசி யும்பி ராலோகி தக்கண் மீது
பாசஞ்சேர் நிமீலி தக்கண் பகருமுல் லோகி தக்கண் ...77

கண்ணவ லோகி தத்தோ டநுவிர்த்தந் துரிதக் கண்ணும்
நண்ணுமே நயனஞ் சூச னாதிஷ்டி யுக்கி ரக்கண்
திண்ணிய தூர திஷ்டி சீர்காந்தைக் கண்ணி னோடே
உண்ணும்ப யாக கக்கண் ணுடன்கரு ணைக்கண் ணாமே.

...78

மேனிமூ டாம்ப கக்கண் மீதிலா மற்பு தக்கண்
பானுநேர் வீரக் கண்ணும் பகிர்ந்திடு விகற்பக் கண்ணும்
தேனே விப்பி ராந்தக்கண் செப்பும்வி ஷாணக் கண்ணும்
மானேவிப் புலுதாக் கண்ணும் வளர்விதர்க் கிதாக்கண் ணாமே.

...79

ஆமேதீ னாக்கண் ணோடு மருள்திரஸ் தாக்கண் கிருஸ்து
நேமமா மிருட்டாக் கண்ணும் நீதிசேர் மலினி யென்னும்
சேமமா லளிதக் கண்ணுஞ் செப்புங்குஞ் சிதக்கண் ணென்றும்
காமியே ஆசி யாக்கண் காணச்சு தாக்க ணென்றே.

...80

தாக்குசங் கிதக் கண்ணாய்ச் சாற்றிமேல் மதக்கண் ணிற்கும்
பார்மூ விதப்பே ராகும் பகர்கரு ணாம தக்கண்
ணாக்குமத் திமமதக் கண்ண தருமம தக்கண் ணென்று
நோக்குமிக் கண்கள் போய் நுவலும் விநியோ கங்கேள்.

...81


1. சம திருஷ்டி

இமையவர் போலே கண்க ளிரண்டுமூ டாமற் பார்த்தல்
சமதிஷ்டி விநியோ கங்கேள் தராசுநன் னாட்டியா ரம்பம்
அமலவிண் டேவ ரூப மாச்சரி யங்க ளுக்கும்
விமலியே வேறோர் காரிய மேவு சிந்தைக்கு மாமே.

...82


2.ஆலோகிக திருஷ்டி

நிகழ்சாடை யாய்ப்பிர மித்துத் திறத்துடன் சுழற்றிப்பார்த்தல்
பகருமா லோகி தக்கண் பற்றிய விநியோ கங்கேள்
சகலமும் பார்க்க வுங்குய வன்றிரிக் கைக்கு மிச்சை
மிகவா னதற்குஞ் சிந்தை மேவிய பிரமைக்குந் தானே.

...83


3.சாசி திருஷ்டி

பாரிசங் களிற்கு றுக்கே பார்ப்பது சாசி திஷ்டி
நேருறும் விநியோ கங்கேள் நீட்டிய பார்வை கிள்ளை
ஏறுவீ சையை முறுக்க லிங்கிதஞ் சூச னைக்கும்
பாரவி சாரிக் கூத்து பாணவிலக் குக்குந் தானே.

...84


4. பிரலோகித திருஷ்டி
பக்கமி ரண்டும் பார்த்தல் பிராலோ கிதந்தா னாகும்
மிக்கவை விநியோ கங்கேள் வெகுசம்பாத் தியமி ரண்டு
பக்கஞ்சேர் பொருள்க ளெல்லாம் பார்க்கவு மசைவ தற்கு
மிக்க நேர் மொழியாய்ப் புத்தி யீனங்க ளுக்கு மாமே.

...85


5. திமீலித திருஷ்டி

அரைவிழி யாய்வி ழித்தாி லாகுநி மீலி தந்தான்
உரைவிநி யோகங் கேளா யுற்றிடு நமக்கா ரங்கள்
பரவசஞ் செபந் தியானம் பைத்தியங் கொஞ்சப் பார்வை
இருடிவே டங்களுக்கு மீயல்நிமீ லிதமே யாமே.

...86


6.உல்லோகித திருஷ்டி

உயரவே பார்த்த திஷ்டி யுல்லோகி தந்தா னாகும்
சயமுறு விநியோ கங்கேள் தேவமண் டலங்கள் சந்திரன்
நயமுறு சிகிரி கட்கும் நற்கொடி நுனிக ளுக்கும்
உயர்பாலிற் பொருட்கும் பூர்வ முறுஜன்மங் கட்குந் தானே.

...87


7.அனுவிருத்த திருஷ்டி

மேலிடங் கீழி டத்தும் மிகவிரைந் தேகண் ணாற்பார்த்
தாலனு விர்த்த திஷ்டி யதற்கினி விநியோ கங்கேள்
கோலியே மேவு பொல்லாக் கோபங்கட் காகு மப்பால்
சாலவே மந்தி ரிக்கும் பலவேலை களிலு மாமே.

...88


8. அவலோகித திருஷ்டி

அவனியைப் பார்த்த திஷ்டி யவலோகி தந்தா னாகும்
நவில்விநி யோகங் கேளாய் நடக்கநன் னீழற் பார்க்கப்
புவியினில் விசாரஞ் சூரம் புராணங்கள் படிப்ப தற்கும்
கவனம தாகத் தன்றே கம்பார்க்க வுந்தா னாமே.

... 89


9. துரித திருஷ்டி

கேளுநீ பிரபன் தத்துங் கீதத்து மீதிற் பூசும்
பாழிலாச் சந்த னத்தும் பகர்வீர ரசத்து மற்ற
வேழம்போ லேக றுத்த விழிகளை யுருட்டி நோக்கல்
ஆழவே துரித திஷ்டி யாகுமென் றுரைப்பர் மாதே.

...90


10. சூசனா திருஷ்டி. 11. உக்கிர திருஷ்டி

மேலுந்தே சங்கள் பார்ப்ப திலுநாட் டியத்தும் பாணம்
சாலவே தொடுக்கும் போதும் பதிவிர தைதன் னீதிப்
பாலிலு மனங்க னுற்ற கலவியி லும்பார்க் குள்ளே
கோலுஞ்சிங் கார மாதி ரசங்களைக் குறிக்கும் போதே.

...91

போதுநேர் நயனந் தன்னை பொருந்தவே சுழித்து மூடி
ஏதமில் சூச னாக்கண் ணென்ற னருக்கி ரக்கண்
ஓதுமே பைத்தி யம்மே லுற்றவன் கோபம் வேகம்
தீதிலாப் பயர சத்தி லிருகடை சிவந்து பாரே.

...92


12. தூரதிருஷ்டி

சுகமுறுந் தூர திஷ்டி சொலுஞ்சிறி துயர நோக்கல்
அகவிநி யோகங் கள்ளுஞ் சாராய மருந்து வோனும்
தகுங்கைகா னீட்ட லீதிற் றானாகு மென்றே முன்னாள்
தகைமைசேர் பரத நூலோர் சாற்றின ரிதுவென் றோதே.

...93


13. காந்தக்கண்

கல்லெனுங் காந்தைக் கண்ணாங் கருவிழி பெரிதாய்ப் பார்த்தல்
வல்லப வினியோ கந்தான் வளர்பிரமை யதிச யித்தும்
நல்லபெண் வதனம் பார்த்தல் நாடுஞ்சித் திரவு றுப்பும்
புல்லிய சிங்கா ரத்தும் பொருமதி ரவியி டத்தும்.

...94

இடமாகு மிரதத் தோடு மிணங்குபாய் மாவி டத்தும்
கொடுமுடி கோபு ரத்துங் கூடுங்கண் ணாடி பார்த்தல்
மடமயிற் பலபொ ருட்கள் பார்ப்பதி லாகு மற்றும்
திடமதாய் முகத்தில் வீர ரசமது சனிக்குந் தானே.

...95


14. பயாநகதிருஷ்டி

காட்டியே கண்கண் மூடிக் கருவிழி பார்ப்ப தாகச்
சூட்டும்ப யாந கக்கண் சொல்லும்வி நியோக மையல்
கூட்டும்லரஞ் சனையும் வாஞ்சை கொளுமூக்குக் கண்ணாடிக்கும்
ஈட்டமாம் புத்த கத்து மெழும்சலிப் பிலுமுண் டாமே.

...96


15. கருணாதிருஷ்டி

பார்க்குமாங் கருணா திஷ்டி படர்கடை நடுவி ரித்து
ஏற்கவே யிடையி ரண்டு மிடுக்கியே பார்ப்ப தாகும்
தீர்க்கமாம் விநியோ கங்கள் செப்பக்கே ளிரவி தன்னை
மார்க்கமாய்ப் பார்க்கும் போதும் மந்திரத் தியானஞ் சேவை.

...97

சேவையாம் பகைவ ரோடெ திர்மொழி செப்புங் காலும்
கோவைநேர் விழியி னோவால் கூசிக்கண் பார்க்கும் போதும்
பூவையே சிந்தை யன்பு பொருந்தமெய்ச் சிலுப்பும் போதும்
மேவிய தவத்தோர் நாசி னுனிபார்த்த லசதி யென்பேன்.

...98

நுனிபார்க் குங்கல் யரணப் பெண்ணறுந் தலைக விழ்ந்து நாணல்
அணியதாய்த் திரிவா யில்வைத் ததன்குறி பார்க்கும் போதும்
இணையிலா மைய லாசை யிருகண்டூள் விழுந்த போதும்
துணிவதா மருந்த ருந்தற் சூழ்புகை தனிலு மாமே

...99


16. மூடாம்பகக்கண்

தொய்யுமூ டாம்பகக் கண்ணி மைகள்சூட் சித்துப் பார்த்தல்
மெய்யிதின் விநியோ கங்கேள் விரைந்திடுஞ் சிந்தை நோயும்
தையலே மயக்கந் தியானந் தன்னிலுந் துக்க மாகும்
ஐயமில் லாத நித்திரை யறைந்ததை யறிந்து கொள்ளே.

...100


17. அத்புததிருஷ்டி

தேடிய வற்பு தக்கண் சீரதைச் செப்பக் கேண்மின்
வாடியே சோம்பி நோக்கல் தன்னிலே நிமைகள் சற்றே
நாடியே துடிது டிக்க நயம்பெறு நயனத் துள்ளே
கூடியே கருவி ழிச்சஞ் சலமத கொளவே நோக்கும்.

...101

நோக்கயே விநியோ கங்கே ளொருவரை நோகச் சொன்னோம்
தாக்கவே யென்ற போதுஞ் சரீரநோய் கொண்ட போதும்
தேக்கியே யதுவுண் டாகு மெனப்பர தச்சீ ருற்றோர்
ஆக்கமா யபிந யிக்கு மடவுரை செய்தா ரன்றே.

...102


18. வீரதிருஷ்டி

செய்யவே யிமையுங் கண்ணுஞ் சீரசை யாதி ருத்திப்
பையவே புருவந் தன்னை நெரித்துக்கண் சிவப்ப தாக்கி
நொய்யவே பொரும லாக நோக்குதல் வீரக் கண்ணாம்
மெய்யிது வினியோ கந்தான் வீரர்மேற் பாய்வ தாமே.

...103


19. விகற்பதிருஷ்டி

கேளுநீ யிருகண் டன்னைக் கெம்பீர மாய்த் திறந்து
ஆழியாங் கடைக்கண் சற்றே குவித்தசை யாமற் சீராய்த்
தோழியே கருவி ழிக்காற் றுலங்கவே பார்ப்ப தாகும்
நீழுறும் விப்பி ராந்தம்; விஷாணமு நிகழ்த்து நூலே.

...104


20. விப்பிராந்ததிருஷ்டி 21. விஷாணதிருஷ்டி

யோகமாம் விழிதி றந்து ஒக்கவே பரப ரப்பாய்
வேகமாய்ப் பார்ப்ப தென்றே விள்ளுவர் விஷாண திஷ்டிக்
காருமாங் கடைக்கண் சொக்கி யிமைகளைத் திறந்து கண்ணைப்
பாகுமாய் நிமையைக் கொட்டிப் பார்ப்பது மாகும் பேரே.

...105


22. விப்புலுததிருஷ்டி

பாருவிப் புலுதா திஷ்டி பயன்விழித் திருக்கும் போது
கோரிய துண்டு இல்லை யெனநிமை கொட்ட லாகும்
மாறிய துக்கத் தும்முன் மத்தத்தும் பொருந்து மென்றே
நாரியே பரத நூலோர் நயம்பட வுரைத்த வாறே.

...106


23. விதர்க்கிததிருஷ்டி 24. தீனா திருஷ்டி

உரைக்கும்வி தர்க்கி தாக்கண் ணுறுமிமை யுந்து டித்துப்
பொருக்கவே பரப ரப்பாய்ப் பொருந்த நாற்றிசையு நோக்கும்
வெருக்கத்தீ னாதிஷ் டிக்கு மேலிமை சிறுக்கக் கொட்டிக்
கருவிழிச் சற்ற மைத்துக் கண்ணீர்த தும்பப் பார்த்தல்.

...107


25. திரஸ்தா திருஷ்டீ 26. கிரஸ்தா திருஷ்டி

பார்த்திடுந் திரஸ்தா திஷ்டி பகருவோ முண்ண டுக்கச்
சேர்த்திடு மிமைது டிக்கத் திருவிழி சலிக்க நோக்கும்
ஆர்த்திடு மிமைச லித்து அணிபுரு வம்நெ ரித்துக்
கோர்த்திடும் விழியை யேறப் பார்க்குங் கிரஸ்தாக் கணென்றே.

...108


27. இருட்டாக்கண்

காலத்து மிருட்டாக் கண்ணிற் காங்கரு விழியைச் சற்றே
ஏலவே சொருகி யோய நிமைகொட் டியேக போலம்
சாலவுன் னதமாய்ப் பார்ப்ப தாமெனப் பரத நூலோர்
நீலவேல் விழியி னாளே நிலையறிந் துரைசெய் தாரே.

...109


28. மலிநீ திருஷ்டி 29. லவித திருஷ்டி

செய்யவே வொன்றைத் பார்த்துத் திரும்பிபோ குவது போலப்
பையவே யிமையைச் சற்றே பணியமூ டுவதாந் திஷ்டிக்
கையுறு மலிநீ யாகுங் கடைமூடிப் புருவஞ் சேர்த்து
மெய்யுறு கண்டி றந்து பார்ப்பது லளித மென்னே.

...110


30. குஞ்சித திருஷ்டி 31. ஆசியாக்கண்

மேவிய குஞ்சி தக்க ணிமைபாதி மூடிப் பக்கம்
தாவிச்சஞ் சலமாய்ப் பார்ப்ப தாகுமே யாசி யாக்கண்
பாவையே விழியைச் சற்றே சுருங்கவாச் சரியம் பார்த்துக்
கூவியே சிரித்த லென்றே குறித்ததை விண்டார் மானே.

...111


32. அச்சுா திருஷ்டி

விள்ளவே யச்சு தாக்கண் ணாமதின் விவரங் கேண்மின்
உள்ளுடன் புறம்புந் தோற்ற வொளியது நிறக்கக் காட்டும்
வெள்ளையாம் விழிபொ ருந்தி மேலிடப் பார்ப்ப தன்றே
வள்ளிதாய்ப் பரத நூலோர் வகுத்தனர் புலன றிந்தே.

...112


33. சங்கித திருஷ்டி. 34. மதக்கண்

தெரிவையே சங்கி தக்கண் திறமதாய் விழித்துப் பார்த்து
மறுபடி யிமையை மூடி வளர்கடைக் கண்ணாற் பார்த்தல்
முருகாகு மதக்கண் டன்னுள் மூவகை யான பேதம்
பெருமையாம் பயன றிந்து பிணக்கற வுரைக்கு நூலே.

...113


34. கருணைமதக்கண். 35. மத்திம மதக்கண்

மின்னாங் கருணை மதக்கண் விழித்தோரஞ் சரித்து நன்றாய்ப்
பன்னிய விகார முற்றுப் பார்க்குமத் திமம தக்கண்
நின்னய மாகச் சற்றே நிமைதனை விழித்து மூடி
உன்னியே யசைத்துப் பார்ப்ப தொக்குமென றுரைசெய் தாரே.

...114


36. அதருமமதக்கண்

வாரிசூழ்ந் திடும தர்ம மதக்கண்ணின் விபரங் கேண்மோ
நேரதாம் விழியைக் கீழே நிலைபார்த்துப் பிரயா சத்தில்
கோரியே நிமையைச் சேர்த்துக் கொட்டுத லாகு மென்றே
கூறினார் பரதங் கற்ற குருபரம் பரையி னாரே.

...115

நயனபேதப் பிரகரணம் முற்றும்.

3. புருவபேதப் பிரகரணம்

புருவபே தங்கள் நான்காய்ப் புகன்றனர் மிதமா மென்றும்
பருவமா மமித மென்றும் பாரிலுத் வர்த்தி யென்றும்
மருவப வர்த்தி யென்றும் வகுத்தன ரெவருங் காண
சருவியே யொவ்வொன் றிற்குந் தான்விநி யோகஞ் செப்பும்.

...116


1. மிதப்புருவம். 2. அமிதப் புருவம்

செப்பிய மிதப்பு ருவஞ் சிறந்துமேல் சிறித சைத்தால்
ஒப்புமே சாடை செய்த லுகந்துவே டிக்கைப் பேச்சாம்
மெப்புவ மிதப்பு ருவம் மிகுந்துமே லசைப்ப தாகும்
தப்பிலா நாட கச்சூ சனைதனிற் காணு மென்னே.

...117


3. உத்வர்த்திதப் புருவம் 4. அபவர்த்திதப் புருவம்

என்னவுத் வர்த்தி தந்தா னியம்புது மேலே நோக்கில்
சொன்னவிந் யொகம் ஞானந் தொலையாதா லோச னைக்காம்
பொன்னப வர்த்தி தந்தான் பூருகீழ் நோக்கிற் றுக்கம்
பன்னென முதலா மென்றே பார்த்திபன் மொழிந்த வாறே.

...118


புருவபேதப் பிரகரணம் முற்றும்.

4. நாசிபேதப் பிரகரணம்

நாசியின் பேத மைந்தாய் நவிலுமச் சிவிட்டஞ் சிலிட்டம்
மாசிலாக் கம்பி தஞ்சேர் வருசிலிட்ட புடமா மென்றும்
பேசுசத் புடந்தா னென்றும் பேதங்க ளொவ்வொன் றிற்கும்
வாசியாய்க் காட்டு மந்த வகையது விவரஞ் சொல்லும்.

...119


1. அச்லிட்டநாசி. 2. சிலிட்டநாசி

சொல்லுமச் சிலிட்ட நாசி தூக்குதல் வலது பக்கம்
மெல்லவே சாடை யாகு மேலான கபட மாகும்
அல்லவே சிலிட்ட மென்றும் ஆட்டிட லிடது நாசி
நல்லதாய்த் தூர திஷ்டிக் காமென வுகந்து நாடே.

...120


3. கம்பிதாசி. 4. சிலிட்டபுடநாசி

நாட்டிடு கம்பி தந்தா னிருநாசி தூக்கி யாட்டல்
கூடுவா சனையி லொப்பும் கொள்ளுநோய் ஜன்னி கட்காம்
சூடும்சி லிட்டபு டம்தொ லைவிலா தசைத்தல் நாசி
வேடிக்கை தனிலு மின்னம் விரகமுஞ் சோக மென்னே.

...121


5. சத்புடநாசி

எண்ணியே தூக்கியி ருக்கு மிருநாசி சத்பு டந்தான்
நுண்ணிய விநியோ கங்கேள் நுணுக்கமா மசூயை தன்னில்
கண்ணியே வருமென் றோதி நவிலுஷா தேவி சொன்ன
திண்ணிய நாசி பேதந் தௌிந்துநீ யறிந்து பாரே.

...122


நாசி பேதப் பிரகரணம் முற்றும்.

5. அதரபேதப் பிரகரணம்.

1. சமவதரம். 2. சுபாவவதரம்

அதரபே தங்கள் நான்கா யம்புவி தனிலே செப்பும்
விதமது சமசு பாவம் விகசிதம் ஈஷார்ஷ யம்மாம்
முதல்சமம் வாயை மூடி யிருத்தலாங் கோபந் துக்கம்
இதமுடன் சுபாவ மாகும் இளநகை தயவு வஞ்சம்.

...123


3. விகசித அதரம். 4. ஈஷார்ஷயவதரம்

வஞ்சம திலாது மிக்கு மகிழ்வது விகசி தந்தான்
மிஞ்சிய சந்தோ ஷாதி களுக்குமே விளம்ப லாகும்
எஞ்சிய ஈஷார்ஷ யந்தான் இயம்பின்வாய் நகைத்தல் கோணி
அஞ்சாடை சைகை யென்று அநுமனு மறைந்த வாறே.

...124

(5. Number missing)

அதரபேதப் பிரகரணம் முற்றும்.

6. முகராகப் பிரகரணம்

முகராகம் நான்க தாக மொழிந்தனர் சுவாபா வத்தில்
இகலிலாப் பிரசன் னத்தோ டிரத்தமுஞ் சியாம மென்னச்
சுகமுறும் வதன மாதே தொடுத்தவிம் முகபே தங்கட்
ககமகிழ்ந்து பரதமுனி யறைந்த விநி யோகங் கேளே .

...125


1. சுவாபாவிக முகம். 2. பிரசன்னமுகம்.
3. இரத்தமுகம். 4. சியாமமுகம்

மனதினில் விகார மின்றி மருவுதல் சுவாபா வந்தான்
கனத்த சந்தோஷ மாகக் கருதும் பிரசன்ன மாகும்
இனங்கிரு பையுமுன் கோபம் வீரமு மிரத்த மென்பர்
மனதினிற் றுக்கங் கொண்டு வகுத்தது சியாம மாமே.

...126

முகராகப் பிரகணம் முற்றும்.

7.கண்டபேதப் பிரகரணம்

உறுதியாங் கண்ட பேத மொன்பானன் னாட்டி யத்தில்
கருதுமுற் பத்தி பேதங் காட்டுநால் வகைய தாய்ச்சுந்
தரிதிறச் சீனத் தோடு சார்பரி வர்த்த கண்டம்
வரும்ப்ர கம்பிதமாங் கண்ட வகைதனை யறிந்து கொள்ளே.

...127


1. சுந்தரிகண்டம்

சுந்தரி யிலக்க ணங்கேள் தூய்கழுத் தைக்கு றுக்கி
விந்தையா யசைத்துக் காட்டும் விதத்தைச்சுந் தரியா மென்பர்
பந்தமாம் விநியோ கங்கேள் ரத்னங்கள் பார்ப் பதாகு
மந்தமாம் வீணை வாத்ய மருள்தேவ தைக்கு மன்னும்.

...128

அதற்காகு நமஸ்கா ரங்க ளடர்பல கார்யா ரம்பம்
மதித்தசி நேகா ரம்பம் மருவிய நல்லோ ரென்னில்
கதித்திடும் பைத்தி யத்துங் கனிந்திடு சரசங் கட்கும்
உதித்தசந் தோஷங் கட்கு முகந்தசுந் தரியாம் பாரே.

...129


2. திரச்சினகண்டம்

பாம்புபோ வதுபோ லிரண்டு பக்கத்து முயர்பா லாகத்
தேம்பலே யசைத்த கண்டந் திரச்சனம் வநியோ கங்கேள்
பாம்புபோங் கதிக ளுக்கும் பரியசுத் திக்கும் நீல
ஆம்பலின் விழிய ணங்கே ஆயாசங் கட்கு மாமே.

...130


3. பரிவர்த்தன கண்டம்

தெரியிடம் வலத்திற் பாதி திங்களைப் போல சைத்தால்
பரிவர்த்த னக்க ளந்தான் பகர்ந்திடு விநியோ கங்கேள் சால
அரியசிங் கார நாட்டிய மாசைமின் னார்க போலம்
பருகவு மாகு மென்றே பகர்ந்தனர் பரத நூலோர்.

...131


4. பீரகம்பித கண்டம்

திறமொடு முன்னும் பின்னுஞ் சீரார்கண் டத்தை மாடப்
புறவுபோ லசைத்த கண்டம் பிரகம்பி தந்தா னாகும்
உறுவிநி யோகங் கேளா யுனக்கென் பதூஉஞ் சால
நிறைகொளுந் தேசி நாட்டியம் நீண்மாலை நந்தி வாக்கே.

...132

கண்டபேதப் பிரகணம் முற்றும்.

8. புஜபேதப் பிரகரணம்

புஜபேத மூர்த்வ மென்றும் புகலதோ முகந்தா னென்றும்
அசைவிலாத் திரியக் தம்மோ டபவித்தம் பிரசாரி தந்தான்
கசிவுள அஞ்சித தம்மண் டலகதி சுவத்தி கந்தான்
திசைகொளுத் வர்த்தி தம்பி ருஷ்டாது சாரிதமா மின்னம்.

...133

நமிரமா விடமே சரலம் நற்குஞ் சிதந்தா னென்றும்
அமருமாந் தோளி தத்தோ டருளுச் சரிதமே யென்றும்
இமையவ ரிருடி தோளுக் கியம்பின பேதம் பத்தாம்
கமழ்தச வதன னாறு புஜபேதங் கருதி னானே.

...134

புஜபேதப் பரகரணம் முற்றும்.

9. மார்புபேதப் பிரகரணம்.

1. சமமார்பு. 2. உத்வாகித மார்பு

வருமார்பு பேத மூன்று வளர்சம முத்வா கிதந்தான்
நிரைப்ரகம் பிதமே யென்றும் நிகழ்த்தினர் விநியோ கங்கேள்
தருசம மசையா நிற்கில் துக்கமுத் வாகி தந்தான்
பருமார்பு தூக்கி லென்னைப் பாரெனுஞ் சிலம்ப மாமே.

...135


3. பிரகம்பித மார்பு

ஆமெனப் பிரகம் பிதந்தான் மார்பதைச் சிறித சைத்தல்
ஓமெனும் பெரியோர் முன்பு முகந்திடும் நல்லோ ரென்னல்
சாமகா னங்கள் பாடிற் றணிந்திடும் பயனைக் காட்டல்
நேமமாய் மார்பு பேதம் நிகழ்த்தினன் வானோர் கோமான்.

மார்பு பேதப் பிரகரணம் முற்றும்.

10 வயிறு பேதப் பிரகரணம்

1. சலனோதரம்

சாற்றிய வயிறு பேதஞ் சலனோ தரந்தா னென்றும்
போற்றுலம் போத ரந்தான் புகல்கர்வ வுதர மென்றும்
தோற்றுமிம் மூன்று தன்னிற் சொல்சல னோத ரந்தான்
மாற்றியே விடாத சைத்த வயிறுமாச் சரிய மாமே.

...137


2. லம்போதரம். 3. கர்வோதரம்

ஆமெனுச் சாக மேப்ப மாகுலம் போத ரந்தான்
சேமரா ஜாங்க மேன்மை செப்புகர் வோத ரந்தான்
தாமென வெட்கிக் காட்டத் தான்விர கங்க ளுக்காம்
ஓமென வயிறு பேத முரைத்தன னைங்க ரன்றான்.

...138

10 வயிறு பேதப் பிரகரணம் முற்றும்.

11. பிருஷ்டபேதப் பிரகரணம்

1. சமம். 2. லளிதம்

முதுகுபே தங்கள் மூன்றாய் மொழிசம பிருஷ்ட மென்று
மிதமொடு லளிதம் வலித மிதின்விநி யோகங் கேளே
விதுமதுல் லாசத் தாலே விரிசம பிருஷ்ட மாகும்
பதியாம லுயர்ந்த பிருஷ்டம் லளிதமாம் பகரு மின்னும்.

...139


வலித பிருஷ்டம்

பகருமே தீரம் வீரம் பாரினிற் சுமைதாங் கிக்காம்
இகந்தனில் வலித பிருஷ்ட மேழைபோற் றணிந்து காட்டல்
விகற்பமில் லாதோ னென்று மிகுயோகி பக்த னென்றும்
அகமகிழ் பிருஷ்ட பேதம் அறுமுக னுரைத்த வாறே.

...140

பிருஷ்ட பேதப் பிரகரணம் முற்றும்.

12. இடுப்புப் பேதப் பிரகரணம்

1. சுபாவ நடு

இயம்பிய நடுவின் பேத மிசைவுடண் மூன்ற தாகும்
நயம்பெறு சுபாவ மென்று நமிதம னமித மென்றும்
சயம்பெறு நடுசு பாவம் சற்றசை யாது நிற்றல்
மயமெனும் யோகம் ஞானம் வழிதனக் கொவ்வு மின்னே.

...141


2. நமித நடு 3. அதமிதநடு

ஒவ்வுமே மிக்க சைத்த லுக்கமே நமிதந் தானும்
நவ்வுமி லேச்சர் தியானம் நடையதாங் கிச்சு மாகும்
செவ்விய நமிதந் தானுஞ் சிறிதசைத் தந்த ரங்கம்
தவ்விய மருங்கு பேதந் தத்தில னுரைத்த வாறே.

...142

13. பார்சுவ பேதப் பிரகரணம்

1. ஆலோளித பார்சுவம்

முந்தவே பக்க பேத மூன்றிலா லோளித தந்தான்
பந்தகுஞ் சிதமே யென்றும் பகர்விலோ ளிதமே யென்றும்
வந்தமா லோளி தந்தான் வளரிடப் பக்கஞ் சாய்த்தல்
தொந்தமா மபிந யத்திற் றுலங்குநற் சயன மாமே.

...143


3. குஞ்சித பார்சுவம். 4. விலோளித பார்சுவம்

துலங்கிய குஞ்சி தந்தான் சுழற்றியே முன்னும் பின்னும்
நலம்பெறு பக்கஞ் சாய்தல் நற்சபை வழக்குப் பேச்சாம்
இலங்கிய வலது பக்க மிசைத்தவி லோளி தந்தான்
குலுங்கவே சரம்பார்த் தென்னக் கோகள னுரைத்த வாறே.

...144

பார்சுவபேதப் பிரகரணம் முற்றும்.

14. கரகேத்திரமென்னும் பாணித்தானப் பிரகரணம்

சீர்மிகு பாணித் தானஞ் செப்பிடிற் பதின்மூன் றாரும்
நேர்வல மிடமுன் பின்கீழ் மேல்சிரம் நெற்றி கன்னம்
வார்புஜ மார்பு தொந்தி மருங்குவித் தான மன்றி
ஏர்பெறு மபிந யித்தல் மற்றிட மேவா தென்னே.

...145

கரகேத்திரமென்னும் பாணித்தானப் பிரகரணம் முற்றும்.

15. சிரக்கர கருமமென்னும்சிரப்பாணி கர்மப் பிரகரணம்

செப்புமுத் தூன னந்தான் சிலேஷம் விச்லேஷ மாகும்
மாப்புர க்ஷணமாம் க்ஷேப மோடன நிக்கிர கந்தான்
அப்புமே உத்கிருஷ் டத்தோ டாகிருஷ் டம்வி கிருஷ்டம்மே
தப்பிலாத் துரோட னஞ்சே தனந்தா டனந்தா னின்னம்.

...146

இன்னமும் பேத னத்தோ டியம்புக போட னந்தான்
பின்னுமோ டனமா மாவா கனம்விசற் சனமே யென்றும்
பன்னதற் சனமா மென்றே பகற்சிரோ பாணி கர்மம்
என்னில்பத் தொன்பா னென்றே யிசைத்தனன் கும்ப யோனி.

...147

சிங்கார கருமமென்னும் சிரப்பாணி கர்மப் பிரகணம் முற்றும்.

16. கரப்பிரசாரமென்னும் அஸ்ததுவாதச ப்ராணப் பிரகரணம்

நாட்டமாங் கரங்க ளுக்கு நவின்றதோர் பிராணக் கையைச்
சூட்டுமே யீரா றாகச் சொல்லுமிக் கரத்தி னாமம்
கூட்டும்ப்ர சார ணக்கை குஞ்சித ரேசி தக்கை
நீட்டவே புங்கி தக்கை நிகழ்பிர ரிதக்கை மற்றும்

...148

இனபவ வேஷ்டி தம்முத் வேஷ்டிதம் வியாவி ருத்தம்
கனபரி விர்த்தஞ் சங்கே தத்துள சின்ன கம்பின்
சினமிலாப் பதார்த்த டீகஞ் செப்பங்கை பிராண னிற்கு
நனைவுற விலக்க ணத்தை நவிலுவோம் நூலை யாய்ந்தே.

...149


1. பிரஸாரணம் 2. குஞ்சிதம் 3. ரேசிதம் 4. புங்கிதம்

அங்குலி களைமுன் னீட்டப் பிரசார ணம்ம சைத்தல்
தங்குரே சிதம்வ ளைத்தாற் குஞ்சிதஞ் சாற்று மூன்றும்
செங்கையின் சேஷ்டை யென்று பதாகாதி யெதிராய் நீட்டப்
புங்கித மாகு மென்று புகன்றனர் நூல்வல் லோரே.

...150


5. பிரேரிதம் 6. அபவேஷ்டிதம் 7. உத்வேஷ்டிதம் 8. வியாவிருத்தம் 9. பரிவிருத்தம்

பிரிகரம் பின்பு நீளிற் பிரேரிதம் விளம்புங் கீழே
சரியப வேஷ்டி தம்முத் வேஷ்டிதம் மேலே நோக்கல்
வரும்வலப் பக்கம் நீளில் வியாவிர்த் தமதுநேர் நீளில்
பரிவர்த்த மெனவிவ் வாறு பகர்கைக் குக்குண மீதென்றே.

...151


10. சங்கேத கரப்பிரசாரம்

சொல்லுசங் கேத பேத மிருவகை துலங்குங் கையை
நில்லென வொன்றைக் காட்டி னிர்த்திஷ்ட சங்கே தம்மாம்
வல்லவ மூகத் தாலே வகுத்தகை பொருந்த யார்க்கும்
உல்லின மின்றிச் சாற்று மூகிதச் சங்கே தக்கை.

...152

சங்கேத நிர்ண யத்தைச் சாற்றுவோ மின்னு மாடை
இங்கித பணிகள் சர்ப்பம் பசுபட்சி முதலா யேற்கும்
சிங்கள(ர) நவர சங்கள் தித்திப்புப் புளிப்போ டாறும்
அங்கக லிங்க தேச முதலைம்பத் தாறோ டின்னும்.

...153

நவரத்ந முப்ப ரீகைக் கோட்டைவீ தியுந்தேர் நாகம்
பவபரி யாயு தங்கா லாளப்பெண் மைபகருங் காது
தவமுறு நாசி கண்கள் தனமுத லாய்வி ளங்கும்
அவயவங் களைச்சங் கேதத் தாலபி நயிக்க லாமே.

...154


நிர்த்திஷ்ட சங்கேதம் ஊகித சங்கேதம்

அருள்ஜன்ம நாளைக் கொண்டு அபிநயப் பதுநிர்த் திஷ்டம்
உருவதாந் திரசர ரங்க ளுற்றவஸ் துக்க ளுக்குத்
தருஜன்ம நாட்கொண் டேனுஞ் சாற்றும்பேர் நாட்கொண் டேனும்
பெருமையா மபிந யித்தல் பேசுமூ கிதம தென்றே.

...155


11. சின்ன கரப்பிரசாரம்

கையினாற் காட்டுஞ் சின்னம் பிரத்தியக்ஷம் பரோக்ஷ மாகச்
செய்யவி ளங்கு மீது திரஞ்சர முதலா யுள்ள
மெய்யாம் வஸ்துக் கள்யாவு மிருநான்கு பேத மாகும்
ஐயமி லாம லென்றே யறைந்தனர் விவரங் கேளே.

...156

செப்புமா காரங் காட்டற் றிருமுக நிரீக்ஷ ணம்நேர்
நிற்பதோ ரெல்லை யும்ப தாகமா யுதமு நீள
ஒப்பும் பிரயோ சனத்தோ டூரிய தலங்கள் சேஷ்டை
அற்புத மாகக் காட்டு மதுசின்ன கக்கை யாமே.

...157


12. பதார்த்த டீகம்

ஆமெனும் பதார்த்த டீக வஸ்தமோர் பத்தி னுட்பம்
தாமறிந் ததனைக் கையாற் றான்காட்ட நிச்ச யித்தல்
ஆமிந்த வஸ்த ப்ராணம் நவின்றது வாத சத்தில்
பூமியி லறிந்தா மென்னப் பொருந்துமிம் மூன்றுந் தானே.

...158

நவிலஸ்த துவாத சப்பி ராணமா மீரா றாயு
தவுபா ணிப்பிர விசாரத் தின்குணஞ் சேஷ்டை தானும்
குவிமுலை மாதே கேளாய்க் குணசோம ராச னுக்குத்
தவமிகு சார்ஞி தேவர் சாற்றினர் பரத நூலில்.

...159


13. அஸ்த அங்குலிகளின் தேவதைகள்

மணிக்கட்டி னயனங் குட்டஞ் சதாசிவன் மயேச்சு ரன்தற்
சனிமத்தி மையரிக் கணேச னனாமி கைத்தான்
கனிட்டைமன் மதனாம் பாநு கலையகம் புறமாம் விண்மீன்
இனிநகம் சுரர்தான் ரேகை விரவிலக் கணமி தாமே.

..160

கரப்பிரசாதமென்னும் அஸ்த துவாதச ப்ராணப் பிரகரணம் முற்றும்.

17. அசம்யுத அஸ்தலக்ஷணமாகிய கரகரணமென்னும்
ஒற்றைக்கை லக்ஷணம்

பதாகத் திரிபதாக வர்த்த பதாககர்த் தரிம யூரம்
சுதாவர்த் தசந்த்ர னோட ராளசுக துண்ட முட்டி
சதாசிக ரங்க பித்தந் தகுகட காமு கஞ்சூ
சிதானெனப் பதும கோசஞ் சிரசர்ப்ப மிருக சீர்ஷம்.

...161

தருசிம்ம முககாங் கூல மலபதுமந் தானாம் பாணம்
பிரமரஞ் சந்தம் சம்தாம் பிரசூட முகுள மாஞ்ச
துரமமு சாசியமமு சப்பக் கஞ்சொலும் பூர்ண நாபங்
கருதிரு பத்தெட் டாமொற் றைக்கையி லக்க ணங்கேள்.

...162


1. பதாக ஹஸ்தம்
பிறப்பு

அப்பதா கம்பி றந்த தயனிட மதன்கு லங்கேள்
முப்புரி நூலோ னாகு மொழிநிறம் வெண்மை யாகும்
அப்பணிந் திலகு மீசன் அதற்கிரு டியெனத் தோன்றும்
செப்பிய வதிதெய் வந்தான் றிருமாலென் றோது நூலே.

...163


இலக்கணமும் விநியோகமும்

அங்குலி நாலு நீட்டி அங்குட்டந் தனை வளைத்த
செங்கையைப் பதாக மென்று செப்பினர் விநியோகங் கேள்
மங்கையே நாட்யா ரம்பம் வாரிநீ ரோடல் காடு
தங்குமிந் துவைநிந் தித்த தனதடங் கட்கு மாமே.

...164

அஞ்சன மலைகா ரோலை அங்கனம் நடன பாவம்
நெஞ்சென அரசன் மாவு நிலமதி கதவு வீதி
பஞ்சணை விபக்தி யேழும் பந்தடி காற்று முன்னம்
மிஞ்சியே நதியி லோடும் வெள்ளத்தின் மீது நீச்சாம்.

...165

நீச்சுடன் மௌனஞ் சத்தியம் நிலைவிலாக் காலங் கந்தப்
பூச்சுடன் சமர்த்தன் புண்ணியன் போதனை போகச் சொல்லல்
ஆச்செனப் பெருக்கித் தீத்த லளந்திடு முழமும் வேலும்
ஏச்சுன சூதுக் காயை யெறிந்திடல் வெயில் மறைப்பாம்.

...166

மறைப்புடன் வாளின் ரூபம் வளர்த்தியுங் குட்டை கூதல்
விரைப்புடன் காய்தல் வீரம் வெகுதய வாசீர் வாதம்
சிறப்புள தெய்வ லோகத் தினைகட்டு நீட்ட லூணல்
உறப்புடன் செவிடு தன்னி லோங்கியே யடித்த லாமே.

...167

அடித்திடும் பெரியோர் கண்டிப் பகங்கையாற் றயிரின் மத்தைப்
பிடித்துக் கடைத் மூடல பெருவழி நடத்தல் வேண்டாம்
அடித்திட வடேயென் றேசி யழைத்தலுந் தொடுதல் தன்னைப்
படித்திட வுரைக்குங் கையின் பதாகமே வருமென் றோதே.

...168

சங்கீர்ணபதாகம்

பதாகமென் றுரைத்த நந்தி பரதத்திற் குகந்த கையில்
விதாயமாய் மத்திமத்தை விரைவுடன் மடக்கிச் சுட்டைச்
சுதாவுடன் நாமி கத்தாற் றொட்டுமே நீட்டி நாக்காற்
சதாபுகழ் பெண்கள் தங்கள் தானத்தி லுருவந் தானே.

...169

தானென வுரைத்த ரூபந் தண்ணீர்பால் வருஷம் மாசம்
ஏனெனக் கேட்டல் துக்கம் வில்லினைப் பிடித்தி ழுத்தல்
மோனமா மழைவி கார மொய்குழல் விளக்கு மாறுபோல்
நானெனக் கையாற் றூத்தல் நலமுடன் தியானம் கேட்பாய்.

...170

கேட்டிடு மனையிற் கந்தங் கிண்ணத்திற் றொடுதல் ரூபத்
தீட்டியாங் காடா லிங்ன மதின்மகிழ் சுரத லீலை
நாட்டிய பூரட் டாதி நல்கவே யநுமந் தன்றன்
பாட்டிலே சங்கீர் ணப்ப தாகமென் றுரைத்தான் பாரே.

...171


சிலிட்ட பதாகம்

பாருமே பதாகந் தன்னிற் பதிகனி வளையு மாகி
சாருமே குக்க விற்குந் தானணி முதுகி னிற்கும்
நீரிந் மேல் வட்டப் பூச்சி நிகழ்த்துமர்ச் சுனம தத்திற்
கூறுமே யிதுசி லிட்ட பதாகமென் றுைாத்தல் கொள்ளே.

...172


தலபதாகம்

அணிபதா கக்க ரத்தி லங்குட்டங் கனியு யர்த்தித்
தணியவே மற்ற மூன்று விரல்தனைச் சாடை யாக
நுனிதனை யடக்கிக் காட்டல் நுவல்தல பதாகைக் கையாம்
பணியுலா விநியோ கந்தான் உடும்புக்கும் பகர லாமே.

...173

பகருமே நரம்பி ழுத்துப் பதைத்திடு ஜன்னி ரோகம்
தகையுள குட்ட ரோகஞ் சார்ந்திடு ராமப் பற்றும்
அகமகிழ்ந் தோது மின்ன மகத்தியின் மலர்க ளுக்கும்
தகுமென விநாய கன்றன் மதத்தினிற் சாற்றும் பாரே.

...174


2. திரிபதாக அஸ்தம்

இத்திரி பதாகந் தோன்று மிணங்கவே மாலி டத்திற்
சுத்தமாஞ் சாதி வேந்தன் துலங்கிய நிறம்சி வப்பாம்
சத்திவேற் கரத்திற் கொண்ட சாமியே யிருடி யாகும்
சித்தியா மதிதெய் வந்தான் சிவனெனச் சொல்லு நூலே.

...175

அன்னமே பதாகந் தன்னி லநாமிகாங் குலியா மொன்று
தன்னையே வளைக்கத் திரிபதா கம்விநி யோகங் கேளு
மன்னிய வருட மாதம் வருருது தினங்க ளுக்கும்
முன்னிய வாரு கோற்கு முயுத்தங்க ளுக்கும் விள்ளே.

...176

விண்டதோர் கபோல ரேகை விளங்கிய திருமா லுக்கும்
சண்டையிற் பாணம் போடல் தரிக்கும் கிரீடம் கோபம்
எண்டிசை புகழ்தே வேந்த்ர னிலகிய திலதம் நாமம்
மண்டிய வாசங் காலும் மன்கள மரமு மாமே.

...177

மரமுடன் சுடர்வி ளக்கு வச்சிரா யுதமே நெஞ்சில்
திரமுடன் வைத்தால் ஞானச் செவிக்கரு கிடநி மித்தம்
உரமுடன் தபித்தால் வைதல் ஓங்கிய மூன்று மாகும்
திரமறிந் தளித்து வாங்க றம்பதி சேர்க்கை யாமே.

...178

தானெனப் புருவ மத்தி தன்னிலே வைத்தாற் றெய்வம்
ஆனதோர் முகத்தி னேரா யமைத்திடி லோட மாகும்
மானமாய்ப் புயத்தில் வைத்தால் வம்சமாம் சவாதெ டுத்தல்
நானென வுரைக்கும் வீர ரசமுடன் றாழம் பூவே. .

..179


சலிதந்திரி பதாகம்

திரிபதா கத்த சைத்தாற் செலுமது சலித மென்னும்
திரிபதா கமதா மீதுதிக ழீட்டி திருப்ப றூளைக்
குறுகவே குவிப்ப தற்குங் குடுகுடுப் பையையாட் டற்கும்
பெருமரக் கொம்பா டற்கு பலத்தரோ கணிக்கு மாமே.

...180


3. அர்த்த பதாகம்

சொல்லுமர்த் தபதா கந்தான் தோன்றும்பி ருகுவி டத்தில்
புல்லுமே குலத்தில் வேந்தன் புகழ்நிறம் பொன்ன தாகும்
அல்லலில் லாம லோது மப்பிரு கிருடி யென்றே
சொல்லுமே யதிதெய் வந்தான் திருமாலுஞ் சிவனு மாமே.

...181

கண்டதி ரிபதா கத்திற் கனிட்டிகை தனைவ ளைத்துக்
கொண்டதர்த் தபதா கம்பின் கூறிய விநியோ கங்கேள்
வண்டமிழ்ப் பலகை தீரம் வருமிரு பேர்க ளென்னல்
துண்டிக்குஞ் சூர்க்கந் திக்குந் துவசத்துஞ் சிகரத் தாமே.

...182


வக்கிரார்த்த பதாகம்

தக்கவர்த் தபதா கத்திற் றற்சனி மத்தி மத்தை
வக்கிர மாய்வ ளைத்தல் வக்ரார்த்த பதாக மீது
மிக்கவங் குசமு நீள்பல் வேடதா ரிக்கு மீன்கொத்
திக்குமி டுக்கித் தேள்கொ டுக்கிற்குஞ் செப்ப லாமே.

...183


4. கர்த்தரீமுக அஸ்தம்

இக்கர்த்த ரீமு கந்தா னிறையோ னிடத்திற் றோன்றும்
முக்கிய குலமாம் வேந்தன் மொழிநிறஞ் சிவப்ப தாகும்
தொக்குலா விருடி யேவ ருணனதி தெய்வந் தோன்றும்
சக்கரந் தாங்கும் கையோ னென்னவே சாற்று நூலே.

...184

அர்த்தப தாகத் திற்றச் சனிகனி பின்ன தாக
வைத்தல் கர்த்தரி முகக்கை வயணங் கேளாண் பெண்ணைப்பி
ரித்திடல் விபரீ தங்கள் புரண்டிடல் கண்க டைக்கு
மொய்த்திடு மரணம் பேத முகில்மின்ன லுக்கு மாமே.

...185

வையத்தில் வீழ்த லுக்கும் வளர்கொடி களுக்கும் போக
சையோகம் விரகத் திந்குந் தனிக்கோல மிடுத லுக்கும்
பையதோ முகமாய் ைக்கப் பட்சிகண் மூக்கிற் காகும்
எய்யுமுத் வேஷ்டி தத்தா விதயவி கார மாமே.

...186

ஆமது சந்த டிக்கு மாகுபுங் கிதமாம் வேகம்
தாமது சிரமேல் வைக்கச் சாவென்பர் நெற்றி தன்னில்
போமது நிந்த னைக்கும் பொருந்திய சோத னைக்கும்
மாமார்பு நேராய் வைத்தல் மனதுபே தித்த லாமே.

...187

மதிபே தங்க ளிரட்டை மஞ்சமாம் நாபி தன்னில்
இதமுடன் வைத்த லாழ்ந்த இதவஞ்ச கபட மாகும்
விதங்களிப் பொருளை யெல்லாம் விதித்தனர் பரத நூலோர்
கதிகர்த்த ரீமு கக்கைக் காம்விநி யோக மென்றே.

...188


சிலிட்ட கர்த்தரீமுகம்

கர்த்தரீ முகக்கை யின்றன் கவட்டுக்கு ளங்குட் டத்தை
வைத்தது புதனுக் காகும் வன்னிம ரம்வ ராளிக்
கத்தமா மெனவே சுங்கன் பரதத்தி னிற்சி விட்டக்
கர்த்தரி முகக்கை நேர்மை கருதிய தறிந்து கொள்ளே.

...189


5. மயூர அஸ்தம்

ஆகிய விம்ம யூர மழையுண்டோ னிடத்திற் றோன்றும்
நீகமா கியகு லத்தில் விஞ்சையன் நிறங்க றுப்பாம்
சோகந்தீ ரிருடி யாகுஞ் சுகனதி தெய்வ மேக
வாகன னாகு மெ்றே வழுத்தினர் பரத நூலோர்.

...190

மையுரு கர்த்த ரிக்கை வருமிலக் கணத்த நாமி
கையுட னங்குட் டத்தைக் கலந்திட மயூர மாகும்
வையுறும் விநியோ கங்கேள் மயிலுக்குங் கொடிக ளுக்கும்
எய்யுமாஞ் சக்க ரத்தோ டியல்கூந் தலுக்கு மாமே.

...191

கூந்தற் சிறுக்க ணிக்குங் குடுகுடுப் பைக்குங் கோல
வாந்திசெய் வதற்கும் ரத்ந மலர்மாலை சாற்ற லுக்கும்
பாந்தமா மரியா தைக்கும் பட்சியின் கூட்டத் துக்கும்
ஏந்திய நுதலில் நாம மிடல்தி லகத்து மாமே.

..192

மேலதா மைதீட் டற்கும் விழிநீரைச் சிதறு தற்கும்
சாலவே பயங்காட் டற்குஞ் சாத்திர வாதத் திற்கும்
ஆலஞ்சேர் விழியி னாளே யருள்பிராணா யாமத் திற்கும்
மாலதாய்க் கமழ்ந்து பூத்த மலர்கொய்த லுக்கு மாமே.

...193


சிலிட்ட மயூரம்

ஆகுமே மயூரந் தன்னி லழகிய மத்தி மத்தைத்
தாகமாய் வளைக்கச் செய்வாய் தன்னுடன் பரிக்கு மென்றே
பாகமாய் விளக்குஞ் சுக்ர பரதத்தி லுதிற்ற வாற்றை
யூகஞ்சே ருஞ்சி லிட்ட மயூரமா யுரைத்த வாறே.

...194


6. அர்த்த சந்திர அஸ்தம்

துதிக்குமிவ் வர்த்த சந்திரன் றோன்றுமம் புலியிடத்தே
மதிக்கின்ற குலமாம் வைசியன் வண்ணமே தூம மாகும்
கதியரு ளிருடி யத்திரி கருதுமே யதிதெய் வந்தான்
விதிதலை கையிற் கொண்டோ னென்னவே விள்ளு நூலே.

...195

திட்டம்ப தாகக் கையிற் சேருமங் குட்டந் தன்னைச்
சட்டமாய் நீட்ட வர்த்த சந்த்ரனாம் விநியோ கங்கேள்
அட்டமிச் சந்தி ரன்பல் லாயுதங் கண்டத் திற்கை
இட்டுத்தள் ளவுந்தே வாபி டேகங்க ளுக்குந் தானே.

...196

பாத்திரங் களுக்கு மேவும் பவங்கட்கு மிடைக்க மென்ப
சாத்திய தியானங் கட்குந் தனக்குள்சிந் தைக்கு மென்பி
ராத்தினை களுக்கு மூணர் பால்நமஸ் காரங் கட்கும்
காத்திரன் தொடவு மேவுங் கரமர்த்த சந்த்ரன் றானே.

...197

தான்சர நோட்டம் பார்த்தற் றனிப்பாவங் கேள்வி கேட்டல்
வானுறு குயவன் கையால் மண்பிடித் திடலோ டொத்து
யானைக்கா தசைத்தல் வில்லி னடையாளங் காட்டப் பெண்கள்
கானமா மஞ்சட் பூசற் கண்ணாடி பார்த்தல் சொல்லே.

...198

சொல்லுவ ரிடைபி டித்தற் சூழுமாத் திரையைத் தள்ளி
புல்லிய தாள மொத்து போடுதல் பிரதிபிம் பத்தின்
வல்லிய வர்த்த சந்த்ர பாணத்தும் பொருந்து மென்று
கல்விசேர் பரத நூலோர் காட்டு மிவ்வாறு ணர்ந்தே.

...199

தெரியக்கை ரேகை பார்த்தல் திரிப்பதாங் கயிறு நூற்கும்
தரையிற்கை கூடு தற்குந் தலைசுற்றி யாடு தற்கும்
நெரிநெட்டி சுற்று தற்கும் நிகழ்த்துங் கர்ப்பூர தீபங்
கரமுகம் வைப்ப தற்கும் கதிரொளி பார்ப்ப தென்னே.

...200

என்னவே பண்டி தன்கை காட்டென நீட்டு தற்கும்
இன்னும் பாணத் திற்கை யிதமுட னீர்ப்புரோ க்ஷித்தல்
நன்னய மாகக் கண்ணா டிக்குப மான மென்பர்
கன்னியே அர்த்த சந்திரன் கைதனை யாய்ந்து ணர்ந்தே.

...201

ஆயந்தகன் னத்தில் வைக்கி லதுவேசிந் தனையாஞ் செல்வம்
தோய்ந்தமுன் கையில் வைக்கில் துலங்கிய கடக மேதான்
வாய்ந்தப வேஷ்டி தச்சீர் வைத்திடிர் புலிய தாகும்
காய்ந்தொளிர் கழுத்தில் வைக்கிற் கருதுப்ப சத்திற் கென்னே.

...202<

கருதுங்கா தருகே வைத்தால் காணுமாச் சரிய முந்திக்
கருகிடை மிடையிற் பூண்ட லம்பிய சதங்கைக் காகும்
பெருகிய மார்பின் கிட்டப் பிடித்திடத் தியான மாகும்
செருவிய புயத்தில் வைத்தாற் கருடனுஞ் சிறகு மாமே.

...203

ஓதிய முகத்தி னேரா யசைத்ததை யுறநி றுத்தத்
தீதிலாக் கதலி வாழை மரத்திற்குங் கலகத் திற்கும்
நீதிசேர் மூக்கின் முன்னே யசையாம லிருத்த நீழல்
போதவே யர்த்த சந்த்ரன் விநியோகம் பொருந்தும் பாரே.

...204

சிலிட்ட சந்திரன், யுக்த சந்திரன்.

பாரர்த்த சந்திர னிற்க னிவளைக்கச் சிலிட்ட சந்திரன்
கூர்சுங் கனுக்கென் றேசுக் கிரபர தத்திற் கூறும்
நேரணி வளைக்க யுக்த சந்திர னைந்தாம் பிறைக்கும்
ஊருத்தி ராடங் கெள்ளைக் கோதுமர்ச் சுனம தத்தே.

...205


இரேகா சந்திரன்

யுத்தசந் திரக்கை தன்னி லூருமத் திமைவ ளைக்க
முக்திசே ரிரேகா சந்திரன் உரைசனி திரிபு ரைக்கும்
பக்தியாங் கண்டா ராகம் பகர்சுக்ர பரதத் தேவி
யக்தவு ரைத்த சொல்லை யறிந்தபி நயிக்க வென்றே.

...206

மானேதற் சனியங்குட்ட நீட்டிமற் றதைம டக்க
மீனெனு மிரேகா சந்த்ர விநியோகம் விநயம் ஞானம்
மானமாம் கியாதி நன்மை நன்மையென் பதற்கும் வாழ்த்தும்
தேனேசந் திரக லாவாய்ச் செப்பின னிதைத்தா னந்தி.

...207


தலரேகா சந்திரன்

தகுரேகா சந்திர னிற்றற் சனியங்குட் டம்வ ளைத்தல்
மிகுதல ரேகா சந்திரன் விநியோக மீச விருக்ஷம்
அகத்திப்பூ வளையம் பின்ன மகமகிழ்ந் தருளு மாதே
இகத்தினி லொற்றைக் கொம்ப னியம்பினன் பரத நூலில்.

...208


அராள அஸ்தம்

இடுமிவ் வராளத் திற்கு மியல்பென்னும் பரத நூலில்
குடத்துதித் தோன்பாற் றோன்றும் குலமது பலவ தாகும்
கடுநிறம் வெள்ளை யாமக் கலசச்சே யிருடி யாகும்
தொடுமதி தெய்வ மப்பிற் றுயிலுமந் நெடியோ னென்றே.

...209

தயலே பதாகந் தன்னிற் றற்சனி தனைவ ளைத்த
கையரா ளமதே யாகும் விநியோகங் கருதக் கேளாய்
மெய்யுகந் தமுத பானம் விடபானங் களுக்கு மென்றும்
வையகத் திற்பிர சண்ட வாயுவிற் காகு மென்னே.

...210

நேமித்த பந்து மார்க்க நிர்த்தமாந் தராசு நிற்றற்
காமின்னஞ் சக்ர வாளப் பட்சிக்காம் காதில் வைக்கத்
தாமது போத னைக்கா மார்பினிற் பெருமை சாரும்
சேமமாய் நுதலில் வைத்தால் அமாவாசை யெனவே செப்பும்.

..211

சேர்த்தது நாபி தன்னில் வைத்திடல் நீர்ச்சு ழிக்காம்
பூர்த்தியாய் மார்பு நேரிற் புங்கித மாக வைக்க
நேர்த்தியாம் விழிய ணங்கே நிகழ்கூசி மார னாகும்
பார்த்துநீ யராளக் கையின் பகர்விநி யோக மென்னே.

...212


சிலிட்ட அராளம்

அராளமா மஸ்தந் தன்னி லடுத்தமத் திமைவ ளைக்கப்
புறாமுதற் பட்சி கட்காம் புகலுங்கொங் கணதே சத்தும்
பராவிய துசாவந் திக்கும் பகருமென் றனுமந் தன்றான்
நிராம யஞ்சி லிட்ட வராளமாம் நிகழ்த்தி னானே.

...213


8. சுகதுண்ட அஸ்தம்

இதம்பெறப் பரத நூலோ ரியம்பினர் சுகதுண் டந்தான்
உதித்தது துர்க்கை தன்னு ளுயர்குல மறையோ னாகும்
மதித்திடு நிறஞ்சி வப்பு வன்முனி தூரு வாசன்
எதித்திடு மதிதெய் வம்ம ரீசியே யாகு மென்றே.

...214

அகமகி ழராளந் தன்னி லநாமிகை விரல்வ ளைத்தால்
சுகதுண்ட வஸ்த மாகுஞ் சொல்விநி யோகங் கேளாய்
பகர்பண மெய்த லுக்ர பாவனை களுக்கு மற்றும்
மகிழுமுள் ளர்த்தங் கட்கு மர்மங்க டனக்கு மாமே.

...215

உக்கிர வுத்திரா கார முகந்தசொற் பகுத்துக் காட்டல்
தக்கதோ ரீட்டி கட்குஞ் சாளய நாட்டி யத்தும்
நிக்கபுங் கிதமாய் வைக்க நிகழ்பிண்டி பாலத் திற்கும்
மிக்கவா யுதங்க ளுக்கு மேவுமிச் சுகதண் டக்கை.

...216

தானக் கரமே நோக்கத் தததுண்ட நாய னுக்கும்
வானத்தைப் பார்த்த வஸ்தம் விரல்மணிக் கையோ டொத்துப்
பானுபோற் சுற்றி யாடல் பாஞ்சால புருட னுக்காம்
மோனமாஞ் சுகதுண் டக்கை விநியோக முறையி தாமே.

...217


சிலிட்ட சுகதுண்டம்

ஆகுமே சுகதுண் டத்தி லடிநுனி சேரா வண்ணம்
தாகமாய் மத்தி மத்தை வளைத்திடில் விருச்சி கந்தான்
எகமாங் கங்கை நீரில் எழில்மண்ணி லூர்ஜெந் துவிற்கும்
பாகமா யறிந்து கூறும் பயன் சிலிட்ட சுகதுண் டத்தே.

...218


பிரம சுகதுண்டம்

நிகடகா முகத்திற் றற்சனி யங்குட்டம் கூட்டிப் பிரம்ம
சுகதண்டம் விநியோகம் வைரி முதற்பக்கி கட்குச் சொல்லும்
அகமகிழ்ந் திவற்றை யெல்லா மம்பிகை யருளும் யானை
முகவன்றன் மதத்தில் நன்றாய் முழங்கிய தறிந்து கூறே.

...219


9. முட்டி அஸ்தம்

ஓதுமிம் முட்டிக் கைதா னுதித்தது மானி டத்தில்
நீதன்சேர் குலத்திற் சூத்திரன் நிறமது நீல் மாகும்
ஆதர வாமு ருத்திர னிருஷியா மதிதெய் வந்தான்
மீதுரை செய்யு நூலில் வீரபத் திரனா மென்றே.

...220

அங்குலி நாலையு முள்ளங் கையின் வளைத்த தன்மேல்
அங்குட்டம் வளைத்தால் முட்டி யஸ்தமாம் விநியோ கங்கேள்
தங்கிய திறங்க ளுக்குந் தலைமயிர் பிடிப்ப தற்கும்
திங்கள்மல் லர்கள் யுத்தம் சேலைகட் டுதற்கி யம்பே.

...221

இடுப்பொரு பிடியாங் கோப மீனர்கள் வந்த னத்தும்
பிடிவாத மென்ப தற்கும் பின்புசா திப்ப தற்கும்
நெடியமன் மந்தி ரிக்கும் பரசுநேர் பிடிப்ப தற்கும்
கொடியாங் கேத ஸ்தானங் குறிப்பிட மாகும் பாரே.

...222

பாருமே மார்பில் வைக்கப் பதருண்ட நாய னுக்கும்
சாருமே பலபொ ருட்கள் தனித்தனி பிடிப்ப தற்கும்
சேருமே பரத நூலிற் செப்பிடு புலன றிந்து
கூருமே முட்டிக் கையிற் குறித்தது விநியோ கம்மே.

...223


அர்த்தமுட்டி சிலிட்டமுட்டி

யோகமா முட்டி தன்னி லுள்நடு வங்குட் டத்தைத்
தாகமாய் நுழைய வைத்தல் சலத்தினுட் பறவைக் கெல்லாம்
ஆகுமே தற்ச னிக்குள் ளமைத்திடிற் பெண்கள் பூவாம்
பாகக்கை யர்த்த முட்டி பகர்சிலிட்ட முட்டிக் கையே.

...224


சங்கீர்ணமுட்டி

முட்டியில் மத்தி மத்தோ டணிகனி முன்பு நீளிற்
கெட்டிதுப் பாக்கி வாயி னுரல்கே ணித்துணைக ளுக்கும்
வட்டமாம் பரத நூலில் வகுத்திடு மேசங் கீர்ண
முட்டிக்கை யென்றே கோரட் சகன்மத முழங்கும் வாறே.

...225


10. சிகர அஸ்தம்

இச்சிக ரக்கை தோன்று மீசன்பார் குலங்கந் தருவன்
நச்சிலா நிறங்க றுப்பு நவிலுமே யிருடி யாக
அர்ச்சுன னாகு மென்றே யதினதி தெய்வ மாகிப்
பச்சைவில் லுடைய மார னென்னவே பகரு நூலே.

...226

உதவிய முட்டி அஸ்தத் துயரவங் குட்ட நீட்ட
இதமுறுஞ் சிகர மாகு மிதற்கினி வினியோ கங்கேள்
அதரத்திற் கும்வில் லிற்கு மாலிங்க னங்க ளுக்கும்
மதனுக்கு மிலிங்கத் திற்கு நிச்சய வரம்பிற் காமே.

...227

இல்லையென் பதுநி னைத்த லிளைத்தரூ பங்கள் நாதம்
பல்லுடன் பிதிருகர்மம் பக்கங்க ளிற்கு மென்ப
நல்லபி நயனா ரம்ப நாதஞ்சேர் மணிக ளுக்கும்
மெல்லிய ரிடையிற் கட்டி விரைந்திழுக் கவுந்தா னாமே.

...228

ஆமெனுங் குழல்வ குத்துக் கோதுத லைங்க ரற்கும்
நேமமால் வணங்கிக் கொட்டுங் கோபுரஞ் சிகர நேராம்
காமியர் லீலை தன்னில் நகக்குறி காட்டு தற்கும்
மாமலை வேலன் கையில் பிடித்திடும் வேற்கு மாமே.

...229

ஆனன நேராய் வைக்க வற்பனாம் புயனே ராகத்
தானது வைக்க நோய்த்த ததுண்ட நாய னுக்கும்
மானமாங் கண்ட நேராய் வைக்கச் சிநேக னாகும்
பூணுமே வியாவி ருத்தம் பரிவிருத்தம் பொருந்த வோட்டம்.

...230

பொருந்துகை மார்பு நேராய்ச் சலனமாய்ப் பிடிக்க வப்போ
வரிந்தோலை யெழுது தற்கும் வாகான வெழுத்தா ணிக்கும்
அறிந்துணர் பரத நூலோ ரருளிய சிகரக் கையின்
திருந்திய விநியோ கங்கேள் செப்பின ரெவருங் காண.

...231


அர்த்த சிகரம்

செப்பிய சிகரந் தன்னி லணிகனி சேர நீண்டு
நிற்பதூர்க் குருவிக் காகு நெய்காட் டுப்பு றாவும்
ஒப்பவே கோக ளன்றன் மதத்தினி லுதித்த நாமம்
எப்பவும் புகல்வா ரர்த்த சிகரக்கை யென்றி யம்பே.

...232


சங்கீர்ண சிகரம்

கூறுமுட் டியிலங் குட்டங் கொஞ்சமா யெடுத்தி டச்சங்
கீரணச் சிகர மாகும் விநியோகங் கழுகுக் கென்றும்
சீருறும் பரத நூலிற் செப்பின ருலகிற் காணப்
பேருறும் கோக ளன்ம தத்தினிற் பெரிதாய் மானே.

...233


11. கபித்த அஸ்தம்

சொல்லிய விக்க பித்தந் தோன்றுமே மாலி டத்தில்
புல்குல மிருடி வண்ணம் புகலுமே வெண்சி வப்பு
அல்லிலா விருடி நார தன்னதி தெய்வ மாகும்
வில்லெனும் பிரம னென்றே விண்டனர் பரத நூலோர்.

..234

இச்சையாஞ் சிகரந் தன்னி லிலங்கும் குட்டந் தன்னைத்
தர்ச்சினி யுடனே சேர்த்த தாகுமே கபித்த வஸ்தம்
லட்சுமி பார்வ திக்கும் நீள்வலை வீசு தற்கும்
பச்சமாய்ச் சித்தி ரம்போற் படமெழு திடவே யாகும்.

...235

விரும்பிய தூப தீபம் வெட்டெனுந் தாளங் கட்கும்
பிரம்புகள் கவரி யால வட்டத்தைப் பிடிப்ப தற்கும்
நிரம்புமா லாத்தி யேந்த லெழுத்தாணி தீட்டு தல்நேர்
இருபுறங் காட்டு கின்ற கயிறது பிடிப்ப தென்னே.

...236

தெருவில்லுண் டைகள் தராசு துலாக்கோல் களைப்பிடித்தல்
பரகூசி துண்டி பிண்டம் பசுமுலைப் பால்க றத்தல்
விரசுள்ள நெசவு நூலைப் பிடித்திடல் விரல்நி மிர்த்தல்
இறைப்பது தானி யத்து மிபத்துக் கோல்பி டித்தல்.

...237

பிடிஜப மாலை தன்னைச் செபித்தலு மோலை தன்னைப்
பிடித்ததை வாரு தற்கும் பின்புவாத் தியமு ழக்கம்
அடிமுர சாதி கத்தி னதின்வாரைத் தொட்டி ழுத்தல்
வடித்தமுக் காடு போடல் மலர்ச்செண்டு தரிப்ப தாமே.

...238

ஆக்கவே வதன நேராய் வைக்கவா கரிஷ ணத்தாம்
பார்க்கவே புகைபா ணத்துப் பகர்நெற்றி சமயங் காலம்
நோக்கவி ரண்டு கையால் நுவலிடி வருண னுக்காம்
ஏற்கவே கபித்தக் கையின் விநியோக மென்றி யம்பே.

...239

சிலிட்ட கபித்தம் அர்த்த கபித்தம்

இயம்புங்க பித்தந் தன்னி லெழுகனி விரலை நீட்ட
நயம்பெறுங் குயிலுங் கிள்ளை நவிலுமா ளவதே சத்தும்
செய்லிட் டக்க பித்தஞ் சேரணி விரலை நீட்டும்
கையர்த்த கபித்த நாண வந்தான்கா னாங்கோ ழிக்கே.

...240

தெலுங்கெழு தெழுத்தா ணிக்கை பிடித்திடல் மைனா விற்கும்
நலுங்கிடற் கோலம் போடல் நாட்டிய காகங் கோழி
சலங்களிற் றிரியும் நாரை கொக்குநீர்க் காக முந்தான்
நிலந்தனிற் காட்டு மர்த்த கபித்தக்கை நிகழ்த்தி னாரே

...241


12. கடகாமுக அஸ்தம்

கடகாமு கந்தோன் றும்பார்க் கவனிடங் குலத்திற் றேவன்
திடமுறும் வண்ணஞ் செம்பொன் செப்புமே யிருடி பார்த்தன்
மடலவிழ் குழலி னாளே வழுத்துமே யதிதெய் வந்தான்
முடிபெறு மிராம னென்றே மொழிந்திடும் பரத நூலே.

...242


தங்குக பித்தக் கையிற் றற்சனி மத்தி மத்தோ
டங்குட்டந் தன்னை நீட்ட வதுகட காமு கந்தான்
பொங்கமாய்ச் பேசு தற்கும் பூவிற்கும் பார்வை கட்கும்
துங்கமாம் நாணி லம்பு தொடுத்திழுத் திடவு மாமே.

...243

திடமுடன் மலர்கள் கொய்தல் செம்பொனா பரணஞ் சார்த்தல்
நடைபாத சாரி நாட்யம் நவிலுந்திட் டாந்த ரத்தும்
அடைவுடன் சுருள்கொ டுத்தல் அடுப்புப்பே னாப்பி டித்துக்
கடுதாசி யெழுது தற்குங் காணலாஞ் சுவாதி முத்தி.

...244

முத்துரத் தினங்க ளுக்கு மோகநாக வல்லி கட்கு
முத்திராங் கிதங்க ளுக்கு முதிர்ந்தவா சங்க ளுக்கும்
கத்தூரி யாதி யாகக் கமழ்வஸ்துச் சிமிழ்த னக்கும்
கைத்தா லேகாட் டுங்கட காமுகக் கையி தாமே.

...245

சிலிட்ட கடகாமுகம்

கடகாமு கக்கை தன்னிற் கனியணி விரல்கள் நீட்டி
வடிவுடன் மத்தி மத்தை வளைத்திட லுமைய வட்கும்
பிடித்தெழு தோலை கையிற் பிடிசெண்டு தந்தி மீட்டல்
கடிவாளம் பிடிக்கச் சிலிஷ்ட கடகாமு கக்கை யாமே.

...246

இரத்ன கடகாமுகம்

கடகாமு கத்திற் றற்ச னியைக்கூட்டிக் காட்ட ரத்ந
கடகா முகக்கை யாகுங் கருதிய விநியோ கங்கேள்
கொடியிடை யாளே யட்ட வசுக்களுக் கெனவே கூறும்
திடமுள நார தன்ம தத்தினிற் றேர்ந்து பாரே.

...247

சூசி அஸ்தம்

பேணுமிச் சூசிக் கைதான் பிரமதே வன்பாற் றோன்றும்
நாணிலாக் குலத்திற் றேவன் நன்மைசேர் நிறமாம் வெள்ளை
தோணுமே யிருடி யாகச் சூரிய னதிதெய் வந்தான்
வீணிலா விசுவ கர்மன் என்னவே விள்ளு நூலே.

...248

கடகாமு கக்கை தன்னிற் கருதுந்தற் சனியை நீட்டத்
திடமுறு சூசி யென்று செப்பினர் விநியோ கங்கேள்
படருமோ ரர்த்தத் திற்கும் பரப்பிரம்ம பாவ னைக்கும்
அடர்நூ றிலக்க மோசை யாதவ னுக்கு மாமே.

...249

அதுவது வென்ப தற்கு மாச்ச ரியங்க ளுக்கும்
எதுவோவ தென்ப தற்கு மிசைகொள்நா மாவ ளிக்கும்
கதிக்கப் பல்விளக்கு தற்குங் காரிகா லீலை கட்கும்
துதிநிலத் தெழுது தற்குந் தோன்றுதா டனஞ்சக் ரத்தும்.

...250

சக்கரஞ் சுழற்றல் வட்டச் சடைதனத் தவிட மாலை
உக்கிரந் தானி ளைத்த வுடல்பிரித் திடமுன் மூக்கு
மிக்கதுந் துமிய டித்தல் வேளான்மண் டிரிகை வண்டில்
தக்கவூ ருலகம் வெய்யிற் றங்கிய குடைக்கு மென்ப.

...251

பக்கத்தி லுயர மாகப் பகர்கை சாய்ந்திடரா விற்கும்
நிற்குங்கை புங்கி தத்தால் நீநீர்நீங் களென்ப தற்கும்
அக்கியம் பரிவிருத் தத்தா லவளவ னவரா மென்ப
சக்கிய வதோமு கத்தாற் சாற்றுநாம் நாங்க ளென்றே. .

..252

என்றகை நெஞ்சில் வைக்கச் சத்திய வசன மிய்யும்
நின்றவ யிற்றி லாட்ட மயிர்க்கூச்சல் நேர்தூக் கிச்சு
ழன்றிடி லுருளை யாகுஞ் செவிக்குநேர் குண்ட லத்து
நன்றென விநியோ கத்தால் நாட்டிய சூசி யாமே.

...253

அர்த்த சூசி

இருந்ததோர் கபித்தந் தன்னி லலகுதற் சனியை நீட்டத்
தெரிந்திடு மர்த்த சூசி செப்பினர் விநியோ கங்கேள்
பெரும்புழு முளைக ளுக்கும் பேசிய பட்ச பாதம்
சிறந்திடு மர்த்த சூசிக் கையெனச் செப்பு மாதே.

...254

வக்ரசூசி

மாதேகேள் சூசி தன்னிற் றற்சனி வளைக்கு மாகில்
நீதியாம் வக்ர சூசி நிகழ்த்துங்கை விநியோ கங்கேள்
காதினி லணிய வாணைக் கரியஸ்த மென்றும் தைக்கும்
போதூசி பிடிப்ப தற்கும் பொருந்துமென் றுரைசெய் மானே.

...255


14. பதுமகோச அஸ்தம்

பதுமகோ சக்கை தோன்றும் பரந்தாம னிடங்கு லந்தான்
மதியுள வியக்கன் வண்ணம் வெண்மையா யிருடி வாழ்த்தும்
விதியென மதிதெய் வந்தான் விள்ளும்பார்க் கவனா மென்று
சதிர்பெறு பரத நூலோர் சாற்றினர் முறைதெ ரிந்தே. ...256

அங்குலி தனைப்ப ரப்பி யைவிரல் நுனிவ ளைத்த
செங்கைதான் பதும கோசஞ் செப்பினர் விநியோ கங்கேள்
பங்கய மலருக் குஞ்செம் பரத்தம்பூ விற்கும் பெண்கள்
கொங்கைக்கும் பந்ுக் கும்பூங் கொத்துக்கும் மணிக்கு மாமே.

...257

மாம்பழங் களுக்கும் புஷ்ப வருஷங்க ளுக்கு நல்வி
ளாம்பழங் களுடன் வில்வப் பழமுதற் கனிக ளுக்கும்
பூம்பந்து களுக்கு மற்ப போசன விதானங் கட்கும்
தூம்படர் பூத்து வட்டந் துலங்குமுட் டைக்கு மாமே.

...258

என்பதோ முகமாய் வைக்க வேனுகத் தும்பிக் கையாம்
நன்புமுத் வேஷ்டி தத்தால் நவிலலா மின்ன லுக்கு
செம்பொடு வெள்ளி தங்கப் பாத்திரங் கட்குங் கிண்ணி
சம்பும்வி யாவி ருத்தம் பாவிருத்தஞ் சக்கர வாளம்.

...259

ஆழிக்கும் கப்ப ரைக்கும் வளர்கபா லங்க ளுக்கும்
நாழிமி டாக்க ளுக்கு நற்றொன்னை சகோரத் திற்கும்
பாழிலாத் தேங்காய் தாளம் பழத்துக்கும் பஞ்சா னிக்கும்
தோழியே பதும கோசஞ் சொல்விநி யோக மாமே.

...260

சிலிட்ட பதுமகோசம்

வருபது மகோசக் கையில் நுனிவிர லுள்ம டக்கில்
தருசிலிட் டபது மகோச மாமுப மானந் தானும்
அருமையாங் குட்ட ரோகம் ஐந்தலை நாக மென்பார்
விரிதலை கோது தற்கும் விளம்பினர் பரத நூலோர்.

...261


15. சர்ப்ப சீர்ஷ அஸ்தம்

சர்ப்பசி ரக்கை தோன்றுஞ் சக்கரக் கையன் றன்பால்
கற்பதாங் குலத்திற் றேவன் கடுநிறம் மஞ்ச ளாகும்
துப்புறு மிருடி வாச வன்சொலு மதிதெய் வந்தான்
செப்பெனு முலையி னாளே சிவனென்னச் சொல்லு நூலே.

...262

விரைசேர்ப தாகந் தன்னுள் விரல்களை வளைத்தாற் சர்ப்ப
சிரவஸ்த மாம தற்குச் செப்பினர் விநியோ கங்கேள்
அரவிற்கு மந்தத் திற்கும் யானைமத் தகங்க ளுக்கும்
மருவுசந் தனங்க ளுக்கு மல்லர்தோள் களுக்கு முன்னே.

...263

உன்னிய முனிவர் தேவ ருதகதா னங்க ளுக்கும்
தன்னிருப் பிடம்பு ரோக்ஷ ணங்களா தரவு கட்கும்
மின்னலே பானை வாத்யம் மிருகத்தின் செவிகள் தோணி
கண்ணிய மாக வேறுங் கரிபரி தட்டு தற்கே.

...264

தகைக்குத்தண் ணீர்கு டித்த லிலச்சையாய் முகம றைத்தல்
சிகைக்குநற் றயிலம் வாங்கல் சிறங்கையா லள்ளு தற்கும்
பகைவரைக் கெலித்து முண்டாத் தட்டுதல் படமே ழுதுதல்
குகைக்கும் பெண்குறிக ளுக்குங் குழவியேந் தற்கு மாமே.

...265

ஆட்டுக்க லாட்டு தற்கு மம்மிக்கல் லரைப்ப தற்கும்
கூட்டிய வாசல் தன்னைச் சாணநீர் தௌிப்ப தற்கும்
நாட்டியே கோலம் போடல் நடைகிண றிறங்கு றற்கும்
காட்டிய சர்ப்ப சீர்ஷக் கையென்று ரைக்கு நூலே.

...266

சலனசர்ப்ப சிரம்

பிசகாமற் சர்ப்ப சீர்ஷம் பிடித்துப்பெ ருவிர லாட்ட
விசையெனுஞ் சலன சர்ப்ப சிரமாகும் விநியோ கங்கேள்
பசையுள மெழுகு மையுங் களைசோத னைக்குப் பற்றும்
நிசமென நார தன்ம தத்தினி னிகழ்த்து மானே.

...267

மிருகசீ ரிடமே தோன்றும் விமலிபால் முனிக்கு லாத்தாம்
வறுமைதீ ரமுத வண்ண மிருடிய தாமார்க் கண்டன்
பொறுமைசே ரதிதெய் வந்தான் புனலணிந் தோனே யாமென்
றுறுதியாய்ப் பரத நூலோ ருரைத்தனர் முறைதெ ரிந்தே.

...268

அரிசர்ப்ப சிரக்கை தன்னி லங்குட்டங் கனியை நீட்ட
மிருகசி ரக்கை யென்று விளம்பினர் விநியோ கங்கேள்
திரிபுண்ட ரத்திற் கும்நற் றிரைகளுக் கும்ப டிக்கும்
கரமரி யாதை கட்குங் கபோலங்க ளுக்கு மென்ப.

...269

பாதவிந் யாசங் கட்குப் பண்பான பெண்க ளுக்கும்
நாதங்கட் குஞ்சு வர்க்கு நல்லிருப் பிடங்க ளுக்கும்
தாதுகை பிடிப்ப தற்கு முகசலம் வழிப்ப தற்கும்
கோதியே வகுப்ப தற்குங் குறிவழி காட்டற் காமே.

...270

காலுகை குத்து தற்குங் கதிக்கநீ றணிவ தற்கும்
கோலமா விடுவ தற்குங் குடைக்கும்வி வாதங் கட்கும்
சீலனை யழைப்ப தற்குஞ் சிலைமதன் கிரகத் திற்கும்
வாலிபர் கும்மி கொட்டல் விலங்கின்றன் வதன மாமே.

...271

விண்டகை முகநே ராக்க மெள்ளப்பே சென்ப தற்கும்
பண்டுநெஞ் சதனில் வைக்கப் பகர்சிவ லிங்கத் திற்கும்
கொண்டுகண் கடையில் வைக்கச் சைக்கினை வெட்கத் திற்கும்
நண்டிய சிறுபிள் ளைக்கு னாபியில் வைத்துக் காட்டே.

...272

காட்டுங்கைப் பக்கம் நேரிற் காணலாம் யௌவ னஸ்திரீ
வாட்டமில் லாவ யிற்றில் வைத்திடப் பதுமி னிக்காம்
நாட்டிய சித்தி னிக்கே நன்மார்பு புயனே ராகச்
சூட்டுதற் சங்கி னிக்காஞ் சொல்நெற்றி யத்தி னிக்கே.

...273

சிலிட்ட மிருகசிரம்

திறமிரு கசிரந் தன்னிற் சிறுவிரல் வளைத்து நீக்கி
உரமதாய்ப் பிடிப்ப தற்கே யுரைக்கலாங் கோலிக் குண்டு
தரையிற்கை தள்ளு தற்கும் தாஷ்டகே னென்ப தற்கும்
பருசிலிட்ட மிருக சீரி டக்கையாய்ப் பகர லாமே.

...274

முஷ்டிமிருகசிரம் சங்கோசமிருகசிரம்

செகமிரு கச்சி ரத்திற் சீறுவிர லுள்வ ளைக்கத்
தகும்விநி யோகங் கொண்டு சங்கோச மிருக மென்றே
நிகழுமுட் டியிற்க னிட்டாங் குட்டத்தை விரித்து நீட்டப்
புகழ்முட்டி மிருக மீதுப் புல்கலை மானுக் கென்னே.

...275


17. சிம்மமுக அஸ்தம்

இச்சிம்ம முகமே தோன்று மினியதக் கன்பாற் சாதி
மெச்சிய வேத னாகும் நிறமது வெள்ளை யாகும்
பச்சமா மிருடி வேந்தன் பகர்ந்திடு மதிதெய் வந்தான்
நச்சுடைக் கழுத்தோ னென்றே நவிலுமிப் பரத நூலே.

...276

அநாமிகை மத்தி மத்தோ டங்குட்ட நுனிகூட் டித்தற்
சனிகனிட் டிகையி ரண்டுந் தனித்தனி பரப்பி நீட்டில்
இனியசிங் கமுக மீதிற் கனியிதின் விநியோ கங்கேள்
வனிதையே வோம மானை மான்முய லுக்குந் தானே.

...277

தாதுசோ தனைக்குஞ் சிங்கா சனத்திற்குந் தருப்பை கட்கும்
ஓதுதா மரைம ணிக்கு முரைபசு மேடம் பாகம்
நீதியாய்ப் பார்ப்ப தற்கு நிகழ்புங்கி தமதாய் வைத்த
போதது இடபத் திற்கு மார்புற மோக்க மாமே.

...278

சிலிட்ட சிம்ம முகம்

சிங்கமு கக்கை தன்னிற் சிறுவிரல் வளைக்க மேலாம்
திங்கள்சேர் முனிக லைக்கோட் டின்னுப மானத் திற்கும்
கங்கைநீ ரருவி கட்குங் காணுமொற் றைக்கொம் பன்வி
லங்குகள் முகந்த னக்குஞ் சிலிட்டசிங் கமுகக் கையே.

...279

வக்கிரதந்த சிம்மமுகம். சங்கீர்ண சிம்மமுகம்

சிலிட்டசிங் கமுகக் கையிற் சேர்ந்ததற் சனிவ ளைத்து
மெலிதாய் நிற்கக் கூழைக் கிடாய்முதல் மிருகத் திற்கும்
நலிவக்கி ரதந்த சிங்க முகக்கையாம் கீழே நோக்கில்
எலியணில் முகமுஞ் சூர்சங் கீர்ணசிங் கமுக மேற்கும்.

...280

தலசிம்ம முகம்

பலசிம் மமுகக் கையிற் பெருவிரல் நீட்டி நின்றால்
தலசிம் மமுகக் கையாகுங் தங்குப மானந் தானும்
வலிய காண்டா மிருகம் வனக்கிடாய்க் கொம்பு கட்கும்
நிலைமையாய்ச் சார்ஞி தேவர் நிகழ்த்தினர் பரத நூலில்.

...281


18. காங்கூல அஸ்தம்

இசையதாம் காங்கூ லஞ்ச னித்தது சிவனி டத்தில்
வசையிலாக் குலத்திற் சித்தன் வண்ணமே பொன்மை யாகும்
அசைவிலா விருடிக் கந்த னாகுமே யதிதெய் வந்தான்
பசையுள கமல மாது என்னவே பகரு நூலே. .

..282

பதுமகோ சக்கை தன்னிற் பகரநா மிகைவ ளைத்தால்
இதுகாங் கூலக் கையா மிதற்கினி விநியோ கங்கேள்
அதோமுக மாக வைக்கக் கணிசமா மட்டந் தன்னில்
இதுகனி நவ்வற் கொவ்வை முந்திரிக் கனிமு கஞ்சேர்.

...283

சிறுதனங் கொட்டைப் பாக்குத் தேங்காயாம் பற்பூ விற்கும்
சிறுபொருள் சகோர பட்சி சிறந்தசா தகப்பட் சிக்காம்
சிறுகிண்கி ணிக்கு மெலுமிச் சம்பழங் களுக்கு மென்று
அறியவே காங்கூ லக்கை யாமென்று விளம்பி னாரே.

...284

சிலிட்டகாங்கூலம்

விளம்பிய காங்கூ லத்திற் றற்சனி விரல்வ ளைக்க
வளம்பெறு வியாத னுக்கும் வகுத்தன ரன்றி லிற்கும்
விளம்பதாய்ச் சுக்கி ரன்றன் பரதத்திற் றேர்ந்து நன்றாய்
வௌிப்படச் சிலிட்ட காங்கூ லம்மென வுரைத்தார் மின்னே.

...285

சங்கீர்ண காங்கூலம்

உரைபத்ம கோசந் தன்னில் மத்திம முள்வ ளைக்க
நிறைந்தசிந் தாம ணிக்கு நிகழ்வது மாத விக்கும்
பிரகற்பதி யின்ம தத்திற் பேசுமிக் கைநா மத்தைக்
குறித்த னர்சங் கீர்ண காங்கூ லாமென் றுமின்னே.

...286


19. அலபதும அஸ்தம்

அலபல்ல வந்தான் றோன்று மரியிட மதின்கு லந்தான்
துலையிலா திலகு மேகங் துருவனன் னிறமே பச்சை
நிலைமையா மிருடி யேவ சந்தனா மதிதெய் வம்நேர்
குலவுமா தித்த னென்றே கூறுமிப் பரத நூலே.

...287

விரலைந்தும் வளைத்து நீட்டி வேறுவே றாய்ப்பி டித்த
கரமல பதுமக் கையாங் கருதியே விநியோ கங்கேள்
விரகங்கண் ணாடி வட்ட மேல்வீடு முலைக ளுக்கும்
இரதமூர் பூர்ண சந்த்ர னெழில்குளங் களுக்கு மாமே.

...288

கொண்டைகெம் பீரங் கர்வங் கோபங்கூக் குரல்ம லர்ந்த
முண்டகப் பூக பித்த முதலான கனிக ளுக்கும்
வண்டில்கொண் டாட்டம் சக்ர வாகமாம் சப்தத் திற்கும்
எண்டிசை புகழும் பந்து நிருத்தமு மழகுக் காமே.

...289

அழகுடன் நாபி தன்னி லமைத்திட விகாரத் திற்கும்
வளம்பெறு முகநே ராக வைக்கவித் தனைதா னென்றும்
தளம்பதி சுபசந் தோஷ மதன்புய னேரி னிற்பாம்
தௌிந்தகை சிரத்தின் மீதிற் சேர்த்திடக் கிரீட மாமே.

...290

சிலிட்ட அலபதுமம்

நோக்கல பதுமக் கையில் நுனிகனிட் டிகைவ ளைக்கத்
தாக்கிய பனைசா கைக்கும் பருத்ததன் னியனு னிக்கும்
சூக்குமக் கயிறு தனக்கு மோதத்தின் சூசனத் திற்கும்
பார்க்கவே யிதுசி லிட்ட வலபதுமக் கையிதாமே.

...291


20. பாண அஸ்தம்

கருதுமிப் பாணந் தோன்றுங் கந்தன்பார் குலத்திற் பார்ப்பான்
நிறமது கறுப்ப தாகு மிருடியே நிமல னோதும்
அருமைசேர் மொழியி னாளே யதிதெய்வங் கந்த னென்றே
பெருமையாய்ப் பரத நூலோர் பேசினர் முறைதெ ரிந்தே.

...292

பகர்முட்டி கனிட்டமது நீட்டலாகும்
பாணக்கை விநியோக மயிர்தி ருத்தல்
அகல்கலப்பை திருத்தியுழல் நந்திநாட்டியம்
ஆரென்னுஞ் சங்கைக்கா வுடையா ருக்கும்
தகைமையிலா வேர்வைதனைத் தெறித்தலோடே
தாக்குமே கெண்டிச்செம் பிற்கு நீண்ட
நகங்களினாற் கிள்ளியதைக் குறிப்புக்காட்ட
லாகுமென வுரையாக நவிலு நூலே.

...293

சங்கீர்ணபாணம்

அங்குட்ட மத்யங் கூட்டி யநாமிதற் சனிவ ளைத்துத்
தங்குக னிட்டம் நீட்டிற் சங்கீர்ண பாண மாகும்
சங்கைதீர் விநியோ கங்கேள் காமதே னுவிற்காய்ச் சாற்றும்
பொங்கிய வானோர்க் காசான் மத்தினிற் புகன்றான் பாரே.

...294


21. பிரமர அஸ்தம்

இப்பிர மரக்கை தோன்று மேலக்கா சிபனி டத்தில்
செப்பிய குலத்திற் றேவன் திகழ்நிறம் பச்சை யாகும்
ஒப்புடை யிருடி யாக வுரைத்திடுங் கபில னென்றே
துப்புறு மதிதெய் வந்தான் கருடனாஞ் சொல்லு நூலே.

...295

மத்தியமங் குட்டங் கூட்டி மன்னுதற் சனிவ ளைத்து
மத்தவி ரண்டு நீட்ட வரும்பிர மரக்கை யாகச்
சுத்திய பிரமரத் திற்குஞ் சுகங்கட்குங் கூடு தற்கும்
குத்தமில் சராச ரங்கள் கோகிலா திகட்குந் தானே.

...296

தாநகம் வளைத லுக்குந் தங்கிய தும்பி கட்கும்
கானகப் பட்சிக் கெல்லாக் கருத்தறிந் துவமா னத்தும்
மோனமாம் யோகி கட்கு முகந்ததி தானத் திற்கும்
ஆனதோர் பிரம ரக்கை யின்விநி யோக மாமே.

...297

சிலிட்டபிரமரம்

சொல்லிய பிரமரக் கையிற் கழித்தநா மிகைவ ளைக்கக்
கல்லினுட் டேரை கட்கு முட்டையின் குஞ்சு கட்கும்
துல்லிபங் குளவிக் கூண்டு சொல்சிலிட் டபிரம ரக்கை
வல்லப விநியோ கத்தை வகுத்தனர் பரத நூலோர்.

...298

பூருவபிரமரம்

தாரம முசாசி யத்திற் றற்சனி வளைத்த கையே
பூருவ பிரமர மாகும் புகலுமிவ் விநியோ கந்தான்
கூர்பிர மத்திற் குள்ள குணமதா மிதனை நந்தி
சாரும்பி ரமரக் கையாய்ச் சாற்றின ரறிந்து கொள்ளே.

...299


22. சந்தம்ச அஸ்தம்

சந்தம் சந்தா னென்றுஞ் சரசுப தியினி டத்தில்
விந்தைசேர் குலம தாகும் வித்தியா தரனவ் வண்ணம்
அந்தமாம் வெண்சி வப்பு யிருடிவி சுவாவ சுவாகும்
உந்தகொள் ளதிதெய் வம்வால் மீகனென் றோது நூலே.

...300

விடுத்திடு பதும கோசம் விரலைந்தும் வெவ்வே றாக
அடிக்கடி பரப்பிக் கூட்டி லதுதான் சந்ம் சம்மாம்
கொடுப்பது பலிதா னங்கள் கூறுமர்ச் சனையைந் திற்கும்
அடுப்புள் பிராண னுக்கும் மனப்பயங் களுக்குந் தானே.

...301

பயமுறும் பெருவ ழக்குப் பந்திமுத் துத்தி ராட்சம்
நயவச னங்க ளுக்கும் நல்வெள்ளிக் குளிகை காட்டல்
மெய்ப்புண் புளகங் காட்டல் விரிமல்லி கைக்கும் வாச
மயமுறு நாசி நாடும் வளர்நெஞ்சு சிந்த னைக்காம்.

...302

சிலிட்டசந்தம்சம்

சந்தம்ச வத்தந் தன்னில் நடுவனா மிகையைத் தாங்கி
முந்தவே மடக்கிக் காட்டச் சிலிட்டசந் தம்ச முன்னே
நந்தையாம் நண்டு தேளு நட்டுவக் காலி கட்காம்
இந்தக்கை பரதந் தானு மியம்புங்கற் கடக மென்றே.

...303


23. தாம்பிரசூட் அஸ்தம்

துடியுள தாம்பிர சூடம் சுருதியிற் பிறப்பாஞ் சாதி
திடமுள தேவ னாகுஞ் சிறப்புடை நிறமாஞ் சங்கு
முடிபெறு மிருடி விண்ணோர் முதல்வனா மதிதெய் வந்தான்
வடிவுள வமரற் காசா னென்னவே வழுத்து நூலே.

...304

தாங்கிய முகுளந் தன்னிற் றற்சனி தனைவ ளைத்தல்
ஆங்கது தாம்பிர சூட மதற்கினி விநியோ கங்கேள்
ஓங்கிய கோழி காக்கை ஓலையி லெழுது தற்கும்
பாங்குறு மோர்பூ விற்கும் பாலர்க ளுக்குந் தானே.

...305

மதாந்திர தாம்பிரசூடம்

முட்டியிற் கனியங் குட்ட மோதிப்பின் னீக்கிக் கூட்ட
ஒட்டகை குதிரை கட்கு முபமானம் பசுவும் செப்பும்
வெட்டுமின் னட்டாம் பூச்சி மேவும ழைத்து ளிக்கும்
திட்டந்தூள் சொக்கு மதாந்திர தாம்பிர சூடக் கையே.

...306


24. முகுள அஸ்தம்

வளருமிம் முகுளந் தோன்று மாருதி யிடத்திற் சாதி
வளம்பல வாக நிற்கும் வண்ணமே கபில மாகும்
அளவிலா விருடி கந்த னாகுமே யதிதெய் வந்தான்
புளகித முலையி னாளே யிந்துவாய்ப் புகலு நூலே.

...307

விரனுனி யைந்துங் கூட்டி மின்னுங்கை முகுள மாகும்
பரிவுறு போச னங்கள் பஞ்சபா ணங்க ளுக்கும்
வருநீல மலருந் திக்கும் வாழைப்பூ விற்கும் மென்ப
தருபுகழ் முத்தி ராதி தாரணத் துக்குந் தானே.

...308

அர்த்தமுகுளம்

முகுளவஸ் தத்திற் றற்ச னியுமத்தி மையு முன்னாகச்
சிகமதை நீட்டிக் காட்டத் தேசாட்சி ராகத் திற்கும்
மிகுவாழை மாமர நொச்சி விதித்த வனுமா னத்தில்
பகுத்ததைச் செப்பு மர்த்த முகுளக்கை யென்னும் பண்பே.

...309

சிலிட்டமுகுளம்

அர்த்தமா மகுளந் தன்னி லணிவிரல் நீண்டு மற்றத்
தற்சனி மத்தி மத்தைச் சார்ந்துமுன் னங்குட் டத்தோ
டொத்திவே டர்கு றிக்கு முயர்பிண்டி பாலத் திற்கும்
கொத்தினிற் பிரித லுக்குங் கூர்சிலிட்ட முகுளந் தானே.

...310

கண்டமுகுளம் : முட்டிமுகுளம்

வளருமே முகுளந் தன்னிற் றற்சனி வலிதாய் நீட்ட
விளைகண்ட முகுள மாகும் விநியோகம் பெருச்சா ளிக்காம்
குளைமுட்டி மத்தி மாங்குட் டம்முட்டி முகுள மாகும்
வளமைசேர் விநியோ கந்தான் வகுத்தனர் குரங்கிற் கென்றே.

...311

மத்திமமுகுளம் - சந்தம்சமுகுளம்

குத்துமுட் டியில நாமி யங்குட்டம் பொருத்தக் கூட்டில்
மத்திம முகுள மாகும் விநியோகம் பூனை வாழ்த்தும்
நித்தவண் டிகளிலங் குட்டந் தற்சனி வளைத்துக் காட்ட
முத்தென வளர்சந் தம்ச முகுளங்கா கத்திற் கென்னே.

...312

பிரதேசமுகுளம்

முகுளத்திற் கனிவ ளைத்தாற் பிரதேச முகுள மாகும்
தகும்விநி யோகஞ் சாற்றுஞ் சாரசப் பட்சிக் கென்று
நிகமஞ்சேர் சோம நாத னிகழ்த்தின னிவற்றை யெல்லாம்
மகிமைசேர் மொழியி னாளே மனதுணர்ந் துரைசெய் வாயே.

...313


25. சதுர அஸ்தம்

கருதுமிச் சதுரக் கையே காசிப னிடத்திற் றோன்றும்
பெருகுலம் பலவ தாகும் பேசுஞ்சித் திரவண் ணந்தான்
இருடியாம் வால கில்ய னிதற்கதி தெய்வ மாகும்
கருடனா மென்றே நூலோர் கருதுவர் முறைதெ ரிற்தே.

...314

அங்குட்டந் தனைவ ளைத்த நாமிகை யடியிற் கூட்டித்
தங்குமத் திமம நாமி தற்சனி மூன்றுங் கூட்டி
அங்கனிட் டிகைமுன் னீட்டி லந்தக்கை சதுர மாகும்
இங்கினி வினியோ கங்க ளியம்பின ரிசைவல் லோரே.

...315

கத்தூரி தங்கஞ் செம்பு காரீய மிரும்பு கட்கும்
பித்தளை வதனம் வர்ண பேதங்கள் கண்க ளுக்கும்
சத்திய மிரச பானஞ் சரசம்நெய் யெண்ணெய் மெல்ல
வைத்திடு நடைக ளச்சம் வருங்கொஞ்சப் பொருட்கு மாமே.

...316

பொருந்திய செவிநே ராக்கக் கம்மலா மார்பு நேராய்த்
திருந்தம னவவதா னத்தின் திகழ்வெள்ளை பச்சை யாதி
வருணபே தங்க ளோடே யடையாளம் வகுத்துச் சொல்லும்
குருவினாற் றெரிந்து காட்டக் கொளுஞ்சது ரக்கை யென்னே.

...317

அர்த்தசதுரம்

சதுரக்கை மத்தி மத்தில் நுனிவரை யங்குட் டந்தான்
இதமுடன் கூட்டிச் சேர்த்தா லிந்தோளி ராகத் திற்கும்
கொதிநீர்நெய்த் துளிக ளுக்குந் துரிதவி ராமத் திற்கும்
பதியது மான்ம தத்திற் பகரர்த்த சதுரக் கையே.

...318

கண்டசதுரம்

சதுரம தாகுங் கையிற் றற்சனி நீட்டிற் கண்ட
சதுரமாம் விநியோ கங்கோ ரோசன மமுதம் பூதி
துதிபெறு சிவப்பு ரத்னந் துலங்கிய பாதிக் காமென்
றிதமுடன் யாஞ்ய வல்கன் மதத்தினி வியம்பு மின்னே.

...319

சர்ப்பசதுரம்

சரர்ப்பசீ ருடக்கை தன்னி லநாமிகாங் குட்டந் தன்னில்
நிற்பதா முபமா னந்தான் நிகழ்சர்ப்ப சதுர மென்பர்
கற்பனை மதுபா னங்கற் பூரஞ்சூ தம்நெய் போஜ
னப்பிரிய கறிப தார்த்தம் நவிலுமே விநியோ கத்தே.

...320


26. அம்சாரியஅஸ்தம்

துலங்குமம் சாசி யக்கை தோன்றுமே சிவனி டத்தில்
மலங்கலில் லாக்கு லத்தில் மறையோனா நிறம் வெளுப்பு
துலையிலா விருடி யாகுஞ் சுக்கிர னதிதெய் வற்தான்
மலரவ னாகு மென்றே வழுத்துமிப் பரத நூலே.

...321

தற்சனி யுடனங் குட்டந் தன்னையே கூட்டி நீட்டி
மிச்சமூ விரல்க டன்னை வேறுவே றாக நீட்டி
இச்சமு சரசி யக்கை யென்றனர் விநியோ கங்கேள்
நிச்சய முபதே சங்கண் ணீர்த்துளி களுக்கு மாமே.

...322


27. அம்ஸபட்ச அஸ்தம்

பிரித்தவிவ் வமு பட்சம் பிருங்கியி னிடமாய்த் தோன்றும்
விரித்திடுங் குலத்திற் றேவ வேசியா நிறங்க றுப்பு
பருத்திடு மிருடி யாகும் பரதனே யதிதெய் வந்தான்
கருப்புவில் லுடையோ னென்றே கருதமிப் பரத நூலே.

...331

ஓதியசர்ப் பசிரந் தன்னி லொருகனிட் டிகையை நீட்ட
ஈதம்ச பட்சக் கையா மிதற்கினி விநியோ கங்கேள்
சேதுபந் தனங்க ளுக்குந் தேகத்தி னகக்கு றிக்கும்
மாதுகே ளாறி லக்கம் வாகனங் களுக்குந் தானே.

...332

நெத்திக்க டைக்கண் நேராய் நின்றது சைக்கி னைக்காம்
பத்தியா யழைப்ப தற்கும் பரிந்தகை லாகு விற்கும்
மித்ரசம் பாஷ ணைக்கும் வெகுதுக்கம் நாசி தன்னில்
பொத்திய முகநேர் சொக்குப் பொடிமனத் திடமு மாமே.

...333

சிலிட்ட அம்ஸபட்சம்

ஆமம்ஸ பட்சக் கையி லணிவிரல் வளைக்கு மாகில்
தாமது தெற்குத் தேசந் தங்கிய மண்வெட் டிக்கும்
சாமிவை ரவர்க்கு கந்த கபாலத்தைத் தரித்த கையாய்க்
காமிநீ சிலிட்ட வம்ஸ பட்சக்கை காட்டி விள்ளே.

...334


28. பூர்ணநாப ஹஸ்தம்

ஓதுமிப் பூர்ண நாப முதித்தது மாலி டத்தில்
நீதிசேர் குலத்தில் வேந்தன் நிறமது சிவப்ப தாகும்
சாதுவா மிருடி யோதுஞ் சார்த்தூல முனிய தாக
ஆதிகூ ருமமே யீதற் கதிதெய்வ மென்னு நூலே.

...335

பதுமகோ சத்தில் விரல்நுனிக ளெல்லாம்
வளைத்திட வேபூர்ணநா பமதாய்ப் பற்றும்
இதன்விநி யோகந் திருட்டுக்கு ரங்கு சிங்கம்
ஏற்றபுலி யாமைநர சிங்கம் நாளும்
கதிபுடைத்த முலையரக்கன் கர்ன்னி காரங்
காட்டுமப ஜெயமோவாய் தாங்கல் மற்றும்
சதிர்பெறு கெட்டிக்காரத் தனத்தி னோடே
தலைசொரித லாமெனவே சாற்று நூலே.

...336

இப்பூர்ண நாபக் கையை யியம்பிய சார்ஞி தேவர்
ஒப்பவே சங்கீர் ணால பதுமக்கை யென்று கந்து
தப்பிலா வுறிக ளுக்குந் தரித்திர னென்ப தற்கும்
செப்பினர் வினியோ கத்தைச் செயறிந் துரைசெய் வாரே.

...337


29. திரிசூல அஸ்தம்

வருகனிட் டிகையங் குட்டம் வளைத்துமூ விரலை நீட்டத்
திரிசூலக் கைய தற்குச் செப்பினர் விநியோ கங்கேள்
திரிபுர சிகரம் வில்வத் தழைதிரி சூலத் துக்கும்
திரிமூர்த்தி யென்ன நந்தி செப்பின கையி தாமே.

...338


30. வியாக்கிர அஸ்தம்

மிருகசீ ரிடக்கை தன்னில் மேவிய கனிஷ்டாங் குட்டம்
நிரைசமா னங்க ளாக நீட்டவே வியாக்கிர வஸ்தம்
மிருகராசன் மண்டூ கம்வி ளங்கிய விராக்க தற்கும்
வெறிதரு குரங்கு கட்கு வியாக்கிரக் கையா மென்னே.

...339


31. பிண்டி அஸ்தம்

பரதமுனி சொல்லு வியாக்ரக் கைதனைக் கும்ப யோனி
வருசிங்க நகைக்கை யென்றான் வளர்தத்தி லன்ம தத்தில்
தருபூர்ண நாபக் கையாய்ச் சாற்றுமே லாகச் சுற்றிச்
சுருங்கிடப் பிண்டிக் கையாய்ச் சொல்லினர் பரத நூலோர்.

...340


32. சலவக்ஷ அஸ்தம்

சிலிட்டமாம் பதும கோசக் கைதனைச் செப்பும் யாஞ்ஞ
வல்கியுஞ் சங்கீர் ணால பதுமக்கை யாய்வ குத்தான்
சலவட்ச கரமே யென்றுஞ் சார்ஞிதே வன்ம தத்தில்
சிலந்திபூச் சிக்கும் பூசம் செப்பினர் விநியோ கத்தே.

...341


33. தூப அஸ்தம்

சாற்றிய திரிப தாகந் தற்சனி நடுமே லாகச்
சேர்த்திடத் தூப வஸ்தஞ் சிறந்தரா க்ஷகர்மு கத்தும்
தோற்றிய வீணர் கட்குஞ் சொற்பரத முனிவன் றானும்
போற்றினன் விநியோ கத்தைப் புகன்றதை யறிந்து கொள்ளே.

...342


34. மண்டூக அஸ்தம்

அமையும்ப துமகோ சத்தை யதோமுக மாய்ப்பி டித்து
இமைவிலா தசைத்துக் காட்ட விதுமண்டூ கக்கை யென்பர்
சுமையதாம் விநியோ கங்கேள் கனவிர ணங்க ளுக்கும்
சமையஞ்சேர் மதன னுக்குஞ் சாற்றினர் நூல்வல் லோரே.

...343


35. பிரம்ம அஸ்தம்

பதாகக்கை மத்தி மத்தி லங்குட்டம் பகர்ந்து கூட்ட
விதாயமாய்ப் பிரம்மக் கையாய் விளம்பினர் விநியோ கங்கேள்
நிதானமாஞ் சுத்த சூன்ய வஸ்துவின் சொரூப நீளுஞ்
சுதாவுட னறிந்து செய்யச் சொல்லினர் நூல்வல் லோரே.

...344

36. வர்ஜித அஸ்தம்

மருவிலா திருக்கும் செங்கை மணிக்கட்டுக் குழையக் கையைப்
பிரியவே சுற்றும் போது பேசும்வற் சிதக்கை யென்றே
பெருமையாம் விநியோ கங்கேள் பேர்முலை தளர்த லுக்கும்
பொருளிலர் சேர்த லுக்கும் புகலலாம் தூலா ராய்ந்தே.

...345

37. மானுஷ அஸ்தம்

காணும ராளக் கையிற் கனிட்டிகை வளையு மாகில்
மானுட வஸ்த மாகும் வழங்கிய விநியோ கங்கேள்
மானிடர் பொதுவ தாகு மரத்திலாந் தளிர்க ளுக்கும்
ஈனமிற் கடாரி பிச்சு மாயுதத் திற்குஞ் சொல்லே.

...346

38. கஜமுக அஸ்தம்

கொள்ளுஞ்சிங் கமுகக் கையிற் கூர்பெரு விரல கற்றி
மெள்ளநீட் டக்க சத்தின் முகக்கையாம் விநியோ கங்கேள்
விள்ளும்பாண் டியநாட் டுக்கு மிகுமணம் பார்த்த லுக்கும்
தெள்ளிய கண்மு கங்க டேர்ந்துகாட் டுதற்கு மாமே.

...347

ஆனைக்கோர் செவியை யாட்ட லடர்ந்தகாட் டெருமை கட்கும்
பூணிக்கை யொன்று மேலாய்ப் பொருந்த மற்றொன்று வைக்கில்
வானுல கத்தை யாளும் வாசவன் றனக்கு கந்த
சேனையை ராவ தத்தைச் செப்பலாம் விநியோ கம்மே.

...348

பந்தமி லகத்தி யன்றான் பகர்கஜ முகக்கை தன்னைச்
சந்த்ரமி ருகச்சி ரக்கை யென்றனர் சார்ஞி தேவர்
முந்தவே நார தன்றான் மொழிபிர மரக்கை யென்றே
சொந்தமாய்ப் பரத நூலிற் சொல்லிய தறிந்து கொள்ளே.

..349

39. மென்னிலைக்கை

அங்குட்டந் தனைக்குஞ் சித்து அடுத்தநால் விரல்வி ரித்து
நீங்காமுன் னீட்ட வேமென் னிலைக்கையாம் விநியோ கங்கேள்
சங்கைதீர் சாமம் நாலுஞ் சாதிநாற் குழல்வா சித்தல்
பங்கய மலரோன் சென்னிப் பாகமென் றுரைப்பர் மாதே.

...350

40. கூர்மக்கை

நடுவிர னீீட்டி மற்ற நால்விரல் வளைத்துக் காட்டல்
குடிபெறுங் கூர்மக் கையாய்க் கூறுவர் விநியோ கங்கேள்
தடியிலா மைக்கு மோர்பூத கணத்திற்கு மொண்கு றிக்கும்
கொடுராக்ஷ தகணத் திற்குங் குலைசோர்தற் காகு மெண்ணே.

...351

41. திரிலிங்கக்கை

கூறுதற் சனியங் குட்டங் கூட்டிமற் றதைம டக்கில்
வாராகி யமணக் கட்டை வைப்பது திரிலிங் கக்கை
சேரவே விநியோ கங்கேள் திருவிளக் கும்முக் கோணம்
பாராகும் பணத்தைச் சுண்டல் பருவிரை யூன்றல் பாரே.

...352

ஆவுடை யார்க்கும் யோனிக் குங்கொக்குங் குங்கோ ழிக்கும்
மேவுகூ ழைக்கி டாய்க்கும் விசையுற யூசி குத்தல்
தாவுமெ ழுகுப தத்தைப் பார்ப்பதற் காகு மென்றே
பாவசாத் திரங்கற் றோர்கள் பாடிய திவ்வா றென்றே.

...353


42. சாளையக்கை

நிறையுமங் குட்டந் தற்ச னியுமத்தி மத்தை நீட்டி
மறுரெண்டு விரல்ம டக்கி மணிக்கட்டைச் சோர வாட்டல்
பெறுஞ்சாளை யக்கை யென்று பேசுவர் விநியோ கங்கேள்
அறும்பல கோலக் கோம ளப்பாவ னைகூத் திற்காம்.

...354

சூழும்வாத் தியமு டுக்குச் சுழல்பொரு வண்டு வீழல்
வாழ்வண்டு சுழற்றற் சூறா வளிக்காற்றுக் குளிர்வா டைக்கும்
ஈழமின் வெட்டல் ராட்டு விசைகத்தி சுழற்றல் வேகம்
ஆழிவண் டியுருளல் பம்ப ரம்மெய்க்கூச் சிடுதல் மற்றும்.

...355

தயிர்சிலுப் புதலெ ரிப்புத் தனித்தேங்காய் பிடித்த லோடே
இயல்புறச் சந்தோ ஷித்த லேந்துசக் கரத்தைக் காட்டல்
அயலிரா திதுகேள் சேடை யாமெனப் பரத நூலோர்
நயமுட னுரைத்த திந்த நடன பாவனைக ளென்னே.

...356


43. சிலிமுகக்கை

நிலையாமங் குட்டத் தின்னி ரையிற்றற் சனிந கத்தைப்
பலமாக வூன்றிற் தற்ச னியினடு வரைமேற் பற்றி
விலகாமத் திமைந கத்தை விசையூன்றி யிவ்வா றாகப்
பலசிறு விரல்வ ரைக்கும் பிடிப்பது சிலீமு கக்கை.

...357

சொல்லுமிவ் வத்தத் திற்குச் சூழ்விநி யோகங் கேளு
புல்லுநாட் டியமும் லாசியம் பொருநடங் கணைதொ டுத்தல்
சிள்ளுநா மங்கீ றல்எகினச் சிறகுந்த வத்து .....
நல்பல கணிக்குஞ் சங்கு சோழிநண் டூரு தற்கே.

...358

தடையிலா தெதிரிற் றண்ணீர்த் தடாகத்தைக் காட்டு தற்கும்
அடைவுடன் காய்ந்த தண்ணீர் அதன்சூடு பார்ப்ப தற்கும்
கடமையா யபிந யித்துக் காட்டலா மென்று நூலோர்
படிமிசைக் கும்ப யோனி பாடின தறிந்து கொள்ளே.

...359


44. சங்க அஸ்தம்

சர்ப்பசீ ருஷக்கை தன்னிற் சாருமங் குட்டம் நீளில்
செப்பிய சங்கம் பேருச் செய்யென விநியோ கங்கேள்
ஒப்பலாங் குட்ட ரோகிக் குவமானஞ் சுரத நீர்க்கும்
இப்புவி தன்னிற் கண்டு இசைந்துநீ பிடிப்பாய் மன்னே.

...360


45. வலம்புரி அஸ்தம்

மாதாந்திர தாம்பிர சூட மருவிய கனிவ ரைக்கீழ்
தோதாக வங்குட் டத்தைத் தொந்தமாய் வைத்து நீட்ட
வேதாவ லம்பு ரிக்கை விதித்தனர் விநியோ கந்தான்
சூதாம்ந கக்கு றிக்குஞ் சொல்வர்மூக் குத்திக் காமே.

...361


46. இலதை அஸ்தம் 47. மண்டல அஸ்தம்

தற்சனி நடுவங் குட்டஞ் சேர்த்துமற் றிருவி ரற்றான்
வர்ச்சித மாய்வ ளைக்க வளரில தைக்கை யாகும்
மெச்சிய மலர்மொட் டிற்கு முறுக்கான்மூக் குத்தி மேவும்
மச்சுமு குளத்தில் நீட்டுங் கனிமண்ட லக்கை யாமே.

...362

17. அசம்யுத அஸ்தலக்ஷணமாகிய கரகரணமென்னும் முற்றும்.

18. சம்யுத அஸ்தலக்ஷணம்

அஞ்சலி கபோதங் கற்க டகஞ்சுவத் திகமும் டோளம்
கஞ்சபுட் பபுட முத்சங் கஞ்சிவ லிங்கஞ் சேர்ந்து
அஞ்சாத கடகா வர்த்த கர்த்தரி சுவத்தி கந்தான்
மிஞ்சிய சகடஞ் சங்கஞ் சக்ரம்சம் புடம்பா சம்மே.

...363


கீலக மச்சங் கூர்மம் வராகமுங் கருடன் கூட்டிக்
காலுள நாக பந்தங் கட்டுவ முடன்பே ருண்டம்
கோலமா குகஜ தந்த அவஹித்தங் கலசங் கூட்டி
மாலதா நிடத வர்த்த மானமாய்ப் பகரு மாதே.

...364


பச்சவஞ் சிதமுத் தான வஞ்சிதம் தாடன பதாகை
பச்சம தாகு மேவ பயவர தோப சாரம்
சுச்சபத் மமுகுள பாரதி மல்லுத்த கைத்ரி ஞானம்
நிச்சயச ஷாகிரு திக்கை நிகழ்சம்ய மிக்கை யென்றே.

...365


ஆகிய சம்யு தக்கை யருளிய நாற்ப துக்கும்
பூகஞ்சேர் கழுத்தி னாளே பூருவ நூலு ணர்ந்து
வேகமாம் சம்யு தக்கை விநியோக மிலக்கி யத்தின்
பாகம தறிந்து மேலாம் பாரினி லுரைப்ப தாமே.

...366


1. அஞ்சலி அஸ்தம்

விஞ்சைசேர் பதாக மாக விருகையுங் கூட்டிக் கொண்டால்
அஞ்சலி யஸ்த மாகும தற்கினி வினியோ கங்கேள்
அஞ்சியே சிரமே லீரா றங்குல மேலாம் நிற்கச்
செஞ்சிவப் பெருமா னுக்குஞ் சென்னிமேற் றேவர்க் காமே.

...367


நுதலினே ராசா னுக்கும் நுவல்வாய்நேர் பிதாவு மன்னர்க்
கெதிர்மார்பு அந்த ணர்க்கா மிடையுந்தி மாதா வுக்காம்
இதமுள நமஸ்கா ரங்க ளிணங்குநீ றதைக்கு ழைத்தல்
விதமது அஞ்ச லிக்கை விநியோக மென்று செப்பே.

...368


2. கபோத அஸ்தம்

அஞ்சலி யத்தந் தன்னி லடிநுனிப் பக்கமி ரண்டும்
கொஞ்சமுன் வௌியாய்க் கூட்டிக் கொள்ளவே கபோதவத்தம்
மிஞ்சிய சத்தி யச்சொல் மெய்க்குரு வுடனே பேசல்
அஞ்சிய விநயம் பேச லாமெனும் பேசற் காமே.

...369


ஆவுடை யார்க்கும் வாழை மலர்த்தாழைக் குமிழு மாகும்
தாவியே திஷ்டி மண்ணைத் தலைசுற்றிப் போடு தற்கும்
கோவிலைச் சுற்றும் போதுங் குந்தடி முனைகூந் தாலின்
பாவிக்கும் பருமு லைக்கும் பகர்கும்ப முத்தி ரைக்காம்.

...370


3.கற்கடக அஸ்தம்

அஞ்சலி யத்தந் தன்னி லடர்ந்திடு விரல்கள் பத்தும்
மிஞ்சவொன் றிடையி லொன்றா யிருபுறங் கையில்வ ளைக்க
விஞ்சைகற் கடக வத்தம் விளம்பினர் விநியோ கங்கேள்
வஞ்சியே கூட்ட மாக வருவதற் கெல்லா மென்ப.

...371


பரியது காட்டு தற்கும் பருங்கொப்பு வளைப்ப தற்கும்
உரியசங் கூது தற்கு முடல்பிடித் திடுவ தற்கும்
சிறுவர்கள் கிச்சுத் தம்ப லத்துஞ்சி வத்தியா னத்தும்
பெரியகொட் டாவி தோன்றிப் பேசுங்கற் கடகக் கையாம்

...372


4.சுவத்திக அஸ்தம்

தனித்திடுபதாகம் ரெண்டுங் கணைக்கையிற் குறுக்கே கூட்டி
நுனிக்கையி ரண்டு மேலே நீட்டியுள் ளங்கை ரண்டும்
பிணக்கற முகத்தி னேரே பிடிக்கவே சுவத்தி கக்கை
இணக்கமாம் பயத்துந் தோத்ர மியம்பினர் வினியோ கநதான்.

...373


5. டோள அஸ்தம்

அடைவுறு பதாக மிரண்டு மடித்துடை களுக்கு நேராய்
இடம்வல மிருபக் கத்து மிருகையும் தொங்க நீட்டில்
திடமுறு டோள வத்தஞ் செப்பினர் விநியோ கங்கேள்
நடனவா ரம்பத் திற்கு நாடியே பருமை யென்ப.

...374


தண்ணீரில் நீந்து தற்குந் தராசுக ளாடு தற்கும்
பண்ணிய கயிறுபா கத்தும் பறவைகள் சிறக டிப்பும்
திண்ணிய வாள்தன் னீளஞ் சிறுவரை யிணைப்ப தற்கும்
கண்ணிய மாகக் காட்டக் கருதுமே டோளக் கையாம்.

...375


6. புட்பபுட அஸ்தம்

சர்ப்பசீ ரிடக்கை யிரண்டுந் தகுகனிட் டிகைப்பக் கத்தில்
பொற்பொடு கூட்டிற் புட்ப புடக்கையாம் விநியோ கங்கேள்
நற்புதல் வர்கள் சீரார் நீராஞ்சனங் கிழங்கு மந்திர
புற்பங்க ளர்க்கிய தானம் புகழ்கனி வாங்கத் தானே.

...376


மன்னவ ரிடத்திற் சென்று வாய்பொத்திப் பேசு தற்கும்
கன்னிகல் யாணக் கோலங் காப்புக்கை கட்டு தற்கும்
பின்னுவ தனத்தி னீரை மேவிடும் பிச்சை வாங்கல்
தொன்னைபுட் பாஞ்ச லிக்குந் தோன்றுகைம் மண்டைக் காமே.

...377


7. உத்சங்க அஸ்தம்

ஏலவு மிருக சீருஷ மிருகையு மிருதோள் நேரே
கோலியே பிடித்ததுற் சங்கங் கூறினர் விநியோ கங்கேள்
ஆலிங்க னம்நா ணங்க டகங்கள் தொடவுஞ் சின்னம்
பாலர்கள் தனைச்சிட் சிக்கப் பகர்ந்தவுற் சங்க மின்னும்.

...378


குளிர்வாடை பனிம ழைக்குக் கூதலாய் நிற்ப தற்கும்
தழுவிமற் கட்டு தற்குந் தன்முலை மூடு தற்கும்
ஒழுக்கமாய் நிற்ப தற்கு முயர்கும்மி கொட்டு தற்கும்
களிப்புடன் பள்ள ராடல் விநியோகங் கருதும் பாரே.

...379


8. சிவலிங்க அஸ்தம்

தகுமிடக் கையி லர்த்த சந்த்ரக்கை யடிய தன்மேல்
சிகரத்தை வலக்கை தன்னிற் சேர்த்திடக் கைமேல் வைத்தால்
அகமகிழ் சிவலிங் கக்கை யாமதின் விநியோ கங்கேள்
புகழ்சிவ லிங்கத் துக்கே புகன்றனர் பரதத் தோரே.

...380


9. கடகாவர்த்தன அஸ்தம்

கடகாமு கக்கை யிரண்டுங் கணைக்கையிற் குறுக்கே கூட்டில்
கடகாவர்த் தனம தென்றே கையாகும் விநியோ கங்கேள்
திடமன்னர் மகிழ்பட் டாபி டேகம்பூ சைகள்கல் யாணத்
திடையறு கிடவு மேலா சீர்வாதஞ் செயவு மாமே.

...381


காதினிற் கையை வைக்கிற் கணபதி வணக்கத் திற்கும்
நீதிசேர் கலியா ணத்தில் நின்றுகை மாறி வைத்தல்
தீதிலா விருத லைப்பட் சிக்குமாச் சரியத் திற்கும்
மேதினி கிரிகை கட்கும் விண்டனர் பரத நூலோர்.

...382


10. கர்த்தரீசுவத்திக அஸ்தம்

கர்த்தரி முகக்கை யிரண்டுங் கணைக்கையைக் குறுக்கே நீட்டில்
கர்த்தரி சுவத்தி கத்தின் கையென்றார் விநியோ கங்கேள்
விர்த்திசேர் மலைகள் கொம்பு விருக்ஷங்க ளுக்கு மாகும்
பத்தியாய்ப் பலக லைக்கூட் டங்களும் பகர லாமே.

...383


பருப்பத சிகரங் கட்கும் பாரமுள் ளிலவு கட்கும்
பருஞ்சரக் கூடா ரத்தும் பாய்மரங் கட்டுதற்கும்
கருதிய சித்தி ரத்தின் கைத்தொழி லபிந யித்தும்
உறுதியா நற்றே ரிற்கு முவமையா மென்று சொல்லே.

...384


11. சகட அஸ்தம்

வருபிர மரக்கை தன்னில் மத்திமாங் குட்டம் விட்டு
நிரவியே பரப்பி நீட்டில் நிகழ்த்தினர் சகட வத்தம்
தருவிநி யோகங் கேளாய் சகடுக்கும் ராக்ஷ தர்க்கும்
மருவிய சகட மென்றே வழுத்தினர் பரத நூலோர்.

...385


12. சங்க அஸ்தம்

வலக்கையின் சிகரத் துள்ளே வாமாங் குட்டஞ் சேர்த்து
நிலைத்தநால் விரலும் பின்னே நீட்டியே கூட்டிப் பின்னும்
வலக்கையங் குட்டங் கூட்டி மன்னுங்கை சங்க மாகும்
கலக்கமில் விநியோ கஞ்சங் காதிகட் காகுந் தானே.

...386


13.சக்கர அஸ்தம்

அர்த்தசந் திரனி ரண்டு அஸ்தத்தி லும்பி டித்தே
யுத்தியா யொருகை மேலே யொருகையைக் குறுக்கே நீட்டி
வைத்தது சக்க ரக்கை வழுத்தினர் விநியோ கங்கேள்
தத்தையே சக்க ராயு தங்களுக் காமென் றோதே.

...387


14. சம்புட அஸ்தம்

விடுத்தசக் கரத்தில் பத்து விரல்நுனி வளைத்திட் டாற்சம்
புடக்கையா மென்ற தற்குப் புகன்றனர் விநியோ கங்கேள்
எடுத்தவஸ் துக்க ளெல்லா மின்பமாய் மூடு தற்கும்
புடைத்தெழு முலையாய் கேள்சம் புடத்துக்கு மாமென் றாரே.

...388


15. பாச அஸ்தம்

இருகையுஞ் சூசி யாக்கி யிருதற்ச னியும்வ ளைத்துத்
திருகியொன் றோடொன் றாகச் சேர்த்திரு விரலு மாட்டில
வருமது பாச வஸ்த மாகுநேர் விநியோ கங்கேள்
ஒருபாசம் விலங்கு மாண்பெண் ணொன்றாய்ச்சே ருதற்கு மென்னே.

...389


வாதுவ ழக்கு கட்கும் மயிர்பிடிச் சண்டை கட்கும்
போதிய சங்கி லிக்கும் புதுமையாங் கலகத் திற்கும்
சாதிநா கம்பு ணர்ச்சி சரிபல வான்க ளுக்கும்
தீதறு பிடிவா தங்கோ பஞ்சிக்க லெனவே செப்பும்.

...390


16. கீலக அஸ்தம்

மிருகசீ ரிடத்திற் சுண்டு விரலிரண் டையும்வ ளைத்து
இறுகவே யொன்றோ டொன்றாய் எதிரெதிர் மாட்டி யாங்கே
அரியவாய் கீல கக்கை யாமதின் விநியோ கங்கேள்
நிறைசிநே கங்கட் கென்றும் நீடிய உறவு மின்னே.

. ...391


கோசலை முத்தி ரைக்குங் கூடுமாண் பெண்க ளுக்கும்
மாசிலா யோகி கட்கு மகாநன்மை முத்தி ரைக்கும்
தேசுறுங் கல்யா ணப்பெண் திருக்கையைப் பிடிப்ப தற்கும்
சூசனை யாகப் பந்து சுபசோப னங்கட் காமே.

...392


17. மச்ச அஸ்தம்

இச்சையாய் வலக்கை தன்னை யிடக்கையின் புறத்தை மேலே
வைச்சிறு நுனியு நீட்டி வருகனிட் டிகையங் குட்டம்
மிச்சமாம் விரல்கள் நாலும் வௌிப்பட வேறே நீட்டில்
மச்சக்கை விநியோ கந்தான் ஐலசந்து மச்ச மென்னே.

...393


பன்றிநாய்ப் பாய்ச்ச லுக்கும் படைக்கூட்ட மென்ப தற்கும்
அன்றிக்கு ரங்குப் பாய்ச்சல் வருமுய லுடும்பு மாகும்
தொன்றிய தர்ப்பை கட்குஞ் சூழாமை முதலை கட்கும்
சென்றது மகரத் திற்கே செப்பினர் விநியோ கத்தே.

...394


18. கூர்ம அஸ்தம்

கதிர் நிகர் சக்க ரத்தின் கனிட்டிகாங் குட்ட நாலும்
விதுட னீட்டி மற்ற விரலெலாம் வளைத்துக் கொண்டால்
அதுதானே கூர்ம அஸ்த மாமென்றார் விறியோ கங்கேள்
விதியினாற் கூர்மத் திற்கே விள்ளலா மென்றார் நூலோர்.

...395


19. வராக அஸ்தம்

மிருகசீ ரிடக்கை ரண்டும் பிடித்தங்குட் டங்க னிட்டம்
திறமுட னாலும் வேறாய்த் தெரியவே நன்றாய் நீட்டி
அரியவ ராகக் கையா மதற்கினி விநியோ கங்கேள்
குறியென வராகத் திந்கே கூறினர் பரத நூலோர்.

...396


20. கருட அஸ்தம்

இருகையு மர்த்த சந்த்ர னிருகணைக் கைகு றுக்காம்
மருவியங் குட்டம் ரண்டு மன்னவே யொன்றாய்க் கூட்டிப்
பிரியமாய் முகத்தி னேரே பிடித்திடிற் கருட வஸ்தம்
கருதிய விநியோ கந்தான் கருடனுக் கேசொன் னாரே.

...397


21. நாகபந்த அஸ்தம்

கணித்திடுஞ் சர்ப்ப சீர்ஷக் கையிரு கைபி டித்து
இணக்கமாய்ச் சுவத்தி கம்போ லிருகையுங் குறுக்கே நீட்டி
பிணைத்திடி லிதுவே நாக பந்தமாம் விநியோ கங்கேள்
பணைத்தெழு முலையாய் நாக பந்தம தாமவ ணம்மே.

...398


22. கட்டுவ அஸ்தம்

சதுரக்கை யிரண்டு கையிற் றருமிரு நுனியுங் கூட்டி
அதனிற்றற் சனிகள் ரண்டு மங்குட்ட மிரண்டு நீட்டில்
இதுகட்டு வக்கை யென்றே யியம்பினர் விநியோ கங்கேள்
மெதுவுறுங் கட்டி லுக்கும் விசுபல கைக்கு மாமே.

...399


23. பேருண்ட அஸ்தம்

கவித்தக்கை யிரண்டு கையுங் கணைக்கையைக் குறுக்கே நீட்டி
உவப்புடன் பிடித்தி டப்பே ருண்டமாம் விநியோ கங்கேள்
புவியிற்பே ருண்டத் திற்கும் புருடன்பெண் கூடு தற்கும்
உவமைய தாகு மென்றே யோதினர் கமல மாதே.

...400


24. கஜநந்த அஸ்தம்

வாகுமேற் சர்ப்ப சீர்ஷக் கைமாறி வைத்து நீட்டும்
பாகமே கஜதந் தக்கை பகர்விநி யோகங் கேளாய்த்
தாகமா மன்னம் பூசற் றழுவுதல் நாற்கோ ணத்தும்
காகபதா கக்கூர்பா சேர்த்தி கையெனச் செப்பலாமே.

...401


25. அவகிந்த அஸ்தம்

ஆமிரு மணிக்கை சேர்த்து அதோமுக மான கையில்
தாமிரு சுகதுண் டத்தைத் தரித்துக்கீழ் நோக்கு மாகில்
சேமவ கித்தக் கையாய்ச் செப்பினர் விநியோ கங்கேள்
கோமளக் கைய தற்கே கூறினர் பரதத் தோரே.

...402


26. கலச அஸ்தம்

அர்த்தசந் திரனி ரண்டு மந்யோந்ய மாக நேராய்
வைத்தடி கூட்டிக் கொண்டால் மருவுமே கலசக் கையாய்
வித்தது பூசா ரிக்கும் வினோதவஸ் துவைக்காண் பித்தல்
உத்தபாத் திரத்தி னீரை யுண்ணுதற் காகு மென்னே.

..403


27. நிடத அஸ்தம்

வாமக்கை முகுள மாக்கி வலக்கைக்க பித்தம் வைத்தே
நேமமுத் வேஷ்டி தத்தால் நிகழ்த்தலாம் நிடதக் கையாய்
கோமள விநியோ கந்தான் கூறுதே வதைக ளுக்கோர்
சாமிய மென்று கையைச் சாற்றினர் பரதத் தோரே.

...404


28. வர்த்தமான அஸ்தம்

அம்ஸபட் சக்கை ரண்டு மதுபரா முகசு வத்தி
கம்சேர்த்துக் கூட்டி நீக்கக் காண்வர்த்த மானக் கையாய்
வஞ்சியே விநியோ கந்தான் மகாமேரு கிரித னக்கும்
கொஞ்சுமந் தானங் கட்குங் கூறினர் பரத நூலோர்.

...405


29. பட்ச வஞ்சிதம்

இரண்டுகை யர்த்த சந்த்ர னிடுப்பினில் வைத்துக் கூட்டப்
பெரும்பட்ச வஞ்சி தக்கை பேணிய விநியோ கந்தான்
விருதுக ளென்ப தற்கு வெள்ளிய ரைஞ்ஞா ணுக்கும்
வரும்பக்ஷக்ஷி ரெக்கை கட்கும் வகுத்தனர் பரத நூலோர்.

...406


30. உத்தான வஞ்சிதம்

வாகுக ளிரண்டும் நேராய் வைத்த கைகளைத் திரிப
தாகமே கூட்டி நீட்டு தானவஞ் சிதமே யாகும்
பாகமாம் விநியோ கங்கேள் பரந்தாம னான விஷ்ணுக்
காகுமே யின்னம் பின்னா லறிந்துநீ சொல்லு மாதே.

...407


31. தாடனபதாக அஸ்தம்

இடவலப் பதாக மர்த்த சந்த்ரன்மே லங்கு லம்மெட்
டெடுத்த டித்திட வேதாட னபதா கத்தைக் கேண்மின்
திடமதா யதுட்டா னந்தா ளங்காக ளங்காக பலிக்கு மாகும்
முடிமல ரணிகண் டோர் முன்னின்று தட்ட லாமே.

...408


32. அபயவரத அஸ்தம்

சுபசுரப் பதாகை ரண்டில் வலநுனி மேலே தூக்கி
விபரமா யிடைநு னிக்கீழ் விதித்தகை மேல்கீ ழாக்க
அபயவ ரதக்கை யாகு மதற்கினி விநியோ கங்கேள்
தபநிவர்த் திக்கு மீசன் றன்முதற் றேவர்க் காமே.

...409


33. உபசார அஸ்தம்

பிறைக்கைமேற் பிறைக்கை வைத்துப் பிடிப்பது பசாரக் கையாம்
ஊரைத்தது விநியோ கங்கேள் ஒழுக்கத்து மரியா தைக்கும்
நிரைத்தெதி ரேந்து தற்கு நின்றொன்றை வாங்கு கைக்கும்
துருக்கர்ம ராட ருக்குச் சொல்வணக் கத்து மாமே.

...410


34. பதுமமுகுள அஸ்தம்

பதிவிரல் நுனிக ளொன்றாய்ப் பதித்துவி ரித்து நீக்கப்
பதுமமு குளக்கை யாகும் பகர்ந்திடு விநியோ கங்கேள்
நிதிதனைக் கொடுத்தெ டுத்தல் நின்றாடுங் குஞ்சங் கட்கும்
துதிமன்னர் மகுடங் கட்குந் தோரனத் திற்கு மாமே.

...411


35. பாரதி அஸ்தம்

மிருகசீ ரிடக்கை ரண்டு மின்னுதாய் மலர்த்திச் சேர்க்கப்
பருபார திக்கை யாகும் பகரக்கேள் விநியோ கந்தான்
சரசுவதி முதலோர் வீணை வாத்திய தானங் கட்கும்
சிறுகுழந் தைகளை யேந்திப் பால்கொடுத் தற்குஞ் செப்பே.

...412


36. மல்லுத்த அத்தம்

நெஞ்சிரு பக்க முட்டிக் கைகளை நேர்பி டித்தால்
மிஞ்சுமல் லுத்தக் கையாம் விநியோகந் தைரியம் பூதம்
வஞ்சியே பருமை செண்டு மல்லர்போ ராயு தங்கள்
கொஞ்சிய கர்ப்பத் துள்ளாங் குழவிகட் காமென் றோதே.

...413


37. திருஞான அஸ்தம்

இடக்கைப் பதாகந் தன்னில் வலக்கைத்தி ரிபதா கத்தை
யொடுக்கமில் லாம னேரா யுத்வேஷ்டி தமதாய்ப் பற்ற
அடுப்பது திரிஞா னத்தை யருள்பாரி சாதம் ஞானம்
திடத்துறு மும்மூர்த் திக்குஞ் சமாதிக்குஞ் செப்புமாமே.

...414


38. சஷாகிருதிக்கை

அஞ்சலிக் கையி ரண்டுங் கனிகளங் குட்டம் ரண்டும்
தஞ்சமாய்ச் சேர்த்துக் கட்டில் சஷாகிரு திக்கை யாகும்
கொஞ்சிய மகர ராசிக் கென்னவே குறைவில் லாமல்
வஞ்சிகோ களன்ம தத்தில் வழுத்தினர் விநியோ கம்மே.

...415


39. சம்சயமி அஸ்தம்

இரண்டுகை யம்சா சீயத்தைப் பரிவர்த்த னமாயி ணக்கி
முரண்டுபத் மாச னத்ின் முழந்தாளின் மீதில் வைத்தால்
பரந்துடன் சம்ய மிக்கை பகர்விநி யோகத்தைக் கேள்
தரம்பெறு முனிக ளுக்கே சாற்றுமவ் விநியோ கம்மே.

...416


40. சதுரச்ர அஸ்தம்

கடகா முகமிரண்டு மார்பு நேராய்க்
கருதுசுவத் திகம்வளைத்துப் பிடிக்கக் காட்டும்
முடிசதுர சிரமாகும் விநியோ கந்தான்
முன்சா மரம்பிடித்தல் மணிகள் கோத்து
வடிவான ஆரங்க டன்னைப் பூணல்
மகிழுஞ்சக் கணிநடன மன்னு மென்று
படிமிசை யுணர்த்தி னர்கள் பரத நூலோர்
பாங்கறிந்து முறையாகப் பகரு மாமே.

...417


41. திரிபதாக சுவத்திகம்

வருதிரி பதாகம் ரண்டும் மணிக்கட்டைச் சுவத்தி கஞ்செய்
துறுவது திரிப தாகச் சுவத்திக மாகக் காட்டும்
கருதிய விநியோ கங்கேள் கற்பகத் துடன்மே டைக்கும்
பருவதச் சிகரத் திற்கும் வருமெனப் பகரு நூலே.

...418


42. பதாகசு வத்திகம்

சொல்லிரு பதாகந் தன்னைத் தூய்மணிக் கட்டிற் றாக்கி
நல்லசொத் திகமே செய்யப் பதாகசொத் திகமாய் நாட்டும்
கல்லெனும் விநியோ கங்கேள் கடல்கரா பொறுமை விருக்ஷம்
புல்லுஞ்சஞ் சலமா காய்த்த கலமாய்ப்பொ ருந்து மென்னே.

...419


43. மித்திரோத்சங்க அஸ்தம்

மிருகசீ ரிடமி ரண்டு மேலாய்வ யிற்றிற் சேர்க்கில்
தருமித்தி ரோற்சங்கம் புத்த சமயமே விநியோ கம்மாம்
ஒருகையெ டுத்தா விர்த்த மொக்கக்கன் னத்தில் வைத்தால்
வருவெட்க மச்சத் திற்கும் வழுத்துவாய் முறைதெ ரிந்தே.

...420


44. திலக அஸ்தம்

ஏலவே திரிப தாக மிரண்டையு மெதிராய்ச் சேர்த்துச்
சீலமா கப்பி டிக்கத் திலகக்கை விநியோ கங்கேள்
கோலமாந் திலதந் தீட்டற் சந்தனந் திருத்தற் கூராம்
வேலெனும் விழியி னாளே புஷ்பாஞ்ச லிக்கும் விள்ளே.

...421


45. வைஷ்ணவ அஸ்தம்

பேணவே யிருப தாகம் பெருவிர லுடனே சேர்க்கில்
வீணிலா வைஷ்ண வக்கை விநியோகங் கூட்டத் தோசை
தாணுவா மிருகர்த் திரிக்கைத் தன்றோளில் வைத்து நிற்கில்
பூணுவைஷ் ணவக்க ரமாய்ப் புகன்றனர் வியாசர் தாமே.

...422


46. வல்லபாயுத அஸ்தம்

சிகரவத் தததின் மேல்மி ருகசிரத் தைப்பி டித்தல்
பகருமே யிதனை வல்ல பாயுதம் விநியோ கங்கேள்
இகலுந்தூண் முதலா மேவ்வ மேறல்மேற் சுரதஞ் செய்யல்
புகலுவாய் நூலிற் காட்டும் புலனறிந் திதனை மானே.

...423


47. ரதாமோத அஸ்தம்

கூறும ராளத் தில்மு குளமிரண் டும்ப தாகம்
நேரில்விஸ் தாரம் பற்ற ரதாமோதக் கையாய் நேரும்
சாருமே விநியோ கந்தான் சௌசீதி பந்தங் கட்குச்
சேருமென் றேநூ லாய்ந்து செப்புவை கமல மாதே.

...424


சம்யுத அஸ்த அதிதெய்வங்கள்

ஆகுமே புட்ப புடவதி தெய்வ
மளகேச னஞ்சலி க்ஷேத்ரபாலன்
அழகுச துரச்ர மிராக வன்த்ரி
பதாக சோத்திகமதா காசம்மாம்
அருமைப் பதாகச் சுவத்தி கம்பிர
மனேயாங் கர்த்தரீ சோத்திகம்
ஆறுமு கனான் டோள மதிதெய்வம்
வாணியாம் அவகித்த மார்க்கண்டனாம்
ஏகாத வர்த்த மானத்திற் குவாசுகி
யெனச்சொல்லும் விஷ்ணு தேவன்,
ஏற்றவுத் தான வஞ்சி தமதாகப்
புகலுமே கலசமா மிந்திரன்
இசையதாம் பட்ச வஞ்சித மோது
முமையென விணங்குகௌ தமனுச்சங்கம்
இன்பமுறு மித்திரோற் சங்கமது புத்தனா
மிசைதிலக மால தாகும்
மோகமாம் நாகபந்தம் சேடன் வைஷ்ணவ
மொழி யுமேமால் கபோதம்
முதல்வனாஞ் சித்ர சேனன் கற்கடக
விஷ்ணுமூண் டகடகா வர்த்தனம்
முறைகொளுஞ் சந்திரன் கஜதந்த மாகுமது
முன்செ லும்பர மாத்துமன்
முக்கிய மதாம் நிடதத்தும் புருவதாகு
முயல் மகர மச்சதேவன்
தாகமா கியவல்ல பாயுத மதற்குக்
கந்தர்ப் பனேயதி தெய்வமாந்
தகும்ரதா மோதந்தனக் காகு மதிதெய்வஞ்
சாருமே யிரதி யாகத்
தக்கவிச் சம்யுதக் கரமதிற் கதிதெய்வந்
தங்கு மிவ்வா றாகவே
தானெனுங் கோகள மதத்தினி லிதற்கெலாஞ்
சாற்றின னறிந்து கூறே.

...425


சம்யுத அஸ்த லக்ஷணம் முற்றும்

19. நிர்த்த அஸ்த லக்ஷணம்

நிருத்தக்கை முப்ப தாக நிகழும்பே தங்கள் சொல்லும்
உருசது ரச்ர முத்வி ருத்தமுந் தலமு கத்தோ
டருசுவத் திகமும் விப்ர கீர்ணக் கையு மல்லால்
கருதுவர் பின்ன ராள கடகாமு கக்கை யென்றே.

...426


ஆவித்த வக்த்ரஞ் சூச்யாச்யம் ரேசி தத்தோ
டேவர்த்த ரேசி தம்நி தம்பம்பல் லவமு மின்னும்
வுற்ற கேச பந்தம் முத்தானவஞ் சிதமத் தோடே
வுற்ற லதாகா ரஞ்சீர் பொருகரி யஸ்த மாமே.

...427


பட்சவஞ் சிதமும் பட்ச பிரத்தியோ தகமுந் தண்ட
பட்சமே கருட பட்சம் ஊர்த்வமண் டலியோ டேபார்
உட்சுவ மண்ட லித்த வுரோமண் டலியி னோடே
மெச்சவ முரப பார்சுவ மண்டலி யாகு மென்னே.

...428


முறுவல்சேர் மொழியி னாளே முட்டிச்சு வத்தி கக்கை
குறுகாத நளின பத்ம கோசமே யலபத் மக்கை
மருவுமுற் பணக்கை யோடே வலிதமும் லலித மென்றே
முறையதாய்ப் பரதா சாரி முப்பது விதஞ் சொன் னாரே.

...429


1. சதுரச்ரதிர்த்தக்கை 2. உத்விருத்தநிர்த்தக்கை

இருகட காமு கக்கை யெட்டங்கு லத்தில் மார்நேர்
உறவைக்கச் சதுரச் ரக்கை யோதுமீ ரம்ச பட்சக்
கரமுயர்த் தித்த ணித்து அதோமுக மாகக் காட்டல்
பெருமுத்வி ருத்தக் கையாய்ப் பேசினர் நூல்வல் லோரே.

...430


3. தலமுகநிர்த்தக்கை 4. சுவத்திகநிர்த்தக்கை

உத்விருத்தம் பக்கம் பாரி சங்களி லொன்றற் கொன்றே
தீர்த்துவைத் திடவக் கையைத் தலமுக மென்றே செப்பும்
ஒத்திரு வம்ச பட்சம் ஒன்றுமே லொன்று வைத்தல்
எத்திய சுவத்தி கக்கை யெனவுரைத் திடுவாய் மாதே.

...431


5. விப்ரகீர்ணநிர்த்தக்கை 6. அராளகட்காமுகம்

சுவத்திகக் கையை வேகத் துறவிட்டுத் தனத டத்தில்
அவமின்றி வைக்க விப்ர கீரண மாகுங்.......
கவர்வலக் கைக டகா முகமிடக் கைய ராளம்
அவையதோ முகம்பி டித்தா லராளகட காமு கம்மே.

...432


7. ஆவித்தவக்த்ரநிர்த்தக்கை 8. சூச்யாசியநிர்த்தக்கை

பருமுழங் கைப ரப்பிப் பதாகாதி களைவ்யா விர்த்தக்
கரணத்துவ மாக வைத்தால் காணுமா வித்த வக்த்ரம்
குருசர்ப்ப சீகு ஷத்தங் குட்டமத் திமையைக் கூட்டி
வருசது ரச்ர பக்கம் வைத்தாலாஞ் சூச்சி யாசியாம்.

...433


9. ரேசிதநிர்த்தக்கை 10.அர்த்தரேசிதநிர்த்தக்கை

இரண்டுகை யம்ச பட்ச முயரமா யெடுத்த வற்றைத்
துரிதமா கத்தி ருப்பச் சொல்லுமே ரேசி தக்கை
வருரேசி தக்கை யொன்றைக் கடகாமு கமதாய் வைக்க
அரியைநே ரிடையி னாளே வர்த்தரே சிதக்கை யாமே.

...434


11. நிதம்பநிர்த்தக்கை 12. பல்லவநிர்த்தக்கை

உற்றப தாகத் தைக்கந் தரத்திருந் துயர மாக
பெற்றதோ முகம்நி தம்பத் திற்பிடித் திடல்நி தம்பம்
சற்றப்ப தாகம் வியாவிர்த் தகரண முயர்த்திப் பரிவி
ருத்தமா யிறக்கிக் கையைப் பிடித்துறல் பல்ல வக்கை

...435


13. கேசபந்தநிர்த்தக்கை 14. உத்தானவஞ்சிதக்கை

அப்பதா கத்தைத் தம்பா காரமாய்ப் பாரி சத்தில்
ஒப்பவே யிருந்து யர்த்தி யிறக்குதல் கோபந் தம்மாய்ச்
செப்புதி ரிபதா கங்க ளியற்றி யம்சம் ரண்டும்
ஒப்பெதி ராய்நி றுத்த வுத்தான வஞ்சி தக்கை.

...436


15. லதாகாரம் 16. கரிநிர்த்தக்கை

திரள்பதா கத்தை டோள மாகவே திரியக் காகப்
பிரசாரி தமதாய்ச் சேர்த்துப் பிடிப்பது லதாகா ரக்கை
கரியஸ்த லதாகா ரத்தைத் தும்பிச்சங் கைபோல் வைத்து
ஒருகட காமு கங்கா தோரந்திரி பதாகம் வைத்தல்.

...437


17. பட்சவஞ்சிதநிர்த்தக்கை 18. பட்சப்பிரத்தியோதகம்

கனிதிரி பதாகம் ரண்டுங் கைகடி தலத்தில் வைத்து
நுனிவிரல் வளைக்கப் பட்ச வஞ்சித முறையா மந்தப்
பனிபட்ச வஞ்சி தத்தில் அணிவிரற் பக்கமாக
முனமெதிர் வைக்கப் பட்சப் பிரத்தி யோதகமாய் மூட்டே.

...438


19. தண்டபட்ச நிர்த்தக்கை

ஒருகையை யமுச பட்ச முறமார்பின் பக்கம் வைத்து
மறுகையை யிலதா கார மாகத்தோ ளிடத்தில் வைத்துப்
பெருமுழங் கையைக் கீழா யிறக்கியே பிடிப்ப தாகும்
தருமலர்க் குழலி னாளே தண்டபட் சக்கை யென்றே.

...439


20. கருடபட்சம் 21. ஊர்த்வமண்டலி நிர்த்தக்கை

காணிரு கைப்ப தாகங் கடிதடத் தகோமு கம்மாய்
தோணவே பிடித்த லென்று சொல்லுமே கருட பட்சம்
வாணவே பதாகம் ரண்டு மார்புநேர் நெற்றி மட்டும்
ஊணிப்பா ரிசம்பி டிக்க வூர்த்வமண் டலியா மென்றே.

...440


22. பார்சுவமண்டலி 23. உரோமண்டலி நிர்த்தக்கை

அனமேகேள் பதாகம் ரண்டு மன்யோன்ய மாய்ப்பக் கத்தில்
மனமுறப் பிடித்த பார்சுவ மண்டலிக் கைய தாகும்
இனங்கீழ் மேற்பதாகம் பக்கத் திருமார்பு நேர்வ ளைத்தல்
தனிவரு முரோஒ மண்ட லிக்கையாய்ச் சாற்று மானே.

...441


24. உரப்பார்சுவ மண்டிலி நிர்த்தக்கை

ஒருகைமார் பிற்கு யர்த்தி யொருகையைத் தொங்க விட்டு
மறுபடி யும்வியா விர்த்த மாகவோர் கைய ராள
முறச்செய்ய மார்பு நேரில் வைத்துமற் றோரு கையைப்
பெருமப வேஷ்டி தத்தை யராளப்ர மாணஞ் செய்து
உரப்பார்ச்வ மண்ட லிக்கை யொப்புமென் றோது மானே.

...442


25. முட்டிகச் சுவத்திகம் 26. நளினபத்ம கோசம்

ஒருகைய ராள மற்ற வொருகைபல் லவமாய் மற்றும்
இருகட காமு கத்தா முட்டிகச் சுவத்தி கக்கை
மருசுவத் திகம்வ்யா விர்த்த மாய்ப்பரா முகம்பி டிக்கக்
குருவருள் நளின பத்ம கோசமென் றுரைப்பர் நூலோர்.

...443


27. அலபத்ம நிர்த்தக்கை 28. உல்பண நிர்த்தக்கை

மலரல பத்மத் தையு யரமார் பினிலி ருந்து
வலியகண் டத்தில் வைக்க வருமல பத்ம கோசம்
இலகிரு கையை முன்போற் கழுத்தெதி ரெதிர்பி டிக்கச்
சொலுமதை யுல்ப ணக்கை துலங்கவே நூலின் மாதே.

...444


29. வலிதநிர்த்தக்கை 30. லலித நிர்த்தக்கை

துலங்குல தாகா ரக்கைச் சுவத்திக மாய்ப்பி டிக்க
வலிதக்கை யாகு மின்னம் வரும்பல்ல வக்க ரத்தை
இலகவே சிரத்தின் மீதி லிதைச்சுவத் திகமாய் வைத்தல்
லலிதக்கு யென்றிந் நூல றிந்துரை செய்ய லாமே.

...445

நிர்த்த அஸ்தலக்ஷணம் முற்றும்.

20. முத்திராஹஸ்த லக்ஷணம்

1. சுரபிமுத்திரை

தருமிருக ரங்கள்கோத் திடக்க னிட்டைத்
தற்சனிகள் வலத்தி னநாமிகை மற்றும்
பெருகுமுத்தி மையிற்பொருந்தி வலக்கை நீட்டப்
பிசகாத்தற் சனியிடத்த நாமி மத்தியம்
பொருந்தியதோ முகமாகப் பிடிக்க லாகும்
புகழ்சுரபி முத்திரைக்கைப் புலன றிந்து
உரைத்தனர்கள் பரதநூற் கற்ற மேலோர்
உததியலை யொத்தவிழி யுடைய மாதே.

...446


2.கவுஸ்துபமுத்திரை

கீலக்கை யிலனாமி மத்தி மத்தைக்
கீழ்நோக்கி யிடதுதற் சனியிற் பிடித்துக்
காலவலத் தற்சனியை யிடத்த னாமி
கைமத்திம மாங்குட்ட முன்னேர் சேர்ந்த
மூலநடு விடுக்கில் வைத்தல் கவுஸ்துபமென்
முத்திரையின் குறியெனவே யிதனைக் கற்றோர்
நூலறிந் துரைத்தனர்கள் சீயம் போன்ற
நுண்ணிடையை யொத்ததிரு வழகின் மாதே.

...447


3. இரவி முத்திரை

இரண்டுள்ளங் கைகளையு மாறி வைத்து
இடத்தற்ச னியைவலக் கனிட்டை யாலே
நிரப்பிடித்து வலத்தற்ச னியை யிடக்க
னிட்டையாற் பிடித்திடவ னாமி மத்யம்
வருவலதங் குட்டத்திற் சேர்ந்து நேரே
வலவனா மிகைமத்திய மிடதங் குட்டம்
உறச்சேர்த்து நடுத்து ளையாக்கிப்பி டித்த
லோதுமே யிரவிமுத் திரைய தாமே.

...448


4. பதுமமுத்திரை

மருவிட வனாமி மத்தி மத்தின்மேல வலத்த னாமி
பெருமத்தி மத்தை வைத்துப் பின்னதின் மேலி டத்தில்
வருதற்ச னிக்க னிட்டை மேல்வலத் தற்ச னீயும்
பிரிகனிட் டத்தை வைத்துப் பிடித்திடப் பதும மாமே.

...449


5. பிரசன்னமுத்திரை

அங்கையாற் செய்யு மங்குலிக் கரத்தைப்
புங்கித மாகப் பிடித்திடப் புகலும்
முங்கும் பிரசன்ன முத்திரைக் கையாய்ப்
பங்கு மெனவே பகர்ந்தனர் நூலோர்.

...450


6. சந்நிகிதமுத்திரை

சிகரமி ரண்டை யுங்க னிட்டங்க னிட்டஞ் சேர
விகுவுடன் மலர்த்தி யெட்டு விரல்களைக் கொஞ்சந் தூக்கி
நிகரிலா தேகாட் டச்சன் னிகிதமுத் திரையா மென்ன
வகையறிந் திடவே நூலோர் வழுத்தினர் கமல மாதே.

...451


7. சந்திரோதனமுத்திரை

இரண்டுபதா கங்களையு மணிக்கட் டோடு
மணிக்கட்டெ திர்த்துச் சேர்த்து
உரம்பெறவே தள்ளுதல்போல் புங்கி ஞ்செய்
தபிடித்த லோங்கு மீதை
வருமருட்சன் னிரோதமுத் திரைய தாகு
மெனவல்லோர் வகைபி ரித்துத்
திரமாகு நூன்முறையாய்த் தவறில் லாதே
யுரைத்தார் செல்வ மாதே.

...452


8. யோனிமுத்திரை

ரண்டுதற் சனியி லிருகனிட் டைகளை
யியல்புடன் பின்மா றிப்பிடித்துப்
பரண்டி மற்றநால் விரல்க ளைமுன்
பாகவே நீட்டியப் பாலே
கரண்டுமங் குட்டங் களைக்கொண்ட னாமி
கையின்மேல் வரைதனில் வைத்தல்
திரண்டதோர் யோனி முத்திரை யெனவே
செப்பினர் மூதறி வோரே.

...453


9. நிர்யாணமுத்திரை

இரண்டுகை விரல்களைப் பரஸ்பரங் கோத்து வீதச்
சுருண்டிட மடக்கியே திருப்பிப்பின் னொன்றாய்ச் சூழ
இரண்டுதற் சனியுஞ்சேர்த் துப்புங்கித மாக நீட்டல்
வருந்துநிர் யாணமுத் திரைக்கையாய் வழுத்து நூலே.

...454


10. சகடமுத்திரை

சகடமுத் திரையிடச் சங்கீர்ண முட்டிமேல்
மகிமையாய் விளங்குவ லதுசங் கீர்ண
முட்டியை வைத்தல் மூளு மென்றே
திட்டமாய்ப் பரத நூல்செப் பிடும்மே.

...455


11. ஆவாகனமுத்திரை

இரண்டு மர்த்த சந்த்ரனை விரித்து
மருண்டிடா துள்மடப் கிப்புங் கிதமாய்ச்
சுருண்ட தோமுகஞ் சூழச் செய்தல்
சுரண்ட மாவா கனமுத் திரையே.

...456


12. ஸ்தாபனமுத்திரை

ஆவா கனக்கையை யாங்குப்பு றக்கவிழ்த்தி
மேவுதலாய்க் காட்டவென்றே விள்ளுமே - பூவுலகில்
தாபனமுத்தி ரைக்கையி தாமெனவே சாத்திரத்தில்
சோபனமா மிம்மொழிகள் சொல்.

...457


13. அவகுண்டனமுத்திரை

ருபதா கத்தை யியல்புடன் சேர்த்துத்
திருந்த வௌியிற் றிருப்பி விரித்தல்
சிவபெரு மான்முன் சேரக் காட்டும்
அவகுண் டனமுத் திரையா மென்னே.

...458


14. க்ரதிதமுத்திரை

இருகைவி ரல்களையு மேற்கவே கோர்த்து
வறுமையில் லாமல் மடக்கக் - கிரதிதமெனு
முத்திரைக்கை யாமெனவே மூதறிவால் நூல்வல்லோர்
வித்தரித்தா ரென்றிதனை விள்.

...459


15. ஷண்முகோள்முகமுத்திரை

ஷண்முக வுன்முகத் தான முத்திரை
முன்னிரு முகுளக் கையை யெதிர்த்துத்
தாக்கிக் கீழ்மேற் றாக்கிக் காட்டல்
ஏற்கு மென்றே யியம்புவை மாதே.

...460


16. பாதுகைமுத்திரை

ஆதி யிரண்டு அர்த்தசந் திரனைக்
கோதிக் குளித்தல் குட்டத்தைத் தூக்கி
மீதாய்க் காட்ட வென்றுநூல் விள்ளும்
பாதுகை முத்திரைப் பாங்கீ தென்றே.

...461


17. முலைமுத்திரை

முசல முத்திரை யிருமுட்டிக் கையை
உசிய வொன்றுநே ரொன்றை யுயர்த்தித்
தூக்கிக் காட்டத் துலங்கு மென்றே
ஏக்க மில்லா தியம்பு நூலே.

...462


18. விஸ்தாரமுத்திரை

இரண்டு அர்த்த சந்த்ர னாகும்
கரத்தைச் சேர்த்துக் காட்டுத லாகும்
தரங்கொ ளும்விஸ் தார முத்திரையாய்
உரம்பெறப் பரத நூலோ திடுமே.

...463


19. இக்ஷுமுத்திரை

முட்டி போல்முட்டி முத்தரம் வைத்து
முட்டி மேற்றிரி சூலக் கைமணிக்
கட்டில் வைத்துக் காட்டுத லென்றே
காட்டு மிக்கு முத்திரைக் கையே.

...464


20. கும்பமுத்திரை

புகழ்பிடிக் கும்ப புட்ப புடக்கை
உகமையா மூர்த்வ முகமாய்ப் பிடித்தல்
கும்பமுத் திரையின் கூறென நூலோர்
அம்புவி யோர்கட் கறிவித் தனரே.

...465

முத்திராஹஸ்த லக்ஷணம் முற்றும்.

21. பாதபோதப் பிரகணம்

சமபாத மண்ட லப்பா தங்குஞ்சி தப்பா தஞ்சேர்
சுமையஞ் சிதப்பா தச்சீர் காட்டிய வடிம்பு பாதம்
திமிர்தா டிதப்பா தத்தைச் சேர்நாக பந்த சாட்க
திமருநிர்த் தம்பா தம்பட் சிக்கிறைப் பாதம் பத்தே.

...466


1. சமபாதம்

சாற்றுமிப் பதத்தில் முந்திச் சமபாத மிரண்டு பதம்
மாற்றாமற் சமமாய் நிற்கில் வழங்குமவ் விநியோ கங்கேள்
போற்றிய குருவு மன்னர் புகழ்தேவ சன்னி திச்சீர்
ஏற்றிய பெரியோர் முன்னு மினியநாட் டியாரம் பத்தே.

...467


2. மண்டலபாதம்

இரண்டெனுங் குதியெ திர்த்து விடைவௌி யாக நிற்றல்
வருமண்ட லப்பா தப்பேர் மருவிய விநியோ கங்கேள்
கரிபரி கருட னேற்றற் கடும்புலிப் பாய்ச்சல் மாற்றுத்
திருநட னாரம் பத்தும் நிலையிலு மாகு மின்னம்.

...468


அக்காலைப் பொருந்த வீரா றங்குல மகற்றிப் பின்னும்
ஒக்கவே தொடைமு ழந்தாள் ஒளிதருங் கடித டத்தைத்
தக்கதா குமிரு கைப்ப தாகைபோல் வளைத்தி டச்சீர்
ஒக்கிய வற்பு தக்கண் ணிந்திர நிலையா மென்னே.

...469


3. குஞ்சிதபாதம்

இருபாதம் நிலையா யூன்றி யிருகுதி யுயரத் தூக்கில்
வருகுஞ்சி தப்பா தச்சீர் வகுத்திடும் விநியோகங் கேள்
பெருகயிற் றினின டத்தற் பெரும்புலிப் பாய்ச்ச லாண்போல்
மருவுத லுண்ணி யேற்றல் மந்திப்பாய்ச் சலுக்கு மாமே.

...470


ஆமென வரக்கன் முன்னா ளரக்கன்றன் முதுகி லேறி
நேமமாய் நடனஞ் செய்ய நின்றிடும் பாத மென்றே
தாமஞ்சேர் குழலி னாளே தரணியோ ரறிய நூலோர்
தாமுரைத் திட்ட விந்தச் சாத்திர மறிந்து சொல்லே.

...471


4. அஞ்சிதபாதம்

ஈரெண்டு குதியு மூன்றி யிருபட மேலே தூக்கச்
சாருமஞ் சிதப்பா தச்சீர் தரும்விநி யோகஞ் சொல்லாம்
பேருடை நெசவு பொய்க்காற் பெருமுளை கோட்டல் மண்ணைச்
சேரவே மிதித்த லுள்ளங் காலொட்டத் தட்டச் செப்பே.

...472


5. வடிம்புபாதம்

வடிம்புதா னிரண்டு பாத மொருபக்கஞ் சாய்த்து நிற்றல்
கொடுவிநி யோகங் கேள்நெல் குற்றலு மண்மி தித்தல்
திடசட்டி யின்ப தார்த்தம் கடைதலுந் தண்ணீர் சேற்றைப்
படிமிதித் திடலு டன்சம் மணத்திலும் பகரு மானே.

...473


6. தாடிதபாதம்

தாடித பாதஞ் சொல்வாந் தனியொவ்வோர் பாத மாகச்
சூடுமெட் டங்கு லத்தைத் தூக்குதல் விநியோ கங்கேள்
ஆடிய கோபத் தும்பே ரணியட விலுமே மற்றும்
நீடிய வாட்டந் தன்னில் நிகழுமென் றுரைப்பார் மாதே.

...474


7. நாகபந்தம்

எடுத்திடு நாக பந்த மிருகாலை மாறிப் பின்னில்
தொடித்திடு விநியோ கங்கேள் சொல்லுமோ கினிநி லைக்கும்
அடுத்தயோ கிகள்தேர்ந் தொட்டி யாணக்கட் டுதற்குஞ் செக்கிக்
குடித்திட பாலை யூட்டிக் கொடுக்குங்கா லல்லால் மற்றும்

...475


நாணிலிலா லாகிரிக் காரன் நடப்பதும் முனிகள் சித்தம்
பேணிய தவத்தும் ஊடல் மறுத்தறன் னுடனே மற்றும்
வேணுகோ பாலன் கால்வைப் பதிலுமே விளங்கு மென்று
வாணராற் சொல்லு மிந்த வகையெனத் தேர்ந்து கூறே.

...476


8. சாட்கதிபதம்

நின்றிடு பாதநேராய் நிறுத்திப்பின் புறத்தில் மாறி
உந்தியே நடத்தற் சாட்க திக்குறும் விநியோ கங்கேள்
கன்றொரு பாம்பு பூதம் பசாசற்குப் பயந்தோன் பாதம்
மன்றுளா யுதத்திற் குப்பின் வாங்கினோன் காலு மாமே.

...477


9. கருடநிலைப்பாதம்

இடதுகால் மண்டி யிட்டு இசைவலக் கால்முன் னீட்டித்
திடமூன்றி முட்டு யர்த்தச் செலுங்கரு டக்கா லாக
அடவிற்கு விநியோ கங்கேள் கருடனு மனுமன் பூதம்
கடவுளைச் சுமக்கும் போதுங் கருதுவ தல்லால் மற்றும்.

...478


துணிந்திரா வணன்கை லாயம் தூக்கும்போ தம்பு பாணம்
புணரவே தொடுக்கும் போது மம்மனை போடும் போதும்
பணியவே பயிரி ணாற்றைப் பறிக்கும் போதுமிப் பாதம்
இணையவீ ராச னத்தி லிருக்கலு மாகு மென்னே.

...479


10. நிருத்தநிலைப்பாதம்

நிருத்தமாம் வலக்கா லூன்றி நேரிடக் காலின் முட்டுத்
திருத்தமாய் வளைத்துத் தூக்கல் செப்பிய விநியோ கங்கேள்
விரித்தச பாப திக்கும் வீரபத் திரன்நி லைக்கும்
கருத்துடைத் துவார பால காளுக்கு மாகு மற்றும்

...480


வழுதிக்காய் மதுரைச் சொக்கர் மாறியா டியநி லைக்கும்
செழுங்கோபஞ் செய்யும் போதுந் திறந்துதைக் கின்ற போதும்
வழுத்துவர் பரதங் கற்ற வாணர்கள் சொலுமிந் நூலை
முழுத்திற மோக மாதே மெழிந்திடு அடைவ றிந்தே.

...481


அடைவுகள்

உத்தம அடைவுவகை

கருதுமுத் தமநி ருத்தங் கானாட கடவைந் திற்கும்
மருவுதட் டடவு காட்ட டவுகட்ட டவுடன் மற்றும்
விரவுபக் கடவு மெட்ட டவுவகைக் கிருபத் தைந்தாய்
உறுமட விவ்வா றாக உற்பவ மறிந்து கொள்ளே.

...482


மத்திம அடைவு

திருத்துமத் திமமாம் நிர்த்தம் தேசிக வடவைந் தான
வருசற்குச் சிமிறி ரண்டாம் வகைக்குப்பத் தைந்த தாகும்
மருகுத்து சுத்துத் தொக்க டவுவகைக் கைந்த தாகிப்
பெருகுமிவ் வடவு மொத்தம் பேசுவாம் நாற்பத் தைந்தே.

...483


அதம அடைவு

கேளினி யதம நாட்டியங் கெருடிசே ரடவைந் திற்கு
வாள்மண் டிதண் டதாகு மதமத்துத் தம்மொன் பானாம்
ஆழ்டொம்பன் கரண மாகு மதமத்தின் மத்தி மஞ்சொல்
ஏழென்பர் வரிசைக் காகு மெண்ணிலா வனந்த மென்னே.

...484


ஆகுமிவ் வடவந் தந்த வாசானி டத்தில் நேராய்
ஊகித்துத் தெரிந்து மேலே யோதிய விதிப் படிக்கு
வாகுடன் அபிந யித்தல் வருமெனப் பரத நூலோர்
மோகமா யுரைத்தா ரிந்த மொழிதனை யறிந்து கொள்ளே.

...485


அடைவிற்கு அஸ்தங்கள்

உத்தர தேச சுத்த நிர்த்தந்தட் டடவிற் கோதும்
அத்தம்ப தாகமாய்நாட் டடவிற்குத் திரிப தாகம்
முத்தை நேர் மொழியி னாளே மூழுங்கட் டடவினிற்குப்
பத்திய தாகு மர்த்த பதாகமென் றுரைசெய் மற்றும்.

...486


பக்கட விற்குக் கைப்ப தாகமெட் டடவு பற்றும்
சிக்கிலாச் சிலிட்ட வம்சா சியபத்ம கோசக் கையே
மைக்கறு விழியி னாளே வளர்பர தங்கற் றோரி
லக்கண முலகோர் காண வாக்கின ரறிந்து கொள்ளே.

...487


மாராட்ர மிந்துஸ் தானி தேசத்தில் வாழ்நூ லாய்ந்து
சீராட்டும் பாட்ட ராலே செப்பிடு தேசி நிர்த்தம்
பேராம்சற் கடவு சந்திர களாசிமி றடவு பேசும்
கூர்டோள முச்சங்கக்கை குத்தட விற்கென் றோதே.

...488


சுத்தட விற்குக் கையாய்ச் சொல்லுமே யர்த்த சந்த்ரன்
தத்துதொக் கடவு புங்கி தப்பிரே ரிதமாய்ச் செய்தல்
பத்திசேர் மொழியி னாளே பரதநூ லாய்ந்த மேலோர்
உத்தம மாகு மென்றே யோதின ரறிந்து கொள்ளே.

...489


சாளய நிர்த்தஞ் சார்ந்த சற்கத்து டொம்ப வித்தை
நீள்சிலம் பத்தி னோடே நிகழ்ந்திடு கெருடி கட்காம்
வாள்மண்டி தண்டம் டொம்பன் கரணமாம் வரிசை யென்று
மீளட வைந்தி னுக்கு விள்சுர முறைதெ ரிந்தே.

...490


எந்தவஸ் தங்க ளேனு மிசைந்திட வூகஞ் செய்து
அந்தந்தக் கரத்தை யுத்வேஷ் டிதமப வேஷ்டி தத்தோ
ஐந்துவியா வருத்த மற்றும் பரிவிர்த்த முறைபி டித்தால்
விந்தைநேர் முகத்தி னாளே யியல்பதா மறிந்து கொள்ளே.

...491

பாதபேதப் பிரகணம் முற்றும்.

22. நவரச பேதப் பிரகணம்

நாமகள் கலைகட் கெய்தும் நயம்பெறு நவர சங்கேள்
ஏமுறு நகையே துக்க மினிவரல் மருட்கை யச்சம்
தோமுறு பெருமை வீரந் தொலைவிலா உவகை தூயோர்
தாமுறு சாந்தி யென்னு மொன்பது ரசமாய்ச் சாற்றே.

...492


1. நகைரசம்

சாற்றிய நகையின் றன்மை சார்வது மொருவர் தம்மால்
தோற்றிய விகழ்ச்சி யானுந் தோன்றிய விழிச்சொல் லானும்
கூற்றிசை யறிவிற் பேதை குயிற்றினு மடமை யானும்
ஏற்றிய நகைவந் தெய்து மென்றனர் காட்சி யாக.

...493


காட்சிசே ரற்பு தத்தின் கண்செய்யா சியமே கூச்சம்
மீட்சிசெய் யங்க வீனம் விகற்பமே ஞான மிக்கச்
சூட்சியி லங்க மேவுஞ் சுரத்தினிற் சினத்திற் போரில்
மாட்சிமை பிரமை கொண்டு வருநகை ரசமென் றாரே.

...494


2. துக்கரசம்

ஆரியர் விதித்த மெய்ப்பாட் டழுகைவந் தடுப்ப தாகும்
ஏரிலாப் பூச்சி யக்கே டெய்தினி வினியர் யாவும்
பார்தனி லிகழ்த லாலும் பரிவுறு நோயி னாலும்
சோர்வுள வறுமை யாலுந் துக்கமுஞ் சோக மன்னும்.

...495


மன்னர்தம் மிடுக்கத் தாலும் மரிப்பிலு மாத னங்கள்
புன்மையா வர்த்த நீரிற் புதைபொருள் போக்கி னாலும்
நன்னிசை யூட லாலும் நற்காமி களள வழுகைக்
குன்னிய செய்கை யாலு முண்மையாய்த் துக்கந் தோன்றும்.

...496


3. இனிவரல்ரசம்

தோன்றிளி வரலின் றன்மை தோற்றவை தோற்ற லாலும்
ஏன்றமை மூப்பி னாலும் இகழ்பிணி யிடுக்கத் தாலும்
தான்றனை யொருவர் முன்னந் தாழ்வுபட் டிகழ்த லாலும்
ஆன்றமெய்ப் பாடு காட்டு மமலமா துன்மார்க் கந்தான்.

...497


துன்மார்க்க ருடனன் மார்க்கஞ் சூழினு மிசையா தாலும்
பின்பார்க்குந் தோல்வி யாலும் பிழைசெய்யுங் குற்றத் தாலும்
பன்மார்க்க வாந்தி யாலும் படர்ந்ததுர்க் கந்தத் தாலும்
மென்மார்க்கத் தாலுந் தானே யிளிவரல்வந் தெய்து மாதே.

...498


4. மருட்கைரசம்

மாதுகேள் மதிம யக்கம் மருட்கையா மரிதா மொன்றால்
மீதெழு துணுக்கத் தாலு மிகபெரு வடிவு தோன்றப்
பேதமாங் கலகத் தாலும் பேரறி வின்மை யாலும்
நிதியாய் நினைத்த தெய்தாக் காலையின் நிகழும் வறுமை.

...499


வறுமையாம் விஷத்தாற் பூத வஸ்துவின் செய்கை யாலும்
உறுமன மயக்கத் தாலு முண்மைசேர் மணிமந் தரத்தால்
பொதுமைசேர் நன்ம யக்கம் பூவையர் மயக்கத் தாலும்
சருவமுந் தாங்கு பூமி தன்னிலே நிகழும ருட்கை.

...500


5. அச்சரசம்

நிகழுறு மச்சந் தோன்று நெறியது நேர்மை யன்றி
வெகுளிவே தாளங் கூனி மேல்வருங் காலும் வெம்மை
தகுவிலங் குறுக லாலுஞ் சாகர மடைத லாலும்
தொகுமுறை யரசர் கோபஞ் சூழினு மிடிய தாமே.

...501


இடிமழை காற்று மின்ன லிருளினால் வெயிலி னாலும்
படிகமார் வெள்ளம் பாம்பு படிகச முன்னி னாலும்
கொடுமையிற் படையிற் கூட்டங் குருதியிற் களத்தி னாலும்
வெடியுட னுயர்பீ ரங்கித் தொனிமேவி லச்சந் தோன்றும்.

...502


6. பெருமைரசம்

தோன்றிய பெருமை யான ரசமது சொல்லுங் காலை
வான்றுணைக் கல்வி யாலும் வாழ்வது மிகுத்த லாலும்
மேன்றகை யழகினாலு மெல்லையிற் கொடையாற் போரில்
ஊன்றிவெல் வெற்றி யாலு முற்றதென் றிசைப்பா ராதி.

...503


ஆதிகத் தால்வி ருந்தா லாதியாம் பழமை யால்மெய்ந்
நீதியாற் கீர்த்தி யால்கன் னியமத்தா மகத்தால் விண்ணோர்
கோதிலா மூன்று மூர்த்தி குலஞ்சயி லாதி வேலை
சோதிவேல் மூர்த்தி சந்த்ரர் குறைவிலாச் சூர்யராமே.

...504


7. வீரரசம்

குறைகளைச் சோல்லும் போதுங் குலவீன னென்னும் போதும்
நிறைதப்புச் செய்கை யாலும் நீண்டசத் துருக்க ளாலும்
பொறையிலாக் களவும் பொய்யும் போதவே நடத்தும் போதும்
திறைகாண மானஞ் சொற்பொன் திருட்டினிற் றெரியு மேலும்

...505


மேலுறு வெகுளி தோன்ற விரவிய வுறுப்பி லார்தம்
பாலது மொழித லாலும் பண்புடைக் குலமி லர்தம்
சீலமே சொலினுஞ் சிந்தை நினைத்தவை சேரா தேனும்
வேலுறுங் கொலையி னாலும் வெகுளிவந் துறுதல் வாதாம்.

...506


வாதுமுற் கூற லாலும் மடிதனைப் பிடிக்கும் போதும்
சூதுசெய் யிடத்தும் வையுஞ் சொற்பிழை மதத்தி னாலும்
மூதுணர் மதபே தத்தில் முயற்சியைத் தடுக்கும் வீரம்
காதல்சேர் மொழிநல் லார்தங் காதலிற் றோன்று மெய்யாம்.

...507


8. உவகைரசம்

மெய்யுறு முவகை யின்ப ரசமது விளம்பக் கேளீர்
தெய்வநன் னூல்க ளாலுஞ் சேருநற் புணர்ச்சி யாலும்
தையலார் விளையாட் டெய்துந் தயவினுஞ் சார்த லாலும்
பொய்யில் வுவகை தோன்றும் பொருவில்மெய்ப் பாடு கல்வி

...508


கல்வியாற் றிரையான் மிக்க கலியாணஞ் செய்த லாலும்
திலகமின் னார்பாற் கூடுஞ் செய்கையைச் செப்பும் போதும்
மலரிடுந் தநேக நாளாய் மைந்தரைப் பெறுத லாலும்
நிலைமை நிட்சேபங் கண்ட நேர்மைசந் தோஷம் பொன்னே.

...509


9. சாந்திரசம்

பொன்னணி மாதே சாந்தி பொருந்துசாத் வீகத் தாலும்
மன்னுசாத் திரங்க ளாலு மருமையி னேரி னாலும்
துன்னுசத் துருக்கள் தோன்றித் தொடர்நெருக் குற்ற தாலும்
அன்னியர் பொறாமை யாலும் விளம்புவர் சாந்தி தானே.

...510

நவரசபேதப் பிரகரணம் முற்றும்.
முதலாவது அத்தியாயம் (நாட்டிய உபயோக அவயவபேத விநியோக லக்ஷணம்) முற்றும்.


இரண்டாம் அத்தியாயம்

முகூர்த்தாதி எழுவகைத் தோற்ற அபிநய லக்ஷணம்

காலத்தின் அபிநயம்


ஞாயிறல பல்லவந் திங்களிற் கர்த்தசசி
நற்றிரி பதாகஞ் செவ்வாய்
நாடுபுதன் சந்தம்ச மாஞ்சிகரம் வியாழனா
நவில்வெள்ளி யேப தாகம்
தூயசனி முட்டியா நிமிஷமே சந்தம்சந்
துன்னுமரை நாழி கைக்குச்
சொல்லுமே கரமர்த்த சூசியா யொருநாழி
கைக்கோது மேசூ சியாய்ச்
சாயா தொருகடை யுமொரு ஜாமமம்
சாசிய நாளி னிற்கும்
தங்காத சூசியா மயனமொடு வருடம்
பதாக மாகப் புகலுமென்
றேயாம லேவருங் காலபே தங்களுக்
குற்றிடுங் கரம றிந்தும்
உறுதியாய்ப் பரதவகை முறைய தாகவே
நந்தியோ தினனறிந்து கூறே.

...511


1. யுகாபிநயம்

கிருதயுகம்

சீர்வளர் யுகந்த னக்குச் செப்புங்கை விவரங் கேண்மின்
தார்புகழ் வாமக் கைப தாகமாய்ச் சிகரக் கையை
ஏர்எக்ஞ சூத்தி ரம்போ லியம்புத க்ஷிணத்தாற் காட்டில்
வாருடைத் தனத்தி னாளே வருகிருத யுகமே தாமே.

...512


திரேதாயுகம், துவாபரயுகம்

பதாகமே தாக்ஷி ணக்கை பகர்சிக ரம்வா மக்கை
அதோமுக மாய்ப்பி டிக்கி லதுதிரே தாயு கம்மே
சுதாகட காமு கத்தைச் சொல்த க்ஷிணமம் சரசியம்
நிதானவா மத்தாற் காட்டி னிகழ்துவா பரம தாமே.

...513


கலியுகம்

தக்ஷிண சூசி யாகுஞ் சிகரமே வாம மாகும்
நிச்சிய மாகத் தானே கலியுக நிகழ்த்து மென்ப
மெச்சிய விகத்து ளோர்க்கு மேவின யாக்ஞ வல்கர்
பக்ஷமாய்ப் பரத நூலிற் பகர்ந்ததைக் கண்டு கொள்ளே.

...514

யுகாபிநயம் முற்றும்.

2. வருடாபிநயம்

பிரபவ திரிப தாகை பேசுமே விபவாண் டிற்கு
வருங்கர்த் தரீமு கக்கை சுக்கில கபித்த மற்றும்
பிரமோதூ தப்ப தாகை பின்னுமப் பிரசோற் பத்திக்
கருமைசேர் கைய தாகு மர்த்தப தாக மென்றே.

...515


ஆங்கீர சாமு சாஸ்ய மாகுமே ஸரீமு காண்டில்
தாங்குமே சிகரக் கையாய்த் தனிபவ வருடத்திற்க
தாங்கட காமு கக்கை சரியுவ முட்டிக் கையா
மாங்கையாய்த் தாதாண் டிற்கே பர்த்தசந் திரனென் றோதே.

...516


காணீச் சுரச்சி லிட்டக் கடகாமு கக்கை யாகும்
கோணிலா வெகுதான் யாலாங் கூலமே பிரமா திக்குத்
தோணுமே யம்ச பட்சம் விக்ரம சுகதுண் டக்கை
பூணுடை விசுவாண் டிற்குப் பொருந்துந்தூ பக்கை யென்றே.

...517


சித்திர பானு பத்ம கோசமாஞ் சுபானு சேரப்
பத்திய சிலிட்ட சந்த்ரன் பகர்தாரு ணாண்டி னுக்குத்
தத்துந்தா பரசங் கம்பார்த் திபவாண்டு முகுள சங்கம்
கொத்துறும் வியவாண் டிற்குக் குஞ்சிதக் கையென் றோதே.

...518


சருவசித் துச்சம் தம்சம் சர்வதா ரிக்குக் கையாய்
அருமைசே ருஞ்சி லிட்ட வம்சாஸ்யம் விரோதிக் காகும்
பெரும்பாசம் விகுரு திக்குப் பிரமாரக் கைய தாகும்
தருகர வருடத் திற்குத் தாம்பிர சூடமாமே.

...519


நந்தன வருடத் திற்கு நவிலுமே கைசி விட்ட
சந்தம்சம் விஜய வாண்டு சாளையம் ஜயவாண் டிற்குச்
செந்திரு கஜமு கம்மன் மதசிம்ம முகமே யாகும்
சொந்ததுன் முகிசி விட்ட சுகதுண்டக் கையாய்ச் சொல்லே.

...520


ஏர்விளம் பிக்குப் பிரம்மக் கையாகு மினிவி ளம்பி
தேர்மண்டூ கம்வி காரி சிவிட்டலாங் கூல மாகும்
சார்வரி பதும சங்கந் தனிப்லவ வலபத் மக்கை
தார்சுப கிருது வுக்குச் சதுரக்கை யாமென் றோதே.

...521


கேள்சோப கிருதுக் குஞ்சங் கீர்ணகாங் கூலமாகும்
வாள்குரோ திக்குக் கையாய் வருஞ்சிலீ முகம தாக
நீள்விசு வாவ சுக்கு நேர்மிரு கசீரி டக்கை
ஆள்பரா பவவாண் டிற்கே யபயமும் வரத மாமே.

...522


பிலவங்க டமரு கக்கை பேசுங்கீ லகவாண் டுக்குத்
துலங்குஞ்சு வத்தி கக்கை சொல்லுஞ்சௌ மியவாண் டுக்குச்
சிலிட்டவ ராளக் கையாய்ச் செலுஞ்சாதா ரணவாண் டுக்குச்
சொலுஞ்சர்ப்ப சீரி டக்கை தோகைநீ யறிந்து கூறே.

...523


விரோதி கிருதும தாந்திர தாம்பிர சூடம் விள்ளும்
பரிதாபி முகுளக் கையாய்ப் பகர்பிர மாதீச் சாவிற்
கருமையாங் கடகாவர்த்த னமதாகு மானந் தாண்டு
பெருமைசேர் சுபோதக் கையாய்ப் பேசலா நூலை யாய்ந்தே.

...524


யனியிராக் கதவாண் டிற்குச் சந்தான சிகர பந்தம்
முனிநள விலதை யாகு மூட்டுபிங் களவாண் டிற்கு
வினயமா மூர்ணா பக்கை விள்ளுமே காள யுத்தி
கனியுமிந் நூலாற் பிண்டிக் கையென வோது மாதே.

...525


சித்தார்த்தி திரிலிங் கக்கை செப்புமே ரௌத்தி ரிக்கு
வைத்தவக் கினிக்கை துன்ம திக்காகு மகரக் கையாய்
யுத்ததுந் துபிக்கு நாக பந்தக்கை யுரிமை யாமு
ருத்திரோற் காரி பாணா வத்தமென் றோது மானே.

...526


கருதுமி ரத்தாட் சிக்குச் சந்திர களாவத் தமாகும்
குரோதன வருடத் திற்குக் கூறுமே மவுரி சங்கம்
தெரிவையே யட்ச யாவிற் கஞ்சலி யத்த மென்ன
வருடக்கை யியல்பா மிந்திரன் மதத்தினில் வருமென் பாரே.

...527

வருடாபிநயம் முற்றும்.

3. அயநாபியம்

அயனத்தி னபிந யந்தான ருளுத்த ராய ணத்திற்
கியம்புதக்ஷி ணக்கை சூசி யேகுமுத் வேஷ்டி தத்தால்
நயம்பெறச் சுற்றி வாமக் கைப்புற நாடி நிற்கில்
சயம்பெறு பரத நூலிற் சாற்றினர் திசையு ளோர்க்கே.

...528


தெக்கணா யனத்தின் பாவந் திசைகொளும் வாமக் கையை
நிற்கவே சூசி யாக்கி நிலை சுற்றித் தக்ஷி ணத்தின்
பக்கமே சாயச் செய்தல் பகருமவ் வயனத் தின்கை
மிக்கவத் திரிம தத்தில் விளம்பினர் பரத நூலில்.

...529

அயநாபிநயம் முற்றும்.

4. ருதுவின் அபிநயம்

வசந்தமா மராளக் கையை வாமபா கத்தி லாட்டி
நிசந்தரு பதாகங் கூட்ட நிகழ்வசந் தவிருது வாகும்
பசையிரு பதாகக் கையை மேல் கீழாய்ப் பகுந்து நீட்டில்
அசைவிலா விருது கீஷ்ம மாகுமென் றறிந்து கொள்ளே.

...530


இருகரமம் சாசி யத்தை யேத்திமேற் சலன மாக்கி
வருமொரு பதாகத் தாலே வருஷமாம் ருதுவு மென்பர்
கரமிரு பதாகத் தாலே கைகாட்டி யாட்டி நின்றால்
சரற்கால ருதுவா மென்று சாற்றினர் பரத நூலோர்.

...531


வாமதக்ஷி ணத்தி னாலே வளர்திரி லிங்கக் கையால்
ஏமந்த ருதுவா மென்ப ரியல்சிசி ருதுவுக் கேதான்
சேமிப்பி ரேரி தச்சூ சிக்கரந் திரிலிங் கம்மாம்
சோமநா தன்ம தத்திற் சொல்லுவ தறிந்து செய்யே.

...532

ருது அபிநயம் முற்றும்.

5. மாதங்களின் அபிநயம்

சித்திரை மாதத் திற்குச் சிலிட்டல பதுமக் கையாம்
பத்தும்வை காசி சிலிட்டப் பதாகமா மானி மாதம்
யுத்தசந் திரனா டிக்கு யோதுமென் னிலைக்கை யாகச்
சுத்தவா வணிக்குக் கையாய்ச் சொல்லுவர் சூசி யென்றே.

...533


புரட்டாசி வற்சி தக்கை யைப்பசி மண்ட லம்பேர்
பெருங்கார்த் திகைக்கு கூர்மம் பேசுமார் கழிக்குப் பல்லிக்
கரமர்த்த முகுளந் தையா மர்த்தசூ சிக்கை மாசிக்
கருள்வக்கிர சூசி மீனுக் கறைந்தனன் றசமு கன்றான். .

..534

பாதங்களின் அபிநயம் முற்றும்.

6. பக்ஷத்தின் அபிநயம்

வாமக்கை பிறைக்கை யாக்கி வானத்தை நோக்கு மற்ற
நேமக்கைச் சந்தம் சம்மாய் நிகழ்சுக்கில பட்ச மென்பர்
ஆமது பூர்ண நாபக் கரமதி லர்த்த சந்த்ரன்
தாமதை மறைக்கிற் கிருஷ்ண பட்சமாய்ச் சாற்று நூலே.

...535

பக்ஷங்களின் அபிநயம் முற்றும்.

7. திதிகளின் அபிநயம்

அரிவையே திதிபத் தைந்திற் கத்தங்கே ளாய்ச்சி லிட்ட
மிருகசீ ரிடக்கை யாக மேவுமே பிரத மைக்கங்
கருமைசேர் துதிகைக் கர்த்த சதுரமர்த் திரிதி யைக்குப்
பெருமைசே ருஞ்சி லிட்டப் பிரமரக் கையென் றோதே.

...536


கொடும்வியாக் கிரஞ்ச துர்த்தி கூறும்பஞ் சமிம யூரம்
கிடுசட்டிப் பார்வை சந்தம் சமதாஞ் சத்த மிக்கு
நடுவதா மர்த்த முட்டி நவிலட்ட மிக்குக் கூர்மம்
அடிதொழு நவமி சிலிட்ட வம்சபட் சக்கை யாமே.

...537


தாமிவிச் சிலிட்டக் கையாய்ச் சாற்றுமே காத சிக்கு
வரைசிலிட் டக்க பித்தம் மருவுந்து வாத சிக்கே
அசைவிலா தோது மானே யர்த்தக பித்த மென்றும்
திசைகொடி ரயோத சிக்குச் சிலிட்டமு குளம்ம தாமே.

...538


சதுர்த்தசி தனக்கு வக்ர திரிபதா கையதாய்ச் சாற்றும்
அதிதிசே ரமாவா சைக்கு அக்கினிக் கைய தாகும்
நிதிகொளும் பூர ணைக்கு நேர்பூர ணக்கை யாகும்
கதிகொளக் காசி பன்றன் மதத்தினிற் சாற்று நூலே.

...539

திதிகளின் அபிநயங்கள் முற்றும்.

8. வாரங்கள் கிரகங்கள் இவற்றின் அபிநயம்

சொல்லுமே ஞாயி றுக்குச் சூசியைச் சுற்றிக் காட்ட
வலாலுடை மதிக்குச் செங்கை யர்த்தசந் திரன்செவ் வாய்க்கு
செல்சிலிட் டமயூ ரக்கை புதன் சிலிட்ட கர்த்த ரிக்கை
கல்விசேர் வியாழ னுக்குச் சிலிட்டலாங் கூலக் கையே.

...540


வெள்ளிக்குச் சிலிட்ட சந்த்ரன் விளம்பலா மந்த னுக்கு
வள்ளிதா மிரேகா சந்த்ரன் வளராகு சுகதுண் டக்கை
பள்ளிகே துவுக்கு முட்டிக் கைசுக்கிர பரத நூலில்
விள்ளுமிக் கிழமை கட்கு நவக் கோள்களுக்கு மென்றே.

...541

வாரங்கள் கிரகங்கள் இவற்றின் அபிநயம் முற்றும்.

9. நக்ஷத்திரங்களின் அபிநயம்

பாரினி லசுப திக்குப் பகர்தாம்ப்ர சூட மாகும்
நேர்பர ணிக்கை சந்த நிகழ்சுக துண்ட மாகும்
ஆரற்கத் திரிப தாகை யாகுமு ரோக ணிக்குச்
சீர்சிலிட் டமுக ளந்தான் சேர்க்கையென் றறிந்து கொள்ளே.

...542


கொள்ளவே மும்மீ னுக்காங் கூறிய தாங்கூ லக்கை
விள்ளுமா திரைக்கு ரேகை யாமென்பர் புகர்த நாட்குத்
தள்ளவே மீன முத்தி ரைக்கையாய்ச் சாற்றும் பூசம்
தெள்ளிய சலன பட்சஞ் சேர்ந்துரைத் தனர் நூல் வல்லோர்.

...543


வல்லவா யிலிய நாட்கு வளர்சக்க ரைக்கை யாகும்
கல்லசேர் மகநாட் காகுங் காங்கூலக் கையே பூரம்
சொல்லிய தாம்ப்ர சூடஞ் சுழல்சிக ரக்கை தன்னை
நல்லவுத் தரத்திற் கென்று நவிலுவர் பரத நூலோர்.

...544


நூலாய்ந்த வத்தத் திற்கு நுவல்சலி தப்ப தாகை
தாலமாஞ் சித்தி ரைக்குச் சலிதசந் தம்ச மாகும்
பாலெனுஞ் சோதி நாட்குப் பகர்கட காமு கக்கை
கோலமாஞ் சலித பத்ம கோசம்வி சாகத் திற்கே.

...545


அனுடமா முட்டி சூசி யாகுமே கேட்டை நாட்கு
வினவக் கீழ் நோக்கு முத்து வேஷ்டித பதும கோசம்
மனமேகேண் மூல மர்த்த பதாகமங் குசம்போற் காட்டல்
கனமுறு பூரா டத்திற் காகுச மிக்ஞைக்கை யென்றே.

...546


என்றுமா னிக்கு முயுத்த சந்திர னோணத் திற்கு
மன்றிய கைச்ச லித்த மயூரமா மவிட்டத் திற்குக்
குன்றிய முகுள மாகுங் கூறிய சதய நாளுக்
கொன்றிய சூசிக் கையா யுற்றுநின் மனத்துட் டேரே.

...547


தேர்ந்தபூ ரட்டா திக்காஞ் சங்கீர்ண பதாகச் செங்கை
ஆர்ந்திடு முத்திரட் டாதிக் காகுஞ்சு வத்தி சூசி
சேர்ந்தரே வதிக்கி யானைத் தந்தமாய்ச் செப்பு நூலைச்
சாரவே வசிஷ்டர் தாமுஞ் சாற்றின ரறிந்து கொள்ளே.

...548

நக்ஷத்திரங்களின் அபிநயம் முற்றும்.

10. யோகங்களின் அபிநயம்

கரப்பிர விசார மென்னுந் துவாதசப் பிராணக் கையில்
தருசங்கே தக்கை யாலே சாரும்வி ஷ்கம்ப மாதி
பெருயோ கங்களுக்குப் பேணிக்கை பிடிப்ப தென்றே
பரதத்திற் சார்ஞி தேவர் பகர்ந்தன ரிதுவா மென்றே.

...549

யோகங்களின் அபிநயம் முற்றும்.

11. கரணங்களின் அபிநயம்

கரணங்கள் பதினொன் றிற்குங் கருதுவோம் பவசிங் கத்திற்
கொருகைசிங் கமுக மற்று மொருகைவி யாக்கிர மாகும்
வருபால வம்பு லிக்கு விருகை வியாக் கிரமாய் வைத்தல்
தருகவு லம்பன் றிக்குச் சாற்றும்வ ராகக் கையே.

...550


தைதிலக் கழுதைக் கஞ்ச லிக்கையாங் கரசை யானைக்
கெதிர்கரி யஸ்த மாகும் வணிசையா மெருத்தி னுக்குப்
பதிசிம்ம முகக்கை யாகும் பத்திரைக் கோழிக் குக்கை
விதிகொளுந் தாம்ர சூடக் கையென விளம்பு மாதே.

...551


சகுனிகாக் கைக்குக் கையம் சாசியம் சதுட்பா தம்நாய்
துகையிலா தோது மேகை சிலிட்டப தாகஞ் சூட்டும்
தகைநாக வம்பாம் பிற்குச் சர்ப்பசீ ரிடக்கை யாகு
மகிமத்துக் கினமெ லிக்கு வர்த்தசூ சிக்கை மானே.

...552

கரணங்களின் அபிநயம் முற்றும்.

12. லக்னங்களினபிநயம்

ஆடுகாங் கூல மேறுக் காகுமே சிகரக் கையாய்
நீடிய மிதுனத் திற்கு நேர்சூசி சுகதுண் டக்கை
நாடிய நண்டிற் காகு நல்லரி கீழ்நோக் குற்றுத்
தேடிய வரிமு கந்தான் றெறிவைக்கு மிருகச் சென்னி.

...553


சென்னிநேர் துலைக்குக் கையாஞ் சீர்கல சந்தே ளுக்குப்
பன்னிய நண்டா குஞ்சர பத்திற்குச் சதுர மாகும்
முன்னுமஞ் சலிசு றாவா யுறுகும்பம் பதும கோசம்
மன்னுமீன் றிரிப தாகை வகுத்தனர் பரத நூலோர்.

...554


பரதநூல் வியாசர் சொன்ன பன்னிரு ராசி தன்னைத்
திரமதா யூகத் தோடு சிறக்கவே யிருகை யாலே
பெருமையா யபிந யித்துப் பேசுங்கா லன்னோ ரெல்லாம்
அருமைசேர் மகிழ்வி னாலே யானந்த மடைவர் பாரே.

...555

லக்னங்களின் அபிநயம் முற்றும்.

13. நவக்கோள்களினபிநயம்.

ஒமெனுங் கழுத்து வாகுக் குகந்தெதிர் கபித்தக் கையு
மாமல பதுமக் கையு மமைப்பது பானு வாகும்
வாமத்திற் பதமக் கையாய் வலத்தினிற் பதாகம் வைத்தான்
மாமதிக் காகு மென்று வழுத்தினர் பரத நூலோர்.

...556


நூலினி லுரைத்த வாம நோக்குங்கை சூசி யாக்கி
மோல்வல முட்டி யாக்கு வித்தது செவ்வா யாகும்
கைாலமா மிடது பக்கங் கூட்டிய முட்டிக் கையோ
டேலவே வலது கைப்ப தாகமே புதனுக் கென்பாம்.

...557


புதனென்ற குருவுக் கேதான் பொருந்திய சிகரம் ரண்டு
மிதமுள வெக்ஞ சூத்ரம் போலவே யியம்ப லாகு
மதிவல மிடமாங் கை ளானதைக் கீழு மேலு
மதியுடன் முட்டி யாக்க வாமமாஞ் சுங்க னுக்கே.

...558


வாமத்திற் சிகரம் வைத்து வலக்கைத்தி ரிசூலம் வைத்தால்
நேமமாம் சனியென் றோதி நிகழ்த்திடும் சர்ப்ப சீர்ஷம்
வாமத்தில் வைத்து சூசி வலக்கையி லேபி டித்தாற்
சேமமி ராகு விற்கே செப்பினர் பரதத் தோரே.

...559


பரதத்தி லாய்ந்து ணர்ந்த பாவக்கை யறிந்து மொண்பான்
கிரகமாங் கேது விற்கே கிளம்பிய வலக்கை தன்னில்
அருத்தப தாகை யாக்கி யதனிட வத்தஞ் சூசி
உரைத்தவா னதிபு னைந்தோ னூகம தறிந்து செய்யே.

...560

நவக்கோள்களின் அபிநயம் முற்றும்.
முகூர்த்தாதி அபிநயம் முற்றும்.

2. ஸ்தாவராதி அபிநயம்
1. உலகங்கள்

பூலோகம் புவர்லோகம்

சீலமாம் பதாகந் தன்னை யதோமுக மாகப் பற்றப்
பூலோகத் திற்காங் கர்த்தரிக் கையைப் பொருத்த வுந்திப்
பாலிரே சிதமாய்ச் செய்து பற்றிட லாகு மென்று
சாலவே புவர்லோ கத்தின் றகைமையை யறிந்து கொள்ளே.

...561


சுவர்லோகம்

கரிய சூசிக் கையைக் கும்பநே ராகச் சக்ரா
கார வுத்வேஷ் டிதம்மாய்க் காட்டுதல் சுவர்லோ கப்பேர்
சாரு மென்றமர ராசான் மதந்தனிற் புகலு மிந்த
நேர றிந்தபி நயித்த னிகழ்த்தலாங் கமல மாமே.

...562


ஜனலோகம் தபோலோகம்

நெடியதாம் வைஷ்ண வக்கை நெஞ்சினர் ரேசிதஞ் செய்யில்
வடிஜன லோகஞ் சுங்கன் வழுத்தினன் தபோலோ கத்தைப்
பிடியுள்ஞா னக்கை நாபியிலுத் வேஷ்டி தம்பிரே சித்தல்
அடவுள கோக ளன்ம தஞ்சொலு மறிந்து கூறே.

...563


மகர்லோகம் சத்தியலோகம்

சுகதுண்ட நெற்றி நேரிற் சமமாகச் சுற்றிக் காட்டல்
மகர்லோக மென்னச் சுப்ர மண்ணிய னுரைத்தான் சூசி
முகநேரிற் சக்ரா கார முறச்சுற்றி யபிந யித்தல்
தகைமைசேர் ஸத்ய லோகந் தனக்கென்றான் குமரன் றானே.

...564


அதல, விதல, சுதல, ரசாதலம்.

அதலமாஞ் சிந்து பந்த மபவேஷ்டி தமதாய்ப் பற்றல்
விதலலோ கம்முத் தான மிருக சிரமப வேட்டி த்தல்
சுதலந்தந் தமிருகச் சென்னி யபவேஷ்டஞ் சொல்லு மேர
சதலமே நாக பந்த மபவேஷ்டஞ் சாற்று மாதே.

...565


தராதல, மகாதல, பாதாளம்.

சீர்தரா தலந்த்ரி கூட படமப வேஷ்டஞ் செப்புஞ்
சேர்மகா தலத்திற் குக்கை திரிசக்ர மபவேட் டித்தல்
பார்புகழ் பாதா ளந்தான் சங்கீர்ண பதாகந் தன்னை
நேரப வேஷ்டி தஞ்செய் திடலென நிகழ்த்து மாதே.

...566

உலகங்களின் அபிநயம் முற்றும்.

2. மலைகள்

இமயமலை, திடதமலை, விந்தை

வர்த்தனை யிமயக் கோடு மார்புநே ரிரண்டு கையைக்
கர்த்தரி சுவத்தி கத்தைக் காட்டுத னிடதத் தோடு
நெற்றிநே ரோரு கர்த்த ரீகமாய்ப் பிடித்தல் விந்தைக்
குற்றவக் கையை வாய்க்கு நேருறப் பிடித்த லாமே.

...567

மாலியவான்கிரி பாரியத்திரி

மாலிய வான்கி ரிக்கு வகுத்துச்சொல் லொற்றைக் கையை
ஆலஞ்சேர் கர்த்த ரீக மாய்வலத் தோளில் வைத்தல்
ஏலவே பாரி யத்தி ரிக்குவ யிற்றி னேரே
மேலுற வொற்றைக் கையை விசைகொளப் பிடித்த லாமே.

...568


கந்தமாதனகிரி கைலாயம்

கந்தமா கிரிக்குக் கர்த்த ரிக்கையை முகத்து நேரே
அந்தமாய்ப் பிடித்த லாகு மரன்கயி லாயத் திற்கு
முந்திடக் கையு யர்த்தி யதோமுக வம்ச பட்சம்
சிந்தாக்கீ ழாய்வ லக்கைச் சிகரமாய்ப் பிடித்த லாமே.

...569


மந்தரகிரி சக்கரவாளம்

கார்கொள்மந் திரகி ரிக்குக் கடகாமு கக்கை ரண்டும்
தேர்சுவத் திகம தாக்கித் திரிபதா கைப்பி டித்தல்
சேர்சக்ர வாளத் திற்கு விடக்கையைச் சிகர மாக்கி
வார்வலஞ் சூசி பற்றி மண்டலஞ் சுற்றிக் காட்டே.

...570


மகமேரு நீலகிரி

மேருவிற் கிடது கர்த்த ரிக்கையா யதற்குக் கீழே
ஊர்வல மர்த்த சந்த்ர னுத்தான மாய்ப்பி டித்தல்
சார்நீல கிரிக்கி டக்கை சதுரஸ்த மதோமு கத்தாய்
நேருயர் வலத்தை யர்த்த சந்த்ரன் மேற் பிடித்து நேரே.

...571


பலமலைகள்

ஆலிட சுத்தா னத்தி னிற்பதே யாகு மின்னம்
கால்பல மலைம ளுக்குக் கர்த்தரீ முகத்தைப் பின்னும்
ஏலவே சுவத்தி கத்தை பிடித்தலா மென்பர் நூலோர்
வேல்விழி மாதே மேலே விருக்ஷங்கட் குரைசெய் வோமே.

...572

மலைகளின் அபிநயம் முற்றும்.

3. கடல்கள்

சொல்சமுத் திரம்ப தாகைச் சுவத்திக முள்ளங் கைமேல்
மெல்லவே சுற்றி யத்தை யதோமுகம் பிடித்தன் மேவும்
வல்லிரு பதாகந் தன்னை யதோமுகச் சலன மாக்கல்
புல்லுவர் கடல்க ளுக்குப் பொதுவாக நூல்வல் லோரே.

...573


உப்புக்கடல் கருப்பஞ்சாற்றுக்கடல்

முன்னுரை கடலின் சீரை மொழியுமே வெவ்வே றாகத்
தன்னிக ரில்லா வுப்புக் கடலுக்கு முகுளந் தன்னை
மன்னும்வியா விருத்தம் பற்றல் வழுத்துமிக் குக்க டற்கே
அன்னையே வமர ராச னலபத்மக் கையென் றானே.

...574


கட்கடல் நெய்க்கடல் தயிர்க்கடல் பாற்கடல்

சாராயக் கடற்குச் சுங்கன் சங்கீர்ண பதாகஞ் சொன்னான்
தாரையாய் நெய்க்க டற்குச் சதுரக்கை யநுமன் சொன்னான்
தேரிய தயிர்க்க டற்றத் திலன்றிரி பதாகஞ் சொன்னான்
நாரதன் பாற்க டற்கு நவின்றன னரவின் சென்னி.

...575


நல்ல தண்ணீர்க்கடல்

நானிலத் தோர்கட் கெல்லா நன்றென வுரைப்ப தற்குத்
தேனென விளங்கு கின்ற சுத்தோத கக்க டற்கு
மானனை யானே கேளாய்க் கோகளன் மதத்திற் கையைத்
தோணவே பதாகமென்று சொல்லின னறிந்து கொள்ளே.

...576

கடல்களின் அபிநயம் முற்றும்.

4. நதிகள்

காவிரி

இருகட காமு கத்தைச் சுவத்திகஞ் செய்து ஏற்க
விரிவுக்கா தோரம் வைத்து இறக்கியே பிடித்தி டச்சீர்
பெருகிய பரத நூலோர் பேணிக்கா விரிந திக்கு
வருமென வுரைத்தா ரிந்த வகையறிந் துலகி லோதே.

...577


துங்கபத்திரை

வடிவுள மிருகச் சென்னி மல்லாத்தி யங்குட் டத்தை
இடதுகைப் பாரி சத்திற் சலனஞ்செய் திடில வற்றைப்
படிமிசை மருவுந் துங்க பத்திரை நதிக்கா மென்று
மடமயி னடன மாதே வகுத்தனர் நூல்வல் லோரே.

...578


ரேவா

உருமிகு பதாகந் தன்னை யொருகண்ச மீபஞ் சேர்த்துத்
தருகாமற் காட்டி மற்றோர் புறந்திட்டி சாய்த்து மற்றும்
பெருமைசேர் மொழியி னாளே பேணிய பரத நூலோர்
பெருகியே யோடும் ரேவா நதிக்கெனப் பேசினாரே.

...579


கங்கை, கிருஷ்னவேணி, காவிரி

இயம்புவ ரிவைக ளின்றி யினங்கங்கை தாம்ர சூடம்
பயமப வேஷ்டி தவ்யா விர்த்தமாய்ப் பற்ற லென்றும்
வியனுறு நதியாங் கிருஷ்ண வேணிச்சிம் மமுக மென்றும்
சயமுறு காவி ரிக்குச் சதுரக்கை யாகு மென்றே.

...580


சரஸ்வதி, நர்மதா, கோதாவரி, துங்கபத்ரா

சரஸ்வதி நதிக்குக் கைப்ப தாகச் சதுரமே யாகும்
பரவிய நர்ம தாவிற் கர்த்தப தாகை யாகும்
தருகாக்கோ தாவ ரிக்குச் சங்கீர்ண பதாகம் பேசும்
அருமையாந் துங்க பத்ர வம்சாஸ்யக் கையென் றோதே.

...581


சாரவதி, வேந்திரவதி, சந்திரபாகை, சரயு, பீமநதி

சரவ திக்காம் பாணந் தருவேத்தி ராவ திக்குக்
கூறுமே சூசிக் கையாய்க் கொளுஞ்சந்த்ர பாகா விற்கு
ஆகுமே சலனக் கையாய்ச் சரயுவுக் கலபத் மக்கைப்
போரளா ளக்கை யாகும் பீமந திக்கென் றோதே.

...582


சுவர்ணமுகி, பாபநாசம், தாம்ரபர்ணி

சொலுஞ்சுவர் ணமுகிக் கர்த்த சதுரமாம் பாப நாசம்
வலிதெனுஞ் சுகதுண் டக்கை தாம்ப்ர பன்னிக் கத்தம்
தலவாமஞ் சதுரக் கையாய் வலக்கரந் தனைப்ப தாகச்
சலனமே செய்வ தென்று சாற்றுவாய் முறைதெ ரிந்தே.

...583


வேகவதி

வருவேக வதிக்கு ரண்டு முட்டிக்கை வயிற்றி னேரே
குறுக்காகப் பிடித்தப் பாலே பதாகத்தைப் பரிவர்த் தங்கொண்
டருமையாய் முகமுன் னீட்டி நதியஸ்த மளவாய்க் காட்டில்
வருமென்றிந் நதிகட் கெல்லாம் வழுத்தினன் வியாழன் றானே.

...584


பொது

அறைந்திடும் நதியஸ் தங்க ளபவேஷ்டி தவ்யா விர்த்தம்
புரியவே பதாக மாக்கல் பொருந்தும தின்னங் கேளாய்
பெருமையா நதிக டற்குப் பேர்நாம நாளைக் கொண்டு
அருமையா யபிந யித்த லாமென்றான் வியாழன் றானே.

...585

நதிகளின் அபிநயம் முற்றும்.

5. குளம், படி, கிணறு

அளவிலா சூசிக் கையை யபவேஷ்டி தமதாய்ச் செய்து
சுழலுநாற் கோண மாகச் சுற்றிப்ப தாகந் தன்னைக்
குழையவே சலனஞ் செய்தல் குளங்களுக் காகு மென்று
மழலைசேர் மொழியி னாளே வகுத்தனத் நூல்வல் லோரே.

...586

கேளிரு சதுரக் கையைக் கீழ்மேலாய்த் தாவிக் காட்டல்
வாழிய படிக ளுக்கு வகுத்தலாஞ் சூசி சுற்றிப்
பாழிலாக் கபித்தந் தன்னை யபவேஷ்டி தமதாய்ப் பற்றி
நீளவா கருஷ ணித்த னிகழ்த்துவாய் கூபத் திற்கே.

...587

குளம் முதலியவற்றின் அபிநயம் முற்றும்.

6. சுரப்பிறப்புத்தீவுகள்

சம்பு, பிலட்சம், சூசம், க்ரவுஞ்சம்

சம்புவாந் தீபத் திற்குச் சட்சம்புட் பபுடஞ் செப்பும்
தம்பமாம் பிலட்சத் வீபந் தைவத முச்சுங் கக்கைத்
தெம்பதாங் குசதி பங்காந் தாரமாஞ் சிகர பந்தம்
கம்பநேர் கிரவுஞ் சத்தா மத்தமங் கபோதக் கையே.

...588


சாகம், சால்மரி, புட்கரம்

அருமைசேர் சாகத் தீபம் ரிஷபமா மஞ்ச லிக்கை
தருணபஞ் சமமுத் தான வஞ்சிதஞ் சில்ம லத்தாம்
பெருமைசேர் நிடாதஞ் சொத்தி புட்டகரத் தீப மென்றே
பரதநூ லறிந்த வல்லோர் பகர்ந்தனர் முறைதெ ரிந்தே.

...589

சசுரப்பிறப்புத் தீவுகளின் அபிநயம் முற்றும்.

7. விருக்ஷங்கள்

மா, பிரம்பு, தெங்கு, நெல்லி, கதலி, நொச்சி, பேரீந்து

சீருரை மரத்தின் கைகள் செப்புவோ மெவருங் காணப்
பாரில்மா பிரம்பு சூசிப் பதாகையாந் தேங்கு நெல்லி
சேருமே கதலி கொச்சி மரக்கரஞ் சிலிட்ட முகுளம்
பேரீந்து மர்த்த சந்த்ர சுவத்திக மெனவே பேசும்.

...590


எலுமிச்சை, பாதிரி, மருது, பலா, முருங்கை, பனை

பேசலா மெலுமிச் சைக்குப் பிரமரக் கையே யாகும்
வாசமாம் பாதி ரிக்கு மருதுக்குஞ் சுகதுண் டக்கை
ஆசையாம் பலாமு ருங்கைக் காகுமே சதுரக் கைதான்
நேசமாம் டமரு கக்கை நெடும்பனை மரமே யாமே.

...591


மந்தாரை, வில்வம், பலாசு, நாரத்தை, கோங்கு, கமுகு,
அசோகு, செண்பகம், இலுப்பை, புளி, கடம்பு

ஆகுமந் தாரை வில்வம் பலாசுக்கு மர்த்த சந்த்ரன்
பாகநா ரத்தை கோங்கு கமுகிற்கும் பதும கோசம்
சோகுசெண் பகமி ருப்பை கோதிலாப் புளி கடம்பு
ஆகுமிவ் வைந்துங் குக்காங் கூலமென் றியம்ப லாமே.

...592


மகழ், இலந்தை, தேக்கு, நாவல், கரும்பு, வள்ளி, கருங்காலி

அறையலா மகிழி லந்தைக் காகுஞ்சந் தங்கி சந்தான்
குறைவிலா தேக்கு நாவல் கூர்த்தப தாக மென்றே
பிரியமாங் கரும்பு வன்னி பேசலாம் சிலிட்ட கர்த்தரி
தரையினிற் கருங்கா லிக்குத் தாம்பிர சூடமென்றே.

...593


அகத்தி, கொன்னை, புன்னை, மூங்கில்

என்னவே யுகத்திக் குத்தா னேற்குமே வராளக் கையாய்க்
கொன்னையே மயூர மாகுங் குளிர்மலர் கள்பூக் கின்ற
புன்னையே யாம்ப தாகச் சதுரக்கை புகல லாகும்
பன்னைசேர் மூங்கி லுக்குப் பதாகைசு வத்திக மாமே.

...594


அத்தி, தாழை, வேம்பு

ஆமது சிலிட்ட சந்தங் கிசமது வத்தி யாகும்
தாமப்பா லிருகை சதுர சுவத்திகந் தாழை யாகும்
ஓமது சுகதுண் டஞ்சு வத்திகம் வேம்பென் றோது
நாமிப்பா லறிந்து சொன்னோ நாடிநீ யறிந்து கொள்ளே.

...595


மஞ்சாடி, மற்ற மரங்கள்

அறிந்துசெய் வலது கையைப் பதாகம தாய்ப்பி டித்துத்
திருந்ததே விடது கையைக் கர்த்தரி யாகச் சேர்த்துப்
பொருந்தவே சுவத்தி கஞ்செய் போதுமஞ் சாடி யாகும்
மரந்தனி னாலு பத்து வகுத்தன மின்னங் கேளே.

...596


அரசு, புங்கு, கல்லத்தி, பவளமல்லிகை, சுரபுன்னை

அரசுக்கு அலபத் மத்தை ரேசிதஞ் செய்யப் புங்கிற்
கருமயூ ரக்கை கல்லத் தியராளம் பவள மல்லிக்
கருமைசேர் சந்தம் சக்கை யாஞ்சுர புன்னைக் கேற்கும்
முறுதிப தாகத் தைத்தா னுற்றலாங் கூல மென்னே.

...597


வைசிரணவம், புளிச்சி, பாணவிருக்ஷம், நீபவிருக்ஷம்

வைசிர வணமே சர்ப்ப சிரக்கையாம் வண்பு ளிச்சிக்
கிசையதோ முகமாம் பத்ம கோசமே யேற்கும் பாணம்
விசையுறும் பாணந் தன்னை ரேசிதஞ் செய்ய மேவும்
வசையிலா நீப விருக்ஷம் கண்டலாங் கூலம் பாரே.

...598


ஈசவிருக்ஷம், கதம்பம், குருவிருக்ஷம்

ஈசவி ருக்ஷ மோது மினிதவ ரேகா சந்த்ரன்
ஓசையாங் கதம்பத் திற்கு முட்டி சூசிக்கை யோதும்
வாசியாங் குருவி ருக்ஷம் வலதுகர்த் தரியோ டொத்து
நேசமா மிடது பக்கந் திரிபதா கமென விள்ளே.

...599


நளிந்தம், விளாமரம், திலகம், மருதோன்றி

நளிந்தமே லீன முத்தி ரைக்கையாம் விளாம ரத்திற்
குளதல பத்மஞ் சொத்தி யோதுமே திலகத் திற்கு
வளர்கர்த்த ரீப தாக மாகுமே மருதோன் றிக்குக்
கொளுமரா ளச்சு வத்தி கம்மெனக் கூறு மாதே.

...600


சரளம், மாதுளை, மருவகம், சிம்சுபை, ஆமோசம்

சரளம ரத்திற் கோதுஞ் சந்தம்ஸச் சுவத்தி கந்தான்
மருவுமா துளையாங் கூலம் மருவக தாம்ப்ர சூடம்
பெருகுசிம் சுபைக்கா மர்த்த சந்த்ரசொத் திகமே பேசும்
இருபவா மோசத் திற்கு நேர்தல்லாங் கூல மாமே.

...601


வேம்பு, பாலவிருக்ஷம்

வேம்பிற்குச் சுகதுண் டக்கை மேவுமே பால விருக்ஷம்
சோம்பிலா தாகுங் கைதான் சுவத்திக மென்ன லாகும்
ஆம்பிலா துலகோர் காணத் தத்திலா சிரியன் றானத்
தேன்பொழி மதத்திற் சொன்ன திவ்வண மறிந்து கொள்ளே.

...602

மரங்களின் அபிநயம் முற்றும்.

8. தேசங்கள்

காம்போஜம், கன்னட, கரஹடா, குரு தேசங்கள்

கடகாமு கம்பி டித்தற் காம்போஜ தேச மாங்கன்
னடமயூ ரத்தைத் தக்ஷி ணப்பாக மாய்ப்பி டித்தல்
காடிசக்க ரத்தை மார்பு நேர்பற்றக் கரஹ டாவாம்
திடகுரு தேச மம்சா சியநுத னேராய்ப் பற்றே.

...603


அங்கம், வங்கம், கலிங்கம், காச்மீரம்

அங்கதே சம்ப தாகத் தையூர்த்வ மாய மைத்தல்
வங்கமே முத்தி ரைக்கைச் சலனமாய் மருவிப் பின்க
ளிங்கங்கர்த் தரிமு கத்தைப் பிரேரித மாகப் பற்றல்
லாங்கூல மெதிரே காட்டக் காஷ்மீரம் வழுத்த லாமே.

...604


குகுரம், கொங்கணம், டெங்கனம், பாஞ்சாலம், பப்பர, மாளவம்

குகுரமே மரக்கை யாங்கொங் கணமரா ளக்கை யாம்
சுகதுண்டம் டெங்க ணத்தாஞ் சொஸ்தி கர்த்திரி முட்டி
முகுளம்பாஞ் சால தேசம் மூளும்பப் பரதே சக்கைச்
சிகரமா மாள வந்தான் சிலிட்டக பித்த மாமே.

...605


நேபாளம், மலையாளம், சோழம், லாட, மராடம்

இலகுநே பாளஞ் சூசி யேற்குமே கேர ளந்தான்
தலமுறும் பதும கோசஞ் சதுரக்கை சோழ தேசம்
பலுகுமே லாட தேசம் பாணக்கை மராட தேசம்
சொலுமிரு கசிர மென்றே துடியிடை யுடைய மாதே.

...606


சௌராஷ்ட்ரம், குச்சரி, விதேகம், விதர்ப்பம், சேரம்

சௌராஷ்ட்ரம் சந்தம் சக்கை குச்சரி தாம்ப்ர சூடம்
விவரமாம் விதேக தேசம் விப்ரகீர் ணமதாய் விள்ளும்
அவமிலா விதர்ப்ப தேச மர்த்தசந் திரக்கை சேரன்
புவிவிற்ப கீர்ணச் சிம்ம முகமெனப் புகலலாமே.

...607


யவனம், ஆந்திரம், பவுண்டரம், பாண்டி, புளிந்தம், காந்தாரம்

யவனதே சம்மச் சக்கை யஞ்சலி யாந்த்ர தேசம்
பவுண்டர தேச மாங்க போதக்கை பாண்டி தேசம்
புவிகச தந்தக் கையாம் புளிந்தமுத் வ்ருத்த மாகும்
பவனிகாந் தார தேசம் பட்சவஞ் சிதமாய் விள்ளே.

...608


கவுட, கூர்ஜ்ஜர, குந்தள, சுதேக்ஷ்ண, சால்மரம்

உரமதாங் கவுட தேச முச்சுங்கக் கையா குங்கூர்ச்
சரநாக பந்த மாங்குந் தளதேசம் ரேசி தக்கை
வருசுதே க்ஷணம தாம்பல் லவக்கரஞ் சால்ம ரிக்குத்
தருமர்த்த சதுரக் கையாச் சாற்றினர் நூல்வல் லோரே.

...609


சேதி, நிடதம், உத்தரம்

சேதிக்குக் கஜமு கத்தைச் செப்புமே நிடத தேசம்
ஓதுமே டமரு கக்கை யுத்தர தேசத் திற்குத்
தாதுள தண்ட பட்சஞ் சாற்றுமே மற்ற தேச
நீதியை யறிந்து மேலாய் நீயபி நயஞ்செய் மானே.

...610

தேசங்களின் அபிநயங்கள் முற்றும்.

9. பட்டணம், ஊர், கிராமம்

பட்டண மென்ப தற்குப் பதுமகோ சக்க ரத்துத்
வெட்டித மாய்த்தி ருத்தி விசையுறக் காட்ட லாகும்
காட்டியே யிக்க ரந்தா னவில்கிராம மூர்க ளுக்கும்
காட்டலா மென்று நூலைக் கற்றவ ருரைசெய் தாரே.

...611

பட்டணம் முதலியவற்றின் அபிநயம் முற்றும்.

10. வீடுகளும் அவற்றின் பகுதிகளும்

குச்சு வீடு, ஓட்டடுக்கு, ஓலைவீடு, பர்ணசாலை

குச்சுவீட் டிற்கி ரண்டு பதாகத்தின் றலையைக் கூட்டி
மெச்சவே பிடிப்ப தாகும் விளம்பிய விந்தக் கையே
அச்சமி லோடு வோலை பன்னசா லைக்கு மாகும்
நிச்சய மறிந்து மேலே நீயபி நயஞ்செய் வாயே.

...612


மச்சுவீடு, மாடி, மேடை, உப்பரிகை

இருமிரு கசிரந் தன்னை யிறுகவே சேர்த்துக் காட்டல்
வருமச்சு வீட்டுக் கென்பர் மாடிக்கு விந்தக் கையும்
இருசது ரக்கை கீழு மேலுந்தா வுதலா யேற்றல்
வருமிது மேடை யுப்ப ரிகைகட்கும் வழுத்து மாதே.

...613


சன்னல், கதவு, பூட்டு, திறவுகோல்

சன்னலே மென்னி லைக்கைச் சார்சுவா டம்ப தாகும்
திண்ணிய பதாகந் தன்னிற் கப்ித்தத்தைத் திருத்திக் காட்டத்
துன்னிய பூட்டி னோடே திறவுகோ லிதற்கா மென்று
உன்னியே பரத நூலோ ருரைத்தன ரறிந்து கொள்ளே.

...614

வீடுகள் முதலியவற்றின் அபிநயம் முற்றும்.

11. சாலைகள்

பிரம்மசாலை

சாலைகள் பதினா ுக்குஞ் சாற்றுே பிரம்ம சாலைக்
கேலவே மிருக சீரி டக்கைரண் டும்மார் பிற்குச்
சாலநேர் முன்னே நீட்டிப் பின்வாங்கிக் கரத்தைச் சாற்றும்
கோலஞ்சேர் கொங்கை மானே குறுக்காகப் பிடித்த லாமே.

...615


குரளிச்சாலை, விளம்பினிச்சாலை

சங்கைதீர் குரளி யென்னுஞ் சாலைக்குத் திரிபதா கத்தைப்
புங்கித ரேசி தஞ்செய் திடலெனப் புகல்வ ரென்றும்
இங்கித விளம்பி னிக்கு மிருகசீ ரிடங்கு றுக்கே
வாங்கிச்ச லனசற் பஞ்செய் திடலென வழுத்து மானே.

...616


கெருடிச்சாலை, யாகசாலை

திரமதாங் கெருடிச் சாலை மிருகசீ ரிடங்கு றுக்கே
உரிமையாய் வாங்கி யக்கை முகுளவுத் வேஷ்டி தத்தாம்
மருவிலா யாக சாலை மான்றலைக் கைகு றுக்கே
உரிமையாய் வாங்கிச் சந்தங் கிசம்பிடிப் பதுவென் றோதே.

...617


கத்தசாலை, ஓமகுண்டசாலை

கந்தசா லைக்கு மான்ற லைக்கையைக் குறுக்கே வாங்கிச்
சிந்தாவுத் வேஷ்டி தம்ரே சிதஞ்செய்து சிங்காஸ் யக்கை
அந்தமாய்ப் பிடிப்ப தாகு மழகிய பெண்டிற்குச் செய்
துந்திய வோம குண்ட சாலைக்கு மோது வோமே.

...618


சாஸ்திரசாலை
மான்றலைக் கைகு றுக்கே வாங்கியுத் வேஷ்டி தத்தைத்
தான்றிரே சிதமாய்ச் செய்து தாம்ப்ரசூ டம்பி டித்தல்
குன்றைநேர் நகிலி னாளே குண்டல வேத சாத்திரம்
மன்றுசா லைக்குக் கையை வகுத்துநீ யுரைசெய் வாயே.

...619


சயனச்சாலை

சந்தங்கி சம்பி டித்துத் தான்மறு படியும் பார்வை
சந்தங்கி சமதாய்ப் பற்றல் சாற்றுமே சயன சாலைக்
குந்துமான் றலைக்க ரத்தைக் குறுக்கேவாங் கியதை மற்றும்
கொந்தலர் பதாகக் கையைக் குறுக்காகப் பிடித்த லாமே.

...620


நடனசாலை, சங்கீதசாலை

விருப்பா நடன சாலை மிருகசீ ரிடக்க ரத்தைக்
குறுக்கேவாங் கியதை மற்றும் பதாகமாய்ப் பிடித்தல் கூறும்
மிருகசீ ரிடங்கு றுக்கே பிடித்துமே முகுளம் பற்றல்
பெருக்குமாங் கீத சாலை விதியெனப் பேசு மானே.

...621


வாத்யசாலை, சமர்க்களம்

வாத்திய சாலைக் குக்கேள் வலமிருக சீரிடத்தை
நேத்தியாய்க் குறுக்கே வாங்கி லலிதநிர்த் தக்கை பற்றல்
வீத்திலா சமர்க்க ளத்தை மிருகசீ ரிடம் பிடித்துப்
பாத்துப்ப தாக முந்திரிப் பதாகமாய்ப் பிடித்த லாமே.

...622


சரஸ்வதிசாலை

சலனமில் பள்ளிக் கூடஞ் சரச்சுவ திச்சா லைக்கு
வலதுசந் தம்ச மாக்கி வருபத்ம கோசம் பற்றல்
நிலைபெறுங் கையா மென்று நீணில மறிய முன்னாள்
கலசத்தி லுதித்து வாழ கத்திய ரோதி னாரே.

...623

சாலைகளின் அபிநயம் முற்றும்.
ஸ்தாவராதி அபிநயம் முற்றும்.

12. ஜலஜந்துக்கள்

மீன், நண்டு, தவளை, ஆமை, முதலை

மீனுக்கு மச்சக் கையாய் விளம்பின ரலவ னுக்குத்
தானிரு கையுங் கந்க டகமதாந் தவளைக் காகும்
வானமில் சக்க ரக்கை யாமைக்கு வுண்ணா வத்தம்
மானேநீ முதலைக் குச்சு வத்திகப் பதாகை சொல்லே.

...624


அட்டை

செப்புமே யட்டைக்குச்சி லிட்டசி கரக்கை யாக
ஒப்பவே பரத நூலோ ரோதின ரிதுவல் லாமல்
தப்பிலா வபிந யத்தைத் தாபரங் கட்குந் தேர்ந்து
வைப்புடன் மலைக ளுக்கு வகையினி முன்சொல் வோமே.

...625

13. ஊர்வன

எறும்புசெல் கறையா னாதி யூர்ந்திடுஞ் செந்துக் கெல்லாம்
வருமபி நயத்தைக் கூறில் மதாந்த்ர தாம்ப்ர சூடம்
கரமதந் தந்த ஜந்துக் களினியல் பறிந்து காட்டல்
பரிவாகு மிதன டுத்துப் பறவைகட் குரைசெய் வாமே.

...626

ஜலஜந்துக்கள் ஊர்வன அபிநயம் முற்றும்.

14. பறவைகள்

அன்னம், கவுதாரி, கிளி, கழுகு, அன்றில்

அன்னத்திற் காகு மஸ்த மம்சாஸ்யங் கௌதா ரிக்குச்
சொன்னதோர் பாணக் கையாஞ் சுகதுண்டங் கிளிக்கே யாகும்
மன்னிய கழுகு ஞான முத்திரை யன்றி லுக்கு
அன்னமே கேள்சி லிட்ட வலபத்மக் கையதாமே.

...627


குயில், ஊர்க்குருவி, செம்போந்து

புகலுவாய் குயிற னக்குப் புங்கித வராளக் கையாய்ச்
சிகையுமூர்க் குருவி யெல்லாஞ் சிலிட்டமுட் டிக்கை யென்றே
தகுமென்பர் மொழியா லின்பந் தந்திடுங் கமல மாதே
மகிசெம்போத் ததோமு கச்சி லிட்டசுக துண்ட மாமே.

...628


மீன்கொத்தி, வெண்புறா, மாடப்புறா, காட்டுப்புறா

இயம்புவாய் மீன்கொத் திக்குச் சாளையக் கையே யேற்கும்
கயவெண்பு றாக்க போதக் கைகுறுக் காய்ப்பி டித்தல்
புயன்மாடப் புறாக்க போதக் கையைப்புங் கிதமாய்ச் செய்தல்
அயல்காட்டுப் புறா விரண்டு அர்த்தசந் திரனென் றோதே.

...629


கொக்கு, மின்மினி, வண்டு, காக்கை

கொக்குச்சி லிட்ட வம்சா சியங்கூறு மின்மி னிக்கு
முக்யமா முகவம் சத்தை முகத்துநேர் பிடித்த லாகும்
வக்கிர வண்டிற் குப்பி ரமரக்கை யாங்காக் கைக்குத்
திக்கெலா மகிழு மாதே சிலிட்டவ ராள மாமே.

...630


மைனா, குயில், நாணவந்தான்

வலக்கையைக் கபித்த மாக்கி மறுகையை யர்த்த சந்த்ரன்
துலக்கவே யாக்கி யப்பாற் சோராமற் கனிட்டந் தன்னைப்
பலக்கவங் குட்டத் தோடே பின்னுதல் குயிலு மின்னம்
நலம்பெறு மைனா வோடே நாணவந் தானுக் காமே.

...631


கண்டபேரண்டம், வல்லூறு, வலியான்

கண்டபே ரண்டத் திற்குக் கண்டபே ரண்டக் கையாம்
கொண்டவல் லூறுக் காகுங் குயிற்கையி லிடது கையை
விண்டிலாட் டோள மாக்கன் மேவுமே வலியா னுக்குக்
கண்டக பித்தந் தன்னிற் கபித்தத்தை நீட்ட லாமே.

...632


ஆந்தை, கூழைக்கடா, சிட்டுக்குருவி

ஆந்தைக்குச் சொல்வர் வியாக்ர வஸ்தம்புங் கிதமாய்ச் செய்தல்
சேர்ந்தகூ ழைக்க டாய்க்கு வக்ரசிம் மமுக மாகும்
கூற்தனேர் மானே சிட்டுக் குருவிவ லியான் போலே
நேர்ந்துரை செய்வா யென்றே நிகழ்த்தினர் நூல்வல் லோரே.

...633


கோழி, கானாங்கோழி

கோழிக்குத் தாம்ப்ர சூடங் கூறுங்கா னாங்கோ ழிக்குப்
பாழிலா புங்கி தச்ச லனக்கையாயப் பகருங் கண்டாய்
வேழமத் தகத்தை நேர்ந்து விம்மிய முலையி னாளே
வாழிய சலசந் துக்கு வகையினி யுரைசெய் வோமே.

...634

பறவைகளின் அபிநயம் முற்றும்.

15. விலங்குகள்

சிங்கம், புலி, பன்றி, முட்பன்றி, கரடி

சிங்கமா மிடது சிங்க முகம்வலப் பதாகஞ் சேரில்
அங்கமி லர்த்த சந்த்ர னதோமுகம் புலியாய்ப் போற்றும்
சங்கீர்ண மகரம் பன்றி தருகஜ முகமுட் பன்றி
கொங்கலர் பதாகம் பத்ம கோசமாங் கரடிக் கென்னே.

...635


எருமைக்கடா, மான், கணத்தி, கடமான்

பேர்சிலிட்ட மிருக சிரத்திற் பெருவிரல் வளைத்தன் மேதி
நேர்மிரு கச்சி ரம்மா னிகழுமே கணத்திக் குக்கை
ஓர்லீன முத்தி ரைப்புங் கிதமாகுங் கடமா னுக்குத்
தோர்விலா தர்த்த சந்த்ரன் சுவத்திக மாகச் சாற்றே.

...636


கவரிமான், ஆண்மான், குரங்கு, நரி

கவரிக்கு முட்டி முத்தி ரைக்கையா மாண்மா னுக்கு
அலமிலா தாவி ருத்த மிருகசிர மாங்கு ரங்கிற்
குவமைய தாகு முட்டி முகுளமே யுறுந ரிக்குப்
புவிதனில் வக்ர சிம்ம முகமெனப் புகலு மாதே.

...637


பூனை, உடும்பு. கலைமான், கணுஞ்சு

பூனைக்குக் கைய தாக மத்திம முகுளம் புல்லும்
ஊனமிற் றலப தாக முடும்பிற்காங் கலைமா னுக்கு
மோனமா முட்டிக் கையிற் கனிபெரு விரலு நீட்ட
மானேக ணுஞ்சு நாக பந்தமாய் வழுத்து நூலே.

...638


பெருச்சாளி, எலி, முயல், யானை, நாய்

முகுளமுந் துருவா மர்த்த முகுளமே யெலிய தாகும்
பகர்முயல் தலப தாகம் பக்கத்திற் பிடித்தல் யானைக்
குக்கையா மலபத் மம்ம தோமுகம் பிடித்த னாய்க்குப்
பகருவர் பரத நூலிற் சிலிட்டப தாக மென்றே.

...639


ஒட்டகை, ஆட்டுக்கடா, ரிஷபம், கழுதை

கண்டாஞ்ச லிக்கை யொட்ட கைக்குவாட் டுக்கி டாய்க்கு
ரெண்டுசி கரத்தைக் கூட்டல் தலசிங்க முகம்வி டைக்கு
மண்டுபின் னாஞ்ச லிக்கை கழுதைக்கு வழுத்த லாகும்
**************************************

...640


ஒட்டகத் திற்குச் சொல்லு முத்வேஷ்டி தாஞ்ச லிக்கை
ஆட்டுக்கி டாய்க்குச் சொத்தி கச்சிக ரக்கை யாகும்
தேட்டமா மிடபத் திற்குச் சிம்மமு கக்கை யென்னும்
பூட்டிலா கழுதைக் காகும் புட்பபு டக்கை யென்றே.

...641


யாளி

தற்சனி மத்தி மத்தைச் சேர்த்தனா மிகையங் குட்டம்
வற்சமில் லாம லேயுட் புறஞ்சேர்த்து வகைய தாக
மிச்சம தாமி ரண்டு சிறுவிரல் வளைத்துக் காட்ட
நிச்சய மாக யாளிக் காமென நிகழ்த்து வாரே.

...642


முதலை, பசு, புருஷாமிருகம்

தோணுமு தலைக்குத் தான்ப தாகச்சு வத்தி கக்கை
ஊணுள பசுவிற் குச்சங் கீர்ணமுத் திரைக்கை யோதும்
தாணுவாம் புருட ரூபந் தனைக் காட்டி மிருகக் கையைப்
பூணவே பிடித்தா லதனை புருஷாமி ருகத்திற் கோதே.

...643


புள்ளிமான், கலைமான்

செப்புவோ மின்ன மும்ப ரதமுனி மதத்திற் றேர்ந்து
ஒப்பிலா விலங்கு கட்கு ஓதிய லபின யக்கை
தப்பிய புள்ளி மானின் றனக்குமான் றலைக்கை யாகும்
கைப்புடை கலைமா னுக்குக் கஜமுகக் கையென் றோதே.

...644


வெள்ளாடு, பெருச்சாளி, எலி, ஓணான்

வெள்ளாடு சூசிக் கையாய் விளம்புவர் பெருச்சா ளிக்கு
விள்ளுமே யர்த்த முட்டி விசையோடு மெலித னக்குப்
பிள்ளையே கேள்சி லிட்ட பிரமா மோணா னுக்குத்
துள்ளிய கரம தாகும் வக்கிர சூசி யென்றே.

...645


பல்லி, சிலந்திப்பூச்சி, நாய்

ஈச்சிலாப் பல்லிக் குச்சி லிட்டம யூர மாகும்
வாச்சிலந் திப்பூச் சிசந்தங் கிசக்கை யாகப் பற்று
மாச்சியாஞ் சிங்கத் திற்கும் யானைக்கு முவமா னஞ்சொல்
பாச்சனாய்க் குச்சி லிட்ட பதாகக்கை யாக வோதே.

...646


பசு, யானை, புலி

பசுவுக்குச் சுரபிக் கையாய்ப் பகருவர் யானைக் குக்கை
நிசமதாங் கரியஸ் தம்போல் நீட்டிய புலித னக்கு
வசையிலா தோது வச்சு வத்திக மூர்ணா பக்கை
இசையுமிக் கரங்க ளென்றே யியம்பினர் நூல்வல் லோரே.

...647


யாளி, நரி, முயல், குதிரை

யாளிக்கு வர்த்த சந்த்ர னிரண்டையும் டோள மாக்கல்
வாழிய நரிக்குச் சொல்வர் வக்கிரசிம் மமுக மென்றே
பாழிலா முயற னக்குப் பகருஞ்சிம் மமுக மென்று
மீளிகுதி ரைக்கு மான்ற லைச்சுவத் திகமாய் விள்ளே.

...648


சரபம்

வலக்கை யாக்கி ரத்தைப் புங்கிதஞ் செய்து மற்றும்
சிலைபெறு மிடது கையைச் சிகரம தாக்கி யப்பால்
பலமதா கவேவ்யா விர்த்தம் பிடித்திட லாகு மென்று
நிலைபெறுஞ் சரபத் திற்கு நேர்ந்துரை செய்வாய் மானே.

...649

விலங்குகளின் அபிநயம் முற்றும்.

4. மனிதப்பகுதி
16. மானிடர் - பொது

தானமா மிரண்டு கையைச் சந்தம்ஸ மாகக் கூட்டி
ஈனமில் வலக்கை தன்னை யிரண்டுமூன் றுதரங் கீழாய்த்
தானோக்கி யக்க ரத்தைச் சலனம தாகச் செய்தல்
சேருறப் பரத நூலோர் நிகழ்த்தினர் முறைதெ ரிந்தே.

...650

17. ஜாதிகள்

பிராமணன், க்ஷத்திரியன்

சீர்மறை யோர்க்குப் பூணூற் காட்டியே சிகரம் பற்றல்
பார்பதா கக்க ரத்தை வியாவிர்த்த மாகப் பற்றித்
தார்சிக ரம்பி டித்தற் சத்திரர்க் காகு மென்று
நேருறப் பரத நூலோர் நிகழ்த்தினர் முறைதெ ரிந்தே.

...651


வைசியன்

இடக்கர மதனி லம்சா சியமேற்று வலக்க ரத்தில்
கடகாமு கம்பி டித்துச் சிகரக்கை தன்னைக் காட்டல்
படிமிசை வைசி யர்க்குப் பகரலா மென்று நூலோர்
திடமுள முறைதெ ரிந்தே செப்பினர் கமல மாதே.

...652


பிறர்

பாசிடஞ் சிகரம் பற்றிப் பனுவலாம் வலக்க ரத்தில்
சூசியைக் காட்டி யேசி கரம்பற்றற் சூத்தி ரற்காம்
மாசிலாப் புவியில் வாழு மற்றச்சா திகளுக் கெல்லாம்
தேசமுந் தொழிலும் வர்ணா ச்ரமங்கண்டு செப்பு மானே.

...653


மற்றொரு வகை

மறையோன்

மறையோனுக் கமுசாஸ் யத்தை மாிநேர் பிடிக்கச் சின்னம்
நிறையதாய்க் கொளும்ப தாகச் சதுரத்தை முகத்து நேரில்
திறைகொளப் பிடிக்கத் தானத் தெரிசன மாகு மென்று
குறைவிலா தபிந யித்துக் கூறுவை முறைதெ ரிந்தே.

...654


க்ஷத்திரியன்

பிசகாம லலப துமமுத் வேஷ்டிதம் பிடிக்கச் சின்னம்
ருசுவதாம் பதாகந் தன்னி னுனிவிரல் களைவ ளைத்துத்
தசையுள புயத்தில் வைத்தற் றான்றெ ரிசன மீதை
விசைகொளுஞ் சத்தி ரர்க்கு விளம்புவாய் முறை தெரிந்தே.

...655


வைசியன்

இட்டமாய்ப் பதாகக் கையை யெழில்பெறுந் துடையின் கிட்டத்
தட்டாமற் சேர்க்க வைக்கத் தான்றெ ரிசன மென்னும்
மட்டிலா தக்க ரந்தான் வளம்பெற வபிந யித்தல்
சுட்டுவாய் வைசி யன்றன் சொரூபத்தைக் கமல மாதே.

...656


சூத்திரன்

பொன்னுள வராளக் கையைப் புங்கித மாய்ப்பி டித்தல்
சின்னக மாஞ்சங் கீர்ண சிகரக்கை தனிற்சி றக்கத்
துன்னுமங் குட்ட நீட்டச் சொல்லுஞ்சங் கீர்ண பாணந்
தென்னுசி கரமே தானத் தெரிசனம் சூத்தி ரற்கே.

...657

ஜாதிகளின் அபிநயம் முற்றும்.

18. நாயகிகள்

(1) மடந்தையர்

குலமடந்தை

இடதமு சாசி யத்தைக் கழுத்தில்வைத் தேவ லக்கைப்
படிபரி வர்த்த மாகப் பதாகத்தைப் பிடித்தல் சொந்தக்
குடிவாழத் தாலி கட்டிக் கொண்டப திவிர தைக்கு
அடுமெனப் பரத நூலோ ரறைந்தன ரறிந்து கொள்ளே.

...658


அயல்மடந்தை

கலியாணம் செய்து கொண்ட கணவனை நீங்கி வேறே
கொழுநனைத் தேடிக் கூடுங் கோதைக்குக் கலவிக் கையைப்
பலங்காட்டி வலக்கை தன்னைப் பரிவிர்த்த பதாகம் பற்றல்
செலுமெனப் பரத நூலோர் தேர்ந்துரை செய்வார் மானே.

...659


விலைமடந்தை

கடகாமு கக்கை சுண்டிக் கலவியைக் காட்டி யேயப்
படிவலம் பரிவர்த் தப்ப தாகமா யபிந யித்தல்
வடிவுள விலைமா தர்க்கு வகுத்திட லாகு மென்று
திடமதாய்ப் பரதங் கற்ற சிறப்புளோ ருரைசெய் தாரே.

...660


(2) நற்சாதிப்பெண்கள்

பதுமினி, சித்தினி

சட்சதை வதங்கள் கோருஞ் சதுரையாம் பதுமி னிக்கு
வட்சமாஞ் சுகதுண் டக்கை யபயவேஷ்டி தமதாய்ப் பற்றல்
உச்சரி ஷபநி ஷாதங் கோருஞ்சித் தினிக்கு வோதும்
மெச்சிய பரத நூலின் மிருகசீ ரடக்கை யென்றே.

...661


சங்கினி, அத்தினி

பஞ்சம மத்தி மங்கள் பற்றிய சங்கி னிக்கு
வஞ்சிடா தம்ஸ பட்ச மபவேஷ்டி தம்பி டித்தல்
கொஞ்சுகாந் தாரங் கோருங் கோதையா மத்தி னிக்குத்
தஞ்சம தாக வர்த்த சதுரக்கை பிடித்தலாமே. ...662

இன்னமிம் மாத ருக்கு வியல்பதாங் கோவை பற்றிப்
பொன்னல பல்ல வத்தை நெற்றியும் புயமு மார்பு
நன்னய நாபி யும்மிவ் விதமாக நயந்து காட்டல்
மன்னுமென் றறைந்தார் நந்தி கேச்சுரர் வகைய றிந்தே.

...663


(iii) அஷ்டவித நாயகிகள்

சுவாதீனபதிகா

நினைத்ததை முடிக்கு நாய கனைக்கோண்டே நேரி ழைக்குச்
சினமிலா வலக்கை தன்னிற் றிரிலங்க முட்டி காட்டிப்
பினும்சிக ரம்ப தாகம் பரிவர்த்தம் பிடித்துக் காட்ட
மனுமெனப் பரத நூலோர் வகுத்துரை செய்தார் மானே.

...664


வாஸகஸஜ்ஜிகா

குணமுடன் பள்ளி நின்று கொழுநன்றன் வரவைப் பார்க்கும்
வனிதைக்குச் சிகரங் காட்டி மற்றும்ப தாகந் தன்னைத்
தனிநேர்புங் கிதம தாகச் சலனஞ்செய் தேதி ரும்பப்
பனிநிகர் மொழியி னாளே பதாகத்தைப் பிடிப்பதாமே.

...665


விரஹோத்கண்டிதா

நாயகன் றன்னைச் சேர விரகத்தைக் கொள்ளு நங்கை
தாயக மாக நெஞ்சிற் சந்தம்சம் பிடித்து மற்றும்
சாயாமற் பரிவிர்த் தப்ப தாகத்தைப் பிடிப்ப தென்றே
நேயமாய்ப் பரத நூலோர் நீணிலத் துரைசெய் தாரே.

...666


விப்ரலப்தா

நாதன்செய் மோச மெண்ணி நற்சகி யைக்கோ பிக்கும்
பேதைக்கு வர்த்த சந்த்ரன் பிடித்துவி ரித்துப் பின்னும்
காதலாய்த் தணித்துக் கோத்துக் கடுமையா முகத்தி னோடே
மாதேமுன் போற்ப தாக மாகவே பிடித்தலாமே.

...667


கண்டிதா

ஏலத்தன் கொழுநன் வேறே யேந்திழை கூடி யந்தக்
காலைவந் தவனைக் கண்டு கண்டிக்கு மாத ருக்கு
மாலிடஞ் சிகர மாக்கி வலம்வ்யாவிர்த் தப்ப தாகம்
கோலமாய்க் கண்டித் துப்பின் னாயகி தரத்தைக் கொள்ளே.

...668


கலகாந்தரிதா

மணவாளன் றனைக்கோ பித்துத் துரத்திப்பின் மயக்கு மங்கை
மணியிடஞ் சிகரம் மற்றிவ் வலப்பதா கத்தா னீக்கி
அணியப்பின் கற்க டத்தை யதோமுக மாய்க்க விழ்த்துப்
பணியவே பரிவர்த் தம்ப தாகத்தைப் பற்ற லாமே.

...669


ப்ரோஷித பர்த்ருகா

ஊர்சென்ற கணவன் றன்னை நினைந்துரு கும்பே தைக்கும்
சேராமற் சிகரம் பற்றிச் சூசிக்கை யால்வ்யா விர்த்தம்
மீறாமற் காட்டி யப்பால் விரகக்கை தன்னைக் காட்டல்
தேருமென் றுலகிற் காணச் செப்பினர் நூல்வல் லோரே.

...670


அபிஸாரிகா

கொழுநனைக் குறித்துச் செல்லுங் கோதைக் கிருகை டோளம்
குழைவிலா தாக்கி மேனி குலுங்கியே நடந்து காட்டல்
பழியாமற் காட்டி யந்தப் பரிவிர்த்த பதாகம் பற்றல்
உழவெனப் பரத நூலோ ரோதின ரறிந்து கொள்ளே.

...671


மற்றநா யகிக ளுக்கு வழுத்துவர் பானு தத்தன்
சொற்றவ் வடநூ லின்மஞ் சரிதனை யறிந்த வர்க்கே
உற்றிடும் பக்கு வம்ப ருவங்கண் டபிந யித்தல்
பற்றுமென் றுரைத்தார் மெய்யாம் பரதநூ லுணர்ந்தே மேலோர்.

...672

நாயகிகளின் அபிநயம் முற்றும்.

19. நால்வகை முதல்வர்

கூஷ்மாரன், பாஞ்சாலன்

மாசிலா வராளக் கையை மார்புநேற் பிடித்துக் காட்டக்
கூசிமா ரனுக்கா மென்றே கூறுவர் சுகதுண் டக்கை
நேசம தாகப் பற்றி நெற்றிநேர் பிடித்துக் காட்டப்
பேசுவ ரதைப்பாஞ் சாலன் றனக்கெனப் பேதை மாதே.

...673


பத்திரன், நந்தன்

பத்திரன் றனக்கு முட்டிக் கரமார்பு நேராய்ப் பற்றல்
புத்திசேர் தத்த னுக்குச் சிகரக்கைப் புயத்தி னேரே
வைத்திட லாகு மென்று மாநிலத் தோர்கள் காண
அத்தங்கள் பிடிப்ப வர்க்ா யறைந்தனர் நூல்வல் லோரே.

...674

நால்வகை முதல்வர் அபிநயம் முற்றும்.

20. மூவித நாயகர்கள்

பதி, உமாபதி

பேசுவாய் பதிக்குச் சொந்தப் பேதைகை காட்டி யப்பால்
மாசிலாச் சிகரக் கையை மகிழ்வுடன் பிடித்த லாகும்
நேசமா முமாப திக்க யல்மின்கை காட்டி நேரே
தேசிக சிகரக் கையைப் பிடிப்பதா மெனவே செப்பே.

...675


வைசிகன் அபிநயம்

செப்புவாய் வைசி கன்ற னக்குவே சிப்பெண் கையை
ஒப்புடன் காட்டி யேசி கரம்பிடித் திடலே யோதும்
மைப்படி குழலி னாளே மற்றநா யகர்க ளுக்குத்
துப்புற வவர்க ணங்கள் துலங்கமேற் காட்டு மாதே.

...676

மூவித நாயகர்களின் அபிநயம் முற்றும்.

21. பாந்தவ்யம்

புருடன், பெண், தம்பதி

வாமத்திற் சிகரம் சேர்த்தால் வரும்புரு டற்கே யாகும்
மாமிரு கசிரந் தன்னை வலக்கைசேர்த் தாற்பெண் ணுக்காம்
வாமத்திற் சிகர மற்ற வலக்கையில் மிருக சீர்ஷம்
பூமலி குழலீர் சேர்த்தாற் புருடன்பெண் டாட்டிக் காமே.

...677


தாய்

வாமமாங் கைவா மப்பால் வருமர்த்த சந்த்ரன் சேர்த்துத்
தாமமார் வலக்கை தன்னிற் சந்தம்ஸம் பிடித்த லோடே
வாமென வயிற்றிற் சுற்றி யதன்பின்னே வாமக் கையில்
மாமிரு கசிரஞ் சேர்த்தான் மாதாவுக் காகுந் தானே.

...678


தகப்பன், மாப்பிள்ளை

இயம்பிய தாய்க்க ரத்தி லிடக்கையிற் சிகரஞ் சேர்த்தால்
சயந்தருந் தகப்ப னார்க்குந் தன்மாப்பிள் ளைக்கு மாக
நயந்தரு பரத சாஸ்திர நன்னூலோர் யாவர் நெஞ்சும்
மயங்கிடா வண்ணஞ் சொந்த மாமிக்குக் கைசொல் வோமே.

...679


மாமியார்

இலகுமம் சாசி யத்தை யிடக்கையாற் கழுத்திற் சேர்த்து
வலதுசந் தம்சம் தன்னை வயிற்றினிற் சுழற்றி யேபின்
நலமிகு மிடக்கை தன்னில் நன்மிருக சீர்ஷஞ் சேர்த்தல்
மலர்மலி குழலீர் சொந்த மாமிக்கா மென்று சொல்லே.

...680


மாமனார், அண்ணன், தம்பி

மாமிதன் கையிற் றானே வலக்கையிற் சிகரம் சேர்த்தல்
மாமனா ருக்கா மென்று வழுத்தினர் பரதங் கற்றோர்
மாமயூ ரக்கை தன்னால் வருமுன்னும் பின்னுங் காட்டில்
தாமஞ்சேர் குழலீ ரண்ணன் றம்பிக்கு மாகுந் தானே.

...681


மைத்துனன், நாத்தி

வாமக்கை சிகரம் பக்க வலக்கைகர்த் தரிமு கஞ்சேர்த்
தாமைத் துனனிற் போகு மதின்வலக் கையின் மீதே
நீமிரு கசிரஞ் சேர்த்தா னிகழ்த்துவர் நாத்த னார்க்கே
பூமலர்க் குழலி னாளே புத்திரன் றனக்குச் சொல்லாம்.

...682


புத்திரன், நாட்டுப்பெண்

வலக்கைசந் தம்ஸம் சேர்த்து வயிற்றினி லேசு ழற்றி
இலக்கிய விடக்கை தன்னி லெழுசிக ரம்பி டித்தால்
பலத்தபுத் திரனுக் காகும் பிசகிலா மிருக சீர்ஷம்
வலக்கையிற் பிடித்தாற் சொந்த நாட்டுப்பெண் வழுத்து மானே.

...683


சக்களத்தி

பாசக்கை பிடித்தி ரண்டு பக்கமு மிரண்டு கையால்
நேசித்து மிருகச் சென்னி நீபிடித் திட்ட போது
காசினி தனில்வா ழுஞ்சக் களத்திக்கா மென்ற டுத்துப்
பேசினர் பரத நூலோர் பிரபல மாகத் தானே. ...684

பாந்தவ்யங்களின் அபிநயம் முற்றும்.

22. அரசர்கள்

அரிச்சந்திரன், நளன், புரூரவன்.

திருவரிச் சந்தி ரற்குச் செப்புவர் சுகதுண் டக்கை
இரவிநேர் நளன்ற னக்கு விடமுடுக் குவல மஞ்ஞை
அருள்புரூ ரவருக் கத்த மாம்வலத் தினின்முட் டிக்கை
தெரிவையே யிடது கையிற் றிரள்பத்ம கோசம் பற்றே.

...685


சகரன், இராவணன், அம்பரீஷன், சிபி.

கோசல சகரர்க் கத்தங் கொளுமிரு கைப்ப தாகை
மாசில்ரா வணன்ப தாகை வகுத்தன ரம்ப ரீஷன்
நேசஞ்சேர் சிகரக் கையாய் நிகழ்த்துவர் சிபித னக்குப்
பேசுவர் கபித்த மென்றே பிறைநுதர் கமல மாதே.

...686


கர்ணன், அருச்சுனன், பீமன், சகாதேவன்.

மாதேகேள் கர்ண னுக்கு வழுத்துவர் முகுளக் கையாய்
மேதினி யருச்சு னற்கு விளம்பினர் திரிப தாகை
கோதிலா வீம னுக்குக் கூறுவர் முட்டிக் கையாய்
நீதிசேர் சகாதே வர்க்கு நிகழ்த்துவர் மகர மென்றே.

...687


நகுலன், பகீரதன், நந்தி, ரகு.

மகரஞ்சேர் நகுல னுக்கு வகுத்தனர் தாம்ப்ர சூடம்
பகிரத னர்த்த சந்திரன் பகர்நந்தி வலது கையில்
சுகமுறு முகுள மோடு சூசியா மிடது கையில்
தகைமைசேர் ரகுப தாகை சாற்றினர் பரத நூலோர்.

...688


தசரதன், ராமன், பரதன்.

பரதநூற் றசர தற்குப் பகரல பதுமக் கையைத்
திரமதா யுத்வேஷ் டித்துச் சேர்த்தசொத் திக்கை யென்றே
முறைவரி ராம னுக்கு முற்றிலுஞ் சிகரக் கையாய்த்
தெரிவையே வலது தோண்மேற் சிகரக்கை பரதற் காமே.

...689


இலக்கணன், சத்துருக்கன், சேரன்.

மேலதாஞ் சத்து ருக்க னிடதுதோள் சிகர மேவிச்
சாலிலக் குமன்ற னக்கு மார்புநேர் சிகரஞ் சாற்று
ஓலமாஞ் சேர னுக்கு வுத்தான வஞ்சி தத்தோ
டேலவே வலது கையில் டமருக மென்னே வுன்னே.

...690


சோழன், பாண்டியன்.

உன்னவே சோழ னுக்கு வுத்தான வஞ்சி தத்தோ
டன்னமே யிடஞ்சி லிட்ட முகுளமாம் வலது கையில்
சொன்னசந் தம்ஸ மாகுந் தூயபாண் டியனுக் கத்தம்
மன்னமுத் தான வஞ்சி தச்சுக துண்டஞ் சொஸ்தி.

...691


தருமன், துரியோதனன்.

சொத்திசேர் பரத நூலோர் சொல்லுவ ரரசர்க் கெல்லாம்
மொத்தமாய்த் தசர தற்கு மொழிந்தல பதுமக் கையே
நித்தமாந் தரும னுக்கு நிகழ்த்துவ ரலபத் மக்கை
பத்திலாச் சுயோத னன்றான் பாபக்கை யலபத் மம்மே.

...692


புருகுச்சன், திலீபன், பயராசன், மருத்து.

மேற்சொலு மரச ரோடே விளம்புரு குச்ச னுக்கு
வாச்சது டமரு கக்கை வருதலீ பன்ப தாகம்
தேர்ச்சியாம் பயரா சன்சூ சிக்கையா மருத்து முட்டி
கூச்சமில் லாதே காட்டக் கொளுமெனச் சொல்லாய் மாதே.

...693


யயாதி, ரந்திதேவன்.
தாதலர் யயாதிக் குக்கை தாம்பிர சூ மாகும்
நீதிசே் ரந்தி தேவன் முகுளஞ்சூ சிக்கை நேரும்
கோதிலா திந்த மன்னர்க் குச்சுக்கி ரன்ம தத்தில்
ஓதுமிப் பயனைக் கண்டு உரைசெய்வாய் கமல மாதே.

...694


இரவிகுலத்தரசர், இந்துகுலத்தரசர், பொது

இரவிகு லத்து மன்னர்க் கியல்வலப் புறத்தி னேரே
பரவிய சசிகு லத்துப் பார்வேந்தர்க் கிடத்தோ ணேரே
பெருமையா யபிந யித்தாற் பிசகிலா திருக்கு மென்று
பிருகும தத்திற் றானே பேசின னறிந்து கொள்ளே.

...695.


அரசர்களின் அபிநயம் முற்றும்.

அரசச்சின்னங்கள்

சிம்மாசனம், கட்டில், நாற்காலி, சிவிகை.

இருசது ரத்தி ரண்டு தற்சனி நீக்க யேற்கக்
கரமீது கரமி யற்றற் காட்டுஞ்சிங் காச னஞ்சீர்
வருமீது நாற்கா லிக்கு மகிழ்பெறு மஞ்சத் திற்கும்
பெருவிர லிரண்டு நீளிற் பேர்சிவி கைக்கு மாமே. .

..696


வேசியர்

இடங்கட காமு கத்தும் வலஞ்சந்தங் கிசமி ருத்தி
வடிவுள்ள மார்பு நேராய் வைத்தது விகாரப் பார்வை
குடிலமாய்ப் பார்ப்ப தென்றே கோதறப் பரத நூலோர்
அடவுடன் வேசி யர்க்கு வமைத்திட வுரைசெய் தாரே.

...697

அரசச்சின்னங்களின் அபிநயம் முற்றும்.

23. சங்கீதம்

சப்தசுரம்

அழகிய சட்ச மத்திற் கபவித்த மயூர மாகும்
மழவிலா ரிஷபத் திற்கு வபவித்த மிருகச் சென்னி
முழுதுங்காந் தாரத் திற்கு வபவித்த வஜாமு கக்கை
சுழன்மத்தி மத்திற் காகும் அபவித்த சுகதுண் டக்கை.

...698


பஞ்சமந் தனக்குச் சொல்லு மபவித்த பதும கோசம்
தஞ்சமாந் தைவ தத்திற் குப்புங்கி தப்ப தாகை
அஞ்சாநி டாதத் திற்கு வபவித்த வராளக் கையாம்
கொஞ்சிய மொழியி னாளே கூறுவாய் முறைதெ ரிந்தே.

...699

சுரங்களின் அபிநயங்கள் முற்றும்.

24. இராகங்கள்

பூபாளம், மலகிரி, வேளாகிரி, பௌளி

புருடபூ பாளத் திற்குப் புகலல பத்மக் கையாய்
மருவதின் பெண்டீ ரான மலகிரிக் காம்லாங் கூலம்
திருவார்வே ளாகி ரிக்குச் சிலிட்டமு குளக்கை யாகும்
பெருமைசேர் பௌளிக் கொக்கும் பிரமக்கை பதும மாதே.

...700


பைரவி, மேகரஞ்சி, குறிஞ்சி, தேவகிரி.

நாயக பைர விக்குத் ரிபதாக நவிலு மந்த
நாயக னுக்கு நாய கிகளாகு மேக ரஞ்சி
சாயாத தாம்ப்பர சூடங் குறிஞ்சிக்குச் சதுரக் கையாம்
தோயுந்தே வகிரி யாஞ்சொல் சிம்மமு கக்கை யென்றே.

...701


ஸரீராகம், இந்தோளம், மாதுரி, பலாரி.

மானேபு ருடஸரீ ராகங் கர்த்தரி முகம்வ ழுத்துந்
தானதன் பெண்மை யிந்தோ ளத்திற்கர்த் தசது ரக்கை
வானுறு மாது ரிக்கு மதுரக்கை யாம்ப லாரிக்
கானகு சுகதுண் டக்கை யணியிடை யுடைய மாதே.

...702


இராகபஞ்சரி, தேசி, சங்கராபரணம், லலிதா.

விள்ளுமே புருட ராக பஞ்சரிக் குத்விர்த் தக்கை
பள்ளியன் மனைவி தேசிக் கர்த்தப தாகக் கையாம்
தள்ளாத சங்க ராப ரணத்திற்குச் சந்தம் சக்கை
கள்ளமில் லலிதைக் காகும் லதாக்கர மெனச்சொன் மானே.

...703


வஸந்தா, ராமக்கிரியை, வராளி, கவுசிகை.

ஆடவர் வசந்தா விப்ர கீர்ணம தின்பெண் ணாகிக்
கேடிலா தோங்கும் ராமக் கிரியைக்குப் பாணக் கையாம்
வாடவ ராளிக் குச்சி லிட்டகர்த் தரிவ ழுத்தும்
பாடிலாக் கவுசி கைக்குப் பதுமகோ சக்கை யோதே.

...704


மாளவம், கெள்ளை, குச்சரி, குண்டக்கிரியை.

ஆணாகு மாள வப்பேர் சிகரக்கை யதன்பெண் டீராம்
கோணாத கவுளை யுக்த சந்திரன் குச்ச ரிக்குத்
தோணுமே முட்டி சூசி குண்டக்கி ரியைக்குச் சொல்லும்
தாணுவை வணங்கு மாதே சக்கரக் கைய தாமே.

...705


பங்காள, தன்யாசி, காம்போஜி, கன்னடகவுளம்.

பங்காளப் புருட னுக்குப் பதாகமா மதற்கில் லாளாம்
பொங்கிய தன்யா சிக்கு வராளக்கை காம்போ ஜிக்குக்
கங்கண கபித்த மாகுங் கன்னட கவுளத் திற்கு
மங்கள மிருக சீரி டக்கையாய் வகுக்க லாமே.

...706


நாட்டை, நாராயணகௌள, தேசாக்ஷி, ஆகிரி.

நாடையாங் கொழுந னுக்குச் சூசிக்கை யதனி னங்கை
ஊடுநா ராய ணக்க வுளமம்சா சியக்கை யாகும்
மாடுதே சாக்ஷிக் கர்த்த முகுளமா மாகி ரிக்குத்
தேடுதற் கரிதா மின்னே யவகித்தக் கையாய்ச் செப்பே.

...707


சாரங்கநாட்டை, சௌராஷ்ட்டிரம், சாவேரி, சுத்தஜாளி, மாளவஸரீ.

சாரங்க நாட்டைக் காகுஞ் சையமக் கைசௌ ராட்ரம்
சாருமே யம்ஸ பட்சஞ் சாவேரி ஞான முத்திரை
தாருக சுத்த ஜாளி சங்கீர்ண பதாக மாகும்
கோரிய மாள வஸரீ கலசக்கை கூறு மாதே.

...708


தோடி, கண்டாரவம், ஹெஜ்ஜஜ்ஜி, முகாரி, மோபௌளி

காணுந்தோ டிக்கு வர்த்த மானக்கை கண்டா ராவ
மீணுமே ரேகா வஸ்த மேஜிஜ்யா விற்கர்த்த சந்த்ரன்
பாணிசேர் முகாரி நாக பந்தமா மேச பௌளி
சாணிலா விடையி னாளே தண்டபட் சக்கை யாமே.

...709


தேசாவளி, மங்களகவுரி, சுத்தவசந்தா, பாடி

தேசாளம் வைஷ்ண வக்கை மங்கள கவுசி செப்பும்
மாசிலாக் கர்த்த ரிச்சு வத்திக மாகு மென்றே
வாசினே ரான சுத்த வசந்தாவிற் கஞ்ச லிக்கை
தேசிக பாடிக் காகுஞ் சிவமுத்தி ரக்கை யென்றே.

...710


மாதவி, கேதாரகவுளம், நாதநாமக்கிரியை, சாமந்தா

தாமது மாத விக்குச் சங்கீர்ண காங்கூ லக்கை
காமம தாங்கே தார கவுளரே சிதக்கை யாகும்
கோமள நாத நாமக் கிரியைக்குத் தலமு கங்கொள்
சாமந்தா விற்கா விர்த்த வக்கிரக் கையாய்ச் சாற்றே.

...711


இராகமொத்தம்

ஆமிரா கங்கண் மொத்த மைம்பதிற் கனுமன் சொன்ன
நேமமாம் பரத நூலி லபிநயித் திடனி கழ்த்து
மாமலர்க் குழலி னாளே மற்றரா கங்கட் கெல்லா
நாமநட் சத்தி ரச்சீர் நவின்றபி நயிக்க லாமே.

...712

இராகங்களின் அபிநயம் முற்றும்.

25. நவரசம்

நகை, துக்கம், இனிவரம், மருட்கை, அச்சம், பெருமை

நகைக்கல பதுமக் கையா நாடிய துக்கத் திற்குத்
தகுமுட்டிக் கைய தாகு மிளிவரலே சூசி சாற்று
மிகுமருட் கப்ப தாகை யச்சம்வண் ுக்கை விள்ளு
மகிமைசேர் பெருமைக் காகு மிருடசீ ரிடக்கை மானே.

...713


வீரம், உவகை, சாந்தி

வீரர சந்த னக்கு டமருக மாக விள்ளும்
பாரினி லுவகைக் காகும் பகர்கீல கக்கை யென்றே
ஆறிய சாந்த மாமி ரசந்தனக் கபயக் கையாய்ச்
சீருள வடிவின் மாதே செப்புவை முறைதெ ரிந்தே.

...714

நவரசங்களின் அபிநயம் முற்றும்.

26. புணர்ச்சி முதலியன

புணர்ச்சி, சமரதி

சொல்லுமே புணர்த லுக்குச் சுகசோப னக்கை யென்று
இல்லுடை வலக்கை மேலு மிடதுகை கீழு மாக
வெல்லுமி ரண்டு கர்த்த ரீமுக மிணக்கிக் காட்டல்
புல்லுவர் சமர திக்குப் பொருந்திட நூல்வல் லோரே.

...715


உபரதி

இடதுக ரத்தை மேலு மினிவலங் கீழு மாகக்
கடிதிலாக் கர்த்த ரீமு கந்தனைப் புணைத்துக் காட்ட
மடலவிழ் குழலி னாளே பரதநூற் கற்ற வாணர்
திடமதா முபர திக்குச் செப்பினர் முறைதெ ரிந்தே.

...716

புணர்ச்சி முதலியன முற்றும்.

27. பாந்தவ்ய அபிநயம்

அன்னைக்கு வம்சாஸ்ய மிருகசிர மதனை
யபவேஷ்டி தம்பி டித்தல்
ஆகுமே தந்தைக்குச் சிகரஞ் சகோதரர்க்
கமையுமே கர்த்த ரீகம்
பொன்னையு மாமிமா மன்முகுள சர்ப்பசிரம்
பொருந்துமைத் துனன்ற னக்குப்
போலுஞ்சந் தம்சமுட னர்த்தசந் திரனாகப்
புல்லு மேபந் துக்களாய்த்
துன்னும்ப தாகமதி ரண்டும்பி ராணேச்
சுரன்சிகர மாய்வி ளங்கும்
சுகமதாம் பெண்டினுக் கேமிருக சிரமதாந்
தூயமு குளமாப் பிள்ளைக்
கென்னவே பந்துக்க ளபிநயக் கூறிதை
யிணங்(கு)முன் யாஜ்ஞ வல்கன்
இயல்பதா யுலகறிய வேயுரைத் திட்டநூ
லிதமா யறிந்து கூறே. .

..717

பாந்தவ்ய(வேறு) அபிநயம் முற்றும்.

28. சர்வாங்க அபிநயம்

கருதுபா தம்நெற்றி யாம்பதா கங்குதிக்
காலிடை கழுத்து முட்டி
கணைக்கால் கபோத மாகுஞ்ச டைமுழங்
கால்கமுக் கூட தாகுங்
கமழர்த்த சந்த்ரன் துடைகரித் துடைச்சந்து
கடகா முகக்கையாகும்
காணாக்குத் தலமதமு சாசிய மாண்குறிக்
காகு மிருகச் சென்னியே
மருவுபீ சமிரண்டு திரிபதா கங்குட்சி
வளரதோ முகக்க போதம்
மன்னுங் கணுப்புப்பல் வரிசைசுக துண்டமாம்
வளர்நாபி பார்வை புருவம்
வாசியா முதடுநற் குணநாசி புத்திக்கு
வாய்த்திடுஞ் சூசி முகமா
மன்னுளாங் காதுக்குச் சந்தம் சமாம்ரோம
வரைசர்ப்ப சிரமு மார்பு
பொருதுசுவத் திகமுலை யினுனி தானாய்ப்
பொருந்துமே முகுள முலைதான்
புல்பதும கோசமாய்க் கன்னமுன் னெற்றிமயிர்
மூட்டுமே திரிப தாகம்
புவிநீளு மயிர்க்கத் தரிசொத்தி கங்கொண்டை
போலு மேயல பல்லவம்
பொலிவா மனோவிகா ரங்கள்கர்த் தரிவார்த்தை
பூங்களச் சந்தம் சமாம்
விருதுபெற் றொளிருநகங் களுக்கா முகுளம்
விசையான பாண முடனே
மேன்மைபெற் றிடுதிரி பதாகமுங் கூட்டியிது
வெல்லா வுறுப்பு கட்கு
மீளாப்பொ ருந்துமென நந்தியின் மதந்தனில்
விண்டன னுலக றியவே
மீனைப் பழித்தவிழி வேலைப் பழித்தகடை
மேவற்பு தப்பெண் ணரசே.

...718

சர்வாங்கங்களின் அபிநயம் முற்றும்.

29. இரத்தினங்கள்

வயிரமது சிங்கமுகம் ரசதஞ் சதுரமாம்
வைடூர் யம்மஜ முகம்
வளர்சந்திர காந்தமே யர்த்தசந் திரன்புஷ்ப
ராகங்காங் கூலம் வாழ்த்தும்
சுயமான பதுமரா கமதுசந் தம்சமாம்
துலங்கு முத்தியம் சாசியம்
தோராத நீலமே கடகாமு கம்பவளம்
சிகரமென் றேது திக்கு
நயமான கோமேதக மதுவர்த்த பதாகை
நன்மைதரு காந்த மணியே
நவிலுமல பல்லவம தாகுமென வேமுகுள
நாடியே யாஜ்ஞ வல்கன்
பயனுற நவரத்தி னங்களுக் கபிநயம்
பாங்கா யுரைத்த நூலைப்
பார்த்துலகி லிம்முறை யோதுவாய் வல்லைப்
பழித்த முலையி னாளே.

...719

இரத்தினங்களுக்கு அபிநயம் முற்றும்.

30. நவ உலோகங்கள்

தங்கஞ் சதுர மாகும் வெள்ளி
பதாகம் திரிபதாகந் தாம்ப்ரம்
பொங்கும் பித்தளை கண்ட சதுரமதா
மீயங்காங் கூலம் புல்லும்
வெண்கலமே சிங்கமுகம் இரும்பு முட்டி
தகரமர்த்த பதாக மேவும்
சங்கையிலா துருக்குச் சூசி யெனவிரத்னா
கரன்முன் சாற்றி னானே.

...720.

உலோகங்களின் அபிநயம் முற்றும்.

31. நவரசாபிநயம்

சிங்கார மலபதுமம் ரேகாசந்த்ரன் செலும்வீரந்
தருபதாகங் கருணை முகுளம்
மங்காத வற்புதஞ்சந் தம்ஸமாஸ்ய மருவுமே
வம்சாஸ்யம் பயமூர் ணாபந்
தங்காத பீபச்சந் திரிபதாகந் தன்னுடன்
கர்த்தரி ரவுத்ரஞ்சு கதுண்டந்தான்
இங்கிதமாம் சமமம்ச பட்சமென் றியம்பினன்
முன்பரதா சாரிய னாராய்ந்தே.

...721

நவரசாபிநயம் முற்றும்.

32. எண்கள்

ஆதியொன் றாஞ்சூசி ரண்டினுக் கர்த்த பதாகமா மூன்றி னுக்கு
வணிதாம் பிரசூட மாநான் கினுக்குச் சிகரமைந் தினுக்கே முகுளமாம்
ஓதுமே வாறினுக் குப்பாண மேழினுக் குற்றவமு சாசிய மாக
வொப்பிலா திருநான்கு சந்தம்ச மேயாகு முற்ற கடகா முகக்கை
நீதமுள வொன்பதிற் காய்வழுத் தும்பத்து நேரு முகுளத்தை யிருபா
னீளவிட்டுப் பிடிப்ப தாகு மிவ்வாறு நின்ற பன்னொன்று முதலாய்
மீதிலோ தியவகை படியாய்க் கரம்பற்ற வேணு மெனவே நூலினுள்
விண்டனன் பரதவா சாரிய னுலகரிய மின்னினைத் திகழும் வடிவே. ...722

எண்களின் அபிநயங்கள் முற்றும்.

33. சாஸ்திரம்

முன்னிரு சதுரக் கையை முகத்தினேர் நீட்டிக் காட்டி
மன்னிய திரிலிங் கக்கை வாய்க்குநேர் விரித்துக் காட்டத்
தன்னிகர் பரத நூலோர் சாத்திர மென்ப திற்குப்
பன்னியே யுரைத்தா ரந்தப் பனுவலை யறிந்து கொள்ளே.

...723


சாஸ்திரத்தின் அபிநயம் முற்றும்.

6. மனிதப்பகுதி முற்றும்.

7. தேவர் முதலியோர்
34. தேவர்

பிரமன்,ஈசன்.

வலக்கையம் சா்ய மற்ற வாமத்திற் சதுர வஸ்தம்
நலத்துட னேபி டித்தா னான்முக னாகு மென்ப
வலக்கையிற் றிரிப தாக மறுமையின் மிருக சீர்ஷம்
இலக்கண மாய்ப்பி டித்தா லீசனார் தமக்கா மென்னே.

...724


விட்டுணு, பாரதி, பார்வதி.

இருக்கையுந் திரிப தாக மிணக்கிடிற் றிருமா லுக்காம்
வரும்வலக் கரத்திற் சூசி வாமத்திற் கபித்தஞ் சேர்த்தால்
சரஸ்வதிக் காகு மர்த்த சந்திரத் திடக்கை மேலாய்ப் (கீழாய்ப்)
பரிவலக் கைமேற் காட்டப் பார்வதிக் காகு மென்றே.

...725


இலக்குமி, கணபதி.

கருதுமி ரண்டு கையுங் கழுத்திற்கு நேர தாக
வருகபித் தம்பி டித்தான் மலர்மக ளுக்கே யாகும்
இருக்கையுங் கபித்த மாக விணங்கமுன் பாற்பி டித்தால்
அருடருங் கணப திக்கே யாகுமென் றுரைசெய் மாதே.

...726


முருகன், மன்மதன்.

வலக்கையிற் சிகர மற்ற வாமத்திற் றிரிசூ லந்தான்
நிலைத்திரு கையு மேலாய் நீட்டிடின் முருக னாகும்
கலக்கமில் வலக்கை தன்னிற் கடகாமு கம்வா மத்தில்
நலம்பெறு சிகர மாக நாட்டிடின் மதனுக் காமே.

...727


இந்திரன், அக்கினி.

திரிபதா கம்மி ரண்டுஞ் சேரவே சுவத்தி கம்போல்
மருவவே மேலாய் நீட்ட வாசவ னுக்கே யாகும்
திரிபதா கம்வ லக்கை திகழிடக் கைகாங் கூலம்
அருமையாய்ப் பிடித்துக் காட்ட லக்கினி தேவ னாமே.

...728


இயமன், நிருதி.

வாமத்திற் பாசம் வைத்து வலக்கையிற் சூசி வைத்தால்
ஆமது தென்றிக் காளு மந்தகன் றனக்குப் பின்பு
நேமமாங் கட்டு வக்கை நிகழ்த்திய சகடக் கையும்
தாமெனு நிருதிக் கென்றே சாற்றினர் நூல்வல் லோரே.

...729


வருணன், வாயு

வாமக்கை சிகர மாக்கி வலக்கைப்ப தாகம் வைத்தால்
நாமமே வருண னாகும் நவிலுமர்த் தபதா கத்தை
வாமத்தி லேபி டித்து வலக்கைய ராளஞ் சேர்க்கில்
மாமலர்க் குழலி னாளே வாயுதே வனுக்கா மென்றே.

...730


குபேரன், ஈசானன்.

இச்சித்தி டக்கை பத்ம மெழிற்கைவ லக்கை தன்னில்
நிச்சித்துத் தோண்மேற் காட்டி னிதிபதிக் காகு மென்பர்
நச்சுண்ட சிவன்கை யாகு நவிலுமீ சானி யற்கு
மெச்சிய சிவக ணங்க டன்னைமேற் சொல்வோ மாதே.

...731

தேவர்களின் அபிநயம் முற்றும்.

35. சிவகணங்கள்

வீரபத்திரன்

தார்வலக் கையுத் வேஷ்டி தச்சிக ரம்மி டக்கைச்
சீரதோ முகமுட் டிக்கை வலக்காலைத் தூக்கிச் சேரக்
கூருட னிடக்கா றன்னைக் குஞ்சித மாக வைத்தால்
வீரபத் திரனுக் கென்று விண்டனர் பரத நூலோர்.

...732


ஐயனார்

இடதுகைப் பதும கோசம் வலங்கட காமு கத்தின்
தடந்தெரி யுஞ்ச மதிஷ்டி சதுரஸ்ர மாய்ப் பிடித்தால்
திடம்பெறு சாத்த னுக்குச் செலுமெனப் பரத நூலோர்
மடமைசேர் மனத்தி னாளே வழுத்தினர் முறைதெ ரிந்தே.

...733


க்ஷேத்திரபாலகன்

சூத்திர வலதுமுட்டி யுயர்த்தியே சூழ்ந்தி டக்கை
பூத்திடும் டோள மாக்கிப் பொருந்தவே சாய்ந்த பார்வை
பார்த்திடற் குரூர திஷ்டி பயிற்றிடப் பரத நூலோர்
க்ஷேத்திர பால ரூபஞ் சிறக்குமென் றுரைசெய் தாரே.

...734



வைரவன், துவாரபாலகர்

மருவிடம் பதும கோசம் வலந்திரி சூலம் பற்றப்
பெருகிய வடுகன் றோற்றம் பேணுமா நடன பாதம்
கருவிடம் பதும கோசம் வலக்கையை டோலங் காட்டில்
குருவருள் துவார பாலர்க் காமெனக் கூறு மாதே.

...735


தெக்கணாமூர்த்தி, நந்தி

வலதுகைச் செபச ரத்தி னிடக்கைடோ ளமதாய் வைத்தல்
இலகிய தெக்க ணாமூர்த் திக்கென்பர் வலக்கை சூசிப்
பலனிடந் திரிப தாக மாகவே பிடித்துக் காட்டில்
நிலையுள நந்திக் கென்று நிகழ்த்தினர் நூல்வல் லோரே.

...736


சண்டேச்சுரன், துர்க்கை

இடங்கட காமு கம்வைத் தெழில்வலஞ் சூசி யாய்ப்பற்
றிடச்சண்டேச் சுரனாம் வாமஞ் சிகரமாய் வலக்கை தன்னைக்
கடகா முகம்பி டித்துக் கழுத்துமட் டுநடத்தி யப்பால்
அடவுடன் காட்டிற் றுர்க்கைக் காமென வுரைசெய் மானே.

...737

சிவகணங்களின் அபிநயம் முற்றும்.

36. தேவியர்

சாமுண்டி

பகர்வலம் சிகரம் வைத்திடக் கையிற் பதும கோசம்
சுகமுறக் காட்டிக் காலைத் தூக்கியே மடக்கிக் காட்டல்
தகைமைசேர் பரத நூலோர் சாமுண்டிக் காகு மென்று
மகிமையா யுரைத்தா ரிந்த வையக மறிய மானே.

...738


மூதையினபிநயம்

இடங்கட காமு கஞ்செய் தினியதாம் வலக்கை தன்னைத்
தொடரவே திட்ட மாய தோமுக பதும கோசம்
படியவே பற்றி யப்பா லதோமுக திஷ்டி பார்த்தல்
படிமிசைச் சேஷ்டா தேவிக் காமெனப் பகரு மாதே.

...739


விஜயலட்சுமி

இசையவே வாயுஸ் தானந் தனினின் றிடது கையை
வசைகட காமு கத்தாய் வலஞ்சூசி யுக்ர திஷ்டி
விசையுறப் பார்த்த லாகும் விஜயலட் சுமிக்கி தென்று
அசைவறப் பரத நூலோ ரருளினர் கமல மாதே.

...740


வீரலஷ்மி

சேரவே யிடது கையைக் கடகாமு கமதாய்ச் சேர்த்துக்
கூருடன் வலது கையின் த்ரிபதாகங் குறுக்கே காட்டிச்
சாரவே திருட்டி தன்னைச் சலனத்தைச் செய்த லாகும்
வீரலட் சுமிக்கே யென்று விண்டனர் நூல்வல் லோரே.

...741


மகேசுவரி

ஏலவா யுஸ்தா னத்தி லிடங்கட காமு கஞ்செய்
மேலதாம் வலதுகையை மிருகசிர மலது சக்கரம்
கோலமாய்ப் பிடித்துக் காட்டற் கூறுமே மகேசுவ ரிக்கென்
றாலஞ்சேர் விழியி னாளே யறைந்தனர் நூல்வல் லோரே.

...742


கௌமாரி

தவமுறும் வலம்ப தாகத் தைக்கடி கையிலே வைத்துக்
கவியவே யிடது கையைக் கடகாமு கமதாய்ப் பற்றி
அவைமார்பு நேராய்க் காட்டி வாயுத்தா னத்தி னிற்றல்
கவுமா ரிக்கு மென்றே கருதுவாய் கமல மாதே.

...743


வாராகி

முகத்தையஞ் சலிபோ னீட்டி முன்னிரு கைக டன்னில்
தொகையதாந் த்ரிபதா கத்தைத் தோளுக்கு நேர தாக
முகியவே நிறுத்தி யேயான் முத்திரை யாகக் காட்டப்
புகலுவர் வராகிக் கென்றே புவிமிசை நூல்வல் லோரே.

...744


வைஷ்ணவி

கடகாமு கம்மி டக்கை வலதுகைத் திரிப தாகம்
வடிவுள தோளி னேராய் வைத்ததை மார்பி னேராய்
அடவுடன் பிடித்துக் காட்ட வதுவைஷ்ண விக்கா மென்று
படிமிசைப் பரத நூலோர் பகர்ந்ததை யறிந்து கொள்ளே.

...745


பூமிதேவி

காணவே யிடக்க ரத்தைக் கடகாமு கமதாய்ப் பற்றிப்
பூணவே வலம்ப தாகம் பொருந்தக்கீழ் நோக்கிப் பாதம்
பேணவே நடித்தற் போலப் பிரியமாய்க் காட்டி நிற்றல்
வேணுநேர் தோளி னாளே பூமிதே விக்காய் விள்ளே.

...746


கங்காதேவி

இனிவலங் கர்த்த ரிக்கை மேனோக்கி யிடப்ப தாகம்
பனுவலா யேந்திப் பின்ன தோமுக மாகப் பார்த்தல்
புனிதமாங் கங்கா தேவிக் காமெனப் புவியின் கண்ணே
இனமுடன் பரதங் கற்ற யாவரு மறிய வோதே.

...747

தேவியரின் அபிநயம் முற்றும்.

37. பிறதேவர் முதலியோர்

தருமதேவதை

வலஞ்சது ரஸ்ரஞ் செய்து முகத்தினேர் வைத்துப் பின்னும்
சிலைகொளு மிடக்கை தன்னை மிருகசி ரமதாய் மேலே
சலனமில் லாம னோக்கற் றருமதே வதைக்கா மென்று
நலமுடன் பரத நூலோர் நவின்றதை யறிந்து பேசே.

...748


பஞ்சபூதங்கள்

பிரிதிவி முட்டிக் கையாம் பதாகத்தைச் சலனஞ் செய்தல்
பரிவுள வப்பு விற்காம் தேயுவுக்குத் திரிப தாகம்
அருமையாங் கால ராளச் சலனமா காயத் திற்குத்
திரமதாய் முகுள முத்வேஷ் டிதமதாய் விரித்த லாமே.

...749


இந்திராணி

இந்திர வஸ்தங் காட்டிக் கழுத்திலம் சாஸ்ய மேற்றுச்
சந்ததம் பிடித்து நாய கிக்கரந் தன்னைக் காட்டல்
மந்தர மலையை நேரு மாதனத் துடைய மாதே
இந்திரா ணிக்கா மென்று இயம்பினர் பரத நூலோர்.

...750


சயந்தன்

சுயமதா யிந்தி ரன்கை காட்டித்தொப் பூழ்க்கு நேரே
வியனுறு முகுளந் தன்னை விரித்துப்பின் வலக்க ரத்தால்
நயமுள்ள சிகரம் பற்ற நவிலுவர் மகவான் பெற்ற
சயந்தனுக் காகு மென்று சாற்றுவாய் முறைதெ ரிந்தே.

...751


நளகூபரன்

அளகாபு ரிக்கு பேர னத்தத்தைக் காட்டி யப்பால்
விளங்கவே முகுளக் கையை விரித்துச்சி கரம்பி டித்தால்
புளகித முலையி னாளே குபேரன்றன் புதல்வ னான
நளகூப ரன்ற னக்கு நவிலுவர் நூல்வல் லோரே.

...752


வசந்தன்

நிசமதா மென்னி லைக்கை சலனஞ்செய் ததனை நீட்டி
வசையிலா தேய தைப்பின் வாங்கியே சிகரம் பற்ற
விசையுறுங் குரலி னாளே யிதுவசந் தனுக்கா மென்று
திசைகொளப் பரத நூலோர் செப்பினர் முறைதெ ரிந்தே.

...753


ருதுக்கள்

மற்றரு துக்க ளுக்கு வதின்குணம் வடிவாய்க் காட்டிச்
சிற்றிய விருது வம்சா சியந்தூக்கி யிறக்கிக் காட்டல்
உற்றது கையா மென்றே யுலகிலுள் ளோர்கள் காண
முற்றிலும் பரத நூலோர் மொழிந்தன ரறிந்து கொள்ளே.

...754


பகல், இரவு

உதயாமாங் கிரியின் பக்கஞ் சூசிக்கை யுறவே காட்டிப்
பதமுள்ள பூர ணக்கை பிடித்திடிற் பகலுக் காகும்
துதியிர விற்கா மஸ்த கிரிப்பக்கஞ் சூசி காட்டிக்
கதிகொள வர்த்த சந்த்ரன் கையினான் மறைத்த லாமே.

...755


பூத கணங்கள்

மாதுடை முட்டிக் கையாற் பருமையைக் காட்டி மற்றும்
போதவே சிகரங் காட்டிற் பூதக ணங்க ளுக்காம்
சாதுவா மற்றத் தேவர் தன்ரூபத் தியானங் கொண்டு
ஓதுவா யஸ்தந் தன்னை யுறுதியாம் பயன றிந்தே.

...756


பஞ்சபூதங்கள்

பஞ்சமி லிடக்கை சூசி யாக்கியே பக்கப் பார்சுவ
மிஞ்சியே சுற்றி யப்பால் வலக்கைப்ப தாக மேற்றுத்
துஞ்சிடா வக்க ரத்தைத் தோளுக்கு நேர்பி டித்தால்
பஞ்சபூ தத்திற் கென்று பகர்ந்தனர் பரத நூலோர்.

...757


தேவர், துவாதசாதித்தர், விசுவதேவர்

தேவர்க்குப் பதாக முத்வேஷ் டிதம்பிடித் தலெனச் செப்பும்
துவாதசா தித்த ருக்கு விரண்டுகை சூசி யாக்கிச்
சீவநெற் றியில்வைத் தேரே சிதஞ்செய்த லென்பர் விசுவ
தேவர்க்கர்த் தபதா கத்தை யுத்வேஷ்டி தம்செய் யென்றே.

...758


வசுக்கள், துவஷ்டா, அநிலன்

அஷ்டவ சுக்க ளுக்கூர்ம் மக்கட காமு கம்முத்
வேஷ்டிதஞ் செய்த லென்று விள்ளுவ தல்லாற் பின்னும்
துவஷ்டற்குச் சதுரக் கையாய்ச் சொல்லுவ ரனில னுக்குத்
வேஷ்டித மர்த்த சந்த்ரன் விள்ளுவர் நெற்றி நேரே.

...759


பிதுர்தேவதை, சாத்தியர், இயக்கர்

தக்கவே பிதுர்தே வர்க்குத் தர்ப்பணக் கைய தாகும்
திக்குள சாத்தி யர்க்குச் சிகரக்கை நெற்றி நேரே
ஒக்கவுத் வேஷ்டி தஞ்செய் தோதுவை யியக்க ருக்கு
மிக்கப தாக மூர்த்வ ரேசிதம் விள்ளு மாதே.

...760


ஊர்வசி

அருமையா மற்றத் தேவர்க் கவர்சொரூ பத்தைக் கண்ட
பெரியோரி டந்தெ ரிந்து பேசுவா யூர்வ சிக்குத்
தருவலக் கைய ராள நெற்றிநேர் சலனஞ் செய்து
பெருமிடங் கடகாமு கத்தைப் பிரசன்னமாய்ப் பார்த்த லாமே.

...761

பிறதேவர் முதலியோர் அபிநயம் முற்றும்.

தேவர் பகுதி முற்றும்.

35. அசுரர் முதலியோர்

அசுரர். கின்னர், கந்தருவர், இராக்கதர்

செப்புவா யசுர ருக்குச் சிங்கக்கையாங் கின்ன ரற்கு
ஒப்புமம் சாஸ்யஞ் சிங்க நகமென வோதும் பின்னும்
தப்புகந் தருவ ருக்கு விரண்டர்த்த சசிரே சித்தல்
வெப்பிராக் கதருக் குச்ச கடக்கையாய் விளம்ப லாமே.

...762


அசுரர்

சூரபத்மா

இடக்கரஞ் சூசி யாக்கி யேலவே வலது கையைப்
படியவே சூசி சுற்றி மறுபடி திரிபதா கத்தை
அடவுடன் றோளின் மீதி லமைந்திட விருத்திக் காட்டல்
திடமுள சூர பத்மன் றனக்கெனச் செப்பு மாதே.

...763


கர்த்தவீர்யார்ச்சுனன்

சாரவே வலது கையைப் பதாகம தாக்கி மீசை
ஏறவே திருத்தி மற்று மிரண்டுகை டோள மாக்கி
நேர்சுவத் திகமாய் வைத்து நீதியா யபிந யித்தல்
சோர்கார்த்த வீரி யார்ச்சு னனுக்கென்று சொல்லு மாதே.

...764


இராவணன்

கைலாய புப்ப தத்தைக் காட்டியே மற்று மக்கைப்
பயனுற விரண்டு பத்ம கோசம தாகப் பற்றி
இயல்புடன் தோட்கு நேரே யிக்கரந் தனைப்பி டித்தால்
நியமி ராவ ணன்ற னக்கென நிகழ்த்த லாமே.

...765


கும்பகர்ணன்

பம்பிய முட்டிக் கையாற் பலாட்டியந் தன்னைக் காட்டித்
தம்பமா மொருக ரம்ப தாகத்திற் சயனங் காட்டி
எம்பிலா மற்றோர் கையை யிராக்கதக் கரம்பி டித்தல்
கும்பகர் ணனுக்கா மெண்று கூறினர் பரத நூலோர்.

...766


வாணாசுரன்

கோணாத முட்டிக் கையைக் கூருட னீட்டி மற்றும்
தோணவே யிரண்டு கையுண் டோளம தாக்கி நேராய்க்
காணவே யபிந யித்தற் கருதுவர் பரத நூலோர்
வாணாசு ரனுக்கி தாகு மென்னவே வனச மாதே.

...767


திரிபுராதிகள்

இரண்டுகை மிருக சீரி டத்தினி லியல்ப தாகக்
கருகனிட் டத்து டன்மற் றொருகனிட் டத்தைச் சேர்த்து
மருவிலா விராக்க தக்கை மறுபடி பிடித்துக் காட்டத்
திரிபுரா திகளுக் கென்றே செப்பினர் பரத நூலோர்.

...768


இரணியன்

வருமிடஞ் சூசி பற்றி வலதுப தாகந் தன்னைப்
பிரேரித மாகச் செய்து பின்பிராக் கதருக் கான
கரமதைக் காட்ட வத்தைக் கருதுவர் பரத நூலோர்
இரணியன் றனக்கா மென்றே யியல்பினை யறிந்து கொள்ளே.

...769


பிரகலாதன்

இரணிய வத்தத் தோடே யினியநா பியிற்சந் தம்ஸம்
அருமையாய்ப் பிடித்து நேரே யஞ்சலி செய்து பின்பு
பெருமையா மிராக்க தக்கை பிடித்திட லாகும் பேராம்
பிரகலா தனுக்கா மென்று பேசினர் நூல்வல் லோரே.

...770


விபீடணன்

இராவண னஸ்தங் காட்டி ரம்யமாம் வலது கையில்
மேவிய கர்த்த ரீமு கஞ்செய்து காட்டி மேலே
காவிராக் கதக்க ரத்தைக் காட்டியே யபிந யித்தல்
மாவிபீ டணனுக் கென்று வழுத்துவ ரினிய மாதே.

....771


மாவலிச்சக்கரவர்த்தி

அடவுடன் வலது சூசி யான்மண்ணும் விண்ணுங் காட்டித்
திடமுடன் பதாகந் தன்னை யபவேஷ்டி தமதாய்ச் செய்து
வடிவுள ராக்க தக்கை வண்ணம தாகக் காட்டப்
படிமிசை மாவ லிக்குப் பகருவர் பரத நூலோர்.

...772


நரகாசுரன்

முந்தவே பூமா தேவிக் காங்கர முயர்த்திக் காட்டி
உந்தியிற் சந்தம் சத்தை யுறுதியாய்க் காட்டி யப்பால்
வந்திடு மிராக்க தக்கை வகையுடன் பிடித்துக் காட்டத்
தொந்தமா நரகா சூர னுக்கெனச் சொல்லு மாதே.

...773


சலந்தராசுரன் முதலியோர்

சலந்தரா சூர னாதி ராக்கதர் சகல ருக்கும்
நிலையாவவ் வவர்க ளுக்கு நேர்குணஞ் சேட்டை கண்டு
பலம்பெறு மஸ்தங் காட்டிப் பயன்மன தறிந்த பின்பு
அலைவிலா ராக்கதவத் தத்தை வபிநயித் திடுவாய் மாதே.

...774

அசுரர் முதலியோரின் அபிநயம் முற்றும்.

36. இருடிகள்

பதஞ்சலி

ஏலவி ரண்டு வம்சா சியம்வைத் திரண்டு கண்ணும்
மீலித திஷ்டி பார்த்த விருடிகட் காகு மென்பர்
சாலவே பதஞ்ச லிக்குச் சர்ப்பசி ரத்தி னோடப்
பாலிருடி யஸ்தங் காட்டற் பகரலாங் கமல மாதே.

...775


வியாக்ர மகரிஷி, அகத்தியர்

அசையாச்சிம் மமுகந் தன்னை யதோமுக மாக வூன்றி
ரிஷியஸ்தங் காட்டில் வியாக்கி ரமருக்கா மென்றி றைஞ்சும்
குசலமா முட்டி காட்டிக் கொளும்ரிஷி யஸ்தங் காட்டல்
நிசமதா மகத்தி யர்க்கு நேருமென் றுரைசெய் மானே.

...776


பிரகஸ்பதி

இயலுமா யுத்தா னத்தி லிடங்கட காமு கஞ்செய்
தயரிலா வலது கையில் அர்த்தசந் திரனைப் பற்றிக்
கயலினைப் பொருகண் ணாளே கடிகையிற் பிடித்துக் காட்டப்
பயிலுமே பிரகற்ப திக்குப் பரதநூன் முறைதெ ரிந்தே.

...777


கலைக்கோட்டுமுனி, வசிட்டர்

சிலிட்டசிம் மமுகம் பற்றி ரிஷியஸ்தஞ் சிறந்து காட்டல்
கலைக்கோட்டு மாமு னிக்குக் கருதுவர் வசிட்ட னுக்குச்
சொலுந்தெட்ச ணாமூர்த் திக்கை தொடுத்துப்பின் ரிஷிகை காட்டல்
செலுமெனப் பரத நூலோர் செப்பினர் முறைதெ ரிந்தே.

...778


விசுவாமித்திரன், வியாசர்

நிசமுள சொர்க்கங் காட்டி நேர்ரிஷி யஸ்தங் காட்டல்
விசுவாமித் திரற்கா மென்று விள்ளுவர் வியாச ருக்குத்
தசையுள மென்னி லைக்கை சதுரக்கை காட்டி யப்பால்
ரிஷியஸ்தங் காட்ட வென்றே நேர்ந்துரை செய்வை மானே.

...779


சுகர், நாரதர்

சுகதுண்டங் காட்டி யப்பாற் றோன்றவே ரிஷிகை காட்டல்
சுகருக்கா நார தர்க்குச் சொலுமிட மிருகச் சென்னி
வகையுள வலக்கை தன்னைக் கடகாமு கமதாய் வைத்து
மகிமைசேர் ரிஷியஸ் தத்தைக் காட்டுதல் வழுத்த லாமே.

...780


சூதர்

இடதுகை சதுர மாக்கி மார்புநே ரியல்பாய் வைத்துப்
பொடியவே வலது அம்சா சியத்தைப்புங் கிதமாய்ச் செய்து
முடிபெரு ரிஷியஸ் தத்தை மோகமாய்ப் பிடித்துக் காட்டல்
துடியிடை யுடைய மாதே சூதருக் குரைசெய் வாரே.

...781


காசிபர்

வலதுகை தேவ வஸ்த வாழிட மிராட்ச தக்கை
நலமுடன் காட்டிப் பின்னு நாபியிற்சந் தம்சம் செய்து
இலகவே ரிஷியின் கையை யிழிவறப் பிடித்துக் காட்டல்
பலமுறுங் காசி பர்க்குப் பகரலாம் பதும மாதே.

...782


பிருகு

மாறாதி ருடிகட் கின்னம் வழுத்துவோ மார்பு நேரே
சீராம்வா மப்ப தாகம் பிடித்திடங் கசதந் தக்கை
நேராகப் பிடிக்க வுத்தா னக்கச தந்த நேருங்
கூராமவ் வபிந யத்தைப் பிருகிற்குக் கொள்வாய் மாதே.

...783


அத்திரி

பத்தியாய் மார்பு நேர்வா மப்பதா கத்தின் மேலே
யுத்தியாய் வலத்தைச் சூசி யாக்கவுத் தான சூசி
ஒத்ததை யபிந யித்த லுறுதியாந் தவமி குந்த
அத்திரி தனக்கா மென்றே யறைகுவாய் முறைதெ ரிந்தே.

...784


கௌதமன்

மவுனஞ்சேர் நெஞ்சி னேரே யிரண்டம்ச பட்ச மாக்கி
அவமிலா தொன்றின் மேலே மற்றொன்றை யாக்கி லத்தை
நவிலுமே சிலிஷ்டோச் சங்கக் கையதை யபிந யிக்கக்
கவுதமற் காகு மென்று கருதுவாய் கமல மாதே.

...785


குச்சன்

அச்சமில் மார்பு நேரே வாமம்ப தாக மாக்கி
இ்சையாய் வலத்தாஞ் சிங்க முகமேலே யியல்பாய்ப் பற்றல்
செச்சையா மதுவுத் தான சிங்கமு கமதா மத்தைக்
குச்சனுக் காகு மென்று கூறிய தறிந்து கொள்ளே.

...786


ஆங்கீரசன்

ஏங்காவா மப்ப தாகம் மார்புநே ரிட்டு மேலில்
லாங்கூலம் வுலத்திற் பற்ற வுத்தான லாங்கூ லம்மாம்
தாங்கிய வக்க ரத்தைச் சலியாம லபிந யித்தால்
ஆங்கீர சனுக்கா மென்றே யறைந்ததை யுணர்வாய் மாதே.

...787


துருவாசன்

மாரினே ரிடப்ப தாகம் போல்வல முத்தி ரைக்கை
ஊரிடப் பிடித்த லாகு முத்தான முத்தி ரைக்கை
நேருறப் பிடித்துக் காட்ட நிலையதாந் தவத்தி லோங்கும்
தூருவா சனுக்கா மென்றே சொல்லுவை யிதம றிந்தே.

...788


மார்க்கண்டன்

மார்நேர்வா மப்ப தாக மேல்வலம் மயூரம் பற்றத்
தார்கொளு மவற்றை யேயுத் தானவஞ் சிதமாய்க் கூறும்
பேர்கொளு மிக்க ரத்தைப் பிடித்தபி நயத்தைக் காட்டல்
மார்க்கண்ட னுக்கா மென்று வழுத்துவை முறைதெ ரிந்தே.

...789


கபிலர், தும்புரு

ஞானக்கை நெற்றி நேராய்க் கொளக்கபி லர்க்கு நாட்டும்
சூனிரு மிருகச் சென்னி தோட்குநேர் கீழ்க்கு மேலும்
ஈனமில் லாமலே காட்டிடிற் றும்புரு வுக்கா மென்று
தேனல ரிதழி னாளே செப்புவை முறைதெ ரிந்தே.

...790


அகத்தியன்

வகையுள்ள நெஞ்சி னேராம் வாமப்ப தாகத் தின்மேல்
இகலிலா வலக்க ரத்தின் முகுளம தாக யேற்றல்
உகிர்தலில் லாத வீதே யுத்தான முகுள மென்று
தகைமைசேர் கலசந் தன்னிற் சனித்தமு னிக்கென் றோதே.

...791


பரத்துவாசன்

உரத்துநே ரிடப்ப தாக மாக்கியே யுறும்வ லக்கை
யுரத்துமுத் திரைபி டிக்க வுத்தான முத்தி ரைக்கை
வருமிதை யபிந யித்தன் மன்னுமே தவத்தோர் தன்னில்
பரத்துவா சனுக்கா மென்று பாகமா யறிந்து கூறே.

...792


ஆபஸ்தம்பன்

வாதிலா மார்பு நேராம் வாமப்ப தாகத் தின்மேல்
தீதிலா வலக்கை சர்ப்ப சிரம்பற்றிக் காட்ட லாகும்
ஈதபி நயித்துக் காட்ட லேற்குமா பஸ்தம் பர்க்கு
மாதகு தனத்தி னாளே வழுத்துவை நூலு ணர்ந்தே.

...793


போதாயனன்

வாதிலா மார்பு நேராம் வாமப்ப தாகத் தின்மேல்
தீதிலா வலக்கை சர்ப்ப சிரம்பற்றிக் காட்ட லாகும்
மாதேயுத் தான சர்ப்ப சிரமென்பர் நுதனேர் வைத்தல்
போதாய னன்ற னக்குப் புகலுவர் முறையு ணர்ந்தே.

...794


சாவான்னி

மாரினே ரிடப்ப தாக நேர்வலஞ் சிகரம் பற்றல்
சீராகு மதுவுத் தான சிகரம வற்றை நெற்றி
நேரின்மேற் றூக்கிப் பற்றி நின்றபி நயிப்பா ராகில்
கூறுசா வான்னிக் கென்று குலவிய மொழியி னாளே.

...795


கண்ணுவர்

எண்ணிய மார்பு நேரா மிடப்பதா கத்தின் மீது
உண்வல மயூரம் பற்ற லுத்தான மயூர மாகும்
திண்ணமா மக்க ரத்தைச் சீர்கொள வபிந யித்தல்
கண்ணுவர்க் காகு மென்று கருதுவாய் மனத்துட் டேர்ந்தே.

...796


கார்க்கியன் முதலியோர்

மூர்க்கமி லூனக் கையை முகத்தினேர் பிடித்துக் காட்டல்
கார்க்கியன் றனக்கா மென்று கருதுமித் துறவோர்க் கெல்லாம்
ஏற்கவே மேலு ரைத்த வெழில்பெறு மபிந யத்தைக்
கார்த்திகே யன்ம தத்திற் கருதினன் முறைதெ ரிந்தே.

...797

இருடிகளின் அபிநயம் முற்றும்.

37. காமதேனு முதலியன

காமதேனு, அரிசந்தனம்

கபித்தப தாகந் தன்னை டோளஸ்வஸ் திகமாய்க் காட்டச்
சபலமாய் விளங்குங் காம தேனுவ தாகச் சாற்றும்
விபுமுத்தி ரைக்க ரத்த தோமுக மாக மேவத்
தபவரி சந்த னச்சீர் சாற்றலாங் கமல மாதே.

...798


மந்தாரம், சந்தானதரு

சொல்லுமே சொர்க்க லோகா தித்தருக் கபிந யக்கை
அல்லிலா மந்தா ரத்திற் கலபல்ல வஞ்சு வத்தி
நில்கர்த்த ரிக்கை ஸ்வஸ்தி நெற்றியி லதோமு கஞ்செய்
தல்சந்தா னத்த ருக்காய்ச் சாற்றுவர் நூல்வல் லோரே.

...799


கற்பகம். ஐராவதம், உச்சைச்வரம் (குதிரை), மாதலி (தேர்ப்பாகன்)

கற்பக முகுளஞ் சுவத்திக் கையதோ முகம்பி டித்தல்
மற்பொரை ராவ தத்தாம் வண்டுக்கை மார்பு நேராய்ச்
சொற்கத்தின் குதிரை மான்ற லைச்சுவத் திகம்பி டித்தல்
விற்பன மாத லிக்குச் சூசிக்கை விளம்ப லாமே.

...800


பாரிஜாதம்

இடதுப தாகமார்பு நேர்பிடித் தெழில்வ லக்கை
குடிதிரி பதாக மாக்கிப் பதாகத்தின் மீதிற் கொள்ளும்
படியுத்வேஷ் டிதமாய் வைத்தற் பகர்திரி ஞான வஸ்தம்
திடமுள பாரி சாதத் திற்கென வுரைசெய் மாதே.

...801


மேகம்

வலக்கைக டகாமு கம்மாய் வலதுபக் கத்தி ருத்தி
விலக்கிடைக் கைப்ப தாக மாய்விரல் களைவி ரித்து
அலக்கின்றி மேலே நோக்கி யதோமுக மாய்ப்பி டித்தல்
துலங்குமே மேகங் கட்குத் தோகைநீ யறிந்து கூறே.

...802


ஆதிசேடன்

தீதிலா திடக்கை சர்ப்ப சீரிடம்பி டித்த தன்மேல்
தாதுடை வலக்க ரம்ப தாகம தோமு கஞ்செய்
தாதர வாகக் காட்ட லாதிசே டனுக்கா மென்று
கோதறப் பரத நூலோர் கூறின ரறிந்து கொள்ளே.

...803

காமதேனு முதலியவற்றின் அபிநயம் முற்றும்.

38. தசாவதாரம்

மச்சாவதாரம்

பச்சமாய்ச் சொல்லுங் கைகள் பரந்தாமன் முன்னாட் கொண்ட
விச்சையா முருக்கள் பத்திற் கியம்பிடி லிடைக்கு நேராய்
மச்சக்கை பிடிப்ப தாகு மச்சாவ தாரத் திற்கும்
மச்சக்கு லங்க ளுக்கு மாகுமென் றுரைசெய் தாரே.

...804


கூர்மாவதாரம், வராகாவதாரம்

கூர்மக்கை யிடக்கை நேராய்க் குலவியே பிடித்தான் மிக்கக்
கூர்மாவ தாரத் திற்கே குறிப்பர்கள் வலக்கை தன்னைச்
சீர்மருங் கிற்கு நேராய்ச் செப்பமா கப்பி டித்தால்
பேர்மலி யும்வ ராகப் பெருமானுக் காகும் பாரே.

...805


நரசிங்காவதாரம், வாமனாவதாரம்

வருசிங்க முகமி டக்கை வலக்கையிற் றிரிப தாகம்
தெரியவே பிடித்தா னார சிங்காவ தாரத் திற்கும்
ஒருமுட்டி வலக்கை மேற்பா லொருமுட்டி யிடக்கை கீழ்ப்பால
வருவித்துப் பிடித்தற் றூய வாமன மூர்த்திக் காமே.

...806


பரசுராமாவதாரம், இராமாவதாரம்

வலக்கையர்த் தபதா கந்தான் மருங்கினி விடைக்குச் சேர்த்தே
இலக்கிய மாய்ப்பி டித்தாற் பரசுரா மனுக்கி தாகும்
வலக்கையிற் கபித்தம் சேர்த்து வாமத்தின் முட்டி சேர்த்து
நலத்துட னேபி டித்தா லிராமாவ தார மாமே.

...807


பலராமாவதாரம், கிருஷ்ணாவதாரம்

வலக்கையிற் பதாகஞ் சேர்த்து வாமத்தின் முட்டி சேர்த்தால்
பலராமற் காம்வ லப்பாற் பண்பான கழுத்தி னேராய்
இலகிய மிருக சீர்ஷ மிடக்கனிட் டிகையின் மிக்க
வலதங்குட் டத்தைச் சேர்த்தாற் கிருட்டினன் மருவும் பாரே.

...808


பௌத்தாவதாரம், கல்கியவதாரம்

வலமுட்டி கீழே நோக்கி வாமத்தின் மயூரம் வைத்தால்
பலமுள சமண ருக்கும் பொளத்தாவ தாரத் திற்காம்
வலத்தினிற் பதாகங் காட்டி மறுகைச்சிங் கமுகங் காட்டில்
நிலைத்தகற் கியவ தார நெடுமாலுக் காகு மென்றே.

...809

7. தேவர் முதலியோரின் பகுதி முற்றும்.

இரண்டாம் அத்தியாயம்
(முகூர்த்தாதி எழுவகைத் தோற்ற அபிநய லக்ஷணம்) முற்றும்.


மூன்றாம் அத்தியாயம்

சபாநாயகாதி சர்வவாத்திய பாத்திர லக்ஷணம்
1. தோற்கருவி

மத்தளம்

ஆதியிற் பரமன் றிருவுலாச் செய்யும்
போது தன்றிரு வடியை
யவனிமேற் றட்டுமவ் வோசை வேதத்
தாயின விதனைமா லுடன்சங்
கீதமாக் கித்தும் புருநா ரதற்குக்
கிருபையா யுரைத்திட வதனைக்
கேசரர் போற்றும் பரமன்முன் பாடக்
கேட்டவர் றடிக்கவா யுதங்கள்
நாதமே புரியப் படைத்திடு மென்ன
நான்முக னவ்வுரை கேட்டு
நயமுடன் விசுவ கருமனுக் குரைக்க
நன்றென வவனுளங் கனிந்து
சாதுவா மத்த கிரியினைக் கடைந்து
தனிக்கநாற் பதுவிர னீளந்
தன்னுடன் முப்ப தாம்விர லுயரஞ்
சரியளவா கச்செய் தனனே.

...810

செய்து வாசுகியை வாராகக் கோத்துத்
திறமையா மிடக்கண் டனக்குச்
சேடையா மந்தக் குரலையுண் டாக்கித்
திடம்பெறும் வலக்கண் டனக்கு
மையுறும் கடிகைக் குரலையுண் டாக்கி
வலக்கண்மத் திமகோ சந்தனிலே
வருமுதல் துளைக்கும் பதினான்காந் துளைக்கு
மங்கள புருடனா மாலை
ஐயமில் லாமலோம் நமோ நாரா
யணவெனு மந்திரத் தாலே
யழகுட னிருத்தி யிரண்டாந் துளைக்கு
அயிராணி கொழுநனாய் விளங்கும்
செய்யமங் களகணத் தினிற்கதி பன்றே
வேந்தி ரன்றனைச் சிறக்கச்
செழும்சம் பூர்ணாய நமவென்னு மந்திரத்தாற்
றிறம்பெற நிறுத்தின னடைவே.

...811

அமயமூன் றாந்துளைக் குநிதிக் குவேந்த
னானகு பேரனை வித்தியா சம்பூர்ணாய
நமவெனு மந்திரத் தானிறுத் திமற்ற
நான்காந் துளைக்கு யாவரும் விரும்பச்
சுகமுட னேவிளங் கியமரர் போற்றும்
சுப்பிர மணியதே வனைப்பண் பாகச்
சயமிகும் சண்முக தேவாயநம வென்னுந்
தகைமைபெறு மந்திரத் தானிறுத்தி னானே.

...812

ஐந்தாகுந் துளைதனக்கு மீமாம் சாதி
யத்துவிதம் விளங்கச்செய் யிரவி தன்னை
வந்தசர்வ லோகசமா யநமா வென்னு
மந்திரத்தா னிறுத்தியா றாந்து ளைக்குச்
செந்திருநான் முகத்தின்மறை யோதி காயத்
திரிசாவித் திரிதரித்த பிரமன் றன்னைத்
தந்தசத்ய லோககுலா யநமா வென்னுந்
தனித்தமந் திரத்தாலே நிறுத்தி னானே.

...813

ஏலவே யேழாகுந் துளைத னக்கு
எவர்வினைக ளையும் போக்குங் கணேசன் றன்னைப்
பலவிநா யகாயநமா வென்னுமந் திரத்தாற்
பாங்குடனே நிறுத்தியெட் டாந்துளை தனக்கு
வேலைக்குத் தேவதையாம் வருணன் றன்னை
மிக்கதோ ஷாந்தரா யநமா வென்னும்
கோலமுள மந்திரத்தா னிறுத்தி னான்பொற்
குடநிகர்த்த கன தனத்தாற் குலாவு மானே.

...814

தருமொன் பான் றுளைக்குச் சாமளையாம் பெண்ணின்
றலைவனென விளங்குகின்ற மறலி தன்னை
வறுமையிலாச் சத்வாம்சா யநமா வென்னு
மந்திரத்தா னிறுத்திப் பத்தாந் துளைக்குக்
குருவென்னு மிருகண்டு வீன்றெ டுத்த
குணநிதியாய் விளங்குமார்க் கண்டன் றன்னைப்
பொருதுசிவப் பிரியாய நமவென் றோதும்
புதுமையுள மந்திரத்தா னிறுத்தி னானே.

...815

கதியருளும் பதினொன்றாம் துளைத னக்குக்
கடும்விசையாய்ச் செலும்வடுகக் கடவு டன்னை
மதிமிகுத்த க்ஷேத்ரபா லனமா வென்னு
மந்திரத்தா னிறுத்திப்பன் னீராந் துளைக்குப்
பதினென்வீ ணைக்கதிப நாரதனை நார
தாகலகப் பிரியவகி லகலகந மாவென்
றிதம்பெறவே நிறுத்திவைத்தா னன்னப் புள்ளை
யிகழ்ந்தசிறு நடையுடைய வெழில்சேர் மானே.

...816

தனிப்பதின் மூன்றாந் துளைக்கு நால்வேதந்
தனையோதிச் சுகமிக வருளுந்
தலகுலோத் தமனா மிருடியைச் சகல
சாஸ்திரபு ராணாய நமவென்
றினியமந் திரத்தா னிறுத்திப் பன்னைந்து
மீரெட்டாந் துளைகட்கு வாணாள்
ஏலவே மிகுத்து மூன்று காலத்தி
னியல்பெலா மனந்தனி லுணர்ந்த
முனியாமு ரோமரிஷி யைரோம சபுண்
யாயமக ரிஷேநம வென்னு
மந்திரத் தாலே நிறுத்தின னிதற்கு
வலப்புறஞ் சிவமிடப் புறத்தில்
உனுமுரை மந்தக் குரலா கையாலு
மோதுமிப் பதினாறு துளைக்கும்
உறுதிகொள் பெண்தே வதைகளா மவர்கட்
குற்றபே ரோதுவோம் பிரித்தே.

...817


துளைகளின் அதிதேவதைகள்

இலக்குமிதா ரைசுசீலை வாணி வள்ளி
யிதமருளு முமைவண்டோ தரிய யிராணி
துலக்குமுஷை துரோபதை மேனகை யரம்பை
சொலகலிகை திலோத்தமை யூர்வசி பூமாது
பெலக்குமிவ் வாறான மிருதங்கத் திற்குப்
பிரமவாத் தியமென்னும் பேர்பெற் றோங்குந்
தலத்திலென விம்முறை யெல்லாம் விளங்கச்
சாற்றுமே கும்பமுனி மதத்திற் றானே.

...818


தத்தித் தொன்னம் பிறந்தவகை

ஆதியிற் பரமன் றாண்டவம் புரியு
மப்போது காற்சிலம் பவிழ்ந்து
ஆகாயந் தொட்டு விழுமோசை முதலி
லவர்புயந் துடைபாதங் களிலே
மோதியே நிலத்தில் விழுந்தவே கத்தின்
முழக்கமாய்த் தத்தித்தொன் னமென
முதலுள சப்தம் பிறந்ததவ் விடத்தின்
மொழிந்திடு மொவ்வொன் றினுக்குஞ்
சாதியு மெழுத்துக் களுந்தனித் தனியே
சதாசிவ னுரைத்திடு மதனைத்
தரணியிற் சிறந்த மிருதங்க முதலாஞ்
சகலவாத் தியங்கட்கு முதலிற்
தீதறவாசித் திடற்குமா டலுக்குஞ்
சேர்ந்திதே முதலெழுத் துக்களாய்ச்
செலுமென வறிஞருல குளோர் காணச்
செப்பினர் நூன்முறை தரிந்தே.

...819


நாத லக்ஷணம்

வலக்கை யிடக்கை வாத்தியங் களுக்கு
மகிழ்சத்தி சிவனதி தெய்வம்
வாசிக்கு முதலிலி ரண்டுகைச் சமமாய்
வளர்ந்தீந் தீந்தித் திமியென்று
ஒலித்திட மற்றுந் தாந்தா மதென்னு
மோசைகள் முழக்கவே வேண்டும்
ஓதிய வந்தச் சமவஸ்த முழக்க
மொருமிக்கும் போதினி லினிதாய்த்
துலக்கிய சுரங்க டம்முடன் கூடிச்
சோர்விலா நாதமுண் டாகுஞ்
சொல்லுநா தத்தி னகாரம் பிராணன்
றோய்ந்த தகாரமக் கினியாம்
பலத்திடு மந்தப் பிராண னக்கினியும்
பிசகாதி ரண்டுமே கூடிப்
பெருமையா நாத மாயின வென்றே
பேசுவர் நூன்முறை தெரிந்தே.

...820


மத்தளப் பஞ்சப் பிராணன்

இசையுமிந் நாதம் நந்த சுகோஷ
மெனமூ வகையதாய் விளங்கு
மேற்குமந் தரமத் திமதா ரமதா
மெழில்பெறுஞ் சுரங்களே மிகுந்து
தசையறப் பேச நந்த நாதஞ்சு
நாதமுங் கோஷநா தமென
நாடுமூ வகையா யிவற்றுடன் றாள
நயம்பெறு கானமுஞ் சேர்ந்து
பசைகொள் ளிவ்வைந்து மிருதங்கத் திற்குப்
பஞ்சப் பிராணனே யாகும்
பாவிய தாளங் கானத் துடனே
பகரும் வாத்திய மனுசரிக்கும்
வசையிலா திம்மூன் றுஞ்சேர்ந்து முழங்கும்
வாத்திய மிருதங்க மென்ன
வாழ்த்தினர் நூலைப் பார்த்துணர்ந் தவர்கள்
மதிதனைத் திகழ்முக மாதே.

...821


உத்தம, மத்திம, அதம வாத்தியங்கள்

இதம்பெறு மிக்கீத வாத்திய நிர்த்தங்க
ளிம்மூன்று மரனயன் மால்சொரூப மாகும்
அதைநாவாற் கொனிப்பித் தலுத்த மம்பே
ரங்கையால் வாசிக்கு மந்த வாத்தியம்
சதிர்பெறு மத்திமம்பா தத்தால்வா சித்தல்
சங்கையிலா ததமமெனச் சாற்று நூலை
விதிமுறையா யுணர்ந்துரைத்தார் மேலோர் முன்னாள்
வேலினைத் திகழ்ந்தகரு விழியினாளே.

...822


சிவனிருப்பிடம்

பிரகிருதியே தேகமத் தேகத்திற் பிராண
னுண்டாகு மந்தப் பிராண னூடே
மருவியதோ ரோசை யுண்டா மவ்வோசைக்
குள்வளர் நாதமுண் டாகுமந் நாதத்துள்
பரமசிவ னிருப்பனிம் மூர்த்திகளைந் திற்கும்
பண்பான பிரம மதிதெய்வ மென்று
பொருளளிக்கு நூலதனை யாய்ந்து ணர்ந்தோர்
புகன்றனர்கள் பரதவிதம் புல்லு வார்க்கே.

...823


நிருத்த பஞ்சப் பிராணன்

சுருதிதாய் கீதந் தந்தை தோழன்மத் தளமே யாகும்
வருதாள முடன்பி றப்பாம் வளரிர சமதே யில்லாள்
பெருமிவ் வைந்தும் பஞ்சப் பிராணனா நடனத் திற்கென்
றுறுதியா யிவற்றை யெல்லா முரைத்தனன் பரதன் றானே.

...824


மத்தள அக்ஷர லக்ஷணம்

அதி தெய்வங்கள்

மத்தள மெனுமெ ழுத்தில் மகரமே சிவசொ ரூபம்
வித்தகத் தகர மாகும் விட்டுணி வின்சொ ரூபம்
புத்தமு தெனும்ள காரம் பொருந்தும யன்சொ ரூபம்
இத்தகை மையதா மென்றே யியம்பினர் நூல்வல் லோரே.

...825


அக்ஷரங்குறினெடில் விவரம்

முன்னுள மகார மூன்றிப் பேசலால் நெடிதாய் மூளும்
பின்னுள தகாரத் தோடே பிதற்றுள கார மிரண்டும்
மன்னுமே குறில்க ளாக வகுத்திதை நூல்வல் லோர்கள்
சொன்னவக் கருத்த றிந்து சொல்லுவாய் கமல மாதே.

...826


குருலகு சப்தங்களின் விவரம்

சொல்லிய மகாரத் திற்குத் தோன்றுமே குருசப் தந்தான்
புல்லிய தகரத் தோடே பொருந்துள காரம் ரண்டும்
வல்லிதாம் லகுசப் தங்கள் வழங்குமே வெவ்வே றாக
அல்லெனுங் குழலி னாளே யறைந்தனர் நூல்வல் லோரே.

...827


அக்ஷரத்தின் உரு

யானைமேற் றுலங்க வைத்த கொடியென மகார மாகும்
வானிடை யுமைக ழுத்தில் சர்ப்பச்சீ ராகத்.....
தோணுமே தகர மற்றுஞ் சொல்லிய ளகரந் தானும்
மானெனும் விழியி னாளே வளர்பிள்ளைப் பிறைபோ லென்னே.

...828


அக்ஷர நிறம்

சாற்றிய மகாரத் திற்குத் தனிவெள்ளை நிறமே யாகும்
போற்றிடுந் தகர மேபொன் னிறமென வியம்பு மற்றும்
போற்றிய ளகர மேக பிலநிற மெனவே புல்லும்
நாற்றிசை யறிய நூலோர் நவின்றதை யறிந்து கூறே.

...829


அக்ஷரபீதம்; அதிதெய்வம்

அடுத்திடு மகரத் திற்கு ஆகாய பீசமாகும்
தொடுத்திடுந் தகரத் திற்குச் சொல்லுமே பூமி பீசம்
வடித்திடு ளகரத் திற்கு வழங்கிய தப்பு பீசம்
படைத்திடு மிவைக டாமே வதிதெய்வ மென்னும் பாரே.

...830


பலன் கொடுப்போர்கள்

நிலைபெற முன்பு ரைத்த நெடிலெனு மகரத் திற்குப்
பலமருட் டெய்வ மாகப் பரமசிவ னையே சாற்றும்
தலைமைசேர் குறிக ளான தகரளக ரங்க ளுக்குப்
பலமதை யருளுந் தெய்வம் பார்வதி யென்னு நூலே.

...831


ஓசையின் கணம்

வாரான நெடிலொன்று குறிலி ரண்டு
வகைசேர்ந்து பகணமென வரும திற்குச்
சீரான சசிதெய்வ நிறமே வெண்மை
திங்கள்வங் கிசங்குலத்திற் செட்டி யோனி
பேரான பாம்பு பதியாஞ் சோமன்
பெருமிடப ராசிகுண மமுத மாகும்
வீரான சுபபலனெண் கணங்க ளுக்கு
மோலகுஞ் சந்தசுக்குள் விள்ளும் பாரே.

...832


வாத்தியக்காரருக்குப் பஞ்சப் பிராணன்

முற்றுமத் தளம தென்னு மூன்றெழுத் துண்ம காரம்
வித்தாகு மேத காரம் விளங்குமே முளைய தாக
அத்தனி ளகர மொன்று மதினுடைப் பலன்க அாகும்
சத்தெனு மொழியி னாளே சாற்றுவை நூலை யாய்ந்தே.

...833

இயம்பிய விவற்றி னோடே யிணங்கிய தோலும் வாரும்
பயனுற விரண்டுங் கூடிப் பஞ்சேந்தி ரியம்போ லாகும்
வயணமா யிதைவா சிக்கும் வாத்தியக் கார னுக்குத்
தயவுள பஞ்சப் பிராண னாமெனச் சாற்று நூலே.

...834


மத்தள மரங்களும் அளவும்

கருதுசந் தனமும்பலா கருங்காலி
செங்காலி வேம்பெனு மரத்திற்
கண்டதெது வாகிலு மாதியோ
டந்தமாய்க் கணுநாற்பத் தெட்டங்குலப்
பிரமாண மரைவிரற் கடைமந்த
மாகப் பிணைத்திடது முகமதினிலே
பேசுபதி னாலுவல முகமதிற்
பதின்மூன்று பெரும்விரற் கடைநீளமும்
தருநடுவி டங்கட்டை விரலுயரமாய்ச்
செய்துதே னுசர்மத்தை மூட்டிச்
சாதுவாந் தேசியத்திற் கீரெட்டுடன்
சாருபனி ரண்டு முதலாய்ப்
பொருதுளை களிலும்வார் பூட்டிச்சோ
றூட்டிப் பொலிவுபெற வேவமைத்தல்
புதுமையா மத்தளத்தி னிலக்கண
மெனப்புக லுவர்கணூல் வல்லோரே.

...835


மத்தளம் வாசிக்கும் வகை

ஆனமத் தளவோசை தத்தத்தொன் னம்மெனமுன்
னக்கர மொலிக்க வேண்டும்
அதனைவா சிக்குங்கை யர்த்தசந் திரனாகு
மதற்கதி பதிநந் தியாம்
நானமாக் கபிலநிற மாஞ்சக்க ரம்போன்ற
கண்களு மிருக்க வேண்டும்
கனிவான சாம்பலுட னன்னமுஞ் சேரக்
கலந்தரைத் திட்ட சோற்றைத்
தோணிடது பக்கத்திற் கோதும்பை சேர்த்தற்போற்
றுலங்கவே நாலங் குலமாய்ச்
சேராம லொருமேனி யாய்வலப் பக்கத்திற்
றொட்டிடத் தருமி வற்றைத்
தானாக வேயுணர்ந் திந்தவாத் தியக்காரன்
றக்கபடி வாசிப் பதுவே
தகுதியென வேபரத சாத்திர முணர்ந்தவர்கள்
சாற்றினர்கண் முறைதெ ரிந்தே.

...836


மத்தளம் முற்றும்.

பஞ்சக்கருவிகளின் லக்ஷணம்

ஓசைகொண்ட தோற்கருவி யுற்ற துளைக்கருவி
நேசச் சுருதி மிடக்கருவி - மாசிலா
நாதநரம் புக்கருவி நல்லகஞ் சக்கருவி
பேதமுறு மோசைப் பிறப்பு.

...837


தோற்கருவி 36க்கு லக்ஷணம்

மானேகேள் தோற்கருவி வாத்தியமுப் பத்தாறிற்
கானவித நான்கா யமையுமே - யீனமிலா
உச்சமமத் திமமதமம் வீரமெனு மோர்நான்காய்
வைத்ததனில் விள்ளும் வகை.

...838


உத்தம வாத்தியங்கள்

படகபே ரிகைமத்த ளங்கரடி கைத்திமிலைப் பருமு டுக்கை
குடமுழாச் சல்லிகை யிடக்கை டமருகமெனக் கூர்வாச் சியம்பத்தும்
படிமிசை யுத்தம மாகுமால் வேத னொடுசூல பாணியாதி
வடிவுளதே வர்க்குகந்த வாத்தியமா மென நூலில் வழுத்து மாதே.

...839


மத்திம வாத்தியம்

தண்ணுமை மத்த ளந்துந் துபிதடா ரித்து டும்பு
கண்விடு தூம்பு தக்கை சல்லரி கமழு முல்லை
நண்ணிய பறையிவ் வொன்பா னாகுமத் திமமாய் வாத்தியம்
விண்ணாளு மகவான் கந்தன் முதலாந்தே வர்க்கு விள்ளே.

...840


அதம வாத்தியம்

அந்தரி முழாநாழி கைப்பறைப்பாங்
கிப்பறைப் பாலைப் பறைச்சீர்
சந்த்ரவலை யந்தகுணி கணப்பறைபல்
பறையுடனே சார்ந்து நிற்குந்
தந்தவிர லேறுடனாம் வாத்தியமொன்
பதுங்காளி சாத்தன் றுர்க்கை
முந்துவை ரவன்வனக்கா ளிகிராம
தேவதைக்கு முகந்த தென்னே.

...841


டம்மாரஞ் சண்டா தர்சா டங்காதா டிதத்தி னோடு
பம்மிய முரசு மோர்கண் முரசெனப் பகரு மேழும்
கம்மிய வசுரர்க் கும்ராக் கதருக்கு மாகு மாகச்
செம்மிய விவ்வீ ரெட்டு மதமவாத் தியமாய்ச் செப்பே.

...842


வீர வாத்தியம்

தம்பட்டம் டக்கை யும்நி சாளமு முரசு நெய்தற்
பம்பிய பறைகு றிஞ்சிப் பறையெனும் வீர மாறும்
தம்பமா யுலகை யாளுந் தராபதிக் காகும் மேல்வி
ளம்பிய வாத்ய மெல்லாம் யாவருஞ் சமயங் கொள்வார்.

...843


மிருதங்க லக்ஷணம்

நந்திமதம்

வினவிய மிருதங்க மண்ணுட னாதன்
மிக்கதாம் பிரத்தினா லாதல்
முனிவிலாப் பிரமக் கடமெனச் செய்து
முத்திரை யீரே ழங்குலத்தில்
சினமிலாக் குரங்கின் றோலதாற் கட்டித்
திரிகிட வெனுமொலி முழக்கில்
கனமிரு தங்க மாமென நந்தி
கருதின னீசநாட் டியத்தே.

...844


வாத்தியங்களின் தொனிலக்ஷணம்

மிருதங்கத்தொனி

திரிகிட திரிகிட தகதொக திகிகிட
கிட்டக் கிட்டக் கிட்டத் தகிகுங்
கும்கும் கும்மெனக் கொள்ளும்
துங்கமிர் தங்கத் தொனியிலக் கணமே.

...845


திமிலைத்தொனி

தத்துவந் தத்துவந் தத்துவங் குகித
தத்ததத்தத் தோம் தோம் தரிய
தரிய தத்தத் தோமென்னும்
பெரிய திமிலை வாத்தியத் தொனியே.

...846


அனுவாத்தியத்தொனி

தரைதத்தோந் தரைதத்தோந் தரைதத்தோந் தத்தோந்
தரைதத்தோந் தரைதத்தோந் தரைதரை - தரையுரைவாம்
பனுவ லறிந்தபா வலர்க ளீதை
அனுவாத் தியத்தொனி யென்பார்.

...847


கரடிகை வாத்தியத்தொனி

தரர ரரியா தரா ரரியா
தத்ததத் தத்ரை யுந்தத் தோந்தோந்
துதரதர துதர தரது தொங்கிடதோங்
கருதுங் கரடிகை வாத்தியத் தொனியே.

...848


டக்கா வாத்தியத்தொனி

தககிகிகி கிங்கிகிதோந் தகதிங் கிணகதித்தோம்
மிகுதோந்தோந் தேணானா வென்றன் - மகிமீதிற்
றிக்காகு மோசை செனிக்கு மிதின்பெயரை
டக்காத் தொனியெனவே சாற்று.

...849


படகத்தொனி

டடடடட சரடிடிடி சரரகச நடிசரட
தரகிரியா வென்றசொல்லைச் சாற்றும் படகமெனும்
வாத்தியத் தொனிக்கு வகையாமென் னூலில்
முத்துநகை யொத்தமயி லே.

...850


முரசு, கைம்மணிகளின் தொனி

மரரர டண்ட மரும மரடண்ட மமரடண்டங்
கரரர டண்ட நந்தாந் தாமதென்றி டுகைமணிக்கு
முரசுக்கும் பேசுந் தொனியாகு மென்றிதை மூதுரையில்
அருமைய தாக வுரைத்தார் நூலோர்க ளதிசயத்தே.

...851


உடுக்குத்தொனி

ஓங்கிட கிடதகி டாங்கிட தங்கிட டங்கிடா
ஆங்கிடி யாகிடி யாவெனுஞ் சொல்லைய மையமுன்னாள்
ஏங்கவி லாது ரைத்தார் நூலறிந் தியல்புகொளும்
பாங்கிய ரேயுடுக் கின்றொனி யாமெனப் பற்றறிந்தே.

...852


தவில், தம்பட்டத்தொனி

கிணகிண கிணகிணஜேம் கிக்கிணா கிணகிணஜெம்
குரரர ரகுகிண கிணஜேம் பணியிலகும்
அம்புவியி லிச்சொல் லறைவர்தவி லுக்குமற்றும்
தம்பட்டத் திற்குந் தனித்து.

...853


மத்தளத்தொனி

தத்தித் தொன்னந் திமிகிகி தாதா
தாந்திமி ககிதா தாவெனுஞ் சொல்லை
மத்தள வாத்திய மாகு மென்றே
சத்தமா நூலிற் சொல்லு மாதே.

...854

தோற்கருவி முற்றும்.

2. துளைக்கருவி

மங்கள வாத்தியம்

முகவீணை நாகசுர மொழிபாம்பு நாதசுரந்
தகுசீங் குழன்முதலாய்ச் சாற்றுஞ் - சுகமிகவே
தங்குமிவ் வாத்தியத்திற் காய்ந்திட்டார் நூல்வல்லோர்
மங்கள வாத்யமெனு நாமம்.

...855


நாதசுரத்தின் லக்ஷணம் முதலியன

ஆமப்பா நாதசுர மென்ற தேது
அரியமே லணைசுகீ ழணைசு ஏது
போமப்பா புல்லேது அச்சு ஏது
புகழான சில்லேது கண்டை யேது
தாமப்பா தோரணத்தின் கயிறுதா னேது
தாட்டிகமா யதிலெழுந்த நாத மேது
ஓமப்பா வூதுமிலக் கணந்தா னேது
யுறிதியா யிவ்வகையை யுரைக்கக் கேளே.

...856

வகையின்னஞ் சொல்லுகிறோம் விவர மாக
மகத்தான தாளத்தின் மத்தி யத்தைத்
தொகையான நாதசுர சூட்ச்ம மெல்லாஞ்
சொல்லுகிறேன் வௌிதிறந்து ொன்னூ லாய்ந்து
சுகமாக ூதுதற்குங் கேட்ப தற்குந்
துணிவுபெற வோமென்றே யுன்னி நிற்கப்
பகையில்லை துன்பமில்லை கேடு மில்லை
பாங்குகொளு முறையதனைப் பகரக் கேளே.

...857

கருவான நாதசுர மரத்தைக் கேளு
கருங்காலி யும்வேங்கை தோத கத்தி
மரத்துடனே வேம்புபலா சந்த னந்தான்
மற்றதெல்லா முன்னூலி லுரைத்தா ரப்பா
திருவருளு மதினுடைய வளவு நீளஞ்
செப்புகிறே னந்தவகை தேர்ந்து பாரு
குருவென்னு நூன்முறையைக் கண்டா யானாற்
குவலயத்தி னீயுமொரு குருவென் பாரே.

...858

பாரப்பா நாதசுர மரத்தி னீளம்
பண்பான வொருநூற் றிருப தாகும்
சீரப்பா வொருவிரலு மிரண்டு நெல்லும்
செவ்விதா மறுதலையில் வீதி கேளு
ஆரப்பா விரண்டுவிர னாலு நெல்லு
யளவாக வீதியடா சுரத்தின் மார்க்கம்
நேரப்பா வொருநெல்லு நீளம் வேணும்
நிச்சயமாய்ச் சத்தசுர நேரும் பாரே.

...859

நேரான துளைக்கருவி யிதுவே யாகும்
நினைத்தபடி சுரமெல்லா மிவற்றுட் பெசும்
சீராமி ராகமதைச் செலுத்தும் போது
ஸரீஓமென் றேயுன்ன வசிய மாகும்
பேரான மேலணைசா காய மாகும்
பலத்தசில் லணைசுபிரு திவியே யாகும்
தீரானபுல் லதுசிதம் பரமே யாகும்
சிவசிவா வதிலுள்ள செய்தி கேளே.

...860

கேளப்பா பதினாயிரத் தெட்டு ராகக்
கெடியான பேர்களுக்குப் பேசும் பேசும்
பாழப்பா விராகமது பேசா தாகிற்
பைத்தியங்கொ ண்டதுபோலே பாரி லோட்டும்
கீழப்பா மன்னவர்க்கு மறைய வர்க்குங்
கெடுதியுண்டா மூதேவி வாழ்வ ளூரில்
தூளப்பா விதையறிய மாட்டா நிற்குஞ்
சுணைகெட்ட மாந்தர்களைத் தூரத் தள்ளே.

...861

தள்ளப்பா வச்சதுதா னீசன் ராசன்
சார்வான செக்குலக்கை யாகும் பாரு
விள்ளப்பா சில்லதுதான் வாயு வாகும்
வீரான கண்டையது வன்னி யாகும்
உள்ளதப்பா சொல்லுகிறேன் றோர ணத்தை
யுருவான வாசுகியென் றோத லாகும்
மெள்ளப்பா வதிலெழுந்த நாதந் தன்னை
வேதத்திற் பிறந்ததென விளம்பு நூலே.

...862

விளம்புவே னுள்ளதுதா னாக ராசா
வீறான தாளமது ஆதி யாகும்
தளம்பெறவே யிந்தவகை யறிந்த பேர்க்குச்
சத்ருக்க ளில்லையடா தர்க்க மில்லை
வளம்பெறவே யிவ்வகையை யொருவ ராலே
மதித்திடவே போகாது மாற்றா னில்லை
இளம்பிறையும் ரவியுமிதி லெழுந்த நாத
மேகமென்ற வோரெழுத்தை யிதனுட் பாரே.

...863

பாரப்பா நாதசுர மென்ற தாளம்
பாங்கான சிவமென்று பகரு வார்கள்
நேரப்பா சுருதியிது சத்தி யாகு
நிசமான பெண்ணென்று நிகழ்த்து வார்கள்
சீரப்பா நாதசுர மரச னாகுஞ்
சிப்பான சுருதியதி னமைச்ச னாகும்
ஆரப்பா விந்தவகை விவரந் தன்னை
யறிந்தவர்க ளிவ்வுலகி லில்லை தானே.

...864

தானென்ற மத்தளமந் திரியே யாகுந்
தருவான தாளமது ஈச னாகும்
வானென்ற சுரஞ்சத்த ரிஷியே யாகும்
வகையான ஷட்ஜமுடன் ரிஷப மாகும்
கானென்ற காந்தார மத்தி மங்கேள்
கருவான நிஷாதமொடு பஞ்சமமே யாகும்
ஆனென்ற வேழுவகைச் சுரங்க ளுக்கு
மாகுமிந்த நாமமென வறையு நூலே.

...865

ஆகுமடா தெய்வமொடு மேழு மாச்சு
அப்பனே சரிகம பதநி யென்று
போகுமடா சத்தமது மத்திமகாந் தாரம்
புகழான பஞ்சமமும் பிதுர்க்க ளாகும்
ஊகமடா ரிஷியடுத்து உரைக்கு மிந்த
முறையான வசியமென்றே யுரைப்பர் மேலோர்
ஆகுமடா விதையறிந்தா நீயே யாசா
னாவையெனக் கும்பமுனி யருள்செய் வாரே.

...866

துளையது கருவி யாகத் தோயு நாத சுரத்தின்
வளையது விரலை யாறு வாய்தனி லணைத்தே யோத
களைதரு சர்ப்பம் பாலன் களைகடீர்ந் தமுத முண்ணும்
வளைவரே மீதின் மேவும் வாமனுக் காசை யுண்டாம்.

...867


தேவதைகள்

கண்காலி தன்னான் மிக்கச் சமைத்ததோ ருளவ தாகும்
வண்பெறு மாய னாகும் வரைவரை யரவ தாகும்
பண்பெறு மணைசே சத்தி பராம்மே லணைசே வேதன்
கண்பெறுங் கண்டை யீந்தான் கதிர்வட்டஞ் சில்ல தாமே.

...868

சீவளி யிலைவே தத்தின் சிவமெனு நாத கீதம்
பாவளி யச்சுக் காளி பாரமாய் வகுத்து நன்றாய்ப்
பூவளி சுரங்க ளேழும் புகழ்சத்த மாதா வாகும்
நாவாளி யிசையே பேசு நாதத்தின் சுரமி தாமே.

...869

வேதியன் பரமன் றானு மிகுந்ததோர் கண்டை யாகும்
ஆதியே முருகன் முன்னா யமர்ந்ததோர் சுரங்க டேவர்
சோதிசேர் கயிறு நாகந் துளையது சத்த தேவி
சாதிமே லணைசே தெய்வந் தயங்குமித் திரனே யாகும்.

...870

இருக்கின்ற சுரமே ழைந்து மெழுநாத சுரத்தின் மீது
மருக்கொளு மணைசே வட்ட மட்டமாய் நாகஞ் சூழச்
சருக்கமாஞ் சில்லு சோமன் றொனியதிற் புல்லே சத்தி
பெருத்தமா றுளையே யென்று பேசினன் பிரமன் றானே.

...871

மேகமாம் வண்ண னூது மேற்சுரந் தன்னைக் கோது
வேகமா மாதி சத்தி யிறையவன் றன்னிற் றெய்வ
மாகமா மலரோன் கையி லழகுட னெழுத்து வாமம்
பாகமாய் நின்ற சத்தி பரிவுடன் கூட லுற்றார்.

...872


நாதசுரத்தின் பாஷை

அகங சஞடண தநபம யரலவ
தானளற னவ்வென்னும் பதினெண் வர்ணத்
தொகைக்குப் பதினெட் டிராகங் களாகச்
சொல்லுமே அகரமே யசாவே ரிக்குக்
ககரங் கல்யாணி ஙகரங் காம்போதி
சகரமதே சங்கரா பரணங் காட்டும்
ஞகரஞ் சாவேரி டகர முகாரி
ணகரங் கேதார கவுளமென நாட்டே.

...873

வருதகரந் தோடி நல்வே நவரோ
சாகு மற்பந்து வராளிமத் திமாவதீம
கரயகர மோகனம் ரகரஞ் சார்ங்கங்
காணும் லகரமது குலகாம் போதி
தருவகரம் பைரவியே ளகரமா னந்த
பயிரவி யேறகர பியாக டைச்சீர்
கருனகர மேயடாணா வென்றே நாத
சுரத்தின் பாஷையெனக் கருது நூலே.

...874


நாதசுரத்துளைகள் 12க்கு அதிதேவதைகள்

முதற்றுளை யீசனிரண்டாந் துளைக்குக் கௌரி
மூன்றாந்து ளைக்குவிஷ்ணு துளைநான் கிற்குப்
பதிகும்ப முனியைந்தாந் துளைக்கு வேதன்
பகருமா றாந்துளைக்கு மகவான் மற்ற
கதியுள்ள வாறு துளைக்கு மாறு
சாத்திரங்க ளாகுமென வீரா றாக
விதிபெற்ற நாதசுரந் துளைக ளுக்கு
விள்ளுமதி தேவதைகள் விவர நூலே.

...875


புல்லாங்குழல்

திரைகொள்ளும் யமுனைநதிக் கரையடுத்துத்
திருமால்புல் லாங்குழலா வேணுதன்னைச்
சரிகம பதநியெனுங் கானம்வாசித்
தைவுபெறு மிசைகடனைக் கூடும்போது
விரல்கள்வழி யமுதொழுக வதிற்சாடூப
மேவுமவ டூபம்சம் பூர்ணமென்னப்
பெருகியே யிசைமூவி தங்களாகப்
பேசியதென் றேநூலிற் பேசுமாதே.

...876

துளைக்கருவி முற்றும்.

3. கஞ்சக்கருவி

வானிலே பிறந்த நாத மாணிக்க வொளிய தாகும்
தாணது சிவமாய்த் தோன்றிச் சகலமுந் தானே யாகும்
பானல மொழியாள் பங்கன் பரதமே யோசை யாகும்
மோனமுற் றோர்கள் கண்டு முத்தியி லிருப்பர் தாமே.

...877


ஜாலரா

கஞ்சக் கருவி கருது மிலக்கணத்திற்
துஞ்சாத வெண்கலத்தாற் றூசறவே - மிஞ்சச்செய்
சாலரா வாதி சகலத்திற் காமென்பர்
நீலமயிற் சாயலின்மின் னே.

...878


வெண்கலம் பிறந்த விவரம்

வானின்மின் மின்னிற் றோன்றி வருமிடி மீடியில் வாயு
ஆனவா யுவினில் வன்னி யதிற்சல மதனின் மண்ணாம்
ஈனமண் ணதனி லீய மீயத்திற் செம்பு செம்பில்
ஊனமி றராவிம் மூன்று முருக்கவெண் கலம தாமே.

...879

கஞ்சக்கருவி முற்றும்.

4. தான வகைகள்

சுத்ததாள லக்ஷணம்

ஈரெண் பலத்தி லிசைசுத்த தாளத்தைச்
சாரவே தேவர் சபைதனிலும் - பேராம்
மறையோர்கள் கூடி மகிழுஞ் சபையிற்
றறநடத்தல் சுத்த தாளம்.

...880


சாளக தாளம்

ஈராறு பலத்தி லேனு மிருநான்கு பலத்தி லேனு
மாறாத சாள கத்தா ளந்தனை மன்னர் கூடும்
நேரான சபையி லும்வித் வான்சபை தனிலு மாடப்
பேராறு மிதற்கி னந்தே சித்தாள மென்னும் பேரே.

...881


சங்கீர்ண தாளம்

தங்குநாற் பலத்திற் கொண்ட வெகுசாரி தாள மென்னும்
சங்கீர்ண தாள நானா சாதிபல் பேர்கள் கூட்டிப்
பங்கிய சபைந டித்தல் பகருமுத் தமமா மென்று
திங்கணேர் முகத்தி னாளே செப்பினர் பரத நூலோர்.

...882


தாளவகை முற்றும்.

5. பாடகன் முதலியோர் லக்ஷணம்

பாடகன்

ஆசார முஞ்சுரப் பிரஸ்தார விவரமுந் திர்ஸ்தா யிக்காக
நேசமுள தாளலய ஞான சமயபேத நிகழுங் கீர்த்தி
வாசிகற் பனைசுர ஞானமுடன் மேளகர்த்தா மனோஞா னஞ்சேர்
ஈசபத்தி வைராக்யம் மிருதுவசன முடையவன்பா டகனா மென்னே.

...883


தாளகிரி

தாளப் பிராஸ்தார விவரமுட னாசாரஞ் சார்ந்த வன்ய
தாளகற் பனையுமட்ட கணங்களுட் பிரமாணஞ் சதிசப் தத்தின்
மேளமுச் சரிப்புடனே பொறுமையு மானந்த முடன்விமலன் பத்தி
நீளவனு சரித்தவனே தாளகிரி யெனநூலில் விள்ளுமானே.

...884


மிருதங்கி

பகவத் தியானமனோ தர்மமும் வாசா
லகமும் பனுவ றன்னைத்
தகக்கூட் டிக்குறைத் திடுந்தீ ரத்துவமு
நட்டுவன் சித்தத்திற் கொண்ட
தொகையறி தற்சனச்சேர்க் கைசெய்தல் சுதிஞான
மெல்லாச் சதியுந் தோற்ற
மிகக்கரத் திலாக்கு தல்சிங் காரவாச்
சியமியம் பும்விருத் திமற்றும்.

...885

குடிலஞ்சேர் புத்தி யில்லான் குறித்ததோர் கருவி வாத்யத்
துட்குண பேதா பேதந் துலங்கவே யறிதல் கைகால்
திடமுப சாந்தஞ் சப்தஞ் செப்புதல் குருவ ணக்கம்
உடையவன் மிருதங் கக்கா ரனக்குறு மென்றே யோதே.

...886


முகவீணை, நாகசுரம், வேணுக்காரர்கள் லக்ஷணம்

துளைக்கருவி பேதசுர பேதப்பிரஸ்
தாரமுகற் றூய்மை பத்தி
வளையுமனோ ஞானத்தாற் றாளலய
மறிதலா சார மேன்மை
களிப்புபொறு மையும்புத்தி நுட்பமுஞ்சூக்
குமம்பிறர் மனத்தைக் காணல்
விழிப்புடையோ னாகசுர முகவீணை
வேணுகொண் டோன்வித மிதாமே.

...887


வைணிகன் லக்ஷணம்

நித்தியா நுஷ்டானம் ஜெபதபங்
களாமா சாரநிய மந்தேவ
பத்தியுள மனஞ்சூச்ம ஞானம்
பிழையற்ற பனுவல் பேசல்
ஒத்திருக்குஞ் சிறுநாதம் பின்னமில்லா
வையவங்க ளுறுதிச் சொல்லும்
மெத்ததயை சங்கீத சாஸ்திரவுணர்ச்
சியும்பெரியோர் மீதி னட்பும்.

...888

கனநய தேசிக் கூறு காட்டுதன் மேள கர்த்தா
வினுடைய வதிதெய் வத்தின் மீதில்விசு வாசம் வைத்தல்
கனியவே நிகழ்ந ரம்புக் கருவியின் குணங்கா ணனன்
மனமுடை யோனே சுத்த வைணிக னென்னு நூலே.

...889


சுருதிக்காரன் (ஒத்துக்காரன்)

இட்டது தவறாச் சித்தங் கோபமே யில்லாப் புத்தி
மட்டில்லாச் சுருதி ஞான மரியாதை யொழுக்க மென்னும்
திட்டமாம் பொறுமை யீசன் றிருவடி வணங்க லீசன்
இட்டமு முடையோன் வாய்ச்சித் திரன்சுதிக் கார னென்னே.

...890


தவில்காரன்

ஆசாரம் பொறுமை வணக்க மொழுக்கஞ்
சதிசப்த மாய்ந்து காணல்
பேசிய சொற்கட் டறித றோர்கருவி
வாச்யகுண பேத மோர்தல்
மாசிலாக் கருங்காலி பன்னிரண் டங்குலத்
தண்டில் வலக்கை கோலும்
நேசமா மிடக்கையிற் சொற்கட்டி சைப்போன்
றவிற்கார னென்னு நூலே.

...891


டம்மாரக்காரன், பேரிகைக்காரன்

தாள லயத்தைத் தக்க வனுசரித்து
நீளுமந்தி யோபாந்த்ய நேர்தெரிந்தோன் - வாளுலகிற்
பேசுடம்மா ரக்காரன் பேரிகைக்கா ரன்னெனவே
பேசு மிலக்கணநூ லிற்பேர்.

...892


பாடகன் முதலியோர் லக்ஷணம் முற்றும்.

6. நட்டுவன்

தானகம் பாத சாரி மண்டலத் தலகை பாவம்
ஊனமில் கரண நாட்ட முலைவிலா வங்க காரம்
ஈனமி றொழிலோன் சுற்ற மிணங்குசா ளவசங் கீர்ணம்
ஆனதோர் தாள பேத மடங்கலு மறிவோ னாகி.

...893

துய்யதோர் துளைந ரம்பு சுருதிசேர் கஞ்சம் பாடல்
மெய்யதாங் கருவி தாள மிகுந்த தேதசாங் கத்தின்
செய்கையானடன பேதந் தௌிந்துதான் செய்யவல்லோன்
ஐயமிற் சருவ பாஷை யறிந்துசே விக்க மிக்கோன்.

...894

அங்கத்திற் குறையு நோயு மற்றவன் றகையொன் றில்லான்
பங்கமில் குலத்தோன் சுவாமி பத்தியிந் திரியம் வென்றோன்
சங்கத்தி னிருத்த பேதந் தனிப்பிர பந்தஞ் செய்யல்
இங்கிவை வல்லோ னாகி லிவனடம் புரிய லாமே.

...895

துளைக்குவட் டணைக ளெட்டுந் தூசியோ டாற தாகும்
கிளர்த்தமண் டலங்கள் பத்துங் கிளர்நய னங்க ளேழும்
முழங்குசங் கீத நாலு மொய்யலங் கார மைந்தும்
அளந்தநட் டுவனே யாகி லவனடம் புரிய லாமே.

...896

மதுரம்வாக் கியம்ரூபந் தைரியம்
வாசால கஞ்சா மர்த்தியநற்
கதிதருமுத் தமகுலமும் பரதசாத்
திரமுணர்ச்சி கானம் வாச்யம்
நிதிதரு நிர்த்தக்யானம் பொறுமையுங்
கற்பனையுஞ் சரீர நேசம்
சதுரத்வங் குறிப்பறிதல் சார்ந்தகுணம்
பிறர்மனைவி தன்னை யெண்ணான்.

...897

சுத்தமுடன் றேசியஞ்சொற் பொருளியாப்
பலங்காரஞ் சொல்லு மெழுத்தும்
கற்றிடுதன் மனஞ்செவிகண் வாய்மூக்கு
முகத்தினில் விகற்ப மின்மை
பத்தியுடன் சிரத்தைதயை பரதத்திலுண்மை
சத்தியமும் பனுவல் காணல்
மெய்த்திறமை யுடையவனே நிர்த்தகனா
மெனநூலில் விள்ளு மாதே.

...898

பாட்டிசைக்கப் பாடப் பரதவிதத் தாற்கூத்தை
ஆட்டுவிக்க வாட வருகரணம் - பூட்டிவைக்கத்
திட்டமுடன் பாஷைபல தேர்ந்துகற்றுச் சொல்லிவைக்க
இட்டமுள னட்டுவ னாமே.

...899

குறுவிலான் மெலியோ னாகான் கூனிலன் கெருவி யாகான்
அறிவிலி கைகால் வெள்ளை யங்கத்தி லீன னாகான்
நெறியுள கல்வி கேள்வி நிறைந்தநட் டுவனா மென்று
அறிவுடன் பொதிகை வாழு மகத்திய னருளி னானே.

...900

சொல்லியநால் வகையபி நயங்கள்கற்றுந்
தொன்மையுள பலபரத நூலையாய்ந்து
வல்லிதெனும் தாளதசப் பிராணனஸ்த
மருவுதுவா தசப்பிராண மார்க்கங் கண்டு
புல்பேர ணிச்சக்க ணிச்சாரியாதி
புகழ்சுத்த தேசியசிரோ நயனபேதம்
பல்லறிந்து பாத்திரத்தை யாட்டிவைக்கும்
பாவமிலான் பொறியைவென்றோ னடவனாம்பாரே.

...901

நட்டுவன் லக்ஷணம்முற்றும்.

7. பாத்திர லக்ஷணம்

மன்னர்முதன் மூன்றுகுலத் தொருத்தியாய்ச்
சிவந்தழகாய் வண்மை காட்டும்
அன்னமன்னாள் வேந்தனரி யாசனமுன்
னைரெட்டி முழத்துக் கீழ்பான்
மன்னுமெழி னியைநீக்கி மதிகலைபோன்
மலர்பூத்த வஞ்சி போல
மின்னுருண்ட கருமேகந் திறந்துவௌிப்
பட்டதென விளங்கத் தோன்றல்

...902

ஒத்தியதா ளச்சுருதி தவறாத
சொல்லையொக் கடித்த பின்னர்
கற்றகல்வி மறவாமற் சாஸ்திரவி
சாரணையிற் கருத்தைத் தாக்கிப்
பித்தொடுநோ யில்லாமற் சலியாமல்
மெலியாமற் பின்செல் லாமல்
பத்திசெய்து மதுரவா சகம்பகர்ந்து
சங்கீதப் பாடல் கற்றே

...903

மிகப்பருத்தன் மிகவிளைத்தன் மிகுமுயர்ச்சி
மிகுங்குறுகன் மேவா மெய்யும்
தகுரூப மெல்வனமுத் தமதனமு
மறிவுர கத்வஞ் சார
சகலமனோ கரங்க்ரகித் தருளசுரக்
கியானமும்வி சால நேத்ரம்
மிகுமவய வத்தினொளிர் முகமலர்ச்சி
அஸ்தாங்க வின்யா சத்தாம்

...904

ஏற்றகுச் சரர்ம ராடர்
விலாடர்சௌ ராஷ்ட்ர மன்னர்
கோத்திர மிவற்றில் வந்து
குறினெடி விசை யறிந்து
காத்திர மனத்தை யோர்ந்து
கபடமுங் கோப மின்றி
நீத்தநன் மறையோர் தெய்வங்
குருவின்மே னேசம் வைத்தான்.

...905

மண்டலத் தான நிர்த்தம் வாத்தியங் கீதந் தாளம்
மண்டிட வனுச ரித்த லணிவதுத் தமமாம் பண்கள்
எண்டிசை புகழு மாதே யிவ்விலக் கணங்க ளுள்ளாள்
பண்டிதர் மெய்க்கு நிர்த்தப் பாத்திர மென்ன லாமே.

...906


பாத்திரத்தின் பகிப்பிராணன்

நாதமுள மத்தளதா ளஞ்சீங்
குழற்கான நவிலும் வீணை
பேதமிலாச் சுதியுடனே கிண்கிணியும்
கீதமிகப் பெரிதாய் வாழும்
சாதுவா நட்டுவனு நிருத்தஞ்செய்
மாதருக்குத் தகைமை யாக
ஓதுபகிப் பிராணனென்னு மருப்பினைத்
திகழ்ந்ததன முடைய மாதே.

...907

திரமுள மிரேகை திஷ்டி தேகமா யாச மின்மை
அருமையாஞ் சிரத்தை புத்தி யடுத்தல்சாக் கிரதை மேன்மை
தரமெனத் துலங்கு மாமி ரசப்பிர தான வாக்கும்
அரிவையர்க் கிவ்வீ ரைந்து மந்தப்பி ராண னாமே.

...908


பாத்திர அலங்காரம்

சோம்பலின்மை வட்டமதாய்ப் புடைதனம்
நிலவைப்போற் றுலங்குங் காந்தி
பம்பிகிளர் நாமமுடன் கவுரவர்ண
மழகான பணிகள் பூணல்
தம்பமெனு மாவ பாவந்
தெரிதல்சங் கீதந்தாள மொத்துத்
தென்புடைய பிரபந்தந் தனையறிதற்
கறுத்தகுழற் றௌிவாம் ரூபம்

...909

வண்டொத்த பூங்குழலு மெவ்வனமும்
நற்குலமும் வளர்நெ டுங்கண்
தொண்டையித ழவயவவி லக்கணமும்
மிகுங்குழலுஞ் சுகந்த வாடை
நீண்டசடை பிரசன்ன மாமுகமுங்
கண்களில்மை நெற்றி தன்னிற்
கண்டுபுனற் றிவலையள வாந்திலதஞ்
சொல்வசன சுத்தி மற்றும்

...910

ஒளியுடைய கைவளைகள் கருணைமனந்
தாளியிலை யொத்த காதும்
எழில்பெறு கபோலமதிற் கத்தூரி
யான்மகர மெழுத லாரங்
களையணிந்து துலங்குதனத் தினஞ்சாத்
திரப்படிக்காம் ரவிக்கை கையில்
வளையும்விரல் களினீல மாணிக்கம்
வச்சிரமோ திரமும் விள்ளும்

...911

சந்தன மணிந்த மேனி சரிகையுத் தமமா மாடை
கொந்தல ரிதத்தோ டீகை கோபமில் லாமை வச்யம்
வந்திடு கால தேச வர்த்தமா னத்தைக் காணல்
தொந்தமாம் பெருமை சாத்து விதகுணந் தோகைக் காமே.

...912


பாத்திரத்தின் வஸ்திரலக்ஷணம்

உத்தமாம் வெண்புடவை யோதுமத்தி மஞ்சிவப்பு
முற்று மதம மொழியுமே - சாத்திரத்திற்
பஞ்சவர்ண மாகுமிந்தப் பாவமறிந் தேயுடுத்தி
மிஞ்சநடிப் பாரெனவே விள்.

...913


பாத்திரத்தின் ரவிக்கை

வினவிய ரத்தினப் பணிகள் பூண்டாடு மடந்தையின் ரவிக்கைக் குக்கேள்
தனங்களை மூடிய விடங்கட் கதிதெய்வ மேருவுமந் தரம தாகும்
பினுமையத் ததிதெய் வம்பூ மியதா மிரண்டுநுனி பிணைக்குந் தானம்
வனசமர்த் திருவாகு மதிதெய் வமென நூலில் வழுத்து மாதோ.

...914


இரக்கையின் அதிதெய்வங்கள்

கிண்கிணி லக்ஷணம்

வெண்கலஞ் செம்பு மற்ற வெள்ளியிம் மூன்றி லொன்றால்
பங்கிய நற்சு ரங்கள் பலுகவே யழகாய்ச் செய்த
கிண்கிணி தனக்குத் தாரா கணமதி தெய்வ மாங்க
ருங்கயி றதனிற் கோத்திட் டுறுதியாய் முடிச்சைப் போே

...915


கருதுமக் கெச்சந் தன்னைக் காற்கிறு நூறு வீதம்
பொருகவே யணிவா யல்லால் வலக்காலி னூறு பூட்டி
மருவிய விடக்கா றன்னி லிருநூறு மாகக் கட்டி
அருமையாய் நடனஞ் செய்த லாமெனப் பகரு மாதோ.

...916


அபாத்திர லக்ஷணம்

பெருஞ்சென்னி செங்கண்ணி பேழ்வாய்ச்சி
கால்கைகள் பெரிதா மின்னாள்
மருவுளகர்ப் பிணிப்பிணியா டடித்த மெய்யாள்
கொங்கையில்லாள் வதன மெய்யிற்
பெருகியவே ருவைதுடைத்தாள் கண்பிசைத்தா
டலைசொரிவாள் பின்னுஞ் சோம்பி
உருநௌிப்பாள் வேந்தனுக்குப் பின்காட்டு
வாணடங்கு முடலை யுற்றாள்

...917

பூவுடைநேத் திரமுள்ளால் கூந்தலில்லாள்
முகத்திலம்மைப் புள்ளி யுள்ளாள்
மேவுதனந் தொஞ்சலுள்ளாள் மிகப்பருத்தாள்
மிகவிளைத்தாள் மிஞ்சு கூனாள்
கோவமுள்ளாள் திடமில்லாள் ஒருகண்ணாள்
வெள்ளுதடாள் குமரியி லாதாள்
தாவுபனை யெனவுயர்ந்தாள் மிகக்குறுகல்
ஈனசுரந் தளர்ந்த மெய்யாள்

...918

மாறுகண்ணாள் முழிகண்ணாள் குழிக்கண்ணாள்
நீர்க்கண்ணாள் மாலைக் கண்ணாள்
கூறியசொற் பொருளறியாள் குறிப்பறியாள்
பொறுமையில்லாள் குருவின் சொல்லை
மீறியநடக் கையுள்ளாள் வாத்தியகா
னநிர்த்த விதத்தைக் காணாள்
காறுநிறஞ் செவிடுமுளாள் கண்டமுக
நீட்சியுள்ளாள் கல்வி யில்லாள்

...919

தார்குழலைச் சபைமுன்னே கோதிமுடிப்
பாண்மெய்யைத் தான்சொ ரிந்தும்
ஈர்நாக்கு தனைக்கொண்டு இதழ்தடவு
வாளுதட்டை மிகக்க டிப்பாள்
பார்மூக்கைத் தடவுவாள் இருகுரலாள்
ஆடுமப்போ பாரில் வீழ்ந்த
நேர்கலனை ஆராய்வாள் இவளையபாத்
திரமெனவே விள்ளு நூலே.

...920


பாத்திர லக்ஷணம் முற்றும்.

8. தண்ட லக்ஷணம்

பரமன்முன் னடனம்புரிந் ததினாலே
பத்திரகா ளியைச்செ யிக்கப்
பாங்குடன்றன் கைப்பற்றி யப்பிரம்பைப்
பாணியாள் டோளமாய்ப் பிடித்துத்
திரமுடன் சமபாதத் தினின்று
தீயெனுமோ சையா னடிக்கச்
சிந்தையிற் காளியதனை யனுசரித்துத்
தத்ததித் தீயெனுஞ் சொல்லாற்
பெரிதென நடிக்கவப் போதொருகால்
பேணியுத் வேஷ்டித மாகப்
பிரித்துத்தய் யென்றுதண்ட மேல்வைக்கப்
பெருலச்சை யுடனந்தக் காளி
வெருவியே நிற்கப்பிர மாதிமுத
லாம்விண்ணவ ரனைவரும் புகழ
விமலன்களிப் பாயந்தத் தண்டத்தை
விரிஞ்சனுக் களித்தா னன்றே.

...921

அயன்மகவா னுக்களித்தா னவன்நா
ரதன்கையிற் கொடுக்க வக்கோலை
அன்றுகந் தருவமன்ன னுக்களிக்க
வவனம ரர்க்குடன் கொடுக்க
வியனுறும்பூ மிதனினாட் யாரம்பம்
விளைத்திட வெழுசா ணீளம்
மேவுமூவிர லாம்பருமன் மூங்கிலினால்
விந்தைசேர் தண்டொன்று செய்து
அயனமாம் புதுப்பட்டி னைச்சுற்றி
மிருதங்கா தியாங்கரு விகளுடனே
ஆனைமுகந் தோன்முன் வைத்துப்புதுப்
பாத்திரத்தா லேபூசிக் கச்செய்து
வயனமாந் தண்டையிரு பெண்கள்கையில்
வளம்பெறப் பிடித்திடச் செய்து
மன்னியநவ பாத்திர முடைக்கச்சை
வழங்கிக் கச்சமுந் தரித்தே.

...922

விளங்கியதண் டின்மத்தியி னெல்லை
விரித்திடு ராசியி னிறுத்தி
மேவியதண் டின்மத்தி யிற்பிடிக்க
வேசெய்து குருவிசி தமதாய்
வளம்பெறு தத்தித் தய்யென
முதலில்வரு மடவா னடிப்பித்து
மன்னியபூர்வ வரங்கம்போற் புஷ்பாஞ்
சலிசெய்து மங்கள மாகத்
தளம்பெறுஞ்சிட் சைசொல்ல வேண்டுமெனத்
தரணியோர்க் கத்தேவ ராடவே
தயவுடன்கொடுத் தாரென்ன முன்நார
தாதிக ளுரைத்த நற்பரதந்
துலங்கிய சாத்திரஞ் சொலுமிவற்றைத்
தொல்லுலகி னன்னட னம்புரியத்
தொடுக்குமா ரம்பஞ்செய வேணுமென்று
சொல்லுவை நூன்முறை தெரிந்தே.

...923

தண்டலக்ஷணம் முற்றும்.

9. தேங்காய் லக்ஷணம்

பத்தர்கள் பரவு தாளான் பராபரன் பரம யோகி
சத்தியை யிடத்தே வைத்த தற்பரன் தந்த கன்று
முத்திக்கு வித்தாய் வந்து முளைத்த வைங்கரத்து நாதன்
வித்தகன் குமரன் முன்னோன் விநாயகன் பாதம் போற்றி

...924

சித்தியாம் பலவித் தைக்குஞ் செய்தொழின் முகூர்த்தங் கொள்ள
உத்தம பூமி தன்னி லுகந்தகோ சலஞ்சா ணாகம்
அத்துட நீரு மொன்றா யகலநாற் கோண மாகப்
பத்தியா மரங்கந் தன்னிற் பரிவுள கன்னி முலை

...925

அத்தினின் மெழுகிப் பின்ன ரானதோர் கன்னி தன்னில்
வித்தகக் கணேசன் றன்னை விளங்குமா சனத்தில் வைத்து
முத்தொடு பருப்பு நெல்லு முழுமணி யரிசி சாதம்
அத்திர மெழுக்கின் மேலே யணிபெறப் பரப்பிப் பின்னர்

...926

பத்தியாய்ப் பிள்ளை யார்க்குப் பரிவுடன் பூவுஞ் சாத்திக்
கொத்தலர் மாலை சாத்திக் குரவைவாத் தியமு ழங்க
உத்தம விளக்கு மட்ட மங்கல நிறைந்த நாளில்
கத்தகன் முன்னே வைத்துக் கண்களி கூர்ந்து நின்று

...927

சித்தத்திற் றியானித் தெட்டுத் திக்கிலும் பூசை யாற்றி
அத்திர நடுவிற் பிரம்ம சந்தியின் மலர்சொ ரிந்து
உத்தம மான தேங்காய்க் குகந்தசந் தனமும் பூசிச்
சித்தமாய்த் தூப தீபஞ் சீர்பெறச் செய்த பின்னர்

...928

அத்திர புதல்வ ராலு மழகுபுத் திரிக ளாலும்
சுத்தமாய் விரதஞ் செய்து தூயவெண் ணீறுஞ் சாற்றி
உத்தம மான கோடி வஸ்திரங் கொண்டு தைத்துச்
சுத்தமா முடையுங் கோத்துக் கச்சையு மருங்கிற் கட்டி

...929

கைக்கரங் கூப்பிப் பின்னர் கவின்பெற வேந்தி நின்று
தெக்கணக் கரத்தி னாலே சீர்திரு விளக்கைப் போற்றி
அக்கணம் பிள்ளை யாரை யழகுறப் போற்றி நின்று
புக்கிதன் குலதெய் வத்தோ டானதிக் கெட்டும் போற்றி

...930

மிக்குற தேவர் சந்தி விண்ணுறுந் தேவர் போற்றி
சற்குரு பாதம் போற்றித் தயவுடன் றேங்காய் போற்றிச்
சிக்கிடை பொரியென் ளுண்டை தீங்கரும் பிளநீ ரோடு
முக்கனி யடைக்காய் வைத்து முன்பதை நேவே தித்து .

..931

உற்பன மான தேங்காய் தெட்சணை யுடன டைக்காய்
நற்குரு நாதன் கையிற் கொடுத்துநா டோறும் வித்தை
சொற்பெறப் படிக்க வேண்டித் தொடங்குகின் றந்த நேரம்
நற்கண பதிமுன் றேங்கா யுடைப்பது நன்மை யாகும்.

...932

ஒத்துடன் முறியு மாகி லுண்மையாம் வித்தை யுண்டாம்
கைத்தலம் விட்டு நீங்கித் தெறித்தோடின் மரணங் காணும்
இத்திற முடைத்த தேங்காய் முறிந்ததி னீரு நின்றால்
வித்தகச் செல்வ முண்டாம் விளங்குசந் ததிக ளுண்டாம்.

...933

சித்திர மாகச் சற்றே சிறிதெனுங் குழவி யுண்டாம்
பத்தியில் லாமை யாலே பலவித மாகப் போகில்
பித்தராய்த் துட்ட ராவார் வித்தையும் பிரிந்து சோரக்
கத்தனே கண்ணிற் கீறிற் கணுநோயுங் கொள்வன் றானே

...934

என்றிள மரத்தின் காயு மிடைநடு பெருத்த தாணும்
அன்றலிப் படிபெ ருத்தா லக்கிரம் பெருகிற் கண்ணு
மொன்றுமூ வகையி லாணு முயர்மரங் கிரிகை யிற்பெண்
ணன்றுபெண் கிரிகை தன்னி னபுஞ்சகந் திரத்தி லாமே

...935

அண்டங்க ளாயிரத்தெட் டானதொரு தேங்காயைக்
கண்டம தாயடிக்கக் காரியமென் - மண்டலத்தில்
நாத முதலமுதாய் நாதாந்த மேவுருவாய்
வேதமுதன் ஞானம் விளங்கும்.

...936

அடிபெருத்த தேங்காய்பெண் ணாமலியா மதனின்
முடிபெருத்தாற் பெண்ணா முழுதுந் - தடியானால்
ஆணாந் தலைக்கண்ணை யங்குறவே பொத்தியபின்
கோணாம லேயடித்துக் கொள்.

...937

நொற்பனமா நான்மறையோ னொற்பனத்தி லுங்கனத்தால்
அற்புதமாங் கொற்றவனுக் காரமுதாம் - வெற்பனைய
தேங்காய்ச் செட்டியெனுந் தேய்ந்துகனத் தாலதனைப்
பாங்கான சூத்திரனாம் பார்.

...938

வலியகண்ணி லேவிடுத்தால் வாராது வித்தை
பலியெடுப்பே னிதற்குப் பலன்கேள் - கலியுகத்தில்
வாம நயனத்தால் வந்தால் வனிதையரும்
சேமஞ் சிதறிவிடுந் தேர்.

...939

ஆமலி வானாபம் வங்கிச விருத்த மிக்கச்-------
சாமதே புருட தீர்க்கஞ் சட்சுநோய்க் கண்ணி லூனம்
காமுறு ரேகை யீனங் காத்திரம் ரோக மாகும்
தேமலி சிகையில் லாத சிரசுநோ யழுகல் பூசல்

...940

சலமீனம் வருட நாசஞ் சட்சுநோய் கண்ணி லூனம்
பலநெறி வாயு வீனம் பலவர்ணஞ் சொர்ண நாசம்
குலவிய கொன்னாய் நீயங் குழன்றதிற் கோப மாகும்
தலைமுறை யிவகை நீக்கிச் சற்குரு வெடுக்க நன்றே.

...941

கொள்வது தோஷ மாகுங் கூடிய தில்லை யாலும்
அள்ளியே சலத்தை விட்டு அத்திர மதனாற் பூசி
மெள்ளவே திரியம் பகத்தால் விப்பிரன் பரிசிப் பித்தே
உள்விலாங் குட்டத் தாலே யொருவிர னயனம் பொத்தி

...942

பொத்தியே கனிட்டை மூலம் பிடுத்திடும் புருவ மட்டா
எத்தியோர் தாட னத்தா லிருமுறி யாக நன்றே
மத்திம மடிரண் டாகி லவரமுச் சரித்துச் செய்ய
உத்தம கண்ணில் விட்டா லுயர்குல நாச மாமே

...943

ஆணுக் காணாக வறிந்துடைநீ தேங்காயை
வீணுக் காகாமல் விதியினாற் - பேணியொரு
சாதிக் குச்சாதி தனையறிந்து தானுடைத்தால்
சோதிக்கும் பாங்காகச் சொல்.

...944

மணிபிரம னங்குட்ட மாதுமைதான் மையம்
பணிமகுட மாலானும் பார்க்கி - லணிவிரலில்
ஆதவனுங் கைத்தலத்தி லாங்கவளு மாகவே
பேதமறத் தேங்காய் பிடி.

...945

தேங்காய் லக்ஷணம் முற்றும்.

10. பிரம்பு லக்ஷணம்

ஓங்கார வித்துளதா யொவ்வெழுத்தே வேருளதாய்
ஆங்கார மானந்த மாநிலையாய்ப் - பாங்காக
நன்றாக வேமுளைத்த நாதசிவ மாமெனவே
ஒன்றாக வந்தபிரம் புற்று.

...946

முளைத்தது நிலங்கள் பூமி மொழிசிவ சத்தி பூணத்
தழைத்தது இலையும் வேருந் தங்கிய கொழுந்தின் சாயத்
திளைத்தது நந்தி கோடி யெடுத்தது சொரூபந் தன்னில்
கிளைத்தது கூட்டந் தன்னிற் கிரணமாம் பிரம்பு தானே.

...947

நட்டுவர்க்கு மூன்றரைச்சா ணந்திக் கிரெட்டிப்பு
முட்டற்ற பண்டிதர்க்கு மூன்றேசாண் - திட்டனவே
பட்ட வரையெழுப்பும் பஞ்சாக் கரத்தோருக்
கெட்டுவிரற் சாணென் றியம்பு.

...948

நன்றாய்ச் சிவஞானக் கொழுந்தாய்ப் பச்சை
நாகமெனத் தலைநீட்டி வேத நான்கும்
ஒன்றாக முளைத்தெழுந்து புவிவிட் டேக
வோரைந்து ..................
குன்றாத விரனாற்பத் திரண்டே கூரிட்டுக்
கூறி ......................
நின்றாரும் பிரம்புதன்னை வெட்டி நீட்டி
நிருத்தர் திருக்கரத் தேந்திநின் றாரே.

...949

அஞ்சுகணு வீசனா மளவே நெடுமாலா
மிஞ்சுகணுக் கீழ்வாம வேந்தனா - மிஞ்சிப்
பிடித்தகரஞ் கூசியாம் பேருலகோர் முன்னே
எடுத்தபிரம் பேயாகு மென்.

...950

அச்சமற வாதியரா யாடியதோர் நிர்த்தத்தை
உச்சிதமா யானு முரைக்கின்றே - னிச்சயமே
முச்சாண ரைப்பிரம்பே முதற்குருவே மும்மூர்த்தி
தத்ததாப தாகத்தைத் தாக்கு.

...951

தாக்கிய தோர்பிரம்பு தான்பாதி யானாக்கால்
வாக்கிற் பிடித்து வலமாகி - நோக்குடனே
யானபர தத்தொழிலை யாட்டிவைத்தா னாடலிவை
தானறிந்த கைப்பிரம்பாற் றான்.

...952

பிரம்பு லக்ஷணம் முற்றும்.

11. உடைக்கச்சை லக்ஷணம்

வேங்கை வரியுடையான் மெய்ஞ்ஞானக் கச்சையான்
ஓங்குமுய லகனுதிர மெண்ணெயாய்த் - தாங்குபுகழ்
நாகமே மென்முடியாய் நர்த்தகனென் றேசமைந்தான்
ஏகமாய் நின்ற வீசன்.

...953

12. நாடக அரங்கம் முதலியன

சங்கஸ்தாபனம்

தாபர நாடகத் தரங்கஞ் செய்தற்
கான விடந்தனிற் சங்கத்
தாபனஞ் செய்வு மாகிய நாளுஞ்
சார்ந்திடு ராசிவாஸ் துவினாள்
தீபமாய் விளங்கு முத்திரட் டாதி
திகழுத் திராடம் ரோகணியும்
சேர்ந்திடு மிருக சீரிடம் பூசஞ்
சீருறு மிராசியா மகரங்
கூபமாய் விளங்கும் விருச்சிக ராசி
கூடிய விரதநல் வேளை
குணமதாம் சங்கத் தாபனஞ் செய்யக்
கூறினர் நூன்முறை தெரிந்து
பாபமில் லாத பரதநூல் கற்றோர்
பனிவரை யெனத்திகழ்ந் தெழுந்து
பணிகளைச் சுமந்து மார்பெலா மடர்ந்த
பருந்தனத் துடையமெல் லியலே.

...954


வாஸ்துவின் மாதம்

கன்னிதுலாம் விருச்சிகம தாய்விளங்கு
மிம்மாதங் களிற்கி ழக்கே
சென்னியுந்தெற் கின்முகம தாய்த்துயிலுந்
தனுமகரஞ் சேர்ந்த கும்பம்
தன்னிறெற்குத் தலைமேற்கு முகந்துயிலும்
பங்குனி சித்திரை வைகாசி
உன்னியமேற் குத்தலையும் வடக்குமுகந்
துயிலுமென வோது மின்னும்.

...955

மிதுனமுங் கடகஞ் சிங்க மிதில்வடக் காகச் சென்னி
முதிரவே வைத்து மேற்கு முகமாகச் சயனங் கொள்ளும்
மிதுனமுங் கன்னி சாப மீனமிந் நான்கு மாதம்
நதிகொளு மூலை மூலை கால்தலை வைத்துத் தூங்கும்.

...956

ஆதலினா லிந்நான்கு மாதமும் விலக்கிமற்ற தாகுமாதங்
கோதுமரங் கமும்வீடுந் தச்சுசெயச் சுகமென்பர் குறுக்காய்வாஸ்து
மேதினியிற் கிடவாம லவனெழுந்த மாதமதில் விளம்புகின்ற
தேதிகளின் முன்னுரைத்த நாளுமிரா சியுங்கூட்டிச் செய்யநன்றே.

...957


வாஸ்து ஏழுநாள்

சித்திரைபத் தாம்வைகா சியிலிருபத்
தொன்றாகுந் தெய்தி யாடிப்
பத்துடனொன் றாமாவ ணிக்குமுப்
பதாகு மைப்பசிப் பன்னொன்றாம்
முத்தியகார்த் திகைக்கெட்டா மொழியுந்தை
பனிரண்டாய் முழங்கு மாசி
யெத்துமிரு பதுவான தேதிகளில்
வாஸ்துவெழுந் திருக்கும் பாரே.

...958


மண்டப லக்ஷணம்

நன்றாய்க் கீழ்மே லறுபத்து நாலுமுழ மாகிய நீளம்
ஒன்றாய் முப்பத்தி ரண்டு முழமகலமா மண்டப மதனில்
குன்றாய்த் தெற்கு வடக்கோடு குணபான் மேற்குவா சலுமாய்க்
கன்றாய்மயனூல் விதிப்படியே கனக்கச்செஞ் சாளரந் திறந்தே

...959

மண்ணிநீர் புழுகு நெய்யும் வகைப்படி வடித்துத் துய்ய
கண்ணென மாசு போக்கிக் கணகசித் திரங்க டீட்டி
நண்ணிய நிலைக்கண் ணாடி நாடகப் பத்தி யேற்றி
விண்ணவ ரரங்க மென்ன விரிஞ்சனும் புகழச் செய்தே

...960

நிலத்தினிற் களபச் சாந்தா னிகரித்து நிலவைத் தானே
தலத்தினிற் பதித்த தென்னச் சந்திர காந்த மென்னப்
பலப்படும் புனலி னூடே பளிங்கொளி பரந்த தென்ன
நலத்தினிற் சிறப்புச் செய்தே நவமணி விளக்கை யேற்றி.

...961

பூரண கும்பம் வைத்தே புதுநறும் பஞ்ச தூபம்
காரண மாகக் கோலி கனக்கமேற் கட்டி கட்டிச்
சீரணி வயிர முத்துஞ் செழுமணிப் பவளந் தூக்கிப்
பேரணி துவச வாசற் பெருத்தபூ மாலை தூக்கி.

...962


நடனசாலை

பாரித்த நடன சாலை பலவலங் காரஞ் செய்தே
வாரிச்செம் பவள முத்தும் வயிரமா ணிக்க மற்றும்
பூரித்த மணிய நேகம் புனைந்தசிங் காச னத்தை
நேரிட்ட வரங்கந் தன்னி னெறியினிற் குடபால் வைத்தே

...963

வயங்கிய நிருத்த சாலை வகைமையா யலங்க ரித்துத்
தயங்குசிங் காச னத்திற் றமனியத் தவிசின் மீது
வியங்கொளெண் டிசைசூ ழோசை வேலைமண் புரக்கும் வேந்தன்
இயங்குநங் குணபா னோக்கி யினிதிருந் தருளு மாதோ.

...964


இராஜ லக்ஷணம்

வழுதிதன் குலத்தில் வந்து வயங்குமன் னவனே யாகி
அழகினின் மிகுந்த தென்ன வரிவையர்க் கொருவ னாகிப்
பழுதறப் பரத நூலை யாய்ந்துட னுணர்ந்தோ னாகி
எழுகடல் வளையும் ஞாலத் திறைவனா யிருப்பன் மாதோ.

...965

தன்மசிந் தனையு நன்றாய்த் தகுந்தநன் னிறத்தோ னாகி
வன்மங்க ளேது மில்லா மனத்தனாய் வாகு ளானாய்க்
கன்மங்கள் சற்று மில்லாக் காகுத்த னொப்பா னாகி
இன்மங்க ளங்க ணன்றா யியல்புடன் வகுக்க லாமே.

...966

குலத்தினாற் பகையை வெல்லுங் குணத்தினாற் றானு மாறா
நலத்தகு கொடையால் வன்மை நலத்தினாற் சகல வித்தை
சொலத்தகுந் தௌிவாற் கீர்த்தி துய்யவ னிருத்தங் கண்டு
கலக்கமுள் குற்ற நீக்கிக் குணங்கொளுங் காவல் வேந்தே.

...967

இதம்பெறக் குணபா னோக்கி யிருந்தரு ளந்த வேலை
விதம்பெறுங் குமரர் மற்ற வெற்றிவா ளமைச்சர் சேனை
திதம்பெறு மண்டலீகர் திரள்படைத் தலைவர் வேந்தர்
பதம்பெறு வலது பாகம் பணிந்துசே வித்து நிற்க

...968

மாதவர் புராண நூலோர் மாகதர் மற்ற நூலோர்
கோதறு பரத மிக்கோர் குறித்திடுங் கணிதங் கற்றோர்
போதஞ்சே ரந்த ணாளர் புரோகிதர் நாட கத்தோர்
தீதில்பா டகரெல் லோருஞ் சிறப்புட னிடத்தே நிற்க.

...969

ஒளிமணிக் கடகக் கையா லுபயசா மரைகள் வீச
அளிதிகழ் விரைம லர்ப்பந் தாலவட் டங்கண் ணாடி
தௌிதரு முடைவா ளேந்திச் சித்திர மடவார் சூழக்
களிமயிற் போலி ராச கன்னியர் குடபா னிற்க

...970

பொருந்துசபா பதிக்குமுன்னம் புகழ்நடனந்
திகழரங்கப் புறம்பா னிற்கப்
பிரம்புகரந் தனிற்றாங்கிப் பேர்பெருங்கட்
டியக்காரன் பிரியா நிற்கக்
கருந்தடங்கண் ணார்நடன நடிக்குவகை
யுளமகிழ்ந்து காணும் வேந்தன்
திரிந்திடுமவ் வரங்கத்தி னாற்புறத்துச்
சதுரங்க சேனை சூழ.

...971


குலவிய குமரர் சேனை கொற்றவக் குலத்தி லுள்ளோர்
அலைவிலா மண்டலீக ரருந்திற லமைச்சர் சேனைத்
தலைவர்மெய்க் காவல் செய்வோர் தலம்புகழ் தானை யாகும்
வலமுற மதித்து வேந்தை வணங்கியே மகிழ்ந்து வைக.

...972


மந்திரி லக்ஷணம்

உறுதிச்சொனற் குணங்கீர்த்தி யைக்கோரல்
பிறருடைய வுள்ளங் காணல்
மருவுநடு நிலைமைகுண தோஷபே
தந்தெரிதன் மகிழ்சிங் காரத்
துறுநீலை தனிலிச்சை நீதிநன்ம
னங்கல்வி யுகந்த வர்க்கு
அரசபே தாபேத மறிஞான
முடையவனே யமைச்ச னாமே.

...973


சபா லக்ஷணம்

சத்திய மொழுக்க மறங்குணங் கீர்த்தி
மறைமொழிகள் சார்த னேமம்
எத்திசை மன்னரும் பரவல் வேதாந்தம்
வீணைகவி யிலக்க ணச்சீர்
ஒத்திடு சவுரியம் விளங்கன் மன்னமன்னர்
நிறைந்திருத் தலுண்மை யோர்தல்
பத்திய விப்பதி னைந்துஞ் சேர்ந்தவிடஞ்
சபையெனவே பகரு நூலே.

...974


சபாசப்தாங்க லக்ஷணம்

வித்துவான் கவிகள் வந்தி விகடஞ் சங்கீ தத்தோடு
முத்தருட் புராண முன்னாண் மொழியிதி காச மென்னும்
பத்திசே ரிந்த வேழும் பகர்ந்தனர் சபைக்கு ரித்தாம்
சத்தாங் கமெனவல் லோர்கள் சாத்திரந் தன்னின் மாதோ.

...975


சபாமண்டபம்

உரையங் கத்தில் வடக்குமுகத் திலேனு
முற்றகீழ் முகத்திலேனுந் துலங்குகின்ற
அரியா சனத்திற் சபாபதி யிருக்க
வலங்கரித் தவன்றேவி யிடத்திருக்கப்
பெருவலத் திலமைச்சன் வலமிடத் திற்கற்ற
பேரான கவிகா யகாளிருக்கப்
பிரகரு திற்புவி யரசர்நின் றிருத்தல்
பெற்றியாஞ் சபாமண் டபத்தின்சீரே.

...976


சபாநாயக லக்ஷணம்

சீமான் சகல சாஸ்திர முணர்ந்தவன்
கலாசோதனை தெரிந்த நிபுணன்
தீம்பா வமற்ற வனற்குணந் தயவுசத்
தியவாக் விதட்சண முளான்
பூமான் பிரசன்னமுகன் றருமசிந் தனைகீர்த்தி
பொறுமையா தரவை யுடையோன்
புண்ணியர் யாவரு மதித்திடு மீகை
யான்புகழ் சௌர்ய ஞானவுசிதன்
சேமவான் கீத வாத்ய நிருத்தச்
சுத்த தேசியத்தியல் பறிந்தோன்
செய்ய சரசம் பொறுமை வேடிக்கை
தனினினைவு சென்றகன நயவிலாசன்
காமனே ரழகுடைய னூக முடையோ
னிலக்கண மிலக்கிய மறிந்தோன்
கனவான் றராதர மறிந்த சதுரன்
சபைக்கு அதிபனென் றோதுநூலே.

...977


சபாநாதனிருப்பு

இந்த விதமா யிசைந்த சபைநாதன்
முந்திக் கிழக்கு முகமா யிருந்தவுடன்
உரவோ ரமைச்ச ரிசையுற்ற கவிவாணர்
இருபா னிறைந்தி ருப்பதே.

...978


சபையிலுள்ளோர் லக்ஷணம்

இரசிகள் கன்மஷ மில்லார் பொதுவர்
மேன்மையுள ரெழிற்சாவ தான முடையோர்
இணையிலாப் படர்நடன காய கர்களின்
மறதி மோச மெல்லாம் பொறுத்துப்
பரிவுட னீதி விவரிக்கு மறிவுடையர்
பாவா பாவ முணர்ச துரராய்ப்
பாங்கான குணமுடையர் காரியத் தைரியம்
பண்பு பெறும்வி நயமு டையோர்
திரமுடைய மதமாச் சரிய மிலாதவர்
களேற்றிட் டதுரு வாத மில்லார்
தீங்கற்ற நினைவுடைய ரெக்கா லுமுப
காரம் செய்கின்ற சித்த முற்றோர்
பெருமைபெறு சபைநா யகன் நினைவை யோர்ந்
துசிதம் பேசு வசனத் திறமையோர்
பேராத பொறுமை யோர்சபை யான
ரென்னவே பேசு மிப்பரத நூலே.

...979


சபையில் பாத்திரமிருக்கும் லக்ஷணம்

அரிதாஞ் சபைத்தலைவ னெதிரிற் பாத்திரநிற்
றலவள் வலப்புர மத்தளம்
அவளருகிற் சங்ககா களவாத்யக் காரன்
அன்னவ ளிடப்பு றத்தில்
திரமுள்ள காயக னவன்பின் சுதிக்காரன்
சேர்ந்தருகி லாஸ்யக் காரன்
சீர்பெறும் பாத்திரத் தின்பின்னர் நட்டுவன்
தேனெனும் பரத சரணி
தெரிவித்து நிற்பனிச் செயலுடைய கானமும்
சீரான வாத்தி யங்களும்
செய்கின்ற நர்த்தனமு மபிநயாதி களெல்லாம்
திறம்பெற விருந்து என்னும்
பரிவுடன் கேட்டவர் புரிந்தவர்கள் சுமுகசம்
பத்து சந்ததி யாயுளும்
பதமுடைய வாரோக்கிய மடைவ ரெனவேமுன்
பகர்ந்தனன் மதங்க முனியே.

...980


சபைவணக்கம்

வேதங்கள் கொம்புகளாய் மேலாகுஞ் சாத்திரங்கள்
தாதுகள்வி ளங்குமலர்த் தாருகளாய் - நீதமுடன்
கற்றோரே தும்பிகளாய்க் கண்டசபா கற்பகத்தைப்
பொற்றுவே னென்பாய்ப் புகழ்ந்து.

...981


அரங்கபூமி லக்ஷணம்

நாற்கோணம் பொன்வடிவா நல்லலகா ரம்பீசம்
தேக்கும் பிரமனதி தெய்வமாம் - ஏற்கும்
அரங்கத் தலபூமிக் காமிலக்க ணந்தான்
குறையறவே நூலாய்ந்து கூறு.

...982


அரங்கபூமியைத் தொழுதல்

அரிபத்தி யுண்டாக்கி யழகியரத்
தினப்பணிபூ ணகில மாதே
பெருமிரத் தினந்தருந் தாயேகூர்மஞ்
சேடன்முடி பெரிதா மேரு
மருவியதிக் கயங்கடனைப் பூண்டவனே
ஐம்பூத மமைந்த மின்னே
பொறுமைகொள்வாய் நடனத்தி னடிநின்மேற்
படுங்குற்றம் போற்றி போற்றி.

...983


அரங்கத்தில் பாத்திரம் நிற்கும் லக்ஷணம்

நடனத்திற் கானவிட மரங்கமென்று
பரவவரங் கநடுவின் மின்னாள்
அடுத்திருத்தல் நட்டுவனாம் வலப்புறத்திற்
றாளகிரி அடுத்த பக்கத்
திடத்தினின்மத் தளம்வேணு விவர்கணடுச்
சங்கித மிதமாய்க் கூடும்
படிவான சுதியுநிற்ப தாகநர்த்த
னஞ்செய்தற் பண்பாம் பாரே.

...984


அரங்கதேவஸ்துதி

பரதகுல பாக்கியமே பாவரசா னந்தத்
துருவா யெழுந்த வொளியே - மருவுசக
மோகனமே யின்ப முதலே யரங்கநிலை
யாகவள ரம்மையெனை யான்.

...985


மேற்படி - வேறு

விக்கின மின்றி யுலகெலாங் காக்க
விண்ணவ ரதிசயங் கொள்ள
விருப்பம தாக வடுத்தவர் வாழ
மேன்மைய தாஞ்சபை நாதன்
திக்குறுங் கீர்த்தி யுடன்வளர்ந் தேறச்
சீர்கொளும் பாத்திரஞ் செழிக்கத்
தௌிவதா யாசா னோதிய சிட்சைத்
திறம்பெற வுன்னியுந் தனுக்கு
முக்கிய புட்பாஞ் சலிசெய்தே னெனவே
முழங்கவே யரங்கதே வதையை
மொழிகளா னடன முதலிலே துதித்து
முடிந்தமே னாட்டியங் கீதம்
பக்குவந் தோய்ந்த வபிநயம் பனுவற்
பாவமுந் தெரிந்திட நடித்தல்
பண்பதா மெனவே வழுத்தினர் மேலாம்
பரதநூ லாய்ந்துணர்ந் தவரே.

...986


பாத்திரநட்டுவ பாந்தவ்யம்

நிர்த்தனா ரம்பஞ் செயும்வரை யாசா
னீள்ரச பாவசின் னங்கள்
நிகழ்ந்திடு மங்கவின் னியாசங்கள்
நிறைகாட் டும்வரை யிலாமாமன்
விர்த்தியா மரங்கந் தனிலாடும் போது
விள்ளுவ ருடன்பிறப் பென்ன
மிருசபைத் தலைவ னிடம்பாவம் பிடிக்கில்
விளங்குவன் றந்தையா மெனவே
வர்த்தமாம் வீட்டி லிருந்தரங் கம்போ
யகம்வரும் வரையிலீன் றெடுத்த
வன்னையா மென்ப ராகவிவ் வைந்து
மாடிடும் பாத்திரத் திற்குக்
கீர்த்தியாய் விளங்கு நட்டுவ னாகுங்
கிளையென நூன்முறை தெரிந்தோர்
கிளர்த்தினர் கிரியும் யானையின் முடியுங்
கிளர்ந்தெழுந் தடதன மாதே.

...987


பாத்திரமேள பாந்தவ்யம்

பாத்திரத்தின் றந்தையாம் பருமிருதங் கந்தாயாம்
நேத்திரமாந் தம்புருவு நேர்கீதம் - பூத்தமலர்
மாதே யுடன்பிறப்பா மாறாத தாளலய
மாதி முதலா யறி.

...988


பாத்திரசொரூப லக்ஷணம்

மருங்குக்குக் கீழயனு மால்தோ ளளவும்
இருங்கணமே சென்னியள வீச - னெருங்குதனம்
வண்டணியும் பூங்குழலாள் வந்தாட வேயிருந்த
மண்டலமே லிங்கவடி வாம்.

...989


கூத்தின் உறுப்புக்கள்

மண்டலங்க ளாறும் வருகரண நூற்றெட்டு
மண்டவரு தானகமோ ரைம்பத்தொன் - பண்டே
வருசாரி யீரெட்டும் வட்டமே லாகக்
குருசாதி நூலுரைத்த கூத்து.

...990

நாடக அரங்கம் முதலியன முற்றும்.

13. நாட்டியக்கிரமம்

கணபதி பூை

முந்தவே கணபதிக்கு முரசுடனை< வேத்திய முழங்கி வானம்
சிந்தைமகிழ் பூமிக்கு மவ்வவ்வாத் தியமுழங்கிச் சிந்தை செய்து
அந்தமிகுங் குருமொழியை மனங்கொண்டு சுகம்பெறவே யாலா பித்துப்
பந்தமுறப் பாடுவது பரம்பொருளுக் கேற்குமெனப் பகரு நூலே.

...991


நாட்டியக்கிரமம்

முன்னோர்க ணடனத் துக்காய் மொழிந்தகா ரியச்சொ றேர்ந்து
மன்னிய விஷ்ட தெய்வ முதற்சபை வணக்கஞ் செய்து
உன்னியே நடனஞ் செய்த லுத்தம மென்று மேலோர்
நண்ணுநாட் டியக்கிரமத்தை நவின்றன ரறிந்து கொள்ளே.

...992


நாட்டியமேளக்கோவை

தாக்குமத் தளமே சல்லி யிடக்கைதண் ணுமையு டுக்கை
வாக்கமை கரடி காளம் வழங்கிய முபாங்கஞ் சங்கம்
தூக்கிய தாளந் தண்டி சுருதியாள் வீணை கண்டம்
தோக்கிய வேக்கத் தாளஞ் செவ்வையிற் சிலம்பும் போது

...993

நற்றக னிடக்கை சல்லி நவின்றிடும் பாடல் கற்றோன்
வெற்றிசே ரரங்க மாதர் மின்னுறச் சிறுவர் வீணை
முற்றியா மிராவ ணாஸ்த முகவீணை வேணு நாத
முற்றபல் வீணை சந்த்ர னுடல்மத் தளமே தாளம்

...994

சீர்பெற்ற வரங்கத் தேறித் திகழ்தரு கருவி யைய்ந்து
பேர்பெற்ற மத்த ளத்திற் பிறங்கிய வோசை மேலாய்
ஏர்பெற்ற கருவி யெல்லா மிசைந்தமத் தளத்திற் கூட்டி
நேர்பெற்ற மத்தி மாதி நாயக னின்று பாட

...995

அங்கண்வா ச்சியங்க ளோசை யடங்கலு மடங்கிப் பின்னர்
வங்கிய முபாங்க மூத மாகதர் வணங்கி மாலோன்
சங்கரன் றன்னைப் போற்றித் தலம்புகழ் மத்தி மாதித்
துங்கவ ளரப்பங் கீதந் தொடங்கிமுன் பாடு மெல்லை

...996

மூவைந்து பேரு நன்றாய் முறைபிறை போலே நிற்கக்
காவலன் முன்னீரைந்து கதித்திடு முழத்திற் கீழ்பால்
தேவலோ கத்த ணங்கின் ஜகத்தணங் கழகின் மிக்க
பூவைமூ வேழு நீக்கிப் பொலிந்தனன் நடன சாலை.

...997

நாட்டியக்கிரமம் முற்றும்.

14. பெண்ணின் வகை

நாட்டிய உத்தம மத்திம அதம தேசப்பெண்

உத்தமமா நிருத்தமது உத்தரதே சத்தாகு மோதுகின்ற
மத்திமமா நிருத்தமது மத்திமதே சத்தாகு மற்றுமிந்தச்
சாத்திரத்திற் சொல்லதமந் தட்சணதே சத்தாகுந் தாசிமின்கள்
உத்தமமத் திமமதமம் பெண்களா கும்மெனவே வோது நூலே.

...998


நாட்டியப்பெண் வயது

ஐந்து வயதுமுத லைம்பதா மாண்டுவரை
எந்தவித மாது மிணங்கவே - விந்தையதாம்
நாட்டியமு ழங்கலாந வின்றதற்கு மீதாகு
நாட்டியமா காதெனவே நாட்டு.

...999


பெண்பருவம்

போதைவய தேழாம் பெதும்பைபதி னொன்று மங்கை
மாதே பதின்மூன்றா கும்மடந்தை - யோதுபதி
னாறரிவை யாமிருபத் தைந்துமுப்பத் தொன்தெரிவை
பேரிளம்பெண் ணாற்பதெனப் பேசு.

...1000


மணப்பெண் லக்ஷணம்

எண்வயதாங் கன்னி யிசையுமோன்ப தாம்வயதின்
பெண்ணுக்கு ரோகிணியென் பேராகும் - வண்ணமிசை
மாசிலாப் பத்து வயதிற் கவுரியப்பாற்
றூசுடைய பெண்ணெனவே சொல்.

...1001


மணப்பெண் பருவம்

உத்தம மாங்கன்னி மத்திமமு ரோகிணியாம்
பத்துவய திற்பெண்ணாம் பாரதமர் - முத்துநகை
மாதே யிதிலுத்த மாமணக்குங் கன்னிமற்ற
மீதிரண்டுங் கூடாதாய் விள்.

...1002

பெண்களின்வகை முற்றும்.

15. சில நாட்டிய வகைகள் முதலியன

கத்தி நாட்டியம்

இசையநாற் கால்க ணாட்டி யீராறங் குலத்தின் மேலே
பசைகொளு மீரெண் கத்தி யாங்குடன் கட்டி யப்பா
லேசிமைய நுனியி னின்று ஆடங்கா மார்த்த மோக்கம்
ஏசமதாய்த் தருமென் றீச னியம்பின னந்திக் கன்றே.

...1003


பேரணி நாட்டியம்

பாவமதி னறிதா ளத்தி னோடே
பகர்தத்தித் தொன்னமென் சொல்லை
ஏவிமட் கலத்தின் மீதினி னின்று
ஏகதாளத் தையோர் கையின்
மேவிமற் றொருகை தனிலன்ய தாளம்
விளங்கவே நடிப்பதா மெனவே
கூவிளம் புனையுமர னந்தி கேட்கக்
கூறின னிதைமனங் கொள்ளே.

...1004


நாட்டிய ஆரம்ப அந்திய வந்தனம்

இரண்டுகை யிடுப்பில் வைத்துட னிமிர்ந்து
இரண்டுதாள் சேரவே நின்று
இரண்டுகை சிகர மாக்கியே மார்பி
லியற்கையாய் நிறுத்திக்கா லிரண்டும்
உரம்பெறத் தட்டிப் பின்னொரு கையை
டோளமாய்ப் பூமியைத் தொட்டுத்
திரங்கொள நிமிர்ந்து வணங்கல் நாட்டியத்திற்
செயுமாதி யந்த்யவந் தனமே.

...1005


உட்கார்ந்த அபிநயம்

இரண்டு பாதங்கள் சம்மணங் கூட்டி
யிருதுடை படிய விருந்து
இரண்டுகை யிடுப்பில் வைத்துமார் விரித்து
மிருபுயங் களையு முயர்த்தித்
திரம்பெறு மிடக்கை யிடுப்பினில் வைத்துச்
சிகரமாய் வலக்கரங் காட்டிச்
சிரமுகங் களங்கண் சம்ப்ரசா ரிதமாய்ச்
செய்தபி நயித்திட லென்னே.

...1006


நின்ற அபிநயம்

முன்னுரை செய்த வவயவங் களுடன்
முழங்கிய கருடபா தமதாய்
உன்னியே பனிரண் டங்குல வளவா
முயர கலத்தி லிருந்து
துன்னிய முழந்தா ளுயர்த்தியோர் காலைத்
தூக்கிங்குஞ் சிதமாய்த் தட்டி
நின்னய மாக நின்றபி நயித்த
னீீதியா யுரைத்தனர் நூலோர்.

...1007


நாட்டியஞ்செய்யும் ஸ்தலங்களின் லக்ஷணம்

நாட்டிய மென்னுமிந்த நற்றொழில் தன்னை நேர்ந்து
சட்டமதாகச் செய்யு மிடமது விளம்புங் காலை
கூட்டமா மறையோ ரில்லங் குடிபுகு மிடத்தி னும்பேர்
நாட்டுமா சற்ற சோதி வழங்குமி டத்து நண்ணே.

...1008

சுகசோப னத்தி லும்பேர் சுதன்பெறு சங்கி லுஞ்சீர்
மகதேவர் கொலுவி லுந்தார் மன்னர்தங் கொலுக்கூட் டத்து
மகமகிழ் திருநா டன்னி லபிடேகஞ் செயுமி டத்தும்
மகிமைசேர் மகுடஞ் சூட்டு மன்னர்க ளிடத்தும் பாரே.

...1009

தேவர்கள் பொருந்தி டும்யாத் திரைசெய்யு மிடத்துங் கையால்
பூவையர்க் குகந்து மங்கி லியம்பூட்டு மிடத்தும் விந்தை
மேவுபட் டணங்கி ரகப்ர வேசமா கியவி டத்தும்
தாவிய ருதுவாங் கன்னி ருதுசாந்தி தலத்து மென்னே.

...1010

மறையோர்கள் புசித்த பினனு மண்டபந் தனிலு மென்றும்
குறைவில்லா தேயா கங்கள் கூடிய விடத்தே மிக்கப்
பொறுவிலாப் புண்ய காலம் பொருந்துமவ் வேளை தன்னு
மறமுணர் வேந்தர் செய்யும் யாத்திரை தனிலு மென்னே.

...1011


நாட்டியப்பலன்

வேதத்தி லுதித்த விந்தச் சங்கீதம்
விப்பிர ரிருவர்கள் கூடி
வீணையின் முகமாய் வேள்வியா மசுவ
மேதமண் டபந்தனிற் கானம்
நீதியாய்ச் செய்யி லைச்வரிய மதாம்
நிறைகொளும் வாத்திய முழக்கில்
நேர்மைசேர் சுபமாங் குறைவின் றிசைய
நிருத்தஞ் செய்திடி லாயுளுண்டாம்
ஓதிய தாள மடைவுடன் கொள்ள
வுலகெலா மாட்கையா மிதனை
உறுதிசேர் மனத்தா லுணர்ந்து சாத்திரத்திற்
குற்றமார்க் கந்தனை யோர்ந்து
மேதினி தன்னி லியாவரு மறிய
விளம்புவை பூரணை யுதித்த
விதுதனைத் திகழ்ந்து கதிகொள வொளிர்ந்து
வேட்கைசேர் முகத்துடை மானே.

...1012


நாட்டியத்தின் அசுபபலன்

கானம தீன மாகின் மிடியெனக் கருதும் வாத்யம்
ஈனம தாகிற் கீர்த்தி யிலைநாட்டிய மீன மாகில்
தானமா ரோக்ய நட்டந் தாளவீ னமதே யாகில்
தேனுறு மொழியி னாளே சுகமில்லை யென்று தேரே.

...1013


நீசநாட்டியம்

பேசுமே யிஷ்ட தெய்வப் பிரார்த்தனைச் சபைவ ணக்கம்
நேசமாய்ச் செய்யா நிர்த்த நீசநாட் டியம தாகும்
பாசுள விந்நிருத் தத்தைப் பார்ப்போர்சந் ததிக ளற்றுக்
கூசிய பசுவின் யோனி பிறப்பர்க ளென்னும் நூலே.

...1014


சாபவிவரம்

கிருதயு கத்திற் றோன்றக் கிட்டுமே நொடிக்கு ளேதான்
வருதிரே தாயு கத்தில் வளர்பத்து நாளே யாகும்
நிரைதுவா பரத்தின் மாத நீள்கலி வருட மென்றே
தரணியிற் பராச ரன்சொற் சாபத்தின் விபரமாமே.

...1015

சில நாட்டியவகைள் முதலியன முற்றும்.

16. விருது லக்ஷணம் முதலியன

தேவதைகள்

விருதெனுஞ்சொன் மூன்றெழுத்திற் கதிதெய்வங்
களின்விவரம் விள்ளக் கேண்மின்
திரமுறு விகாரமதே வீமனாம்
ருகாரமு ருத்திரனாந் துர்க்கை
மருவிய துகார மதாமெனப்
பரதநூல் கற்றோர் வகைதெரிந்து
உரைசெய்தார் முறைப்படியே யழகியசெங்
கமலத்தி லுதித்த மாதே.

...1016


விருது - நிறம், சாதி

பொன்மைவி கார மாகும் பொருருகா ரஞ்சி வப்பாம்
நன்மையா நீல வர்ண நவிலுந்து கார மாகு
மின்மைவி காரஞ் சித்தி நியதாஞ்சங் கினிரு காரம்
வன்மைத்து கார மத்தினி யதாக வழுத்துஞ் சாதி.

...1017


விருதுகளணியுமிடங்கள்

புயநடு வணியி லிருடிகண் மகிழ்வர் பொருந்திய வயிற்றின்மீ தணிந்தால்
புகழுவர் நட்சத்திர தேவர் கணைக்கால் பொருத்தவச் சுவினிதே வர்க்காம்
நியமமாய் முழந்தாள ணிந்திட வியாழநேர் பாதங்க ளிலதைப் பூண்டால்
நீதியாம் வருணன் கான்முழி யணிந்தா னேர்கண தேவர்கண் மகிழ்வர்
பயன்படு பாத முதலங்க மெல்லாம் பரவுமித் தேவர்கண் மற்றும்
பகருவர் சென்னி தன்னி லணிந்திடவப் பரமன்மெய்த் திடுவனென் றிதனைத்
தயவுடன் முன்னாட் பாவலர் நூலிற் சாற்றின ரிம்முறை தெரிந்து
தரணியோர்க் குரைப்பாய் களங்கமில் லாத சசிநிகர் முகமொளிர் மாதே.

...1018


விருதுகளும் அணிபவர்களும்

விருது நான்கு விதமதாம் பெயர்கள்
விள்சகங் குலசலாங் கிகமாய்
மேதினி யாள்வோர்க் காஞ்சகத் தென்னும்
விருதெலாங் கற்றுணர்ந் தோர்க்கு
அருமைசேர் குலமென் றோதிய விருதா
மன்யோன்யஞ் சரியெனக் கற்றோ
ரணிவது சலமென் றோதிய விருதா
மகிலமீ தொருவனே யாகில்
திரமெனப் பலவாம் வித்தைகள் கற்றோர்க்குச்
செப்புவ ராங்கிக விருதை
செப்புமிவ் விருதினு ருவங்கேண் முத்துச்
சீர்பெறு மங்குசம் வர்ணம்
மருவிய வாடை மணிவிசை கொண்ட
மாவுடன் பாதுகை கடகம்
வளமைசேர் சல்லிதீ வட்டி யென்ன
வழுத்தினர் விருதினா கரமே.

...1019


பரதம் என்பதற்கு லக்ஷணம்

பகரமே பிரமன் மாயன் பண்பென்ப ரகர மாகும்
தகரமே யீசன் மவ்வுஞ் சத்தியின் கூற தாகு
மகரமே வுயிர்படைத்த லழித்தன்முத் தொழிலாய்ச் சொன்னான்
சிகரமா மலைய மர்ந்த செந்தமிழ் முனிவன் றானே.

...1020

செவ்விய பரத மென்னுஞ் செப்புநா லெழுத்து ளந்தம்
மவ்வெனு மொற்றே மூல மந்திரப் பொருள தாகும்
எவ்வமில் பார்நீர் தீகாற் றெழில்வான மென்ப துண்மை
அவ்வெனு மாதி யோர்க்கு மனாதிசத் திக்கும் வித்தே.

...1021


நம்பியார் தீபமெடுத்தல்

பாங்குள தீபந் தன்னைப் பரிவுடன் கடகக் கையால்
வாங்கியே யளந்து மூன்று வளர்முக மட்டுஞ் சென்றாற்
தீங்கிலா திருபால் வென்று யென்னுமே சலித்துத் தேர்த்துத்
தாங்கியே வொருவன் வாங்கிக் கொடுப்பது தண்மை யாமே.

...1022

தண்மையா யர்ச்சித் துப்பின் றட்டியைக் கையில் வாங்கி
வண்மையாய் ப்ரசண்டோற் பத்தி வகையுடன் செய்யப் பின்னர்
வெண்மல ரெடுத்து வேதம் விண்ணப்பந் தேவா ரந்தான்
தண்மையாய்முகித்துப் பின்னர் சாற்றினர் வெண்ணீ றென்னே.

...1023

விருது லக்ஷணம் முதலியன முற்றும்.

மூன்றாம் அத்தியாயம்
(சபாநாயகாதி சர்வவாத்ய பாத்திர லக்ஷணம்) முற்றும்.


அநுபந்தம்

1. ஒற்றைக்கை

ஆண், பெண், அலி, பொது

சிகரத்துடன் முட்டி யன்னவாய்ச் கூசியுஞ் சிலீமுகப் பதாகை தானுஞ்
சீர்கொண்ட மிகுளம் மிருகசி ரத்துடன் செப்பிலாண் கையு மெட்டாம்
பகருகட காமுகம் வம்சபட் சந்திரி பதாகையுஞ் சர்ப்ப சிரமும்
பாவனை பிறைக்கைதிரி லிங்கமல பதுமமும் பாங்கான பெண்கை யேழாம்
அகமகிழப் பூரணம் பதும கோசமுஞ் சந்தங் கிசஞ்சிங் கமுகமாகுங்
கபித்த மென்னிலைக் கர்த்தரிக் கையில் வாறுட னொன்ற தாகும்
முகபேத மொற்றைக்கை வகையிற் பொதுக்கர மொழிவதெண் பத்து நான்காம்
மூலபர தத்தில்வரு முறைமையைத் திகழ்கும்ப முனிவனி துரைத்த வாறே.

...1024


2. இரட்டைக்கை

ஆண், பெண், அலி, பொது

அஞ்சலிக் கருடக்கை சங்கற்ப டோளமு
மபயவர தங்க போத
மானதா டனபதா கைக்கூர்ப்பா சுவத்திக
மாண்கையிது வெட்ட தாகும்
இன்சொல்புஷ் பாஞ்சலி சுவத்திக முற்சங்க
மியல்பான சுபசோ பனமிசை
பாரதிப் பதும முகுளகட காவர்த்த
மின்னவகைப் பெண்கை யேழாம்
மிஞ்சுமல் லுத்தம கரங்கலக முபசாரம்
வெற்றிகர்த் தரிசு வத்திகம்
மேன்மைதரு கற்கடகக் கையாற லிக்கையாம்
வளம்பில் பொதுபதி னாறெனச்
செஞ்சொலால் வருகின்ற விரட்டைக்கை வகைதனைச்
செப்பின்முப் பத்தி யேழாஞ்
செகமீது மூலபர தத்தில்வரு மென்னவே
செப்பி னார்தமிழ் முனிவரே.

...1025


3. தானகம்

51க்கு விவரம்

தானக மைம்பத் தொன்றி லாணிலை யாறு மாதர்
கோனிலை யேழு மைந்நான் கும்மூன்று பொதுநி லைக்கும்
தானென முகமூன் றாக வரசர்தந் நிலையாய்ச் சாரும்
ஆனது சுப்பி தந்தா னகமாறு வகையாய்ச் செப்பே.

...1026


ஆணிலை, பெண்ணிலை

வைணவ சமபா தம்வை சாகமண் டலமா லீடம்
இணையதாம் ப்ரத்யா லீட மிவ்வாறு மாணி லைக்காம்
அணையாயு தமவ கித்தஞ் சுவகாரந் தையுவ லீதம்
பிணைமோடி தம்விநி விர்த்தங் கேதாகே தம்பெண் ணேழே.

...1027


பொதுநிலை

சங்கதஞ் சமபா தஞ்சு வத்திகம் வர்த்த மானம்
தங்குநந் தயாவர்த் தஞ்சேர் சதுரஸ்ரம் பாட்டவி விர்த்தம்
பொங்குபாட் டினிபக் கத்தோட் பொருந்துமே யேசு பார்சுவம்
பங்குள வேசா னுபரா விர்த்தம் பருட்டோத் தானம்.

...1028

தானதா மேகபாதம் ப்ரமணம்வை ணவமுஞ்சைவம்
வானுறு காருடன் கமஞ்சிலிட மோடே
மானேகண் டஞ்சியுங்கூர் மாசன நாகபந்த
நீநேர்வ்யா சனமாய்ப்பொத் திநிலையிரு பத்துமூன்றே.

...1029


4. அங்கநிலை

உகந்திடும் பரம யோகி யுற்றிடுங் கூத்து தன்னைச்
செகம்பெற நடித்த வங்கஞ் செப்பிடிற் றிசைக டோறும்
அகம்பெற வகக்கூத் தாகு மதுதொடுத் தகமாந் தன்னைத்
தொகம்பெற வுரைக்க லுற்றேன் முனிவோர்கள் சொல்லக் கண்டே.

...1030


மேற்படி அங்கம் 64க்கு விவரம்

அரிவையே கேளா யங்க மறுபத்து நாலுக் கும்பேர்
சரியதா மிரேகை தர்ப்ப ணஞ்சவுட் டவமே டாள
நிரையதாந் தாள சந்தி நிச்சேவ னையுந்து கஞ்சீர்
குருலயம் வடிவத் தோடே கோமனி ரசவி ருத்தி.

...1031

அன்னக தியுட னங்க மாகுமே மதமந் தார
மன்னவி தடந்த டத்தொய் யாரம் வசீத ரஞ்சேர்
கன்னல்க ளாச மும்மு கரசமே லளித மற்றும்
சொன்னதோர் பாவ காங்கந் தூகளி யிரச மாமே.

...1032

அனுமானம் ப்ரமாணஞ் சங்கை யாண்டெவ்வை சுரேகை யோடு
பினுமங்க சார மங்க னங்கமே பெரு நீடாளந்
தனுமந்த மாரு தஞ்சேர் தராதரஞ் சங்கம் டில்லாய்
மனுநல னணியு முல்லா சங்கீதம் வேவர்த்த னத்தாம்.

...1033

தாளக்கி ரகமே சாளி சாளனம் லங்கி தஞ்சேர்
வாளுமே கிரகந் தாண்ட வமுசகந் திகபா வத்தா
மாளிருக் காகு தேசி காரம்ப யப்ப டாதம்
நீள்வெகுச் சாயை யோடு நியமத்து லங்ங னம்நேர்.

...1034

தருதொக் காரம் ரங்க னம்பிர சன்னஞ் சலாசலி
தெரிய வாத முற்கண் டியுமபி நயச்சி றப்பும்
சருவுஞ்சங் கீத வாத்யஞ் சண்டனந் தாப னத்தாம்
கருவபி யான கம்மு காதமிரங் கமெனச் செப்பே.

..1035


அங்கரேகை

சிரமுரம் பக்கம் பாதஞ் செயல்கிரி கையதி னூடே
பரவிய ரேகை யங்கம் பரிந்திடு கைக ளூடே
உரமிக வோங்கிச் சற்றே யுன்னத மாக வொன்றிக்
கரமிக விலதை யூடு கண்டனன் முனிவன் கார்த்தே.

...1036

கார்த்துடன் சமபா தத்துள் ளூருவின் புறங்கை காக்க
யேர்த்திடுஞ் சமதிஷ் டிக்கு ளெழில்பெற விலங்க மார்பும்
சேர்த்திடு மங்க காரந் திரவத்தங் கொள்கை யூடே
சீர்த்தெழுந் தாண்ட வத்துட் செய்கரகை யிதற்குச் செப்பும்.

...1037

செப்பிய நடன நாட்யம் வாச்சிய நிருத்தஞ் செய்கை
ஒப்புறு மகக்கூத் தாகும் புறக்கூத்தி லிவைய தென்றோ
நட்புடன் பாதந் தாண்டி நல்கிய கரமுஞ் சாரி
இப்புவி மண்ட லங்கொண் டிவைக்கெல்லா மிரேகை தானே.

...1038

ஏர்த்ததோ ரிரேகைக் கேற்குந் தொழில்பல வியங்க வங்ஙன்
சீர்த்தெழு முபதே சங்க ளாசாரங் கரிமாச் செய்கை
கோர்த்தெமு மாயு தத்தின் மல்லுத் தம்விற் கோர்வை
ஓத்தென புருஷிக் கொப்பு லாச்சிய மியற்கை யூடே.

...1039


டாளவங்கம்

ஓங்கிய டாள வங்க முரைத்தலாஞ் சிங்க டன்னைத்
தாங்கிய கரத்தி னாலே சரியார்க்கும் வலைதல் போலத்
தீங்குமெய் யங்கந் தன்னைத் திகழ்திரந் தாளத் திறத்தில்
ஓங்குமச் சஞ்ச ரத்தி லணுக்கணு முயர்ந்து தோன்றும்.

...1040

தோன்றிடு மிருபத் தன்னு ளகத்திறந் துலங்க வங்ஙன்
ஈன்றுபா ராட்டின் றன்னா வியல்புடன் பின்னே வாங்கும்
சான்றுடன் சரித்து வோடந் தன்னிலுந் தைவுற் றாங்கே
மான்றுடன் வரத்திற் காணுங் குளிர்பனி யூதை யப்போ.

...1041

வைப்புடன் கட்டித் தோய்த லணுக்கலோ டுதன்மெய் வாங்கல்
செப்பமாய்த் தட்டி வாங்கிக் குட்சியி லூரு சேர்ந்து
மைப்புடன் சலனந் தன்னிற் சரீரமங் கத்தில் வாகாய்
இப்புடன் டாள வங்க மிசைந்திடு மியல்பு தானே.

...1042


தாளசந்தி அங்கம்

உரைத்திடுந் தாள சந்தி நிபுணமா மங்க மோர்பால்
கரைத்திங்க ணம்மி லவம்வ யங்கு காட்டை நிமிடம்
விரைத்திடுந் துளிக்கு லாகந் துரிதமாம் லகுக்கண் மெய்யே
பரித்திடுங் குருப்லு தத்தோ டுன்னூன் றற் றான்ப தித்தே.

...1043

துன்னிய துள்ள லாகுந் தூங்கலே வொழுகற் றோன்றன்
மன்னிய வாரோ சைக்குண் மாறோசை வயங்க வாகாய்க்
கன்னல்சேர் தெக்க ணத்தாற் காலமைந் துடனே காணு
மின்னிய லோட்ட மாகு முறுநடை யியனண் டூர்ந்தே.

..1044

அன்னதோர் சமம தீத மனாகதம் விடம மென்றாங்
குன்னிய வானந் தன்னா லொளிபெறு சொற்க ளோடு
நின்னதோர் தாண்ட வத்தி னிகராட னாளந் தன்னில்
உன்னிய முகிலி னோடு தீர்ந்திடும் லயத்தி லுற்றே.

...1045

ஓர்ந்திடுங் களாசந் தன்னி லொளிபெறுஞ் சொற்க ளோடு
தீர்ந்திடுந் தாள காலக் கிரியையாந் தௌிவி லுற்றுச்
சேர்ந்ததோ ரங்க மாகிச் செயறொறுந் திரியு மாங்கே
ஆய்ந்திடுந் தாள சந்தி நிபுணமென் னதற்குத் தானே.

...1046

அநுபந்தம் முற்றும்.

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home